“தப்பு” செய்தவர்கள் பலரும் “தப்பி” விட்டார்கள் …..! எங்கே நீதி – எங்கே நியாயம் ….? (சா. சா. – பகுதி- 12 )

ராஜீவ் காந்தி கொலை வழக்கு –
தமிழ்நாட்டின் கவனத்தை மிக மிக அதிகமாக ஈர்த்த
ஒரு வழக்கு. ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தை,
தமிழ்நாட்டு மக்கள் மிகவும் வேதனையுடனும்,
வருத்தத்துடன் தான் எதிர்கொண்டார்கள்.

இதில் ராஜீவ் மட்டுமல்ல – இன்னும் பலரும் உயிர் இழந்தனர்.

ஆனால், இந்த குற்றச் செயலில் –
சம்பந்தப்பட்ட அனைவரும் பிடிக்கப்பட்டார்களா…?
– இல்லை.

தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட்டனரா…? – இல்லை

தண்டனை அனுபவித்த அனைவரும் உண்மையில்
குற்றம் இழைத்தவர்கள் தானா …?
– இல்லை

விசாரணை முழுமையான அளவில் நிகழ்ந்ததா …?
அனைத்து கோணங்களும் பரிசீலிக்கப்பட்டனவா ..?
– இல்லை

கிடைத்த அனைத்து ஆதாரங்களும் உரிய
முறையில் பரிசீலிக்கப்பட்டனவா..?
– இல்லை

சந்தேகத்திற்குரிய அனைவரும்
உரிய முறையில் விசாரிக்கப்பட்டனரா..?
– இல்லை

இதற்காக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன்கள்
தங்கள் பொறுப்புக்களை முழுமையாக
நிறைவேற்றினவா …?
– இல்லை

உரிய தொடர் நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டனவா …?
– இல்லை

இந்த குற்றச்செயலின் உண்மைப் பின்னணியை
கண்டுபிடிக்க மத்திய அரசோ, காங்கிரஸ் கட்சியோ,
ராஜீவின் குடும்பத்தினரோ – முனைப்பு –
– முழு அக்கரை காட்டினரா ….?
– இல்லை

– இந்த இத்தனை கேள்விகளுக்கும்
பதில் ஒன்று தான் – இல்லை, இல்லை, இல்லை…..!!!
பின்னர் இதில் நீதி எங்கே..? நியாயம் எங்கே …?

ராஜீவ் கொலை வழக்கு விசாரணை நடைபெற்று,
பலர் தண்டிக்கப்பட்டு – சட்டத்தின் முன் நிறைய சடங்குகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக காட்டப்பட்டிருந்தாலும் –

கொலையில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய முக்கியமான சிலர்- விசாரணை வட்டத்திற்குள்ளேயே கொண்டு வரப்படவிலை –
ராஜீவின் கொலைக்கு காரணமானவர்கள் சிலர் காங்கிரஸ் கட்சியின் உள்ளேயும் இருந்தார்கள் / இருக்கிறார்கள் –
அவர்கள் பக்கம் சட்டத்தின் பார்வை போகவே இல்லை என்பது இன்னமும் பலரால் விவாதிக்கப்படும் ஒரு கருத்து.

இத்தகைய ஒரு கருத்து உருவாக அடிப்படையாக
அமைந்த காரணங்கள் எவை …?

குற்றச் சம்பவம் நடந்தபோது மத்திய அரசின் சட்ட அமைச்சராக இருந்தவர் திருவாளர் சுப்ரமணியன் சுவாமி. அவரது அப்போதைய நெருங்கிய கூட்டாளி /நண்பர் திருவாளர் சந்திராசாமி.
– இவர்கள் இருவரும் சம்பவம் நடந்த அன்று சென்னையில் இருந்ததாக வெளிப்படையாக கூறப்படுகிறது. ஆனால், இன்று வரை இவர்கள் இருவரும் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. அவர்கள் அன்றிரவு
சென்னையில் இல்லை என்றால், அவர்களால் அதை ஏன்
நிரூபிக்க முடியவில்லை …? இருந்தார்கள் என்றால்,
அதற்கான காரணமென்ன என்பதை அவர்கள் ஏன் சொல்ல மறுக்கிறார்கள். சிறப்பு புலனாய்வு குழுவோ, ஜெயின் விசாரணைக்குழுவோ – இதை விரிவாக விசாரிக்காதது ஏன் ..? திருமதி சோனியா காந்தி அவர்களும் இதை வற்புறுத்தாதது ஏன் ..?

ராஜீவ் காந்தியின் மரணத்தின் காரணமாக,
அடுத்தபடியாக பிரதமர் பொறுப்பை ஏற்று ஏறக்குறைய
5 ஆண்டுகள் மத்திய அரசை தலைமை தாங்கி நடத்திச்
செல்லும் வாய்ப்பை பெற்றவர் – திருவாளர் நரசிம்மராவ்.
ஜெயின் கமிஷன் கோரிய ஆவணங்கள் கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்படவும், சில முக்கியமான ஆவணங்கள் தொலைக்கப்பட அல்லது அழிக்கப்பட காரணமாக இருந்தது –
இவர் தலைமையிலான மத்திய அரசே…
சந்திராசாமியையும் , சுப்ரமணிய சுவாமியையும் பாதுகாக்க நரசிம்ம ராவ் அரசு மிகத்தீவிரமாக செயல்பட்டது என்று பலரும் குற்றம் சாட்டுகின்றனர். நரசிம்ம ராவ், அந்த இருவரையும் பாதுகாக்க
முயன்றது ஏன்….?

ராஜீவ் காந்தியின் அகால மரணத்தின் காரணமாக –
நேரு / இந்திரா / ராஜீவ் காந்தியின் அத்தனை குடும்ப
சொத்துக்களுக்கும்,
இந்தியாவை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சிக்கும் –

ஏகபோக உரிமையாளர் ஆனவர் திருமதி சோனியா காந்தி.

ராஜீவ் கொலை வழக்கில் – விசாரணை சரியான கோணத்தில் நடைபெறவில்லை என்பதை அறிந்திருந்தும், அதை சரி செய்யவோ, விசாரணை வளையத்திற்குள் வராத – சந்தேகத்திற்குரிய பலரை – உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்த உரிய அக்கரையோ காட்டாமல் இருந்தார் அவர்.

உண்மையில் இவர்கள் எல்லாருடைய நடவடிக்கைகளுமே – விசாரணை சரியான முறையில், சரியான கோணத்தில் – செல்லாமல் இருப்பதே நல்லது என்பது போல் தான் அமைந்திருந்தன.

பல சந்தேகங்கள் தெளியாமலே இருப்பதை –
வேண்டுமென்றே குட்டை குழப்பப்படுவதை – இவர்கள்
தெரிந்தே அனுமதித்திருக்கிறார்கள். அதற்கு ஒத்துழைத்தும் இருக்கிறார்கள்.

புலன் விசாரணை அமைப்பு ஒரே ஒரு கோணத்தில் மட்டுமே தன் பார்வையை செலுத்தி இருக்கிறது. கொலைக்கு காரணம் –

விடுதலைப்புலிகள் என்பதைத் தாண்டி,
பின்னணியில் மற்ற சிலரும் இருக்கலாம்
என்கிற கோணத்தை கடைசி வரை ஏற்கவே இல்லை.

ராஜீவ் மரணமடைந்தது 21 மே,1991 அன்று.
சிபிஐ குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது –
20 மே, 1992 அன்று.

கிட்டத்தட்ட ஒரு வருட புலனாய்வுக்குப் பிறகு,
சிபிஐ, மொத்தம் 26 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்திருந்தது. கீழ் கோர்ட்டால் தண்டிக்கப்பட்ட 26 பேரில் – 19 பேர்கள் சுப்ரீம் கோர்ட்டால் விடுவிக்கப்பட்டு விட்டார்கள். கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் அவர்கள் குற்றம் செய்யாமலே
சிறையில் தண்டனை அனுபவித்ததாக ஆகிறது.

மீதி 7 பேர் – அநேகமாக அவர்கள் எஸ்.ஐ.டி.யின் வசம்
இருந்தபோது கொடுத்திருந்த ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே தண்டிக்கப்பட்டனர்.

ராஜீவ் கொலை வழக்கைப் பற்றி இதுவரை பல பேர்,
பல புத்தகங்கள் எழுதி, வெளி வந்து விட்டன. அவற்றிலிருந்து இன்னும் சில காரணங்கள் –

சம்பவம் நிகழ்ந்த அந்த கூட்டத்தில் டெரில் பீட்டர் என்கிற
பிஸினஸ்மேன் ஒருவரும் வெடிவிபத்தில் சிக்கி இறந்து
போனார். அவர் மே 30தேதி அமெரிக்கா போவதற்காக அவரது பெயரில் விமான டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது.
அந்த ஆள் உண்மையில் எப்படி, ஏன் அங்கு வந்தார் ?
ஸ்ரீபெரும்புதூருக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் ….?

அவரது மனைவி மத்திய பொதுப்பணித் துறையில்
பணி புரிந்து கொண்டிருந்தார். இந்த சம்பவத்திற்குப்
பிறகு அவர் அமெரிக்கா போய் செட்டில் ஆகி விட்டதாகத்
தெரிகிறது. இந்த சம்பவத்தில் அவர் எந்த அளவிற்கு, எப்படி சம்பந்தப்பட்டிருந்தார் ?

ஐபி டைரக்டர் எம்.கே.நாராயணன் அந்த நிகழ்ச்சியின்
போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தம்மிடம் இருப்பதாக கேபினட் செயலாளருக்கு எழுதிய கடிதம் ஒன்று ஆவணங்களில் இருக்கிறது. ஆனால் – இந்த வீடியோ – ஆவணமாக கோர்ட்டில் சேர்க்கப்படவில்லை. பின்னர், ஜெயின் கமிஷன் கேட்டும் கூட அது கொடுக்கப்படவில்லை.

எஸ் ஐ டி கஸ்டடியில் இருந்தபோது, தப்பி ஓடியதாக
சொல்லப்பட்ட மிராசுதார் ஷண்முகம் மர்மமான முறையில் இறந்தார். அதற்கான காரணங்கள் இன்னும் வெளி வரவில்லை.

சிவராஜனின் டைரிகளில் ஒன்றில் – சிவராஜன்
போபாலுக்கு (மத்திய பிரதேசம்) சென்றதும்,
TAGக்கு ஒரு கோடியே எழுபத்திஆறு லட்சம் ரூபாய்
கொடுத்ததும் 13 மார்ச் 1991 தேதியிட்டு எழுதப்பட்டு
உள்ளது. இநத TAG யார் என்றும் எதற்காக இந்த
பணப்பரிமாற்றம் நடந்தது என்பதும் கண்டு பிடிக்கப்படவே இல்லை.

மரகதம் சந்திரசேகரின் மகன் லலித் சந்திரசேகருக்கு
ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்காக,
தான் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்ததாக சிவராஜன்
தன் டைரியில் எழுதி வைத்துள்ளார். இந்த தகவலை,
திரு ரகோத்தமன் (ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த
முக்கிய சிபிஐ விசாரணை அதிகாரி) அண்மையில்
வெளியிடப்பட்ட தன் புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.
ஆனால், கொலை வழக்கு விசாரணை நடந்தபோது,
கோர்ட்டில் இந்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.
சிவராஜனின் டைரியும் ஆவணமாக
ஒப்படைக்கப்படவில்லை !

சிவராஜன் லலித்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்ததன் பின்னணி பற்றி, தொடர்ந்து விசாரிக்கப்படவே இல்லை…!!
இத்தனைக்கும் லலித் சந்திரசேகரின் மனைவி ஒரு
இலங்கைத் தமிழர் வேறு !

சிவராஜனின் டைரியில் ராஜீவ் காந்தி –
விசாகப்பட்டினத்திலிருந்து கிளம்பும் நேரமும்,
சென்னை வந்து சேரும் நேரமும் குறித்து
வைக்கப்பட்டிருக்கிறது.
பின்னர், விசாகப்பட்டினத்தில் ராஜீவ் விமானம்
யந்திரக் கோளாறு காரணமாக புறப்படத் தாமதம்
ஆன விஷயம் கூட சென்னையில் இருந்த சிவராஜனுக்கு
யாராலோ தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கண்ணுக்குத் தெரியாமல் இயங்கிக் கொண்டிருந்த இந்த நபர் யார் என்பது கடைசி வரை கண்டறியப்படவே இல்லை…

சிவராஜன் குழுவினர் அத்தனை பேரையும் உயிருடன்
பிடித்திருக்க வாய்ப்புகள் இருந்தும், அதற்கான உரிய
முயற்சிகள் செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இவர்களை வளைக்க எஸ்.ஐ.டி. 4 நாட்கள் எடுத்துக் கொண்டது. விளைவு – யாரும் உயிருடன் சிக்கவில்லை.

இதில் சுப்ரமணியன் சுவாமியே கிளப்பும் ஒரு கேள்வி தான் விசித்திரமானது…. நீண்ட நாட்கள் கழித்து புலன் விசாரணை குறித்து சில கேள்விகளை எழுப்பும் அவர்,
ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடிப்பில் இறந்த தனு
போன்றோரின் உடல்களை நீண்ட நாட்கள் பாதுகாத்து வந்த விசாரணைக்குழு, சிவராசன் உடலை மட்டும் தாமதமின்றி தகனம் செய்ய அனுமதித்தது ஏன் ? எதை மறைக்க ..?
– என்று திருவாளர் சு.சு.வே கேட்கிறார் ..!!!

வெடிவிபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து, ஹரிபாபுவின்
காமிராவை போலீஸ் கைப்பற்றி இருந்தது. அதிலிருந்த
பிலிம் சுருளை 5 மணி நேரத்திற்குள்ளாக ப்ராசஸ்
செய்து புகைப்படங்களை எடுத்திருக்கலாம்.
குற்றவாளிகளின் புகைப்படங்கள் கிடைத்து, தேடுதலையும் உடனே துவக்கி இருக்கலாம். அது நடக்கவில்லை.

ஆனால் – இந்த புகைப்படங்கள் 25ந்தேதி திடீரென்று
“இந்து” பத்திரிகையில் வெளிவந்தன. போலீஸ் வசம்
இருந்த பிலிம் சுருளின் புகைப்படங்கள் இந்து பத்திரிகைக்கு கிடைத்தது எப்படி ? இதன் விவரங்கள் வெளியாகவில்லை…!

————–

வழக்கு நடந்து, பல பேர் தண்டிக்கப்பட்டு பல வருடங்கள்
கடந்த பின்னர், மெதுவாக – திருவாளர் சுப்ரமணியன் சுவாமி அவர்கள் ஒரு செய்தியாளருக்கு பேட்டி கொடுக்கும்போது –

“ராஜீவ் உயிரோடு இருந்திருந்தால், சோனியா காந்தி
அரசியலுக்கு வந்திருக்க முடியுமா? ராஜீவ் குடும்பத்தின்
பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இன்றைக்கு
யாரிடம் இருக்கிறது? கூட்டிக் கழித்துப் பாருங்கள், புரியும்.

அதுமட்டுமல்ல, ‘ராஜீவ் காந்தி ஃபவுன்டேஷன்’ என்ற
பெயரில் நூற்றுக்கணக்கான கோடிகளை வசூலித்து டிரஸ்ட் அமைத்திருக்கிறார் சோனியா.” –

நான் ஆரம்பத்திலிருந்து சொல்லிவரும் விஷயம்,
‘ராஜீவ் கொலை பற்றிய நிஜமான மர்மங்கள் சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தெரியும்’ என்பதுதான்”

– என்று சாடைமாடையாகக் கூட இல்லை – நேரிடையாகவே குற்றம் சாட்டுகிறார் சுப்ரமணியன் சுவாமி.

நீங்கள் சொல்வதை எப்படி நம்புவது என்று செய்தியாளர்
கேட்கும்போது –

”நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிவரும் இந்தக்
குற்றச்சாட்டுக்களை இதுநாள் வரையில் சோனியா
குடும்பத்தினர் மறுக்கவில்லையே?” – என்கிறார் சு.சுவாமி…!

இவற்றை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது
என்ன தெரிய வருகிறது…??

இந்திய அரசியலில் -பொது வாழ்க்கையில் – ஈடுபட்டிருக்கும் பிரபலமான மனிதர்கள் சம்பந்தப்பட்ட பல ரகசியங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு –

ஆட்டம் போடுகிறார்,
சவால் விடுகிறார்,
சந்திக்கு இழுக்கிறார் –
அவமானப்படுத்துகிறார் –

இவர் சொல்வதில் எது பொய்….? எது நிஜம்…?
எந்த அளவிற்கு நிஜம் …?
எந்த அளவிற்கு இவர் சொல்வதை நம்பலாம் …?

யார் சொல்ல முடியும் …?
சம்பந்தப்பட்டவர்கள், வாய்மூடி மௌனியாக இருக்கிறார்கள்.
கண்டும் காணாதவர் போல் இருக்கிறார்கள்.

ஒன்று – இவர் சொல்வது நிஜமாக இருக்க வேண்டும்…!
அல்லது – அவர்கள் சம்பந்தப்பட்ட வேறு ரகசியங்கள்
இவரிடம் சிக்கி இருப்பதால், இவருக்கு பதில் கூற
முடியாத நிலையில் அவர்கள் இருக்க வேண்டும்…..

சரி – இவர் செய்த குற்றங்கள் …?
புத்திசாலி – மகா புத்திசாலி…!!
மாட்டிக்கொள்ளும் வகையில் எதையும் செய்வதில்லை.
தப்பித்தவறி சிக்கினாலும்,
கைவசம் இருக்கும் பலரது ரகசியங்கள் கை கொடுக்கின்றன…!!

இந்த தொடர் இடுகையில் வரும் சில பாத்திரங்கள்
பாவங்கள் பலவற்றையும் செய்தவர்கள் –

ஆனால் எதிலும் சிக்க மாட்டார்கள் –
அவர்களைத் திருத்தவோ, தண்டிக்கவோ –
சாதாரண மனிதர்களால் முடியாது –
சட்டங்களாலும் முடியாது –
எல்லாவற்றிற்கும் அப்பால் இருப்பவர்கள் அவர்கள்….

இறைவனோ – இயற்கையோ …..
மட்டுமே செய்யக்கூடிய காரியம் அது….

இத்தகைய மனிதர்களின் ஆட்டங்களுக்கு இடையில் சிக்கி – பரிதாபத்திற்குரிய நிலையில் பரிதவித்துக்
கொண்டிருக்கின்றனவே பாவப்பட்ட சில ஜென்மங்கள் …
அவர்களை நினைத்தால் தான் வேதனையாக இருக்கிறது…

யார் அவர்கள் ….?
முதலில் – கொலை வழக்கில் சிக்கிய சில அப்பாவிகள்,
பின்னர் – ஈழத்தமிழர்கள்…
இப்போது – தமிழக மீனவர்கள்….

நாமக்கல் கவிஞர் அப்போதே சொல்லி விட்டுப் போனார் –

“எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே …
நம் நாட்டிலே …. சொந்த ….. நாட்டிலே ….”

mgr - yethanai kaalam thaan

ஒன்றும் மாறவில்லை –
அதே நிலை தான் நீடிக்கிறது – இன்றும்.

( இந்த இடுகைத் தொடர் இத்துடன் முடிகிறது )

பின் குறிப்பு –

முடிந்த வரை எதையும் ஆதாரபூர்வமாக
எழுத வேண்டும் என்கிற எண்ணத்தில்-
நிறைய தகவல்களை சேகரித்து வைத்துக்கொண்டு,
இந்த இடுகைத் தொடரை எழுதி இருக்கிறேன்.
நல்லவர் போல், வல்லவர் போல் சமுதாயத்தில்
தோற்றமளிக்கும் பலர் உண்மையில் அப்படியல்ல –
எல்லா பாவங்களையும் செய்தவர்கள்,
செய்யத் துணிந்தவர்கள் –
என்பதை இந்த இடுகைத் தொடரை படிக்கும்
ஒரு சிலராவது உணர்ந்தால் –
அது கூட எனக்கு திருப்தி அளிக்கும்.

மொத்தமாக இந்த இடுகைத் தொடரைப் பற்றிய
உங்கள் அபிப்பிராயங்களை – பின்னூட்டங்களில்
எதிர்பார்க்கிறேன்.

——————————————————————
( முந்தைய பகுதிகளைக் காண –
(உதவி -நண்பர் todayandme )

சாமிகளின் சாகசங்கள் – Part 1

https://vimarisanam.wordpress.com/2014/09/20/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA/

சாமிகளின் சாகசங்கள் – Part 2

https://vimarisanam.wordpress.com/2014/09/22/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/

சாமிகளின் சாகசங்கள் – Part 3

https://vimarisanam.wordpress.com/2014/09/24/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4/

சாமிகளின் சாகசங்கள் – Part 4

https://vimarisanam.wordpress.com/2014/09/26/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95/

சாமிகளின் சாகசங்கள் – Part 5

https://vimarisanam.wordpress.com/2014/09/29/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA/

சாமிகளின் சாகசங்கள் – Part 5-Annexure

https://vimarisanam.wordpress.com/2014/09/30/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/

சாமிகளின் சாகசங்கள் – Part 6

https://vimarisanam.wordpress.com/2014/10/20/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/

சாமிகளின் சாகசங்கள் – Part 7

https://vimarisanam.wordpress.com/2014/10/23/%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/

சாமிகளின் சாகசங்கள் – Part 8

https://vimarisanam.wordpress.com/2014/10/25/%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80/

சாமிகளின் சாகசங்கள் – Part 9

https://vimarisanam.wordpress.com/2014/10/27/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/

சாமிகளின் சாகசங்கள் – Part 10

https://vimarisanam.wordpress.com/2014/10/29/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/

சாமிகளின் சாகசங்கள் – Part 11

https://vimarisanam.wordpress.com/2014/11/02/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/
மறுமொழி

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

21 Responses to “தப்பு” செய்தவர்கள் பலரும் “தப்பி” விட்டார்கள் …..! எங்கே நீதி – எங்கே நியாயம் ….? (சா. சா. – பகுதி- 12 )

 1. anbudan சொல்கிறார்:

  ///…இறைவனோ – இயற்கையோ …..
  மட்டுமே செய்யக்கூடிய காரியம் அது….///

  definitely it will happen one day…may be in near future…

 2. senthil kumar சொல்கிறார்:

  ஆண்டவன்தான் தண்டிக்க வேண்டும்….

 3. ப.நெடுஞ்செழியன் சொல்கிறார்:

  திரு.காவிரிமைந்தன் அவர்கட்கு,

  வணக்கம்.
  அற்புதமான பணி ஒன்றை மேற்கொண்டு, மிகச்சிறப்பாக
  நிறைவு செய்திருக்கிறீர்கள். இந்த தொடரில் நீங்கள்
  கொடுத்திருக்கும் பல செய்திகள் புதியவை. இது வரை
  வேறு எங்கும் படிக்காதவை. சில தகவல்களை அறியும்போது
  மிகவும் வருத்தமும், வேதனையும், கோபமும்,
  ஆத்திரமும் வருகின்றன.
  நம் நாட்டில் எவ்வளவு தான் சட்டங்களின் ஆட்சியும்,
  மாட்சிமையும் இருந்தாலும், சு.சு.வைப் போன்றவர்கள்
  எவ்வளவு சுலபமாக படித்த இளைஞர்களைக் கூட
  முட்டாளாக்கி விட முடிகிறது என்பதற்கு உங்கள் தொடர்
  சிறந்த சான்று. ஒரு மிகச்சிறந்த சமுதாயப் பணியை
  மேற்கொண்டிருக்கும் உங்களுக்கு என் உளம் நிறைந்த
  பாராட்டுக்கள். நிறைய எழுதுங்கள். குப்பைகள் அதிகம் காணப்படும் வலையத்தில் கோமேதகம் இந்த வலைத்தளம். நன்றி.

 4. yogeswaran சொல்கிறார்:

  Thanks Vikatan

  சாயம் வெளுக்கிறது… சரித்திரம் சிரிக்கிறது!
  4 ஆண்டு தண்டனையும் 4 பேரும்!
  – ப.திருமாவேலன்
  சாயம் போவது புதுத்துணியில் மட்டுமல்ல; சில பெரிய மனிதர்களின் வாழ்க்கையிலும் அவ்வப்போது நடப்பதுதான். வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் பெற்ற ஜெயலலிதாவின் விவகாரத்திலும் பலர் அம்பலப்பட்டுப் போனார்கள். அதில் நான்கு
  பேரைப் பற்றி மட்டும் இங்கே:

  xx xx xx
  சுப்பிரமணியன் சுவாமி!
  முன்னால் சொன்ன மூவரும் எதிர்ப்பக்கமாக இருந்து ஆதரவாய்
  மாறியவர்கள் என்றால், சுப்பிரமணியன் சுவாமி ஆதரவாய் இருந்து எதிர்ப்பாய் ஆனவர். ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போதே அவர் மீது வழக்குப் போடவேண்டும் என்று அன்றைய ஆளுநர் சென்னா ரெட்டியிடம் மனு கொடுத்து அனுமதி பெற்றவர் சுப்பிரமணியன் சுவாமிதான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதில் சுவாமி உறுதியோடு இருந்தாரா?

  1996-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது. தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. 96 செப்டம்பர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க சார்பில் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க சார்பில் ஜெயக்குமார், ஜனதா கட்சி சார்பில்
  சந்திரலேகா ஆகியோர் போட்டியிட்டார்கள். திடீரென ஜெயக்குமாரை வாபஸ் வாங்கச் சொல்லிவிட்டு சந்திரலேகாவை ஆதரித்தார் ஜெயலலிதா. ”இது ஜெயலலிதாவின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஜெயலலிதாவை நான் என்றுமே தனிப்பட்ட முறையில் தாக்கியது இல்லை” என்று சொல்லி ஏற்றுக்கொண்டவர் சுவாமி. சுவாமிக்கு கோர்ட் காட்சிகள்
  மறந்திருக்காது. ஆனால், எல்லாம் மறைத்து அந்த ஆதரவை
  ஏற்றுக்கொண்டார்.
  சுவாமி எந்த புகார்களைக் கொடுத்தாரோ அதே புகார்களை வைத்து சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் முயற்சிகள் நடந்துவரும்போது, அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு சுவாமியும் சந்திரலேகாவும் போனார்கள். சந்திரலேகாவின் 50-வது பிறந்தநாளுக்கு (1997 ஜூலை 25) ஜெயலலிதா சார்பில் பொக்கே-யை சத்தியமூர்த்தியும் டி.எம்.செல்வகணபதியும் கொண்டுவந்து கொடுத்தார்கள். சுவாமியின்
  58-வது பிறந்தநாளுக்கு (1997 செப்டம்பர்) வாழ்த்துச் சொல்ல அவர் அலுவலகத்துக்கே ஜெயலலிதா வந்தார். 98-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் மதுரை தொகுதியில் நின்று வென்ற சுவாமிக்கு நிதி அமைச்சர் பதவி தரவேண்டும் என்று கேட்டவர் ஜெயலலிதா. வாஜ்பாய்தான் அதற்கு உடன்படவில்லை. ஜெயலலிதா மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டபோது, ”ஜெயலலிதா மீது தமிழக அரசு தொடுத்திருக்கும்
  வழக்குகள் பழிவாங்கும் நோக்கம் கொண்டவை. தமிழக அரசு கூடுதல் நீதிபதிகளை நியமித்தது தவறு. ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிபதிகளை நியமிக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை” என்று அறிக்கை வெளியிட்டவர் சுவாமி.

  ஜெயலலிதாவுக்காகத்தான் டெல்லியில் டீ பார்ட்டி நடத்தி இன்று தன்னுடைய பரம்பரை எதிரியாகக் காட்டிக்கொள்ளும் சோனியாவை அதற்கு அழைத்து வந்தவரும் சுவாமி.
  ”ஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்கு தண்ணி காட்டிய நீங்கள், இப்போது ஜெயலலிதாவிடம் சரணடைந்திருப்பது எதைக் காட்டுகிறது?” என்று கேட்டபோது, ”சாணக்கிய நீதியையும் பகவத் கீதையையும் நீங்கள் படிக்க வேண்டும்” என்று அறிவுரை சொன்னார் சுவாமி.

  கிருஷ்ண பரமாத்மாவை இதைவிட வேறுயாரும் கிண்டலடித்திருக்க முடியாது!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் யோகேஸ்வரன்,

   நீங்கள் அனுப்பியுள்ள பின்னூட்டத்தில் மற்ற 3 பேர்களான,
   திருவாளர்கள் ராம் ஜெத்மலானி, பாலி நாரிமன், துக்ளக்
   ஆசிரியர் ‘சோ’ ஆகியோர் தொடர்புடைய செய்திகள்
   இந்த இடுகைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் இருப்பதால்,
   அவற்றை விலக்கி விட்டு, மற்றதை மட்டும்
   வெளியிட்டிருக்கிறேன். நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. Sanmath AK சொல்கிறார்:

  Dear KM,

  Good job done !

  We people can discuss, try to show proofs to people about the so-called good doers. But ultimately it is in the hands of people to select their leaders. The curse here is, you(people) got the chance of selecting right person but your ego of caste/religion(least imp in our state) stop you(people) doing so. So ultimately the blame or fault is on you and me – people.

  Most of your information are new which shows your effort in collecting those. An experienced man like you with knowledge of govt. machinery can write more linking politics, macro/micro economics and business. Waiting to get more from you.

 6. rathnavelnatarajan சொல்கிறார்:

  Please read all the blogs – I have shared in my page.
  Thanks & Salute: வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

 7. rathnavelnatarajan சொல்கிறார்:

  Please read all the blogs – I have shared in my page.
  Thanks & Salute: வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

  2014-11-04 14:26 GMT+05:30 “வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்” :

  > vimarisanam – kavirimainthan posted: “ராஜீவ் காந்தி கொலை வழக்கு –
  > தமிழ்நாட்டின் கவனத்தை மிக மிக அதிகமாக ஈர்த்த ஒரு வழக்கு. ராஜீவ் காந்தி
  > கொலைச் சம்பவத்தை, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் வேதனையுடனும், வருத்தத்துடன்
  > தான் எதிர்கொண்டார்கள். இதில் ராஜீவ் மட்டுமல்ல – இன்னும் பலரும் உயிர்
  > இழந்தன”

 8. today.and.me சொல்கிறார்:

  அன்பின் கா.மை.,

  //‘ராஜீவ் கொலை பற்றிய நிஜமான மர்மங்கள் சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தெரியும்’ என்பதுதான்”//
  சேர்ந்தவர்களுக்கும் என்று உம் சேர்த்திருப்பதால் மற்ற சிலருக்கும் என்பது வெளிப்படை. அந்த மற்ற சிலரில் இவரும் இருக்கிறார். எனவே என்னைத்தவிர சோனியாகாந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் என்பதுதான் சரி.
  (எனக்கு இந்த இடத்தில் நான் யோக்கியன்டா என்று நடிகர் வடிவேலு-வைப் பார்த்து சகநடிகர் ‘யோக்கியனுக்கு இருட்டில என்ன வேலை’ என்று கேட்கும் வின்னர் படக் காட்சி கண்முன்னே விரிகிறது.)

  //முதலில் – கொலை வழக்கில் சிக்கிய சில அப்பாவிகள்,
  பின்னர் – ஈழத்தமிழர்கள்…
  இப்போது – தமிழக மீனவர்கள்…..//
  எப்போதுமே தமிழர்கள் தான். இதைத்தான் முன்னர் ஒரு பின்னுட்டத்தில் கூறியிருந்தேன், இவர் ஒரு கோடாலிக் காம்பு என்று.

  //இறைவனோ – இயற்கையோ …..
  மட்டுமே செய்யக்கூடிய காரியம் அது…..//
  என்று சொல்லியோ ‘வல்லவன் கையில் நல்லவன் பொம்மை’ என்றோ ‘வலியோர் கையில் எளியோர் பொம்மை’ என்றோ நீங்கள் தேற்றிக்கொள்ளலாம்.

  ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். ஏனென்றால் எல்லாவற்றிலும் எப்போதுமே ஒருவர் ஃபர்பெக்ட் ஆக (தப்புசெய்வதையும் அதை மறைப்பதையும் மற்றவர்கள் தப்பைத் தெரிந்துகொண்டு ப்ளாக்மெயில் செய்வதையும் பற்றிச் சொல்லுகிறேன்) இருக்கமுடியாது. தற்போதுள்ள மத்திய மற்றும் மாநில அரசியல் சூழ்நிலைகளை நோக்கும்போது இந்த வல்லவனுக்கு மற்றொரு வல்லவனை இறையோ அல்லது இயற்கையோ படைத்துவிட்டது என்றே என் மனம் நம்புகிறது.

  என்ன? அந்த விளைவை அனுபவிக்க இவர் இருக்கவேண்டுமே என்றும் பிரார்த்திக்கிறேன்..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே ( todayandme ),

   நீங்கள் சொல்வது முக்காலும் உண்மை…!!!

   வினை விதைத்தவர் வினை அறுப்பதை
   விரைவில் பார்க்கப் போகிறோம்
   என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

   4-5 நாட்களில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்பு
   இருப்பதாக – சென்னை வானிலை மைய இயக்குநர்
   திரு ரமணன் அவர்கள் சொல்லாமலே
   தெரிய வருகிறது……!!!

   ஒன்றிரண்டு நாட்களில்
   மேற்கொண்டு செய்திகள் தெரிய வரலாம்…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. எழில் சொல்கிறார்:

  அருமையான பதிவுத் தொகுப்பு. அச்சுறுத்தல் அரசியலும் ‘உறவாடி’ கெடுக்கும் நிலைப்பாடும், சுயலாபத்துக்கு சாணக்கியரை மேற்கோள் காட்டி நெறியற்ற காரியங்களை சாதித்து கொள்ளும் இயல்பு தான் என் அரசியல் வாழ்க்கை என்று வாழும் ஓர் அற்பனின் கடந்த காலத்தை ஆதரங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  இவர் 80 மற்றும் 90 களில் ஈழ தமிழருக்கு ஈழம் மட்டுமே ஒரே தீர்வு. போராட்டமே அதற்கான ஒரே வழி என்று அமெரிக்கா முதல் பல இடங்களில் பேசியதற்கான ஆதாரங்களும் இன்டர்நெட்டில் நிறைந்திருக்கின்றன.

  சரித்திரத்தை அடிப்படியாக வைத்து பார்த்தால்…

  இப்போது பாஜகவுடனும், நமோ வுடனும், ராஜபக்சேவுடனும் ‘நல்லுறவில்’ இருக்கிறார் என்பது தான் ஆறுதல். 😉

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி எழில்.

   என் உள்ளுணர்வு சொல்கிறது.
   தமிழ் ஈழம் உருவாக – சுப்ரமணியன் சுவாமியும்,
   ராஜபக்சேயும் தான் ( அவர்களையும் அறியாமலே )
   காரணமாக இருக்கப் போகிறார்கள் என்று….!!!
   (வங்க தேசம் பிறக்க – ஷேக் முஜிபுர் ரெஹ்மானை விட
   ஜுல்பிகார் அலி புட்டோ தான் முக்கிய காரணமாக
   இருந்தது போல ….!!!)

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • எழில் சொல்கிறார்:

    முற்றிலுமாக ஆமோதிக்கிறேன் ஐயா. நான் பலமுறை நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன். ஈழம் கிடைக்க வேண்டுமெனில் இராஜபக்சே தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும். ஏற்கனவே இராஜபக்சே அதற்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்து விட்டார். நடப்பவை நல்லவையாகவே நடக்கும்.

 10. Ganpat சொல்கிறார்:

  Dear Shri Kaa.Mai ji!
  I am amazed at the style and depth in which you have analyzed Mr.Swami without any bias and giving all the back up details for your views.As a person who write in web sites I know how difficult and time consuming process it is even to type a couple of paragraphs whereas you have presented 12 parts all in on ego.I don’t know why all these facts known to ordinary people like us are not known to people at the helm of affairs.It seems though we have traveled a very long distance since 15th Aug 1947 alas it appears to be in the wrong road all along.We have come to the stage that only God can help us and we have only to pray.I rest my case and before that SINCERELY THANK YOU FOR YOUR WONDERFUL EFFORTS
  Kind regards,
  Ganpat

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் கண்பத்.

   உங்களைப் போன்ற,
   விஷயங்களை ஆழ்ந்து கவனிக்கும்,
   அவ்வப்போது தகுந்த பின்னூட்டங்களின் மூலம்
   தீவிர பங்களிப்பு தரும்,
   சமூக நலனில் அக்கறை கொண்ட நண்பர்கள் சிலர்
   இந்த வலைத்தளத்தில் அளிக்கும் ஆதரவு தான்
   எனக்கு தொடர்ந்து எழுதக் கிடைக்கும் எனர்ஜி,
   ஆக்சிஜன் எல்லாமே.
   உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 11. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  ஐயா! மிக அருமையான தொடர் இது! தொடக்கத்திலிருந்து உடனுக்குடன் படித்து வந்தவன், இடையில் சில நாட்களாகத் தொடர முடியாமல் போய், இன்றுதான் சேர்த்து வைத்து மொத்தமாகப் படித்தேன். இப்படியொரு மிகத் துணிச்சலான, அக்கறை மிகுந்த, நடுநிலையான பதிவுத் தொடரைக் கொடுத்ததற்காக மிக்க நன்றி!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ஞானப்பிரகாசன்,

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
   தங்கள் பதிலை சுருக்க வேண்டியமைக்காக மன்னிக்க வேண்டுகிறேன்.
   நீங்கள் எழுதியுள்ள மற்ற விஷயங்கள் குறித்து நான் கொஞ்சம்
   நிதானமாகப் படித்துப் பார்த்து தான் பதிலெழுத வேண்டும்.
   அதை என்னால் இப்போது செய்ய இயலாத நிலையில் இருக்கிறேன்.
   பிறிதொரு சமயம் பார்ப்போமே.

   -=வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.