ஜெயலலிதாவுக்கு நிகழ்வது – அப்பட்டமான பழிவாங்கல்….

இந்த விமரிசனம் வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும்
நன்கு தெரியும். நான் எந்த கட்சியின் ஆதரவாளனுமல்ல …
அதே நிலையில் இருந்து கொண்டு தான் இந்த இடுகையை
எழுதுகிறேன் என்பதை இதை படித்து முடிக்கும்போது மீண்டும்
உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

செல்வி ஜெயலலிதா அவர்கள் 18 ஆண்டுகளுக்கு முன்
குற்றப்பத்திரிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றங்களில்
ஈடுபட்டாரா இல்லையா என்பது பற்றி அல்ல இந்த இடுகை.

அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் சந்தேகத்திற்கிடமின்றி
நிரூபிக்கப்பட்டு விட்டனவா இல்லையா என்பது பற்றியும் அல்ல

இந்த இடுகை. இந்த விஷயங்களை எல்லாம் தாண்டி –

அவர் மீது தண்டனை விதிக்கப்பட்ட விதமும்,
அதன் பிறகு அவருக்கு நடக்கும் நிகழ்வுகளும் –
பற்றியே இங்கு விவாதம்.

சுப்ரமணிய குன்ஹா என்கிற ஒருமித்த சக்தி ஒன்றைப்பற்றி,
நேற்றைய செய்தி ஒன்றின் மூலம் தெரிய வருகிறது.

ஏதோ ஒரு கோர்ட்டில் பதிவாளராக ( கவனிக்கவும் –
நீதிபதியாக அல்ல பதிவாளராக ) பணி செய்துகொண்டிருந்தவர்
10 மாதங்களுக்கு முன்னர் இந்த வழக்கை ‘எப்படியாவது’ விரைவில்
முடிக்க வேண்டும் என்கிற உத்திரவுடன் (?) அனுப்பப்படுகிறார்.
அதன் பிறகு வழக்கு புதிய வேகத்துடன்,
வித்தியாசமான அணுகுமுறையுடன் முன்னேறுகிறது – முடிகிறது….!!!

பொதுவாக, கிரிமினல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்படுவது
குறித்து – சுப்ரீம் கோர்ட் சில நடைமுறைகளை அறிவித்திருக்கிறது.

வழக்கு விசாரணகள் முடிந்த பிறகு, ஒரு நாள் குறித்து,
குற்றம் சாட்டப்பட்டவரை நேரடியாக கோர்ட்டுக்கு வரவழைத்து –
அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்கள் எவ்வித சந்தேகத்திற்கும்
இடமின்றி நிரூபிக்கப்பட்டு விட்டன என்றும், அந்த கோர்ட்
அவரை “குற்றவாளி” என்று தீர்மானிப்பதாகவும் அறிவித்து விட்டு,

தீர்ப்பு கூற மற்றொரு நாளைக் குறித்து, தனக்கு விதிக்கப்படும்
தண்டனை பற்றி குற்றவாளி ஏதேனும் கூற விரும்பினால், கூறலாம் –
கோர்ட் அதை அனுமதிக்கிறது என்று கூற வேண்டும்.
பின்னர் குற்றவாளி தண்டனை பற்றிய தனது வேண்டுகோளை
முன்வைக்கலாம். அதன் பின்னர் அடுத்த நாளில், அல்லது
குறிப்பிடப்படும்` வேறோரு நாளில் தண்டனையை அறிவிக்க வேண்டும்.
இது தான் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ள நடைமுறை.

இந்த வழக்கில் இந்த நடைமுறை சுத்தமாக மீறப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு கோர்ட்டுக்கு வரவழைக்கப்பட்டவர் மாலை
5.30 மணி வரை அங்கேயே தங்க வைக்கப்பட்டு, அதன் பின்னர்
அன்றே – தண்டனையை நிறைவேற்றும் சடங்கு முடிகிறது.

அதாவது சனிக்கிழமை முகூர்த்தம் குறித்து,
(மறுநாள் ஞாயிறு – அப்பீலுக்குப் போக முடியாது – அதன் பிறகும்
ஒருவாரம் தொடர்ச்சியாக தசரா விடுமுறை) நேரடியாக
சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

ஒரு மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் –
முதலமைச்சராக கோர்ட்டுக்கு வருபவர்,
தண்டனை விதிக்கப்பட்டு நேரடியாக
சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார் என்றால் –
தனது அரசியல் சட்ட பொறுப்புக்களை பின் ஒப்படைக்க
கால அவகாசம் கொடுக்க வேண்டாமா ? நாள் கணக்கில்
இல்லாவிடிலும் குறைந்த பட்சம் ஒரு 2 மணி நேரமாவது
தன் சகாக்களிடம் மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய
அனுமதியளிக்க வேண்டாமா …?

தண்டனையை விதித்த பிறகு, நீங்கள் மாற்று ஏற்பாடு செய்து
கொள்ளவும், உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெறவும் வசதியாக
உங்களுக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கப்படுகிறது –
என்று சொல்லி இருந்தால் –
கோர்ட்டின் பாரபட்சமின்மையை
புரிந்து கொள்ள முடியும் …? இந்த அணுகுமுறை இல்லாமல்
போனது ஏன் …? சட்டத்தில் இதற்கு நிச்சயம் இடம் இருக்கிறது –
ஆனால் ஆணை இடுபவர் மனதில் இல்லாமல் போனது ஏன் ….?

சரி – சிறைக்குச் சென்ற பிறகும் ஏன் இத்தனை கெடுபிடிகள்…?
முதலமைச்சர் பொறுப்பில் இருந்தவரை நேரடியாக காராக்கிருகத்துக்கு
கொண்டு வந்து விட்டார்கள் – அவர் பார்த்துக்கொண்டு வந்த
பல பொறுப்புகள் பாதியில் இருக்கும். அதனை முழுமையாகச்
செய்ய ஆலோசனை பெற ஒரு மாநிலத்தின் தலைமைச்செயலாளர்
வந்தால், அவரை பார்க்க அனுமதிக்க மறுத்தது ஏன் …?
ஒரு நாள் முழுவதும், கிட்டத்தட்ட 7 மணி நேரம், ஒரு மாநிலத்தின்
தலைமைச்செயலரையும், ஆலோசகரையும் – சிறை வாசலில்
நிற்கவைத்து திருப்பி அனுப்பி – அவமதித்தது ஏன் …?

சரி – மறுநாள் ஜாமீனுக்கு பெட்டிஷன் கொடுத்தால், அதற்கடுத்த நாள்
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சொல்லி விட்டு,
மறுநாள் விசாரணைக்கு வந்தால் – மீண்டும் அடுத்த வாரம் தான்
விசாரணை என்று சொன்னது என்ன காரணத்தால்….?

அரசாங்க வக்கீலுக்கு உரிய நேரத்தில் அனுமதி உத்தரவு கொடுக்காதது
ஏன்…? இது கவனக்குறைவா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா….?
தனியாக ஒருவக்கீல் நியமிக்கப்படாத நேரங்களில்,

கோர்ட்டில் வழக்கமாகச் செயல்படும்
state govt.standing counsel தானாகவே இந்த வழக்கிலும் சேர்த்துக்கொள்ளப்
படுவது தான் மரபு. இல்லையென்றால், அட்வகேட் ஜெனரலுக்கு
தகவல் போகும். உரிய நேரத்தில் யாராவது ஒரு அரசு வக்கீல்
அனுப்பப்படுவார்…அது இங்கே நடக்காதது ஏன் …?

மீண்டும பதிவாளரைப் பார்த்து விசேஷ அனுமதி கோரி,
அரசு வக்கீலுக்கும் ஆணை வந்து, கோர்ட் கூடினால் –
வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலே –
அடுத்த வாரம் ரெகுலர் கோர்ட் விசாரிக்கும் என்று சொல்லிவிட்டு
போய்க்கொண்டே இருக்கிறார்……

முக்கியமான வழக்கு – ரெகுலர் கோர்ட் தான் விசாரிக்க வேண்டும்
என்பது கோர்ட்டுக்கு வரும் முன்பு தெரியாதா ?
அல்லது பதிவாளருக்குத்தான் தெரியாதா ?

முன்னதாகவே தலைமை நீதிபதியிடம் கலந்து ஆலோசனை
செய்திருக்க மாட்டார்களா ..?
ஏன் எல்லாரையும் வரவழைத்து அவமானப்படுத்த வேண்டும் …?
ஏன் டென்ஷனை, பரபரப்பை அதிகரிக்க வேண்டும்….?

எல்லாருக்கும் இன்று வெளியே வந்து விடுவார் என்கிற எதிர்பார்ப்பை
உண்டுபண்ணி விட்டு, பின்னர் மீண்டும் தள்ளிப் போடுவதன்
பின்னணி என்ன ….? வேறு எங்கிருந்தாவது உத்திரவு எதாவது
எதிர்பார்க்கப்படுகிறதா …?

இப்படி மாற்றி, மாற்றி இழுத்தடித்தால் – ஏற்கெனவே
கொதித்துப்போயிருக்கும் கட்சித்தொண்டர்களிடம் இது டென்ஷனை
அதிகரிக்காதா ? அல்லது வன்முறையைத் தூண்ட வேண்டும்
என்பது தான் உத்தேசமா…?

இரண்டு மாநிலங்களுக்கிடையே ஏற்கெனவே ஏகப்பட்ட
பிரச்சினைகள். காவிரி நீர் சம்பந்தமாக தகராறுகள்….
கோர்ட் வழக்குகள். கர்நாடகா அரசுக்கு தமிழ்நாட்டின் மீதும்,
சிறையில் இருக்கும் செல்வி ஜெயலலிதா மீதும் ஏகப்பட்ட
காழ்ப்புணர்ச்சி….
இந்த நிலையில் – உணர்வுகளுடன் விளையாடும் இத்தகைய
செயல்கள் இயல்பானவை தானா ?

கர்னாடகா அரசில் அதிகாரத்தில் இருக்கும்
காங்கிரஸ் கட்சிக்கு வெறுப்பு….
காங்கிரஸ் தலைமைக்கு சொல்லோணா வெறுப்பு …
சு.சு.வின் மறைமுக சித்து வேலைகள் தொடர்கின்றன….
இத்தனையையும் வாய் திறவாமல் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறது பாஜக தலைமை …

காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை,
கச்சத்தீவு பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை
என்று மாறி மாறி தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் –
அம்மா போனால் – திண்ணை நமக்குத்தான் என்று
ஆவலுடன் காத்துக் கிடக்கிறது தமிழக பாஜக.

இவர்கள் அத்தனை பேரும், தனித்தனியாகவும்,
கூட்டாகச் சேர்ந்தும் செய்வது –
‘அப்பட்டமான பழிவாங்கல்’ அல்லாமல் வேறென்ன…..???

 

———————————————–

பின் குறிப்பு ( இரவு 11 மணிக்கு புதிதாக சேர்க்கப்பட்டது )-

அவசரமாக வெளியே செல்ல நேர்ந்ததால், முன்னதாக
ஒரு முக்கியமான விஷயத்தை எழுதத் தவறி விட்டேன்.
வழியிலேயே நினைத்துக் கொண்டேன் – வந்தவுடன்
எழுத வேண்டுமென்று –

———-

கர்னாடகா அரசு பழி தீர்த்துக்கொள்கிறது என்று நான்
சொல்வதற்கு மிக வலுவான காரணம் ஒன்று இருக்கிறது.

நடுநிலையோடு நடந்து கொள்ள கர்னாடகா அரசு
நினைத்திருந்தால் – அது ஜாமீன் மனுவை எதிர்த்திருக்கக்
கூடாது.

ஜாமீன் பெறுவது என்பது தண்டனை பெற்றவர்களுக்கு
சட்டம் அளிக்கும் ஒரு உரிமை. அதை உரிய முறையில்
கேட்டுப்பெற எல்லா குற்றவாளிகளுக்கும் உரிமை உண்டு.

சாதாரணமாக எல்லா வழக்குகளிலும் அரசு தரப்பு
ஜாமீன் மனுவை எதிர்ப்பதில்லை –

குற்றவாளிகள் சாட்சியத்தை கலைத்து விடக்கூடிய வாய்ப்பு
இருக்கும்போதும், ஜாமீனில் விட்டால் தப்பியோடி விடுவார்
என்று கருதப்படும்போதும், மிகக்கொடிய (கொலை, சதி போன்ற)
குற்றங்களில் சம்பந்தப்பட்டிருக்கும்போதும் தான் ஜாமீன்
கோரிக்கையை அரசு தரப்பு எதிர்க்கும்.

– இந்த காரணங்கள் எதுவுமே, ஜெயலலிதா அவர்களின் வழக்கில்
பொருந்தாது. 18 ஆண்டுகளில் கலைக்காத சாட்சியங்களையா
அவர் புதிதாகக் கலைக்ககூடும்…? மேலும், ஆவணங்கள் அனைத்தும்
ஏற்கெனவே நீதிமன்றத்தின் கஸ்டடியில் தான் இருக்கின்றன.
மேலும், உயர்நீதி மன்ற அப்பீலில் ஆவணங்களும், வக்கீல்களின்
வாதங்களும் மட்டுமே இடம் பெறும்.

– எனவே கர்னாடகா அரசு மிகுந்த காழ்ப்புணர்ச்சியோடு,
பழி தீர்த்துக் கொள்ளூம் விதத்தில் தான் ஜாமீன்
மனுவை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது என்பது
வெளிப்படை. வக்கீல் பவானி சிங் செயல்பட்டது
கர்னாடகா அரசின் உத்திரவின்படி தான்.

ஜெயலலிதா அவர்களுக்கும், கர்னாடகா அரசுக்கும் சொந்தப்பகை
எதுவுமில்லை
. காவிரிப் பிரச்சினை தான் அவர்களது இடையே
உள்ள பகைக்கு காரணம். காவிரி நீர் வழக்கு தமிழ் நாட்டின் பிரச்சினை.
எனவே, இந்த கோணத்தில் பார்த்தால், தமிழ் நாட்டு மக்களை
தண்டிக்க வாய்ப்பில்லாத சமயத்தில் ஜெயலலிதா அவர்கள்
மாட்டினார் – அவர்கள் பழி தீர்த்துக்கொள்கிறார்கள்….

வழக்கின் நியாயம், தண்டனையின் நியாயம் – எப்படி இருந்தாலும்,
கர்னாடகா செய்தது ஒரு பழிவாங்கும் செயல்தான் என்பதில்
எந்தவித சந்தேகமும் இல்லை. (காங்கிரஸ் தலைமையும்,
காங்கிரஸ் ஆட்சியும் என்பதும் ஒரு காரணம்….)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

52 Responses to ஜெயலலிதாவுக்கு நிகழ்வது – அப்பட்டமான பழிவாங்கல்….

 1. ரிஷி சொல்கிறார்:

  காவிரிமைந்தன்,
  சமீப காலங்களில் செய்திகள் வெளிவருவதற்குப் பதிலாக கருத்துகளே அதிகம் வந்துகொண்டிருப்பதாக புலப்படுகிறது. சார்பற்ற நியூஸ் ஏஜென்சிகளே இன்று இல்லை எனுமளவிற்கு ஆகிவிட்டது. ஆகவே உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மைத் தகவல்கள் தெரியவில்லை. மற்றொரு தளத்தில் படித்தேன், ஜெவுக்கு சென்னை திரும்ப அனுமதியளிக்கப்பட்டதாகவும் அதை அவர் மறுத்து விட்டதாகவும் படித்தேன். எப்போது எந்தச் செய்தி உண்மை என்பது குறித்து பெரிதும் ஐயம் ஏற்படுகிறது.

  ஜெ.விற்கு நிகழ்ந்திருப்பது அப்பட்டமான பழிவாங்கல் என்றே இதை எடுத்துக் கொள்வோம். ஆனால் பதினெட்டு ஆண்டுகளாக வாய்தா மேல் வாய்தாவாக வாங்கிக்கொண்டிருந்து வாய்தா ராணி என்ற பெயர் பெறுமளவிற்கு நடந்துகொண்டது எந்த வகையில் சட்டத்திற்கு ஒத்துழைப்பாகும் என்பது புரியவில்லை.

  இதை பொதுஜனமாகிய நாம் பழிவாங்கல் நடவடிக்கையாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. இது அரக்கர்களிடையே நடக்கும், யார் பெரியவர் என்ற கருத்தில் நடக்கும் ஈகோ போர் என்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் நாம் கருத்தாடுவதற்கு ஒன்றுமில்லை என்பது என் தாழ்மையான எண்ணம்.

  இருதரப்புமே சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் கொண்டு ஒருவரையொருவர் பந்தாடிக்கொண்டு சதுரங்க வேட்டை நடத்துகின்றனர். மனம் கசியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது ஒன்றே இப்போ நாம் செய்ய வேண்டியது!

  • today.and.me சொல்கிறார்:

   வெறும் வதந்தியாகச் சொல்லாமல் எந்தத் தளத்தில் ஜெ வை தமிழ்நாட்டுக்குச் செல்ல அனுமதி அளித்த்து அதை அவர்கள் மறுத்ததாகக் கூறினார்கள் என்று தகுந்த சான்று (link)இணைப்புடன் சென்னார்கள் என்பதை குறிப்பிட்டிருந்தால் விமரிசனத்தின் உண்மைத்தன்மை கூடியிருக்கும். உங்கள் வாதத்திலும் நம்பிக்கை வந்திருக்கும். மன்னிக்கவும் ரிஷி . அரக்கர்களையா (whether it is admk or dmk or congress or bjp) ஓட்டுப்போட்டு நாம் நம்மை ஆளுவதற்கு தேர்ந்தெடுக்கிறோம்?

 2. seshan சொல்கிறார்:

  so what.

  This is Kali Kalam. how much trouble given to nakeeran gopal through court in her first ruling period. her govt (police and court ) played lot of dirty game due to power.

  so you cannot escape from all the errors (even though it is 18 yrs old, it is like Tree , now you have to cultivate in big way)

  Make it very simple sir, you did a crime earlier, now it is opp. turn you have face it only).

  Seshan / dubai

  • today.and.me சொல்கிறார்:

   சேஷன் சார், கலியுகக் கல்கி சுசுவாமியின் திரைமறைவு லீலைகளை ‘சாமிகளின் சாகசங்கள்’ தொடரில் படித்துக்கொண்டுவருவீர்கள் என்று நம்புகிறேன்.

   கா.மை.யும் இதைத்தானே சொல்லியிருக்கிறார்,
   // செல்வி ஜெயலலிதா அவர்கள் 18 ஆண்டுகளுக்கு முன்
   குற்றப்பத்திரிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றங்களில் ஈடுபட்டாரா இல்லையா என்பது பற்றி அல்ல இந்த இடுகை.

   அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் சந்தேகத்திற்கிடமின்றி
   நிரூபிக்கப்பட்டு விட்டனவா இல்லையா என்பது பற்றியும் அல்ல இந்த இடுகை. இந்த விஷயங்களை எல்லாம் தாண்டி –

   அவர் மீது தண்டனை விதிக்கப்பட்ட விதமும்,
   அதன் பிறகு அவருக்கு நடக்கும் நிகழ்வுகளும் –
   பற்றியே இங்கு விவாதம்.// இந்தவகையில் பார்த்தால் This is not simple sir, Just another political vengence on Tamilnadu, not JJ.

   குற்றங்களைத்தாண்டி, குற்றவாளிகளைத்தாண்டி, குற்றம்சாட்டப்பட்டவர், சாட்டியவரைத் தாண்டி, நடுநிலையோடு செயல்படவேண்டிய அரசு வக்கீல், நீதிமன்றபதிவாளர், நீதிபதி, நீதிமன்றம், நீதித்துறை போன்ற விசயங்களும் இவ்வழக்கில் உண்டு என்பதை மக்கள் உணரவேண்டும் என்ற கா.மை.யின் சட்ட அறிவு குறித்த விழிப்புணர்வை நான் பாராட்டுகிறேன்.

 3. Srini சொல்கிறார்:

  Dear KM Sir,
  Its a mixed feeling for me.
  On one side, I feel sad that she has gone inside just for the simple reason that she is the only one force who can block the return of karunanidhi. At any cost, he should not return back to power nor his son or party. JJ is far better than karunanidhi. But, she also needs a lesson. So between the devil and deep sea, deep sea is better.
  For sure, if she comes out in bail, she will take revenge on Swamy and Karunanidhi. May be she will try another midnight arrest atleast for one day. Karuna’s silence on this issue very clearly tells that he is also worried…. she already has put 5 new cases against swamy and some new cases against the old man and his son.
  All these political people are one way or the other – the so called “rakshashas”… let them fight and kill each other. If she continues to stay inside without bail, as an individual, I am ok, but I will be more happy if the same law is applied to 2G and National hearald cases also.
  Like what rishi has said, we have to just watch the political drama without getting emotionally attached.

  • today.and.me சொல்கிறார்:

   அரசியல்வாதிகளும் சட்டவியாதிகளும் வேண்டுமானால் நீதித்துறைக் கோட்பாடுகளை மீறலாம், ஆனால் இங்கே எவ்வாறு யாரால் நீதி மீறப்பட்டுள்ளது என்பதை கா. மை. சுட்டிக்காட்டியிருக்கிறார். அதற்கு யார்யார் துணைபோயிருக்கக்கூடும் என்றும் கூறுகிறார். ஜெஜெவோ, முகவோ, பசியோ, இலகவோ யாருக்கு கர்நாடகா இப்படிப்பட்ட நியாயத்தைச் செய்திருந்தாலும் இந்தப் பதிவை எழுதியிருப்பார் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.

   இதில் உணர்வுபூர்வமாக சிந்திக்கவேண்டியதில்லைதான்.

   ஆனால் சிந்திக்கவாவது வேண்டும். எத்தனைபேரால் நடுநிலையோடு இதை செய்யக்கூடும்.

 4. kinarruthavalai சொல்கிறார்:

  Dear Sir,
  It is common in Tamil Nadu to arrest common man by Police Dept which is under the control of Chief Minister on a Friday evening denying him the right to appeal for at least two days. When this comes to her why should we bother? Though I am not supporting, the fact is, Mr.Karunanithi was arrested on a Friday night on 29th June 2000 or 2001 (I remember). They enjoyed the occasion. But when it happened to her all are making the noises. What you have written here about the Judge are all just hear say or assumption, I believe. Is there any proof for he was ordered by someone to do so? Sorry, I always respect you and your writing. But I am unable to accept your view in this matter.

 5. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

 6. Ganpat சொல்கிறார்:

  கா.மை பதிவையும் அதற்கு மற்ற நண்பர்கள் கருத்துக்களை எல்லாம் படித்தேன்.மிகவும் சரியாகத்தான் இருக்கின்றன.ஆனால் கா.மை பதிவுடன் நான் ஒத்துப்போகிறேன்.காரணங்கள்.
  1.மக்களின் ஒட்டுக்களைப்பெற்று 37MP க்களும் 180MLA க்களும் வைத்திருக்கும் ஒரு மாநிலத்தின் முதல்வரை திடீரென சிறையில் அடைப்பது தவறு.தண்டனை அளித்திருப்பது ஒரு கீழ் கோர்ட்.இன்னும் உயர்/உச்ச நீதி மன்ற அப்பீல்களுக்கு வாய்ப்புள்ளன
  2.மக்கள் உணர்ச்சி வசப்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது?
  3.ஒரு சமையல்காரரைக்கூட பாதி சமையல் போதோ,அல்லது கார் ஒட்டியைக்கூட
  பாதி வழியிலோ வேலையை விட்டு நீக்க மாட்டோம்.ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வரை…
  4.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை ஒரு நீதிபதி விசாரிப்பது முறையற்றது.குறைந்தது மூவர் அடங்கிய பெஞ்ச் விசாரித்திருக்க வேண்டும்.
  5.ஜெயாவை வைத்துதான் நாம் அவரை விட பெரிய தீய சக்தியை (கருணா) வெளியேற்ற வேண்டும். அதற்குப்பிறகுதான்ஜெயாவை வெளிஎற்றுவதைப்பற்றி யோசிக்க வேண்டும்.
  6,எப்படி நோக்கினாலும் இந்த தீர்ப்பின் விளைவுகள் தமிழர்களுக்கு பெரும் பின்னடைவை உண்டாக்கப்போவது திண்ணம்.

  • senkathiron சொல்கிறார்:

   manamulla thamizharkalukku intha theerppinaal oru ponnadaivum illai…

   • today.and.me சொல்கிறார்:

    காவிரித் தண்ணீரை விளைச்சலுக்கோ அல்லது அதனால் விளையும் நெல்லை உணவுக்கும் எதிர்பார்க்கவேண்டிய நிலையில் நில்லாத மானமுள்ள தமிழர் நீர் என்று தெரிகிறது.

    இப்பொழுது கர்நாடகா அரிசியோ குண்டூர் அரிசியோதானே தமிழகத்துக்கு வருகிறது.

 7. ரிஷி சொல்கிறார்:

  கண்பத்,

  //ஒரு மாநிலத்தின் முதல்வரை திடீரென சிறையில் அடைப்பது தவறு.//

  ஜெ.விற்கு தன் வீடு திரும்ப அனுமதி அளிக்கப்படவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்? இது குறித்து கலவையான செய்திகளே வெளிவருகின்றன. உண்மைத்தகவல் தெரியாமல் இப்படி தவறென வாதிட முடியாது.

  //மக்கள் உணர்ச்சி வசப்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது?//

  நான் அறிந்தவரை ஜெயாடிவி மட்டும்தான் “மக்கள்” கொந்தளித்தனர், ஆவேசமடைந்தனர், கோபத்தில் ஆழ்ந்தனர் என ஃப்ளாஷ் நியூஸ் போட்டுக்கொண்டிருந்தனர். மற்ற எல்லா சேனல்களுமே அதிமுக தொண்டர்கள் என்றே குறிப்பிட்டுக்கொண்டிருந்தனர். ஜெயாடிவிக்கு அடுத்தபடியாக தற்போது நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள் “மக்களால்” சட்டம் ஒழுங்கு சீர்குலையுமென்று!

  //ஒரு சமையல்காரரைக்கூட பாதி சமையல் போதோ//

  சமையல்காரர் சாம்பாரில் விஷத்தை ஊற்றி சமைத்துக்கொண்டிருக்கிறார் என ஆதாரங்களுடன் செய்தி வந்தால்… அப்போதும் நாம் சமையலைத் தொடர்வோமா? 🙂

  //குறைந்தது மூவர் அடங்கிய பெஞ்ச் விசாரித்திருக்க வேண்டும்.//

  மூவர் விசாரித்து இத்தீர்ப்பு வந்திருந்தால் கண்பத் ஐவரை வைத்து விசாரித்திருக்க வேண்டும் எனச் சொல்வார் என்றே நம்புகிறேன் 🙂

  //ஜெயாவை வைத்துதான் நாம் அவரை விட பெரிய தீய சக்தியை (கருணா) வெளியேற்ற வேண்டும்//

  முதல் மறுமொழியிலேயே சொன்னதுபோல அரக்கர்கள் ஒருவரையொருவர் தாக்கி அழிவர். கிருஷ்ண பரமாத்மா சிரித்தபடி மகாபாரதப் போரினை வேடிக்கை பார்த்ததுபோல பார்க்கவேண்டியதுதான் நம் கடமை! அர்ஜூனனுக்கே தடுமாற்றம் உண்டானதாகையால் கண்பத்திற்கும், கா.மைக்கும் ஏற்பட்டிருப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை!

  //தமிழர்களுக்கு பெரும் பின்னடைவை உண்டாக்கப்போவது திண்ணம்.//

  சராசரி மக்களுக்கு நன்கு தெரியும் அவர்கள் வீட்டில் உலை கொதிக்க வேண்டுமென்றால் அவர்கள் உழைத்தாக வேண்டும்; சேமித்தாக வேண்டும் என்று. கருணா, ஜெயாவுக்கெல்லாம் ஓட்டுப்போட மட்டும்தான் செல்வார்கள். மற்ற அனைத்து தினங்களும் உழைக்கத்தான் செல்கிறார்கள். 18 மணி நேர மின்வெட்டினை நாம் தாங்கவில்லையா? எங்கள் சிவகாசிப் பகுதியில் பிரின்டிங் மெஷினை இரவு பகலென எப்பொதெல்லாம் சிறிதளவு மின்சாரம் கிடைக்கிறதோ அப்போவெல்லாம் ஓட்டி ஆர்டரை முடித்துக்கொடுத்து சம்பாதித்ததை நான் கண்களால் கண்டேன். ஆகவே இச்செய்தியில் அடிப்படை உண்மை இல்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ரிஷி,

   இப்போது தான் வெளியில் சென்று வந்தேன்.
   முன்னதாக நான் சொல்லத் நினைத்து – தவறிய ஒரு விஷயத்தை
   சேர்த்திருக்கிறேன். படித்துப் பார்த்து விட்டு – தாக்குதலைத்
   தொடரவும்.

   நான் – சு.சுவாமி, காங்கிரஸ் தலைமை, சிவகங்கை,
   கலைஞர் ஆகியோரைத் தான் “அம்மா”வை
   பழிவாங்கத் துடிப்பதாக நினைத்தேன்.
   ரிஷியை மறந்து விட்டேன் போலிருக்கிறது….!!!

   யாராக இருந்தாலும், அடிப்படை நியாயமென்று
   ஒன்று இருக்கிறது. அதிலிருந்து நாம்
   தவறி விடக்கூடாது என்பது என் நிலை.

   உங்கள் கருத்தைச் சொல்ல உங்களுக்கு உரிமை
   உண்டு. உங்களை நண்பர் “கண்பத்” கவனித்துக்
   கொள்வார் என்கிற நம்பிக்கையில்
   விடை பெறுகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   1. உண்மைத்தகவல் என்ற ஒன்று தங்களுக்கு உறுதியாகத் தெரியும் பட்சத்தில் சான்றுகளுடன் அதை இங்குக் குறிப்பிடலாமே
   2. மற்ற எல்லாச் சேனல்களுமே தாங்கள் ஒன்றாகக் கூடி ஆளும் அரசைக் கவிழ்த்துவிட்டு தான் திண்ணையைப் பிடிக்க முயல்பவை. கொஞ்சம் டிவியை விட்டுட்டு வெளில வாங்க பாசு.
   3. கண்பத் அவர்களின் உவமையில் சிறிய தவறு நிகழ்ந்திருக்கிறது. அன்றைக்கே சமையல்காரரை சமைக்கவேண்டாம் என தடுத்துநிறுத்திவிட்டார்கள். இப்போது நடந்துகொண்டிருப்பது அதைப்பற்றிய விசாரணை வழக்குகள். இதில் நமது இந்திய சட்டப்படி குற்றம் சாட்டியவருக்கும், குற்றம் சாட்டப்பட்டவருக்கும், ஏன் குற்றவாளிக்கே கூட தன் தரப்பை நிரூபிக்க வாய்ப்பளிக்கப்படவேண்டும்.
   4.ஏன் இப்படி Overconfidence?
   5.கிருஷ்ணபராமாத்மா என்று யாரைச் சொல்லுகிறீர்கள்? தமிழர்களின் குணம் இதுதான். யார் யாரோடேயாவாது சண்டைபோட்டுக்கொண்டிருக்கட்டும். நாம் நன்றாக வேடிக்கை பார்ப்போம். இதைத்தான் கர்நாடக அரசு பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. நீங்கள் தமிழர்தானே. ஒருவேளை கர்நாடகத்துக்காரராக இருந்து, என் பதில் உங்களுக்கு சங்கடத்தை உண்டாக்குமானால், மன்னிக்கவும். அவர்கள் மட்டுமல்ல யாராக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளத்தான் செய்வார்கள். இதுதான் தமிழனின் அவலநிலை என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.
   6. இந்தப் பதிவு ஜெயாவுக்கோ கருணாவுக்கு எதிராக இல்லை. குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட முறையும் அதில் மீறப்பட்ட சட்டவிதிகளும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன்.

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்கள் அனைவருக்கும்,

  இடுகையின் உள்ளேயே,
  பின் குறிப்பு ஒன்றினை புதிதாகச் சேர்த்திருக்கிறேன்.
  ஏற்கெனவே இடுகையைப் படித்தவர்கள்
  இந்தப் பகுதியைக் காணுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 9. kadhir சொல்கிறார்:

  serina kanja case. arrest of vaiko , ramdass , mk, all happened in late friday evening.
  what she did now she is getting back

  please remember when she came to power , she made all the witness to bulti .. that is why supreme court ordered to put this in bangalore ‘
  now if she come in bail, once again balti will start.. so they are opposing’
  dont know why you guys support someone who looted public money..

 10. soul சொல்கிறார்:

  In my opinion, law applies to all the same. If you are accused and expecting judgement, you need to prepare yourself ahead.

  She had 18yrs to think about this day and prepare.

  • today.and.me சொல்கிறார்:

   //She had 18yrs to think about this day and prepare//
   பிறகு ஏன் ஜாமின் மறுக்கப்படவேண்டும். இந்த 18வருடங்களில் கலைக்காததையா கலைத்துவிடப்போகிறார்கள். சாட்சிகள் அனைத்துமே கோர்ட்டின் காலடியில் இருக்கிறதை மறந்துவிட்டீர்களா?
   கணிணி, அறிவியல், வரலாறு, ஆங்கிலம், தமிழ் இது எல்லாவற்றுடனும் கொஞ்சூண்டு சட்டமும் படிங்கப்பா, தப்பில்ல.

   • Boopathy சொல்கிறார்:

    “Why are you people are arguing that bail is denied”. The hearing is not happened and the bail application will be heard the next normal working day of the high court. By the mean time so many assumptions and accusations. Is this type of decisions by court or judicatory happening first time in the history???

    The justice is denied in the sankararaman murder case and the review of the case also not applied. The govt machinery purposefully cheated on its people. AT that time there was no noise like this issue???

 11. Dr k g palaniappan சொல்கிறார்:

  Dear K M,
  It is becoming a very well debated topic on all forums.
  Let us not go for tit for tat argument.
  When Karunanidhi was arrested in the middle of a night , there had been similar debates.
  (That was a time when Karunanidhi was not this much unpopular as of now)
  It is quite reasonable that the court should have given some breathing time to a sitting CM
  of a large state to make alternate arrangement for smooth running of the government, so
  that law and order could be maintained.
  After all the courts and govt are there to see the rule of law is followed.
  Also as you mentioned, did the learned judge not know that this important case should
  be heard by a regular bench in the first instance itself.
  Time and again very cruel things are enacted to which we are all witness without warrants.
  Kind regards,
  KGP

  • soul சொல்கிறார்:

   are you sure the ‘breathing time’ would be sufficient to maintain law and order? What if OPS is ill or even JJ is sick and hospitalized? Law cannot provide concessions… then everybody would demand something like that to suit their needs.

   Please understand what they have done to delay this judgement for 18 years. Thy poke fun at judicial system (of course the judges deserve for theri corruption) but where is the limit?

  • today.and.me சொல்கிறார்:

   திரும்பவும் முதல்ல இருந்தா ! please read and understand…. KM’s introduction to this post and Please read again km’s yesterday post (swamigalin sagasangal – annexure) and then today’s. If you can, read Ram Jethmalani’s comment on judgement and judge.

 12. annadurai சொல்கிறார்:

  sarithaan thirai thuraiyinarai minchi jaalra satham ketkiradhu weldon

 13. Parvatham சொல்கிறார்:

  Well said, KM,sir

 14. yogeswaran சொல்கிறார்:

  Sir,

  Do you believe in Fate or Karma

  yogi

 15. today.and.me சொல்கிறார்:

  திரும்பவும் முதல்ல இருந்தா ! read and understand…. KM’s introduction to this post.

 16. D. Chandramouli சொல்கிறார்:

  Dear KM,
  I too see, at least from the manner of handling JJ’s bail application, there appears to be an ulterior motive to scuttle her release.

 17. today.and.me சொல்கிறார்:

  எல்லாருக்கும் இலவசமாக சட்ட உதவிகள் செய்துதரப்படும்னு ஊரெல்லாம் அறிவிக்கிறாங்களே, சட்டப்பஞ்சாயத்து வல்லுநர்கள். அவர்களுக்கு இந்த சட்ட விதிமுறைகள், அவை மீறப்பட்ட விதங்கள் குறித்தெல்லாம் ஒன்னும் தெரியாதா, அல்லது அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்களே இல்லையா. அறிக்கை ஒன்னும் விடக்காணோமே. சொல்றதுக்கு லண்டன்லர்ந்து ஜெத்மலானி ஐயா வந்திருக்கிறாரே.

  ஓ. யார் யாரோடவாவது அடிச்சுக்கட்டும் நாம ஜாலியா வேடிக்கை பாக்கலாம்னு நிரூபிச்சுக்கிட்டு இருக்கிறாங்க போல இருக்கு

 18. today.and.me சொல்கிறார்:

  உண்மை நிலவரத்தை எழுதியிருக்கிறார்

  http://www.pragnai.com/2014/10/Tamil-Nadu-CM-Jayalalitha-Arrested.html

 19. Seetha சொல்கிறார்:

  வரலாற்றில் வெகு அரிதாகவே துணிச்சலான நேர்மையான மனிதர்கள் பிறக்கிறார்கள். அதுவும், ஊழல் புரையோடிப்போயிருக்கும், சமீபத்திய காலங்களில், நேர்மையான மனிதர்கள் வெகு வெகு அரிது.

  மைக்கேல் குன்ஹா 500 கோடியோ, அல்லது 1000 கோடியோ கேட்டிருந்தால், அள்ளிக் கொடுத்திருப்பார் ஜெயலலிதா. 1991-1996 வாக்கில் மட்டும், ஜெயலலிதா சம்பாதித்ததாக சொல்லப்பட்ட தொகை 5000 கோடி. அதற்குப் பிறகு, 2001-2006 மற்றும் 2011 -2014.

  ஆனால் ஒரு நீதிபதியாக தனது பணியை செவ்வனே செய்து முடித்துள்ளார் குன்ஹா.

  அதிமுக அடிமைகள், குன்ஹாவை, கன்னடி வெறியர் என்றும், காவிரி விவகாரத்துக்காக அவர் ஜெயலலிதாவை பழிவாங்கி விட்டார் என்றும் செய்திகளை பரப்பி வருகிறார்கள். இந்த பொய்ச் செய்தி பரப்பலில், சில முக்கிய பத்திரிக்கையாளர்களும் இருக்கிறார்கள்.

  காவிரி ஆறுக்கும் பெங்களுருக்கும் என்ன சம்பந்தம். கன்னட மக்களின் தன்மையையும், பெங்ளுருவையும் பற்றி அறிந்தவர்களுக்கு, வாட்டாள் நாகராஜைத் தவிர, காவிரியைப் பற்றி பேச, கர்நாடக மாநிலத்தில் ஆட்களே கிடையாது என்பது நன்றாகத் தெரியும்.

  அதுவும் குன்ஹா, எதற்காக காவிரி பற்றி கவலைப்படப் போகிறார் ? இந்த வழக்கால், குன்ஹா சந்தித்த நெருக்கடிகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. குன்ஹா நியமிக்கப்பட்ட உடன், அதிமுக அடிமை வழக்கறிஞர்கள், கர்நாடக மாநிலத்தில் உள்ள அத்தனை செகன்ஸ் நீதிபதிகளையும், ஒருவர் விடாமல் சந்தித்து, குன்ஹா சட்டம் எங்கே படித்தார், அவரோடு படித்தவர்கள் யார், எங்கே நீதிபதி பயிற்சி எடுத்தார், யார் அவரது நண்பர்கள், எந்த சர்ச்சுக்கு செல்கிறார், அவர் மனைவியின் உறவினர்கள் யார், என்று துருவி துருவி விசாரித்தனர். விசாரணையின் முடிவில், குன்ஹாவை வளைக்கவே முடியாது என்று அறிந்த பிறகுதான், குன்ஹாவை அவமானப்படுத்தி, எரிச்சலூட்டி, அவராகவே ராஜினாமா செய்து விட்டு போய் விடுவார் என்று அடுத்த முயற்சிகளை மேற்கொண்டனர்.

  ஆயிரம் கோடிகளை உதாசீனப்படுத்தி, நீதியை நிலைநாட்டி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் குன்ஹா. நான் குன்ஹாவை மகாத்மா காந்தியோடு ஒப்பிடுவது கூட, தவறல்ல என்றே கருதுகிறேன்.

  அரிதிலும், அரிதாக தோன்றும் குன்ஹா போன்ற மாணிக்கங்கள் தோன்றுவார்கள்.. …. இந்த மாணிக்கங்களை, இழிவு படுத்தி காரணங்களை கண்டுபிடித்து, அவதூறு பேசினோம் என்றால், நம் சமுதாயம் நாசமாகப் போய் விடும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்

 20. Seetha சொல்கிறார்:

  ஆட்சி அதிகாரத்தில் இருந்த லாலு பிரசாத் இவ்வாறே வழக்கை சந்தித்திருக்கிறார். மூன்று மாதத்திற்கு பிறகு தான் பிணையில் வெளியே வந்தார்..

 21. Seetha சொல்கிறார்:

  அப்போதெல்லாம் யாரும் நீதிபதியை திட்டவில்லை.. நீதிபதியின் மாநிலத்தை வைத்து மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடவில்லை.. நீதியை விமர்சிக்கவில்லை அவரது கட்சிக்காரர்களும் அமைதி காத்தார்கள் அநாவசிய கலவரங்களை உண்டுபண்ணவில்லை.. தெய்வத்திற்கு மனிதன் தண்டனை தர முடியுமா..????? என்றெல்லாம் பைத்தியக்காரத்தனமாக அலப்பறை செய்யவில்லை.. மாநில மொழியை வைத்து.. இரு மாநிலங்களுக்குள்ளான வாய்க்கால் தகராறை காரணம் காட்டி ஆ…ஊ… என பிதற்றவில்லை..

 22. Seetha சொல்கிறார்:

  வழக்கை பதினெட்டு ஆண்டு இழுத்தடித்தது, வழக்கில் தீர்ப்பு வந்து குற்றவாளி என ஆனதும் இச்சனமே வெளியே வரவேண்டும் என்று அப்போது காட்டத்தவறிய வேகத்தை வெளியில் வரமட்டும் காட்டுவது எப்படி சரியாகும்.

 23. halfbakedvimarsanam சொல்கிறார்:

  In spite of all the support by ADMK slaves for JJ, justice prevailed.
  It is celebration time.
  It is time to wait for other political criminals to be punished by law.

 24. Boopathy சொல்கிறார்:

  “ஒரு மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் –
  முதலமைச்சராக கோர்ட்டுக்கு வருபவர்,
  தண்டனை விதிக்கப்பட்டு நேரடியாக
  சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார் என்றால் –
  தனது அரசியல் சட்ட பொறுப்புக்களை பின் ஒப்படைக்க
  கால அவகாசம் கொடுக்க வேண்டாமா ? நாள் கணக்கில்
  இல்லாவிடிலும் குறைந்த பட்சம் ஒரு 2 மணி நேரமாவது
  தன் சகாக்களிடம் மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய
  அனுமதியளிக்க வேண்டாமா …?”

  This is shame on Tamil Nadu. Why the hell she was holding the post when she was chargesheeted in the corruption case.
  If she had the moral responsibility for atleast holding the democratically elected govt position of CM, she would have voluntarily resigned in the position and cleared her name in very long back.

  What a confident that she faced the verdict holding CM position and expect the court to allow her to make alternate arrangements!!!

  Still why you people are not asking that she is the CM and the court should have allowed to complete this term and execute the verdict of the case????

 25. Pingback: அப்பட்டமான பழிவாங்கலா? | todayandme

 26. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களுக்கு (அனைவருக்கும் சேர்த்தே ),

  நேற்று மாலை 6 மணியிலிருந்து இது வரை
  (02/10/2014 – காலை 11.15 ) இந்த இடுகையை 2243 பேர்
  படித்துள்ளார்கள். இது வரை 39 பின்னூட்டங்கள்
  போடப்பட்டுள்ளன. இந்த விஷயம் சரியான
  கோணத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்பதே
  என் எண்ணம்.

  ஒன்றை என்னால் கவனிக்க முடிகிறது.
  நிறைய பேர் நடுநிலையில் இருந்து பதில்
  அளித்தாலும், சில நண்பர்கள் மட்டும் மீண்டும்
  மீண்டும், இடுகையின் முதல் பகுதியில் நான்
  சொல்லியிருப்பதை கவனிக்காதது போலவே
  எழுதி இருக்கிறார்கள். ஜெயலலிதா அம்மையாரின்
  மீது அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி தான்
  இதற்கு காரணம் என்பதும் புரிகிறது.

  நான் இடுகையின் துவக்கத்திலேயே கூறி விட்டேன் –
  ஜெ. அவர்கள் நல்லவரா, கெட்டவரா,
  அவர் தவறு செய்தாரா – இல்லையா என்கிற
  விஷயத்துக்குள்ளேயே இந்த இடுகை செல்லவில்லை.

  சம்பந்தப்பட்டவர் ஜெ. என்பதை ஒருக்கணம்
  மறந்து விட்டு – யாரோ ஒரு 66 வயதுள்ள
  நோயாளிப்பெண் என்று மட்டும்
  நினைத்துக்கொண்டு –

  கர்னாடகா அரசு, தீர்ப்பு கூறிய நீதிபதி,
  கர்னாடகா பரப்பன அக்ரஹாரா சிறையதிகாரிகள்,
  ஹைகோர்ட் ரெஜிஸ்டிரார், விடுமுறைக்கால நீதிபதி –
  ஆகக்கூடி அத்தனை பேருமே நியாயமாக,
  நடுநிலையோடு நடந்து கொண்டிருக்கிறார்களா
  என தங்கள் மனசாட்சியைத் தொட்டு ஒரு நொடி
  தங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்ளுமாறு
  நான் நண்பர்களை வேண்டுகிறேன்.

  அது மட்டுமல்ல –
  நமது காவிரி நதி நிரந்தரமாகப் பாலவனமாகக்கூடிய
  சூழ்நிலையை அவர்களால் உருவாக்க முடியும்….
  அதற்கான அடிப்படை அங்கு உருவாகி வருகிறது.

  “அம்மா” இன்னும் அங்கே தான் இருக்கிறார் –
  மீண்டும் அப்பீல் மனு கர்நாடகா ஹைகோர்ட்டில் தான்
  விசாரிக்கப்படப் போகிறது – என்கிற காரணங்கள்
  மட்டுமே தான் தமிழகம் இதுவரை அமைதியாக
  இருக்கக் காரணம். அதிமுக தலைமையும்
  அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

  கடந்த 10 நாட்களாக, நான் தமிழகத்தில் பல பகுதிகளில்
  “டூர்” சென்று கொண்டிருக்கிறேன். அதிமுக
  முக்கியஸ்தர்கள் உட்பட பல தரப்பட்ட
  மக்களிடம் பேசினேன். அதன் பாதிப்புகளும் இந்த
  இடுகையிலும், பின்னூட்டத்திலும் இருக்கும்…..

  “ஜெயலலிதா” என்கிற பெயரை மறந்து விட்டு
  கர்நாடகாவின் நடத்தையை நினைத்துப் பார்க்குமாறு
  நண்பர்களை வேண்டுகிறன்.
  அநியாயம் நடக்கும்போது – அது யாருக்கு நடக்கிறது,
  நமக்கு வேண்டியவரா, வேண்டாதவரா என்று –
  பார்த்து தேர்வு செய்து “ரீ-ஆக்ட்” செய்வது
  மனிதத்தன்மையாக எனக்குத் தெரியவில்லை.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 27. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  சொல்ல மறந்து விட்டேன்.

  நண்பர் today and me அற்புதமாக analyse செய்கிறார்.
  என் கோணத்திலேயே அவரும், நண்பர் கண்பத் அவர்களும் –
  இந்த விஷயத்தை அணுகுவது, என் வேலையை
  சுலபமாக்குகிறது. இரண்டு நண்பர்களுக்கும்
  என் உளமார்ந்த நன்றிகள்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 28. thumbi சொல்கிறார்:

  நிறைய எழுதி விட்டார்கள். ஒரே ஒரு விஷயம் மட்டும்: சஞ்சய் தத் பயங்கரவாதிகள் தடுப்பு சட்டத்தின் மூலம் குற்றம் சாட்டப்பட்டு (வெளிநாட்டு துப்பாக்கி வைத்திருந்தது, பயங்கரவாதிகள் எடுத்துச் செல்ல விட்டது போன்றன குற்றச்சாட்டுகள்) நிரூபிக்கப்பட்டு, நான்கோ, ஐந்தோ ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டபோது, பாதியில் நின்ற திரைப்படங்களை முடித்துத்தர இரண்டு மாதமோ என்னவோ கால அவகாசம் அளிக்கப்பட்டது. அம்மாவுக்கு, ஓரிரண்டு நாட்களோ, ஒரு வாரமோ கொடுத்து பொறுப்புக்களை சரியான விதத்தில் ஒப்படைத்து வந்து சிறை தண்டனையைத் தொடங்கவேண்டும் என்று தான் தீர்ப்பு வந்திருக்கவேண்டும் உடனே கைது செய்து சிறையில் அடைத்தது சரி அல்ல தான். கா. மை சொல்வது சரியே. இதில் குறிப்பாக எவரையும் பழி சொல்வது சரியா எனத் தெரியவில்லை. பதினெட்டு ஆண்டுகள் இழுத்தடித்தவர், இவருக்கு சிறு சலுகைகள் அவசியம் இல்லை என்று emotional ஆக குன்ஹா நினைத்து இருக்கலாம்.

  • Arun சொல்கிறார்:

   If the judgment says that she has misusing her post and amassed assets disproportionate to her wealth, then there is no reason to allow her to continue in that post even if it disrupts the works of the government.
   Are we then ready to afford the same leniency to the companies that got 2g and coal licenses? Should they be given more time before licenses are cancelled?
   Also, the law and order situation should not be taken in to account, otherwise tomorrow kanimozhi ‘s followers will cause law and order problems and use that as an excuse to get her out on bail. It is the responsibility of the governor and the ministers to take care of the law and order and ensure smooth functioning of the government.
   When she has been convicted, what is the guarantee that she will be in a mindset to handover duties responsibly. She might be sad, angry or shocked that she may be more worried about her next steps to come out and not about the government functioning.
   It is always good to give sentences in big cases on a Friday. If miscreants decide to create problems then people and work in the state will be least affected during a weekend.
   She and her lawyers have been absent from court proceedings without proper reason a number of times during the case. This is bound to affect the judgement. What if she is given time and then she says, ‘I have not completed my work, I am not well, there is a law and order problem, I am not able to travel’.
   court grants bail mostly when the court trusts the person to appear when required by the court. The purpose of bail bond and other procedures are to make sure the person will appear in the court when the court asks them to. But if the accused had not given due respect to the court and law so far, how could the court trust the person to keep the promises they make to the court after the conviction.

 29. எழில் சொல்கிறார்:

  ஐயா நீங்கள் கூறியவற்றில் பெரும்பாலான புள்ளிகளில் ஒன்று பட்டாலும் கீழ் வருவதில் வேறுபடுவதை சுட்டி காட்ட விரும்புகிறேன்…

  //அதாவது சனிக்கிழமை முகூர்த்தம் குறித்து,
  (மறுநாள் ஞாயிறு – அப்பீலுக்குப் போக முடியாது – அதன் பிறகும்
  ஒருவாரம் தொடர்ச்சியாக தசரா விடுமுறை) நேரடியாக
  சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.//

  இதற்கு முற்று முழுதாக பழியை தூக்கி கோர்ட் மேல் போட முடியாது காரணம் தீர்ப்பு செப்டம்பர் 20 ஆம் திகதி வருவதாகவே இருந்தது. ஜெயலலிதாவின் வேண்டுகோளின் படி இடமும் திகதியும் மாற்றப்பட்டது.

  http://indianexpress.com/article/india/india-others/jaya-da-case-verdict-postponed-to-sept-27/

  1. ஜெயலலிதா இடமாற்றம் கேட்டதால் தள்ளிப்போன தீர்ப்பு தேதியால் தான் ஐயா நீங்கள் சொல்லும் தசரா விடுமுறையில் அவர் சிக்கி கொண்டார். இல்லையெனில் ஒரு நாள் சிறையோடு வெளியில் வந்திருக்க கூடிய சாத்தியம் இருந்தது.

  2. தனது பாதுக்காப்பு பற்றி முன்பே சிந்தித்து இடத்தை மாற்ற சொன்ன ஜெயலலிதாவுக்கு, முதல்வராக செய்ய வேண்டிய பணியை பாதியில் விட்டு விட்டு வந்து விட்டதால் தொடர அவகாசம் கொண்டுக்க வேண்டும் எனும் வாதம் சரியாக படவில்லை.

  நன்றி

 30. ரிஷி சொல்கிறார்:

  இப்பிரச்சினையை ஒற்றை துருவ நோக்கில் பார்க்கச் சொல்கிறார்கள் அன்பு நண்பர்கள் கா.மை, கண்பத், todayandme ஆகியோர். ஜெ.வின் மீது அவர்களுக்கிருக்கு soft cornerஐப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. அது அவர்களது தெரிவு. அதற்கு அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. கர்நாடக அரசு காவிரிப் பிரச்சினைக்காக ஜெவினை பழிவாங்குகிறது. ஜெவை காலி செய்து விட்டால் காவிரிப் பிரச்சினை இது எழுப்பப்பட மாட்டாது என்ற ரீதியில் மட்டும் இந்த மூவரும் இப்பிரச்சினையை அணுகுகிறார்கள். ஒருவேளை இதில் உண்மை இருப்பதாகவே கொள்வோம். ஒரு தமிழராக இவ்விடயத்தில் நாம் ஒன்றிணைந்து கர்நாடகத்தின் காலித்தனத்தினை எதிர்கொள்ளவேண்டும் என்கிறார்கள்.

  சரி.. இப்போ தமிழ்நாட்டுக்கு வருவோம். காவிரிப் பிரச்சினை மட்டும்தான் தமிழகத்தின் நீராதாரப் பிரச்சினையா? மாநிலத்தின் ஏரிகள், குளங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவை தனியார் குண்டர்களால் சூறையாடப்பட்டுள்ளன. அவர்கள் தமிழர்கள் இல்லையா? வைகுண்டராசன் ஜெ.வின் பினாமி என்பது யாவருக்கும் தெரியும். தூத்துக்குடி, திருச்செந்தூர் கடலோரப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு நம் தமிழ்த் தாய் மண்ணுடன் வல்லுறவு கொண்டு கனிம வளங்களைக் கொள்ளை கொண்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் மீது இன்னும் எந்த சட்டமும் பாயவில்லை என்பதோடு, நேர்மையான அதிகாரி சகாயம் அவர்கள் தலைமையின்கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு எதிராக இதே ஜெ.அரசு கோர்ட்டுக்குச் சென்றதே! அப்போது தமிழர்களாகிய நமக்கு உணர்வு பொங்கிப் பிரவகிக்கவில்லையா?

  கர்நாடகா தமிழகத்தின் எதிரி என்பது கண்கூடாகத் தெரிகிறது; ஆனால் தமிழகத்தில் இருக்கும் ஜெ., கருணா உள்ளிட்டோரின் தமிழர் விரோதப் போக்கு, தமிழ் மண்ணுக்கெதிரான விரோதப் போக்கு (அதாவது நீராதாரங்களைச் சூறையாடுதல், கனிம வளங்களைக் கொள்ளையடித்தல் உட்பட..), நமக்கு துரோகிகளை அடையாளம் காட்டுகிறது.

  இவ்வழக்குத் தீர்ப்பு கர்நாடகத்தின் திட்டமிட்ட பழிவாங்கல் என்றால் நம் எதிரி நம் துரோகியை ஒழித்துக் கட்டுகிறான் என்றே பொருள். இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்து இது அவரவருக்கு சரியாகத் தெரிகிறதா எனப்பாருங்கள்.

 31. எழில் சொல்கிறார்:

  ஐயா இதிலும் ஐயா இதிலும் கவனிக்க வேண்டிய அம்சம் உண்டு…

  //நடுநிலையோடு நடந்து கொள்ள கர்னாடகா அரசு நினைத்திருந்தால் – அது ஜாமீன் மனுவை எதிர்த்திருக்கக் கூடாது. //

  நேரத்தை எவ்வளவு இழுத்தடித்தது. அதை அவர்கள் சட்டத்திற்குட்பட்டு செய்தார்கள் என்றால் பவானி சிங் போன்றோர் தங்கள் முறை வரும் போது தங்கள் பலத்தை காண்பிப்பதில் தவறு என்ன? மேலும் நீதிதரப்பை கோப படுத்தும் வகையில் செயல் பட கூடாது என்பது பொதுவாக வக்கீல்கள் கடை பிடிக்கும் நடைமுறை. ஜெயலலிதா ஜாமீன் வழக்கை இன்னொரு நீதிபதி இன்றே விசாரிக்க வேண்டும் என ஒரு மனுவை கொடுத்து விட்டு பின் சில நிமிடங்களில் வாபஸ் (ராம் ஜெத்மலானி ஆலோசனை படி?) வாங்கிய காட்சியும் நடந்ததை அறிவீர்கள் என்று எண்ணுகிறேன்.

  மேலும் அதிகபடியான 7 ஆண்டுகள் தண்டனை வழங்க வேண்டும் என வாதாடிய கர்நாடக அரசு தரப்பு (பவானி சிங்) ஜாமீன் வரும் போது வாயை மூடிக் கொண்டு இருந்தால் கேசின் நம்பக தன்மை மேல் விமர்சனம் வரலாம் அல்லவா.

  அதை விட Professional Ethics என்று ஒன்று இருக்கிறதல்லவா. இதன் அடிப்படையில் கூட அவர் ஜாமீனை மறுத்திருக்கலாம். இதன் அடிப்படையில் தான் ஜாமீனுக்கு தமிழ் நாட்டை சேர்ந்த DVAC அமைப்பு எதிர்த்து மனு செய்திருக்கிறது என்று கூட எண்ணுகிறேன்.

  http://www.thehindu.com/news/cities/bangalore/dvac-objects-to-release-of-jayalalithaa-on-bail-high-court-adjourns-hearing/article6464935.ece

 32. chandraa சொல்கிறார்:

  it is very sad to note that nobody had even tried to appreciate dr.swami for his initiative in this case. soon he will win in two g. case s also. kani and raja or atleast one of them willbe sent to jail for sometime atleast. and the national herald case also assumes significance causing sleepless nights to sonia and rahul. ….

  • எழில் சொல்கிறார்:

   I would have appreciated Swami had he not contested with AIADMK’s support in Madurai electorate few years after filing this case. Had he be a person of some integrity he should not have got the support of Jayalalitha and AIADMK. As lots of people suspect, he is a person who files cases to get his for his own benefits and get things done to his liking.

 33. A.செந்தில்குமார் சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  நீங்கள் இன்னமும் விளக்கமாக எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  ஜெயலலிதா அம்மாவின் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு என்ன ? அரசாங்கத்தில் எதையாவது செய்து கொடுப்பதற்கு லஞ்சம் வாங்கினார் என்றா ?

  எந்த அரசாங்க விஷயத்திலாவது (2ஜி ஸ்பெக்ரம், நிலக்கரி, காமன்வெல்த் கேம்ஸ் போன்று ) ஊழல் செய்தார் என்றா ? அரசு பதவியை தவறாகப்
  பயன்படுத்தினார் என்றா ?

  அவருக்கு வருவதாகச் சொல்லப்பட்ட வருமானத்தை விட அதிகமாக அவர் வீட்டில் சொத்து இருந்தது என்று மட்டும் தானே ? இந்த சொத்து அவர் பதவியை தவறாகப்
  பயன்படுத்தித்தான் சம்பாதித்தார் என்ப்தற்கு எந்த ஆதாரமும் கோர்ட்டில் கொடுக்கப்படவில்லையே.

  புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஒரு சமயம் தமிழீழத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு தன் வீட்டில் வைத்திருந்த பணத்திலிருந்து 5 கோடி ரூபாய்
  கேஷாக கொடுத்தார் என்று சொல்லி இருக்கிறார். இந்தப் பணம் அவரது வருமான கணக்கில் இருக்காது தான்.
  இந்த பணத்தை அவர் லஞ்சம் வாங்கி சேர்த்தது என்று
  மனசாட்சி உள்ள எவராவது சொல்ல முடியுமா ?

  சாதாரண மளிகைக்கடக்காரர் வீட்டில் கூடத்தான் கணக்கில் வராத பணம் சில ஆயிரமாவது இருக்கிறது. உங்களிடம் இல்லையா ? என்னிடம் இல்லையா ?
  கோடிக்கணக்கில் இல்லா விட்டாலும் ஆயிரக்கணக்கிலாவது
  இல்லையென்று சொல்ல முடியுமா ?

  130 சினிமா படங்களில் கதாநாயகியாக நடித்த ஒரு புகழ் பெற்ற நபரிடம் கணக்கில் காட்ட முடியாத பணம் இருப்பது என்ன அதிசயமா ? அதற்காக அது லஞ்சம்
  வாங்கிய பணம் என்று சொல்ல முடியுமா ?
  கூட இருந்தவர்கள் செய்த தவறுகளை அவர்
  கண்டுகொள்ளாமல் இருந்தது தான் அவர் செய்த தவறு.

  அதற்காக 4 வருடம் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கக்கூடிய அளவிற்கு பெரிய தவரா ? லஞ்சம் வாங்கித்தான் அதை சம்பாதித்தார் என்று எந்த ஆதாரமும் கிடைக்கவில்லையே ?

  தனக்கு 27 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து இருப்பதாக தேர்தல் கமிஷனிடம் தகவ்வல் தெரிவித்திருக்கும் திரு ஸ்டாலின் என்ன தொழில் செய்து இந்த 27 கோடியை சம்பாதித்தார் ? அவர் வாழ்நாளில் எதாவது தொழில், அல்லது வியாபாரம் செய்தாரா ?

  அவர் மகன் உதயனிதி கோடிக்கணக்கில் முதலீடு செய்து சினிமா படம் எடுக்கிறாரே – 28 வயது பையனுக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து, எப்படி வந்தது என்று
  இங்கு பரிந்தூட்டம் போட்டிருக்கும் யாராவது சொல்ல முடியுமா ?

  கருணாநிதியின் மகள் தனக்கு 17 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருப்பதாக தேர்தல் கமிஷனிடம் தகவ்வல் தெரிவித்திருக்கிறாரே அவர் என்ன தொழில் செய்து
  இந்த பணத்தை சேர்த்தார் ?

  கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் கலைஞ்சர் தொலைக்காட்சியில் 60 சதவீதம் பங்கு வைத்திருக்கிறாரே அவர் என்ன தொழில் செய்து இந்த
  முதலீட்டைச் சேர்த்தார் ?

  ஜெயலலிதா அம்மாவை குறை சொல்வோர் யாராவது
  தயவு செய்து இதற்கு பதில் சொல்லுங்களேன்.

  • ரிஷி சொல்கிறார்:

   செந்தில்,
   இதுவரை அதிமுகவினர் திமுக மீது, கலைஞர் மீது, அழகிரி மீது.. இன்னபிற வஸ்துகளின் மீது கேஸ் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப் போட்டால் இவர்களது யோக்யதையும் நிச்சயம் சந்தி சிரிக்கும்.

   //ஜெயலலிதா அம்மாவை குறை சொல்வோர் யாராவது
   தயவு செய்து இதற்கு பதில் சொல்லுங்களேன்.//

   இப்பதிவு “கர்நாடகா காவிரி பிரச்சினையில் ஜெ.மீது வஞ்சம் தீர்த்திருக்கிறது” என்ற அடிப்படையில் மட்டும் எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே அதன் அடிப்படையில் மட்டுமே விவாதம் நடத்தப்பட வேண்டும் என கா.மை அவர்களும் todayandme அவர்களும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். ஆகவே இப்போது கூடுதலாக எதுவும் சொல்ல முடியாது.

 34. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் செந்தில்குமார்,

  நான் பயணத்தில் இருக்கிறேன். உங்கள் பின்னூட்டம் குறித்து
  விவரமாக எழுத முடியவில்லை.
  நீங்களே தான் மிக விவரமாக எழுதி இருக்கிறீர்களே …!
  அதுவே இப்போதைக்கு போதுமே….

  நாளை ஊர் திரும்பி விடுவேன். பின்னர், தேவைப்படின்
  நீங்கள் விரும்புவது போல்
  விவரமாக எழுதுகிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.