ராஜீவ் காந்தி – பிரபாகரன் – யார் யாரை ஏமாற்றினார்கள் ….?

அண்மையில் முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் ‘ஒரு வாழ்க்கை போதாது: ஒரு சுயசரிதை’ ( ‘One Life is Not Enough: An Autobiography’) என்கிற தலைப்பில் தான் எழுதிய புத்தகம் ஒன்றை வெளியிடுவதை முன்னிட்டு, ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பேட்டியளிக்கும்போது கூறிய பல செய்திகளுக்கிடையே இலங்கை குறித்து கூறிய ஒரு விஷயம் –

————–

“விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை –
ராஜீவ் காந்தி மிகவும் நம்பினார். பிரபாகரனை ராஜீவ் காந்தி சந்தித்த பின்னர், ( இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணும்
ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தொடர்பாக )
“பிரபாகரனிடமிருந்து எழுத்துப்பூர்வமான உறுதி எதையும் வாங்கினீர்களா?” என நான் ராஜீவிடம் கேட்டேன்.

நான் இவ்வாறு கேட்டதும் எரிச்சலுற்ற ராஜீவ்,
” அவர் வார்த்தையால் உறுதி அளித்துள்ளார்” எனக் கூறினார். ஆனால் பிரபாகரன், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி உள்பட அனைவரிடமும் இரட்டை கலப்பு நிலையையே மேற்கொண்டிருந்தார்.”

——————–

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தலைவர்
பழ.நெடுமாறன் அவர்கள் –

“உண்மையில் ஏமாற்றியது ராஜீவ் காந்தி தான் –
பிரபாகரன் அல்ல” என்கிறார்.

“1987-ம் ஆண்டு ஜூலை 23-ம் நாள் யாழ்ப்பாணத்துக்கு இந்திய விமானப்படையைச் சேர்ந்த உலங்கு வானூர்தியை அனுப்பி பிரபாகரனையும் அவரது தோழர்களையும் தில்லிக்கு வரவழைத்தார் பிரதமர் ராஜீவ் காந்தி.
ஆனால், இலங்கைத் தூதுவராக இருந்த தீட்சித்,
புலனாய்வுத் துறையின் தலைவர் எம்.கே.நாராயணன் மற்றும் பல உயர் அதிகாரிகள் பிரபாகரனைச் சந்தித்து இலங்கையுடன் இந்தியா செய்துகொள்ளப்போகும் உடன்பாட்டினை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள், ஒரு கட்டத்தில்
மிரட்டினார்கள்.

rajiv-prabhakaran -anton balasingam, panrutti

 

பிறகு தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை தில்லிக்கு வரவழைத்து பிரபாகரனுடன் பேசும்படி செய்தார்கள்.
இந்திய – இலங்கை உடன்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் காரணத்தை எம்.ஜி.ஆர் கேட்டார். பிரபாகரனும் பாலசிங்கமும் அதற்குத் தக்க பதில் கூறினார்கள்.

அதற்குப் பிறகு பிரபாகரனின் நிலைப்பாட்டை ஆதரித்த எம்.ஜி.ஆர், ”இந்தப் பிரச்னையில் பிரபாகரன் எத்தகைய முடிவு எடுக்கிறாரோ,
அதற்கு தனது முழு ஆதரவும் இருக்கும்” என்று கூறினார்.

அதற்குப் பிறகு ஜூலை 28-ம் நாள் நள்ளிரவில் பிரபாகரனையும் பாலசிங்கத்தையும் பிரதமர் ராஜீவ் சந்தித்தார். ”உடன்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக அறிந்தேன். அதில் உள்ள குறைபாடுகள்
குறித்து எனக்கு விவரமாகக் கூறுவீர்களா?” என்று கேட்டார்.

”ஒற்றையாட்சி அரசியல் அமைப்பைக் கொண்டிருக்கிற
இலங்கையில் இந்த உடன்பாட்டின்படி அதிகாரப் பகிர்வு செய்வது என்பது இயலாத காரியம். மேலும், மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் மிகவும் குறைவானது. இந்த உடன்பாடு தமிழ் மக்களின் நலனுக்கு எதிரானது” என்றார் பாலசிங்கம்.

அதற்கு ராஜீவ்காந்தி, ”உங்கள் நிலைப்பாடு எனக்கு நன்றாகப் புரிகிறது. இந்த உடன்பாட்டை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால், இந்த உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தால் போதும்” என்றார்.

இறுதியாக, வடகிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாக ஆட்சி நிறுவப்பட்டு, அதில் விடுதலைப் புலிகளுக்குப் பெரும்பான்மை பிரதிநிதித்துவம் வழங்குவது என முடிவுசெய்யப்பட்டது.
இடைக்கால ஆட்சியின் அதிகாரம், செயற்பாடு போன்ற
விஷயங்களை ஜெயவர்த்தனாவுடன் பேசி முடிவு காண்பதாக ராஜீவ் உறுதி அளித்தார்.

தமிழர்களின் பாரம்பரிய நிலத்தில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அரசு காவல் துறை நிலையங்களைத் திறக்கக் கூடாது என்றும்
பிரபாகரன் கூறினார். அதற்கு ராஜீவ் காந்தி இணக்கம் தெரிவித்தார்.

”ஆயுதங்கள் ஒப்படைப்புப் பற்றிய பிரச்னையில் சிறிதளவு ஆயுதங்களை புலிகள் ஒப்படைத்தால் போதும்”
என ராஜீவ் கூறினார்.

இந்தப் பேச்சு முடிவடைந்த நேரத்தில், அருகே இருந்த
தமிழக அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் பாலசிங்கம், ”ராஜீவ் காந்தி – பிரபாகரன் உடன்பாடு பற்றி இங்கு பேசப்பட்டது.
பிரதமரும் பல வாக்குறுதிகள் அளித்திருக்கிறார். இவை அனைத்தையும் எழுத்தில் வரைந்து இரு தலைவர்களிடம் இருந்தும் கையொப்பம் பெற்றால் நல்லது. அது இந்த ரகசிய உடன்பாட்டுக்கு வலிமை சேர்க்கும்” எனக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த ராஜீவ், ”நீங்கள் எதற்கும் கவலைகொள்ளத் தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான் நிச்சயமாக நிறைவேற்றி வைப்பேன். இது எழுதப்படாத உடன்பாடாக
இருக்கட்டும்” என ராஜீவ் கூறினார்.

——————

எம்ஜிஆர் அவர்கள் தமிழக முதல்வராக இருந்த
அந்த நாட்களில் – காவல்துறைத்தலைவராக
பணியாற்றியவரும், எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமாக
இருந்தவருமான டிஜிபி மோகன்தாஸ் அவர்கள்
பிற்பாடு ஒரு பேட்டியில் – இதுபற்றி கூறும்போது

” வடக்கு மாகாண (வடகிழக்கு அல்ல – வடக்கு மட்டும்) முதல்வர் பதவி கொடுப்பதாக ஆசை காட்டினால், பிரபாகரன் இணங்கி விடுவார் என்று ராஜீவ் காந்தி துவக்கத்திலேயே தப்புக் கணக்கு போட்டு செயல்பட்டதே பின்னர் ஏற்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம்” – என்றார்.

—————–

ஆக, ராஜீவ் காந்தி – பிரபாகரன் இடையே ஏற்பட்ட
உடன்பாடுகள் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட
விரும்பாதது யார் – ராஜீவ் காந்தியா அல்லது பிரபாகரனா …?

பின்னால் நிகழ்ந்த சம்பவங்கள் தான் இதற்கு விடையளிக்கின்றன.
இருவருமே – ஒருவரை ஒருவர் நம்பவில்லை…!

இந்த உடன்பாட்டில் காணப்பட்டுள்ள விஷயங்கள்
நிறைவேற்றப்படக்கூடியவை என்று இருவருமே நம்பவில்லை –

அதனால் தான் இது கையெழுத்தாகவில்லை என்பது தானே  பிற்கால நிகழ்வுகள் காட்டும் உண்மை…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ராஜீவ் காந்தி – பிரபாகரன் – யார் யாரை ஏமாற்றினார்கள் ….?

 1. sakthy சொல்கிறார்:

  ஈழத் தமிழர்கள் பிரச்சனை பற்றிய பல நூல்களைப் படித்திருக்கிறேன். நடு நிலையோடு பார்க்கும் போது அரசியல்வாதி ராஜிவ் காந்திதான் ஏமாற்றி இருப்பார் அல்லது ஏமாற்ற நினைத்திருப்பார். அல்லது அவரின் வெளியுறவுத் துறையினர் ஆலோசனையுடன் செயல்பட்டிருப்பார் எனத் தோன்றுகிறது.

  இறுதிப் போரின் போதும் இந்திய வெளியுறவுத் துறையினர், ஐ. நா.ஆலோசனைக் குழுவினர் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்களத்திற்கு ஆதரவாக செயல்பட்டது பின்னர் தெரிய வந்தது.இதை ஐ.நா வே மறைமுகமாக ஏற்றுக் கொண்டது. அவர்கள் அறிக்கையில் அந்த விளக்கம் கறுப்பு மையினால் மறைக்கப்பட்டிருந்தது. பின்னர் அதைக் கண்டு பிடித்து விட்டார்கள்.

  ஈழத் தமிழர் பிரச்சனையை தொடக்கத்தில் இருந்து கவனித்து வந்தால் தற்போதய நிலையைப் போல் மிக மோசமாக இருந்திருக்கிறது.மொழித் திணிப்பு, கல்வியும் வேலையும் தமிழருக்கு இல்லை.பல தடவைகள் இனக்கலவரம்.
  1956 இல் நடந்த இனக்கலவரத்தின் போது என் தாத்தா அங்கு வியாபார காரணமாக சென்றிருந்தார். தமிழர்கள் படுகொலை, குழந்தைகள் வெட்டிக்கொலை,குழந்தைகள் தாரில் மூழ்கடிக்கப்பட்ட செயல்,கர்ப்பிணிப் பெண் வெட்டப்பட்ட கொடுமை,தமிழர்கள் இறைச்சி என விற்ற இழி செயல் என பல கொடுமைகள். பொலீசாரும் இராணுவமும் வேடிக்கை பார்த்தது. கதை கதையாக சொன்ன தாத்தா பின்னர் கப்பலில் நாடு திரும்பினார்.

  இப்படியான நிலையில் தமிழர்களோ தலைவர்களோ,பிரபாகரனோ பதவிக்கு பணத்திற்கு அடிமையாகி இருக்க மாட்டார்கள். அகிம்சைப் போராட்ட காலத்தில் தீர்வு என்று கூறி பல முறை ஏமாற்றப்பட்டார்கள். தந்தை செல்வா-பண்டா ஒப்பந்தம்,ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இப்படிப் பல ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன.

  இந்த நிலையில் பிரபாகரன் மட்டுமல்ல எந்த தமிழ் தலைவரும் ராஜிவ் காந்தியை அல்ல எவரின் வாய்மொழி தீர்வையோ ஒப்பந்தங்களையோ நம்பி இருக்க மாட்டார்கள்.பல முறை ஏமாற்றப்பட்ட அனுபவம் அவர்களுக்கு இருந்தது.

  அதே சமயம் ராஜிவ்காந்தி நம்பிக்கையான தலைவர் அல்ல. பல ஊழல் குற்றச்சாட்டுகள், முறை தவறிய பாரபட்சமான அரசியல் செயல்கள் இப்படிப் பலவற்றில், மக்கள் நம்பிக்கை இழந்திருந்தனர். அவர் இந்திரா காந்தியின் மகன் என்று சொல்ல தகுதியற்றிருந்தார். எப்படி காந்தியின் ஒரு பிள்ளையோ அப்படி.

  ராஜிவ் காந்தி பற்றி ஒன்றே ஒன்று சொல்வதானால் நேரு குடும்பம் என்பது மட்டும் தான் அவருக்கு பாசிடிவ் எனலாம். அவரின் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் உன்னிப்பாகப் பார்த்தால் எதிலும் முதிர்ச்சியின்மையே காணப்பட்டது.

 2. chandraa சொல்கிறார்:

  here in chennai all slum dwellers real madras people were uprooted from their living places allotted places to very distant places… their children are still to find admission in any govt schoos even… the difference between haves and have notsare in creasing in GEOMETRICAL PROGRESSIONS….. in tamilnadu bangalore… are the worst examples… education medical expenses are out of reach for the common man. let us not worry about rajapakshe… for sometime atleast.

 3. yogeswaran சொல்கிறார்:

  very recently sri lankan govt passed a resolution in the parliament which grants citizenship to all stateless persons of indian descend.

  even though they are granted citizenship plantation tamils are called tamils of indian origin.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.