ரஜினி நுழைவதைத் தடுக்கிறார் சுப்ரமணியன் சுவாமி…..

modi-rajini

நான்கு நாட்களுக்கு முன்னர் நான் இந்த ‘விமரிசனம்’
வலைத்தளத்தில், ரஜினிகாந்த் பாஜகவில் சேர்வதைத் தவிர்க்க டாக்டர் சுப்ரமணியன் சுவாமி தீவிரமாக முயற்சி செய்கிறார் என்று கூறி இருந்ததை, இது உண்மையல்ல – வயிற்றெரிச்சலில்
எழுதுகிறீர்கள் என்று ஒரு நண்பர் எழுதி இருந்தார்.

சுப்ரமணியன் சுவாமி அவர்களின் மீது எனக்கு எரிச்சல் உண்டு என்பது உண்மை. அதை, நானே பலமுறை வெளிப்படையாகவே கூறி இருக்கிறேன். ஆனால், அதற்காக தவறான அல்லது
பொய்யான தகவலை நான் என்றும் தர மாட்டேன்.
எனக்கு தகவல்கள் கிடைக்க டில்லியில் உள்ள சில நண்பர்களும் உதவுகிறார்கள். அவர்களிடமிருந்தும் வெவ்வேறு விதங்களில் செய்திகள் கிடைக்கின்றன.

சுப்ரமணியன் சுவாமி அவர்களைப் பற்றிய உண்மைகளை –
பெரும்பாலான மக்கள் அறியாத –
அல்லதுமறைந்து கிடக்கும் –
அல்லது மக்கள் மறந்து விட்ட –
பல உண்மைகளைத் தான் நான் எழுத முயற்சிக்கிறேன்.

நான் 4 நாட்கள் முன்பு கூறியதை உறுதிப்படுத்தி சுப்ரமணியன் சுவாமி, நேற்றிரவு ஒரு செய்தித்தாளுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதைப் பார்க்க வாய்ப்பில்லாத நண்பர்களுக்காக அந்தச் செய்தியிலிருந்து நமக்குத் தொடர்புள்ள
பகுதியைக் கீழே தருகிறேன் –

—————————-

பா.ஜ.,வுக்கு ரஜினி தேவையா?:பதிலளிக்கிறார் சு.சாமி –
( http://www.dinamalar.com/news_detail.asp?id=1089739 )

இந்த வெற்றிடத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி,
வரும் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தமிழகத்தில்
ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில்
பா.ஜ.,தீவிரமாக இருக்கிறது.இதற்காக, அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

அதில் ஒரு முயற்சியாக, தங்கள் தரப்புக்கு ஆதரவாக,
நடிகர் ரஜினிகாந்தை கொண்டு வந்து விட வேண்டும் என்று, முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியதாவது:

தமிழகத்தில், ஊழலில் ஊறித் திளைத்த இரண்டு இயக்கங்களை, தமிழக மக்களுக்கு அடையாளப்படுத்தியதில் சந்தோஷமாக இருக்கிறேன். அந்த இரண்டு இயக்கங்களும் விரைவில், மக்கள் மத்தியில் பலவீனப்பட்டுப் போகும்.

தி.மு.க.,வைப் பொறுத்த வரையில், அந்த இயக்கம்,
அஸ்தமனத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டுஇருக்கிறது. அந்த இயக்கத்தை, இனிமேல் யாரும் துாக்கி நிறுத்த முடியாது.

அதே நிலைமை தான், தற்போது அ.தி.மு.க.,வுக்கும்.
ஜெயலலிதா, ஊழல் குற்றவாளி என, கோர்ட் மூலமே
நிரூபிக்கப்பட்டு விட்டது. இதனால், அவரின் இமேஜ்
முழுமையாக சரிந்து விட்டது.

தமிழகத்தைப் பொறுத்த வரையில், தேசிய கட்சியான காங்கிரஸ், ஏற்கனவே செத்து விட்டது.

அதனால், தற்போது ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பக் கூடிய ஒரே கட்சி, பா.ஜ., தான். அதற்காக, தமிழகத்தில் பா.ஜ.,வை வேகமாக வளர்த்தெடுக்கும் முயற்சிகளில், அனைவரும் இறங்கி இருக்கின்றனர்.

இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி, தமிழகத்தில் பா.ஜ.,வை ஆட்சி அரியணையில் ஏற்றிவிட வேண்டும் என நினைக்கின்றனர்; ஆசைப்படுகின்றனர். என் விருப்பமும் அது தான்.

தமிழகத்தில் ஏற்கனவே, சினிமா கலாசாரத்தை ஒழித்து, நேர்மையான, படித்த, ஒழுக்கமான மனிதர் ஒருவர் தலைமையில் ஆட்சி ஏற்படுத்த வேண்டும் என, நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

ஆனால், இன்றைய சூழ்நிலையில், தமிழக பா.ஜ.,வினர், வழக்கம் போல, ரஜினியை அந்த இடத்தில் வைத்துவிட வேண்டும் என துடிக்கின்றனர். எனக்கு தெரிந்த வரையில், ரஜினி நல்ல மனிதர் தான்; என் மீதும் மரியாதை உள்ளவர் தான். ஆனால், அரசியலில் இறங்கி, அரசியல் கலாசாரத்தோடு ஒன்றி, அவரால் செயல்பட முடியுமா என, எனக்கு தெரியவில்லை.

தமிழக பா.ஜ.,வினருக்கு இப்போதும் நான் சொல்வதெல்லாம்,
சினிமாக்காரர்களை தேடிச் செல்வதை விட்டுவிட்டு, பா.ஜ.,வை மக்கள் மத்தியில் வேகமாக கொண்டு
செல்வதற்கான ஏற்பாட்டை செய்யுங்கள்; கட்சியை
கிராம அளவில் கட்டமைக்க ஏற்பாடுகளை செய்யுங்கள்.

மற்றபடி, ரஜினியின் ஆதரவு பா.ஜ.,வுக்கு தேவையா,
அவரை அரசியல் களத்துக்கு கொண்டு வந்து தான்
ஆக வேண்டுமா என்பது குறித்தெல்லாம்,
இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.

அது, தமிழக பா.ஜ., கையில் இல்லை.
கட்சியின் தேசிய செயற்குழு தான், அதற்கான முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to ரஜினி நுழைவதைத் தடுக்கிறார் சுப்ரமணியன் சுவாமி…..

 1. sakthy சொல்கிறார்:

  ஊடகங்கள்,இணையங்களை சாட்சியங்களாக கொள்வது சரி என்று சொல்ல முடியாது.இன்று பல ஊடகங்கள்,இணையங்கள் பொய்யான செய்திகளை முக்கியமாக ஜெயலலிதா விசயத்தில் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகிறது.
  //டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா, தினமும் கண்காணித்து வருகிறார். அவரது தேவையை பற்றி விசாரித்து அறிகிறார்.பொதுவாக, தண்டனை கைதி ஒருவர், சிறையில் அடைக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள், அவருக்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டும். இதன்படி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசிக்கு, ஊதுபத்தி உருட்டும் வேலை ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், அவர்கள் அப்பணியை செய்கின்றனரா என்பது தெரியவில்லை…………இது தினமலர் செய்தி.

  மறு நாள் ,கர் நாடக ஊடகம் ஒன்றுக்கு சிறை அதிகாரி கொடுத்த நேர்காணல்.
  //ஜெயலலிதா சிறையில் ஊதுபத்தி உருட்டுகிறார். காய்கறி நறுக்கிறார் என தவறான செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் வருமான வரி செலுத்தும் மூத்த குடிமகள். எனவே சிறையில் அவருக்கு எந்த வேலையும் ஒதுக்கவில்லை. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு முழுமையான ஓய்வெடுக்க அறிவுறுத்தப் பட்டிருக்கிறார். சிறைத்துறை நிர்வாக விதிமுறைகளின்படி விஐபி கைதி களுக்கு பணி ஒதுக்கமாட்டோம்.

  அதைத்தான் ஜெயலலிதா விஷயத்திலும் பின்பற்று கிறோம். சசிகலா, இளவரசி ஆகியோரும் எவ்வித பணியும் மேற்கொள்ளவில்லை.

  ஒரு மாதத்துக்கு மேல் சிறையில் இருக்கும் விஐபி கைதிகளுக்கு அவர்களது வயது மற்றும் உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சில பணிகள் வழங்கப் படும். இதற்கான பட்டியல் சிறைத் துறையிடம் இருக்கிறது. ஆனால் அந்த பட்டியல் குறித்துக்கூட ஜெயலலிதாவிடம் தெரிவிக்கவில்லை என்பதே உண்மை//

  [img]http://s13.postimg.org/g485565av/BJP_Rajne.jpg[/img]

  சினிமாக்காரர்கள் வருவது ஏற்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.
  இன்னும் பாஜாகாவிற்கு வர தயாராக இருக்கிறார்கள்.குஷ்பு மறந்து விட வேண்டாம்.

  துடிக்கும் சுசாமி விரவில் விழப் போவது உண்மை. பஜாகா வின் கனவும் பலிக்காது.

 2. chandraa சொல்கிறார்:

  a few days backthiru udayakumar of kudankulam fame had written an open letter to rajnikanth he said that he would oppose in nouncertain terms the entry of rajni into tamilnadu politics particularly rajnis support to bjp. udhayakumar further told that rajini being a kannadiga has no place in tamilnadu politics…and rajini will be driven out….all said about rajini in the letter of udayakumar is one hundred percent correct.

 3. chandraa சொல்கிறார்:

  k.m.ji dont you think that the observations of KINARRUTHHAVALAI regarding dr.subbramanya swami deserves to be removed from this column oflate yourself and thiruvalargal today and me sakti bhat and others have firmly decided to remove ABUSIVE WRITING i request a direct reply from you ji.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சந்திரா,

   இப்போது தான் நான் வலைத்தளத்திற்கு வந்தேன்.
   உங்கள் எல்லாருடைய பின்னூட்டங்களையும்
   இப்போது தான் பார்க்கிறேன்.
   நீங்கள் சொல்லி இருக்கா விட்டாலும் கூட, நான்
   அதை நீக்கி இருப்பேன். இருந்தாலும்,
   எனக்கு நினைவூட்டியதற்காக உங்களுக்கு நன்றி.

   ஆமாம் – என்ன சொன்னீர்கள் …?
   ” oflate yourself and thiruvalargal today and me
   sakti bhat and others have firmly decided to remove
   ABUSIVE WRITING ”

   -ஏன் உங்களுக்கு அதில் விருப்பமில்லையா ?
   விவாதங்களில் – தரத்தையும், பண்பையும்
   காப்பதில் உங்களுக்கு பொறுப்பில்லையா… ?
   சம்மதமில்லையா …?

   நண்பரே, இந்த தளத்தின் தரத்தை பாதுகாப்பதில்,
   உங்களையும் சேர்த்து, அனைத்து நண்பர்களுக்கும்
   பொறுப்பு இருக்கிறது என்பது என் கருத்து.
   அதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று
   நம்புகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. drkgp சொல்கிறார்:

  It has become a routine affair for the people in
  film world to jump into politics to become instant power brokers.
  This culture has denied people with good intentions and hard work
  the place they deserve in the polity of the state. So they are pushed to join
  a fan club and deitify the actor. As these artificially illuminated people
  block the rise of deserving future leaders, I detest them cashing out
  their luck for the second time.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டாக்டர் KGP,
   மற்றும் இதர நண்பர்களுக்கு,

   ரஜினிகாந்த் பாஜக வில் சேருவதை நான் ஆதரிப்பதாக
   யாரும் தவறாக எண்ணி விட வேண்டாம்.

   திரையுலக பிரபலங்கள், அது யாராக இருந்தாலும்,
   தாங்கள் திரையுலகில் பெற்றுள்ள செல்வாக்கை
   பயன்படுத்தி, அரசியலில் புகுவதை,
   உங்களைப் போலவே நானும் முற்றிலுமாக
   எதிர்க்கிறேன் – வெறுக்கிறேன்.

   இந்த இடுகையில் நான் சொல்ல முன்வந்தது,
   டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் ultimate aim என்ன –
   என்பதைப்பற்றி நான் 4 நாட்களுக்கு முன்னர்
   எழுதியிருந்த இடுகையில் கூறி இருந்தது –
   மிகைப்படுத்தப்பட்ட கருத்து என்று சிலரால் கருதப்பட்டது.
   ஆனால், அது தான் உண்மை என்பதைக் காட்டவே
   இந்த இடுகை முற்படுகிறது. நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  தரம் குறைந்த சொற்களைப் பயன்படுத்தி
  இருப்பதால், நண்பர் ‘கிணற்றுத்தவளை’ -யின்
  பின்னூட்டம் நீக்கப்படுகிறது.
  மாற்றுக் கருத்துக்களைச் சொல்லும்போதும்,
  கண்ணியம் காக்குமாறு நண்பரை மீண்டும்
  வேண்டுகிறேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்கள் அனைவருக்கும்,

  நண்பர் todayandme- அவர்களிடமிருந்து கிடைத்துள்ள
  ஒரு பின்னூட்டச் செய்தி கீழே –

  ————–
  அன்பின் கா.மை.

  //ராஜபக்சே ஆசியுடனும், வாழ்த்துக்களுடனும் –
  சு.சுவாமி செய்யும் தகிடுதித்தங்கள் ஒரு பக்கம் //

  இதற்கு நான் பின்னூட்டமாக என் சொந்தக் கருத்து எதையும் எழுதப்போவதில்லை. திரு. சுவாமியின் twitter கருத்தை அப்படியே கொடுத்திருக்கிறேன். ஆங்கிலமும் தமிழும் தெரிந்த நண்பர்கள் மொழிபெயர்த்து பின்னணியைப் புரிந்துகொள்ளலாம்.
  ——————

  இதற்கான என் மறுமொழி கீழே –

  நண்பர் todayandme,

  சுப்ரமணியன் சுவாமியின் ட்விட்டர் அக்கவுண்டிற்கு
  ஹிட்ஸ் போவதை தவிர்ப்பதற்காக,
  நீங்கள் கூறும் சு.சுவாமியின் ட்விட்டரில் உள்ளதை
  அப்படியே கீழே தந்திருக்கிறேன்.

  சு.சுவாமியின் ட்விட்டரில் காணப்படும் வாசகம் –

  – // ADMK must now expect Jaffna Tamil CM
  to fish out JJ from jail by writing a letter to
  Rajapaksa to take it up “strongly” with PM Modi.//-

  இதற்கு பதிலாக, அவருடைய அக்கவுண்டிலேயே
  அருண்குமார் என்கிற நண்பர் ஒருவர் கொடுத்துள்ள
  பின்னூட்டத்தையும் கீழே தந்திருக்கிறேன்.

  arunkumar s ‏@AKS_2006 Oct 9

  sir ur repeated tweets against JJ gives a clear case for personal vengeance, now she s in jail why can’t u just shut up!!!
  ————————

  சு.சுவாமி, கொலைகார ராஜபக்சேவை
  திருப்திப்படுத்தவே இந்த ட்விட்டரைப்
  போட்டிருக்கிறார் என்பது மிகத்தெளிவாகவே
  தெரிகிறது.

  மிக முக்கியமான இந்த தகவலை
  இங்கு பகிர்ந்து கொண்டதற்காக உங்களுக்கு
  மிக்க நன்றி.

  உங்கள் பின்னூட்டத்தில் புதைந்துள்ள
  முக்கியத்தைக்கருதி, இதை இன்றைய இடுகையின்
  பின்னூட்டங்களின் கீழும்
  மீண்டும் கொடுத்திருக்கிறேன்.
  ——————————————————————————–

  இன்னமும் சுப்ரமணியன் சுவாமியை நல்லவர்
  என்று நம்பும் நண்பர்களுக்கு இந்த
  ட்விட்டர் மற்றும் அதன் மறுமொழி ஆகியவற்றை
  சமர்ப்பணம் செய்கிறேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 7. visujjm சொல்கிறார்:

  தன்னுடைய திரைப்படம் ஓட வேண்டும் என்று இன்றளவும் பதட்டம் அடையும் ரஜினி அரசியலுக்கு வர நினைப்பது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். அதுபோக அன்று ஒரு நாள் பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா நடைபெற்ற வேளையில் அஜித் பேசி கொட்டி தீர்த்ததை ரஜினி எழுந்து நின்று ஒரு ரசிகனாக கைதட்டியதையும் கலைஞர்களும் மனிதர்கள் தான் என்பதை நினைவுபடுத்துகிறேன்… முட்டாள் ரசிகர்களை எண்ணி மனம் வெதும்புகிறேன்… முரட்டு பிடி தேடும் பத்திரிக்கை உலகம் உள்ளவரை ரசிகன் வெறிபிடித்தவன் வாழ வைப்பவன்… சித்தம் தெளிய இமயம் சென்றால் போதுமா???

  களைப்பு நீங்க இமயம் சென்று திரும்புபவர் எவ்வளவு செலவு செய்வார்??? தென்னாடு உடைய சிவனுக்கே யாவும் வெளிச்சம்…

 8. drkgp சொல்கிறார்:

  Dr Swamy’s concern for Mr Rajnikanth is nothing more than
  the concern of the wolf for the lamb drenching in the rain.

 9. sakthy சொல்கிறார்:

  ஐயா,எனக்காக வெளியே உலங்குவானூர்தி காத்திருந்ததால் உடனே கருத்தைக் கூறி விட்டுச் சென்று விட்டேன். படத்தைக் கூட தவறாக ஒட்டி விட்டேன்.ரஜனி குடும்பத்தினருடன் மோடி -படம்-
  உண்மையை நடு நிலையுடன் கூறுவது தவறு என்றால், கிடைக்கும் சிறிய நேரத்தை இங்கு செலவிடாது கருத்துகளைக் கூறுவதை நிறுத்தி விடுகிறேன்.
  எவருடைய மனத்தையும் புண்படுத்த விரும்பவில்லை.
  உண்மைகள் சிலரைச் சுடவே செய்யும்.

 10. yogeswaran சொல்கிறார்:

  Kaviri Maindhan Sir,

  why are we so obsessed with film stars.

  never encourage these people in politics.

  rgs

  yogi

 11. எழில் சொல்கிறார்:

  பா.ஜ.,வுக்கு ரஜினி தேவையா?:பதிலளிக்கிறார் சு.சாமி.
  சு.சாமி: ஏன் ரஜினி… பாஜக வை தமிழகத்தில் அழிக்க நான் ஒருவர் போதாதா? 🙂

  On the serious note,
  ஒருவர் அரசியலுக்கு வருவது என்பது வேறு. ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது வேறு. பல ஊடகங்கள் இரண்டையும் போட்டு குழப்பி கொள்கின்றன. உற்று கவனித்தால் பாஜக வில் ஒரு தலைவர் கூட ரஜினி அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. மாறாக தங்களுக்கு முற்று முழுதாக ஆதரவு மட்டும் வழங்க வேண்டும் என்று தான் எதிர்பார்கிறார்கள். சு சுவாமி முதல் தமிழிசை வரை பலரும் முதல் அமைச்சர் கனவுடன் தான் காய் நகர்த்துகிறார்கள். இதை ரஜினி ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வரலாற்று ரீதியாக ரஜினி இதுவரை இருமுறை அரசியலில் குரல் (ஆதரவு) கொடுத்தார். ஒரு முறை விருப்பம் போல் நடந்தது. மற்றொரு முறை நடக்கவில்லை. ‘… தமிழ் நாட்டை கடவுள் கூட காப்பாத்த முடியாது…’ என்று குரல் கொடுத்த போது மக்களும் ஏறக்குறைய அதே நிலையில் இருந்ததால், அது நடந்ததால் அவர் குரலுக்கு மதிப்பு இருந்தது என்று எடுத்து கொள்ள முடியாது. உண்மையில் பாஜக நம்புவதை விட ரஜினிக்கு மக்களின் ஆதரவு மிக குறைவு என்பதே என் கணிப்பு. He is overrated by media.

  மேலும் கீழு உள்ள சுட்டியில் உள்ள தமிழிசை யின் ஊடகவியலாளர் சந்திப்பில் மிக ஆணித்தரமாக ரஜினியின் ‘ஆதரவு’ என்ற வார்த்தையை தான் கையாள்கிறார். ரஜினி வந்தால் தமக்கு ஏதும் பதவி வரும் என்று காத்திருக்கும் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் இதை புரிந்து கொண்டால் சரி.

 12. Ganpat சொல்கிறார்:

  ரஜினியின் மனப்பாங்கு அவரை இந்திய அரசியலுக்கு தகுதியில்லாதவராக ஆக்குகிறது.
  #முதல்வனாக நடிக்க கூட அஞ்சியவர்.(முதல்வன்)
  #அற்புதங்களையும் மாயாஜாலங்களையும் அளவுக்கு மீறி நம்புகிறவர்…(பாபா)
  #தான் படங்களில் சொன்னது எல்லாம் வெறும் வசனம் அதை நம்பினால் அதற்கு நான் பொறுப்பில்லை என அறிவித்தவர் (குசேலன்)
  எல்லாவற்றிக்கும் மேல்..
  #நல்லவர்.

  • today.and.me சொல்கிறார்:

   கண்பத் ஜி,

   நீங்க ஒருதடவை சொன்னா நூறுதடவை சொன்னமாதிரி. 🙂

   லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் நீங்கதான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.