வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது – மேட்ச் பிக்சிங் என்னும் புதிய பார்முலா …?

39 ஆண்டுகளுக்கு முன்னரே சர்க்காரியா கமிஷனால் –
விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் முறையைக்
கண்டு பிடித்தவர்
என்று புகழாரம் சூட்டப்பட்டவரும் –

சிவகங்கையில் ஆடாமலே ஜெயிச்ச மகா கெட்டிக்காரரும் –

எந்த அரசுப்பொறுப்பிலும் இல்லாமலே, சகல அதிகாரங்களையும்
செலுத்தியவரும், சத்தம் இல்லாமல் ஒன்றரை லட்சம்
தமிழர்கள் கொல்லப்படக் காரணமாக இருந்தவரும் –

சேர்ந்து ஒரு புதிய பார்முலாவை வெற்றிகரமாக
அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்….

மேட்ச் பிக்சிங் – ஆடாமலே ஜெயிச்சுட்டோமடா…..!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது – மேட்ச் பிக்சிங் என்னும் புதிய பார்முலா …?

 1. K.Raghavendra சொல்கிறார்:

  எங்கே இதைச் சொல்லாமல் விட்டு விடுவீர்களோ என்று நினைத்தேன்.
  எப்படி எழுதுவீர்கள் என்று கூட யோசித்தேன்.
  எப்பவோ 10 மாதங்களுக்கு முன்னரே நடந்த மேட்ச் பிக்சிங்.
  இதைப்பற்றி இன்னும் விவரமாக உங்களால் எழுத முடியுமா ?

 2. Dr k g palaniappan சொல்கிறார்:

  அன்பின் காவிரிமைந்நன், தாமதமின்றி விளக்கமாக நாளை எதிர் பார்த்து உள்ளோம்

 3. gopalasamy சொல்கிறார்:

  ANY HIDDEN FOURTH PARTNER ? WACC?

 4. ரிஷி சொல்கிறார்:

  காவிரிமைந்தன்,
  ஆடாம ஜெயிச்சோமடா படத்தின் டீசரே செமையாக உள்ளது. அடுத்ததாக ஒரு குறும்படமும், ஒரு நெடும்படமும் எதிர்பார்க்கிறேன். 🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்களே,

   சில விஷயங்களை இப்போதைக்கு என்னால்
   விவரமாக எழுத இயலாது.
   அதற்கேற்ற சூழ்நிலை
   உருவாகும்போது அவசியம் எழுதுகிறேன்.

   இப்போதைக்கு – எனக்குத் தெரிய வந்த
   ஒரு தத்துவம் மட்டும் கீழே –

   வருமானத்திற்கு அதிகமாக செலவழிப்பது
   -ஒருவரை கடனாளியாக்கும்…….

   வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பது,
   -ஒருவரை லஞ்ச ஊழல் வழக்கிற்கு உள்ளாக்கும்…

   அளவிற்கும் அதிகமாக ஒருவரை தண்டிப்பது,
   அவரது எதிரிகளின் தேவைகளை நிறைவேற்றும்…..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. M Nithil சொல்கிறார்:

  I see this as a beginning. The time is not far away for the other group. And Mr KM sir, do u really believe that this (verdict) has nothing to do with the central govt.

  M Nithil

 6. K.Raghavendra சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  ஒரு கேள்விக்கு மட்டும் விளக்கம் சொல்லி விடுங்கள் –
  ‘disproportionate’ என்கிற definition சொத்து குவிப்புக்கு
  மட்டும் தான் பொருந்துமா அல்லது தரப்படும்
  தண்டனைக்கும் பொருந்துமா?

  • sakthy சொல்கிறார்:

   எனக்குத் தெரிந்தவரையில், பொருந்தும்-முடிவு உச்ச நீதிமன்றின் கையில்.
   இது Prevention of Corruption Act, 1988, இந்தச் சட்டத்தின் கீழ் வருகிறது. சட்ட நிபுணர் பதில் சொல்ல வேண்டும்.காமை ஐயா தெரிந்தால் சொல்வார்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நன்றி நண்பரே,

    இதில் என் கருத்தை சொல்வதை விட இன்று மாலை வழக்கறிஞர்
    ராம் ஜெத்மலானி அவர்கள் கூறியுள்ள கருத்தை தருவது
    பொருத்தமாக இருக்கும். செய்தி கீழே –
    —————

    சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழக்கப்பட்ட தீர்ப்பு
    குறித்து மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி கடும் கண்டனம்
    தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,
    “ஊழல் தடுப்பு சட்ட விதிகளின்படி இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை.
    அபாராதம் விதித்ததில் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா நீதிக்
    கோட்பாடுகளை மீறிவிட்டார்

    மேலும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வழக்கறிஞர்
    என்ற முறையில் இந்த தீர்ப்பை எதிர்ப்பதாக கூறிய அவர்
    ஜெயலலிதாவுக்கு இந்த தீர்ப்பை வழங்கியதன் மூலம் நீதிபதி
    ஜான் மைக்கேல் டி குன்ஹா நீதித்துறையில் மிகப்பெரிய
    தவறை செய்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், “உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப இந்த தீர்ப்பு
    வழங்கப்பட்டுள்ளதா? என்று ஆழமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது’’
    என்றும் கூறியுள்ளார்.
    ————-
    என் கருத்துக்கள், புகழ்பெற்ற சட்டமேதையின் கருத்துக்களை
    ஒட்டியதாக இருப்பதைப் பார்க்க மகிழ்வு ஏற்படுகிறது.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 7. sakthy சொல்கிறார்:

  பைபிளில் இயேசு சொல்வதாக ஒரு வசனம் வருகிறது, உங்களில் தவறு செய்யாதவர்கள் இருந்தால்,அவர்கள் முதலில் கல்லை விட்டெறியுங்கள்,என்று.

  இனிப்பு கொடுத்து கொண்டாடும்,
  //ஆடாமலே ஜெயிச்சுட்டோமடா…..!!! //
  மனிதர்கள் என்று சொல்லிக் கொள்வோர், தங்கள் மீது முதலில் சேற்றை வாரி வீசட்டும்.

 8. Ganpat சொல்கிறார்:

  நெத்தியடி! நன்றி..
  “66 கோடிக்கு நான்கு ஆண்டுகள் என்றால் 176000கோடிக்கு?” என்று நினைத்து அச்சப்படுபவன் pessimist
  “66 கோடிக்கு தீர்ப்பு சொல்ல 18 ஆண்டுகள் என்றால் 176000கோடிக்கு?” என்று நினைத்து தைரியப்படுபவன் optimist

 9. எழில் சொல்கிறார்:

  I think there something definitely not right about 100 Cr imposed fine. We shall know very soon.

 10. thumbi சொல்கிறார்:

  //….சேர்ந்து ஒரு புதிய பார்முலாவை வெற்றிகரமாக
  அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்…//

  1. இது அப்போதைய சூழ்நிலையில் அம்மா அளவுக்கு மேல் ஆடியது; நம்மை எவரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற தெனாவெட்டு. savuku2.blogspot.com சனிக்கிழமை பதிவில் தொட்டுக்காட்டிய அடாவடிகளைச் செய்தவர். கலைஞர் தோற்ற விதம் அவர் திரும்பி வரவே முடியாது, தான் தான் தமிழகத்தின் தன்னிகர் அற்ற தலைவி; தன்னை விட்டால் யாரும் இல்லை என்ற எண்ணம் ஏறி இருந்த காலம்; தமிழகத்திற்கு வேறு போக்கிடம் இல்லை என்று எண்ணிய போதை. சந்த்ரகலா IAS மீது ஆசிட் வீச்சு; சு.சுவாமி என்ற உருவத்தில் வந்த காலன். இந்த தீர்ப்பு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்க வேண்டியது. . அம்மையார் இதை சாம, பேத, தான, தண்ட மற்றும் புத்தகங்களில் இல்லா எல்லா வழிகளையும் கையாண்டு தாமதப்படுத்த முடிந்ததே தவிர தப்பிக்க முடியவில்லை. இந்தக் கூட்டணி (ப. சி., சு.சுவாமி, தமிழர்களின் தன்மானத் தாத்தா) இவர்கள் ஒன்றும் செய்யாவிடினும் இந்த தீர்ப்பு வந்திருக்கும். அவர்கள் கூட்டணி என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.
  2. சு.சுவாமியை // சத்தம் இல்லாமல் ஒன்றரை லட்சம்
  தமிழர்கள் கொல்லப்படக் காரணமாக இருந்தவரும் // என்று சொல்வது தவறு. ஈழத்துப் பிரச்னையை வேறு நோக்கில் காண்பவர்; பெரும்பான்மையானவர்கள் விஷயம் அரை குறையாகப் கொண்டு கூக்குரல் இடுவது போல் இடாதாவர். பா.ஜ.பா. ஆட்சியில் இலங்கை பிரச்னையில் குழப்பக் கூடும்; ஆனால் 2009 முள்ளிவாய்க்கால், தமிழர்கள் அநியாயச் சாவு என்பதில் அவர் பங்கு என்ன? சீமானைப் போன்றும் நெடுமாறனைப் போன்றும் எந்த விஷயம் பற்றி எழுதினாலும் ஈழம் பற்றி தொடுவது சரியில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

  • sakthy சொல்கிறார்:

   ஈழம் பற்றி மட்டுமல்ல அனைத்து விசயங்களையும் தொட்டே ஆக வேண்டும். எல்லாம் ஒன்றுடன் ஒன்று பிணைந்து இருக்கிறது. ஈழப்படுகொலையில், ராஜிவ் படுகொலையில் சாமியின் பங்கு இருப்பதால் தான் அதை ஐயா அவர்கள் தொட்டு எழுதி உள்ளார்கள்.
   தற்போது தொடர் கட்டுரையாக வருவதை தொடர்ந்து படித்தால் நன்கு புரியும்.

   ஜெயலலிதா வழ்க்கில் கூட ஈழம் கலந்து இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின், தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளை நடு நிலையுடன் கண்காணிக்க வேண்டும்.
   இவற்றை ராஜிவ் காந்தி -தொடர் கட்டுரையை படிப்பதால் பலவற்றை தெரிந்து கொள்ள முடியும்.
   கட்டுரை முடிந்ததும் உங்கள் கருத்து வேறாக அமையும்.

 11. todayandme சொல்கிறார்:

  குற்றம்சாட்டியவரும் (எப்போதும் செய்ததைவிடவும்), குற்றம்சாட்டப்பட்டவரும் (அப்போது செய்ததைவிடவும்) தமிழகத்துக்குச் செய்த தீமைகளைவிட நேற்று ஒருவர் செய்திருப்பது அதிகம் எனத் தோன்றுகிறது. ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் என்ற முதல்பாதி மட்டும் நிரூபிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. ஆனால் நீதிமன்றத்தில் இன்னும் முழுமையாக முடிவடையாததால் சில கருத்துக்களை வெளிப்படையாகக் கூறாமல் இருப்பதே சிறந்தது.
  ————-
  In a lighter vein (an imagination) :
  திமுக பெருந்தலை : ஜெ-வை ஒழிக்கறதுதான் முதல் பிரச்சினை. ஏன்னா நம்ம மகனே ஜெ (ஒழிகன்னு சொல்றதுக்குப் பதிலா) வாழ்க வாழ்க ன்னு அம்மையாரோட சாதனைகளை பட்டியல் போடறான் மு………..பய மகன். சே. அவசரத்துல என்னையே முட்டாள்னு சொல்றேனே.

  சாமிய ஒழிக்கிறதுதான் இரண்டாவது பிரச்சினை. ஏன்னா நம்ம துணைவியோட மகளையும் விடமாட்டேன்னு சொல்றானே இந்த ஆசாமி !

  திமுக சின்னத்தலை : இந்த முதல்வர் பதவி எதிர்பார்க்காதவங்களுக்கெல்லாம், வாரிசா இல்லாதவங்களுக்கெல்லாம், ஒன்னு இல்ல ரெண்டுவாட்டி கிடைக்குதே. அது அல்லவோ ஜனநாயக கட்சி. நான் வாரிசா இருந்தும் எனக்குக் கிடைக்கலையே. (அடேய் அப்பா????!!!!! கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)
  *****
  காங்கிரஸ் பெருந்தலைகள் : (ஜெ அரசியல்ல இல்லைன்னாதான் தமிழ்நாடு நமக்கு 2016 வது கிடைக்கும்) ஏன்னா நாம தமிழங்களுக்கு நல்லது பண்ணினதே இல்லையே.

  காங்கிரஸ் தமிழக தலை : ஜெ அரசியல்லேயே இல்லைன்னாதான் 2016 ல வேட்டிகட்டின தமிழ் பிரதமர் ஆகலன்னாலும் அட்லீஸ்ட் முதலமைச்சர் ஆவேன்.
  சாமி: நான் அந்நியன்டா. கருடபுராணம் படிச்சிருக்கியா ! (எப்ப உள்ள போவார்ன்னு யார்க்குத் தெரியும்?)
  *****
  பாஜக (தமிழகம்) : (என்ன நடக்குது ஒன்னுமே புரியலையே, கண்ணக்கட்டி காட்டுலவிட்டமாதிரியில்ல இருக்குது)

  பாஜக (தலைமை) : நாங்கல்லாம் எப்புடி ! விஜய் ரசிகர்களாவது ஓட்டுப்போட்டிருக்கலாம், ரஜினி ரசிகர்களாவது ஓட்டுப்போட்டிருக்கலாம், (அப்போதைக்கு) வருங்கால பிரதமர எப்புடியெல்லாம் அலையவச்சீங்க. போன எலக்சன்ல எங்கள வடிவேலுரேஞ்சுக்கு இறக்கிட்டீங்களேடா, ஓடி ஓடி ஓட்டுக்கேட்டு வந்தா ஓட்டுப்போடமாட்டிங்களாடா தமிழங்களா. எங்க தமிழக தானைத்தலைவர விட்டு லேடியா மோடியான்னு கேள்வி கேக்கவைப்போம், சாமிக்கு ஜிகிரி ராஜபக்சேவை தமிழனுக்கு எதிரியா இருந்தாலும் இன்வைட் பண்ணுவோம், கர்நாடகால ஆட்சிய பிடிக்கணும்னா அவிங்களுக்கு எதிரி, காவிரிய வற்புறுத்தி வாங்குன (அட்லீஸ்ட் கெசட்ல) கலைச்செல்விய அங்கயே ஜெயில்ல போடுவோம். இந்தப்பக்கம் கையக்கூப்பி கும்பிடுவோம், என் சகோதரின்னு சொல்லுவோம், இப்பப் பாத்தீங்களா எங்க பவர. கலைஞர், கேப்டர், மருத்துவர், சாமி, இலங்கை, கர்நாடகா, கேரளான்னு எல்லாரையும் ஒரேயடியா ட்யூன் பண்ணிட்டோம்ல. 2016ல ஜெ இல்லைன்னா நீங்க எங்களுக்குத்தான் ஓட்டுப்போட்டாகனும். ஏன்னா அப்போதைக்கு உங்களுக்கு செகண்ட் சாய்ஸ் திமுகவும் இருக்காது, 2ஜியில ஆப்புன்னு சாமி சொல்லிட்டாருல்ல.
  *****

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நண்பரே (todayandme )

   மற்றவர்கள் நிலைப்பாடு நமக்கு ஏற்கெனவே ஓரளவு
   தெரிந்தது தான்.
   பாஜக பற்றி தான் சந்தேகமாக இருந்தது.
   இப்போது பார்த்தால் – பாஜக இரட்டை வேடம் போடுவதாகவே தோன்றுகிறது….

   இந்த தீர்ப்பின் பின்னணியைப்பற்றி நிறைய விஷயங்கள் எழுத வேண்டியிருக்கிறது.
   ஆனால், சட்டம் என் கைகளை கட்டிப்போடுகிறது.

   விரைவில், எழுதுவதற்கான நேரம் வரும்.
   அப்போது எழுதுகிறேன் – நமக்கு அதில் விவாதிக்க நிறைய
   விஷயங்கள் இருக்கின்றன.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 12. Sanmath AK சொல்கிறார்:

  Provincial, National and International politics is involved…….Basis the sympathy which has got generated in these days, make me think that these people really deserve leaders like those leaders you have mentioned and also one(very biggg) you have not been mentioned above.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.