மாயா கோட்னானியை -விடுதலை செய்தது ஏன்..? நேர்மைத் துணிவிருந்தால் தமிழக பாஜக கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்…….

maya-kodnani-2

 

கோத்ராவில் 2002ம் ஆண்டு நிகழ்ந்த ரெயில் எரிப்பு
சம்பவத்திற்கு மறுநாள் நரோடா பாட்டியா என்ற இடத்தில் நடந்த வன்முறையில் 97 பேர் கொல்லப்பட்டனர்.
அந்த கால கட்டத்தில் ‘நரோடா’ எம்எல்ஏ வாகவும்,
பின்னர் குஜராத் மாநில அமைச்சராகவும் பணிபுரிந்தவர் மாயா கோட்னானி. 2008-ல் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு அமைத்த சிறப்பு விசாரணைகுழுவின் தீவிர முயற்சிகளால்
இந்த வழக்கு விசாரணை மேற்கொண்டு செல்லப்பட்டு,
இறுதியாக பா.ஜ.க. அமைச்சராக இருந்த மாயா கோட்னானிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இடையில் சில காலம் கைதைத் தவிர்க்க, தலைமறைவாகவும் இருந்த பாஜக மந்திரி தான் மாயா கோட்னானி.

97 அப்பாவிப் பொது மக்கள், துடிக்கத் துடிக்க கொல்லப்பட முக்கிய காரணமாகவும், அந்த கொலைக்குற்றங்களை உருவாக்கிய முக்கிய காரணகர்த்தாவாகவும் இவர் இருந்தார்
என்றும் சிறப்பு கோர்ட் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
மாயா கோட்னானி மீது சுமத்தப்பெற்ற குற்றச்சாட்டுக்கள் கொலை மற்றும் கொலைச்சதி. இவை சந்தேகமற நிரூபிக்கப்பட்டதாகக் கூறித்தான் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு இந்த சிறைத்தண்டனையை விதித்தது.

இந்த “தெய்வத்திருமகள்” சிறைக்குச் சென்றவுடன்,
உடல்நிலையை காரணம் காட்டி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சகல சௌகரியங்களுடன் “சிகிச்சை” பெற்று வந்தார்.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து குஜராத்
நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். தண்டனையை “நிறுத்தி” வைக்கவும், உடல்நிலை காரணம் காட்டி தனக்கு “ஜாமீன்” கோரியும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு போட்டார்.
மனுவை ஏற்ற குஜராத் உயர்நீதிமன்றம், அவருக்கு
“ஜாமீன்” கொடுத்தது மட்டுமல்லாமல், அப்பீல் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கும் வரை தண்டனையை நிறுத்தியும் வைத்து உத்திரவிட்டிருக்கிறது.

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் “தடை ஆணை” (stay order) வாங்க SIT முயற்சி செய்தபோது, குஜராத் (பாஜக) அரசு அதற்கு அனுமதி கொடுக்க மறுத்து விட்டது.

ஆக, மாயா கோட்னானி சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கவும், அவருக்கு ஜாமீன் கிடைக்கவும், குஜராத் அரசு வெளிப்படையாக செயலாற்றி இருக்கிறது.

கொலைக் குற்றச்சாட்டில் 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற ஒரு பாஜக அமைச்சரின் தண்டனையை நிறுத்தி வைக்கவும், அவர் ஜாமீனில் வெளியே வரவும் அதனை சட்டபூர்வமாக எதிர்க்க கடமைப்பட்ட மாநில அரசே அவர் விடுதலை பெற உதவுகின்ற –

இதே பா.ஜ.க.வின் லோக்கல் தலைமை தான்
இங்கு –

——————-

மலையாள தேசத்து திருவாளர் பொன்ரா. சொல்கிறார் –

“ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பைப் பொறுத்தவரை நீதி வழங்கப்பட்டு இருக்கிறது, பாஜக தமிழகத்தை ஆளும் காலம் நெருங்கி வருகிறது”

திருமதி தமிழிசை சொல்கிறார் –

“மத்திய அரசு திட்டமிட்டு அரசியல் சாசனப் பிரிவு 355-ஐ நோக்கி செல்லவில்லை. ஆனால், சட்டம் – ஒழுங்கு
பிரச்சினைகள், தீவிரவாதம் தொடர்பானவற்றை நாங்கள் கவனித்து வருகிறோம். தமிழக மக்களை பாதுகாக்க வேறுவழி இல்லை என்றால் இங்கு என்ன
வேண்டுமானாலும் நடக்கலாம்”
————————

( கொலை அல்ல, கொலைச்சதி அல்ல) –
வருமானத்தை மிஞ்சிய சொத்து வைத்திருந்தார்
என்கிற காரணத்திற்காக –

( 28 ஆண்டுகள் சிறை அல்ல)
வெறும் 4 ஆண்டுகள் மட்டுமே
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள –

பெரும்பாலான மக்களால் அண்மையில் தான்
முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட,
அவர்களது அன்புக்கும், பிரியத்திற்கும் பாத்திரமான
ஒரு தலைவரை “ஜாமீனில் விட வேண்டும்”
என்கிற கோரிக்கையை மட்டும் முன்வைத்து போராடும் அவரது கட்சியினரைப் பார்த்து மிரட்டுகிறார்கள்.

தள்ளிப்போடாமல், தாமதம் இல்லாமல்
“ஜாமீன்” மனுவை விசாரித்திருந்தால் இந்த போராட்டங்களுக்கு அவசியமே வந்திருக்காதே….

ஜெயலலிதாவை “ஜாமீனில்” விடவேண்டும் என்கிற
கோரிக்கையில் என்ன தவறு இருக்கிறது ?
சட்டம் அனுமதிக்கப்பட்டுள்ள
உரிமை அவருக்கு மறுக்கப்படுவானேன் ?
அவரது மனுவை விசாரிப்பதில் வேண்டுமென்றே
கால தாமதம் செய்யப்படுவது ஏன் ?

கொலைக்குற்றம் நிரூபணமானவருக்கு பாஜக அரசு
“ஜாமீன்” கொடுத்திருக்கும்போது –

கொலைக்குற்றத்திற்காக 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை
பெற்றவரின் தண்டனையை
பாஜக அரசு நிறுத்தி வைத்திருக்கும்போது –

அதிமுகவினரின் இந்த கோரிக்கையில் என்ன தவறு
காண முடியும் ? முதல் நாள் மட்டும் அவர்களின்
போராட்டத்தில் வன்முறை இருந்தது உண்மை. அது
தீர்ப்பைக் கேட்டவுடன் ஏற்பட்ட உணர்ச்சி வேகம்.
ஆனால் பின்னர் என்ன செய்கிறார்கள் …?

உண்ணாவிரதம் இருப்பதும், மண்சோறு தின்பதும்,
அங்கப்பிரதட்சணம் செய்வதும், யாகம் வளர்ப்பதும்,
மொட்டை போட்டுக் கொள்வதும், – இவற்றைப் பார்த்து
பாஜக தலைமை வயிறு எரிவது ஏன் ? ஜனாதிபதி ஆட்சி என்று பயமுறுத்துவது ஏன் …?

இதுவரை 62 பேர்கள் தற்கொலை செய்து
கொண்டிருக்கிறார்கள். இது போலியா ? நாடகமா ?
உங்கள் கட்சியில் இது போல் யாராவது ஒருவரையாவது
காண முடியுமா ? சரியோ, தவறோ – அவர்கள் தலைவியின் மீது அவர்கள் கொண்டுள்ள பாசம், நம்பிக்கை, ஏமாற்றத்தின் விளைவு அது….

மனசாட்சி இல்லாமல் இதனை
கொச்சைப்படுத்துபவர்களை கேட்கிறேன்.
உங்களில் யாருக்காவது ஒரு லட்சமோ, 5 லட்சமோ,
10 லட்சமோ ஏன் ஒரு கோடியோ கொடுத்தால் கூட
செத்துபோகத் தயாராக இருப்பீர்களா ?
இத்தகைய உயிர்த் தியாகத்தை வேறு எங்காவது
காண முடியுமா ? செத்துப் போனவர்களுக்கு பதவி
எதாவது கொடுக்க முடியுமா ? பணம் கொடுத்தாலும் – அது சாவுக்கு இணையாகி விடுமா ?

தேர்தல் களத்தில் நின்று ஜெயிக்க துப்பில்லை.
அத்தனை பேரையும் துணைக்கழைத்துக் கொண்டு கூட ஆறு சதவீத ஓட்டைத் தாண்டாத இவர்களுக்கு
ஆட்சியைப்பிடிக்க என்ன அருகதை இருக்கிறது ?

மோடி பிரதமராக இருந்தால், நாடே இவர்களுக்கு
சொந்தமாகி விடுமா ?

மோடி தேர்ந்தெடுக்கப்பட்டது மத்திய அரசை ஆளத்தான். தமிழ்நாட்டில் இவர்களைத்தான் மண்ணைக் கவ்வ வைத்து விட்டார்களே….பின் ஏன் கொல்லைப்புற வழியாக உள்ளே வர முயற்சி…?

தமிழ் மண்ணின் துரோகிகள் பாஜக வினர்..
காங்கிரஸ்காரர்கள் பேசாமலே துரோகம் செய்தார்கள்…
இவர்கள் பேசிப்பேசி ஏமாற்றிக்கொண்டே
துரோகம் செய்கிறார்கள் …

மக்களின் அனுமதி இல்லாமலே ஆள ஆசைப்படுகிறீர்களே –
என்ன செய்திருக்கிறீர்கள் நீங்கள் தமிழ்நாட்டிற்கு…?

தமிழக மீனவர்களின் 72 படகுகள் ராஜபக்சேயால்
பறிக்கப்பட்டு, வெய்யிலிலும், மழையிலும் நாசமாகிக்
கொண்டிருக்கின்றன.

உங்கள் சுப்பிரமணிய சாமி சொல்கிறார் நான் தான்
ராஜபக்சேயிடம் படகுகளை பிடித்து வைத்துக் கொள்ளச்
சொன்னேன் என்று. இன்று வரை பிரதமரோ,
மத்திய அரசோ இதை மறுத்துக் கூறி இருக்கிறதா ?
அப்படியென்றால் சு.சு. உங்கள் அரசின் பிரதிநிதியாகச்
செயல்படுகிறார் என்று தானே அர்த்தம் …?

மீனவர்கள் கைது செய்யப்படும் அவலம் இன்னும்
தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் -எடுக்கும் என்று
பேசிக்கொண்டே இருக்கிறீர்களே தவிர 5 மாதங்கள்
ஆகப்போகின்றன -பேசியதில் என்ன பலன் கிடைத்தது ….?
படகுகள் என்றைக்கு கிடைக்கும் என்று தேதி சொல்ல
முடியுமா உங்களால் …?

கச்சத்தீவை மீட்போம் என்று தேர்தலுக்கு முன் நீங்களும்
பேசினீர்கள். மத்திய அரசைப் பிடித்த பிறகு –
உங்கள் நிலை என்ன ?

காவிரி நதி நீர் ஆணையம் அமைப்பதில் நீங்கள் என்ன
செய்தீர்கள் …? கர்னாடகா பாஜக வெறியர்களுடன்
கூட்டு சேர்ந்து கொண்டீர்கள். ஆணையம் கோரிக்கை
கிணற்றில் போட்ட ‘கல்’ ஆகி விட்டது….

பார்க்கும் இடங்களில் எல்லாம் ‘இந்தி’யைத்
தெளித்துக் கொண்டே போகிறீர்கள்….
இன்றில்லா விட்டாலும், நாளையாவது பலன் தருமென்றா ..?

ராஜீவ் காந்தி வழக்கில் 22 ஆண்டுகளாக சிறையில்
வாடுபவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முயன்றபோது காங்கிரஸ் அரசு தான் குறுக்கே புகுந்தது.
உங்களுக்கென்ன வந்தது ?
நீங்களும் அதே நிலையை எடுப்பது எப்படி ?
இப்போது தமிழர்களின் விடுதலையை விட உங்களுக்கு
சோனியா காந்தி அம்மையாரை திருப்தி செய்ய வேண்டியது முக்கியமாகி விட்டதா …. ?

மற்ற விஷயங்களில் இவ்வளவு வாய் கிழிகிறதே உங்களுக்கு –
ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை
கேரள கவர்னராக நியமித்ததன் காரணமென்ன ?
பாஜக வில் வேறு கிழம்-கட்டைகள் இல்லையா என்ன ?
அதையும் கொஞ்சம் வெளியே சொல்லுங்களேன்…
இதுவரை தெரியாத அப்பாவித் தமிழர்கள்
அதையும் தெரிந்து கொள்ளட்டும்…

சு.சுவாமி ஜனாதிபதிக்கு மனு கொடுக்கிறார் –

“தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை.
356வது பிரிவின் கீழ் தமிழ்நாட்டை ஜனாதிபதி
ஆட்சியின் கீழ் ஒரு வருடத்திற்கு கொண்டு வர
வேண்டும். அதன் பிறகு தேர்தல் நடத்தினால் போதும்”

சு.சுவாமி யார் ? உங்கள் கட்சியின் கொள்கை வகுக்கும்
குழுவின் தலைவர்…! அப்படியானால் அவர் கொடுத்த
பெட்டிஷன், பாரதீய ஜனதா கட்சி கொடுத்தது போலத்தானே ?

நீங்கள் இதுவரை தமிழக மக்களுக்கு செய்துள்ள,
இப்போது செய்து கொண்டிருக்கும் சேவைகளுக்கு
தமிழக மக்கள் உங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து
வரவேற்பு கொடுப்பார்கள் என்று நினைக்கிறீர்களா ?

துடப்பக்கட்டை என்னும் ஒரு சாதனம் –
“ஆம் ஆத்மி” கட்சி அறிமுகமாவதற்கு
முன்பிருந்தே தமிழகத்தில் புழக்கத்தில் இருந்தது
என்பதை தமிழ் நாட்டு மக்கள் யாரும் மறக்கவில்லை…..

இந்த வலைத் தளத்தை பாஜக வினர் சிலர் படிப்பது
எனக்குத் தெரியும். இது நிச்சயம் அவர்களது தலைமையின் கவனத்திற்கு போகும் என்பதையும் நான் அறிவேன்.

நெஞ்சில் உரமிருந்தால்,
நேர்மைத்திறன் இருந்தால் –
நான் இந்த இடுகையில் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு
தமிழக பாஜக பதில் விளக்கம் அளிக்க வேண்டும்.
இதைக் கேட்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது.
அதற்கான விளக்கங்களைத் தெரிந்து கொள்வதற்கு
தமிழ் மக்களுக்கு உரிமை இருக்கிறது.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to மாயா கோட்னானியை -விடுதலை செய்தது ஏன்..? நேர்மைத் துணிவிருந்தால் தமிழக பாஜக கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்…….

 1. k.Raghavendra சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  நீங்கள் சொல்வது புதிய விஷயமாக இருக்கிறதே. இவ்வளவு நாட்களாக இதைப்பற்றி தெரியவே இல்லையே.
  அவர் தண்டனை பெற்ற வரை தான் செய்திகள் வந்தன. அதற்குப் பிற்கு
  இவ்வளவு நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றனவா ?

  கொலைக்குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர் ஜாமீன் பெறுவதை அரசு வழக்கறிஞர் எப்படி எதிர்க்காமல் இருந்தார் ?
  அரசாங்கமே அவருக்கு அப்படித்தான் உத்திரவு இட்டிருந்ததா?
  அது சரியென்றால் ஜெ. வழக்கில் கூட ஜாமீன் பெறுவதற்கு
  அரசு வக்கீல் தன் எதிர்ப்பை தெரிவிக்காமலே இருந்திருக்கலாமே.

  தமிழ் நாடு பாஜக தலைவர்கள் ரஜினியைக் கொண்டு வந்து,
  தேர்தலில் ஜெயித்து ஆட்சியைப் பிடித்து விடலாமென்று கனவு காண்கிறார்கள். அதற்குத்தான் சு.சு. ஒரு வருடம் ஜனாதிபதி ஆட்சி கேட்கிறார்.
  இசையையும், மலையாள ஓசையையும் நம்பி தமிழ்நாட்டு
  மக்கள் என்றும் ஏமாற மாட்டார்கள். ஏற்கெனவே நம்பி ஏமாந்து தான்
  இன்று குமரி, தூத்துக்குடி மீனவர்கள் படகைப் பறிகொடுத்து விட்டு
  தவிக்கிறார்கள்.

  புதிய தகவல்களைத் தந்திருக்கிறீர்கள். ஒரு வேளை இது முன்னாடியே
  தெரிந்திருந்தால் அதிமுக லாயர்கள் வேறு மாதிரி முயற்சி
  செய்திருப்பார்களோ என்னமோ… உங்கள் இடுகைக்கு மிகவும் நன்றி.

  • sakthy சொல்கிறார்:

   இதை எல்லாம் நமது தமிழக மக்கள் சிந்தித்துப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? எனக்குத் தோன்றவில்லை.

  • today.and.me சொல்கிறார்:

   சென்றமுறை விஜயகாந்தை நம்பி ஓட்டு ஒன்றும் தேறவில்லை. ரஜினியையும் விஜய்யையும் மட்டுமே நம்பினால் வேலைக்காகாது, ஏனென்றால் அவர்கள் இருவருமே பாஜகவுக்கு வருவேன் ஆனா வரமாட்டேன் ரகம் தன்.. இப்போது புதிய பட்டியலில் உள்ளவர்கள் நம்மவர் கமலும் அஞ்சான் சூரியாவும். ஆனால் இவர்களுக்கு உள்ள ரசிகர்களின் ஓட்டைவைத்து பாஜக டெபாசிட்டையாவது வாங்கிவிடுமா? ஏன் பாஜக சினிமாக்காரர்களை நம்புகிறது? தாங்களாகவே ஏதாவது தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை உருப்படியாய்த் தீர்த்து ஏதாவது ஓட்டுகீட்டு வாங்கப் பார்க்கலாமே?

 2. sakthy சொல்கிறார்:

  இதை நான் படித்திருக்கிறேன். ஆனால் இப்படி நறுக்கென்று நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் வகையில் யாரும் கேட்காததை கேட்டிருப்பது நன்றாகவே இருக்கிறது.
  தமிழிசை சௌந்தரராஜன் முன்னைய பேச்சுக்களைப் படித்திருக்கிறேன். நேர்மையான அரசியல்வாதி என எண்ணத் தோன்றியது அப்போது.
  இப்போது சுசாமி வளர்த்த அரசியல்வாதியாகவே தோன்றுகிறது.
  அரசியல் சாக்கடையில்,-மன்னிக்கவும்,சாக்கடையாக மாறியது இவர்களைப் போன்றவர்களால் தான்-ஊறிய மட்டையாகி விட்ட இவர்களைப் போன்றவர்கள் உண்மையானவர்களாக இருந்தால் மக்கள் நலனை முன்னிட்டு அரசியலை விட்டு விலகி விட வேண்டும்.
  ஒன்று மட்டும் தோன்றுகிறது, ஜெயலலிதாவின் கால் தூசுக்கும் கூட ,அவர் தவறுகள் செய்திருந்தாலும் கூட,இவர்கள் வர மாட்டார்களோ என்று.
  தமிழக மக்களை இவர்களிடம் இருந்து யார் காப்பாற்றப் போகிறார்கள்?

 3. arulnithya சொல்கிறார்:

  ithey modiyudan thaan JJ friendaaa irunthaar..ithey modi pathavi yerupukku poonaarrrrrr JJ…Sir neenga enna solla vaarenga JJ release pannanumnaaa …kutravaali illanutta

  • today.and.me சொல்கிறார்:

   ஜெஜெவை குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்யச் சொல்லவில்லை, ஒரு குற்றவாளி என்று சிறப்புநீதிமன்றம் தீர்ப்புசொன்னபிறகும், குற்றவாளிக்கு உண்டான விதிமுறைகள்கூட மீறப்படுவது ஏன்? என்று கா.மை. கேட்கிறார்.

   ஃப்ரண்டு என்று எப்போதும் யாரைவேண்டுமானாலும் சொல்லலாம். உண்மையான நண்பனை ஆபத்தில்தான் அறியமுடியும். ஒரு கரடியும் இரண்டு நண்பர்களும் கதை தெரியாதா உங்களுக்கு. உங்கள் சிந்தனை இன்னும் சிறிது வளப்பட வேண்டுகிறேன்.

 4. visujjm சொல்கிறார்:

  ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை
  கேரள கவர்னராக நியமித்ததன் காரணமென்ன ?
  பாஜக வில் வேறு கிழம்-கட்டைகள் இல்லையா என்ன ?
  அதையும் கொஞ்சம் வெளியே சொல்லுங்களேன்…

  Manasatchiku savukkadi kudutha ungaluku salute Master G… Jai hind

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி விஷ்ணு வரதராஜன்.

   இது பற்றி பாஜக தமிழகத் தலைமை எதாவது சொல்லுமா-
   என்று செய்தியாளர்களைச் சந்திக்கும்போது திருமதி இசையை
   யாராவது கேட்டால் தேவலை….!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. reader சொல்கிறார்:

  நீங்கள் தமிழக பாஜகவை கேட்கும் கேள்விகள் நியாயமானவையே. ஆனால் சமீப காலத்தில் உங்களின் ஜெயலலிதா ஜால்ரா ஓவரா இருக்கே.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே ( ரீடர் …)

   நான் ஜெயலலிதா அவர்களுக்கு
   ஜால்ரா போட வேண்டுமென்று நினைத்தால் அதை
   வெளிப்படையாகவே செய்வேனே. என் வலைத்தளத்தில்
   நான் விரும்புவதை எழுதுவதை யார் தடுக்கப் போகிறார்கள்…?

   நான் பலமுறை சொல்லி விட்டேன். எந்த கட்சியையும்
   நான் சார்ந்தவனில்லை, எனக்கு நியாயமென்று
   தோன்றுவதை எழுதுகிறேன் என்று.
   ஆரோக்கியமான நண்பர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்.
   ஆனால் – காமாலைக் கண்ணுடன் நோக்குபவர்களுக்கு
   நான் எந்த விதத்தில் உதவ முடியும் ….?
   இடுகையைப் படிக்கும்போது – திறந்த மனதுடன்
   படியுங்கள் என்று சொல்ல மட்டும் தான் முடியும்…..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. today.and.me சொல்கிறார்:

  அன்பின் கா.மை.!

  இந்த விமரிசனம் வலைப்பூவில் இதுவரை இடப்பட்டிருந்த பதிவுகள் அனைத்துமே சாதி, மத, கட்சிபாகுபாடின்றி இடப்பட்டவையே, இவையனைத்திற்கும் இடப்பட்ட பின்னூட்டங்களும் அவ்வாறே, கருத்துவேறுபாடுள்ள பின்னூட்டங்களும் பண்பான வார்த்தைகளைக் கோர்த்து வந்தவையே. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. இந்தப் பதிவிலும் தாங்கள் இட்டுள்ள பதிவிற்குத் தொடர்பான தரமான எழுத்தில் இடப்பட்ட பின்னூட்டங்களை மட்டும் தாங்கள் அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மற்றவை தயவுசெய்து நீக்கப்படட்டும்.

  ஏனென்றால் இந்த வலைப்பூவைப் படிப்பவர் எல்லோரும் வந்து ……… கழித்துவிட்டுச் செல்ல இது அவர்கள் கட்சிப்போஸ்டர் ஒட்டும் சுவரும் அல்ல, பூணூலைப் போட்டுக்கொண்டு ஜால்ரா தட்டிச் செல்ல பஞ்சப்பராரியின் ஆண்டிமடமும் அல்ல.

  எழுதியிருப்பது பிடித்திருந்தால் படிக்கலாம். ஒத்தகருத்துக்கள் உண்டென்றால் பதிவரை ஊக்குவிக்கலாம். மாற்றுக்கருத்துகளைச் சொல்லவேண்டுமென்றால் தரமான வார்த்தைகளில் நியாயமான கருத்துகளை எழுதலாம். அறிவுவளர்ச்சிக்கான கருத்துப் பரிமாற்றத்துக்கான ஒரு தொழில்நுட்ப வளர் சாதனத்தை இங்கு பின்னூட்டமிட்டுள்ள சில்ர் தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டிக்கிறேன்.

  எழுதியது பிடிக்கவில்லையென்றால் போய்க்கொண்டே இருக்கலாம், , மீண்டும் வந்து படிக்காமல் இருக்கலாம். சமூகத்தில் இன்றில்லாவிட்டாலும் மாற்றத்தை உருவாக்க விரும்பும் அனுபவசாலியின் அனுபவங்களை, சமூகத்தில் விழிப்புணர்வை உண்டாக்கவிரும்பும் ஒரு மூத்தகுடிமகனின் வடிகாலை பண்பற்ற ஆனால் சாதாரண-புழக்கத்தில் உள்ள வார்த்தைகளின் பின்னூட்டங்களால் இன்றைக்கு அனுமதிப்பீர்களானால் இவ்வாறே தினந்தோறும் துப்பித்துப்பி பின்னாட்களில் கழிவுகளால் நிரப்பிவிடுவார்கள்.

  இந்த வலைப்பூவின் நேர்மைக்கு உண்டான மாண்பை, உருவாக்கியதோடு நின்றுவிடாமல் காப்பீர்கள் என நம்புகிறேன்.

  நடுநிலையாளர்கள் என்று தம்மை நம்புவோர்கள் இந்தப் பின்னூட்டத்தை வழிமொழிய வேண்டுகிறேன்.

  • sakthy சொல்கிறார்:

   உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். நம் நாட்டில் உள்ள ஒரு பெரிய பிரச்சனை.
   நடு நிலையுடன் உண்மைகளை எடுத்து சொல்லும் போது, வந்து தலையை நுழைப்பது……….
   சாதி,மதம்,அரசியல் கூடவே சினிமா.

   படிப்பவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. உடனே உணர்ச்சி வசப்படுகிறார்கள். கருத்துகளை மறுப்பவர்கள் மாற்றுக் கருத்தை உண்மைகளை நடு நிலையுடன் வைப்பதில்லை. மறுக்கத் தெரிந்த மனம் மாற்றுக் கருத்தை வைக்கப் பழகிக் கொள்வதில்லை.இதை இன்று யாரும் செய்யவும் முன் வருவதில்லை.

   படித்த உடனே மேற்சொன்ன ஏதோ ஒன்றை வைத்து மறுக்க முனைகிறார்கள்.
   காரணம் என்ன? அடிமைத்தனமா? உண்மைகளை ஏற்க மனம் இடம் கொடுப்பதில்லையா? தவறான இன்றைய கல்வித் திட்டம் காரணமாக சிந்திக்க முடியலையா? எது தெரியவில்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்களே,

   நண்பர் todayandme -ன் கருத்துக்களை நூறு சதவீதம் ஏற்கிறேன்.
   ஏற்கெனவே பலமுறை இதே வலைத்தளத்தில் எழுதி இருக்கிறேன் –
   ஜாதி, மத உணர்வுகளை தூண்டும் எந்தவித வாதங்களுக்கும்
   இங்கே இடமில்லை என்று. இருந்தாலும் திடீர் திடீரென்று
   சில சமயங்களில் இத்தகைய ஊடுருவல்கள் இங்கே நிகழ்ந்து விடுகின்றன.

   ஜாதி, மத வித்தியாசங்களை நான் ஏற்பதில்லை,
   இந்த வலைத்தள நண்பர்களும் ஏற்க மாட்டார்கள் என்பதை
   மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கூறி விட்டு, ஏற்பதற்கில்லாத
   பின்னூட்டங்களை விலக்குகிறேன்.
   இந்த வலைத்தளத்தின் தரத்தை உறுதி செய்ய உதவும் நண்பர்கள்
   அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. bandhu சொல்கிறார்:

  நீங்கள் சொல்வது உண்மையில்லை என்றால் எது பொய் என்று ஆதாரம் காட்டவேண்டும். இல்லையேல், அதை சுட்டியாவது காட்ட வேண்டும். வெறுமனே, ஜால்ரா.. பொய் சொல்கிறீர்கள்.. அழகல்ல.. என்பது தனி மனித தாக்குதலே.. கருத்து வேறுபாடு வேறு.. அதே போல, தரம் தாழ்ந்த பின்னூட்டங்களை தயவு செய்து நீக்கி விடுங்கள்..

  என்னைப் பொருத்தவரை, உங்கள் நிலையை தெளிவாக ஏற்கனவே சொல்லிவிட்டீர்கள்.. ஜெ தவறு செய்யவில்லை என்று சொல்லவில்லை. இந்த வழக்கில் நீதி கிடைத்திருக்கிறதா இல்லையா என்று மட்டுமே பார்க்கிறீர்கள்..

  எனக்கும் இதன் பின் மிகப் பெரிய சதி இருக்கிறது என்றே தொன்றுகிறது. மாநிலக் கட்சிகளை ஒழிக்கவே இது ஊதிப் பெரிதாக்கப் படுகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பரே.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 8. today.and.me சொல்கிறார்:

  //உண்ணாவிரதம் இருப்பதும், மண்சோறு தின்பதும்,
  அங்கப்பிரதட்சணம் செய்வதும், யாகம் வளர்ப்பதும்,
  மொட்டை போட்டுக் கொள்வதும், பால்குடம் எடுப்பதும் – இவற்றைப் பார்த்து
  பாஜக தலைமை வயிறு எரிவது ஏன் ?//
  இவையெல்லாம் இந்துத்வாவிற்கே உரிய செயல்கள், இவற்றையெல்லாம் இந்த மதசார்பற்ற அதிமுக விசுவாசிகள் செய்யலாமா? செய்யக்கூடாது. இவற்றால் அதிமுக ஓட்டுவங்கி கூடிவிடும் என்பதைவிட தங்கள் accumulated 6% ஓட்டுகளும் சிதறிவிடும் என்ற பயமாக இருக்கலாம்.

  //356வது பிரிவின் கீழ் தமிழ்நாட்டை ஜனாதிபதி ஆட்சியின் கீழ் ஒரு வருடத்திற்கு கொண்டு வர வேண்டும். அதன் பிறகு தேர்தல் நடத்தினால் போதும்//
  ஜெஜெ, முக, விகா போல பாஜகவும் ஒரு திரைபிரபலத்திற்கு பின் ஒழிந்துகொள்ள நினைக்கிறது. போன தேர்தலில் விகாவை நம்பி ஒன்றும் தேறவில்லை. ரஜினியும் விஜயும் வருவேன் ஆனா வரமாட்டேன் என்கிற மாதிரிதான். இனிமேல் புதிதாக கமலையும் சூர்யாவையும் சோப்புப்போட ஒருவருடமாவது வேண்டாமா சுசுவுக்கு.

  // தேர்தல் களத்தில் நின்று ஜெயிக்க துப்பில்லை.//
  களமாடுதல் என்பது தனிவித்தை. தமிழக பாஜக இப்போதுதான் விளையாட்டைக் கற்றுக்கொண்டிருக்கிறது, எப்போது தியரி முடித்து, பிராக்டிக்கல்ஸ் முடித்து, வைவாவும் முடித்து அதற்குப் பிறகுதான் களமாடுதல். எனவேதான் இந்த கொல்லைப்புற முயற்சி.

  //தமிழ் மண்ணின் துரோகிகள் பாஜக வினர்.. காங்கிரஸ்காரர்கள் பேசாமலே துரோகம் செய்தார்கள்…இவர்கள் பேசிப்பேசி ஏமாற்றிக்கொண்டே துரோகம் செய்கிறார்கள் …மக்களின் அனுமதி இல்லாமலே ஆள ஆசைப்படுகிறீர்களே –
  என்ன செய்திருக்கிறீர்கள் நீங்கள் தமிழ்நாட்டிற்கு…?//
  தமிழ்நாட்டுப் பிரச்சினைகள் குறித்து நீங்கள் போட்டுள்ள பட்டியலை இன்னும் ஒரு மாதம் பொறுத்திருந்து, ஆறுமாத ஆட்சிக்காலத்திற்குப் பின் எழுப்பியிருக்கலாம். பா.ஜ.க. புதிதாக வீட்டுக்கு வந்துள்ள மருமகள் அல்லவா? வீடுபழக அட்லீஸ்ட் ஒரு 6 மாதமாவது வேண்டாமா? 🙂 🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நான் பொறுத்திருக்கத் தயாராகத் தான்
   இருந்தேன். ஆனால், தமிழக பாஜக
   தலைமை போடும் ஆட்டங்கள்
   என்னை எழுது எழுது என்று தூண்டி
   விடுகின்றன. என்ன செய்யட்டும் நண்பரே…!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. எழில் சொல்கிறார்:

  இப்போது நடப்பவை உங்கள் கணிப்பிற்கு மேலும் வலுவூட்டுவதாகவே இருக்கிறது ஐயா.. 😦

 10. Ganpat சொல்கிறார்:

  எங்கள் எல்லார் மனதில் உள்ள கேள்விகளை நீங்கள் மிக அழகாக பதிவிட்டுள்ளீர்கள் கா.மை.ஜி மிக்க நன்றி.
  தமிழிசையையும் சூப்பர் ஸ்டாரையும் நம்பி தமிழகத்தை கைப்பற்றலாம் என மோடி நம்பினால் அவருக்காக வருந்துவதைத்தவிர வேறு வழியில்லை.
  ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் பிரச்சினையின் தீவிரம் இன்னும் அதிகரிக்கிறது.
  ஜெயலலிதாஜி மீண்டும் முதலமைச்சர்க வேண்டுமா வேண்டாமா என்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் மோடி ஜி.நீங்கள் உங்கள் கையில் உள்ள துடப்பத்தை கீழே வைத்துவிட்டு.காவிரி சம்பந்தமான உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு அமல் படுத்த ஆகவேண்டியதை செய்யுங்கள்..

 11. Dr K G Palaniappan சொல்கிறார்:

  Refusing bail even after the prosecution’s no objection is some thing
  unusual. The conviction is not final,then why they deny her right to
  be free till the appeals are decided. May be to make her kneel
  which she doesn’t know and never ever do.

  • today.and.me சொல்கிறார்:

   டாக்டர் கேஜிபி,

   எனக்கென்னவோ, அவர்கள் ஜெஜெ-யின் kneel ஐ வேண்டுவதுமாதிரித் தெரியவில்லை. குஜராத்தின் மாயா கோட்னானி வேண்டுமானால் நமோநம என்று மண்டியிட்டிருப்பார், ஜெ நிலையை நீங்களே சொல்லிவிட்டீர்கள். மேலும் அதை வைத்து அவர்கள் என்ன செய்யமுடியும். அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் Think out of the box மாத்தியோசி style..

   இது ஒரு ஊகம்தான், உண்மையாகவும் முடியலாம்.

   பாஜகவைப் பொறுத்தவரை – தமிழகம்:
   இந்த கைது மற்றும் ஜாமின் மறுப்பினால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக கவர்னர்/ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டுவந்து மாநில அரசின் திட்டங்களை முடக்கி, மத்திய அரசின் திட்டங்களை செலுத்தி, திரைப் பிரபலங்களை முன்னிறுத்தி……. மூச்சுவாங்கிக்கொள்கிறேன். … தேர்தலைக் கொண்டுவந்தால் மக்கள் ஒருவருடத்தில் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்.. மத்தியில் ஏகபோக ஆட்சியமைத்ததுபோல மாநிலத்திலும் அமைக்கலாம் (என்ற ஆசையினால் இருக்கும்).

   பாஜகவைப் பொறுத்தவரை – கர்நாடகா:
   தமிழக கவர்னர் அதற்கு ஒத்துக்கொள்ளாதபட்சத்தில் கட்சி (எந்தக் கட்சியாயிருந்தால் அவர்களுக்கு என்ன) வெறியர்களை விட்டு காவிரிப் பிரச்சினையைக் காரணம் காட்டி வன்முறையைத் தூண்டிவிட்டு இங்கே இருக்கும் கன்னட அங்கே இருக்கும் தமிழ் மக்களிடையே பதட்டத்தை பற்றவைத்து, சிறை வளாகத்திலேயே வன்முறையை அவிழ்த்துவிட்டு ஜெவுக்கு தகுந்த முறையில் பாதுகாப்புத்தர முடியாத கர்நாடகாவில் அங்கே ஆளும் காங்கிரசைக் குறைகூறி ….சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக (முந்தின பாராவை மீண்டும் தொடர்ந்து படிக்கவும்)

   காங்கிரசைப் பொறுத்தவரை பாஜகவின் இந்த திட்டத்தை முறியடித்து 1. கர்நாடகாவில் தங்கள் ஆட்சியை தொடர்ந்து பாதுகாப்பது 2. ஜெவுக்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் வசதிகளுடன் சிறை வாசத்தை அளிப்பது. 3. இதன்மூலம் கூடுதலாக ஜெவிடம் நெருங்கமுடியும், தமிழ்நாட்டில் 2ஜி மற்றும் திமுக மூலம் கெட்ட பெயரை கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாம், அடுத்த தேர்தலில் கூட்டணிக்கு முயலக் கூடும்.

   ஆனால் அதிமுகவினரின் பிரார்த்தனைப் போராட்டங்கள் வேறுமாதிரி இருப்பதால் பாஜகவின் கொ.ப.செ. சுசுவின் கவர்னர் / ஜனாதிபதி ஆட்சி மனு என்னவிதமாக வேலைசெய்யும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
   ———-
   ஆமாம், தெரியாமல்தான் கேட்கிறேன், கவர்னருக்கு வேலையே மாநிலத்தின் ஆட்சியை கவனிப்பதுதானே, இந்த மைனாரிட்டி, உதிரி, லெட்டர்பேட் கட்சிகள் எல்லாம் போய் அவரை இதைக் கொஞ்சம் கவனியுங்கள் என்று விடாமல் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்தால் அவர் என் வேலையை எனக்குப் பார்க்கத் தெரியாதா, நீ வந்து சொல்லித்தான் நான் செய்யவேண்டிய நிலையில் இருக்கிறேனா என்று டென்சன் ஆகி விடமாட்டாரா?

 12. k.Raghavendra சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  கன்னடர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும்
  ஒரு நோக்கத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்கள் :

  காவிரியில், ஜெயலலிதா விஷயத்தில் – –
  அனந்தகுமார்,
  சதானந்த கவுடா,
  எடியூரப்பா
  குன்ஹா,
  சந்திரசேகரா

 13. chandraa சொல்கிறார்:

  there are instances where the karnataka judges had come down heavily on karnataka politicians also.. for example ediurappa janardhana reddy sriramulu renukacharya all were ministers all lost thie minister posts…. janardhana reddy is still in prison he used to sit in a special golden chair in his minister office.. i feel karnataka judges are strict in their work culture. ……

 14. msarfutheen சொல்கிறார்:

  nan ungal karuththai manapoorvamaha yetrukkolgiren.bjp try to come in tamilnadu podakkali vali!

 15. venkat சொல்கிறார்:

  super appu

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.