ஓஹோ ….அடுத்த தமிழக முதல்வர்….. டாக்டர் சுப்ரமணியன் சுவாமியா …?

நேற்றிரவு, டாக்டர் சுப்ரமணியன் சுவாமி
செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்துள்ள
பேட்டியிலிருந்து சில பகுதிகள் –

subramanian-swamy
—————–

“எனக்கு, தமிழக மக்களும், அவர்கள் நலனும்தான்
முக்கியம். தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் விட்டது. இதைப் பார்த்துக் கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது.

நான் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம்
அரசியல் சட்டம் 256-ன் கீழ், தமிழ்நாட்டு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு –
ஒரு நோட்டீஸ் அனுப்பச்சொல்லி இருக்கிறேன்.

திரு பன்னீர்செல்வம் அவரது கடமையை ஒழுங்காகச்
செய்ய வேண்டும் என்றும்,
சட்டம் ஒழுங்கை – ஒழுங்காக நிலைநாட்ட வேண்டும்
என்றும் –

அவர் அரசியல் சாசனப்படியான தன் கடமையை ஒழுங்காக நிறைவேற்றாத பட்சத்தில், அரசியல் சட்டம் 356-ன் கீழ்
தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டி இருக்கும் என்றும்
இந்த நோட்டீஸ் அறிவுருத்தும்….

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தவறினால், தமிழ்நாட்டிற்கு துணை ராணுவத்தை அனுப்ப வேண்டுமென்றும் கூறி இருக்கிறேன்.”

—————-
மிக வேகமாகப் பயணிக்கிறார் டாக்டர் சு.சுவாமி.

சு.சுவாமியின் எதிரியான ஜெ.யை அகற்றியாகி விட்டது.
அடுத்தபடியாக – பாவம் பன்னீர்….. சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி அவரையும் அகற்றுவதில் குறியாக இருக்கிறார் சு.சுவாமி.

தமிழ்நாட்டில் ஒரு வருட காலத்திற்கு ஜனாதிபதி ஆட்சியின் மூலம் மறைமுகமாக பாஜக ஆட்சியை நடத்தி விட்டு, தேர்தலை நடத்த வேண்டும் என்பது சு.சுவாமியின் திட்டம் என்று அவரே வெளிப்படையாகக் கூறி இருக்கிறார்.

ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தயார் என்றும் –
கலைஞர் கருணாநிதி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு கொடுத்து விட்டார்.

இது கலைஞர் கருணாநிதி நேற்று கூறியது –

” சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை கட்டுப்படுத்த
முடியாமல் இருக்குமேயானால், அதைக் கட்டுப்படுத்த
வேண்டியவர்கள், கட்டுப்படுத்துவார்கள்;

இது இன்று காலை திமுக செயற்குழு கூட்டத்தில்,
நிறைவேற்றப்பட்ட தீர்மானம் –

“தமிழகத்தில் வன்முறை சம்பவங்களுக்கு மத்திய அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்”

டாக்டர் ராமதாசும், விஜய்காந்தும் ஏற்கெனவே
ஜனாதிபதி ஆட்சிக்காகத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே – in all probabilities – விரைவில் தமிழ்நாட்டில்
மறைமுக பாஜக ஆட்சியை எதிர்பார்க்கலாம்….!!!

அதன் பின்னர் ……? a million dollar question ….!!!

ரஜினி வெளியிலிருந்தே உதவி செய்யட்டும் -அவரை
கட்சிக்குள் இழுக்க வேண்டாம் என்று பாஜக தலைமையிடம் ஆலோசனை கூறி இருக்கிறார் டாக்டர் சு.சுவாமி.

எனவே ரஜினி பாஜக முதல்வர் இல்லை. அப்புறம் …?

திருமதி தமிழிசையையும்,
திருவாளர் மலையாள தேசத்தையும்,
முன் நிறுத்தவா டாக்டர் சு.சுவாமி இவ்வளவு கஷ்டப்படுவார்….

2015-ல் பாஜகவின் முதல் தமிழக முதல்வராக
டாக்டர் சுப்ரமணியன் சுவாமியை வரவேற்கும் பாக்கியமும் தமிழ் நாட்டிற்கு கிடைக்குமோ ….??!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

29 Responses to ஓஹோ ….அடுத்த தமிழக முதல்வர்….. டாக்டர் சுப்ரமணியன் சுவாமியா …?

 1. M.Mani சொல்கிறார்:

  ஏதோ வயிற்றெரிச்சலில் எழுதியது போல் உள்ளது. இதுவரை சுப்;பிரமணியசாமி செய்தது அரசியல் அல்ல. எந்த தனிமனிதனுக்கும் இல்லாத துணிவுடன் செயல் பட்டுள்ளார். பாராட்டவிட்டாலும் தூற்றாதீர்கள்.

  • k.Raghavendra சொல்கிறார்:

   உலகத்தமிழர்களின் ஒப்பற்ற துரோகி இவர்.
   தமிழக மீனவர்களின் படகுகளை பறித்துக் கொண்ட பாவி இவர்.
   ராஜபக்சேயின் கூலி இவர்.
   சைனா, இலங்கை இரண்டுக்கும் துணை போகிறவர் இவர்.
   இவரைப் போய் பாராட்டுகிறீர்களே,
   நீங்களும் ஒரு தமிழரா ?

  • today.and.me சொல்கிறார்:

   நண்பர் மணி அவர்களே

   // ஏதோ வயிற்றெரிச்சலில் எழுதியது போல் உள்ளது//
   ஏதோ என்று தெளிவில்லாமல் எழுதாமல் என்ன வயிற்றெரிச்சல் என்றும் எழுதிவிட்டீர்கள் என்றால் நலம். கா.மை.ஜிக்கு முதல்வர் பதவி அல்லது உள்துறை அமைச்சரையும், துணை ராணுவத்தையும், ஜனாதிபதியையும் தன் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருக்கும் அதிகாரம் இல்லையே என்பதா? கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் கண்டதையும் எழுதாமல் சுவாமிகளின் சாகசங்களை கொஞ்சம் ஆழ்ந்து படியுங்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் மணி,

   வயிற்றெரிச்சலே தான். அதனால் தான் எழுதி இருக்கிறேன்.

   சு.சுவாமிக்கும் எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது.
   நான் யாரென்றே அவருக்குத் தெரியாது. எனவே இது
   பொது நலத்துக்கான எரிச்சல் தான்……

   என் வயிற்றெரிச்சலுக்கு காரணம் அவரது நடவடிக்கைகளும்
   நடத்தையும் தான். நேற்றிரவு அவர் கொடுத்த பேட்டியை மேலே
   பார்க்கிறீர்கள். அவர் கொடுத்த பேட்டியின் விளைவு (ரீ-ஆக் ஷன் )
   தான் இந்த இடுகை.

   நீங்கள் தமிழ்நாட்டில் தானே வசிக்கிறீர்கள் ?
   நீங்களே மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்….
   அப்படி என்ன இங்கு துணை ராணுவத்தை அழைக்கும்படியும்,
   ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரக்கூடிய அளவிற்கும்
   சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது ….? மத்தியில் ஆட்சி கைவசம்
   இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேச, செய்ய முடியுமா ?

   உங்களுக்கு சுப்ரமணியன் சுவாமி அவர்களின் ஒரு முகம் மட்டும் தான்
   தெரிகிறது.. அவர் வெளிப்படுத்தும் ஊழல் விவகாரங்களைக் கண்டு
   அவர் பெரிய ஹீரோ என்று நினைக்கிறீர்கள். இன்னும் பல நண்பர்கள்
   அப்படித்தான் நினைக்கிறார்கள். அவர் ஒரு பக்கா சுயநலவாதி
   என்பதைப் பலர் உணரவே இல்லை.

   ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்தமான பழைய விவரங்களை
   தேடிக்கொண்டிருந்த போது இந்த ஆசாமியைப்பற்றி எனக்குத் தெரிய வந்தவை ஏராளம். ஏராளம். துரதிருஷ்டவசமாக, சரியான,
   எழுத்துபூர்வமாக வெளிப்படுத்தக்கூடிய ஆதாரங்கள் இல்லாததால்,
   என்னால் அனைத்தையும் எழுத முடியவில்லை. அடிப்படை
   ஆதாரங்கள் உள்ளவற்றை மட்டும் தான் எழுதி இருக்கிறேன்.

   நண்பரே – வயதானவன், வாழ்க்கையில் அடிபட்டவன்,
   அனுபவப்பட்டவன் -சொல்கிறேன் –

   திறந்த மனதுடன் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள
   முயற்சி செய்யுங்கள்.
   நமக்குத் தெரியாத உண்மைகள் உலகில் நிறைய இருக்கின்றன.
   பிடித்தாலும், பிடிக்கா விட்டாலும் உண்மைகள் – உண்மைகள் தானே ..?
   நமக்குப் பிடிக்கா விட்டாலும், உண்மைகளை ஏற்றுக் கொள்ளப்
   பழக வேண்டும்.

   நான் இதுவரை எனக்குத் தெரிந்து இந்த வலைத்தளத்தில் –
   பொய்யான தகவல்களைத் தந்தது இல்லை.
   சுயநலம் கருதி எதையும் எழுதியதும் இல்லை.
   நான் பெரிய கொம்பனில்லை – எல்லாம் தெரிந்தவனுமில்லை.
   ஏதோ எனக்குத் தெரிந்ததை, தெரிய வருவதை –
   மற்ற நண்பர்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
   (சில சமயங்களில் – இடுகைகளில் சுவை கூட்ட
   கொஞ்சம் மெருகு கொடுப்பதும், பூச்சு வேலை செய்வதும் உண்டு தான் )

   ஏற்பதும், மறுப்பதும் – உங்கள் விருப்பம்.
   ஆனால், தயவுசெய்து உள்நோக்கம் கற்பிக்காதீர்கள்.

   இதை தேவையில்லாத ஆலோசனை என்று கருதினால்,
   தயவுசெய்து என்னை மன்னித்து, இதை மறந்து விடுங்கள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. kinarruthavalai சொல்கிறார்:

  இன்னும் என்ன சந்தேகம்? ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன? அய்யகோ இன்றைக்கு நமது நிலைமை அன்றைக்கு இலங்கை தமிழர்களின் நிலைமை போலானதே. அதான், எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைமைதான்.

 3. Rajiv Gandhi சொல்கிறார்:

  ராஜீவ் காந்தி கொலையின் முக்கிய குற்றவாளி சுப்ரமணிய சுவாமி. தமிழர்களுக்கு எதிரானவர். சதிகாரர். இவரையும் பிடித்து ஜெயாவோடு உள்ளே போட வேண்டும்.

 4. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி
  வேறுசில பணிகளில் / செய்திகளின் விமரிசனங்களில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டிருப்பீர்கள். என்றாலும் நான் வேலைப்பளுவைக் கூட்டுவதாக எண்ணவேண்டாம். முதல்வர் ஆகிவிடும் முன்பேயே சுவாமிகளின் சாகசங்களைப் பற்றியும் அவருடைய திறமைகளைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்ள ஆவல். (இடையிடையேயாவது) தொடரைத் தொடர மீண்டு(ம்) வந்த சந்தர்ப்பம் இது. தொடரவேண்டுகிறேன். நன்றி.

  // எனக்கு, தமிழக மக்களும், அவர்கள் நலனும்தான்
  முக்கியம். தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் விட்டது. இதைப் பார்த்துக் கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது.//
  இவ்ளோ நாளாச் சொல்லவேயில்லை. இது எப்போலர்ந்து.

  உள்துறை அமைச்சரையும், துணை ராணுவத்தையும், ஜனாதிபதியையும் தன் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருக்கும் ஒருவர் தமிழகத்துக்கு முதல்வரானால் … மு.க.ஸ்., ரா.அ. , வி.கா., ப.சி. இவங்க கண்டதெல்லாம் என்ன பகல்கனவா?

  //2015-ல் பாஜகவின் முதல் தமிழக முதல்வராக டாக்டர் சுப்ரமணியன் சுவாமியை வரவேற்கும் பாக்கியமும் தமிழ் நாட்டிற்கு கிடைக்குமோ ….??!!!.//
  2016 இல்லை, 2015 தான் என்று உறுதியாகிவிட்டதா?

 5. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  நீங்கள் எவ்வளவுதான் தலைகீழாக நின்று தக்காளிச் சோறு சாப்பிட்டாலும் வாக்கு நாங்கள்தாம் குத்தியாக வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள் அரசியலாளர்களே!

 6. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  நினைத்துப் பார்க்கவே அருவெறுப்பாக இருக்கிறது!!

 7. sakthy சொல்கிறார்:

  பதவி-அரசியல் வெறி-பணம் -அதிகாரம்-ஜெயலலிதா மீதுள்ள வெறுப்பு

  தமிழக அரசியல் தலைவர்கள்-சினிமாக்காரர்களை ஆட்டிப் பிடிக்கும் நிலையில், அவர்கள் பாஜக வின் சூழ்ச்சியில் சிக்கி தங்கள் தலையில் சேற்றை வாரி இறைக்கிறார்கள்.

  முடிவு………
  நிச்சயம் தமிழக கட்சிகளுக்கோ,திராவிடக் கட்சிகளுக்கோ சாதகமாக இருக்கப் போவதில்லை.

  ஏனெனில் மோடி நேற்றைய தினம் – மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சியே ஆட்சி செய்ய வேண்டும்.-

  அதற்காக அவர் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார். மகிந்த ராஜபக்சே போல்- என்று மட்டும் தெரிகிறது.

  தமிழக மக்கள் அனைத்தையும் மறந்து எந்தப் பக்கமும் திரும்பக் கூடியவர்கள்.இது இரண்டாயிர வரலாறு.
  இருப்பினும் இதயம் வலிக்கிறது.

 8. rathnavelnatarajan சொல்கிறார்:

  பகல் கனவு.

 9. candraah சொல்கிறார்:

  recently one of indias top industrialist kumaramangalam birla had attended seminars in u.s chaired by noted economists throughout the world. dr,swami was one of the economists one of the distinguished proffessors who taught the participants ……now people like me wonder whyk.m.ji and his friends are dead against dr.swami…..

  • sakthy சொல்கிறார்:

   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. அதற்காக அவர் சொல்வதை-செய்வதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியுமா/வேண்டுமா?
   கருணாநிதி தமிழில் திறமையுடன் எழுதுபவர். அதற்காக ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு துணை போனதையும்,போலி உண்ணாவிரதத்தையும், செய்த பெரிய ஊழல்களையும் கண்டு கண்களை மூடிக் கொள்வதா?

   இரண்டு வேட்டி சட்டையுடன் திருக்குவளையுடன் சென்னைக்கு வந்தவர் இத்தனை கோடிகளைக் குவித்ததை கண்டும் பேசாமல் இருப்பதா? கதை வசனத்தில் எத்தனை கோடி உழைத்திருக்க முடியும்? அதில் அவரே சொன்னது-பல படங்களுக்கு இலவசமாக கதை வசனம் எழுதியதாக.

   மன்னிக்கவும் சம்பந்தமில்லாத கருத்து தான். ஆனாலும் தவறு செய்தால், அதுவும் மக்கள் மீதான கொடும் செயலைக் கண்டும், அவர் பொருளாதார நிபுணர், பலருக்கு பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் என விட முடியுமா?
   அப்படி பேசாமல் இருந்தால் நம்மைப் போல் சுரணை இல்லாதவர்கள் வேறு யாராக இருக்க முடியும்? தொடர்ந்து தவறு செய்ய நாமே துணை போனவர்கள் ஆவோம்.
   நித்தியானந்தர் இந்துச் சாமியார் என்பதற்காக யாரும் பார்த்திருக்கவில்லையே!
   இவர்களைத் தான் பசுத்தோல் போர்த்த புலி என்கிறார்களா?

 10. chandraa சொல்கிறார்:

  sorry my name was misspelt afew minutes back when i wrote about dr.swami

  • today.and.me சொல்கிறார்:

   ஒவ்வொரு முறை பின்னூட்டமிடும்போதும் பெயரை தட்டச்சு செய்வீர்களா என்ன? அதற்கான தேவை இல்லை நண்பரே. ஒரு முறை செட்டிங்கில் சென்று மாற்றிவிட்டீர்களானால் போதுமே.

 11. Ganpat சொல்கிறார்:

  கனவுகளில் பல வகை உண்டு..இது விழித்துக்கொண்டே காணும் நண்பகல் கனவு.

  கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ .க நம் மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டதையும்,

  இன்னும் பா.ஜ.க அரசு மத்தியில் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை என்பதையும்,

  ஜெயா வழக்கு நடத்தப்பட்ட விதத்தையும் ,பிறகு அவர் நடத்தப்பட்ட விதத்தையும் நடுநிலை வாக்காளர்கள் ரசிக்கவில்லை என்பதையும்,

  இங்கே அம்மாவின் ஈர்ப்பு மோடியின் ஈர்ப்பைவிட அதிகம் என்பதையும்

  வைத்துப்பார்க்கும்போது இந்த அரசை கவிழ்க்க நினைப்பது தற்கொலைக்கு ஒப்பானது.

  முதலில் போய் KD சகோதரர்களை தண்டிக்கும் வழியைப்பாருங்கள் மோடி ஜி!

  அறுபது வருஷமா வசனத்தை கேட்டே வளர்ந்து, அதை நம்பி ஓட்டுப்போட்டு, ஏமாந்து நிற்பவர்கள் தமிழர்கள்.அவர்களிடம் உங்கள் வசனம், குறிப்பாக ஹிந்தி வசனம், எடுபடாது.

  • today.and.me சொல்கிறார்:

   நண்பர் கண்பத்,

   இதழ்க்கடையில் கீற்றுப் புன்னகை தோன்றும்வண்ணம் நம்பிக்கையும் நிச்சயமுமாய் உங்கள் பின்னூட்டம்.

   மோடிஜி தமிழர்களுக்கு நன்மை செய்யத்தான் நினைக்கிறார். என்ன! எல்லா அரசியல்வாதிகளையும்போலவே தன்னுடைய பெயரை தன் கட்சியின் பெயரை முன்னிறுத்திச் செய்யவிழைகிறார், அவ்வளவுதான்.

   🙂 🙂
   நான் மாநிலத்தின் மற்றகட்சிகளுக்குத்தான் கனவோ என்று நினைத்தேன், நீங்கள் அவர்களுக்கும் மத்தியானக் கனவு என்று சொல்லிவிட்டீர்களே.

   //ஹிந்தி வசனம், எடுபடாது// புரியவே செய்யாது, பின் எங்கே எடுபடுவது.

 12. drkgp சொல்கிறார்:

  Mr Ganpat is reflecting the sentiments of the majority . The more anybody try by
  backdoor methods, warranty of failure is assured like the one Mrs Sivaparvathy
  tried in the NTR era.

 13. Sanmath AK சொல்கிறார்:

  SuSa and his party are trying various means…… This can be very well understood by the statements of their TamNad group and central group soon after the judgement……. if you can link the silence of Muka, Nmo’s recent statement in election compaign and SuSa’s movements, these show they are trying hard to materialize the situation here…….. The best way to materialize something for them is to join hands with Jeya……. All other means they try is of no use to them and going to tarnish their image politically…………either J gets out or this case gets dragged, it is very sure next ruling party is also Annathimuka……….

 14. D. Chandramouli சொல்கிறார்:

  Dr. Subramanian Swamy and Ms. Thamizhai are going overboard in demanding President’s rule in TN. BJP can never hope to get a foot-hold in the state if this sort of over-kill continues. Surely, BJP in TN is digging their own grave by such utterances.

 15. bandhu சொல்கிறார்:

  ஒரு நாளைக்கு ஏழு கோடி வீதம் வருடக் கணக்காக இரும்புத் தாது கொள்ளை அடித்த ரெட்டி சகோதரருக்கு ஜாமீன் கொடுப்பதில் கர்நாடக ஹை கோர்ட்டுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் ஜெக்கு கொடுப்பதில் ஆட்சேபணை உண்டு.. மிகப் பெரிய அளவு சதி நடப்பது போலத் தோன்றுகிறது!

 16. k.Raghavendra சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு
  வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்டு, மனுக்கள் தள்ளுபடி
  செய்யப்படும்போது,
  நீதிபதி சொன்ன ஒரு காரணம்:

  “ஜெயலலிதாவிற்கு உடனடியாக ஜாமீன்
  வழங்கவேண்டிய அவசியம் இல்லை!”

  இதற்கான அர்த்தம் உண்மையில் விளங்கவே இல்லை.
  இது நீதிபதியின் தனிப்பட்ட பார்வையா, அல்லது சட்டத்தின் பார்வையா
  என்றும் புரியவில்லை. ….

  நீங்கள் எதாவது விளக்க முடியுமா ….?

 17. sakthy சொல்கிறார்:

  எனக்கு ஒன்று சொல்லத் தோன்றுகிறது. தவறானால் மன்னிக்கவும்.
  காங்கிரஸ் ஆட்சியிலும் தமிழக காங்கிரஸ்காரர்கள் பேச்சை டில்லியில் யாரும் கண்டு கொள்வதில்லை.
  பாஜக தலைமை தமிழக பாஜக வின் பேச்சை கண்டு கொள்வதில்லை என்று தோன்றுகிறது. இல.க. ,பொன்ரா போன்றவர்கள் ஏதோ சொல்கிறார்கள். ஆனால் அவற்றை ஒரு பேச்சாக மதிப்பதில்லை என்றே தோன்றுகிறது.

 18. drkgp சொல்கிறார்:

  When you look at the calibre of the people doing politics in Tamil Nadu, are
  you not feeling sorry for our State?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear Dr.KGP,

   Certainly.

   The pathatic condition of our State /Country, Soceity
   forced me to start this Blog. But our choices are very
   limited.

   Your must have heard –
   “மக்கள் எவ்வழியோ – மன்னனும் அவ்வழியே ”
   இதற்கு தலைகீழாக
   ” மன்னன் எவ்வழியோ – மக்களும் அவ்வழியே ”
   என்பதும் உண்டு…..!!!

   சுயநலமில்லாத, மக்கள் அபிமானத்தைப் பெற்ற
   ஒழுக்கமுள்ள ஒரு தலைவன்
   தமிழ்நாட்டில் உருவெடுக்க வேண்டுவோம்.

   ஆனால் – அது வரை…?
   இருப்பதைக் கொண்டு தானே ஒப்பேற்ற வேண்டும்…?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.