நரசிம்மராவ் காலத்தில் அழிக்கப்பட்ட தகவல்கள்…. (சாமிகளின் சாகசங்கள் – பகுதி- 3 )

நரசிம்மராவ் பிரதம மந்திரியாக இருந்தபோது
ராஜீவ் கொலை விசாரணை
சம்பந்தப்பட்ட மிக முக்கியமான சில கோப்புகள் காணாமல் போயின.

அதெப்படி எப்படி பிரதமரின் அலுவலகத்தில் இருந்த கோப்புகள்,
அதுவும், நாட்டையே உலுக்கிய ராஜீவ் கொலை வழக்கு சம்பந்தமான
பைல்கள் காணாமல் போகும்..?
அவை அழிக்கப்பட்டன அல்லது வேண்டுமென்றே
ஒழி(ளி…? )க்கப்பட்டன என்பது தானே உண்மையாக இருக்க முடியும் …?

யார் கொடுத்த செய்தி இது …?
எப்படி இதை நம்புவது …?

அப்படிக் காணாமல் போன கோப்புகளின் பட்டியலை ஆதாரங்களுடன்
அப்போதைய ‘அவுட் லுக்’ ஆங்கில ஏடு (24.11.1999 இதழ்) பட்டியலிட்டுக்
காட்டி இருக்கிறது.

‘அவுட் லுக்’ தந்த விவரங்கள் கீழே –

———————–

outlook logo

File containing intercepted messages from foreign intelligence agencies, said to be
addressed to Chandraswami and Janata Party president Subramanian Swamy,
destroyed by senior officials in the PMO.

File on IB’s assessment of the role played by Zail Singh and Chandraswami in 1987
to topple Rajiv Gandhi missing.

File with records of official briefings by intelligence agencies on the assassination to
Rao’s home minister S.B. Chavan missing. The former minister confirms he was
briefed orally.

File No. 8-1-WR/JSS/90/Vol.III—containing notings of bureaucrats regarding security
arrangements for Rajiv Gandhi from November ’89—was lost from the PMO in ’91.
Later, it was doctored and reconstructed by the Narasimha Rao government before
it was submitted to the Jain Commission.

File No. 1/12014/5/91-IAS/DIII reported missing since 1995. It pertained to the
terms of reference of the Verma and Jain commissions of inquiry.

The April 20, 1991, wireless intercept with the leading question—should Rajiv be
killed in Delhi or Madras?—missing.

———————-

1989 நவம்பரிலிருந்து ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி
அதிகாரிகள் எழுதிய குறிப்புகளைக் கொண்ட கோப்பு (8-1-WR/JSS/90/volIII)
பிரதமர் அலுவலகத்திலிருந்து 1991 ஆம் ஆண்டே காணாமல் போய் விட்டது.

ஜெயின் ஆணையம் இந்தக் கோப்பை கேட்டபோது இந்த கோப்பு
கிடைக்கவில்லை…… பிறகு, இருக்கும் தகவல்களை வைத்து,
ஒட்டு வேலைகள் செய்து புதிதாக ஒரு கோப்பை தயாரித்து, ஆணையத்தின் முன் சமர்ப்பித்தார்கள்.

இந்தக் கோப்புகளை எழுதிய அதிகாரிகளில் ஒருவர் வினோத் பாண்டே.
இவர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அமைச்சரவை செயலாளராக
இருந்தவர். ஜெயின் ஆணையத்தின் முன் சாட்சியமளித்த அந்த அதிகாரி,
கோப்புகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, இந்தக் கோப்புகளில் தான் எழுதிய
குறிப்புகள் இடம் பெறவில்லை; இவை திருத்தப் பட்டவை என்றார்.
அப்போது உள்துறையில் துணை அமைச்சராக இருந்தவர்,
திரு. ப. சிதம்பரம் அவர்கள்…. !!

கோப்புகள் திருத்தி, ஒட்டி, போலியாக தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து ஜெயின் ஆணையம் உள்துறை அமைச்சகத்தை அழைத்துக் கேட்டது. திரு.ப.சிதம்பரம் கூண்டில் ஏறி, ‘ஆம், ஒரிஜினல் கோப்புகளை எவ்வளவு தேடியும் கிடைக்காததால், இருக்கின்ற தகவல்களை
வைத்துக்கொண்டு கோப்புகளை புதிதாக தயாரித்தது உண்மைதான்’ என்று ஒப்புக் கொண்டார்.

அதே போல், சந்திரசாமி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி
ஆகியோருடன் வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் தொடர்பு கொண்டு
பேசியபோது, உளவுத்துறையால் இடைமறித்துக் கேட்கப்பட்ட
உரையாடல்களைப் பதிவு செய்த கோப்பை பிரதமர் அலுவலகத்தைச்
சேர்ந்த மூத்த அதிகாரிகளே அழித்து விட்டனர்.

இந்த தகவல், ஆதார அழிப்புகளுக்கு – என்ன காரணம் …..?

சந்திராசாமி வெறும் ஜோசியம் கூறும் சாமியார் மட்டுமல்ல…
தாந்த்ரீக வேலைகளுடன் அவர் நின்று விடவில்லை….
அவருடைய தொடர்புகள் வெறும் அரசியல்வாதிகளோடும்
நின்று விடவில்லை.

அகில உலக அளவில், நேரிடையாகவும், கள்ளத்தனமாகவும் கூட
ஆயுத பேர, வியாபாரங்களில் ஈடுபட்ட மிகப்பெரிய புள்ளிகளான
அட்னன் கஷொகி (Adnan Khashoggi) மற்றும் என்ரி மில்லர் (Ernie Miller)
ஆகியோருடன் வியாபாரத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு –
கள்ள ஆயுத பேரங்களில் ஈடுபட்டிருந்தார். ( இந்த விஷயம்
பிற்பாடு நிரூபிக்கப்பட்டு, அவருக்கு எட்டு கோடி ரூபாய் அபராதம்
விதிக்கப்பட ஒரு காரணமாகவும் இருந்தது. )

அப்போதைய பிரதமரான நரசிம்ம ராவுக்கு இவர் குரு.
பல முக்கியமான விஷயங்களில் நம்பிக்கையான ஆலோசகர்…!
இருவருக்கும் 25 ஆண்டுக்கால நெருங்கிய பழக்கம்.

சந்திராசாமியின் வியாபாரங்களில் சுப்ரமணியன் சுவாமிக்கு
என்ன பங்கு, எந்த அளவிற்கு தொடர்பு – என்பது நமக்குத் தெரியாது.
ஆனால் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது
அனைவருக்கும் தெரிந்த உண்மை.

1998 ஆம் ஆண்டு ராஜிவ் சர்மா என்பவர் ராஜீவ் காந்தி கொலையைப்
பற்றி ‘Beyond the Tigers’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்திற்கு ராஜீவ் கொலை நடந்தபோது மத்திய புலனாய்வுத்
துறையின் இயக்குனராக இருந்த விஜய்கரன் என்ற அதிகாரியே முன்னுரை எழுதியிருப்பதைப் பார்க்கும்போது, இதில் கூறப்படும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது..

அவர் தனது முன்னுரையில், இந்த புத்தகம் ஒரு போலீஸ் டைரியைப் போல்
இருப்பதாக குறிப்பிடுகிறார்.
போலீஸ் டைரியைப்போல் என்பதைவிட, போலீஸ் டைரியிலிருந்தே
பல செய்திகள் அப்படியே பிரதி எடுக்கப்பட்டுள்ளது போல் இருக்கிறது
என்று இந்த புத்தகத்தைப் பற்றிய விமரிசனங்கள் கூறுகின்றன.
எனவே, புலனாய்வுத் துறையில் ஈடுபட்டிருந்த ஒரு அதிகாரியே
இந்த புத்தகத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு கொண்டிருப்பார் என்றும் தோன்றுகிறது. இந்த புத்தகத்திற்கு பின் இணைப்புகளாக தரப்பட்டுள்ள ஆவணங்கள் புலனாய்வுத் துறை தொடர்புள்ளவையாகவே இருக்கின்றன….

இந்தப் புத்தகத்தின் முக்கிய கருத்து எப்படிப் போகிறது ……?

ராஜீவ் காந்தியை கொலை செய்தது விடுதலைப் புலிகள்தான் என்று
இந்த புத்தகம் கூறுகிறது. ஆனால், அந்தக் கொலைக்குப் பின்னால்,
சில சர்வதேச சக்திகள் இருந்தன. அந்த சர்வதேச சக்திகளுக்காக
விடுதலைப் புலிகள் இந்தக் கொலையை செய்து முடித்துவிட்டு,
அதற்கு பிரதிபலன்களாக சக்தி வாய்ந்த கப்பல்களையும் ஆயுதங்களையும்
பெற்றுக் கொண்டார்கள். ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகுதான் புலிகளுக்கு
கப்பல்களில் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் வரத் தொடங்கின.
எனவே, இதனைச் செய்து முடித்தால், பெரிய அளவிலான ஆயுத சப்ளைகள் செய்வதாகக்கூறி சில வெளிசக்திகள் விடுதலைப் புலிகளை இதில் செயல்பட வைத்திருக்கின்றன என்பதே இந்த புத்தகத்தின் மையக்கருத்து…!!

அந்த சர்வதேச சக்திகள் எவை …..?
சந்திராசாமிக்கு அதில் என்ன பங்கு ….?

ராஜீவ் காந்தி கொலை நிகழ்ந்த சமயத்தில், மத்தியில் பிரதமராக
ஆட்சி புரிந்தவர் சந்திரசேகர். அவரது அரசில், சட்ட அமைச்சராக
இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தவர் திரு.சுப்ரமணியன்சுவாமி.

கொலை நிகழ்ந்த நாளில், திருவாளர்கள் சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி
இருவரும் சென்னையில் தான் இருந்தார்கள் என்று ஜெயின் கமிஷன்
முன்பாக சாட்சியம் கூறப்படுகிறது…
ஆனால், இந்த விஷயங்களை மறைக்க முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
(இந்த விவரங்கள் பின்னால் வருகின்றன…)

” File containing intercepted messages from foreign intelligence agencies,
said to be addressed to Chandraswami and Janata Party president Subramanian
Swamy, destroyed by senior officials in the PMO. ”

எனவே, நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, ராஜீவ் காந்தி
கொலை வழக்கில் சந்திராசாமி மற்றும் சுப்ரமணியன் சுவாமி
சம்பந்தப்பட்ட தகவல்கள் அழிக்கப்பட்டன என்று ‘அவுட் லுக்’
இதழ் ஆதாரங்களுடன் கூறுவது எங்கே கொண்டு போய் விடுகிறது …..?

இது விஷயத்தில் தீவிரமாகத் தோண்ட ஆரம்பித்த ஜெயின் கமிஷனை
முடக்குவதற்கான அனைத்து வேலைகளிலும் ராவ் அரசு இறங்கியது….
முதலில், நரசிம்ம ராவ் ஆசியுடன் முஷ்டாக் அஹ்மத் என்கிற
அட்ரஸ் இல்லாத வக்கீல் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில்,
ஜெயின் கமிஷனைக் கலைக்க வேண்டும் என்று ஒரு பெட்டிஷன்
போட்டார். இது கோர்ட்டால் நிராகரிக்கப்பட்டவுடன் –

மத்திய அரசு வெளிப்படையாக சுப்ரீம் கோர்ட்டில் இதே விஷயத்திற்காக,
ஒரு special leave petition (SLP) தாக்கல் செய்தது…..

 

(தொடருகிறது – பகுதி-4-ல் )

 

சாமிகளின் சாகசங்கள் – மற்ற பகுதிகளுக்குப் போக
சொடுக்கவும் –
Part1

Part2

Part4

Part5

Part6

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to நரசிம்மராவ் காலத்தில் அழிக்கப்பட்ட தகவல்கள்…. (சாமிகளின் சாகசங்கள் – பகுதி- 3 )

 1. todayandme சொல்கிறார்:

  தமிழ் வலைப் பதிவுலகில் முதல்முறையாக…………!!!!!!
  எதுவும் நடக்கும் மர்மதேசம் ! – இந்தியா

  பெருங்காயமாய்க் கடலில் கரைந்துபோனதை
  பாற்கடலைக் கடைந்து வெளிவரும் அமுதும் நஞ்சும்
  பிரித்துத்தர முயலும் கா.மை. !

  உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டுக்குரியது
  தொடர்ந்து எழுதுங்கள்
  வாசிக்கக் காத்திருக்கிறேன்.

  இந்தியப் பெருங்கடலில்தான்
  எத்தனை எத்தனை சுறாக்கள், திமிங்கிலங்கள்
  நினைக்கவே
  பயமாக இருக்கிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே (todayandme)

   உங்களைப் போன்றவர்கள் தரும் உற்சாகம் தான்
   எனக்கு டானிக். நன்றி நண்பரே.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. Ganpat சொல்கிறார்:

  வேலைப்பளு காரணமாக இப்பொழுது தான் மூன்று பகுதிகளையும் படித்தேன்.மிக தெளிவாக ஒரு குழந்தைக்குகூட புரியும் வண்ணம் எழுதியுள்ளீர்கள்.இது எவ்வளவு சிரமமான வேலை என்பதை நான் அறிவேன்.உங்களுக்கு நான் நன்றி சொல்வதை தவிர வேறு என்ன செய்யமுடியும்? நண்பர் todayandme சொல்வதுபோல// இந்தியப் பெருங்கடலில்தான்எத்தனை எத்தனை சுறாக்கள், திமிங்கிலங்கள் நினைக்கவே பயமாக இருக்கிறது.// இந்த வேகத்தில் போனால் கடலில் தண்ணீரே கிடையாது வெறும் சுறாக்கள், திமிங்கிலங்கள் மட்டும் வாழ்கின்றன என்று கூட தெரியவரலாம்.அதன் மூலம் சுறாக்கள், திமிங்கிலங்கள் தரையிலும் (அதாவது தண்ணீர் இல்லாமல்) வாழும் சக்தி படைத்த உயிரினங்கள் என்று நம்மால் உலகம் அறியும்.மொத்தத்தில் “இஇகாஉ” (இந்தியாவை இறைவன் காப்பற்றினால்தான் உண்டு.)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் கண்பத்,

   இ.இ.நி.கா. (இந்தியாவை இறைவன் நிச்சயம் காப்பாற்றுவான்….
   நம்பிக்கை வையுங்கள்….!!!)
   கடந்த காலம் எப்படி இருந்தாலும், எதிர்காலம் நன்றாக இருக்கும்.

   என்ன -66 கோடி கிலோமீட்டர் தாண்டிச் செல்லும் ராக்கெட்டை
   கட்டுப்படுத்தத் தெரியும் நம் மக்களுக்கு, இந்த அயோக்கிய
   அரசியல்வாதிகளை புரிந்துகொள்ளத் தெரியவில்லை…
   அது தான் பிரச்சினைகளுக்கு மூல காரணம்….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. visujjm சொல்கிறார்:

  அம்மா நிலுவையில் உள்ளார்கள்., ராஜீவ் காந்தி வழக்கு அதி ஆராவாரங்களுடன் தாங்கள் கொண்டு செல்கிறீரே… சாமிகளே நீங்கள் எங்கிருப்பினும் தீர்ப்பு ஒன்று இருப்பதை மறவாதீர்…

 4. Dr k g palaniappan சொல்கிறார்:

  Dear KM,
  Imagine what money can do.
  The most prominent lawyers defend the most indefensible scamsters of modern India leaving
  their conscience if they have any for sharing the looted money (2g,coal,Cwg etc).
  An actor going to nuts for the sake of money is no great news.
  A thief stealing to feed his family can be forgiven.
  What can you do to a man in the garb of a sanyasi doing such diabolical acts for money and power.
  Do you still believe that all the hoarders of ill gotten money in the foreign banks would come to
  face the music one day ?
  We can vent our mind in these postings to get some solace .
  Thanks for that opportunity – DrKGP

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear Dr.Palaniappan,

   Exactly – Most of us have similar feelings.
   This blog is some sort of ventilation to let our feelings out….
   Whether you agree or disagree with the points focussed here –
   You are free to express your own feelings here without
   any hesitation.
   Thank you for your comments.

   with all best wishes,
   Kavirimainthan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.