பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டால் – ரத்தக்கண்ணீர் வரவில்லை …? குறைந்த பட்சம் எரிச்சலாவது …?

கீழே இருப்பது முழுக்க முழுக்க “தினமலர்”
நாளிதழில் வெளிவந்துள்ள ஒரு செய்தி.
அப்படியே தரப்பட்டுள்ளது.

fishermen -modiji

 

 

மகாராஷ்டிராவில், நாளை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, பால்கர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், நரேந்திர மோடி பேசியதாவது:

”என்னுடைய, 60 நாள் ஆட்சி குறித்து கணக்கு கேட்கும்
காங்கிரசார், பாகிஸ்தான் சிறைகளில் வாடும், இந்திய
மீனவர்களை விடுவிப்பது குறித்து, ஒரு போதும்
கவலைப்பட்டதில்லை,”

” இந்திய மீனவர்கள் பலர், பாகிஸ்தான் சிறைகளில்
வாடுகின்றனர். நான் பிரதமரானதும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபிடம், இந்தப் பிரச்னை குறித்து பேசினேன்.
சிறையில் வாடும் மீனவர்களை மட்டுமின்றி, அவர்களின், 5 முதல், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள படகுகளையும் விடுவிக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டேன்.
அதன் பின், 10 ஆண்டுகளில், முதல் முறையாக,
பாகிஸ்தான் சிறைகளில் இருந்து, 200 மீனவர்களும்,
50 படகுகளும் விடுவிக்கப்பட்டன.

( http://www.dinamalar.com/news_detail.asp?id=1091155 )

——————————————————————-

பின் குறிப்பு –

படகுகளை திரும்பக் கொடுக்கும்படி
நவாஸ் ஷெரீபிடம் பேசியவர், ராஜபக்சேயிடம்
பேச மறுப்பது ஏன் ….?

தமிழ் நாடு தான் பாஜக விற்கு ஓட்டுப் போடவில்லையே –
படட்டும் நன்றாக – என்றா …?

மீனவர்களை மட்டும் பிடித்துக்கொண்டிருந்த
ராஜபக்சேயை – சு.சு.வை அனுப்பி
படகுகளைப் பிடித்து வைத்துக் கொள்ள செய்ததும்
அதற்குத் தானோ …?

 என்ன  ( கேவலமான ) அரசியல் இது….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டால் – ரத்தக்கண்ணீர் வரவில்லை …? குறைந்த பட்சம் எரிச்சலாவது …?

 1. Ganpat சொல்கிறார்:

  ம்ம்ம் இன்னும் ஆறு மாதங்கள்..பல்லை கடித்துக்கொண்டிருக்கவேண்டியுள்ளதே!
  😦 😦

  • k.Raghavendra சொல்கிறார்:

   அய்யா கண்பத்,

   உங்களுக்கு ஒரு கேள்வி.
   உங்களை ஒருவர் இப்போது ஓங்கி அறைந்தால் –
   ஆறு மாதங்களுக்குப் பின் தான் நீங்கள் ‘அய்யோ வலிக்கிறதே’
   என்று சொல்லுவீர்களா ? நடப்பது தெரிந்தே செய்யும்
   அயோக்கியத்தனம், இதைச் சொல்ல 6மாதம் ஏன் பொறுக்க வேண்டும் ?

   • today.and.me சொல்கிறார்:

    நண்பர் ராகவேந்திரா,

    பாஜக நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டு(ம்) இந்த நாட்டை ஆள வந்துள்ள (புதிதாக வந்துள்ள என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்) மருமகள் (தனிப்பெரும்பான்மை மத்திய பாஜக அரசு). எனவே நாடு பழக குறைந்தது ஆறு மாதங்களாவது வேண்டும் எனத் தவணை கேட்கிறார்கள்.

    புளி எங்கே இருக்கிறது, உப்பு எங்கே இருக்கிறது, மிளகாய்ப் பொடி எங்கே இருக்கிறது என்று தேடுகிற மருமகளானால் பரவாயில்லை பழகட்டும் என விட்டுவிடலாம். இவரானால் புளி எப்படி இருக்கும், உப்பா அப்படி என்றால் என்ன கேட்டுக்கொண்டே மாமியாரின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி அவரைக் கண்ணை மூடிக்கொண்டு அலறவைத்துவிட்டு மகனைக் கைக்குள் போட்டுக்கொள்ளும் மருமகளாய் இருக்கிறார். என்ன செய்வது? மாமியாராகிய நாமெல்லாம் கண்ணை மூடி அலறிக்கொண்டு இருக்கும்போது மகனாகிய இந்தியாவும் அதன் வளமும் யார் கைக்குள் போகிறது என்று பார்க்கவா முடியும்? நாம் கண்ணைக் கழுவிக் கொள்வதற்கு ஆறுமாதம் அவகாசம் கேட்கிறார் இந்த புது மருமகள். கொடுத்துத் தொலையுங்கள். இல்லையென்றால் மாமியார் என்னைக் கொடுமை செய்கிறாள் என கேஸ் கொடுத்துவிடப்போகிறாள்.

   • Ganpat சொல்கிறார்:

    ராகவேந்திரா ஜி
    நான் ஏற்கனவே “ஐயோ வலிக்கிறதே” என்று சொல்லியாகி விட்டது.திருப்பி அடிக்கத்தான் அவகாசம் கேட்டிருந்தேன்.
    இதுவரை மோடியின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக இல்லை.
    முன்னவராவது ஒன்றும் செய்யவில்லை என புரிந்தது.இவர் என்ன செய்கிறார் என்றே புரியவில்லை.எல்லாம் நம் தலை விதி.

  • today.and.me சொல்கிறார்:

   நண்பர் கண்பத்,

   இன்னும் ஒருமாதம் கழித்து (மொத்தமாக ஆறுமாத ஆட்சிக்காலம்) கேட்கவேண்டும் என்று அல்லவா நினைத்திருந்தேன்.

   🙂 🙂 எல்லாக் கோட்டையும் அழிச்சிட்டு திரும்பவும் மொதல்ல இருந்தா !

   • Ganpat சொல்கிறார்:

    நண்பர் today and me..
    தவறுக்கு வருந்துகிறேன்,இன்னும் ஒரு மாதம் என்று இருக்க வேண்டும்.
    நன்றி.

 2. k.Raghavendra சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  உங்கள் கடுமை போதவில்லை.
  இதைக் கேவலம் என்று சொல்லக்கூடாது.
  “வடிகட்டிய அயோக்கியத்தனம்” என்று
  சொல்ல வேண்டும்.

 3. புது வசந்தம் சொல்கிறார்:

  திரு. காமை அவர்களுக்கு,
  நீங்கள் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.
  http://writersamas.blogspot.in/2014/10/blog-post.html
  இது பணம் படைத்தவர்களுக்கான அரசாகவே தொடர்கிறது…

  • today.and.me சொல்கிறார்:

   இந்த இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ………. கலந்துகொண்டவர்களும், அங்கு நிகழ்த்தப்பட்ட இந்த மையக்கருத்தும் உண்மை எனில்

   // மைய நோக்கம் என்ன?
   வெளிநாட்டு இறக்குமதியைக் குறைத்து இந்தியாவின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதே ‘இந்தியாவில் உருவாக்கு வோம்’ கொள்கையின் அடிப்படை நோக்கம் என்று அரசு கூறுகிறது. ஆனால், இக்கொள்கையின் மைய நோக்கம் எது என்பதைத் தொடக்க விழாவே காட்டிக்கொடுத்தது. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்டிரி, ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார்மங்கலம் பிர்லா உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி 500 பெருநிறுவன முதலாளிகளே விழாவின் பங்கேற்பாளர்கள்.

   இந்தியத் தொழில் துறையின் எதிர்காலம் இந்த 500+ பெருநிறுவன முதலாளிகளிடம்தான் இருக்கிறது என்கிற அரசின் பார்வையே மோசமானது. அவர்கள் நடுவே மோடி ஆற்றிய உரை இன்னும் ஆபத்தானது. “அரசுக் கொள்கைகள் அவ்வப்போது மாற்றப்படுவது, மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) விசாரணை எனப் பல்வேறு காரணங்களால் தொழிலதிபர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. நான் உங்கள் அச்சத்தை அகற்ற வும் நம்பிக்கையை வளர்க்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறேன். இந்த நாடு உங்களுடையது. நமது நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக வேண்டும்” என்றார் மோடி. //

   “பல்வேறு காரணங்களால் மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. நான் அவர்கள் அச்சத்தை வளர்க்கவும் நம்பிக்கையை அகற்றவும் நடவடிக்கை எடுக்க” என்று மாற்றித்தான் யோசிக்கவேண்டியதாக உள்ளது.

 4. Thanavanam சொல்கிறார்:

  இந்த ஒரு செய்தி போதும் நரியின் வண்ணம் தெரிய??;|

 5. கோபாலன் சொல்கிறார்:

  ஐயா,

  இலங்கை அரசு தமிழக மீனவர்கள் படகுகளையும் மீனவர்களையும் சிறைப்பிடிப்பதன் காரணம் அவர்களின் அத்துமீறல்தான். இன்று விடுவிக்கப்பட்டாலும் நாளையும் அதே செயலை/தவறை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். பாகிஸ்தான் விசயத்திலும் இதுபோன்ற நிலைதானா என்று தயவுசெய்து கண்டு கூறுங்கள்.

  சு.சாமி தமிழக மீனவர்களின் பெரும்பாலான படகுகள் இரு அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானவை என்று கூறியதற்கு இதுவரை யாரிடமிருந்தும் பதில் இல்லை.

  கோபாலன்

  • today.and.me சொல்கிறார்:

   நண்பர் கோபாலன்,

   // அவர்களின் அத்துமீறல்தான்// அவர்களின் என்று எவர்களைக் குறித்திருக்கிறீர்கள் எனத் தெரிந்துகொள்ளலாமா?

   • கோபாலன் சொல்கிறார்:

    ஐயா,

    மற்றவர் எல்லைக்குள் உத்தரவின்றி நுழைவதை அத்துமீறல் என்று கூறினேன். தமிழக் சிறைகளில் இலங்கையினர் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தால் மகிழ்வேன்.

    கோபாலன்

  • BC சொல்கிறார்:

   //இலங்கை அரசு தமிழக மீனவர்கள் படகுகளையும் மீனவர்களையும் சிறைப்பிடிப்பதன் காரணம் அவர்களின் அத்துமீறல்தான்.//
   கோபாலன் அய்யா நேர்மையுடன் உண்மையை சொன்ன தங்களுக்கு இலங்கையை சேர்ந்த எனது நன்றிகள்.

 6. today.and.me சொல்கிறார்:

  கா.மை. சார்,
  தினமலர் செய்திகளைத் திரிப்பதிலேயே குறியாய் இருப்பார்களோ என்று அஞ்சி மகாராஷ்டிரா மாநில நாளிதழ்கள் வரை சென்று தேடிவிட்டேன். இந்தச் செய்தியில் இங்கு வந்திருப்பது உண்மைதான்.

  இவ்வாறு அதிகமாகத் தேடிய பளுவினாலும், கண்ணில் பட்டுவிட்ட மிளகாய்ப் பொடியினாலும் தான் எரிச்சல் அதிகமாக இருக்கிறது என்று நினைத்து மனதை ஆற்றிக்கொள்கிறேன். இன்னும் ஒருமாதம் பொறுத்துத்தான் (மருமகளை) படுத்தப் பழக வேண்டும் பிழைத்திருந்தால் !

  🙂 😦

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  மோடி அவர்கள் மஹாராஷ்டிராவில் பேசியதை என்னால்
  ஜீரணிக்க முடியவில்லை.

  தமிழக மீனவர்கள் விஷயமாகவும்,
  அவர்கள் படகுகள் விஷயமாகவும், மோடியும் -சுப்ரமணியன் சுவாமியும்
  ஒன்று கலந்து தான் செயல்படுகிறார்கள் என்பது இப்போது
  வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. தமிழக மீனவர்கள் கதி/விஷயம்
  மோடிக்குத் தெரியாதா ? இங்கிருந்து 5 மாதங்களில் 20 கடிதங்களாவது
  போயிருக்குமே. நவாப் ஷெரிபிடம் பேச முடிந்தவரால் ராஜபக்சே யிடம்
  ஏன் பேச முடியவில்லை ?

  சுப்ரமணியன் சுவாமி, படகுகளை பிடித்து வைத்துக் கொள்ளும்படி,
  தான் தான் ராஜபக்சே க்கு ஆலோசனை கூறியதாக வெளிப்படையாக
  செய்தியாளர்களிடமே கூறி இருக்கிறார்.
  அதை மறுத்து, மத்திய அரசிலிருந்து யாராவதோ, பிரதமரோ இதுவரை
  யாராவது எதாவது கூறி இருக்கிறார்களா ?

  தமிழ் நாட்டிற்கு இழைக்கப்படுவது பச்சைத் துரோகம்.
  இதை வைகோ போன்ற தலைவர்களும் பார்த்துக் கொண்டு
  சும்மா இருப்பது தான் வேதனையாக இருக்கிறது.
  (வைகோ நேற்று மும்பையில், தமிழர் வசிக்கும் தாராவி பகுதியில்
  பாஜக வேட்பாளருக்காக பிரச்சாரம் வேறு செய்திருக்கிறார் )

  எதைச்சொல்லி வாழ்த்துவது ?
  காவிரிமைந்தன்

 8. R.Ramachandran சொல்கிறார்:

  திரு.காவிரிமைந்தன்,

  நான் கடந்த 2 வருடங்களாக மோடி மீது மிகுந்த
  நம்பிக்கை வைத்திருந்தேன். எலெக்ஷன் முடிந்து
  பிஜெபி தனி மெஜாரிடி கிடைத்து ஆட்சியை
  பிடித்ததும் மிகவும் சந்தோஷப்பட்டேன்.
  ஆனால் அதிகாரத்துக்கு வந்ததிலிருந்து மோடி
  நடந்து கொள்ளும் விதங்களைப் பார்த்தால் ஒரு
  மாதிரியாகத் தான் இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில்
  இருந்தபோது குறை சொல்லிய அதே விவகாரங்களை
  இவர்கள் மீண்டும் கையிலெடுக்கிறார்கள்.
  ஆதார் கார்டிலிருந்து, ட்ரெயின் கட்டணங்களை
  ஏகத்துக்கு உயர்த்தியது, விமானங்களை விட அதிகமான
  பிரிமியம் ரெயில்கள் என்று எதுவுமே சரி இல்லை.
  தமிழ் நாட்டை பொருத்த வரை, மம்தா பானர்ஜி போல்
  இல்லாமல், ஜெயலலிதா மத்திய அரசாங்கத்துடன்
  நன்றாகத்தான் பழகி வந்தார். இருந்தாலும் இவர்கள்
  அவரையும் பழி வாங்கி விட்டார்கள்.
  நானும் வரிசையாக உங்கள் blogs எல்லாவற்றையும்
  படிக்கப் படிக்க மிகவும் வெறுப்பாக இருக்கிறது.
  இப்போது கடைசியாக மஹாராஶ்டிராவில் மோடி
  பேசி இருப்பதைப் பார்த்தால், தமிழ்நாட்டு மீனவர்களை
  வேண்டுமென்றெ பழி வாங்குவது நன்றாகவே தெரிகிறது.
  எப்படியாவது பிஜெபி அரசாங்கத்தை தமிழ்நாட்டில்
  கொண்டு வருவது தான் அவர்கள் எய்ம் என்று நன்றாகவே
  தெரிகிறது. நான் தமிழில் அதிகமாக எழுதி பழக்கமில்லை.
  இருந்தாலும் மனதில் தோன்றும் எரிச்சல்களை சொல்ல
  வேண்டும் என்று தோன்றியது. கட்சி வித்தியாசம் இல்லாமல்
  நீங்கள் எல்லா விஷயங்களையும் எழுதி வருகிறீர்கள்.
  நிறைய எழுதுங்கள். நன்றி.

 9. புது வசந்தம் சொல்கிறார்:

  வைகை புயல் வடிவேலுவின் “கைப்புள்ள” வசனம் நினைவுக்கு வருகிறது, “இன்னுமாடா இந்த உலகம்….”. பிரிமியம் இரயில் மற்றும் தட்கல் இரயில் கட்டணம் (தற்போது இன்னும் அதிகமாக) மிகப் பெரிய ஏமாற்று வேலை. இது போலத்தான் புல்லெட் இரயிலும் வரும். வளர்ச்சி யாருக்கானது ?

 10. Ganpat சொல்கிறார்:

  நண்பர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.நாம் ஏதோ போனதேர்தலில் மகாத்மா காந்தியை தோற்கடித்து விட்டு மோடியை கொண்டு வரவில்லை.காங்.எனும் ஒரு உபயோகமற்ற கழுதையை நீக்குவதாக முடிவெடுத்து மோடி என்பவர் குதிரையாக இருப்பார் என நம்பி வாக்களித்தோம் அவரும் கழுதைதான் எனத்தெரிய வந்தால் 2019தேர்தலில் இரண்டில் எது நல்ல கழுதை என தேர்ந்தெடுத்து வாக்களிப்பதுதான் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு.இந்தியாவின் பிரச்சினைகள் எப்பொழுது தீரும் என இறைவனுக்கே தெரியாது.நாம் என்ன, அற்ப மானிடர்கள்!.இந்தியாவின் அரசியல் சட்டமும் குற்றவியல் சட்டமும் மாற்றப்படும் வரை நமக்கு ராமனும் ராவணனும் ஒன்றுதான்.I may sound a little pessimistic but truly speaking I AM TERRIBLY PESSIMISTIC ABT THE COUNTRY.(as of now)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.