முதல்வர் அவர்களே – டாக்டர் சு.சு.வுக்கு எழுதுங்கள் ….. மோடிஜிக்கு எழுதிப் பயனில்லை….

 

கருணையின் மொத்த உருவம் – பகவான் புத்தரின் வழிவந்த, ராஜபக்சே அவர்களின் நல்லாட்சி நடைபெறும் இலங்கையில் –
நேற்று தூக்குதண்டனை விதிக்கப்பட்ட தமிழகத்தைச்
சேர்ந்த 5 மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற, மாண்புமிகு
தமிழக முதல்வர் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி
அவர்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாக செய்திகள்
வெளியாகி இருக்கின்றன….

மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது
தமிழக அரசுக்கு இருக்கும் அக்கறையும், அனுதாபமும்
தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.
இருந்தாலும், அரசியல் சட்டப்படி,
தமிழகத்திற்கு இலங்கையை நேரடியாக
கையாளக்கூடிய அதிகாரம் இல்லையே.

தமிழகத்திற்கு இது விஷயத்தில், செயல்பட
அதிகாரம் இல்லை என்பதால்,
தமிழக முதல்வரிடமிருந்து பிரதமர் அவர்களுக்கு,
உதவி கோரி இதுவரை எத்தனையோ கடிதங்கள்
போயிருக்கின்றன. ஆனால் பதில் என்று எதாவது
இதுவரை வந்திருக்கிறதா …?

பாவம் பிரதமர் – அவர் எதையென்று கவனிப்பார் …?

மாறி மாறி வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் –
மாநிலங்களில் தேர்தல்கள் –
ஹரியானா, மஹாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர்,
ஜார்கண்ட் என்று ….
ஒரு நாளைக்கு ஐந்து முறை உடை வேறு மாற்ற வேண்டும்….
இடையிடையே, துடைப்ப ஷோக்கள், ‘ஒற்றுமை ரன்’கள் வேறு.
அடுத்து ஆஸ்திரேலியா வேறு போய் அவர்கள்
பாராளுமன்றத்தில் இந்தியில் உரையாற்றியாக வேண்டும்.

எனவே பிரதமர் மோடிஜி அவர்களுக்கு இது குறித்து கவனிக்க நேரமில்லையோ என்னவோ…. இருந்தால் செய்திருக்க மாட்டாரா என்ன …? ஏற்கெனவே 200 மஹாராஷ்டிரா மீனவர்களையும், 60 படகுகளையும் பாகிஸ்தானிடமிருந்து மீட்டுத் தந்தவருக்கு இது ஒரு பெரிய காரியமா என்ன ….?

பிரதமரால், எல்லாவற்றையும் கவனிக்க இயலாது என்பதால் தான் தமிழ் நாட்டுக்கு என்றே, தமிழர் நலனில் மிகுந்த அக்கறை காட்டும் பாஜக மூத்த தலைவரான டாக்டர் சு.சு. அவர்களை நேர்ந்து விட்டிருக்கிறார்….

எனவே, தமிழகத்திற்கு, குறிப்பாக இலங்கையிலிருந்து
உடனடியாக எதாவது நடக்க வேண்டுமென்றால் –
திருவாளர் டாக்டர் சு.சு. அவர்களுக்கு கடிதம் எழுதும்படி
கேட்டுக் கொள்கிறேன். அவர் ராஜபக்சே அவர்களுக்கு
ஒரு ‘போன்’ போட்டாலே போதும். அடுத்த கணம் மீனவர்கள் விடுதலைபெற்று விடுவார்கள்.

இவருக்குப் போய் கடிதமா … என்றெல்லாம்
தயவுசெய்து யோசிக்க வேண்டாம் ..
வேறு வழி இல்லை ….
என்ன செய்வது… பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்,
புளிய மரத்தில் தானே குடித்தனம் செய்ய வேண்டும்….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to முதல்வர் அவர்களே – டாக்டர் சு.சு.வுக்கு எழுதுங்கள் ….. மோடிஜிக்கு எழுதிப் பயனில்லை….

 1. Srini சொல்கிறார்:

  Final touch…” பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்,
  புளிய மரத்தில் தானே குடித்தனம் செய்ய வேண்டும் ” —— SUUUUUUPPPPPPEEEEEEEEEEERRRRRRRR

  • Sundar சொல்கிறார்:

   இதில் பேய் யார் ?

   ஜெ ?
   ஓ பி ?
   மோடி ?
   இராச பக்ச?
   பிஜேபி க்கு வோட்டு போடாத தமிழக மக்கள் ?

   சரியாக யார் என்று சொன்னீர் களானால் , சில மரமண்டைகளுக்கு விளங்கும்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர்கள் சுந்தர் / ஸ்ரீநி,

    என்னையும் அறியாமலே, இந்த இடுகையில்
    நான் ஒரு ( நல்ல …? ) ‘பஞ்ச்’ கொடுத்து விட்டேன்.

    யார் அந்தப் ‘பேய்’ என்பதை நான் விளக்குவதை
    விட, நமது நண்பர்கள் ஆளாளுக்கு எப்படி
    விளக்கப் போகிறார்கள் என்று பார்க்கவே
    நான் விரும்புகிறேன். இந்த வலைத்தளம் –
    மாறுபட்ட கருத்துக்களுக்கு இடம் கொடுக்கும்
    தளம் தானே ….!!

    மாறுபட்ட விளக்கங்களை பார்க்கும் ஆவலுடனும்,

    -வாழ்த்துக்களுடனும்,
    காவிரிமைந்தன்

 2. R.Ramachandran சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  பாஜக வின் ஹெச்.ராஜா இன்று கொடுத்துள்ள ஒரு
  பேட்டியிலிருந்து, இந்த தலைப்புக்கு சம்பந்தமுள்ள
  சில கருத்துக்கள் உங்கள் கவனத்திற்கு :

  “என்ன இருந்தாலும், சுவாமி பாஜக வின் சீனியர் லீடர்.
  டெல்லியில் எல்லாத் தலைவர்களுடனும் தொடர்பில்
  இருப்பவர். அந்த தொடர்பை பயன்படுத்தி மீனவர்களின்
  படகுகளை மீட்பதாகக் கூறியிருக்கிறார். இது நல்ல
  விஷயம் தானே “

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ராமச்சந்திரன்,

   டாக்டர் சு.சு. வெற்றிகரமாக தமிழக பாஜக விற்குள்
   ஊடுருவி விட்டார். அவர் க்ரூப்பிற்கான முதல் ஆசாமி
   தான் திரு.ஹெச்.ராஜா.

   இனி தமிழக பாஜக விலும் சு.சு. புகழ் பரவத் துவங்கும்.

   தகவலுக்கு நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. today.and.me சொல்கிறார்:

  முதல் மூன்று பத்திகளுக்கும் சேர்த்து :

  சுவாமி பிரதமருக்கு (இந்தியப்…. தான்) எழுதிய கடிதம் என்றால் பிரதமர் அலுவலகம் பெற்றுக்கொண்டதாக ஒப்புகை அளிப்பதோடல்லாமல் அக்கடிதத்தின்மீது மேல் நடவடிக்கைக்கும் உடனடி உத்தரவாதம் அளிக்கிறது. மைய அரசைப் பொறுத்தவரை: (தமிழக) மக்கள் தானே, கிடக்கட்டும் விடுங்கள். அவர்கள் ஒன்று தமிழ்நாட்டில் இருந்து போராட்டம் செய்வதாகப் பேர்பண்ணிக்கொண்டிருப்பார்கள். அல்லது கடலில் மீன்பிடிக்கிறேன் என்று சொல்லி இலங்கைப் படையினரிடம் மாட்டிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு வேறு வேலையே கிடையாது. (ஆமாம். தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலத்தவர் அனைவரும் தமிழ்நாடு-இலங்கைப் பிரச்சினையை இப்படித்தான் புரிந்துகொண்டிருக்கிறார்கள் / அல்லது மீடியாக்களால் புரியவைக்கப்பட்டிருக்கிறார்கள்)

 4. today.and.me சொல்கிறார்:

  எனவே ……………… பாகிஸ்தானிடமிருந்து மீட்டுத் தந்தவருக்கு இது ஒரு பெரிய காரியமா என்ன ….?

  பாகிஸ்தான் பிரதமர்-இந்தியப் பிரதமர்-இலங்கை அதிபர் மூவரும் ஒரே கவுண்டர்பார்ட் என்று கணித்துவிட்டீர்களா கா.மை? மிகவும் சரி. ஆனால் பாகிஸ்தான் மக்கள்-இந்திய மக்கள்-இலங்கை மக்கள் மூவரையும் ஒரே நேர்கோட்டில் வைக்க இயலாது. ஏனென்றால் இந்தியாவுக்குள்ளும் இலங்கைக்குள்ளும் தமிழர்கள் என்ற (பிரி)வினை ஒன்று இருப்பதால் அதற்கு ஒரு எதிர்வினையை எப்போதும் எதிர்பார்த்தே இருக்கவேண்டியுள்ளது.

 5. today.and.me சொல்கிறார்:

  // நேர்ந்து விட்டிருக்கிறார் //

  கோழி, ஆடு, மாடு, முடி போன்றவற்றை நேர்ந்துவிடக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவை எல்லாமே இறுதியில் வைத்திருப்பவரால் காணிக்கை கொடுக்கப்படுபவை ஆயிற்றே. மத்திய அரசு தமிழகத்தில் பாஜகவை நிறுவுவதற்காக சுசு-வை நேர்ந்துவிட்டுவிட்டார்களா என்ன? அப்படியானால் சுசு-வுக்கு அசைன்மெண்ட் முடிந்தவுடன் கல்தா தானா?!! திருநெல்வேலிக்கே அல்வாவா பழைய சொலவடை. புதியதாக, பழனிக்கே பஞ்சாமிர்தமா? 🙂 🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் todayandme,

   “நேர்ந்து விட்டிருக்கிறார்” என்கிற வார்த்தை
   என் உள் உணர்வுகளிலிருந்து வந்தது.
   அதற்கான சில காரணங்களை நான் உணர
   முடிகிறது. இது பற்றி தனியாக ஒரு இடுகை
   போட்டால் தான் தெளிவாகச் சொல்ல முடியுமென்று
   நினைக்கிறேன்.

   அதற்கென்ன எழுதினா போச்சு…..
   இப்போதைய assignment-கள் தீரட்டுமே….!!

   (உங்கள் மற்ற பின்னூட்டங்களுக்கு
   சிறிது அவகாசம் எடுத்துக் கொண்டு வருகிறேனே…!! )

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. today.and.me சொல்கிறார்:

  பிரதமரின் தற்போதைய வேலைப்பளுவைக் குறித்து நான் இப்போது ஒன்றும் சொல்லப்போவதில்லை. அவர்கள் புதிதாக வந்த மருமகளாயிற்றே நாடுபழகட்டும் என்று அட்லீஸ்ட் ஆறு மாதங்கள் முடிவதற்காக பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருக்கிறேன்.

  கடைசி இரண்டு பத்திக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது. மீண்டும் வருகிறேன்.

 7. புது வசந்தம் சொல்கிறார்:

  மிக சரியான பதிவு. ஒருத்தர் பேசாமல் இருந்தார், இவர் உலகமெல்லாம் போய் பேசுகிறார். மாற்றம் வரும், இன்னும் எத்தனை தலைமுறை காத்திருக்க வேண்டுமோ ?

 8. Srini சொல்கிறார்:

  Dear Km Sir…..

  சு.சு…… Su Su endral enna sir….. because I remember my small daughter used to Su Su and run to the bathroom…. may be u hv named him correctly becoz ” athirathai adikinalum, muthirathai adaka mudiyathu….” Su Su is a maverick… he / it cannot be contolled and not good for the nation or health.. 🙂

 9. today.and.me சொல்கிறார்:

  காட்சி 1
  எந்த மொழிப் பத்திரிகையும் எந்த மொழித் தொலைக்காட்சியும் இந்தியப்பிரதமர் பதவியேற்பின்போது இலங்கைஅதிபரின் இந்தியவருகையை முன்னிட்டு அங்கு சிறைவைக்கப்பட்டிருந்த எல்லாத் தமிழ் மீனவர்களும் விடுவிக்கப்படுகிறார்கள் என்று கூறினவே அன்றி இந்த ஐவர் தவிர என்று சொல்லவே இல்லை. அந்த மீனவர்கள் எல்லாரும் வந்தபிறகாவது இந்த ஐவர் இன்னும் அங்கேதான் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அணுக்கர்களுக்கு மட்டுமே தெரிந்த இதை திட்டமிட்டே மீடியாக்கள் அல்லது மீடியாக்கள் மூலமாக அயல்நாடுகள் துறை மக்களிடையே பரவாதவண்ணம் மறைத்துள்ளன.

  காட்சி 2
  இலங்கையைப் பொறுத்தவரை அண்டைநாட்டுடன் (தமிழ்நாட்டுடன்) பிரச்சினை வரும், ஆனால் (இந்தியாவுடன்) வராது நிலைதான். எனவே அவர்கள் என்ன நிலைப்பாடு எடுத்தாலும் இந்தத் தீர்ப்பு கீழ்க்கோர்ட்டில்தான் என்பதால் மேல் நடவடிக்கைக்காக இவர்கள் காத்திருக்கும் நேரத்தில் தமிழ்நாட்டின் பெருந்தலைகளை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர முயலும் நோக்கமாகத்தான் தெரிகிறது. (சட்டத்துக்குத் தெரியாமல் எத்தனை தலைகளை வேண்டுமானாலும் கொன்று குவிப்பார்கள், ஆனால் சட்டத்துக்குத் தெரிந்து இவை நடப்பதால், தூக்குத்தண்டனை குறைக்கப்பட்டு அங்கேயோ அல்லது இங்கேயோ அனுப்பிவிடப்படுவார்கள் என்று நம்பிக்கை தோன்றுகிறது)

  காட்சி 3
  5பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அன்று பிரதமர் அலுவலக ட்வீட்டர்கள்: இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளோர் முன்னாள் பெருந்தலைவர்கள் என்றாலும் இறந்துபோனவர்களை தான் மறந்துவிடாமல், ஆனால் மற்றவர்கள் மறக்கும்வண்ணம் அந்த நாட்களுக்குப் புதுப்பெயரிட்டு அழைத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
  //Sardar Patel’s life is a journey of deep-rooted courage, dedication & service to the Motherland. He is truly the architect of Modern India.//6.50 PM
  //I join my fellow countrymen & women in remembering former PM Smt. Indira Gandhi on her Punya Tithi.// 6:52 PM – 30 Oct 2014 @narendramodi.twitter.com
  //Our culture and legacy is of Unity in Diversity. Let us rise over differences of creed, community, language: PM//7:37 PM – 30 Oct 2014@narendramodi.twitter.com

  காட்சி 4
  5பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அன்றே, தமிழர்களுக்காக பாடுபடும் சுவாமி ட்வீட்டியிருக்கிறார்.
  //Written letter to Pres Rajapaksa & Namo that under a 2010 bilateral pact the convicted Tamils be transferred to Tihar to appeal to our SC // 8:55 PM – 30 Oct 2014 @swamy39.twitter.com

  காட்சி 5
  நான்கு புள்ளிகளையும் இணைத்து நாற்பதுகோலங்கள் வேண்டாம் அட்லீஸ்ட் நான்கு கோலங்கள் போட்டுவிடலாம்.
  ஒருவர் எப்பொழுதுமே – எல்லோருக்குமே – நல்லவராகவே – தெரியமுடியுமா? சாதாரணமானவர்களால் முடியாது. சில தெய்வப்பிறவிகளுக்கு இது சாத்தியம். எப்படி என்று கேட்கிறீர்களா?

  1.அன்றாடப் பிரச்சினை இல்லாத மனிதர்களே இல்லை. அவர்களது அன்றைய பிரச்சினைகளைத் தீர்க்க உதவலாம் அல்லது உதவுவது மாதிரி நடிக்கலாம். (நல்லவராக காட்சியளிப்பது எளிது)
  2.அன்றாடம் ஒருபிரச்சினையும் கிடையாது. நீங்கள் எதிர்பாராத வேறு ஒரு பிரச்சினை சிலருக்கு இருக்கலாம். அவற்றை யோசித்துச் சொல்லவைத்து அவற்றுக்கு தீர்வு காண உதவலாம் அல்லது உதவுவது மாதிரி நடிக்கலாம். (நல்லவராக காட்சியளிப்பதற்கு கொஞ்சம் மெனக்கெடவேண்டும்)
  3. இது இரண்டுமே இல்லாத மக்கள் இருக்கிறார்களே, அவர்கள் ரொம்ப டேஞ்சரஸ். தங்கள் மூளையை ஃப்ரீயாக வைத்துக்கொண்டு இந்த நல்லவர்மாதிரி காட்சியளிக்க விரும்புகிறவர்களின் பின்புலத்தைப் புரிந்துகொண்டுவிடுவார்கள். எனவே அவர்கள் கவனத்தை திசைதிருப்பி அவர்களைக் கவிழ்ப்பதற்கு அவர்களுக்கு ஏதாவது தொல்லையைக் கொடுத்து தன்னைத் தேடவைக்கவேண்டும். எந்தத் தொல்லையும் கொடுக்கமுடியாதபடி அந்த மக்கள் ஆள்அம்பு அற்ற அனாதையாகவோ எது நிகழ்ந்தாலும் கவலைப்படாதமாதிரி மனநிலைக்குப் போய்விட்டாலோ என்ன செய்வது? அப்போதும் விடக்கூடாது. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் இல்லையா? எனவே மனம்தளராத விக்கிரமாதித்தன் போல் அவர்கள் அன்பு எங்கே இருக்கிறதோ அங்கே அம்புவிடவேண்டும். பிறகு என்ன முருங்கை மரத்திலிருந்து வேதாளம் விழுந்துவிடும். பின்னர் அதைச் சுமந்துகொண்டுபோய் அசைன்மெண்ட்டை முடித்துவிட்டதாகப் பேர்பண்ணி, நல்லபெயர் எடுத்துவிடலாம்.

  ஆனால் எத்தனைமுறை வேதாளத்தை முதுகில் சுமந்துகொண்டு போய் அசைன்மெண்ட்களை முடிக்க முயன்றாலும் இடையில் மவுனம் கலைந்து (அல்லது சரியான பதிலினால்) மரத்துக்கு மரம் அலைந்துகொண்டேதான் இருக்கவேண்டும் இந்த பினாமி விக்கிரமாதித்தன்.

  இவரை இந்த அளவுக்குத்தான் உபயோகித்துக்கொள்ளவேண்டும் என்று அவர்களும் ஒரு அளவுகோல் வைத்திருப்பார்கள் அல்லவா, இவரை இதுவரை உபயோகித்துவந்த மற்றவர்களைப் போல் அல்ல இவர்கள், இவர்கள் மிகவும் திறமைசாலிகள்/புத்திசாலிகள்/யாரை எப்படி அடிக்கவேண்டும் எங்கே வைக்கவேண்டும் என்ற வித்தை தெரிந்தவர்கள். அந்த அளவுகோல் தமிழகத்தில் பாஜக வின் ஆட்சி. அவ்வளவுதான்.
  ——————————–
  கா.மை.,
  ஆக்சுவலா நீங்க இந்த பதிவை சா.சா. தொடர்ல சேர்த்திருக்கலாம்.

  டீக்கடையிலிருந்து வந்த மோடி மாநில முதல்வர் மற்றும் பிரதமராகும்போது, ஓபி ஒருமுறைக்கு இருமுறையாக தமிழக முதல்வர் ஆகும்போது,

  புள்ளியியல் துறை தலைவரிடமிருந்து வந்த மயிலாப்பூர் தமிழர், பொருளியல் மேதை, பன்மொழி வித்தகர், அப்பனுக்கே பாடம்சொல்லும் தகப்பன் சுவாமி, ஹார்வர்ட் டாக்டர் சுசு தமிழக முதல்வர் பதவிக்கு ஆசைப்படக்கூடாதா என்ன? அப்படி ஆசைப்பட்டால் தமிழர்களின் மானம், பிரபலமானவர்களின் மரணம், இலங்கையின் நண்பர், தமிழர், மீனவர், படகுகள், ஜெ, சசி, பசி, ம்…விட்டுட்டேனே… 2ஜி, கனி, ராசா, இவற்றில்தானே குடித்தனம் செய்தாகவேண்டும்.

  ஒருவேளை மத்தியில் நிதிமந்திரிக்கு ஆசைப்பட்டால்… அதுபற்றி பதிவு நீங்கள் எழுதும்போது லிஸ்ட் ..தருகிறேன்.

 10. Ganpat சொல்கிறார்:

  நண்பர் today.and.me;
  பிய்த்து உதறி விட்டீர்கள்..உங்கள் பெயர் இனி Tsunami!! 🙂 🙂

 11. Ganpat சொல்கிறார்:

  யார் அந்த பேய்?
  மொத்தம் ஐந்து பேய்கள்.
  வாழ்க்கைப்பட்ட த்ரௌபதி, தமிழர்களாகிய நாம்.

 12. today.and.me சொல்கிறார்:

  அன்பின் கா.மை. மற்றும் நண்பர்களுக்கு ஒரு அப்டேட்,

  தற்போது (2 நவம்பர் 2014 இரவு 8.50) வரை வேறு எந்த தமிழ் பத்திரிகைகளிலும் வராத தமிழிசை அவர்களின் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி தி இந்துவில் November 2, 2014 16:02 IS மணிக்கு வெளியாகி உள்ளது.
  ————-
  5 மீனவர்களுக்காக வாதாடுவதற்கு இலங்கையின் தலைசிறந்த வழக்கறிஞர் அனில்சில்வா-வை இந்திய தூதரகம் நியமித்துள்ளது.
  …3 இலங்கை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை பொய்க் குற்றம் சுமத்தியுள்ளதாக ஆர்ப்பாட்டம் செய்துள்ளதும் இந்த வழக்கிற்கு வலு சேர்த்துள்ளது .

  இலங்கை மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து சட்டபூர்வமாகவும், ராஜிய தூதரக உறவுகள் மூலமாகவும் எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு அக்கறையுடன் எடுத்து வருகிறது.

  ….. மத்திய அரசின் முயற்சிகளை புரிந்துகொண்டு போராட்டங்களை நிறுத்தவேண்டும் என வேண்டுகிறோம்” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

  http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article6557718.ece?homepage=true&ref=relatedNews

  —————–
  (மீதி 2 மீனவர்கள்மீது உண்மைக்குற்றமா? அல்லது டைப்போவா? மீடியாக்கள் கொஞ்சம் பொறுப்போட செய்தி போட்டாத் தேவலை)

  ஆக்சுவலா இந்தப் பேட்டியை நம்ப சுவாமிகள் தான் கொடுத்திருக்கணும். தமிழ் அக்காவ விட்டு சொல்றதப்பார்த்தா, இதுல ஏதோ உள்குத்து இருக்குண்ணு தோணுது. அந்தக் குத்துல இருந்து எஸ் ஆகுறதுக்காக அக்கா பலிகடாவோன்ன ஒரு யோசனை.

  இந்த வக்கீல் எப்படிப்பட்டவர் யாருக்கு நண்பர் அல்லது யாருக்கு எதிரி என்பதை யாராவது தோண்டினால் தேவலை.

  ஆனால் எனக்கு ஒரு ஆச்சரியம். இது குறித்த தகவல் ட்வீட்டரில் அரச பரிபாலனம் செய்யும் குறிப்புகளில் எங்கேயும் காணோம். போனால்போகட்டும், தமிழ்நாட்டுக்கு என்று பி.ஜே.பி. ட்விட்டர் இருக்கிறதா, அஃபீசியல் அறிவிப்பு இருக்கிறதா என்று தேடினேன். ம்ஹும், அக்கண்ட்டே இல்லை. தபாஜக நண்பர்கள் எல்லாரும் எப்படி தலைமையுடன் பேசுவார்கள் என்று யோசிக்கிறேன். என் சிற்றறிவுக்கு எட்டியவரை நோ ஐடியா. ஆதி பாஷை தான் போலிருக்கிறது. 🙂 🙂

 13. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பரே (today.and.me ),

  உங்கள் தகவல்களுக்கு நன்றி.

  சுவாமி ட்விட்டரில் இது பற்றிய செய்தி ஒன்றையும்
  காணோம் என்பதால் சாமிகளை பின் தள்ள, இது
  த பாஜக வில் உள்ள ‘அக்கா’ கோஷ்டியின் முயற்சியாக
  இருக்கலாம்.

  அந்த வக்கீல் அனில் சில்வா, ராஜபக்சேயின் சட்ட
  ஆலோசகர் என்றும் ஒரு செய்தித் தளத்தில் படித்தேன்…!!

  எப்படி இருந்தாலும் சரி, இவர்கள் ஒருவரை ஒருவர்
  முந்தும் முயற்சியிலாவது நல்லது எதாவது நடந்தால்
  நல்லதே…!!

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.