இலங்கை ராணுவத்தை இந்தியாவில் கொண்டு வந்து நிறுத்தட்டுமா.. ? – ராஜபக்சேயின் திமிர்க் கேள்வி…..

வடக்கே ஏன் ராணுவத்தை கொண்டு போய் குவித்து,
தமிழ்மக்களிடையே பீதியையும், அவர்களது அன்றாட
வாழ்க்கையில் சிக்கலையும் ஏற்படுத்துகிறீர்கள் என்று
கேட்டால் – பதிலுக்கு,
என் ராணுவத்தை இலங்கையில் தானே நிறுத்தி இருக்கிறேன் – வேறு எங்கு கொண்டு போய் நிறுத்த முடியும்… இந்தியாவிலா..?
வேறு எந்த நாட்டிலாவதா..? முடியுமா….?
என்று கேட்கிறார் ராஜபக்சே.

திமிரிலும், எடக்குமடக்கு பேட்டியிலும், திமிராக பதில் சொல்வதிலும் – ராஜபக்சே இந்தியாவை
மறைமுகமாக அவமானப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்.

பேட்டி காண்பவரும் அதற்கேற்ற மாதிரியே கேள்விகளைக் கொடுத்து பதில்களை வாங்குகிறார்.

யாரென்று கேட்கிறீர்களா …? திருவாளர் சுப்ரமணியன் சுவாமியின் திருமகள் திருமதி சுஹாசினி ஹைதர் ஆங்கில நாளிதழ் ‘இந்து’ வுக்காக இலங்கை சென்று ஜனாதிபதி ராஜபக்சேயை சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறார். அதில் கொஞ்சம் கீழே –

suhasini -rajapakse-1

“மட்டூர் படுகொலைகள்” விசாரிக்கப்படுவது குறித்து
திருமதி நவி பிள்ளை அவர்கள் நீங்கள் குறுக்கே தடுப்பதால், விசாரணைகள் நின்று விடாது என்று கூறி இருப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள் ?” என்கிற கேள்விக்கு –

அடுத்த முறை “காஷ்மீர் விவகாரத்தில் உலகளவில் ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று அவர்கள் சொன்னால் –
எங்கள் நிலை என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்..?
நாங்கள் அத்தகைய கோரிக்கைகளை ஆதரிப்போம் என்று
நினைக்கிறீர்களா ..? இல்லை….!
அது இந்தியாவாக இருந்தாலும் சரி, இலங்கையாக
இருந்தாலும் சரி, உலகளாவிய விசாரணையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்…!!
(சுப்ரமணியன் சுவாமியின் வாசனை இங்கு அடிக்கிறதா ….?)

இந்தியா 2 முறைகள் நவீ பிள்ளையின் தீர்மானத்திற்கு
ஆதரவாக ஓட்டளித்திருக்கிறது. அது உங்களை
காயப்படுத்துகிறதா ..? என்கிற கேள்விக்கு –

“இல்லை. இந்திய அரசு உள்நாட்டில் தேர்தலை சந்திக்க
வேண்டி இருந்தது என்பது எங்களுக்குத் தெரியும்.
இந்தியா- இலங்கையிடையேயான உறவு மிகவும் பலமாகவே இருந்தது. எதிர்காலத்திலும் அப்படியே இருக்கும்.
விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு, இந்தியாவின் உதவி தான் மிக முக்கியமான காரணமாக இருந்தது என்பதை நாங்கள் மறக்க மாட்டோம்….!!!”

“வடக்கே சிங்களக் குடியேற்றம் அதிகமாக நடைபெறுகிறது என்று தமிழ்க் கட்சிகள் கூறுவது பற்றி…… ?”

“இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். ஆனால் –
இலங்கையில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானலும் குடியிருக்க அவர்களுக்கு உரிமை உண்டு. அது சிங்களவராக இருந்தாலும் சரி, தமிழர்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம்களாக இருந்தாலும் சரி…..”

“வட மாநில முதல்வர் – அதிகாரிகள் தாங்கள் சொல்வதைக் கேட்பதில்லை. அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று புகார் கூறுவதைப்பற்றி …….?”

“வட மாநில தலைமைச் செயலாளர் ஒரு அரசு அதிகாரி. அவரை நான் தான் நியமித்தேன் என்பது உண்மை தான்.
ஆனால், அவரை நான் இடமாற்றம் செய்தால், அதை எதிர்த்து அவர் நீதிமன்றம் செல்வாரே….? நான் என்ன செய்ய முடியும் ?”

“தமிழக முதல்வரை அவதூறு செய்து ராணுவ அமைச்சக
வலைத்தளத்தில் கட்டுரை வந்ததே …?”

“பாதுகாப்பு அமைச்சர் அதை என் கவனத்திற்கு கொண்டு வந்தவுடன் நாங்கள் தான் தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு விட்டோமே….?”

(இது எதனால் நிகழ்ந்தது. தவறுக்கு காரணமானவர்கள் யார் என்று கண்டு பிடித்தீர்களா ? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது …. என்றெல்லாம் சு.ஸ்வாமியின் திருக்குமாரி
ஏன் கேட்கவில்லை என்று நாம் யாரும் கேட்கமாட்டோம்
தெரிந்த விஷயம் தானே…

அது மட்டுமல்ல. ராஜபக்சே எடக்குமடக்காக கூறிய
பதில்களை எல்லாம், குறுக்கு கேள்விகள் எதுவும் கேட்காமல், அவர் சொன்னதை மட்டும் ஏற்று அப்படியே பதிப்பிக்கிறார்கள்.

இத்தனைக்கும் பேட்டி கண்டவர் – ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றில், பல வருடங்கள் குறுக்குக் கேள்விகளாகக் கேட்கும் பணியில் இருந்து நல்ல அனுபவம் பெற்றவர் …….. )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இலங்கை ராணுவத்தை இந்தியாவில் கொண்டு வந்து நிறுத்தட்டுமா.. ? – ராஜபக்சேயின் திமிர்க் கேள்வி…..

 1. chandraa சொல்கிறார்:

  everybody appreciated tamilnadu c.m whe she had suggested that rams temple could be built in ayodhya only…not anywhere… but we would not accept rajapakshes any view on his own srilanka.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே ( சந்திரா ….)

   ராஜபக்சே யின் view என்று எதைச் சொல்கிறீர்கள்…?

   இலங்கை ராணுவத்தை நிறுத்தி வைக்க –
   தமிழ்க் குடும்பங்கள் வாழும் இடத்தைத் தவிர
   இலங்கையில் வேறு இடமே இல்லை என்று
   சொல்வதையா …..?

   இல்லை அரசு அதிகாரியை, தான் இட மாற்றம் செய்தால் –
   அவர் கோர்ட்டுக்குப் போவார் என்று சொல்வதையா ….?

   இல்லை காஷ்மீர் விவகாரத்தை உலக அளவில் கொண்டு
   சென்றால் என்ன செய்வீர்கள் என்று பயமுறுத்துவதையா …?

   நீங்கள் சொல்ல விரும்புவதை நேரடியாகச் சொல்லலாமே …!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. reader சொல்கிறார்:

  சுவாமி தந்தி டிவியில் ராஜபாட்டை நிகழ்ச்சியில் பத்ரிக்கு அளித்த பேட்டியுடன் ஒப்பிடவும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே (ரீடர் …)

   நான் இந்த பேட்டியை ஏற்கெனவே பார்த்தாகி விட்டது.
   இரண்டும் அடிப்படையிலேயே வித்தியாசமானவை.
   வெவ்வேறு கோணங்களில் பார்க்கப்பட வேண்டியவை.
   எதற்காக இரண்டையும் ஒப்பிடச் சொல்கிறீர்கள்…?

   நீங்கள் சொல்ல விரும்புவதை வெளிப்படையாகச்
   சொல்லலாமே….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.