” உடனடியாக ஜாமீன் வழங்கவேண்டிய அவசியம் இல்லை!” – “லாலு பிரசாத் 10 மாதங்கள் சிறையில் இருந்தார் “

 

நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில் எழுதி இருக்கிறார் …

——————————-

முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்டு, மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்போது, நீதிபதி சொன்ன ஒரு காரணம்:

“ஜெயலலிதாவிற்கு உடனடியாக ஜாமீன்
வழங்கவேண்டிய அவசியம் இல்லை!”

இதற்கான அர்த்தம் உண்மையில் விளங்கவே இல்லை.
இது நீதிபதியின் தனிப்பட்ட பார்வையா,
அல்லது சட்டத்தின் பார்வையா
என்றும் புரியவில்லை. ….

நீங்கள் எதாவது விளக்க முடியுமா ….?

———————————-

இதற்கு நான் என்ன பதில் எழுதுவது …?

நீதிபதிகள் கூறுவதைப் பற்றி நாம் எழுதும்போது
மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

காழ்ப்புணர்ச்சி அது இது என்றெல்லாம் தப்பித் தவறிக் கூட
சொல்லி விடக்கூடாது –
சட்டப்படி அது குற்றம்…. தீர்ப்பைக்கூட விமரிசிக்கலாம்…. (அதற்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு… ) ஆனால் தீர்ப்பு கூறிய நீதிபதியை விமரிசிக்கக்கூடாது..

எனவே, நான் இந்த நண்பரின் கோரிக்கையை
ஏற்க இயலாதவனாக இருக்கிறேன். நான் இதைப்பற்றி எல்லாம் எதுவும் கூறத் தயாரில்லை……

நீதிபதிகள் கூறியதைப் பற்றி எதாவது குறை சொன்னால் –
அதைக் கேட்டுக்கொண்டு போய்க்கொண்டே இருக்க அவர்கள் கூட தயாராக இருக்கிறார்கள்….

ஆனால், பிரச்சினை என்னவென்றால் –
திமுக, பாமக, தேமுதிக லாயர்கள் ஒரு பக்கம்…
சு.சுவாமியின் தொண்டரடிப் பொடியார் கூட்டம் ஒரு பக்கம் …
அலம்பல்கள் தாங்க முடியவில்லை…!

யார் என்ன போஸ்டர் ஒட்டுகிறார்கள் –
யார் என்ன தட்டிகள் வைக்கிறார்கள் –
யார் என்ன விமரிசனம் செய்கிறார்கள் –
என்று கண்குத்திப்பாம்பாக அலைகிறார்கள்.

எதற்கு என்று கேட்கிறீர்களா …?
– உடனே படம் பிடித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
போடத்தான்…..!!! ஏற்கெனவே ஏகப்பட்ட வழக்குகள்
சென்னை உயர்நீதி மன்றத்தில் காத்திருக்கின்றன.

என்னிடம் வழக்குகளை எதிர்நோக்க –
காசு, பணம் எல்லாம் இல்லை…..
மாட்டினால், எவ்வளவு நாட்கள் ஆனாலும்
உள்ளேயே இருக்க வேண்டியது தான்….

எதாவது கட்சியில் இருந்தாலாவது யாராவது வருவார்கள்..
எனக்கு யார் வருவார்கள்…?

இந்த வயதிலும், உடல்நிலையிலும்
(ஏற்கெனவே ஒரு ‘எச்சரிக்கை மணி’ அடித்தாகி விட்டது)
‘உள்ளே’ போனால்,
திரும்ப ‘வெளியே’ வர மாட்டேன்…..

எனவே மாட்டேன் …..மாட்டவே மாட்டேன்…
நிச்சயமாக நான் அப்படியெல்லாம்
எதுவும் எழுத மாட்டேன்…!!!

——————————————–

என் கண்ணில் பட்ட ஒரு விஷயம் –
நம் வலைத்தள நண்பர்களுக்காக
ஒரு செய்தியாக மட்டுமே தருகிறேன்.

————–
கர்னாடகா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசேகரா அவர்கள் – ஜெயலலிதா அவர்களின் “ஜாமீன்” வழக்கில்
கூறியது ( 08/10/2014 தேதியிட்ட தினமலர் செய்தியின் படி )
( http://www.dinamalar.com/news_detail.asp?id=1086784 )

———————————————-
“லாலு பிரசாத் யாதவ் பற்றி, இங்கே குறிப்பிடப்பட்டது.
அவர், 10 மாதங்கள் சிறையில் இருந்த பின், உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றார் என்பதை மறந்து விடக்கூடாது.”
———————————————-

உண்மையில் தண்டனைக் கைதியாக
திரு.லாலு பிரசாத் யாதவ் அவர்கள்
ஜார்கண்டில், ராஞ்சி சிறையில் இருந்த காலம்
குறித்த தகவல் கீழே –

Lalu Prasad granted bail by SC in fodder scam case
PTI | Dec 13, 2013, 11.39AM IST

(http://timesofindia.indiatimes.com/india/Lalu-Prasad-granted-bail-by-SC-in-fodder-scam-case/articleshow/27282742.cms )

5 வருடச் சிறை தண்டனை விதிக்கப்பட்டு,
லாலு பிரசாத் அவர்கள் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டது செப்டம்பர் 30, 2013 அன்று.

உச்சநீதிமன்றம் லாலுவிற்கு ஜாமீன்
கொடுத்தது – டிசம்பர் 13, 2013 அன்று.

செப்டம்பர் 30-க்கும் டிசம்பர்-13-க்கும்
இடைப்பட்ட காலம் சுமார்
இரண்டரை மாதங்கள் மட்டுமே என்று
நான் நினைக்கிறேன்….

நீங்களும் அப்படித்தானே நினைக்கிறீர்கள்….?

—————————————————

பின் குறிப்பு –

தொலைக்காட்சியில் பார்த்தேன்.
திரு.இல.கணேசனார் வேறு ஆஸ்திரேலியாவிலிருந்து
ஜம்மென்று திரும்பி வந்து தெம்பாக பயமுறுத்துகிறார்.
ம்ம்ம். எல்லாம் காலம்…!!!
யார் தான் பயமுறுத்துவது என்றே வகை தொகை
இல்லாமல் போய் விட்டது …!!!

இன்னும் ஜனாதிபதி ஆட்சி – மன்னிக்கவும் –
சு.சுவாமி ஆட்சி வேறு வந்து விட்டால் –
இவர்கள் என்னவெல்லாம் பேசுவார்களோ….!
 

இந்த ‘விமரிசனம்’ வலைத்தள நண்பர்கள்
பயங்கரமான புத்திசாலிகள். நான் சொல்லாமலே
பல விஷயங்களைப் புரிந்து கொள்வார்கள்…

ஆனாலும் ….
வழக்கமாக பின்னூட்டம் போடும் நண்பர்களால்
இதற்கு மட்டும் பின்னூட்டம் போடாமல் இருக்க
முடியுமா….? அல்லது நான் தான் அவர்களை போடாதீர்கள் என்று சொல்ல முடியுமா …?

போடுங்கள் …. ஆனால் என் நிலையை
கவனத்தில் கொண்டு, எந்தவித அவமதிப்புக்கும்
இடம் கொடுக்காமல் பின்னூட்டம் போடுமாறு,
நண்பர்களை வேண்டி, வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

30 Responses to ” உடனடியாக ஜாமீன் வழங்கவேண்டிய அவசியம் இல்லை!” – “லாலு பிரசாத் 10 மாதங்கள் சிறையில் இருந்தார் “

 1. கோபாலன் சொல்கிறார்:

  ஐயா,

  நீதிபதிகளுக்கு முன் தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் ஜாமீன் கேட்கிறேன் என்கிறார்.

  நீதிபதி கூறுவது, சிறையிலேயே எல்லா மருத்துவ வசதிகளும் செய்து தரப்படுகின்றனவே, பின்னால் எதற்கு ஜாமீன் வழங்கவேண்டும்.

  நான் தாழ்மையுடன் கேட்பது, தொடர்ந்து 5 மணி நேரம் இருக்கையில் உட்கார முடியாதவர் ஜாமீன் கேட்பது அவர் மருத்துவ அடிப்படையில் தரமற்றவர் என்று நிரூபித்துவிட்டது. ஒரு பியூன் வேலைக்குக்கூட மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டும் என்று கேட்கும் சமூகத்தில் இவரால் முதல்வர் பணியைச் செவ்வனே செய்யமுடியும் என்று நம்புகிறீர்களா.

  மறுபடியும், அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படுகிறது என்ற அறிவிப்பு வெளிவருவதில் அரசின் செயல்பாடு தெரிகிறது. அணையிலிருந்து நீர் திறந்துவிடும்படி முதல்வர் ….. கூறினார் எனும் அறிவிப்பு முதல்வர் அரசுக்கும் அப்பாற்பட்டவர் என்று மக்களை நம்பவைக்கும் செயல் என்று தெரிகிறதா. (123, 37 பற்றிப் பேசுபவர்கள் கவனத்திற்கு)

  இறுதியில், அம்மா என்கிற வீடுகளில் கேட்கப்படும் புனிதமான தமிழ்ச்சொல் இனி தெருக்க்களில் கேட்கப்படாது என்பதை நினைத்து மகிழ்கிறேன்.

  கோபாலன்

 2. k.Raghavendra சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  உங்கள் “நிலை”யை கவனத்தில் கொண்டு எழுதுகிறேன்.
  என்னுடைய கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது. மிக்க நன்றி. அண்மைக்காலங்களில் நீங்கள் எழுதியவற்றுள்
  மிகச்சிறந்த கட்டுரை இது என்று சொல்லத் தோன்றுகிறது.
  கட்சியில் இருந்தால் தானா ? நீங்கள் கவலையே படாதீர்கள்
  நாங்கள் இருக்கிறோம் உங்கள் கூட. ஒரு குரல் கொடுங்கள்,
  என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். வேண்டுமானால்
  உங்கள் தொலைபேசி எண்ணை வலைத்தளத்தில் போடுங்கள்.
  குறைந்த பட்சம் நான் வருகிறன் உடனடியாக.
  நன்றி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ராகவேந்திரா,

   உங்கள் அன்புக்கும், கரிசனத்திற்கும்
   மிக்க நன்றி.

   இந்த ‘விமரிசனம்’ வலைத்தளத்தின் மூலம்
   அற்புதமான பல நண்பர்கள் எனக்கு
   கிடைத்திருக்கிறீர்கள். நாம் யாரும்
   ஒருவரை ஒருவர் நேரில் பார்த்ததில்லையே
   தவிர, சமுதாய நலம், பொது நியாயம், நேர்மை
   தமிழகத்தின், இந்தியாவின் – முன்னேற்றம்
   ஆகிய விஷயங்களில் நமக்கு இருக்கும்
   அக்கறையை உறுதிப்படுத்துவதன் மூலம்
   நாம் அனைவரும் மிகவும் நெருங்கி இருக்கிறோம்.

   இந்த வலைத்தள செயல்பாட்டின் காரணமாக
   எனக்கு எதாவது பிரச்சினை ஏற்படுமானால்,
   என் முகத்தையே பார்த்திராத நீங்கள் தான்
   எனக்குத் துணையாக இருப்பீர்கள் என்பதையும்
   நான் உணர்கிறேன்.

   அத்தகைய பிரச்சினைகள் எதுவும் இப்போதைக்கு
   வந்து விடாது என்கிற நம்பிக்கையுடன்
   தொடர்வோம். தொடர்ந்து நடுநிலையில் இருப்போம்.
   நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. கோபாலன் சொல்கிறார்:

  ஐயா,

  சில காலம் முன் வரை என் மனதிற்கு சரியென்று பட்டதை நகைச்சுவையுடன் தமிழ்மணத்தின் வலைப்பதிவுகளில் வெளியிட்டு வந்தேன். பிறகு, என்ன காரணத்தினாலோ எனது நகைச்சுவை கலந்த எண்ணங்களை ஏற்று வெளியிட எந்த வலைப்பதிவாளரும் தயாராக இல்லை என்று தெரிந்தவுடன் அமைதி காத்தேன்.

  எனது வெளிப்படையான எண்ணங்களை வெளிப்படுத்த, தனக்கு சாதகம் பாதகம் என்று சிந்திக்காமல், தங்கள் வலைப்பதிவின் மூலம் அனுமதித்த தங்களுக்கு மிக்க மிக்க நன்றி.

  கோபாலன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் கோபாலன்,

   உங்கள் பின்னூட்டத்தில் உங்களுக்கு
   ஜெயலலிதா அவர்களின் மீது உங்களுக்கு உள்ள
   வெறுப்புணர்வு வெளிப்படுகிறது –
   சரி உங்கள் வெறுப்பை வெளிப்படுத்தி விட்டீர்கள்.

   ஆனால், இந்த இடுகைக்கு உங்கள் பின்னூட்டம்
   எந்த அளவு பொருத்தமாக இருக்கிறது என்பதையும்
   கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்.

   நல்ல, பயனுள்ள, கருத்துக்களை முன்வைத்து
   நடத்தப்படும் விவாதங்களை நான் வரவேற்கிறேன்.
   என்னைப் பொருத்த வரையில்,
   கருத்து வேறுபாடு ஒரு பிரச்சினையே இல்லை.
   ஆனால், அதை சொல்ல வேண்டிய விதத்தில்,
   நாகரிகமாக, பொருத்தமான காரணங்களுடன்
   எடுத்துச் சொல்லி விவாதங்களில் ஈடுபட வேண்டும்.
   இங்கு வரும் நண்பர்கள் எல்லாரும் அப்படித்தான்…

   அத்தகைய அணுகுமுறைக்கு இந்த ‘விமரிசனம்’
   தளத்தில் எப்போதும் வரவேற்பு இருக்கும்.
   ஒருக்கணம் நீங்களே, உங்கள் பின்னூட்டத்தை
   இங்கு இடப்படும் மற்ற பின்னூட்டங்களுடன்
   ஒப்பிட்டுப் பாருங்கள் – உங்களுக்கே புரியும்.

   நல்ல அணுகுமுறையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
   உங்களை இந்த வலைத்தளம் எப்போதும் வரவேற்கும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. today.and.me சொல்கிறார்:

  தமிழர்கள் தமிழ் நாளிதழ்கள் மட்டுமல்லாது, பிற மொழிகளிலும் (ஆங்கிலம், கன்னடம், இந்தி என்று சொல்லிவிட்டால் மொழிப்பிரச்சனையை இழுத்துவிட்டேன் என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள்) படிக்கவேண்டும். நீதிபதி என்ன மொழியில் என்ன பொருளில் சொல்லியிருக்கிறார் என்று சரியாக புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் மீடியாக்களில் உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் பரபரப்பாக இருக்கவேண்டும் என்று எக்குத்தப்பாக மொழிபெயர்த்துவிட வாய்ப்புண்டு – ஒருவேளை அவர்களுக்கே அவ்வளவுதான் தெரியுமோ என்னவோ? இல்லை, தமிழ்மக்களாகிய நாம் என்ன சொன்னாலும் நம்பிவிடுவோம் என்று நினைப்பவர்களாக இருக்கலாம் (உண்மையும் அதுதானே, வேறு மொழி தெரிவதில்லையே 90% மக்களுக்கு). ஒருவேளை பெருநகரங்களில் மட்டும் மேலும் இரு தொடர்புமொழிகளை இளையதலைமுறையினர் படித்திருக்கலாம். ஆனால் நான்கைந்து பெருநகரங்கள் மட்டுமே தமிழ்நாடு என்று ஆகிவிடுமா? ஒவ்வொரு மீடியாவும் ஒவ்வொரு மாதிரி சொல்லுவதிலிருந்தே இதைப் புரிந்துகொள்ள முடியும்.

  கண்ணால் காண்பதுவும் பொய், காதால் கேட்பதுவும் பொய், நாளிதழ்களில் படிப்பதுவும் பொய். தீரவிசாரித்து அறிவதே மெய். கூடுமானால் நம்மை பாதிக்கும் ஒவ்வொரு செய்தியையும் அதன் அடித்தளத்திற்குச் சென்று ஆய்ந்து அறிந்தால் அதன் உண்மைத்தன்மையை ஒருவேளை அறியலாம்.

  தினமலர் செய்தியைப் பார்த்தால்,
  கணக்கில் நான் கொஞ்சம் வீக். இருந்தாலும், நாட்டுநடப்பு கொஞ்சூண்டு தெரிவதால் செப்டம்பர் 30-க்கும் டிசம்பர்-13-க்கும்
  இடைப்பட்ட காலம் ஏறக்குறைய பத்து மாதங்கள்தான் (என்ன மைனஸ் ஏழரை மாதங்கள்தான் ஜென்டில்மென்) என்று உறுதியாகக் கூறுகிறேன் மை லார்ட்.

  ……………………
  சட்டம், தீர்ப்பு, நீதிமன்றம், நீதிபதி, நீதி இவற்றைப் பற்றியெல்லாம் பொதுமக்களாகிய நாம் கருத்து ஏதாவது இருந்தால் நமக்குள் (தனக்குத்தானே-பைத்தியம் போல என்று சொல்லலாமா ) நினைத்துக்கொள்ளலாம். பொதுவில் சொல்லக்கூடாது. ஆனால் திரு ராம்ஜெத்மலானி ஜெ தீர்ப்பு வந்தபோது தீர்ப்பைப்பற்றியும் நீதிபதியைப் பற்றியும் ஏதோ கருத்துச் சொன்னாரே. பின்னர் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் சுவாமி கூட நீதிபதியின் பெயரைச் சொல்லி என்னை ஒருவேளை எதிர்பார்க்கலாம் என்று இங்கு வந்து காத்திருக்கிறேன் என்று கருத்துச்சொன்னாரே. அதேபோல ஆசார்யா கூட ஏதோ கருத்துக்கணிப்புச் சொன்னமாதிரி இருந்ததே. ஒருவேளை சட்ட நிபுணர்கள் மட்டும் சொல்லலாம் போலிருக்கிறது.
  …………………..

  இந்த பின்னூட்டத்தின்மூலம் ஏதும் பிரச்சினை வராது என்றுதான் நினைக்கிறேன். இருந்தாலும் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. இப்படி பயமுறுத்துகிறீர்களே கா.மை.ஜி. 🙂 பேசாமல் மௌனம் சம்மதம் என்று இருந்துவிடலாமா?
  ……………………..
  //ஆனால், பிரச்சினை என்னவென்றால் –
  திமுக, பாமக, தேமுதிக லாயர்கள் ஒரு பக்கம்…சு.சுவாமியின் தொண்டரடிப் பொடியார் கூட்டம் ஒரு பக்கம் …அலம்பல்கள் தாங்க முடியவில்லை…! யார் என்ன போஸ்டர் ஒட்டுகிறார்கள் –
  யார் என்ன தட்டிகள் வைக்கிறார்கள் – யார் என்ன விமரிசனம் செய்கிறார்கள் – என்று கண்குத்திப்பாம்பாக அலைகிறார்கள்.//

  இப்பவே எமர்ஜென்சி மாதிரி கண்ணைக் கட்டுதே, மிச்ச நாளெல்லாம் எப்புடிப் போகப்போகுதோ?

 5. சரவணகுமார் சொல்கிறார்:

  10 வாரங்கள் என்பதை 10 மாதங்கள் என தவறாக குறிப்பிட்டிருக்கலாம் என கருதுகிறேன்.

 6. visujjm சொல்கிறார்:

  வயதும் மனதும் பக்குவப்படவில்லை இருப்பினும் ஒரு பின்னூட்டம் நான் போட வேண்டும் ஏனெனில் உங்களுள் மிக மிக வித்தியாசமானவன்

  (வறுமை+வாழ்க்கைத்தரம்+வேலையில்லா பரதேசி)

  நான் மட்டும் தான் … மாறுமா உருமாறுமா ஒன்றும் புரியவில்லை கலியுகம் மிக மோசம் …

  அஹம் பிரம்மாஸ்மம்…

  • today.and.me சொல்கிறார்:

   //இருப்பினும் ஒரு பின்னூட்டம் நான் போட வேண்டும்// போட்டே ஆக வேண்டும் என்று யாரும் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை என நினைக்கிறேன். ஏன் நீங்களாகவே அப்படி நினைத்துக்கொள்கிறீர்கள்.

   ஆனால் இந்தப் பின்னூட்டத்தினால் என்னை கொஞ்சம் சிந்திக்கத் தூண்டியதற்கு நன்றி.

   //உங்களுள் மிக மிக வித்தியாசமானவன்//
   ஐந்துவிரல்களும் ஒரேமாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரும் (ஒவ்வொரு) தனித்தனி மாதிரித் தான். எனவே தாழ்வுணர்வை விட்டொழியுங்கள். மற்றவர் உங்களைக் கண்டு இரக்கம் கொள்ளவேண்டும்-அதனால் நான் மற்றவர்களால் கவனிக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தை நீக்குங்கள். உங்களுக்கென்று தனியாக உள்ள நல்லகுணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். நிச்சயமாக வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வரும்போது உண்மையாக உங்கள் உழைப்பை 100 சதம் அதில் போடுங்கள். வெற்றி உங்களுடையதாகும். அந்த வெற்றியின்போது நான் பெரியவன் என்கிற உயர்வுணர்வை வரவிடாமல் உங்களை வேலியிட்டுக்கொள்ளுங்கள். எப்பொழுதும் உயர்ந்தே இருப்பீர்கள்

 7. கோபாலன் சொல்கிறார்:

  ஐயா,

  //சமுதாய நலம், பொது நியாயம், நேர்மை
  தமிழகத்தின், இந்தியாவின் – முன்னேற்றம்
  ஆகிய விஷயங்களில் நமக்கு இருக்கும்
  அக்கறையை உறுதிப்படுத்துவதன் மூலம்
  நாம் அனைவரும் மிகவும் நெருங்கி இருக்கிறோம்//

  நான் எழுதிய கடைசிப் பகுதியைக் கட்டாயம் தவிர்த்திருக்க வேண்டும் என்று இப்போது உணருகிறேன். (அதற்கான காரணம் முன்னால் கூறிய ஒரு பதிவில் உள்ளது)..

  உங்கள் மனதைப் புண்படுத்தியதற்கு மன்னிப்பு கோறுகிறேன்.

  கோபாலன்

 8. எழில் சொல்கிறார்:

  ஐயா,
  நண்பர் ஒருவர் என்னிடம் கேட்ட ஐயம். குழம்பி போய் விட்டேன். உங்களுக்கு இருக்கும் சட்ட அறிவும், அனுபவ அறிவும் ஒரு வேளை இந்த ஐயத்தை தீர்க்க உதவலாம். முடிந்தால் பதில் எழுதுங்கள்.

  ஜெ மீதான வழக்கின் தீர்ப்பு செப். 27 ஆம் தேதி முடிவு பெற்று தீர்ப்பு சொல்லியாகிவிட்டது. எனவே வழக்கு ‘முடிந்து’ தீர்ப்பு வந்து விட்டதால் அவர் தண்டனை கைதி.

  நான் அறிந்தவரை ஒருவர் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை தான் பிணையில் (ஜாமீன்) வரமுடியும். வழக்கு முடிந்து தண்டனை கைதி ஆகிவிட்டதால் இனி பரோலில் தானே வர முடியும். இப்படியிருக்கையில் எப்படி அவர் பிணைக்கு மேல் முறையீடு செய்யலாம்? ராம் ஜெத்மலானிக்கு தெரிந்து எனக்கு தெரியாமல் இருப்பது என்ன?

  ஒரு வேளை இந்த தீர்ப்பு குறித்து மேன் முறையீடு செய்து அது ஏற்று கொள்ள பட்டால் அப்போது இந்த வழக்கு ‘முடிந்த’ வழக்கில் இருந்து ‘நிலுவையில்’ உள்ள வழக்காக மாற்றம் அடையும். அப்போது வேண்டுமானால் பிணை கோரி முறை இடலாம்; பிணையில் வெளி வரலாம். அதற்க்கு முன் பிணையில் வெளி வர ஒரு தண்டனை கைதியால் எப்படி முடியும்? அவரின் தண்டனை குறித்த மேன் முறையீடு இந்த மாத இறுதி வாரத்தில் கோர்ட் பரிசீலனைக்கு வரலாம் என்று செய்திகள் கூறுகின்றன. அது வரை எப்படி அவர் பிணையில் வர முடியும்? பரோலில் தானே வரலாம்??

  • sakthy சொல்கிறார்:

   ஜெயலலிதாவின் வழக்கும் தீர்ப்பும் விசேட நீதிமன்றின் முன் நடந்தது. இந்தியக் குடிமகன் ஒருவருக்கு இறுதி வரை மேன்முறையீடு செய்யும் உரிமை உண்டு. அவர் தனது மேன்முறையீட்டை கொடுத்துள்ள நிலையில், அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட நிலையில்,அவர் ஜாமீன் பெற விண்ணப்பிக்க முடியும். அது விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில்,விசாரணை தொடங்கா விட்டாலும் கூட விண்ணப்பிக்க முடியும்.
   இங்கே பரோல் என்பதற்கு இடமில்லை. ஏனெனில் தீர்ப்பே தவறு என மேன்முறையீடு செய்யப்படுகிறது.
   பரோல் என்பது மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு அல்லது இனி மேன்முறையீட்டுக்கு வழி இல்லை, தீர்ப்பு இறுதியான நிலையில், விசேட சில காரணங்களுக்காக சில நாட்களுக்கு வெளியே செல்ல விண்ணப்பிக்கப்படுகிறது.

  • today.and.me சொல்கிறார்:

   நண்பரே,
   இந்தக் கேள்வியை நீங்கள் கூகுளில் தேடியிருந்தாலே பதில் வினாடிநேரத்தில் கிடைத்திருக்கும். இங்கு கேட்டிருப்பது எதற்கோ? என்றாலும், உங்கள் கேள்விக்கு பதில் ஹிந்து எடுகேஷன் ப்ளஸ்-ல் இருக்கிறது. சொடுக்கித் தெரிந்துகொள்ளவும்.

   http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-educationplus/what-is-the-difference-between-bail-and-parole/article1441439.ece

   • எழில் சொல்கிறார்:

    ஆழ்ந்த விளக்கத்துக்கு நன்றி நண்பர்களே! today.and.me, நான் இங்கு விளக்கம் கேட்டமைக்கு காரணம் நிச்சயம் தகுந்த பதில் கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பே தவிர வேறு ஏதும் இல்லை.

 9. chandraa சொல்கிறார்:

  km ji may i tell you that your reference about dr.subramanya swamys followers as THONDARADI…. has hurt many. the supreme court rercently had given instructions to cbi counsel shri k.k venugopal to take note of dr.swamys contentions in the aircel max case. such is his credibility in supreme court…..his latest lecture class in u.s where our top industrialists like birla jindal hadparticipated shows the class of dr.swami. well we have been trained to appreciate anna karuna jeya vasan vaiko v.kanth..thiruma ramdoss only..

  • எழில் சொல்கிறார்:

   I don’t see anything wrong with the word தொண்டரடிப் பொடியார். It is a pure Tamil word and perfectly fits the bill of ‘followers’ in Indian Politicians.. I guess it all boils down to the Tamil knowledge of perceiver. In the flip side if you are just a ‘follower’ of Swamy in all sense of the word ‘follower’ then perhaps what Kavirimainthan Sir said doesn’t fit you. So why whine?!

  • sakthy சொல்கிறார்:

   சுவாமிக்கு இருந்த திறமை தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. அவர் அங்கே படித்தது,அப்போதிருந்து-(இப்போது போல்)- அரசியல் செல்வாக்கு, சந்திரசேகர் சிங்க்,நரசிம்ம ராவ் காலத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட பதவிகள் காரணமாக அவரை தெரிந்திருப்பது தான் காரணம் என்று சொல்லலாம்.
   சினிமாவில் நடிக்க பாட்டு எழுத சிறந்தவர்கள் யாருமே இல்லையா? வெளியே வராத சிறந்த பல கவிஞர்கள் இருக்கிறார்கள்.இருந்தாலும் வைரமுத்து, போன்றோர் ஏன் இன்னமும் எழுத அழைக்கப்படுகிறார்கள்? உலகம் கண்டு கொண்டது சிலரை-பலரை இனம் காணவில்லை.

   அதனால் ஒருவருக்கே பட்டங்களும், பதவிகளும்,அழைப்புகளும் தொடருகின்றன.

  • today.and.me சொல்கிறார்:

   தொண்டர் என்றால் அடியவர் என்று பொருள். சிவத்தொண்டர் என்றால் சிவனுக்குத்தொண்டு செய்பவர்.

   தொண்டரடியார் என்றால் தொண்டருக்குத் தொண்டர்.

   சிவத்தொண்டரடியார் என்றால் சிவனுக்குத் தொண்டுசெய்பவர்களுக்குத் தொண்டு செய்பவர்.

   இதுதான் தொன்றுதொட்டு தமிழில் வழங்கும் சொல்லும் பொருளும்.

   வருந்துவதற்கு இதில் என்ன இருக்கிறது எனப் புரியவில்லை, உண்மை என்றால் மகிழத்தக்கதுதானே. உண்மையில் தொண்டராக இருப்பதைவிட தொண்டரடியாராக பக்தர்கள் இருப்பதையே கடவுளர்கள் மிகவும் விரும்புகிறார்கள் என பக்தி மார்க்கங்கள் கூறுகின்றன. 🙂

 10. sakthy சொல்கிறார்:

  contempt of court இருவகைப்படுகிறது. Civil contempt,criminal contempt. இந்த அவமதிப்பு நீதிபதியின் பெயரை வைத்து, நீதிமன்றத் தீர்ப்பை வைத்து என வேறுபடுகிறது.
  தீர்ப்பை விமர்சிப்பது தவறு என்பதற்குக் காரணம், தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய வழி இருக்கும் போது விமர்சிப்பது அவமதிப்பு என்கிறார்கள்.
  நீதிபதி மேல் குற்றம் சொல்வது,விமர்சிப்பது அவமதிப்பு ஆவது, அவர் தனிப்பட்ட மனிதராக நீதிமன்றில் பணியாற்றவில்லை என்பதாகும்.

  எனவே எச்சரிக்கையுடன் எழுதுவது சிறந்தது தான். அவமதிப்பில் சிலர் தண்டனை பெற்றிருக்கிறார்கள்.பலர் விடுதலை பெற்றிருக்கிறார்கள்.

  ஆனால் மந்திரிகள் தீர்ப்பு பற்றி அறிக்கைகள் விடும் போது……………..
  தீர்ப்பு பற்றிய மந்திரிகளின் அறிக்கைகளுக்கு, இந்த வருட இறுதியில் அப்போதய தலைமை நீதிபதி சதாசிவம் முன் வந்த வழக்கில் ………
  Chief Justice Sathasivam : “We agree that political leaders should be careful in making statements. These are all unwarranted comments. We agree with the sentiments expressed by you. Persons occupying high positions must realise their responsibility while making statements. We have conveyed our feelings and displeasure. Beyond this we can’t do anything.”

  Justice Gogoi added: “We agree some of the statements are not in good taste. They are holding high posts and they must have responsibility. They must be cautious in making statements.” Minister Chidambaram’s statement was treated as partly acceptable.

  இதை நீதிபதிகள் சுட்டிக் காட்டி பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அது பற்றி கவலை தெரிவித்திருந்தனர்.
  அதே போல் நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்பு அறிவுறுத்தல்களை காவல் துறை ,அரச அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என உயர் நீதிமன்றம் கண்டித்திருந்தது.
  பதவி அவர்களைக் காப்பாற்றியது. நீதிமன்றங்களில் சிலருக்கு அவமதிப்பிற்கு தண்டனையும்,சிலருக்கு எச்சரிக்கையும் கடந்த காலங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.
  …………..
  ஊழல் லஞ்சம் செய்பவர்களை விட்டு விட்டு,பசிக்கு வடை திருடிய சிறுவனை அடித்து நொறுக்கும் காவல்துறை போல்………….
  சாதாரண ஏழை அப்பாவிகள் உண்மையானவர்கள் அனேகமாக சுலபமாக மாட்டிக் கொண்டு சட்டத்தின் முன் கொண்டு செல்லப்படுகிறார்கள்.

 11. தமிழ்மலர் சொல்கிறார்:

  திரு. காவிரிமைந்தன்

  எளிமையான கேள்விக்கு ஏன் பதில் சொல்ல தயங்கி இருக்கிறீர்கள்? செயலலிதா கைதில் நீதிமன்றத்தின் அதிகார அத்துமீரல் குறித்து தொடர்ந்து எனது http://tamilmalarnews.blogspot.in வலைபதிவில் எழுதி வருகிறேன்.

  என்னிடம் பலரும் கேட்ட கேள்வி இது தான். லாலுபிரசாத் 10 மாதங்கள் சிறையில் இருந்தாரே என்று.

  இதற்கான ஒரே பதில்: 10 மாதங்கள் கடந்து சாமீன் வழங்குவதற்கும் உடனே சாமீன் வழங்குவதற்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வியை முன் வைத்தேன். இதுவரை யாரிடம் இருந்தும் பதில் இல்லை.

  அடுத்த கேள்வி : செயலலிதா 18 ஆண்டுகள் வழக்குக்கு வாய்தா வாங்கினரே என்பது. இதற்கான பதில் : செயலலிதா 18 ஆண்டுகள் வழக்கை இழுத்தடித்தார் என்று வாய்கிழிய பேசுகிறோம். இந்த 18 வருடத்தில் நீதிமன்றத்தின் விடுமுறை நாட்கள் எத்தனை என கணக்கிட்டு சொல்ல முடியுமா? அப்படி பார்த்தால் செயலலிதாவை விட நீதிமன்றம் தான் அதிக வாய்தாக்கள் வாங்கி இருக்கும்.

  நீதிமன்றங்கள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அப்போது தான் அது தூய்மைப்படுத்தப்படும். இந்திய அரசியல் சாசணத்திலேயே பல மாற்றங்கள் கொண்டுவந்து விட்வோம். ஆனால் நீதிமன்றத்தில் மட்டும் 3 கோடி வழக்ககளை தேக்கி பெருமைப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

  நீதிபதிகளை புகழ்ந்து எழுத எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டவும் இருக்கிறது.

  நன்றி.

  • today.and.me சொல்கிறார்:

   அன்பு நண்ப தமிழ்மலர்,

   செரிமான சக்தி குறையக் குறைய சாப்பிடும் சாப்பாட்டின் அளவும் சத்தும் சற்றுக் குறைவாக இருந்தால்தான் உடம்புக்கு ஆரோக்கியம். ஆனால் இளந்தாரிகள் கல்லைத் தின்றாலும் செரித்துவிடுவார்கள் என்பார்கள் ஊரில்.

   உங்கள் அறிவும் வேகமும் நன்று. ஆனால் மிகவேகம் மிக நன்று. வேகத்தோடு விவேகமும் வேண்டும் என்பதை உங்கள் வலைப்பதிவுகளே நன்கு வெளிப்படுத்துகின்றன. விவேகத்தையும் துணைக்கழைத்துக்கொள்ளுங்கள்.

   கா.மை. அவர்கள் மூத்த குடிமகன் என நினைக்கிறேன்.

   நீங்களோ இளைய பாரதத்தினாய் வா வா வா என்று கவிஞன் அழைத்த இளைய ரத்தம். துடிப்புடன் பாயுங்கள். புதிய பாரதத்தை செதுக்குங்கள். வாழ்த்துக்கள்.

 12. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  அனைத்து நண்பர்களுக்கும் சேர்த்து,

  நான் கொடுத்து வைத்தவன் –
  இந்த வலைத்தளம் கொடுத்து வைத்த தளம்.

  இங்கு பின்னூட்டங்களில் ஒவ்வொருவரும்
  கொடுக்கும் விளக்கங்களே அதனை நிரூபிக்கும்.

  ஒரு அடிப்படைக் கருத்தை
  எடுத்துக் கொண்டு, அவரவர் கோணங்களில்,
  வித்தியாசமான பார்வைகளை இங்கு
  ஒருங்கிணைக்க வேண்டும் என்பது தான்
  எனது நோக்கம். பின்னூட்டங்கள் எனக்கு
  மிக்க மகிழ்வை அளிப்பதோடு, என்னை மேலும்
  மேலும் உற்சாகத்தோடு எழுதத் தூண்டுகின்றன.

  நண்பர் எழில் –

  “பிணை” பற்றிய உங்கள் பின்னூட்டத்தின் மையம்
  எனக்கு புரிகிறது. இந்த விஷயத்தில் உங்கள் “நிலை”
  என்ன என்பதை நீங்கள் தெரியப்படுத்த நினைக்கிறீர்கள்.

  நான் துவக்கத்திலிருந்தே சொல்லி வருகிறேன் –
  ஜெயலலிதா அவர்கள் தவறு செய்தாரா-இல்லையா,
  அவர் மீதான குற்றச்சாட்டுகள், சட்டப்படி நிரூபிக்கப்பட்டு
  விட்டனவா இல்லையா என்கிற விஷயங்களுக்குள்
  செல்லாமல்,

  அதற்கப்பால், அவரது அரசியல் எதிரிகளாலும் –
  தமிழர்-தமிழக விரோதிகளாலும்,
  அவர் மீது நிகழ்த்தப்படுகிற
  சட்டத்திற்குப் புறம்பான,
  நியாயத்திற்கு அப்பாற்பட்ட,
  தாக்குதல்களைத் தான் –
  நான் கடந்த சில இடுகைகளில் தொடர்ந்து
  விமரிசித்து வருகிறேன்.
  ஜெயலலிதா அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள்,
  தமிழகத்திற்கு நிரந்தர இழப்பை ஏற்படுத்தும்.

  தமிழகத்தில் ஏற்பட்டுள்ள “வெற்றிடத்தை”
  பயன்படுத்திக் கொள்ள –
  திமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளின்
  அதிதீவிர முயற்சிகள் ஒரு பக்கம்.

  மோடி பிரதமராக இருக்கிறார் என்கிற
  ஒரே பின்புலத்தில் தமிழக பாஜக
  செய்கிற அசிங்கமான முயற்சிகள் ஒரு பக்கம் –

  ராஜபக்சே ஆசியுடனும், வாழ்த்துக்களுடனும் –
  சு.சுவாமி செய்யும் தகிடுதித்தங்கள் ஒரு பக்கம் –

  இவர்களின் கூட்டு முயற்சியில், தப்பித்தவறி
  திரு பன்னீர்செல்வம் அவர்களின் ஆட்சி
  கலைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி தமிழகத்தில்
  உருவாகுமேயானால் – அதைவிட பெரிய
  துர்ப்பாக்கியம் தமிழ் மக்களுக்கு இல்லை.

  தமிழ் நாட்டின் பல முக்கிய பிரச்சினைகளுக்கு,
  தீர்வு காணப்படாமலே சமாதி கட்டப்பட்டு விடும் –
  அல்லது வேறு சாயங்கள் பூசப்பட்டு விடும்.

  அதனால் தான் கடந்த சில இடுகைகளில் நான் கொஞ்சம்
  முனைப்பாக இருந்தேன். நீங்கள் புரிந்து கொள்வீர்கள்
  என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.

  நண்பர் தமிழ்மலர் அவர்களுக்கு,

  துடிப்பான உங்கள் இடுகைகளைப் பார்த்தேன்.
  எனது உளம் நிறைந்த பாராட்டுக்கள்.
  நீங்கள் தற்போது கேரள தேசத்தில் இருக்கிறீர்கள்
  என்று நினைக்கிறேன். எனவே உங்கள் மீது
  தமிழ் நாட்டைப் போல் “பாயத்துடிக்கும்” நபர்கள்
  இருக்க மாட்டார்கள்.

  எனக்கு வயது எழுபத்தி ஒன்று ஆகிறது.
  உடலில் சக்தி இல்லை –
  ஆனால், நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்
  என்கிற மன உறுதி இருக்கிறது.
  ஓரளவு சட்டம் தெரிந்தவன் தான்.
  ஆனால், இங்கிருக்கும் சூழ்நிலையில்
  இதற்கு மேல்செயல்பட்டால், நான் முடக்கப்படுவேன்.

  எனவே, எல்லை தாண்டாமல் செய்ய முடிவதைச்
  செய்து கொண்டிருக்கிறேன்.

  அனைவருக்கும் நன்றி.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   அன்பின் கா.மை.

   //ராஜபக்சே ஆசியுடனும், வாழ்த்துக்களுடனும் –
   சு.சுவாமி செய்யும் தகிடுதித்தங்கள் ஒரு பக்கம் //

   இதற்கு நான் பின்னூட்டமாக என் சொந்தக் கருத்து எதையும் எழுதப்போவதில்லை. திரு. சுவாமியின் twitter கருத்தை அப்படியே கொடுத்திருக்கிறேன். ஆங்கிலமும் தமிழும் தெரிந்த நண்பர்கள் மொழிபெயர்த்து பின்னணியைப் புரிந்துகொள்ளலாம்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் todayandme,

    சுப்ரமணியன் சுவாமியின் ட்விட்டர் அக்கவுண்டிற்கு
    ஹிட்ஸ் போவதை தவிர்ப்பதற்காக,
    நீங்கள் கூறும் சு.சுவாமியின் ட்விட்டரில் உள்ளதை
    அப்படியே கீழே தந்திருக்கிறேன்.

    சு.சுவாமியின் ட்விட்டரில் காணப்படும் வாசகம் –

    – // ADMK must now expect Jaffna Tamil CM
    to fish out JJ from jail by writing a letter to
    Rajapaksa to take it up “strongly” with PM Modi.//-

    இதற்கு பதிலாக, அவருடைய அக்கவுண்டிலேயே
    அருண்குமார் என்கிற நண்பர் ஒருவர் கொடுத்துள்ள
    பின்னூட்டத்தையும் கீழே தந்திருக்கிறேன்.

    arunkumar s ‏@AKS_2006 Oct 9

    sir ur repeated tweets against JJ gives a clear case for personal vengeance, now she s in jail why can’t u just shut up!!!
    ————————

    சு.சுவாமி, கொலைகார ராஜபக்சேவை
    திருப்திப்படுத்தவே இந்த ட்விட்டரைப்
    போட்டிருக்கிறார் என்பது மிகத்தெளிவாகவே
    தெரிகிறது.

    மிக முக்கியமான இந்த தகவலை
    இங்கு பகிர்ந்து கொண்டதற்காக உங்களுக்கு
    மிக்க நன்றி.

    உங்கள் பின்னூட்டத்தில் புதைந்துள்ள
    முக்கியத்தைக்கருதி, இதை இன்றைய இடுகையின்
    பின்னூட்டங்களின் கீழும்
    கீழும் மீண்டும் கொடுத்திருக்கிறேன்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 13. today.and.me சொல்கிறார்:

  மிக்க நன்றி. லிங்க் ஆகப் போடாமல் screen saver image ஆகப் போடமுடியுமா என்று முயன்று கொண்டிருந்தேன். தாங்கள் சுலபமாக்கிவிட்டீர்கள். மீண்டும் நன்றி.

 14. Mani சொல்கிறார்:

  குன்ஹா கொடுத்த மற்றொரு தவறான கணக்கு – கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படும் தங்கத்தின் மதிப்பு குறித்தது.

  கைப்பற்றப்பட்ட 20,548 கிராம் தங்கத்தின் மதிப்பு, அன்றைய மதிப்பில் கிராம் ஒன்றுக்கு 433 ரூபாய் என்று கணக்கிடப்பட்டு 8,90,55,032 என்று குன்ஹா குறிப்பிட்டுள்ளார். அது தவறான கணக்கு. உண்மையில் அந்த விலையில் ரூ 88,97, 284 மட்டுமே ஆகிறது. டுவிட்டரில் இந்த செய்தியைக் காணவும். https://twitter.com/hariharannaidu/status/521514716154171392/photo/1

 15. kalakarthik சொல்கிறார்:

  பதிவும் அற்புதம். பின்னூட்ட அலசல்களும் அற்புதம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.