ஜெயலலிதா – ‘ரீல்’ எது ……’ரியல்’ எது….?

ஜெயலலிதா அவர்கள் கர்நாடகா பரப்பன அக்ரஹாரா
சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து
அங்கு அவரது நிலை குறித்து பல செய்திகள்
வெளிவருகின்றன –

ஜூனியர் விகடன் கூறி இருப்பது –

1) ஜெ.வுக்கு முதுகுவலி இருப்பதால், அதற்கென
வடிவமைக்கப்பட்ட ஒரே பிரம்பு நாற்காலியைத் தான்
வழக்கமாகப் பயன்படுத்துவார். சிறையில் அவர்
முதுகுவலியால் சிரமப்பட்டதால், அவருக்காக
இந்த பிரம்பு நாற்காலி சிறை அதிகாரிகளிடம்
கொண்டு போய்க் கொடுக்கப்பட்டது. ஆனால் –
அவர்கள், அதை அனுமதிக்க மறுத்து விட்டனர்.
அப்படி சலுகைகள் எதாவது வேண்டுமானால்,
நீதிமன்றத்திலிருந்து அனுமதி உத்தரவைப்
பெற்று கொண்டு வரச்சொல்லி விட்டனர்.

5 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு 2ந்தேதி
அந்த நாற்காலி உள்ளே சென்றது. ( நீதிமன்ற அனுமதி
என்ன ஆனது ?)

2) வெளியிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி
தரப்பட்டுள்ளது. சைரன் பொருத்தப்பட்ட TN 04 CG 3000
காரில் தான் ஜெயலலிதாவுக்கு மூன்று வேளையும்
உணவுகள் கொண்டு வரப்படுகின்றன.
ஜெ.யின் சமையல்காரர் வீரப்பெருமாளை பெங்களூருக்கே வரவழைத்து, வீடு எடுத்துக் கொடுக்கப்பட்டு, சமையல் செய்து
மூன்று வேளையும் உணவு கொண்டு வரப்படுகிறது.
இட்லி, சப்பாத்தி, தயிர்சாதம், சாண்ட்விச் போன்றவை
அவருக்காக கொண்டு வந்து தரப்படுகின்றன.

3) தீர்ப்பு வழங்கப்பட்ட நாளன்று மாலை ஜெயலலிதாவுக்கு படபடப்பும், முதுகுவலியும் இருந்தது. ‘என் பேமிலி டாக்டர் தான் செக் பண்ண வேண்டும்’ என்றார். அதற்கு சிறைத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. சிறை வளாகத்துள் இருக்கும் மருத்துவமனையிலேயே
முழு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

4) சிறையில் அவருக்கு VVIP அறை கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒருவாரம் முன்பாகவே புதிதாக வெள்ளையடிக்கப்பட்டு தயாராகி விட்டது.
நல்ல வசதியான அறை தான். ஒரு பேன், டிவி,
குளிர்சாதன பெட்டி, அகலமான கட்டில், இந்தியன் டாய்லெட் என்று பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

5) சிறைக்குச் சென்றதிலிருந்து இதுவரை அவர்
யாரையும் பார்க்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் கேட்கவில்லை.

6) ‘ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அனுப்பாமல்
ஆளும் காங்கிரஸ் அரசு சதி செய்கிறது’ என்கிற செய்தி,
சோனியாவின் செயலாளர் அஹமது படேல் காதுக்கு
போனது. “நாம் ஜெயலலிதாவை, மருத்துவமனைக்கு கூட அனுப்பாமல் கொடுமைப்படுத்துகிறோம் என்று யாரும் நினைத்து விடக்கூடாது. அவங்க மருத்துவ வசதி கேட்டால், உடனடியாக செய்து கொடுங்க “ என்று கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவிடம் சொன்னார்.

கீழே இருப்பது தினமலர் செய்திகளிலிருந்து –

1) முதல்வர் சித்தராமையா, சிறப்பு அறை வசதி,
இரு மொபைல் போன்கள்; ஜெயலலிதாவுடன் இளவரசி, சசிகலா எப்போதும் இருக்க ஏற்பாடு;
காலை, 9:00 மணியிலிருந்து மாலை வரை,
அவரை பார்க்க யார் வந்தாலும் அனுமதிப்பது என,
பல உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்.

2) ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து,
நேற்று வரை தரைத்தள ( ground floor) அறை
ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அந்த அறை
மிகவும் சிறியதாக இருக்கிறது என்று ஜெ. சொன்னதன் பேரில் நேற்று அவருக்கு, முதல் மாடியில் பெரிய அறை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

————————— —————

அரை மணி நேரம் முன்னதாக (04/10/2014 -மாலை 3 மணி) “தந்தி” டிவியில் கர்நாடகா சிறைத்துறை ஐஜி ஜெயசிமஹாவின் பேட்டியை ஒளிபரப்பினார்கள். அதில் ‘தந்தி’ நிருபரின் கேள்விகளுக்கு அவரே ( ஆங்கிலத்தில் ) பதில் கூறினார்.

அவர் கூறியதன் விவரம் –

தீர்ப்பு கூறப்பட்ட சனிக்கிழமை மாலை ஜெயலலிதா
எந்த அறையில் அடைக்கப்பட்டாரோ, அதே அறையில் தான் இப்போதும் இருக்கிறார். எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

சாதாரணமாக ஜெயில் மானுவலில்
என்ன கூறப்பட்டிருக்கிறதோ – அந்த அளவு வசதிகள் தான் அவருக்கு செய்து தரப்பட்டுள்ளன. அவருக்காக எந்தவித அதிகப்படியான வசதிகளும் செய்து தரப்படவில்லை.

அவர் உள்ளே வந்ததிலிருந்தே –
சிறைச்சாலை உணவு விடுதியில், தயாரிக்கப்பட்ட
சாதாரண உணவு தான் அவருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. அவர் சர்க்கரை நோயாளி என்பதால்,
அவரைப் பரிசோதித்த சிறை டாக்டர் அனுமதிக்கேற்ப
உணவு வகைகள் தரப்படுகிறது.

பின் குறிப்பு –

சிறை ஐஜி ஜெயசிம்ஹாவின் பேட்டியைப் பார்த்தது
தான், நான் இந்த இடுகையை எழுதுவதற்கான காரணமே.
இந்த பத்திரிகைகள் தான் மக்களை எப்படியெல்லாம்
முட்டாள்களாக்குகின்றன பார்த்தீர்களா ….?

பின் பின் குறிப்பு –

“முட்டாள்” என்று சொல்வதற்கு பதில் “கேணையன்”
என்று சொல்லி இருந்தால் இன்னும் பொருத்தமாக
இருக்குமோ …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to ஜெயலலிதா – ‘ரீல்’ எது ……’ரியல்’ எது….?

 1. k.Raghavendra சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  இவையெல்லாம் கழிசடைகள்.
  வியாபாரம் ஒன்றே அவற்றின் குறிக்கோள்.
  காசு கொடுத்து இந்த பத்திரிக்கைகளை
  எல்லாம் வாங்கினால் தான் நாம் “கேணையர்கள்”
  எங்கேயாவது ப்ரீயா கிடைத்தால் படிக்கலாம்.

  காசு சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள்.
  முதல் பக்கத்தில் மீனவர்களைக் குறித்து கண்ணீர்
  வடிப்பார்கள். அடுத்த பக்கத்தில் கவர்ச்சிப் படம் போட்டு,
  ராத்திரி ரவுண்டு என்று தலைப்பு போட்டு எழுதுவார்கள்.

 2. sakthy சொல்கிறார்:

  இதற்குப் பெயர் தான் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் -ஊடக தர்மம்-

 3. today.and.me சொல்கிறார்:

  ஜெவைப் பற்றிய பதிவுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை, ஆனால் ஊடக அறத்தைப் பற்றிய மற்றொரு பதிவரின் இணைப்பு ….

  http://ramaniecuvellore.blogspot.in/2014/10/blog-post_5.html

  குரைக்கவேண்டிய நாய் ஒழுங்காகக் குரைத்திருக்கிறது.

 4. sakthy சொல்கிறார்:

  ஜெயலலிதாவின் சிறை – ஊடகங்களின் எதிர்ப்புப் பிரச்சாரம்,பொய்யான செய்திகள், ஜெயலலிதா மேல் கொண்ட விரோதம்-வெறுப்பு ஊடக தர்மத்தை மீறி பொய்யான செய்திகளாய் கொட்டிக் குவிந்தது கொண்டிருக்கும் நிலையில்…………..
  சமீபத்தைய பாஜக தலைமையின் பேச்சுகள் நடவடிக்கைகள் சந்தேகத்தை வலுவாக்கி வருகிறது.
  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேச்சும் செயலும் சந்தேகத்தை வலுவாக்குகிறது.
  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குலைந்து விட்டது என்ற நேற்றைய பேச்சு…. உண்மையோ பொய்யோ உண்மையான அக்கறையுடன் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.
  சுப்பிரமணியன் சுவாமி குடியரசுத் தலைவரிடம் அளித்த மனு,
  ஆர்.எஸ்.எஸ். தலைவரின் சமீபத்தைய பேச்சு …
  தமிழகம், கேரளத்தில் ஜிகாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்துவிட்டன- மோகன் பாகவத்
  சுப்பிரமணியன் சுவாமியைப் பாராட்டிய பாஜக தமிழகத் தலைவர்,
  ரஜனியை சந்தித்து அரசியல் பேசி மறைமுக ஆதரவு கேட்டது- ஒப்புக் கொண்ட தமிழிசை சவுந்திரராஜன்

  மத்திய அரசு திட்டமிட்டு அரசியல் சாசனப் பிரிவு 355-ஐ நோக்கி செல்லவில்லை. ஆனால், சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள், தீவிரவாதம் தொடர்பானவற்றை நாங்கள் கவனித்து வருகிறோம். தமிழக மக்களை பாதுகாக்க வேறுவழி இல்லை என்றால் இங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் – தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி.

  இப்படி வெளிவரும் பல செய்திகள் – தமிழகத்திற்கு மோசமான காலமாகவே தெரிகிறது.

  ஊடகங்களின் பொய்யான பிரச்சார செய்திகள், தவறான அரசியல் நகர்வை நோக்கி செல்லலாம்.
  பாஜக வின் இந்த அரசியல் ஆதாயம் நோக்கிய நகர்வுக்கு மற்றைய கட்சிகளும் துணை போவது ஆரோக்கியமான நகர்வாகத் தெரியவில்லை.

  இவற்றைப் பார்க்கும் போது,………..
  //இந்த பத்திரிகைகள் தான் மக்களை எப்படியெல்லாம்
  முட்டாள்களாக்குகின்றன பார்த்தீர்களா ….?//
  தேர்தலில் ஊடகங்களின் மோடி ஆதரவு செயலைப் போல், திட்டமிட்டு சதித் திட்டத்தை ஊடகங்கள் பாஜக விற்காக நடக்கின்றனவோ என்ற சந்தேகம் வருகிறது……..?

 5. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  //சிறையில் அவருக்கு VVIP அறை கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒருவாரம் முன்பாகவே புதிதாக வெள்ளையடிக்கப்பட்டு தயாராகி விட்டது// – ஆக, ஒரு வாரத்துக்கு முன்பே… முன்பே… அப்படித்தானே? சரி சரி, நான் ஒன்றும் சொல்லவில்லை. எனக்கேன் வம்பு!

 6. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  எனக்கென்னவோ, எல்லோருமே இந்தப் பதிவைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்களோ எனத் தோன்றுகிறது. காவிரிமைந்தன் ஐயா! பதிவின் இறுதியில் நீங்கள் தமிழ் இதழ்களைச் சாடுவது போல் கூறியிருப்பதை அந்தக் காவல்துறை அலுவலரின் பேச்சைக் கிண்டலடிப்பதாக நான் எடுத்துக் கொள்கிறேன். மற்றவர்கள் அதை நேரடிப் பொருளிலேயே புரிந்து கொள்கிறார்கள். இரண்டில் எது உண்மை? நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

 7. Dr K G Palaniappan சொல்கிறார்:

  Dera KM,
  There is an detailed article on Jayalalitha’s arrest running almost a page
  in The New York Times’ Sunday edition(5th Oct) on page four giving a factual
  narration on the arrest and hence. You an direct your blog followers to it.
  Regards,
  KGP

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  அன்புள்ள டாக்டர் கே.ஜி.பழனியப்பன்,

  நீங்கள் அளித்துள்ள தகவலுக்கு மிக்க நன்றி.
  NYT report ஐ படித்தேன். இப்போது வேறு ஒரு இடுகையை
  எழுதும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.
  இந்த ரிப்போர்ட்டைப் பற்றி பின்னர் விவரமாக தனியே
  இதே விமரிசனம் தளத்தில் அவசியம் எழுதுகிறேன்.

  நீங்கள் அண்மைக் காலங்களில் எழுதும் பின்னூட்டங்களை
  எல்லாம் கவனித்து வந்தேன். ஆனால் நீங்கள் அமெரிக்காவில்
  இருக்கிறீர்கள் என்பது இப்போது தான் தெரிய வந்தது.
  இந்த ‘விமரிசனம்’ வலைத்தளம் உலகின் பல பகுதிகளிலும்
  ஆர்வத்தோடு படிக்கப்படுவதும்,
  அதில் நண்பர்கள் மனம்திறந்து தங்கள் கருத்துக்களை
  தெரிவிப்பதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

  இடுகையின் மையக்கருத்துக்கு – ஆதரவாகவோ, எதிராகவோ –
  எப்படி இருந்தாலும், பண்பாக எழுதப்படும் எல்லா
  கருத்துக்களுக்கும் இங்கே நிச்சயம் இடமுண்டு என்பதை
  புதிய வருகையாளர்களுக்காக மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.
  உங்கள் மடலுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.,

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.