நான் தான் இளிச்சவாயனா ? அவரை ( திருவாளர் சிதம்பரம்..) ஏன் விட்டீர்கள் ….ப்ரபுல் படேல் ….!!!

“வினோத் ராய்” இப்போது இந்தியா முழுவதும் பிரபலமான பெயர். 2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் கேம்ஸ், நிலக்கரி சுரங்க ஊழல்
ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்தவர்.
Controller and Auditor General பதவியிலிருந்து ஓய்வு பெற்ற
அவர் எழுதி இருக்கும் புத்தகம் “Not just an Accountant”.
அதைப் பிரபலப்படுத்தும் விதத்தில் அவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி தன் புத்தகத்தில் கூறியுள்ளவற்றின் சாரங்களைப் பற்றி விவாதித்து வருகிறார்.

இதற்கு முன் அதிகம் பேசப்படாத ஒரு விவகாரம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 68 போயிங் விமானங்கள் வாங்குவது குறித்த நடவடிக்கைகள்.

இது குறித்த சுருக்கமான விவரம் –

prafulpatel-1

2004-ல் மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றபோது, அதில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவர் (சரத் பவாரின் தேசீயவாத
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ) ப்ரபுல் படேல். 2011 வரை அவர் அதே துறை அமைச்சராக நீடித்தார்.

அவரது காலத்தில் ஏர் இந்தியா நிர்வாகத்தில் பல முக்கிய
முடிவுகள் ( இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது உட்பட ) செயல்படுத்தப்பட்டன. வழ வழ கொழ கொழ என்றில்லாமல், நிர்வாகம் திறமையாகச் செயல்பட
அவர் பல முடிவுகளை எடுத்தார். அதனால், பல நல்ல
விளைவுகளும், சில மோசமான விளைவுகளும் ஏற்பட்டன.

நல்ல விளைவுகளுக்கு பெருமை தேடிய ப்ரபுல் படேல்,
மோசமான விளைவுகளுக்கு மற்றவர்களை கைகாட்டினார்.

சிஏஜி வினோத் ராய், அண்மையில் ‘டைம்ஸ் நவ்’ ஆங்கில தொலைக்காட்சி விவாதத்தில் பேசுகையில் 2004-ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனம் 28 போயிங் விமானங்களை வாங்க உத்தேசித்தது. அதற்கான ஆவணங்கள்- துறை அமைச்சர் என்கிற முறையில் ப்ரபுல் படேலிடம் சென்றபோது, அவர்
நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்து, இன்னும் 40 போயிங் விமானங்களையும் சேர்த்து மொத்தம் 68 விமானங்களை வாங்க கோப்புகள் தயாரிக்கச் சொன்னார்.

இதன் விளைவாக – ஏர் இந்தியாவின் தலையில் தேவையே இல்லாமல் 38,000 கோடி ரூபாய் கடன் சுமை ஏற்பட்டது.

விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க
எந்தவித நியாயங்களோ பொருத்தமான காரணங்களோ இன்றி – ப்ரபுல் படேல்
இதைச் செய்தார் என்று அவர் மீது குற்றம் சுமத்தினார்.

ப்ரபுல் படேல், இந்த வணிகத்தின் மூலம்
தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்தார் என்று நேரடியாகச் சொல்லா விட்டாலும் – மறைமுகமாக இந்தப் பழி ப்ரபுல் படேல் மீது விழுந்தது.

இரண்டே நாட்களில், இதற்கு பதிலடி கொடுத்து அதே டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் பேசிய ப்ரபுல் படேல், விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்தது தான் அல்ல என்றும், ஏர் இந்தியா நிறுவன நிர்வாகம் கொண்டு வந்த கோப்பை துறைக்கு பொறுப்பான
அமைச்சர் என்கிற முறையில் கையெழுத்துப் போட்டு, மேலே அனுப்பியதைத் தவிர தனக்கு இதில் தனிப்பட்ட விருப்பம் ஏதும் இல்லை என்று சொன்னதோடு –

விமான போக்கு வரத்துத்துறை அமைச்சர் என்கிற நிலையில், 38,000 கோடி ரூபாய்க்கு விமானங்களை வாங்க தனக்கு அதிகாரமில்லை. எனவே இதை உரிய முறையில் பரிசீலனை செய்து ஒப்புதல் கொடுத்தது அதிகாரம் பெற்ற அமைச்சர்களின்
குழு ( Empowered Group of Ministers ) தான் என்றும்,

அந்த வகையில் – அந்தக் குழுவுக்கு தலைமையேற்று,
உரிய பரிசீலனைக்குப் பிறகு ஒப்புதல் கொடுத்தவர் (அந்நாள்) நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்கள் தான் என்றும் கூறினார்.

திரு. ப.சிதம்பரம் அவர்களை கேள்வி கேட்பதை விட்டு விட்டு, வினோத் ராய் தன்னைச் சாடுவது ஏன் என்று கேட்கிறார் ப்ரபுல் படேல். ( “போய்யா – போ – தப்பு இருந்தா அங்கே போய்க் கேள் -என்னை ஏன் கேட்கறே” …!! )
தொலைக்காட்சியில் வெளிப்படையாகத்
தன் மீது குற்றச்சாட்டுகளைக் கூறிய வினோத் ராய் மீது
தான் மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாகவும் கூறினார்.
( சுவையான இந்தப் பேட்டியை காணக்கூடிய வாய்ப்பு
கிடைத்தால், அவசியம் பாருங்கள்….)

இப்போதெல்லாம் அரசியல்வாதிகளின் மீது ஆயிரக்கணக்கான கோடிகள் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்படும்போது ஏனோ தெரியவில்லை – நமக்கு அதிர்ச்சியே
ஏற்படுவதில்லை. ……. மரத்துப் போய் விட்டது..!!

எல்லாரும் கில்லாடிகள். எந்தவித சாட்சியத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள்…..தான் தப்பிக்க தேவையான அத்தனை முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொண்டிருப்பார்கள்… !!

ஆனால், திரு ப.சி.அவர்கள் மிகவும் கெட்டிக்காரர்.
அநாவசியமாக இந்த மாதிரி பேட்டிகளில் எல்லாம் வந்து
மாட்டிக் கொள்ள மாட்டார். இருந்தாலும், ப்ரபுல் படேலுக்கு அவர் பதில் விளக்கம் சொல்லித்தானே ஆக வேண்டும்….?

நம் மக்களுக்கு இதைக்குறித்தெல்லாம் சூடு சொரணை இல்லா விட்டாலும் கூட –
இந்த பே(போ)ட்டியைக் காணும்போது,

‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தில்,
பி.எஸ்.வீரப்பா கூறும் ” சபாஷ் – சரியான போட்டி ” என்கிற வாசகம் நினைவிற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை…..!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to நான் தான் இளிச்சவாயனா ? அவரை ( திருவாளர் சிதம்பரம்..) ஏன் விட்டீர்கள் ….ப்ரபுல் படேல் ….!!!

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  இப்போதெல்லாம் அரசியல்வாதிகளின் மீது ஆயிரக்கணக்கான கோடிகள் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்படும்போது ஏனோ தெரியவில்லை – நமக்கு அதிர்ச்சியே
  ஏற்படுவதில்லை. ……. மரத்துப் போய் விட்டது..!!
  எல்லாரும் கில்லாடிகள். எந்தவித சாட்சியத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள்…..தான் தப்பிக்க தேவையான அத்தனை முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொண்டிருப்பார்கள்… !! = நிஜம் தான்.

 2. k.gopaalan சொல்கிறார்:

  //ஏர் இந்தியா நிறுவன நிர்வாகம் கொண்டு வந்த கோப்பை துறைக்கு பொறுப்பான
  அமைச்சர் என்கிற முறையில் கையெழுத்துப் போட்டு, மேலே அனுப்பியதைத் தவிர தனக்கு இதில் தனிப்பட்ட விருப்பம் ஏதும் இல்லை//

  அந்தோ பரிதாபம். கேள்வி கேட்காமல் கையெழுத்துப் போட்டாரோ. ஒரு நாள் இந்த அமைச்சர் இது என் கையெழுத்தே இல்லை என்று கூறினாலும் நம்பக்கூடிய மக்கள் நிறைந்த சனநாயக நாடு.

  கோபாலன்

 3. nparamasivam1951 சொல்கிறார்:

  நமக்கு அதிர்ச்சியே
  ஏற்படுவதில்லை. ……. மரத்துப் போய் விட்டது..!!
  எல்லாரும் கில்லாடிகள். //
  இது தான் உண்மை, சார். வடிவேலு ஒரு படத்தில் கிணறு காணாமல் போனது எனும் வசனம் வந்த போது சிரித்தோம். ஆனால், இனி சிரிக்க மாட்டோம்.

 4. Dr k g palaniappan சொல்கிறார்:

  Are we to assume that the hapless nation’s wealth is looted in thousands of crores repeatedly .
  Does it sound like the case of delhi’s hapless Nirbhaya being tortured repeatedly.

 5. todayandme சொல்கிறார்:

  ( சுவையான இந்தப் பேட்டியை காணக்கூடிய வாய்ப்பு
  கிடைத்தால், அவசியம் பாருங்கள்….)

  Frankly Speaking with Praful Patel – 1
  http://www.timesnow.tv/videoshow/4464280.cms
  http://timesofindia.indiatimes.com/configspace/ads/TimesWrapper.swf

  Frankly Speaking with Praful Patel – 2
  http://www.timesnow.tv/videoshow/4464281.cms
  http://timesofindia.indiatimes.com/configspace/ads/TimesWrapper.swf

  சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.