89-ஆம் வருடத்திய கொலைமுயற்சி வழக்கு …..

இரண்டு பெரிய வர்த்தக நிறுவனங்கள்….
ரிலையன்ஸ் மற்றும் பாம்பே டையிங்…
இரண்டிற்கும் ஜென்மப் பகை –
அடிப்படைக் காரணம் தொழில்முறைப் போட்டிதான்…!!

25 ஆண்டுகளுக்கு முன்னர், 1989-ல் – ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானியிடம் நேரடியாக பணி புரியும் ஒரு உயர் அதிகாரி – கீர்த்தி அம்பானி –
பாம்பே டையிங் அதிபர் நஸ்லி வாடியாவை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக ஒரு கிரிமினல் வழக்கு – இப்போது வெளிவந்திருக்கிறது.

இப்போது வெளிவரக் காரணம் – நஸ்லி வாடியா, சிபிஐ யிடம் தன்னை கொலை செய்வதற்காக நடந்த இந்த
கொலை முயற்சிக்கான பின்னணி காரணங்களைப் பற்றி
வாக்குமூலம் கொடுக்க விரும்புவதாகக் கூறி இருக்கிறார்.

(அப்படியானால் – வழக்கு பதிவு செய்யப்பட்டு 25 ஆண்டுகளாகியும் இன்னும் யாரைக் கொலை செய்ய முயற்சி நடந்ததாகக் கூறப்படுகிறதோ, அவரிடமிருந்தே வாக்குமூலம் வாங்கப்படவில்லை என்று ஆகிறது.. இடையில் ஏகப்பட்ட அரசியல் தலையீடுகள் ….! ).

இதை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர் (முதல் குற்றவாளியான கீர்த்தி அம்பானி… ) சிபிஐ கோர்ட்டில் ஒரு பெடிஷன் போடுகிறார்.

நஸ்லி வாடியாவை திறந்த கோர்ட்டில் சாட்சியம் கூற
அனுமதிக்கக்கூடாது. ரகசியமாகத்தான் (in camera) விசாரிக்க வேண்டுமென்று.
அவர் சொல்லும் காரணம், திறந்த கோர்ட்டில் நஸ்லி வாடியாவை சாட்சியம் கூற அனுமதித்தால், அவர் வேண்டுமென்றே தன் முன்னாள் முதலாளியைப் பற்றி (முகேஷ் அம்பானி தான் ) வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத,
தொழில் தகராறுகளை எல்லாம் வெளிப்படுத்துவார்.
அது தன் முன்னாள் முதலாளியின் உரிமைகளையும்,
சமூக அந்தஸ்தையும் பாதிக்கும்…!!

முதலில் இதே கீர்த்தி அம்பானி, சிபிஐ கோர்ட்டில்,
நஸ்லி வாடியாவை வாக்குமூலம் கொடுக்கவே அனுமதிக்கக் கூடாது என்று வாதாடி இருக்கிறார்.
சிபிஐ கோர்ட்டில், அது நிராகரிக்கப்படவே,
மும்பை உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்திருக்கிறார்.
உயர்நீதி மன்றத்தாலும் அப்பீல் நிராகரிக்கப்படவே,

இப்போது சிபிஐ கோர்ட்டில், வாக்குமூலம் பெறப்படுவது
ரகசியமாக நடைபெற வேண்டும் என்று பெடிஷன்.

கிரிமினல் வழக்கு ஒன்று – அதுவும் கொலை முயற்சி பற்றியது – 25 ஆண்டுகளாக இன்னமும் துவக்க நிலையிலேயே இருக்கிறது என்பதே அதிர்ச்சி தரும் செய்தி தானே …? எனவே, அதன் பின்னணியைப் பற்றி அரிய முயற்சி செய்தேன் –
அடேயப்பா – பெரிய சரித்திரமே அடங்கி இருக்கிறது….

தற்போதைய அம்பானி சகோதரர்களின் தந்தையான
திருபாய் அம்பானியின் வாழ்க்கை மற்றும் தொழில் சரித்திரம் சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும்.

 

ambani_sons

( புகைப்படத்தில் அப்பா அம்பானி, அண்ணன் அம்பானி, மற்றும் தம்பி அம்பானி ….)

குஜராத் கிராமம் ஒன்றைச் சேர்ந்த எளிமையான பள்ளி ஆசிரியர் ஒருவரின் மகனான திருபாய் அம்பானி, இளம் வயதில் ஏமன் நாட்டிற்கு சாதாரண குமாஸ்தா வேலை செய்யப் போய் பல சாகசங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பி,

அந்தக்கால பாம்பே யில், 1960-ல் –
Reliance Commercial Corporation என்கிற பெயரில்,
வெறும் ரூபாய் 15,000′- (பதினைந்தாயிரம் மட்டுமே )
முதல் போட்டுத் துவக்கிய கம்பெனி தான் இன்று இந்தியாவின்
சர்வ வல்லமை பொருந்திய நம்பர் ஒன் கம்பெனியாக
வளர்ந்திருக்கிறது.

இன்று இந்தியாவில் ரிலையன்ஸ் கால் வைக்காத
துறைகள் மிகச்சிலவே. திருபாய் அம்பானியின்
மகன்கள் இன்று இந்தியாவின் நம்பர் ஒன்
மற்றும் டூ பணக்காரர்கள்…..

இந்த அளவிற்கு இந்த கம்பெனி வளர்ந்ததற்கு திருபாய் அம்பானியின் கடின உழைப்பும், தொழில் முனைப்பும் மட்டுமா காரணம்….???

புதிய மெஷின்களை இறக்குமதி செய்ய தடை
இருந்த கால கட்டத்தில்,
இறக்குமதி செய்யப்படும் புதிய மெஷின்களுக்கு
எக்கச்சக்கமாக வரி விதிக்கப்பட்டிருந்த காலத்தில்,
பழைய, உபயோகப்படுத்திய செகண்ட் ஹாண்ட்
மெஷின்கள் என்று சொல்லி சுங்கத்துறையை ஏமாற்றி,
ஒரு ஒட்டுமொத்த தொழிற்சாலையையே கப்பலில்
கொண்டு வந்து இறக்கினார் திருபாய் அம்பானி என்று
புகார்கள் எழுந்தன.

தனது முதலாவது பாலிஸ்டர்-டெரிலின் துணி உருவாக்கும் தொழிற்சாலைக்கு புத்தம் புதிய மெஷின்களை கப்பல் கப்பலாக
கண்டெயினர்களில் திருபாய் அம்பானி கொண்டு வந்ததை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் அம்பலப்படுத்தி -அப்போது பல கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. அவற்றில் சிலவற்றை
நான் இளைஞனாக இருந்தபோது தொடர்ந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் படித்தது இப்போது லேசாக நினைவிற்கு வருகிறது.

இந்திய அரசியலில், நாம் போடுகிற ஓட்டு தான் அரசுகளை உருவாக்குகிறது, மாற்றுகிறது என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கும் அப்பாவி இந்தியர்கள் இருப்பது தானே
இந்த கம்பெனிகளின் ராட்சத வளர்ச்சிக்கு காரணம்.

வங்கித் தலைவர்களை, மத்திய அரசின் நிதியமைச்சர்களை, ஏன் சில பிரதமர்களைக் கூட கையில்-பையில் போட்டுக்கொண்டு தான் நினைத்ததையெல்லாம் சாதிக்கக்கூடிய
சாமர்த்தியம் …..

முன்னாள் மத்திய நிதியமைச்சர் டி.ஏ.பை யிலிருந்து,
ஆர்.கே.தவான், திருமதி இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியிலிருந்து, திருவாளர் தேவ கவுடா வரை -அத்தனை பேரிடமும் எப்படியெல்லாம் தன் காரியங்களை சாதித்துக் கொண்டார்
திருவாளர் திருபாய் அம்பானி என்பது பற்றியெல்லாம் –

ambani_indiragandhi

(புகைப்படத்தில் திருபாய் அம்பானி –
திருமதி இந்திரா காந்தியுடன் – அந்த அளவிற்கு நட்பு ….!! )

(கர்னாடக முதலமைச்சராக இருந்த திருவாளர் தேவகவுடா எதிர்பாராமல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும்,
உடனடியாக பங்களூர் சென்று, முதலமைச்சர் பதவியை
ராஜினாமா செய்து விட்டு, உடனேயே டெல்லி திரும்பி
பிரதமராகப் பதவி ஏற்றுக்கொள்ள – விமானம் தந்து,
கூடவே இருந்து உதவிய பெருந்தகை திருவாளர் திருபாய் அம்பானி தான் என்கிற தகவல்கள் உட்பட ….)

‘ The Polyester Prince – The Rise of Dhirubhai Ambani ‘
என்கிற பெயரில் 1999-ல் விவரமாக ஒரு புத்தகம் எழுதினார் –

டில்லியில் தங்கியிருந்த ஆஸ்திரேலிய
எழுத்தாளர் ஹாமிஷ் மெக்டொனால்டு என்பவர்.

polister prince-1

மத்திய அரசில் பதவியிலிருந்த யார் யாரிடம்,
எப்படி எப்படியெல்லாம் – தன் செல்வாக்கையும்,
தந்திரங்களையும் பயன்படுத்தி
திருபாய் அம்பானி தன் கம்பெனியை வளர்த்தார்
என்பதைப்பற்றி விலாவாரியாக அலசி இருந்தார்
ஹாமிஷ் மெக்டொனால்டு.

தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி – அந்த புத்தகத்தை வெளியிட விடாமல் மத்திய அரசைக் கொண்டு தடை செய்ய வைத்தார் பெரிய அம்பானி. (மத்திய அரசின் முக்கிய அமைச்சர்கள் / அதிகாரிகளின் பலவீனங்கள் எல்லாம் அந்த புத்தகத்தில் விலாவாரியாக அலசப்பட்டு இருந்ததே …)

அமெரிக்க நாளிதழ் நியூயார்க் டைம்ஸில் –
இந்த புத்தகம் பற்றிய விமரிசனத்தில் –
கதைச்சுருக்கம் ( !!! ) மட்டும் பார்க்க முடிந்தது….

(முழு புத்தகம் கிடைத்திருந்தால் –
பெரிய விருந்தாகவே இருந்திருக்கும் …)

பிரமிக்க வைக்கும் பின்னணி……
பின்னர் சமயம் வாய்க்கும்போது இதைப்பற்றி
மேலும் பேசலாம்… இப்போதைக்கு, இந்தியாவின்
நம்பர் ஒன் பணக்காரரின் பின்னணியில் ஒரு கொலை
வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பதையும் விரைவில் அதைப்பற்றிய மேல் விவரங்கள் விவாதத்திற்கு வரும் என்பதையும் மட்டும் நினைவில் வைத்துக் கொள்வோம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to 89-ஆம் வருடத்திய கொலைமுயற்சி வழக்கு …..

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  Shared in my FB page. Good.

 2. M Nithil சொல்கிறார்:

  //ஒரு கொலை
  வழக்கு நிலுவையில் இருக்கிறது // – ‘attempt’ murder case.

  Current president, Pranab Kumar Mukherjee was very supportive to RIL when he was Finance Minister.

 3. T.Rajendran சொல்கிறார்:

  இந்தப் பிரச்சினையைப் பற்றி இந்தியா டுடே தமிழ் இதழில் படித்ததாக நினைவு; சம்பந்தப்பட்டவர்களை அட்டைப் படத்திலும் பார்த்த ஞாபகம்; அது ஒரு பக்கம் இருக்கையில் நுஸ்லி வாடியா என வழங்கும் பாம்பே டையிங் முதலாளி பாகிஸ்தானின் முக்கிய சுதந்திரப் போராளி முகமது அலி ஜின்னாவின் மகள் வயிற்றுப் பேரன் என்பது உண்மையா?

 4. srinivasanmurugesan சொல்கிறார்:

  இது குறித்து தங்களின் விரிவான பதிவிற்காக காத்திருக்கிறேன்…

 5. visujjm சொல்கிறார்:

  சகாயம் மீண்டும் மாறுதல் என்ற செய்தியினை ஜீரணிக்க முடியாத வேளையில் அஜீரண கோளாரில் கொண்டு போய் விட்டீர்களே… என்று தணியும் இந்த அடிமையின் ஏற்றத் தாழ்வு……..

 6. bandhu சொல்கிறார்:

  The Polyester Prince புத்தகம் pdf வடிவத்தில் இணையத்தில் கிடைக்கிறது. download செய்து கொள்ளுங்கள்..

 7. gopalasamy சொல்கிறார்:

  So many people (including me) who are following day to day politics also are not knowing about this. Awaiting for further information.

 8. AaKuvan சொல்கிறார்:

  One interesting news to mention here is….the journalist who exposed Ambani in IE was
  Mr. S Gurumurthy

 9. D.Vincent சொல்கிறார்:

  Dear Mr.Muthukumar, When I read your short expression on Ambani-story behind the growth.interesting and my mind goes on the day about your NICE hospitality in BHARAIN.YOUR FOOD on that day was a DISGETiBLE one..good for us. BUT Anil Ambanis’s matter is indisgestible one. D.Vincent,Tuticorin.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.