ராஜீவ் குடும்பத்தின் பத்தாயிரம் கோடி சொத்து இன்று யாரிடம் இருக்கிறது ? கேட்பது சு.சுவாமி….!! (சா.சா. பகுதி -10 )

திருவாளர் சுப்ரமணியன் சுவாமி எத்தகைய நம்பகத்தன்மை உடையவர் என்பதை புரிந்துகொள்ள உதவும் பேட்டி ஒன்று  இங்கே …..
19/03/2008 அன்று ராஜீவ்-சோனியா தம்பதியின் மகள்
திருமதி பிரியங்கா வாத்ரா வெளியுலகம் அறியாமல்,
ரகசியமாக வேலூர் வந்து அங்கே சிறைப்பட்டிருந்த
திருமதி நளினியை சந்தித்திருக்கிறார்.

சந்திப்பு ரகசியமாக நிகழ்ந்தாலும், பிற்பாடு எப்படியோ
(நளினியின் வழக்குரைஞர் மூலமாக ….? ) விஷயம்
வெளிவந்து விடுகிறது.
இந்த சந்திப்பைப் பற்றி கேள்விப்பட்டு கொதிக்கிறார் சு.சுவாமி. சு.சுவாமி ஏன் கொதிக்க வேண்டும்…..?

அவர் செய்தியாளருக்கு கொடுத்த பேட்டியைப் பார்த்தால்
ஓரளவு புரியலாம்.

திருவாளர் சுப்ரமணியன் சுவாமி சொல்வதிலிருந்து –
‘ரீல்’ எது – ‘ரியல்’ எது என்று பிரித்தறிவதற்கு
தனி சாமர்த்தியம் வேண்டும்…. பேட்டியைப் படிக்கும்போது, உங்கள் திறமையை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள் ..!

பேட்டிக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் –
( இந்த பேட்டி வெளியானது – ஏப்ரல் 2008 -ல் )

————————

Dr.swamy and mrs.gandhi

-( நண்பரா ..? பகைவரா….? )-

பிரியங்கா-நளினி சந்திப்பு விவகாரத்தை அரசியல் புயல்
கிளப்பும் ஆயுதமாகக் கையில் எடுத்திருக்கிறார், ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி.

‘ ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்டிருக்கும் கைதி நளினியை, சிறை ஆவணங்களில் கூட தன்னுடைய பெயரைப் பதிவு செய்யாமல், பிரியங்கா ஏன் வேறொருவர் பெயரில் சந்திக்க வேண்டும்?

சட்டவிரோதமான இந்தக் காரியத்தை சிறைத்துறை எப்படி அனுமதித்தது? ‘ –

என்றெல்லாம் கேள்விகளை அடுக்கி, தமிழகத் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பி இருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி. (அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது -திமுக.
கலைஞர் கருணாநிதி தான் முதலமைச்சர் ….)

மேலும், ‘தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம்
அதிகமாகி விட்டது. அவர்களோடு தொடர்புடையவர்களுடன் சோனியா காந்தி குடும்பம் நெருக்கமாக இருக்கிறது.  இங்கே ஆளும் தி.மு.க. அரசும் அதற்கு துணை போகிறது.

எனவே, தமிழக அரசை உடனடியாகக் கலைக்க வேண்டும்………..!!!
நளினி-பிரியங்கா சிறை சந்திப்புத் தொடர்பாக நான் கேட்டிருக்கும்  விவரங்களை தலைமைச் செயலாளர் திரிபாதி தரவில்லை யென்றால், நிச்சயம் நான் தமிழக அரசு மீது வழக்குப்  போடுவேன்…’ என்கிறார் சுப்ரமணியன் சுவாமி.

‘தன் அப்பாவைக் கொன்றது ஏன்?’ என்ற தகவலைக் கேட்டு அறிவதற்காக மட்டும் பிரியங்கா நளினியைப் பார்க்கவில்லை!  ராஜீவ் இறந்து பதினேழு வருடங்களுக்குப் பிறகு இது என்ன திடீர் அக்கறை?
நான் ஆரம்பத்திலிருந்து சொல்லிவரும் விஷயம்,
‘ராஜீவ் கொலை பற்றிய நிஜமான மர்மங்கள் சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தெரியும்’ என்பதுதான்.

எனக்குக் கிடைத்திருக்கும் உறுதியான தகவல்களைச்
சொல்கிறேன் –

தன் சிறை அனுபவங்கள் குறித்து நளினியின் கணவர் முருகன் ஒரு புத்தகம் எழுதி வருகிறாராம். அதில், ராஜீவ் காந்தி கொலையில் சோனியா காந்தியின் அம்மாவான பவுலா மெய்னோவுக்கு ஏதோ தொடர்பு இருப்பதாக தெளிவாக எழுதி இருக்கிறாராம். இதெல்லாம் சோனியாவுக்குத் தெரியவர…  பதறிப்போய் தன்னுடைய மகளை சமாதானத் தூதுவராக வேலூர் அனுப்பி இருக்கிறார். இதுதான் உறுதியான உண்மை!”

”ரொம்ப அதிரடியாகச் சொல்கிறீர்களே… இதற்கெல்லாம் என்ன ஆதாரம்?”

”நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிவரும் இந்தக்
குற்றச்சாட்டுக்களை இதுநாள் வரையில் சோனியா
குடும்பத்தினர் மறுக்கவில்லையே? அவருடைய அம்மா  பவுலா மெய்னோ, பாரீஸில் இருக்கும் ஒரு ஹோட்டலில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த மறைந்த ஆன்டன் பாலசிங்கத்தை சந்தித்துப் பேசியதுண்டு.

சோனியா குடும்பத்துக்கு நெருக்கமான குவாத்ரோச்சி,
விடுதலைப் புலிகளுக்கும் ஆயுத சப்ளை செய்து
கொண்டிருந்தவர்தான். சோனியா காந்தியின் அப்பா
ஸ்டெஃபினோ மெய்னோ, ஹிட்லரின் படையில் சிப்பாயாக இருந்தவர். பிற்பாடு ரஷ்ய உளவுப்படைக்கு ஏஜென்டாக இருந்தவர். இந்தக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நான்கு ஆண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டவர்.

இப்படியெல்லாம் குடும்ப வரலாற்றுப் பின்னணி சோனியா காந்திக்கு உள்ளது. ஆரம்பத்தில் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களுக்கும் இவர்களுக்கும் ஏற்பட்ட புரிந்துகொள்ளலின்படி இப்போது இவர்களால் நடந்துகொள்ள முடியவில்லை. அதை மீறி விட்டார்கள்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிடும் இலங்கை
அரசாங்கத்துக்கு இந்தியா எல்லா உதவிகளும் செய்கிறது.
இதனால், புலிகள் நசுக்கப்படுகிறார்கள்.

‘வாக்குறுதிகள் மீறப்படுகின்றன’ என்பதை சோனியா தரப்புக்கு உணர்த்துவதற்காகத்தான், நளினி மூலமாக சில காய்களை புலிகள் நகர்த்தியிருக்கிறார்கள். அதன் விளைவுதான் புலிகளோடு சமாதானம் பேசுவதற்காக நளினியை சந்திக்கப் பிரியங்காவை அனுப்பி இருக்கிறார் என்கிறேன் நான்!”

”நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள்?”

”இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை?! ராஜீவ் உயிரோடு இருந்தால், சோனியா அரசியலுக்கு வந்திருக்க முடியுமா?

ராஜீவ் குடும்பத்தின் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இன்றைக்கு யாரிடம் இருக்கிறது?
கூட்டிக் கழித்துப் பாருங்கள், புரியும்.

அதுமட்டுமல்ல, ‘ராஜீவ் காந்தி ஃபவுன்டேஷன்’ என்ற பெயரில் நூற்றுக்கணக்கான கோடிகளை வசூலித்து டிரஸ்ட் போன்று  அமைத்திருக்கிறார் சோனியா. ராஜீவ் கொலையானபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உயிரைவிட்ட போலீஸ்காரர்கள், காங்கிரஸ்காரர்கள், பொதுமக்கள் ஆகியோரின் குடும்பத்துக்குத்தானே இந்த ஃபவுன்டேஷன் உதவ வேண்டும்?
ஆனால், ராஜீவைக் கொன்ற கொலையாளிகளான நளினியும் முருகனும் படிப்பதற்கல்லவா இந்த ஃபவுன்டேஷன் ஸ்காலர்ஷிப் கொடுக்கிறது!

”நளியின் வழக்கறிஞருக்கு இந்த சந்திப்பு எப்போது தெரிந்திருக்கும் என நினைக்கிறீர்கள்?”

”துரைசாமி, நளினியின் வழக்கறிஞர் மட்டுமல்ல.
விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் திராவிடர் கழகப் பிரமுகர்.  அவர், எதுவுமே தெரியாதது போல தனது தரப்பு ஆட்களை விட்டுத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்  பிரியங்கா-நளினியை சந்தித்து விட்டுச் சென்ற விவகாரத்தை சிறைத்துறை அதிகாரிகளிடமிருந்து புதுசாகக் கேட்பதுபோல் கேட்கிறார். ரகசியமாக நடந்த சந்திப்பை இதன் மூலம் உலகறிய வெளிப்படுத்துகிறார். அப்படியென்றால், பின்னணியில் மிகப் பெரிய நாடகம் நடந்து கொண்டிருக்கிறது என்றுதானே அர்த்தம்?

அவரைவிடுங்கள்… தமிழ்நாடு காங்கிரஸார் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்? ராஜீவ் கொலை பற்றி விசாரணை நடத்திய வர்மா கமிஷன், ‘ராஜீவ் இறப்பதற்கு முன்னால் காங்கிரஸ்காரர்கள் அவருடைய பாதுகாப்பைக் குலைப்பதில் நடந்த விவகாரங்களைக் குறித்து நிறைய விசாரிக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறது. அதுபற்றி என்றைக்காவது சோனியா யோசித்தாரா?
ஆனால், வர்மா கமிஷன் ஃபைல்களைத் தொலைத்ததில் பொறுப்பு உள்ள ப.சிதம்பரத்துக்கு நிதியமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்திருக்கிறார். புலிகளுக்கு இரங்கற்பா பாடும் தி.மு.க-வோடு கூட்டணி ஏற்படுத்திக்கொள்கிறார்.”

—————
பேட்டி இன்னமும் முடியவில்லை ……

( தொடர்கிறது – பகுதி- 11-ல் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to ராஜீவ் குடும்பத்தின் பத்தாயிரம் கோடி சொத்து இன்று யாரிடம் இருக்கிறது ? கேட்பது சு.சுவாமி….!! (சா.சா. பகுதி -10 )

 1. K.Raghavendra சொல்கிறார்:

  A Y Y O……

 2. today.and.me சொல்கிறார்:

  கா.மை. ஐயா,

  //-( நண்பரா ..? பகைவரா….? )-//
  இரண்டுமுறை கேள்வி கேட்டுவிட்டதால் எனக்குத் தெரிந்த பதிலை உள்ளிடுகிறேன்.

  பஞ்சதந்திரம் என்றால் ஐந்து தந்திரங்கள் என்று பொருள். அவை 1. மித்ரபேதம் (சிநேகத்தைக் கெடுத்துப் பகை உண்டாக்கல்), 2.சுகிர்லாபம் (தங்களுக்குச் சமமானவரோடு கூடி பகையில்லாமல் வாழ்ந்திருத்தல்), 3.சந்திவிக்கிரகம் (பகைவரை நண்பன்போல நடித்து அடுத்துக் கெடுத்தல்), 4.அர்த்த நாசம் (தன் கையில் கிடைத்தப் பொருளைக் கொண்டு பகைவரை அழித்தல்), 5.அசம்பிரேட்சிய காரித்துவம் (ஒரு காரியத்தைத் தீர விசாரிக்காமல் செய்தல்) என்பனவாகும். இந்தத் தத்துவதைக் கரைத்துக் குடித்து பி.எச்டி. செய்தவர்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே ( today.and.me ),

   பிரணமாதம் …. பிரணமாதம்….!!!
   (இந்த வார்த்தையை யார் முதல் முதலாக
   உச்சரித்தார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா …? )

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    நானும் ‘தெரியாது’ என்று சொல்ல யோசித்துக்கொண்டே ……. நண்பர்கள் யாராவது பதிலளித்துவிடுவார்கள் தெரிந்துகொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டே …….இரண்டு நாட்களைக் கடத்திவிட்டேன். ம்ஹும்.
    கா.மை. நீங்களாவது புதிரை அவித்துவிடுங்களேன்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா …!

     இதற்கு நீங்கள் சரியான பதிலை அளித்திருந்தீர்கள் என்றால் –
     எனக்கு உங்கள் வயது ( தோராயமாக ) தெரிந்திருக்கும் …….!!!

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • Ganpat சொல்கிறார்:

      நல்ல வேளை! நான் சொல்லவில்லை!! 😉

     • today.and.me சொல்கிறார்:

      அன்பின் கா.மை.
      நான் பதிலை சா.சா. தொடருக்குள் சம்பந்தப்பட்டவர்கள் யாராவதாக இருக்கலாம் (ஒருவேளை சுசுவே கிள்ளைத் தமிழில் சொல்லி இருக்கக்கூடும் என்றுகூட) என்று எண்ணி கையைப்பிசைந்து நம்பியார் போலத் தேடிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் பாட்டுக்கு அவுட்-ஆப்-சிலபஸ் கேள்வி கொடுத்துவிட்டீர்களே?. இதை ஒத்துக்கொள்ளவே மாட்டேன். திரைத்துறையிலிருந்து பாலையாவை நான் எதிர்பார்க்கவில்லை.

      தூத்துக்குடி சுந்தன்கோட்டை பாலையாவாக இருந்தால் என்ன திருநெல்வேலி சுப்பிரமணியபிள்ளை பாலையாவாக இருந்தால் என்ன டி.எஸ்.பாலையாவாகவே மாறி தாங்கள் என் பின்னூட்டத்தைப் பாராட்டியவிதம் // பிரணமாதம் …. பிரணமாதம்….!!! //
      🙂 🙂

      கண்பத் சார்,
      இப்போதான் சொல்லிட்டீங்களே…
      🙂

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர்கள் கண்பத் / todayandme,

      அடுத்த இடுகை –
      “முதல்வர் அவர்களே –
      டாக்டர் சு.சு.வுக்கு எழுதுங்கள் …..”

      – உங்கள் ‘பேய்’ விளக்கங்களுக்காக
      காத்துக் கொண்டிருக்கிறது……

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

 3. Prakash சொல்கிறார்:

  Matrix movie la varra circuit connections mathuri irukku.

 4. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  வர்மா ஆணையம், இராசீவ் பாதுகாப்புக் குறித்து காங்கிரசுக்காரர்களை விசாரிக்கச் சொன்னது பற்றி மட்டுமா சோனியா அக்கறையில்லாமல் இருக்கிறார்? ஜெயின் ஆணையம் உன்னை விசாரிக்கச் சொன்னதே சுப்பிரமணியா! அதைப் பற்றிக் கூடத்தான் அவர் கவலைப்படாமல் திரிகிறார்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.