ஜெயலலிதாவுடன் “தேசபக்தி கூட்டணி” – சுப்ரமணியன் சுவாமியின் 02/02/2009 -ந்தேதி பேட்டி…..

 

jj and sswamy

 ( இது என்ன “போஸ்” ….?
கூட்டணி வேண்டுமென்றால்
காலிலும் விழுவாரோ …? ….? )

“சாமிகளின் சாகசங்கள்” இடுகைத் தொடர் சம்பந்தமாக
சில ஆவணங்களை சேகரித்துக் கொண்டிருந்தேன்.
எதேச்சையாக கண்ணில் பட்டது திருவாளர் சுப்ரமணியன் சுவாமி அவர்கள் பிப்ரவரி 2, 2009 – அன்று –
(அதாவது மே 2009 ) தேர்தலுக்கு 3 மாதங்கள் முன்னதாக – கொடுத்திருந்த ஒரு பேட்டி.

சு.சுவாமி பல விஷயங்களைப் பற்றி பதிலளித்திருக்கிறார் அதில். மற்ற விவரங்களைப் பின்னர் தருகிறேன்.

இன்று, சுப்ரீம் கோர்ட்டில், ஜெ.வழக்கில் வாதாட
தன்னை எதிர்மனுதாரராக அனுமதிக்க வேண்டும் என்று பெட்டிஷன் போட்டிருக்கிறார் சு.சுவாமி.

இந்த சூழ்நிலையில், அன்றைய பேட்டியைப் படித்தால், திருவாளர் சுப்ரமணியன் சுவாமியின் குணாதிசயங்களைப் பற்றி மக்கள் கொஞ்சம் தெரிந்து கொள்ள உதவும் என்பதால், தொடர்புடைய பத்தியை மட்டும்,
கீழே தருகிறேன். ( மற்றவை பிற்பாடு …..)

—————————————————–

02.02.2009 அன்று சென்னையில் இருக்கும் தனது இல்லத்தில்,
பத்திரிகையாளர்களிடம் பேசிய சுப்பிரமணியசாமி –

xx xx xx xx

வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் குறித்து
என்ன நினைக்கிறீர்கள்?

“தீவிரவாதிகளால், நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்
ஏற்பட்டிருக்கிறது. ஜெயலலிதா தேசபக்தி மிகுந்தவர்.
எனவே நாட்டைக் காப்பாற்றுவதற்காக அ.தி.மு.க
ஒரு தேசபக்திக் கூட்டணியை உருவாக்க வேண்டும்.”

(சாமி, இந்த பதிலைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது
ஒரு நிருபர் குறுக்கிட்டு, ‘‘ஜெயலலிதா மீது
ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதே…?’’ என்றார்.)

அதற்கு சாமி, ‘‘ஊழல் மட்டுமே ஒரு குற்றம் இல்லை.
ஏன் கருணாநிதி ஊழல் செய்யவில்லையா?
ஜெயலலிதாவுக்கு தேசபக்தி அதிகம். அதனால் அவர்
தலைமையில் கூட்டணி உருவாகவேண்டும்
என்கிறேன்’’
என்றார்.

தொடர்ந்து கேள்வியெழுப்பிய அந்த நிருபர்,

‘‘அப்படியானால், தேசபக்தி இருந்தால் போதும்
ஊழல் செய்யலாம் என்கிறீர்களா?

தேசத்தை சுரண்டுபவர்கள் தேசபக்தி
மிகுந்தவர்கள் என்கிறீர்களா?’’ என்றார்.

‘‘அப்படிச் சொல்லவில்லை. ஜெயலலிதா ஆட்சி செய்த
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏதாவது ஒரு ஊழல்
குற்றச்சாட்டு அவர் மீது கூறப்பட்டுள்ளதா?
அவர் பதவியில் இருந்தபோது சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தது. தேசவிரோத சக்திகளை அவர் அடக்கி, ஒடுக்கி வைத்திருந்தார்.

ஆக, இந்த தேர்தலில் கடைசி ஐந்து ஆண்டுகளைத்தான் பார்க்கவேண்டும். பழசை மக்களே மறந்துவிட்டார்கள்.’’
என்று பதிலுரைத்தவர்,

‘‘தேசபக்தி கூட்டணி அமைந்தாலும், நாங்கள்
ஜெயலலிதாவுடன் கூட்டணி வைப்பது குறித்து
இப்போதைக்கு சொல்ல முடியாது. அதே சமயம்
வீட்டில் சும்மாவாச்சும் தூங்குவேனே ஒழிய, கண்டிப்பாகக் கருணாநிதியுடன் கூட்டணி வைக்க மாட்டேன்’’ என்று பதிலளித்தார்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

30 Responses to ஜெயலலிதாவுடன் “தேசபக்தி கூட்டணி” – சுப்ரமணியன் சுவாமியின் 02/02/2009 -ந்தேதி பேட்டி…..

 1. R.RAMACHANDRAN சொல்கிறார்:

  kAVIRIMAINTHAN SIR,

  SUPER SHOT –
  THIS IS YOUR MASTER STROKE OF THIS SEASON.

 2. chandraa சொல்கிறார்:

  KMJI instead of analysing swamys character etc let us watch what dr.swamy would do in this case and how jeyas super brain lawyers are going to tackle all.. In indiaand particularly in tamilnadu political scene drama undergo miraculous changes FRIENDS TURNING INTO FOES…and vice versa. ONE COULD PRODUCE innumerable photos to prove that. just as you have shown the photos of jeya and swami.
  one thing is certain.je aya has the dubious distinction of incurring STRONG ENEMIES a t any given time. SHE SHOULD HAVE SHOWN RESTRAINT IN THESIX TO SEVEN DEFAMATION CASES filed against dr.swami.
  now what do you expect sewami to do…. to go to all tamples and pray for her release. .

  • today.and.me சொல்கிறார்:

   நண்பர் சந்திரா,

   ஒருவருடைய குணாதிசயங்களை துவைத்து, அலசி, அவர் வீட்டு ப்ளாக்கில் காயவைக்கிறார் காமை. நீங்கள் ஏன் அதை வேண்டாம் என்று சொல்லவேண்டும். ஜெ-வின் வக்கீல்களுக்கும் சுவாமிக்குமா தகராறு. இந்தியாவில் மட்டுமல்ல உலக அரசியலிலும் கூட எதிரிகள் நண்பர்கள் ஆவதும் அவர்களே பின்னர் எதிரிகளாகவும் மாறுவது உண்டு. இது ஒரு (artificially) produced போட்டோ என்று சொல்ல வருகிறீர்களா என்று உங்கள் எழுத்துகளில் சந்தேகம் தொனிக்கிறதே? அப்படித்தானா?

   ஜெ-வுக்கு பலமான அரசியல் எதிரிகள் உண்டு என்பதை இப்போது நீங்கள் சொல்வதற்கு முன்னாலேயே முந்தின இடுகையில் கா.மை. குறிப்பிட்டிருந்தார் என்று நினைக்கிறேன்.. அதனாலே அவர் அவர்களால் பழிவாங்கப்படுகிறாரோ என்ற ஐயத்தையும் தெரிவித்திருந்தார்.

   சுவாமி எதை வேண்டுமானாலும் செய்யலாம். அது அவரது ஜனநாயக தனிமனித உரிமை. ஆனால் பழிவாங்கும் செயலாகச் செய்வது, பாஜகவின் கொல்லைப்புற வழிகளுக்குத் துணைபோவது, (தமிழ்நாட்டில் அப்படியாவது ஒரு கவர்னர் அல்லது முதலவர் பதவிக்கு அச்சாரமிடுவது) போன்ற முயற்சிகள் இவ்வளவு படித்த, , பண்புள்ள (என்று சொல்லிக்கொள்கிற), வயதான, அனுபவமிக்க, பொருளாதார மேதைக்குத் தேவையா?

   தேவைதான் என்றால் அவரது சுயரூபத்தை மறந்துபோனவர்களுக்கு நினைப்பூட்ட கா.மை. இந்தப் பதிவை இட்டிருக்கிறார் என்று கொள்ளலாமே.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சந்திரா,

   திரும்பத் திரும்ப நீங்கள் பிடித்த முயலுக்கு
   மூன்றே கால் தான் என்று சாதிக்க முயன்று
   வருகிறீர்கள்.

   “ஊழலை ஒழிக்கவென்றே பிறந்த
   அவதாரம் தான்” என்று பிதற்றிக்
   கொண்டிருக்கும் சு.சுவாமி, 1996-ல் ஜெயலலிதா
   அவர்களின் மீது “ஊழல் புகார்” கொடுத்து,
   வழக்கும் போட்டவர், பின்னர் அதே ஜெ-யுடன்
   கூட்டணி அமைத்து, அதே ஜெ. தயவில் தான்
   எம்.பி. ஆனார் என்பதை நீங்கள் வசதியாக
   மறக்கிறீர்களா அல்லது மறைக்கிறீர்களா என்பது
   தெரியவில்லை.

   சு.சுவாமியின் மேலேயுள்ள statement -ஐ
   மீண்டும் ஒரு தடவை படித்துப் பாருங்கள் –
   தான் போட்ட ஊழல் வழக்கைப்பற்றி அவர்
   என்ன சொல்கிறார் …?

   ———————-
   ” ‘‘அப்படியானால், தேசபக்தி இருந்தால் போதும்
   ஊழல் செய்யலாம் என்கிறீர்களா?
   தேசத்தை சுரண்டுபவர்கள் தேசபக்தி
   மிகுந்தவர்கள் என்கிறீர்களா?’’

   ‘‘அப்படிச் சொல்லவில்லை. ஜெயலலிதா ஆட்சி செய்த
   கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏதாவது ஒரு ஊழல்
   குற்றச்சாட்டு அவர் மீது கூறப்பட்டுள்ளதா?
   அவர் பதவியில் இருந்தபோது சட்டம் ஒழுங்கு நன்றாக
   இருந்தது. தேசவிரோத சக்திகளை அவர் அடக்கி, ஒடுக்கி
   வைத்திருந்தார்.

   ஆக, இந்த தேர்தலில் கடைசி ஐந்து ஆண்டுகளைத்தான் பார்க்கவேண்டும். பழசை மக்களே மறந்துவிட்டார்கள்.’’

   —————————–

   இதற்கு மேலும் சு.சுவாமியைப் பற்றி நீங்கள்
   பெருமையாகப் பேசினால் – இதை எல்லாம் படிப்பவர்கள்
   உங்களைப்பற்றி என்ன முடிவிற்கு வருவார்கள்
   என்று கொஞ்சம் யோசித்து விட்டு, பின்னர் பின்னூட்டம்
   போடவும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • yogeswaran சொல்கிறார்:

    Sir,

    Remember Perunth Thalaivar Kamaraj saying,

    Ellam ore kuttatyil ooriya mattaihal.

    what a pity.

    rgs

    yogi

   • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

    //இதற்கு மேலும் சு.சுவாமியைப் பற்றி நீங்கள்
    பெருமையாகப் பேசினால் – இதை எல்லாம் படிப்பவர்கள்
    உங்களைப்பற்றி என்ன முடிவிற்கு வருவார்கள்
    என்று கொஞ்சம் யோசித்து விட்டு, பின்னர் பின்னூட்டம்
    போடவும்// – நெற்றியடி!

  • எழில் சொல்கிறார்:

   Its a shame Chandra ji you only comment on photos. Have you had time to read what is below the photo in KM ji’s writeup. If you have read that you would have realized that you don’t need any outsider to tarnish the image of Swamy. He himself does it perfectly with his deeds. Gone are the days when the politicians believe, people forget everything with time. With the help of social media and internet, things have changed so dramatically and no one can hide. Be it Swamy or Jaya or Karuna.

 3. today.and.me சொல்கிறார்:

  கா.மை.,
  சுவாமியின் தொண்டரடிப் பொடியார்களுக்கு செலக்டிக் அம்னீஷியா வர நான் சுவாமியைப் பிரார்த்திக்கிறேன். சுவாமி கூறியது போன்றே அவர்கள் பழையவற்றை மறந்திருந்தார்களே. ஏன் இப்படி அவர்களுக்கு ஒரு கஷ்டத்தைக் கொடுத்துவிட்டீர்கள்?

 4. Drkgp சொல்கிறார்:

  You can enumerate umpteen number of cases worse than this
  whose protagonists can take U, V or W turns faster than Usain Bolt.
  That is the bane of our state and nation.
  Appreciate your optimism that one tomorrow would change the tricks of these chameleons.

 5. today.and.me சொல்கிறார்:

  கா.மை.,
  இது போஸ் கொடுக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படமாகத் தெரியவில்லை, இந்த மாதிரி போஸ் அமைந்தபோது எதேச்சையாகக் கிளிக்கியது போலத் தெரிகிறது. இவரும் நமஸ்காரம் செய்தவர்தானா ? பக்தன் வேடத்தில் சாமிகள் வரும்போது, சுவாமிகளின் அவதாரங்களுள் இதுவும் ஒன்று என்று நினைத்து மனதைத் தேற்றிக்கொள்ளுகிறேன்.

 6. sakthy சொல்கிறார்:

  அன்பான வேண்டுகோள். நான் அமெரிக்காவில் இருக்கிறேன்.ஆங்கிலம் சரியாகத் தெரியவில்லை. தமிழில் பின்னூட்டம் செய்தால் என்னைப் போன்ற பலரும் தெரிந்து கொள்ள படிக்க முடியும்.
  இது தமிழ் தளம் என்பதால் எனது தாழ்மையான வேண்டுகோள்.

 7. chandraa சொல்கிறார்:

  k.m ji you have mentioned as to whatpeople who go through yhis blog would think of me since i support dr.swamy.. unbiased readers followers know the truth…. dr.swamy can easily boast of having the LARGEST FOLLOWERS in facebook and in twitter…. while paying due regards to your age and experience i would suggest you to join in aiadmk and aim for KOLGAI PARAPPU SEYALALAR post my regards to you

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சந்திரா,,

   உங்கள் ஆலோசனைக்கு நன்றி.
   ஆனால் அதை ஏற்க இயலாத நிலையில் நான்
   இருக்கிறேன் என்பதையும் மிகவும் வருத்தத்துடன்
   தெரிவித்துக் கொள்கிறேன்.

   இந்த வலைத்தளத்தின் விசேஷமே –

   ஒவ்வொரு இடுகையிலும் எதாவது ஒரு கருத்து
   என்னால் முன்வைக்கப்படுகிறது.
   அதை ஆதரித்தோ, எதிர்த்தோ, நண்பர்கள்
   அவரவர் பார்வைக்கேற்ப பின்னூட்டங்கள்
   எழுதுகிறார்கள். மற்றவர்களோ, நானோ –
   தேவைப்படும் இடங்களில் மீண்டும் சில
   கருத்துக்களைக் கூறி, சுதந்திரமாக –
   பின்னூட்டங்கள் போடுகிறோம்.

   விவாதங்கள் மிக மிக நாகரிகமாக,
   ஆழ்ந்த கருத்துக்களை முன்வைத்து நடக்கின்றன.
   இதில் யாரும் உயர்வு, தாழ்வு இல்லை.
   இங்கு எந்தவித பேதமும் இல்லை.
   கூறப்படும் கருத்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம்…

   இறுதியில், யாரும் – யாருடைய கருத்தையும் –
   யார் மீதும் திணிப்பதில்லை. படிப்பவர்கள்,
   அனைத்தையும் படித்து விட்டு, அவரவர்க்கு தோன்றும்
   விதத்தில் முடிவு செய்து கொள்கிறார்கள்.
   மீண்டும் அடுத்த தலைப்பிற்கு போய் விடுகிறோம்.

   அனேகமாக, இந்த வலைத்தளத்திற்கு வரும் அனைத்து
   நண்பர்களும் இந்த முறையை ஏற்கிறார்கள் –
   பங்கு கொள்கிறார்கள்.

   இடையில் அநாகரிகமாக எழுதுபவர்களை கண்டிப்பதோ,
   அவர்களின் பின்னூட்டங்களை நீக்குவதோ – அதிலும்
   நண்பர்கள் ஈடுபாட்டுடன் பங்கு கொள்கிறார்கள்.
   இந்த ‘விமரிசனம்’ வலைத்தளத்தின் தரத்திற்கும்,
   தனித்தன்மைக்கும் அதுவே காரணம்.

   கண்களை மூடிக்கொண்டு, ஒரு தலைவரின் பின்னால்
   அல்லது ஒரு கட்சியின் பின்னால் போகிறவர்களுக்கு
   இந்த வலைத்தளத்தின் இத்தகைய போக்கு பிடிப்பதில்லை.

   இதற்கு latest உதாரணம் நீங்கள் தான்.
   உங்களுக்கு முன்னரும் ஒன்றிரண்டு நண்பர்கள்
   இதே போல் – வந்து – போனார்கள். ஒருவேளை அவர்கள்
   உங்களுக்கு மிக நெருங்கியவர்களாக கூட இருக்கலாம் ….!!!
   இல்லை -நீங்களேயாகக் கூட இருக்கலாம் …
   (வலைப்பின்னல்கள் தான் அதற்கான வசதிகளைத்
   தருகின்றனவே…)

   கண்ணை மூடிக்கொண்டு சுப்ரமணியன் சுவாமியை
   நீங்கள் hero worship செய்வது உங்களுக்கு வேண்டுமானால்
   ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால், எனக்கோ,
   இந்த வலைத்தள நண்பர்களுக்கோ ஏற்புடையது இல்லை.

   (நண்பர் ‘எழில்’ அவர்கள் இன்னும் உங்கள் பின்னூட்டத்தைப்
   பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். சுப்ரமணியன்
   சுவாமியைப் பற்றி எழுத, என்னை விட அவர் இன்னும்
   பொருத்தமானவர்… எழில் – எங்கே போனீர்கள் ….? )

   விளக்கம் நீண்டு விட்டது…..
   இறுதியாக உங்களுக்கு ஒரு ஆலோசனை –
   இந்த வலைத்தளம் உங்கள் “தகுதிக்கு” ஏற்றதல்ல.
   எனவே இனி இங்கு பின்னூட்டங்கள் போட்டு –
   உங்களையும், மற்றவர்களையும் துன்பத்திற்கு
   உள்ளாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • எழில் சொல்கிறார்:

   //unbiased readers followers know the truth…. dr.swamy can easily boast of having the LARGEST FOLLOWERS in facebook and in twitter…. //

   இதெல்லாம் ஒரு தகுதியா… மிஸ்டர் பீனுக்கு ஒபாமாவை விட facebook இல் விசிறிகள் அதிகம். ட்வீட்டர் இல் கிம் கதர்ஷியான் எனும் சதையை முதலீடாக கொண்டு இயங்கும் மாடலுக்கு ஹிலரி கிளிண்டனை விட பின்பற்றுவோர் அதிகம்.

   இதில் உள்ள உண்மை கூட சார்பற்ற புத்திசாலிகளுக்கு புரியும்.

 8. today.and.me சொல்கிறார்:

  நண்பர் சந்திரா,

  நீங்கள் பதிவரைப் பற்றி தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இதே விமரிசனம் தளத்தில் சுவாமி என்று தட்டச்சித் தேடினீர்கள் என்றால் அட்லீஸ்ட் 20 பதிவுகளாவது அவரைக் கவர்ந்த சுவாமியைப் பாராட்டி எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். அதேபோல ஜெ-வைப் பற்றித் தேடினீர்கள் என்றால் அட்லீஸ்ட் 20 பதிவுகளாவது ஜெவை கண்டித்து எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். நீங்கள் சுவாமி அவர்களின் தீவிர அபிமானியாக இருப்பதுபோல, கா.மை. அதிமுக கொ.ப.செ ஆகும் அளவுக்கு கண்மூடித்தனமான கட்சி அபிமானி இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவே இல்லை அல்லது புரிந்துகொள்ள விரும்பவில்லை.

  ஜாதி-மத-கட்சி-நிற பாகுபாடு இல்லாமல் வெளிவரும் அவரது எழுத்துகளை உங்களால் ஜீரணித்துக்கொள்ள இயலவில்லை என்பதையே இந்தப் பின்னூட்டம் காட்டுகிறது. என்ன செய்வது? உங்கள் கருத்து உங்களுக்கு. 🙂

  யார் என்ன சொன்னாலும் நடுநிலையோடு இருப்பது கா.மை.யின் போக்கு என்பது என் கணிப்பில்.

  வாழ்த்துக்கள் கா.மை.
  தொடருங்கள் உங்கள் பதிவுகளை. வாசிக்கக் காத்திருக்கிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் today.and.me,

   மீண்டும் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறேன் –
   “நான் கொடுத்து வைத்தவன்” – நண்பர்களாகிய
   நீங்கள் எல்லாரும் சேர்ந்து தான் இந்த தளத்தை
   உயரத்திற்கு கொண்டு செல்கிறீர்கள்.

   என் பணியை சுலபமாக்கி விட்ட உங்களுக்கு
   என் மனமார்ந்த நன்றிகள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  //‘‘அப்படியானால், தேசபக்தி இருந்தால் போதும்
  ஊழல் செய்யலாம் என்கிறீர்களா?
  தேசத்தை சுரண்டுபவர்கள் தேசபக்தி
  மிகுந்தவர்கள் என்கிறீர்களா?’’// – யாரையா அந்தச் செய்தியாளர்?! செவ்வி (interview) அளிப்பவரை இப்படியெல்லாம் மடக்கிக் கேள்வி கேட்டு நான் இதுவரை பார்த்ததில்லை. குறிப்பாக, தொலைக்காட்சிகளில் பாருங்களேன்; செய்தியாளர், செவ்வி அளிப்பவர் பற்றிய சர்ச்சைக்குரிய கேள்வி எதையாவது கேட்பார்; ஆனால், அதற்குக் குறிப்பிட்ட நபர் அளிக்கும் பதிலுக்கும் அந்தக் கேள்விக்கும் தொடர்பே இருக்காது. செய்தியாளரும் அது பற்றிக் கவலைப்படாமல் உடனே அடுத்த கேள்விக்குப் போய்விடுவார். ஆனால், மேற்கண்ட செய்தியாளரைப் போல் அப்படியெல்லாம் கேள்வி கேட்டு நான் பார்த்ததில்லை!!

 10. drgemsgvijay சொல்கிறார்:

  subramaniswamy aiadmk members porikkigal ennru vimasanam seidhu iruppathu muraidana

 11. R.RAMACHANDRAN சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  நீங்கள் சந்திராவிற்கு எழுதியுள்ள பின்னூட்டம்.

  எப்படித்தான் உங்களால் இவ்வளவு பொறுமையாகவும்,
  விளக்கமாகவும் எழுத முடிகிறது ?
  நானாக இருந்தால் அந்த சந்திராவின் பதிலை நீக்கி இருப்பேன்.
  அல்லது பதிலுக்கு கடுமையாக எழுதி இருப்பேன்.
  உங்கள் வயதும், அனுபவமும் மட்டும் இதற்கு காரணமில்லை.
  வயதானவர்கள் இவ்வளவு பொறுமை காட்டுவதில்லை.
  உங்கள் பக்குவமும், மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்
  என்கிற ஆர்வமும் விடாமுயற்சியும் தான் காரணம் என்று
  நான் நினைக்கிறேன். உங்களைப் போலவே இந்த தளத்தில்
  பின்னூட்டம் எழுதுகிற நண்பர்களிடமும் இந்த பக்குவத்தைப்
  பார்க்கிறேன். மொத்தத்தில், உண்மையாகவே உங்கள்
  வலைத்தளத்திற்கு வருவது நல்ல பல அனுபவங்களை
  கொடுக்கிறது. தொடருங்கள் சார்.
  நண்பர் ‘ டுடே அண்டு மீ ‘ சொன்னதைப் போல நானும் –

  //வாழ்த்துக்கள் கா.மை.
  தொடருங்கள் உங்கள் பதிவுகளை. வாசிக்கக் காத்திருக்கிறேன்.//

 12. arulnithya சொல்கிறார்:

  Sir neengal konjam JJ seitha attuliyangalai ninaiyungal.. OOLAL yaar seithalum thandikka padavendiyavarkaley enpathai ninaivil kollungal..truthamilan, savukku, vinavu ellam padipeerkal endru nambukiren

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் அருள் நித்யா,

   நான் 4 வருடங்களுக்கு மேலாக இந்த வலைத்தளத்தில்
   எழுதி வருகிறேன். நீங்கள் தொடர்ந்து இந்த
   வலைத்தளத்தை படித்து வந்திருந்தீர்கள் என்றால் –
   நான் எப்படிப்பட்ட பார்வை உடையவன், விஷயங்களை
   எந்த கோணங்களில் அணுகுபவன் என்பது உங்களுக்கு
   புரிந்திருக்கும்.

   என் முந்தைய இடுகைகளை எல்லாம் நீங்கள்
   படித்ததில்லை என்று நினைக்கிறேன்.,

   ஜெயலலிதா அவர்களின் நிலைக்கு அனுதாபமாக
   நான் முதல் முதலாக எழுதியது, அவர்
   பெங்களூரில் சிறைப்பட்ட செப்டம்பர் 27ந்தேதி அன்று தான்.
   அதற்குப் பிறகு நான் 4 அல்லது 5 இடுகைகள் இந்த வழக்கு,
   மற்றும் அதன் பின்னணி குறித்து எழுதி இருக்கிறேன்.

   இப்போது கூட, நேர்மையான முறையில்,
   சட்டத்தின் மூலம் நியாயமான அளவு தண்டனை
   கிடைத்திருக்குமானால், எனது கடந்த 4-5 இடுகைகளுக்கு
   கூட அவசியம் நேர்ந்திருக்காது.

   எந்த கட்சியையுமோ, எந்த தலைவரையுமோ சார்ந்து
   ஒரே நிலையில் இருந்து கொண்டு,
   அவர்கள் சொல்வதையே நானும் சொல்லிக்கொண்டு,
   அவர்கள் செய்கிற தவறுகளை எல்லாம்
   நியாயப்படுத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம்
   எனக்கு கிடையாது.

   நான் சுதந்திரமான கருத்துக்களை கொண்டவன்.
   என் மனசாட்சி தான் எனக்கு வழிகாட்டி.

   ஒருக்கணம் உங்கள் கட்சி சார்புகளை மறந்து விட்டு
   என்னுடைய பழைய இடுகைகள் சிலவற்றைப்
   படித்துப் பாருங்கள் –
   உங்களுக்கே புரியும்.

   உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 13. today.and.me சொல்கிறார்:

  அன்பின் கா.மை.,

  பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை அனுமதிக்கவேண்டுமா என்ன?

  நன்றி.

 14. gopalasamy சொல்கிறார்:

  You discussed about 1) The high court’s stand on bail and 2) Severity of the punishment. You did not write about conviction.
  I am disgusted to see some irrelevant comments. If anybody is having points about these two things, they are welcome.
  To Mr. Sakthy/America, I dont know how to type in tamil. My english knowledge also not commendable. But no option.

 15. Ganpat சொல்கிறார்:

  =இந்தியாவில் ஜனநாயகம் என்பது நமக்குத்தந்துள்ள உரிமை.. இருப்பதற்குள் குறைந்த அயோக்கியர்களாக நாம் கருதுபவரை தேர்ந்தெடுப்பது.இது நம் வாழ்வில் வரும் அத்துணை துறைகளுக்கும் அடங்கும்.(இருகோடுகள் தத்துவம் )
  =”ஒழுக்கசீலரான சு.சா. தேர்தலில் ஊழல் ராணியுடன் கூட்டு வைக்க முயன்றது ஏன்?” எனும் கா.மை யின் எளிய கேள்விக்கு யாரும் இன்னும் தக்க பதில் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  =குற்றம் செய்பவன் குற்றவாளி இல்லை மாட்டிகொள்பவன்தான் குற்றவாளி எனும் அரிய உண்மையும் நாட்டு நடப்பு தெளிவாக்குகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் கண்பத்,

   ஏகப்பட்ட பின்னூட்டங்களைப் பெற்ற பின்பும் முழுமை
   பெறாமலே இருந்தது போல் தோன்றிய இடுகை உங்களது –

   // ஒழுக்கசீலரான சு.சா. தேர்தலில் ஊழல் ராணியுடன்
   கூட்டு வைக்க முயன்றது ஏன்?”
   எனும் கா.மை யின் எளிய கேள்விக்கு யாரும் இன்னும்
   தக்க பதில் தரவில்லை ….//

   -என்கிற கருத்துக்களைத் தாங்கிய பின்னூட்டம்
   வந்தவுடன் முழுமை பெற்று விட்டதாகத்
   தோன்றுகிறது.

   உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கண்பத்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,

   இன்னொரு விஷயம் விட்டுப் போய் விட்டது…..

   //குற்றம் செய்பவன் குற்றவாளி இல்லை
   மாட்டிகொள்பவன்தான் குற்றவாளி எனும்
   அரிய உண்மையையும் நாட்டு நடப்பு
   தெளிவாக்குகிறது.//

   சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில்
   உங்களுக்கு இணை நீங்கள் தான்….!!!

   கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இந்த நாட்டு
   மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகிற
   ஆசாமி பலருக்கு இன்னமும்
   ‘ஹீரோ’வாகத் தெரிகிறார். காரணம் –
   மாட்டிக்கொள்ளாமல் குற்றம் செய்வதில்
   அவர் மன்னனாக மன்னிக்கவும் சக்கரவர்த்தியாக
   இருப்பது தான்…..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 16. Ganpat சொல்கிறார்:

  மிக்க நன்றி கா.மை ஜி..எனக்கும் ஒன்று சொல்ல விட்டுப்போய் விட்டது..
  “When we have nothing much to say,we say more! 🙂

 17. S.Selvarajan சொல்கிறார்:

  இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி ! this is today [20-10-2014] news — Dear sir ! what is your opinion about this matter

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் செல்வராஜன்,

   சு.சுவாமியின் அக்கறை ‘ராஜபக்சே – பாரத ரத்னா
   விருது பெறுவது’ பற்றியது அல்ல.
   சு.சுவாமி இப்போது யாரையோ
   வெறுப்பேற்ற நினைக்கிறார் –
   அது தமிழகத்தில் யாரையும் அல்ல –
   அநேகமாக பிரதமர் மோடியைத் தான் என்று நினைக்கிறேன்.
   இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.