ஸ்ரீபெரும்புதூரில் இருந்ததை உறுதி செய்கிறாரா சு.சுவாமி …? (சாமிகளின் சாகசங்கள் – பகுதி -5 ன் ஒட்டுப்பகுதி …!))

நேற்றைய தினம், ஜெயின் கமிஷன் முன்பு – சுப்ரமணியன் சுவாமி
வாக்குமூலம் – (சாமிகளின் சாகசங்கள் – பகுதி-5 ) வெளியாகியது.

அதில், சம்பவம் நிகழ்ந்த இரவன்று சு.சுவாமியும், ச.சாமியும்
கார் மூலம் -சென்னையிலிருந்து – ஸ்ரீபெரும்புதூர் வழியாக – பெங்களூர்
சென்று மறுநாள் காலையில் பெங்களூரிலிருந்து டெல்லிக்கு விமானம்
மூலம் சென்றதாக
ஜெயின் கமிஷன் முன்பாக
திரு.சுப்ரமணியன் சுவாமி அவர்களின் ஜனதா கட்சியின் அப்போதைய
தமிழ்நாடு பிரிவின் தலைவராக இருந்த திரு.ஆர்.வேலுசாமி
அவர்கள் சாட்சியம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அது பற்றி ஜெயின் கமிஷனில் கேட்கப்பட்டபோது, சுவாமி சரியாக
பதிலளிக்கவில்லை என்றும் வேலுசாமி கூறி இருக்கிறார்.

தான் எதிர்பார்க்கும் ஒரு சம்பவம் சரிவர நிறைவேறுகிறதா இல்லையா
என்பதை நேரில் சென்று உறுதி செய்து கொள்ளும் பழக்கம்
சு.சுவாமிக்கு இருக்கிறது என்பதை அவரையும் அறியாமல் இன்று
அவர் ஒரு செய்தி இதழுக்கு கொடுத்துள்ள பேட்டியின் மூலம்
வெளிப்படுத்தி விட்டார்.

அந்த பேட்டியிலிருந்து
இந்த இடுகைக்கு சம்பந்தமுடைய பகுதி மட்டும் கீழே –

———————-

செய்தி இதழ் – ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின்
கதாநாயகன் சுப்ரமணியன் சுவாமி. ஜெயலலிதாவுக்கு தண்டனை
அறிவிக்கப்பட்ட 27ந்தேதி சுவாமியும் பெங்களூரில் தான் இருந்தார்.
அவருடன் தொடர்பு கொண்டு பேசினோம்.

கேள்வி – தீர்ப்பு தினத்தன்று எதற்காக பெங்களூருக்கு வந்தீர்கள் ..?

பதில் – எதாவது அவசர சூழ்நிலை ஏற்பட்டு, புகார்தாரர் என்ற முறையில்
திடீரென்று என்னைச் சிறப்பு கோர்ட் ஜட்ஜ் குன்ஹா அழைத்தால் ….?

இதற்காகவே, பெங்களூரு ஐஐஎம் -ல் “இந்தியன் ஐடென்டிடி” என்ற
தலைப்பில் பேச ஏற்பாடு செய்தேன். ..!!!

——————-

பின் குறிப்பு –

இதில் இரண்டு விஷயங்களை மிகவும்
உன்னிப்பாக கவனிக்க வேண்டியிருக்கிறது.

எந்த கோர்ட்டிலும், உரிய நோட்டீஸ் அளிக்காமல்,
திடீரென்று யாரையும் எதிர்பார்க்க மாட்டார்கள். அந்நிலையில் –
திடீரென்று சிறப்பு கோர்ட்
ஜட்ஜ் குன்ஹா அழைத்தால்…?
என்று சு.சு. கேட்பது ஒரு விபரீதம்.
(அவர் இவரை எதற்காக
திடீரென்று தேட வேண்டும் ….? எதாவது சந்தேகம் தெளியவா…? )

தீர்ப்பு முதலில் 20ந்தேதி வருவதாக இருந்தது.
17ந்தேதி தான் ஜட்ஜ் தீர்ப்பை 27ந்தேதிக்கு
ஒத்திப் போடுவதாக அறிவித்தார்.

சு.சுவாமி பெங்களூரு ஐஐஎம் மீட்டிங்கை என்று fix செய்தார்
என்பது தெரியவில்லை.
அது புதிய தேதி அறிவிக்கப்பட்ட
தேதிக்குப் பிறகு என்றால் பிரச்சினை இல்லை.
அது ஒரு வேளை – அது 17ந்தேதிக்கு முன்னரே என்றால் –
இதன் அர்த்தம் வெகு விபரீதமானது…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ஸ்ரீபெரும்புதூரில் இருந்ததை உறுதி செய்கிறாரா சு.சுவாமி …? (சாமிகளின் சாகசங்கள் – பகுதி -5 ன் ஒட்டுப்பகுதி …!))

 1. today.and.me சொல்கிறார்:

  அன்பின் கா.மை.,

  எப்போது ஐஐஎம் மீட்டிங்-ஐ fix பண்ணினார் என்று உறுதியாகத் தெரிந்துகொள்ளுமுன் இப்படி பொசுக்கென்று குட்டையைக் கிளறிவிட்டீர்களே?

  எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை என்கிற கணக்காய் சு.சு. ஏற்கெனவே பிரதமர் பெயரை வேறு பேட்டியில் இழுத்துத் தொலைத்திருக்கிறார். இதைப்படித்துவிட்டு, ஐஐஎம்-மிலும் மற்ற இடங்களிலும் அவசரத்தில் தெரியாமல் விட்டுவிட்ட சாட்சிகளை மாற்றி விடப்போகிறார்கள். பவானிசிங் ஐயா வேறு சேம்சைடு கோல் போடுகிறாப்போலத் தெரிகிறது.

  நீங்களும் அவசரத்தில் ஜெத்மலானிக்கும் அமித் தேசாய்க்கும் கஷ்டத்தைக் கொடுப்பதோடு சுசுவுக்கு பாயிண்ட்டுகளை எடுத்துக்கொடுத்துவிடாதீர்கள். தயவுசெய்து இந்தப் பதிவையும், (எனது பின்னூட்டத்தோடு சேர்த்து) நீக்கிவிடுங்களேன். நன்றி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இயலாமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன் நண்பரே (todayandme )…!

   ஆனால், ராம் ஜெத்மலானி அவர்களின் அலுவலகத்திற்கு
   சென்று சேருமாறு, ஏற்கெனவே ஒரு சிறு தகவல் குறிப்பை
   காலையிலேயே அனுப்பி விட்டேன் …..தேவலையா ….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. R.Vasudevan சொல்கிறார்:

  காவிரிமைந்தன் ,

  தமிழகத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர்
  கோவையில் பேசும்போது,
  ” ’’தமிழகத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையை
  கருத்தில் கொண்டு ஆட்சியை அகற்றும் திட்டம்
  எதுவும் இல்லை : ஆனால் பா.ஜனதா கட்சி
  தமிழகத்தை ஆளும் காலம் நெருங்கி விட்டது ”
  என்று கூறி இருக்கிறார். இது குறித்து
  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் வாசுதேவன்,

   நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் ஆனாலும் ஆனார் –
   தமிழகத்தில் -யார் யாரோ, என்னவெல்லாமோ கனவு காண ஆரம்பித்து
   விட்டார்கள்.
   நமக்கு சகிப்புத்தன்மை அதிகரிக்க பிரார்த்திப்பதைத்தவிர
   வேறென்ன செய்ய முடியும் …?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. விஜயன் சொல்கிறார்:

  1. //திரு.சுப்ரமணியன் சுவாமி சம்பவம் நடந்த மே 21-ந்தேதியன்று
  சென்னை ‘ட்ரைடண்ட்’ ஹோட்டலில் தங்கி இருந்ததாகவும், //

  //சம்பவம் நிகழ்ந்த இரவன்று இருவரும், கார் மூலம் -சென்னையிலிருந்து -ஸ்ரீபெரும்புதூர் வழியாக – பெங்களூர் சென்று மறுநாள் காலையில்
  பெங்களூரிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றதாகவும் //

  2. //1991- மே 21ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை நடக்கிறது. அன்று இரவு
  பத்து மணிக்கு நான் டெல்லியில் இருந்த சுப்ரமணியன் சுவாமியை
  தொடர்பு கொண்டேன். …….பேசுவதற்காக இரவு 10.25 மணிக்கு தொடர்பு கொண்டேன்.
  எடுத்த எடுப்பிலேயே ‘‘என்ன ராஜீவ்காந்தி செத்துட்டாரு. அதைத்தானே
  சொல்ல வரே… தெரியுமே.. என்றார்.//

  வேலுசாமியோட இரண்டு தகவல்களும் முரண்படுகின்றனவே..!!!
  எப்படி சு சு ஒரே நேரத்துல சென்னை-லயும் டெல்லி-லயும் இருக்கமுடியும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் விஜயன்,

   வேலுசாமி சொல்ல வருவது முதல் நாள், அதாவது 20ந்தேதி
   தான் சு.சுவாமியுடன் இருந்ததாக. பல இடங்கள் தாண்டி
   இந்த தகவல் வருவதால் சிறிய குழப்பங்கள்
   ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், விஷயம் புரிகிறது.
   நீங்கள் தாராளமாக தாண்டிச் செல்லலாம்…..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.