ஜெயமோகன் இப்படி ….. வைரமுத்து எப்படி …..??

jeyamohan-1vairamuthu-1

 

 

எழுத்தாளர் ஜெயமோகன் அவ்வப்போது விவாதங்களைக்
கிளப்பக்கூடிய கருத்துக்களை எழுப்பிக் கொண்டே இருப்பார்.
அவர் கூறும் கருத்துக்களை ஆதரித்தும், எதிர்த்தும்
எழுத்துலகிலும், வாசகரிடையேயும் சூடான விவாதங்கள்
உருவெடுக்கும். அவரது கருத்துக்களை ஆதரிப்போரும் சரி – எதிர்ப்போரும் சரி – ஜெயமோகன் ஒரு அற்புதமான சிந்தனையாளர்
என்பதை யாரும் மறுக்க முடியாது.

தமிழ் எழுத்துலகுக்கு சிந்தனையாளர்கள் அரிதாகவே
கிடைக்கிறார்கள். எல்லாமே வியாபாரம் என்றாகி விட்ட இன்றைய நிலையில், சமுதாயத்திற்காகவும், இலக்கியத்திற்காகவும் என்று மட்டுமே எழுதக்கூடியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ?

எல்லாத் தொழிலும் போல், எழுத்தும் இன்று ஒரு தொழிலாகி விட்டது. எதை எழுதினால் காசு வருமோ – அதை எழுதத்தான் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள்.

இந்த நிலையில், உழைத்துத் தான் பிழைக்க வேண்டும்
என்கிற நிலையில் – ஒரு எழுத்தாளனால் முழுவதுமாக
இலக்கியப் பணியாற்ற முடியவில்லை . எழுத்தாளர்களை பணத்தின் தேவையிலிருந்து சமூகம் பாதுகாத்தால் – அற்புதமான
இலக்கியங்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்கிறார் ஜெயமோகன்.

அண்மையில், ஒரு செய்தித்தாளுக்கு ஜெயமோகன் அளித்த பேட்டியிலிருந்து, இந்த இடுகைக்குத் தேவையான சில பகுதிகளை மட்டும் கீழே தந்திருக்கிறேன் –

————————————————————-

மகாபாரதத்தை நாளுக்கொரு அத்தியாயமாக எழுதிவருகிறீர்கள்.
இதற்கான உந்துதல் எது?

மகாபாரதத்தை முழுமையாக எழுதுவது சிறு வயதிலிருந்தே இருந்துவந்த ஒரு கனவு. ஆனால் அதைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன். ஒரு நாள் காய்ச்சலின் காரணமாக உடல் சோர்ந்திருந்தது. கணிப்பொறியின் முன்னால் உட்கார்ந்திருந்தேன்.

ஏதாவது எழுதலாம் என்று இருந்தேன். என்னுடைய இயல்புக்கு சும்மா உட்கார்ந்திருந்தாலே எதையாவது தட்டச்சு செய்ய முடியும். ஆனால் அன்று ஒன்றுமே எழுத முடியவில்லை. ஒரு சாதாரண நெஞ்சுச் சளியே எழுத்தை இல்லாமல் பண்ண முடியும் என்றால், உடல் வலு இருக்கும்போதே மகாபாரதத்தை எழுதி விடுவதுதான்நல்லது  என்று  தோன்றியது. உடல் வலு இல்லாமல் எழுதவே முடியாது. உலகத்தின் சிறந்த படைப்புகளை ஐம்பது  வயதுக்குள்தான் எழுதியிருக்கிறார்கள். ஒரு அறிவிப்பை வெளியிட்டு அது கொடுக்கும் சவாலில் எழுதத் தொடங்கினேன். இப்போது எனக்கே வியப்பாக இருக்கிறது.
……..

தற்கால எழுத்தாளன் ஒரு அறிஞராகவும் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது இல்லையா?

சென்ற நூற்றாண்டில் எழுதிய நவீன எழுத்தாளர்கள் அறிஞர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் ஒரு அறிஞராகவும் இருக்க வேண்டும். உம்பர்ட்டோ ஈகோ
மாதிரியான பேரறிஞர்கள் தான் இன்றைய புனைவை எழுத முடியும். என்னுடைய துயரத்தை மட்டும் எழுதிவிட்டுப் போவேன் என்று சொல்ல முடியாது. தனிப்பட்ட முறையில் என்னால் அறிவியலை எழுத முடியாது.

மேற்கில் அவர்களது கலை இலக்கிய மரபு குறித்து அவர்கள் முழுவதும் தெரிந்து வைத்திருக் கிறார்கள். அதை மறுபடைப்பு செய்கிறார்கள். முழுநேர எழுத்தாளனாக இருந்தால்தான் அது சாத்தியம்.

ஒரு எழுத்தாளனாகத் தமிழ் சமூகத்தில் உங்கள் விமர்சனங்களால் தொடர்ந்து அதிகபட்ச சர்ச்சைகளை உருவாக்கிவருகிறீர்கள்

தமிழ் மனதைப் பொறுத்தவரை எழுத்தாளன் முக்கியமான ஆளுமையே கிடையாது. அவன் மிகவும் பணிவாக இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய கலைஞராக இருந்தாலும் பிரபுக்களுக்குச் சந்தனம் பூசிவிட வேண்டும் என்ற 1930-கள்
காலகட்டத்திய மனநிலையில்தான் தமிழ்ச் சமூகம் இன்னும் இருக்கிறது. வணிக எழுத்தாளர்கள் அந்த சந்தனம் பூசும் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள்.

இங்கேதான் எனது சின்னஞ்சிறிய கருத்துகள்கூட இத்தனை சர்ச்சைகளை உருவாக்குகின்றன. இந்தப் பின்னணியில் தொடர்ந்து இலக்கியவாதியாகக் கருத்துகளைச் சொல்வதற்கான இடத்தை உருவாக்கியது நான்தான். ஜெயகாந்தன் தனது அரசியல் பின்னணி வழியாகத்தான் அந்த இடத்தை உருவாக்க முடிந்தது.

எழுத்தாளனுக்கும் சில கருத்துகள் இருக்கும். அது ஊடகத்தில் விவாதிக்கப்பட வேண்டியது என்ற சூழலை நான் உருவாக்கியிருக்கிறேன். எழுத்தாளரின் குரலுக்கு ஒரு சமூகத்தின் பொதுச் சிந்தனையில் இடம் இல்லாதவரைக்கும் படைப்புரீதியான
சிந்தனை உருவாகவே ஆகாது. இன்று ஊடகங்களில்
எழுத்தாளர்களுக்கு ஒரு இடம் உருவாகியிருப்பதற்குக்
காரணமும் நான்தான்.

ஒரு எழுத்தாளன் முழுமையான அறிஞனாக உருவாவதற்கு அவனது முழு நேரத்தையும் அர்ப்பணிக்கக்கூடிய சூழல் இங்கு இருக்கிறதா?

இல்லை. எனக்கே சினிமாவுக்கு எழுத வந்த பிறகுதான் அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது. எனக்கு ஒரு படத்திற்கு வசனம் எழுத ஐந்து நாட்கள் போதும். வருஷத்திற்கு மூன்று படங்கள் எழுதினால் போதும்.
எனக்கு ஒரு வருடம் இருந்து எழுதுவதற்கான பொருளாதார வலு கிடைத்துவிடும். இந்தியாவில் எழுத்தாளர்கள் எங்கேயாவது வேலை பார்த்துக்கொண்டு கிடைத்த நேரத்தில்தான் எழுத வேண்டிய சூழல் உள்ளது.

நமது மரபிலேயே கலைஞன் வேலை பார்க்கக்கூடிய காலம் எப்போ வந்தது? 1947க்குப் பிறகுதானே!. கம்பனோ, புகழேந்திப் புலவனோ வேலை பார்த்தார்களா? அவர்கள் முழுநேர எழுத்தாளர்கள். ஒரு கலைஞனை வேலை பார்க்கும் சூழ்நிலையில் வைத்திருப்பது போன்று ஒரு சமூகத்தை அழிக்கக்கூடிய அம்சம் வேறு எதுவும் கிடையாது.

இங்கே உழைத்து வாழ வேண்டும் என்றெல்லாம் ஆலோசனை சொல்வார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரை எழுத்தாளர் உழைக்கக் கூடாது. அவன் எழுதலாம். எழுதாமல் போகலாம்.
“எனக்கு மூன்று வேளை சோறு மட்டும் போதும். வேறெதுவும் வேண்டாம்” என்று ஒருவன் சொல்வான் எனில் அதைக் கொடுத்து அவனைக் காப்பாற்றக்கூடிய சமூகத்தில் தான் கலையும்
இலக்கியமும் ஆரோக்கிய மாக வளரும்
என்று நித்ய சைதன்ய யதி குறிப்பிடுவார். நிச்சயமாக அது தான் உயர்ந்த சமூகமாக இருக்கும்.

—————-

இங்கே, பிறிதொரு இடத்தில் ஜெயகாந்தன் கூறிய, ஆனால் இதற்கு தொடர்புடைய சில கருத்துக்களையும் தர விடும்புகிறேன் –

” இலக்கியம் எதற்காக …? -இலக்கியத்தின் பயனென்ன ….?”

“இங்கே எத்தனையோ நாற்காலிகள் இருக்கின்றன. ஆனால் நான் ஒரு நேரத்தில் ஒரு நாற்காலியில் தான் அமர முடியும். அதுபோல் உலகத்தில் வாழ சாத்தியமான எத்தனையோ வாழ்க்கைகள் இருக்கும்போது நாம் ஒரு வாழ்க்கையை மட்டுமே வாழ முடியும்.

என் சிறுவயதில் எனக்கு நிறைய புத்தகங்கள் படிக்கக் கிடைத்தன. அதன் மூலம் நான் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் சாலைகளில் அலைந்தேன், நோட்ரடேம் சர்ச்சில் அமர்ந்திருந்தேன், பாரிஸ் தெருக்களில் சுற்றித் திரிந்தேன். இலக்கியத்தின் மூலம் தேசங்களையும் காலத்தையும் கடந்து செல்ல முடிந்தது.”

“என் இளம் வயதில் வைக்கம் முகமது பஷீர் போன்ற பெரும் இலக்கியவாதிகளை சந்தித்து இலக்கியத்தின் அடிப்படையான பயன் என்ன என்று கேட்டிருக்கிறேன். அவர்கள் அனைவருமே “a sense of justice”, “ethics” போன்ற பதில்களையே தந்தார்கள்.

அறம் தான் இலக்கியத்துக்கு அடிப்படையானது. ஒவ்வொரு மனதிலும் அறம் என்ற விதை இருக்கிறது. கொஞ்சம் ஈரம் கிடைத்தால் கூட அது முளைத்துவிடும். நல்ல இலக்கியம்
அந்த ஈரத்தை அளிக்கும்.
என் புத்தகங்களில் எந்தப் பக்கங்களில் எல்லாம் வாசகனின் கண்ணீர் துளி விழுந்திருக்கிறதோ அங்கெல்லாம் நான் அறத்தைத் தான் சொல்லியிருக்கிறேன்”.

——————————————————-

ஜெயமோகன் கூறுவது நிதரிசனமான உண்மைகள்.

ஆனால், அவர் கூறுவது போல்-
3 வேளை சோறு மட்டுமல்ல…

ஊருக்கொரு பங்களா, தோட்டம் துரவு,
வகை வகையாக கார்கள்,
எக்கச்சக்கமான சொத்துக்கள்,
கணிசமான வங்கிக் தொகை –
இத்தனையும் சேர்ந்த பிறகும் –

நல்ல மொழி வளம், அறிவு, கற்பனைத் திறன்,
செயலாற்றல் ஆகியவை இருந்தும்,
தேவையான அனைத்தையுமே வாழ்வில் பெற்ற பின்பும் கூட-

– 60 வயதைக்கடந்த பின்னர், முதுகுத்தண்டுவட பிரச்சினையால்
மருத்துவ மனையில் குப்புறப் படுத்தபடி இருக்கும்போதும் கூட –

இலக்கியம் பற்றி நினைக்காமல் –
ஜெயமோகன் சொல்வது போல் “அறம்” பற்றி எழுதாமல்,
“காம ரசம்” சொட்டும் சினிமா பாடல்களை
கவிப்பேரரசர்கள் படைக்கிறார்களே …
(இந்தப் பாடல் (…?…) அவரது latest படைப்பு….!!)

—-

‘கூதக் காத்து கொல்லுதடி
கூறச் சேல தாடி – இல்ல
கூந்தல் மட்டும் தாடி’

என்றான் அவன்

‘கூதக் காத்து கொல்லுதய்யா
மல்லு வேட்டி தாய்யா – இல்ல
மல்லு கட்ட வாய்யா’

என்றாள் அவள்

உடனே ஒரு நிபந்தனை விதிக்கிறான் அவன்

‘தாலிக்கயிறு இருக்கட்டுமே
நீயி மத்ததெல்லாம் கழட்டி வையி
விழிகள் விழிச்சுக் கெடக்கட்டுமே – உசுரே
விளக்கத் தூங்கச் சொல்லு’

சரணத்தின் அடுத்த கட்டம் –

ஆண் : – நீ வெக்கப்பட்டுச்
சேலைக்குள் தவிக்க –
உன் வெட்கத்தை என் நாவில் துடைக்க –
நீ கட்டுப்பட்டு, தொட்டுக்கிட்டு
கட்டிக் கொள்ளக் கூடாதா …?

பெண்: – என் பூவுக்குள்ள
தேன் துளி கொதிக்க –
என் பொட்டுப் பொட்டு வேர்வையும் இனிக்க –
என் அச்சம் விட்டுப் போகும் வரை
விட்டு வைக்கக் கூடாதா ….?

ஆண்: – அடியே நானும் மனுஷந்தானே
ஆட வாடீ செந்தேனே …!

பெண்: – மழையத் தாங்கும் இலையைப் போல
மடங்கி நானும் நின்னேனே …!

அடுத்த சரணம் –

பெண்: – நான் குத்த வெச்சு மானத்த மறைக்க
ஒங் கொள்ளிக்கண்ணு சேலையை உரிக்க –
என் அச்சம் நாணம் அத்தனையும்
மொத்தமாகத் தோத்தாச்சு …

ஆண்: – உன் எக்கச்சக்கம் வாவென்று அழைக்க …
என் பத்து விரல் பூட்டுகள் திறக்க …
நீ பொத்தி வெச்ச அத்தனையும் –
சுத்தமாகப் பாத்தாச்சு ….

பெண்: – துன்பம் எனக்கு சுகமா இருக்கு
சூரக்கோட்ட ராசாவே –

ஆண்: – கிறுக்கா கிடக்கு ஏனோ –
எனக்கு – குறுக்குச் சிறுத்த ரோசாவே …!!!

———————–

ஜெயமோகன் சிந்தனைகள் இங்கு செல்லுபடியாவதாகத்
தெரியவில்லையே…. என்ன செய்ய …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to ஜெயமோகன் இப்படி ….. வைரமுத்து எப்படி …..??

 1. sakthy சொல்கிறார்:

  ஐயா, நீங்கள் சொல்வது உங்களுக்கு சரியாக இருக்கிறது. ஜெயமோகன் சொல்வது அவருக்கும்,வைரமுத்து சொல்வது அவருக்கும்,கருணானிதி சொல்வது அவருக்கும் சரியாகவே இருக்கிறது. ஆனால் யார் சொல்வது சரி?

  பதில்- யாரும் யாருடைய கருத்தையும் ஏற்கத் தயாராக இல்லை. தாங்கள் சொல்வதே சரியானது என வாதிப்பார்கள். இந்த உலகில் யாராவது ஒருவர்-உங்களைச் சொல்லவில்லை,-பிரபலங்கள்-தாங்கள் சொல்லியது தவறு என்று ஒரு முறையாவது ஏற்றுக் கொண்டது உண்டா?
  ராஜபக்சே கூட தான் சொல்வதுதான் சரி என்கிறான்.

  நடு நிலையில் நின்று மக்களுக்காக, பாழ்பட்டு வரும் இந்த சமூக நலனுக்காகச் சொல்ல யாரும் இல்லை என்பதே கசப்பான உண்மை.
  நேற்றைய தினமும் மாணவிகள் மீது ஆசிட் விச்சு நடத்தப்பட்டது. தொடரும் இந்த நிகழ்வுகளைக் கண்டு கோபப்பட முடிகிறதே தவிர, தடுக்க வேண்டியவர்கள் கண்ணை மூடிக் கொள்கிறார்களே.
  மதுவை சினிமாவிலும் நிறுத்த மாட்டேன் என்கிறார்கள். டாஸ்மார்க்கையும் மூட மாட்டேன் என்கிறார்கள்.

 2. suresh சொல்கிறார்:

  தனது கட்டுரையை நிறைவு செய்யும் முன் தனது மொத்த உடல் நோய் அனுபவங்களின் தத்துவ சாரத்தை பின்வருமாறு முடித்திருக்கின்றார். கவிஞர்.
  வாழ்வு சிறிது; இன்னும் இரு மடங்கு பணியாற்று.
  உலகம் பெரிது; பேரன்பு செலுத்து.
  உனக்காகக் கண்ணீர் விடும் கூட்டத்தின் கணக்கை அதிகரி.
  எவர் மீதும் பகை கொள்ளாதே.
  அன்பென்ற ஒரு பொருள் தவிர, வாழ்வில் எதுவும் மிச்சம் இருக்கப்போவது இல்லை.
  எது கொடுத்தாலும் உலகத்துக்கு நிறைவு வராது; உன்னையே கொடுத்துவிடு.
  உன் வாழ்வில் நீ அதிகம் உச்சரிப்பது, நன்றி என்ற சொல்லாக இருக்கட்டும்

  தனக்கு நேர்ந்த உடல் நோய்க்கும் கவிதை படைத்து, தமிழை அழகுபடுத்தும் கவிப் பேரரசு வைரமுத்து, தொடர்ந்து உடல் நலத்துடன், உள்ள நலத்துடன் வீற்றிருந்து, அந்த மகிழ்வுத் தருணங்களையும் கவிதையாக்கி – எழுத்துப் படிவங்களாக்கி – தமிழ் அன்னைக்கு மேலும் சில மகுடங்களைச் சூடிக கொடுக்க வேண்டும் என நாம் அனைவரும் நெஞ்சார வாழ்த்துவோம்

  • todayandme சொல்கிறார்:

   Dear Suresh,

   (வாழ்வு சிறிது; இன்னும் இரு மடங்கு பணியாற்று. )
   அதுதான் பணியாற்றிப் பணியாற்றி பணம் சேர்த்துக்கொண்டிருக்கிறாரே! சினிமாவை இளையதலைமுறைக்கு விட்டுக்கொடுத்துவிடலாமே. அதிலேயும் ஒரு இக்கன்னாதான், தன் பிள்ளைக்குமட்டும்தான் விட்டுக்கொடுப்பார்.

   (உலகம் பெரிது; பேரன்பு செலுத்து.)
   யாரிடம் அன்பு செலுத்துகிறார். மேலே கா.மை. கூறியுள்ளதுபோன்ற எண்ணற்ற பலபாடல்களை அர்த்தம் தெரியாமலேயே உளறிக்கொண்டிருக்கும் சின்னஞ்சிறார்கூட்டத்தினரிடமும், அர்த்தம் தெரிந்தே பாடிகெட்டுப்போய்க்கொண்டிருக்கும் இளையதலைமுறையினிடமும், இது இரண்டையும் பார்த்து நொந்துவெந்துபோயிருக்கும் பெற்றோர்களிடமும் அன்புகொண்டு இதுபோன்ற பாடல்களை எழுதியிருக்கிறாரா? சினிமா, அதுதரும் பணம், இந்த வயதான காலத்திலும் இளமை இன்னும் ஊஞ்சலாடிக்கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டு எழுதுவதை ரசிக்கும் உங்களைப்போன்ற மக்களிடம் அன்புசெலுத்தித்தான் இவற்றை எழுதியிருக்கிறார் என்பதை மறுக்கமுடியுமா?

   (உனக்காகக் கண்ணீர் விடும் கூட்டத்தின் கணக்கை அதிகரி.)
   முட்டாள் தமிழர்களே, கண்ணீர் விடுங்கள். இவர் ஏன் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று.

   (எவர் மீதும் பகை கொள்ளாதே.) இவர் எவர்மீதும் தன்வாழ்வின் எக்கணத்திலும் பகை கொள்ளவில்லை என்று உறுதியாக தன்நெஞ்சைத் தொட்டுசொல்லமுடியுமா?

   (அன்பென்ற ஒரு பொருள் தவிர, வாழ்வில் எதுவும் மிச்சம் இருக்கப்போவது இல்லை. எது கொடுத்தாலும் உலகத்துக்கு நிறைவு வராது; உன்னையே கொடுத்துவிடு. ) நல்ல படைப்புகள் எதையும் என்னிடம் எதிர்பார்க்காதீர்கள் என்று சூசகமாக அவரே சொல்கிறார்,

   (உன் வாழ்வில் நீ அதிகம் உச்சரிப்பது, நன்றி என்ற சொல்லாக இருக்கட்டும்.) அடுத்தவருக்கு உபதேசம் இருக்கட்டும். இவர் திரைத்துறையில் இவ்வளவுகாலம் வலம் வந்ததற்குக் காரணமான இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், இவர் வரிகள் நன்கு மக்களுக்குப் போய்சேர உழைத்த லைட்மேன் முதல் இதர சினிமாதுறைப் பணியாளர்கள், இறுதியாக இசை அமைப்பாளர்கள் யாருக்கு இவர் நன்றியைச் செலுத்தியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக தன்னை இவ்வளவுதூரம் இமேஜ்மேக்ஓவர் செய்து முன்னேற்றிய முத்தமிழ்க் காவலருக்கு அவருடைய தேர்தல் களப்பணிகளில் எவ்வளவுதூரம் உதவி நன்றியைத் தெரிவித்திருக்கிறார். கும்பகர்ணன் கூட செஞ்சோற்றுக் கடன்தீர சேரக்கூடாத இடத்திற்கும் நன்றிசெய்தான் என்று தமிழறிஞர் இவருக்குத் தெரியாதா? மிகச்சரியாக, தேர்தலின்போதுதான் இவருக்கு உடம்புக்கு முடியாமல்போய் மருத்துவமனையில் படுத்துவிடுவார், அல்லது வெளிநாட்டு அலுவல்கள் ஏதேனும் வந்திருக்கும். எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றல்கொண்ட கலைஞருக்கே டிமிக்கி கொடுத்துவிட்டு ஆப்செண்ட் ஆகிவிடுவார். மாட்டிக்கொண்ட கலைஞர்கள் கவிஞர்கள் எல்லாரும் தேர்தல் நேரத்தில் கலைஞருக்காக வெளிப்பட்டு செஞ்சோற்றுக் கடன்தீர்க்க என்று பிரச்சாரத்தின்மூலம் நன்றியைத் தெரிவித்து வடிவேலுவாக ஆகிக்கிடக்கிறார்கள்.

   அட்வைஸ் எல்லாம் அடுத்தவருக்குத்தான் செய்வேன், என்னிடம் எதையும் எதிர்பார்க்காதே என்கிறார். இதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் நீங்கள் வேறு காமெடிசெய்கிறீர்களே.

 3. reader சொல்கிறார்:

  கவிஞர் வாலி என்னுடைய இலக்கியத்தை திரைப்பாடல்களில் தேடாதீர்கள். அது ‘கையில காசு வாயில தோசை’ என்றார், வைரமுத்துவுக்கும் பொருந்தும் கூற்றுதான்.

  இதுவும் வைய்யிறமுத்து எழுதியதுதான்.

  மின் மயானங்களில் இப்பாடல் ஒலிக்கும்போது உள்ளத்தை உருக்கும்.
  ========================================================================
  ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
  சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
  நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
  நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

  ஜனனமும் பூமியில் புதியது இல்லை
  மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
  இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
  இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

  பாசம் உலாவிய கண்களும் எங்கே?
  பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
  தேசம் அளாவிய கால்களும் எங்கே?
  தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

  கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
  மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
  எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
  எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

  பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
  இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
  நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
  மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.

  கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
  தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
  நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
  மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!

  மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
  மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
  வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
  விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

  பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
  யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
  நித்திரை போவது நியதி என்றாலும்
  யாத்திரை என்பது தொடர்கதையாகும்

  தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
  சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
  மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
  மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

  மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
  தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
  பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
  போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மிக்க நன்றி நண்பரே (ரீடர்…)

   நான் இதுவரை இந்தப் பாடலைப் படித்ததோ,
   கேட்டதோ இல்லை.
   மன நிறைவு அளிக்கிறது.
   அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • todayandme சொல்கிறார்:

    2010இல் இந்தப் பாடல் எழுதப்பட்டதாக வைரமுத்து.வலை குறிப்பிடுகிறது.

    என்றபோதிலும் இந்தக் கவிதை பாடலாக உருமாறி பல்லோர்மனதில் பிரபலமாக ஆரம்பித்தது மின் இடுகாடுகளில் பாடப்பட்டதற்குப் பிறகுதான்.
    —————————-
    பாட்டாக மாற்றினாலும் பலரால் மறக்கப்பட்ட சிலரை இங்கு நன்றியோடு நினைவுகூர்கிறேன்:

    ஈரோடு ரோட்டரி சங்கத்திற்காக எழுதப்பட்டது இந்தப் பாடல் என்று கட்டுரை குறிப்பிடுகிறது.

    இத்தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், காமத்தின் (காதலின் என்று கௌரவமாகச் சொல்லவேண்டுமா?) திசையிலிருந்து மரணத்தின்பக்கம் சற்றே மனதை ஒருநொடிச் சூறாவளியாய் திசைமாற்றிய ரோட்டரிசங்கத்தினருக்கு, இதுபோன்று பாடல் எழுதவேண்டுமென்று கவிப்பேரரசரை தூண்டியமைக்கு நன்றி.
    http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=8223
    —————–
    இனிய குரலால் சுதா ரகுநாதன், வெண்கலக் குரலால் விஜய் யேசுதாஸ் இருவரும் தனித்தனியாகப் பாடியுள்ளார்கள்
    —————–
    இசை: இனியவன்.
    —————-
    எது உண்மை என்று தெரியவில்லை – மதன் கார்க்கிக்குத்தான் வெளிச்சம் அப்பாவுக்காகப் பிள்ளை விட்டுக்கொடுத்தாரா? அல்லது பிள்ளைக்காக அப்பா விட்டுக்கொடுத்தாரா என்று தெரியவில்லை.

    இந்தப் பாடலை கவிஞர் வைரமுத்து ஐயாவின் கைவண்ணத்தில் உருவாகியதாம், சிலர் மதன் கார்க்கி என்றும் சொல்கிறார்கள்,
    http://sadhanandaswamigal.blogspot.in/2014/03/blog-post_6.html

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பரே (todayandme ….! )

     உங்கள் ஆர்வம் என்ன அசர வைக்கிறது.
     அற்புதமான உங்கள் ஈடுபாட்டைப் பார்த்த பிறகு
     என் உழைப்பு எந்த மூலைக்கு என்றும் தோன்றுகிறது….

     நான் இந்தப் பாடலை குறை சொல்ல
     விரும்பவில்லை. ஆனால், கவிஞர் வைரமுத்துவின்
     பாடலில் இவ்வளவு சம்ஸ்கிருத சொற்களா
     என்கிற ஆச்சரியத்தைத் தவிர்க்கவும் முடியவில்லை …..

     ஜென்மம்
     ஜனனம்
     பூமி
     மரணம்
     ஞானம்
     தேசம்
     நதி
     விதி
     சாபம்
     வேதம்
     யாத்திரை
     நித்திரை
     சூரியன்
     சுவாசம்
     புண்ணியம்
     பூதம் …………!!!

     இன்னும் ஒரு வார்த்தை –

     பல ஆண்டுகளுக்கு முன் வந்த ‘ரம்பையின் காதல்’
     திரைப்படத்தில், மருதகாசி எழுதி,
     சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய –

     “சமரசம் உலாவும் இடமே – நம் வாழ்வில் காணா
     சமரசம் உலாவும் இடமே” என்ற பாடலும்,

     “போனால் போகட்டும் போடா – இந்த பூமியில்
     நிலையாய் வாழ்ந்தவன் யாரடா ?” பாடலும்,

     “வீடு வரை உறவு – வீதி வரை உறவு
     காடு வரை பிள்ளை – கடைசி வரை யாரோ …?” பாடலும்

     – நம் மனதில் ஏற்படுத்திய தாக்கம்
     வேறு வகை அல்லவா….?

     உங்கள் ஆர்வத்திற்கும்,
     உழைப்பிற்கும் நன்றிகள் பலப்பல.

     மீண்டும் ஒரு வார்த்தை –
     உங்களைப் போன்ற நண்பர்களின்
     பின்னூட்டங்களால் தான் இந்த வலைத்தளம்
     வலிவும், பொலிவும் பெறுகிறது…!

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • todayandme சொல்கிறார்:

      செப். 13,காலை 9 மணிக்கு இடப்பட்ட உங்கள் பதிவை படித்தபின்பும் கூட செப். 15 காலை 8 மணிக்கு (சுமார் 48 மணிநேரம்) வரை சும்மா தேமே என்று இவர்கள் இப்படித்தான், இத்தனைகாலமாக இவர்கள் ஆற்றிய தமிழ்த்தொண்டைப்பார்த்து இவர்களை எல்லோரும் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று எனக்குள்ளாகவே ஒருகணம் சிந்தித்துவிட்டு மறந்தும்விட்டேன்.

      மீண்டும் என்மூளைக்கும் கைகளுக்கும் வேலைகொடுக்கும்வண்ணம் பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

      தனது தமிழ் அறிவை-திறமையை-கற்பனாசக்தியை-அனுபவத்தை இப்பொழுதிருக்கும்-இனிவரும் தலைமுறையினருக்கு ஒரு பொறுப்புள்ள மனிதனாக-தந்தையாக உண்மையாகவே மனமுவந்து கொடுக்க காலம் கடந்துவிடுமுன் இந்தத் தமிழ் அரசர்கள் முன்வரவேண்டுமே, இதை மற்ற நண்பர்களும் புரிந்துகொள்ளவேண்டுமே என்ற ஆதங்கத்தினால் நான் எழுதிய பின்னூட்டங்கள் இவை.

      விமரிசனம் வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

 4. sakthy சொல்கிறார்:

  வைரமுத்துவின் பல பாடல்கள் சுவைத்தன. ஆனால் அவர் புகழையும்,பணத்தையும்,பட்டங்களையும் எதிர்பார்க்க ஆரம்பித்த போது சமுதாய உணர்வு பறந்து போய் விட்டது. இன்று சினிமா தான் சமூகத்தை பாழாக்கும் கருவியாகி விட்டது.நல்லதொரு ஊடகம் -சினிமா- காம கலாச்சாரத்திற்கு அடிமையாகி விட்டது. தொலைக்காட்சிகளில் சின்னக் குழந்தைகள் பாடும் பாடல்களை எண்ணும் போது கவியரசர்கள் இப்படி போனது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
  அவர் ஒருமுறை, சினிமாவில் எழுதப்படும் பாடல்களை வைத்து எடை போடாதீர்கள் என்றார். அவர் ஒன்றை மறந்து விட்டார். சினிமா தான் இன்று அரசியலை,ஆட்சியை,மதத்தை,சமூகத்தை மாற்றும் கருவியாக மாறியுள்ள நிலையில், கொஞ்சமாவது சமூதாயக் கொடுமைகளை எண்ணிப் பார்க்க ஏன் இந்தக் கவியரசர்கள் மறந்து விடுகிறார்கள்.
  புகழின் பணத்தின் உச்சிக்கு சென்று விட்டால் அடித்தட்டு மக்களை மறந்து விடுவதுதான் சமுதாய உணர்வா?
  இந்தக் கவியரசர்கள் புகழ்ப் போதையில் இருந்து கீழே இறங்கி வராதவரை
  இப்படியான பாடல்கள் வருவதை தடுக்க முடியாது.
  சினிமாவில் நடிக்க சந்தர்ப்பம் கிடைப்பதற்காக ஆடைகளைக் களையும் நடிகைகள் போல் ஆபாசமாக நடிக்க தயாராகும் நடிககளைப் போல்,இவர்களும் சமூகத்தின் துகிலுரிய தயங்க மாட்டார்கள்.

 5. Srini சொல்கிறார்:

  Dear KM Sir,

  Every person gets into realization in life at one point of time. I am sure one day Vairamuthu will also realize the real value of gift ( Saraswathy Kadaksham) that he has got in his life and will use it larger good.

  There are hundreds of examples in this. one example is Mr. Ghantasala from Telugu Industry. He sang and wrote for more than 100 films. many songs are on par with the vairamuthu song that you have listed above. For nearly more than a quarter of a century, he was the distinguished voice of Telugu films. He composed music for more than 100 movies in Telugu, Tamil and Kannada films. He composed and sang the Bhagavad Gita just before his death in 1974, a rendition which became highly acclaimed. Today he is only remembered for his bagavath gita rendition. The last film music song was for a documentary – Bhadrachala Ramadasu Vaibhavam (music by Master Venu) on 10 February 1974, straight from the hospital bed. And the next day, two months after completing his 51st birthday, he left for the celestial abode leaving behind his mesmerising music spell. One need not know telugu language to appreciate the gita rendition. just hearing it takes you to a different plane. Voice was the gift he got from God. Vairamuthu also has received command on tamil language as a gift. like kannadasan, one day he will turn north for good.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ஸ்ரீநி,

   என் இளைய வயதிலிருந்தே நான் மிகவும் விரும்பும்
   என் அபிமான பாடகர் / இசையமைப்பாளர் கண்டசாலா.
   அவரது கரகரப்பான, வித்தியாசமான குரல் எனக்கு
   மிகவும் பிடிக்கும்.
   அவரது பல பாடல்களை சேகரித்து வைத்திருக்கிறேன்.
   (ஆனால் – எல்லாம் தமிழ்ப் பாடல்கள் தான்…)
   இரவு நேரங்களில், அமைதியான சூழ்நிலையில்,
   அவர் பாடல்களை ப்ளேயரில் கேட்பது என் வழக்கம்.

   ஆனால், அவரது சொந்த வாழ்க்கை, தெலுங்கு உலகில்
   அவரது பின்னணி பற்றி எல்லாம் எனக்கு தெரியாது.

   விவரமாகத் தெரியப்படுத்தியதற்கு நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. gopalasamy சொல்கிறார்:

  I am followingJayamohan’s blog regularly. I feel insulted, when jayamohan is compared with vairamuthu. Jayamohan took tamil literature to another level. He is ready for any meanigful arguements always. Vairamuthu is a businessman.

 7. chandraa சொல்கிறார்:

  mr.saandilyan till his last days had included sexual dialogues between the characters in all his novels yavana raani to quote one….and vairamuthu too writes such stuff …..kavignars are always young in their hearts… vaali sir had told this many times… it iswrong to expect vairamuthu to turn to spirituality…. albert einstein….betrandrussel… karl marx… and many…. outstanding scholars remained ATHEISTS till their end….let us understand ATHEISTS ……

  • sakthy சொல்கிறார்:

   முற்றிலும் உண்மை. ஆனால் சாண்டில்யன் எழுத்தில் விரசம் இல்லை. இளம் சமுதாயத்தினர் கூட அந்த எழுத்துக்களால் கெட்டுப் போக வழி இல்லை. ஆனால் வைரமுத்துவின் எழுத்தில் விரசம் ஆபாசம் இருப்பதை காண முடிகிறது. ஒரு பெற்றோராக இருந்து பார்த்தால் தான் அதன் கொடுமை தெரியும்.மகனோ மகளோ இப்படியான பாடல்களைப் பாடிக் கொண்டு அப்பா அம்மா முன்னால் வரும் போது அந்த பெற்றோரின் உணர்வு என்னவாக இருக்கும் என்பதை ஒரு பெற்றோராக இருந்து எண்ணிப் பார்க்க வேண்டும்.
   அமில வீச்சுக்கு பாலியல் கொடுமைக்கு உள்ளாகும் ஒரு பெண்ணின் நிலை வேறு யாருக்கும் தெரியாது,புரியாது.
   நல்ல ஊடகமான சினிமா புகைத்தல் இல்லாத,மது இல்லாத, ஆபாசக் காட்சிகள் இல்லாத,விரசமான பாடல்கள் வசனங்கள் இல்லாத படத்தைத் தர வேண்டும் .ஆங்கிலப் படங்களில் இல்லாத அனைத்தும் தமிழ்ப் படங்களில் கிடைக்கின்றன.
   நான் அமெரிக்க நாட்டில் இருக்கிறேன். அதை எல்லாம் நன்கு என்னால் உணர முடிகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இதைச் சொல்வதற்கு மன்னிக்கவும் நண்பர் சந்திரா,

   பல சமயங்களில் நீங்கள் தவறான கோணங்களிலேயே
   பார்க்கிறீர்கள். வைரமுத்து அவர்கள் நாத்திகராக
   இருக்கிறாரே என்பதற்காக வருந்தியோ, அவர் ஆத்திகராக
   மாற வேண்டும் என்று விரும்பியோ நான் இந்த இடுகையை
   எழுதவில்லை.

   சினிமா பாடல்கள் எழுதுவதற்கு எத்தனையோ இளைஞர்கள்
   வரிசையில் காத்திருக்கிறார்கள். அதற்கு வைரமுத்து
   தேவையில்லை.

   வைரமுத்து அவர்கள் – நல்ல கற்பனை வளமும்,
   அற்புதமான சொல்லாற்றலும், மொழியாள்கையும் உள்ளவர்.
   நல்ல தமிழறிஞர்.

   பொருளாதாரத் தேவைகளுக்காகவும், புகழுக்காகவும்,
   வர்த்தக நோக்கிலும் –
   சினிமா பாடல்கள் எழுத வேண்டிய அவசியமான
   கால கட்டத்தை அவர் கடந்து விட்டார்.
   சொந்த வாழ்க்கைக்கான அனைத்து தேவைகளும்,
   கிடைக்கப்பெற்ற இந்த நிலையில் – அவரது பார்வையும்
   உழைப்பும் இலக்கியத்தையும், சமூதாய நலனையும்
   சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்பதும் –
   நடப்பு அப்படி இல்லையே என்பதும் தான்
   என் இடுகைக்கான அடிப்படை.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 8. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

 9. chandraa சொல்கிறார்:

  K.M.JI i had madre the observation of atheists because sriniji fondly hope vairamuthu to turn into spirituality… i request you to remember that counter remarks need not always be aimed at the creator… but towards the participants also. i thank k.m.ji for giving mean opprtunity toclarify my stand…

 10. Dr k g palaniappan சொல்கிறார்:

  I share KMs view on vairamuthu – Dr K G Palaniapan

 11. todayandme சொல்கிறார்:

  எழுத்திற்குத் தேவையானது அடிப்படை மொழி வளம், அறிவு வளம், அறிவோடு கூடிய கற்பனை வளம்.

  அறிவும் கற்பனை வளமும் மாத்திரம் போதுமா? இவை இரண்டையும் சரியான விகிதத்தில் கலந்து சமைத்தும் தரும் நல்ல குக்கிங் நாலெட்ஜ் வேண்டாமா? நல்ல சமைக்கும் திறன் மட்டும் போதுமா? சாப்பிடுபவரின் நாக்குக்கு ருசியாகத் தரவேண்டாமா? ருசி மட்டும் போதுமா? நாக்குக்குக் கீழே போய்விட்டால் சாப்பிட்டவருக்கு தொல்லைசெய்யாதவண்ணம் இருக்கவேண்டாவா? தொல்லை செய்யாமல் இருந்தால்மட்டும் போதுமா? வேண்டிய சத்துக்களைக் கொடுத்து சாப்பிட்டவருக்கு நன்மை செய்யவேண்டாமா? இது எல்லாவற்றையும் திறம்படச் செய்தாலும் இன்றைக்குச் சாப்பிட்டுவிட்டு நாளைக்கு மறந்துவிடும்படி இல்லாமல், “அன்றைக்கு ஒரு கடையில் சாப்பிட்டேன், எவ்வளவு அருமையாக இருந்தது தெரியுமா? இன்றைக்கு நினைத்தாலும் நாவில் நீர்! சாப்பிட்டபின்பும்கூட உடல்உபாதை ஒன்றுகூட இல்லை. மீண்டும் அவ்வழியே போனால் அங்குதான் சாப்பிடவேண்டும்” என்று சந்தோசத்துடன் நினைக்கிறஅளவுக்கு, முடிந்தால் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறவர்களுக்கு இருக்கவேண்டும்.

  சார், இப்படியெல்லாம் செய்வதற்கு திறமையிருந்தாலும் அறிவிருந்தாலும் காசு நிறையக் கிடைக்கணுமேயின்னு கொஞ்சமாய் அழகாய்ப் பரிமாறி அதிலேயே சாப்பிடுபவனை திருப்தியடையவைப்பதற்காக இட்லியில் ஆமணக்கு கொட்டை முதல் பிஸிபேளாபாத்தில் அஜினோமோட்டோ வரை கலந்துகொடுத்து சாப்பிடுபவர்களை திருப்தியடைவைக்கும் எத்தனையெத்தனை ஓட்டல்கள் இல்லை. இந்த மாதிரி கடைகளைப் பார்க்கும்போது அந்தப்பக்கம் ஒதுங்காமல் இருப்பதுதான் நல்லது.

  ஏதோ ஒரேயொரு ஐட்டம் மட்டும் அந்தக்கடையில் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் நிச்சயமாக இருக்காது, அதற்கும் ஒரு உள்ளர்த்தம் இருக்கும், அந்த ஐட்டத்துக்காக மற்றவர்களை வாங்குவார்கள் என்று.

  மின்சுடுகாட்டில் அருமையான பாடலை அறிமுகப்படுத்திவிட்டால், அந்தப் பாடலைக்கேட்டுத்தான் அங்கே வருபவர்களுக்கு (உயிரோடு இருப்பவர்களுக்கு) துக்கம் பொங்கும் என்றாலோ, வாழ்வின் அர்த்தம் புரியும் என்றாலோ அவர்கள் அதுவரை பார்த்த சாவின்-துன்பத்தின்-துக்கத்தின் அளவை எப்படி அளப்பது? அங்கு வரவைக்கப்பட்டிருக்கும் பிணத்திற்கோ அதைக் கேட்கவும் இயலாது! இப்படிப்பட்ட பாடலை எழுதி இப்படிப்பட்ட இடத்தில் கேட்கவைப்பதால் என்ன பயன்?

  மிகவும் அதிகமாக மக்களைச் சென்றடையக்கூடிய மீடியாவை தன் உயர்விற்கு உபயோகப்படுத்திக்கொண்டு போகிறவழிக்கு ஆத்திகனாக இருந்தால் சிவசிவ சங்கரா என்றும் நாத்திகனாக இருந்தால் கலைஞர் கருணாநிதி கூடுமானால் கவிஞர் கனிமொழி என்றும் இருந்துவிடுபவர்களைப் பார்த்தால் …

  இவர்கள் சமைப்பதைப் பார்த்துங்கூட அதைச் சரியென்று கூறி, சாப்பிட்டும் செரித்தும்விடும் மற்றவர்களையும் பார்த்தால் …

  நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரைப் பார்த்துவிட்டால் என்ற பாரதியின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது. ச்சை. பாரதியை நினைக்கவேண்டிய நேரத்தில் இவர்களையெல்லாம்…

  🙂
  என்றாவது ஒருநாள் மாறுவார்கள் என்ற நம்பிக்கை தானே வாழ்க்கை

 12. Ganpat சொல்கிறார்:

  கா.மை ஜி உள்ளிட்ட நண்பர்களுக்கு காலை வணக்கம்.BSNL தயவால் ஒரு வாரம் விடுமுறை கிட்டியது.:-)
  நம் நாட்டில் “உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் சங்கம்” என்று ஒருஅமைப்பு இயங்குகிறது.அதில் செயற்குழு அங்கத்தினர் கவிஞர் வைரமுத்து.ஒரு சரணத்தில் “பார்வையாலே நூறு பேச்சு; வார்த்தை இங்கு மூர்ச்சை ஆச்சு!”என்று எழுதி விட்டு அடுத்த சரணத்தில் “அக்கம்பக்கம் சுத்தி பாத்து,
  தலைக்குமேலே தண்ணி ஊத்து!”என்று முடிப்பார்.இவரும், கவிஞர் வலியும் கோபாலபுரத்தானை தங்கள் தலைவனாக கொண்டு தமிழுக்கு தொண்டு செய்தவர்கள்.”விமரிசன”த்திற்கு அப்பாற்பட்டவர்கள்.
  சில நண்பர்கள் சொன்னது போல ஜெயமோகனுடன் வைரத்திற்கு உள்ள ஒரே சம்பந்தம் இருவரும் Homo sapiens என்பதே!.

  • todayandme சொல்கிறார்:

   நண்பர் கண்பத்,

   இத்தனை பின்னூட்டங்களுக்கு அப்புறமும் உங்களைக் காணோமே? ஏதேனும் லாங்டூர் போய்விட்டீர்களோ என்று பார்த்தேன். விமரிசனத்தில் தலையையே விமரிசிக்கும்போது இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் விட்டுவைக்க? Non-Homo sapiens யே விட்டுவைக்காத நாம் இவர்களை மட்டும் ஏன்?
   🙂
   என்ன கொஞ்சம் அதிகமாய்ச் சொரிவதால் தலை புண்ணாவிடுகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக கண்பத்.

   எங்கே ஆளையே காணோமே டூர் எதாவது போயிருப்பீர்களோ
   என்று நினைத்தேன். ஆளாளுக்கு தாளித்தால் தானே
   சுவை கூடும்…..!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தவ்ன்

 13. Ganpat சொல்கிறார்:

  நன்றி நண்பர் todayandme & கா.மை அவர்களே.!
  என் வீட்டு வலைதொடர்பு துண்டிக்கப்பட்டு ஒரு வாரம் கழித்து நேற்றுதான் மீண்டும் கிடைத்தது.ஒன்று புரிந்தது.வலைதொடர்பு நம் உடலின் ஒரு அங்கம் போல ஆகி விட்டது.ஒரு வாரம் ஏதோ பறிகொடுத்த உணர்வு.
  மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிக பெருமை வாய்ந்தவை சக்கரம்,மின்சாரம்,வலைதொடர்பு.என்பது நிச்சயம்.
  வணக்கம்.

 14. உடுமலை.காம் சொல்கிறார்:

  எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய நூல்களை இணையத்தில் ஆர்டர் செய்ய: http://udumalai.com/?name=Jeyamohan&auth_id=26

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.