சு.சுவாமியின் மனைவியை நீதிபதி ஆக்க மறுத்ததற்கு ஆர்வி க்கு கிடைத்த தண்டனை ….!!! (சாமிகளின் சாகசங்கள் – பகுதி -8 )

 

“ஆர்வி” என்கிற ஆர்.வெங்கட்ராமன் தமிழக மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். முதலில் காமராஜர் அமைச்சரவையில் தமிழ்நாட்டில் தொழிலமைச்சராக அவர் ஆற்றிய பணிகள்
அற்புதமானவை. தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகள், ஐடிஐ, பாலிடெக்னிக் பயிற்சிப் பள்ளிகள் ஆகியவை துவங்க முழுமுதல் காரணம் அவர் தான்

பின்னர் மத்தியில், பாதுகாப்பு அமைச்சராகவும், அதன் பின் துணை ஜனாதிபதியாகவும், பிறகு July 1987 முதல் July 1992 வரை இந்தியாவின் ஜனாதிபதியாகவும் பணியாற்றினார். மிகச்சிறந்த நேர்மையாளர்.

அவர் ஜனாதிபதியாக இருந்த கால கட்டத்தில் பல அரசியல் சட்ட சிக்கல்கள் எழுந்தன. அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த 5 வருட காலத்திற்குள் -வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்மராவ் என்று 3 பிரதமர்கள் மாறி மாறி பதவிக்கு வந்தனர். எந்தவித பாரபட்சமுமின்றி மிக நேர்த்தியாக நிலைமையை சமாளித்தவர் ஆர்வி அவர்கள்.

rvenkataraman

??????????????????????

அப்பேற்பட்ட மனிதரையும் விடவில்லை –
சாமி என்னும் பூதம்…..!!!

ஆர்வி அவர்கள் 1995-ல் “My Presidential Years” என்கிற
தலைப்பில் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவர்
சந்திக்க வேண்டியிருந்த சில வித்தியாசமான சம்பவங்களைப்
பற்றி புத்தகம் ஒன்றை எழுதினார்.

 

சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் மத்திய சட்ட அமைச்சராக இருந்தவர் திருவாளர் சுப்ரமணியன் சுவாமி. வக்கீலாகத் தொழில்புரிந்து வந்த தன் மனைவியை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய
முயற்சி செய்திருக்கிறார். இது குறித்து ஆர்வி அவர்களின் புத்தகத்திலிருந்து அவரே கூறியிருப்பது –

———————

“திருமதி ரோக்சனா சுப்ரமணியன் சுவாமி அவர்களை
டெல்லி உயர்நீதி மன்றத்தில், ஒரு அடிஷனல் ஜட்ஜாக
நியமிப்பது குறித்த ஒரு கோப்பு என்னிடம் ஒப்புதலுக்காக வந்தது. அந்த கோப்பில், என்னிடம் வருவதற்கு முன்னர் – சட்டப்படி யார் யாரிடம் எல்லாம் கையெழுத்து வாங்கப்பட வேண்டுமோ, அவை எல்லாம் வாங்கப்பட்டிருந்தன.

திருமதி சுவாமி, பத்து வருடங்கள் நாலு மாதங்களுக்கு
வக்கீலாகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருந்தார்.
(சட்டப்படியான குறைந்த பட்ச தேவை – 10 வருட அனுபவம்…. ) அவரது வருட வருமான சுமார் 20,000/- என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. டெல்லி உயர்நீதிமன்றத்தில், அவரை விட அதிகமான அனுபவமும், அவரை விட அதிகமான வருமானமும்
பெறும் இன்னும் பல பெண் வழக்கறிஞர்கள் பணியாற்றி வந்தனர். தகுதியுடைய பல சீனியர்களை தவிர்த்து விட்டு, திருமதி சுவாமியை நீதிபதி பதவிக்கு நியமனம் செய்வது பார் கவுன்சில் நடைமுறைகளுக்கு ஏற்ப அமையாது.
எனவே, நான் கோப்புகளை, மறு ஆலோசனை செய்வதற்காக, பிரதமருக்கே திருப்பி அனுப்பி விட்டேன்.
இதன் விளைவாக, டாக்டர் சுப்ரமணியன் சுவாமி,
பாராளுமன்றத்தின் ‘செண்ட்ரல் ஹாலில்’ எனக்கு எதிராக மிக பலமான தாக்குதல் ஒன்றை மேற்கொண்டார்.
என் மனசாட்சிக்கு விரோதமாக நான் நடந்து கொள்ளவில்லை என்பதால் – நான் இவற்றைப் பொருட்படுத்தவில்லை.”

——————–

தகுதியற்ற ஒருவர் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக
நியமனம் செய்யப்பட ஒப்புதல் அளிக்காததற்காக “ஆர்வி” அவர்களுக்கு கிடைத்த வெகுமதி என்ன …?

சு.சுவாமியால் விஷ வார்த்தைகள் உமிழப்பட்டன –
என்னவென்று ….?

1) பாகிஸ்தான் ஒற்றராக மாறிய, இந்திய கப்பற்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு, ஆர்வி, ராஷ்டிரபதி பவனில் அடைக்கலம் கொடுத்தார்…..

2) ஆர்வி அவர்களின் மகள், ராஷ்டிரபதி பவன் என்கிற
விலாசத்தைப் பயன்படுத்தி, தான் நிர்வகித்து வந்த ஒரு
தனியார் ட்ரஸ்டுக்கு 18 கோடி ரூபாய் அளவிற்கு
பணம் வசூலித்தார்.

(தொடர்கிறது – பகுதி- 9-ல் )

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to சு.சுவாமியின் மனைவியை நீதிபதி ஆக்க மறுத்ததற்கு ஆர்வி க்கு கிடைத்த தண்டனை ….!!! (சாமிகளின் சாகசங்கள் – பகுதி -8 )

 1. R.Ramachandran சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  புதுசா நிறைய தகவல்கள் தந்திருக்கீங்க.
  இந்த ஆள் ரொம்ப டேஞ்சரா இருக்காரே ?

  இந்த ஆள் வில்லன் கூட இல்ல சார்
  இது ஒரு விஷப்பாம்பு.
  நீங்க கூட ஜாக்கிரதையா இருக்கணும்.
  நன்றி.

 2. எழில் சொல்கிறார்:

  இது முற்றிலுமாக நான் அறிந்திராத செய்தி. நன்றி ஐயா.

 3. T.Raghunathan சொல்கிறார்:

  Dear Kavirimainthan,

  A large number of educated middle class people love Narendra Modiji with
  the expectation that he will take India to new heights.
  Since Dr.Subramanian Swamy is also a part of bjp and also because of his
  lead position in exposing 2g spectrum etc. corruption cases, he is celebrated
  as Hero by the same mass.
  I read your blog regularly for quite a long time. I admire your style of writing
  and principled stand. Initially when you were outbursting your anger
  on Dr.Swamy, I thought that is because of your known stand on Tamils and
  Tamilnadu.

  But your recent articles go in a different way.
  Your articles on Dr.Swamy were gradually raising the tempo and your latest one
  which exposes the scandulous move of Dr.Swamy to make his wife
  High Court Judge of Delhi thro backdoor means is terribly shocking.
  I am really shocked to see a totally selfish person in the guise of a Crusader.
  I am sure this story was not known to many people.
  If people like former President R.V.
  had put this in a printed book, it has to be taken
  as one hundred percent true.

  Though I was not very serious about Dr.Swamy earlier, I had a good opinion about him.
  After reading your recent articles on Dr.Swamy, my views /opinion on him has totally changed.
  He is not a fit person to receive the kind of admiration he is getting now. It is better
  your articles are made available to a wider base thro Facebook, twitter etc.
  I shall do what I can do to circulate these articles to my network of friends.
  I wish you all the best in your efforts and good work.
  Thank you.

 4. Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

  There may be truth in Ur recent Swamy matter from RV`s book. But I remember to have seen articles( may be in JV) about RV daughter`s Trust.There is no second opinion on Ability & his work as Tamilnadu Minster, Central Minister & Vice President & President. In later days his acts slightly affected his fame., Having own house in Tamilnadu, he preferred to get allotment as a Former President ( the reason said at that time was he was opposed by DMK regime & feared to live here). As a general person you please have a search about the TRUST & current Status.I am not lobbying for Swamy.Your current findings on his earlier acts in no way erase the Truths in recent matters came to light by him.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் திருவேங்கடம்,

   ஆர்வி அவர்களின் மகளது ட்ரஸ்ட் விஷயம் எப்படி
   இருந்தாலும் கூட –

   திருவாளர் சுப்ரமணியன் சுவாமி தன் மனைவிக்கு
   டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பதவி பெற
   தன் செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தியதில்
   தவறேதும் இல்லை என்று நீங்கள் நியாயப்படுத்துவீர்களா….?

   தன் அரசியல் செல்வாக்கை சுயநலத்திற்கு பயன்படுத்துபவரை,
   ஊழலுக்கு எதிராகப் போராடும் ஒரு ஹீரோ என்று
   எப்படிக் கூற முடியும் என்பது தான் என் கேள்வி …..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    KMji

    He is not a Hero.
    But Zero. Yes. That zero jumps before and after of the value nearby, every now and then, to show its own value. Not only jumping, sometimes swapping all into its round.

    As Goundamani says, these are all common in politics. Politicians too accept this.
    But Swamy? Not only accept but pretends as non-politician, Kalki against corrupt.

    However when we see it separatly , simply, a big o. that’s it.

   • Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

    You said some time back to be reserve in Ur expressions not having insulation from others for the expected opposition. On that basis I wish to put an end. So far Ur Blogs have given many information of public interest. For any matter there would be alternate opinions. My views are to taken on that basis. Even now I request : please do the possible and Reveal a good picture on my expression ,

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பர் திருவேங்கடம்,

     நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது உங்கள்
     பின்னூட்டத்திலிருந்து சரியாகப் புரியவில்லை.

     இருந்தாலும் – நான் புரிந்து கொள்வது – மாற்றுக்
     கருத்துக்களுக்கு நான் இடம் கொடுக்க வேண்டும்
     என்று நீங்கள் விரும்புகிறீர்கள் …..!!

     அய்யா,
     மாற்றுக் கருத்துக்களுக்கு இங்கே எப்போதும்
     இடம் உண்டு. இவ்வளவு நாட்களாக நீங்கள்
     பார்த்துக் கொண்டு தானே இருக்கிறீர்கள்…?

     உங்கள் பின்னூட்டத்தில் என்ன பிரச்சினை
     என்றால் –

     இடுகை விவாதிப்பது ஆர்வி அவர்களைப் பற்றியோ
     அல்லது அவரது மகளின் ட்ரஸ்டை பற்றியோ அல்ல.
     நாம் விவாதித்துக் கொண்டிருப்பது திருவாளர்
     சுப்ரமணியன் சுவாமியின் நம்பகத்தன்மையைப்
     பற்றித்தான். எனவே, நமது பின்னூட்டங்கள் அந்த
     மையக்கருத்தையொட்டித்தானே அமைய வேண்டும்….?

     மாறாக நீங்கள் சு.சுவாமியை விட்டு விட்டு
     வேறு எங்கோ பயணித்துக் கொண்டிருப்பதைத்தான்
     நான் சுட்டிக் காட்டினேன்.

     இப்போதாவது சொல்லுங்கள் – தன் அரசியல் செல்வாக்கை
     தவறாகப் பயன்படுத்தி, மனைவிக்கு நீதிபதி பதவி வாங்கிக்
     கொடுக்க முயற்சித்த சு.சுவாமியை ஊழலை எதிர்க்க வந்த
     ஹீரோ என்று உங்களால் ஏற்க முடியுமா….?

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

      Due to inability to cope and so on, We are only on the shores of Politics. Once drowned there, it is game of survival. Feasibility only With variable standards at different times, denying their own expressions as wrongly interpreted and like that .
      I thought U may wind up with my withdrawal, but forced me to record my opine again. I never said சு.சுவாமியை ஊழலை எதிர்க்க வந்த
      ஹீரோ. You repeatedly ask to join Ur band wagon against him. Shall we have credit on a matter whether on the basis of materials available OR to throw to the Dust Bin since it is exposed by a person of doubtful character .

 5. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

 6. Sanmath AK சொல்கிறார்:

  KM sir,

  Mr.Susa is considered to be so close to US…… Mr.Rajapakse shows closeness to China…… But Mr.SuSa and Mr.Rajapakse are friends……..People like Khashoggi or Miller or Chandrasami are interested in making money through deals……. WHAT CONNECTS THE DOTS BETWEEN THESE PEOPLE ?……What is Mr.SuSa trying to show? – seems NO talented political moves so far to have a ministerial berth continuously or in making money ?……..Is he trying to make money through black mailing ??……..What is his intention ??

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சன்மத்,

   இந்த ஆசாமியை புரிந்து கொள்வது மிக மிகக் கடினம்.
   மிகவும் வித்தியாசமான ஒரு கேரக்டர்.
   தன்னைக் கண்டு அனைவரும் பயப்பட வேண்டும்.
   என்று அவர் நினைப்பது மட்டும் புரிகிறது.
   மிக மிக புத்திசாலி, கிரிமினல் மூளை;
   கொள்கை -கோட்பாடு, மனசாட்சி
   – என்றெல்லாம் எதுவும் கிடையாது.
   எப்படி வேண்டுமானாலும் வளைவார் –
   பெஸ்ட் பொலிடிகல் ப்ளாக் மெயிலர்…..!!!
   இவரை ஹீரோ என்று இன்னமும் நம்பும்
   படித்த நடுத்தர மக்களை நினைத்தால் தான்
   எனக்கு கவலையாக இருக்கிறது. அவர்கள்
   இவரின் உண்மை நிலையை புரிந்து கொள்ளும்
   நாள் வந்தால் நான் மகிழ்வேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  ஐயா! சுப்பிரமணிய சுவாமியின் அந்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றிப் பாதியிலேயே நிறுத்தி விட்டீர்களே? கட்டுரை முற்றுப் பெற்றதாகவே தெரியவில்லையே? இதன் அடுத்த பகுதியான 9ஆம் பகுதியிலும் இதன் தொடர்ச்சி காணப்படவில்லையே?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.