“துக்ளக்” இதழின் அட்டைப்பட கார்ட்டூன் சொல்வது ……

இன்று வெளியாகியிருக்கும் “துக்ளக்” வார இதழின்
அட்டைப்பட கார்ட்டூனும், போனசாக கூட 2 கார்ட்டூன்களும் கீழே –

இந்த கார்ட்டூன் வரக்காரணமாக இருந்த கூட்டணி நிலை – டாக்டர் ராமதாஸ் அவர்களும் வைகோ அவர்களும் இரண்டு நாட்கள் கழித்து அடித்த “அந்தர் பல்டி” காரணமாக மாறி விட்டது என்றாலும் –

டாக்டர் ராமதாஸ் அவர்கள் இல்லத் திருமண விழாவில்
முதல்நாள் இரவில் –
ஸ்டாலினும் – வைகோ அவர்களும், செய்தியாளர்களிடையே சேர்ந்து நிகழ்த்திய அசட்டுத்தனமான உரைகள் காரணமாகவும் –

மறுநாள் காலையில் –
டாக்டர் ராமதாசும் – கலைஞர் அவர்களும் சேர்ந்து நிகழ்த்திய கூத்து காரணமாகவும் –

இந்த கார்ட்டூன் அவமானம் அவர்களுக்கு தேவை தான்….!!!

thuglaq cartoon-1

 

vaiko-stalin cartoon

 

கீழே – டாக்டர் சு.சுவாமி -ராஜ்நாத் சிங் குறித்த கார்ட்டூன்- (வர வர சு.சு.வைப் பார்த்து பாஜக தலைவர்களே நடுங்க ஆரம்பித்து விட்டார்கள்….!!!)

(ஆமாம் – நேற்றிரவு times now ஆங்கில தொலைக்காட்சியில், தமிழக மீனவர்கள் – மரண தண்டனை குறித்து நடைபெற்ற அர்னாப் கோஸ்வாமி – சுப்ரமணியன் சுவாமி சண்டையை
(Prime time event )நண்பர்கள் யாராவது பார்த்தீர்களா….?
நீண்ட நாட்களுக்குப் பிறகு, டெல்லி தொலைக்காட்சி ஒன்று, சு.சு.வின் சுயரூபத்தை தெரிந்து கொண்டிருப்பது
மகிழ்ச்சியான விஷயம்.
நண்பர்கள் யாராவது அந்த தொலைக்காட்சிபேட்டியின் வீடியோ வை இந்த இடுகையின் கீழே – மறுமொழி வாயிலாக – பதித்து அனைவரும் பார்க்கச் செய்ய உதவ முடியுமா …? )

rajnath singh -su.swamy cartoon

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to “துக்ளக்” இதழின் அட்டைப்பட கார்ட்டூன் சொல்வது ……

 1. K.Raghavendra சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  இங்கே போடவேண்டுமென்று தேடிக்கண்டு பிடித்தேன்.
  இதையும் இங்கே சேர்த்துக் கொள்ள அனுமதி
  கொடுங்கள் ப்ளீஸ்.

  கலைஞர் கருணாநிதி, வைகோ பற்றி முன்பு பேசியது –

  கேள்வி: ம.தி.மு.க.வை உடைக்க சதி நடப்பதாக
  வைகோ பேசியிருக்கிறாரே?

  பதில்: ஆமாம் உண்மைதான். ஆனால் அந்தச் சதியை செய்ய
  அவர் ஒருவர் போதாதா? அந்தக் கட்சி தொடங்கப்பட்டபோது
  அவருடன் சென்ற பொன்.முத்துராமலிங்கம், சங்கரன்கோவில் தங்கவேலு, கரூர் கே.சி.பழனிசாமி, எல்.கணேசன் எம்.பி., என்.செல்வராஜ், டி.பி.எம்.மைதீன்கான், வேங்கடபதி,
  திருச்செங்கோடு கந்தசாமி, செஞ்சி ராமச்சந்திரன் எம்.பி.,
  மு.கண்ணப்பன் எம்.எல்.ஏ., டி.கே.சுப்பிரமணியம்,
  விஜயா தாயன்பன், இரா.சபாபதி மோகன், டி.ஏ.கே.லட்சுமணன் போன்றவர்கள் அங்கே இல்லாததற்கு யார் காரணம்?
  தி.மு.க.வை உடைக்க சதி செய்தவற்கு,
  சதியைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?
  சதியை பற்றி சகுனி பேசுவதா?

  கலைஞ்சர் பற்றி வைகோ பேசியது இது –

  மதிமுக, விருதுநகர் மாவட்ட மாணவரணி சார்பில்
  ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் வீர வணக்க நாள்
  பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியது இது…

  வீரர்களை பற்றி வீரர்கள் தான் பேசவேண்டும்.
  தியாகிகளை பற்றி தியாகிகள் தான் பேசவேண்டும்.
  கருணாநிதி தமிழ் இனத்துரோகி. கடந்த ஆண்டு ஜன., 30ல் முத்துக்குமாரின் உடலுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த போது, மதுரையில் கருணாநிதி
  தனது மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடினார்.

  டாக்டர் ராமதாஸ் பற்றி கலைஞ்சர் கருணாநிதி
  பேசியது இது –

  “டாக்டர் ராமதாஸ் எந்த இடத்திற்குப் போனாலும்,
  அந்த இடத்தில் குழி பறிக்கத்தான் பார்ப்பார்”

  இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன். அடுத்த
  இன்ஸ்டால்மெண்டில் அனுப்புகிறேன். நன்றி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ராகவேந்திரா,

   தேடப்போனால் இதைப்போன்ற “வசனங்கள்”
   எக்கச்சக்கமாக கிடைக்கும். கவுண்டமணி, செந்தில்
   காமெடி மாதிரி….
   கடந்த 15 வருடங்களாக கூட்டணிகள் மாறி மாறி
   அமையும்போது, இவ்வாறு இவர்கள் 3 பேருமே பேசியது
   தமிழ் நாட்டு மக்கள் அறிந்தவை தான்.
   ஒருவேளை சில விஷயங்கள் மறந்திருக்கலாம்.
   நீங்கள் கொடுத்துள்ள ‘சாம்பிள்’ போதும்.
   மேற்கொண்டு அனுப்ப ‘மெனக்கெட’ வேண்டாம்.

   படித்துப் பார்த்து, சிரித்துக் கொண்டு நகர்ந்து விட வேண்டிய
   அளவிற்கு தான் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. today.and.me சொல்கிறார்:

  //நண்பர்கள் யாராவது அந்த தொலைக்காட்சிபேட்டியின் வீடியோ வை இந்த இடுகையின் கீழே – மறுமொழி வாயிலாக – பதித்து அனைவரும் பார்க்கச் செய்ய உதவ முடியுமா …? //

  எனது முந்தைய பின்னுட்டத்தின் இந்தப்பகுதியை நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த வீடியோ ஆரம்பித்து வைத்துள்ளதாக எண்ணிக்கொள்கிறேன்.
  // ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். ஏனென்றால் எல்லாவற்றிலும் எப்போதுமே ஒருவர் ஃபர்பெக்ட் ஆக (தப்புசெய்வதையும் அதை மறைப்பதையும் மற்றவர்கள் தப்பைத் தெரிந்துகொண்டு ப்ளாக்மெயில் செய்வதையும் பற்றிச் சொல்லுகிறேன்) இருக்கமுடியாது. தற்போதுள்ள மத்திய மற்றும் மாநில அரசியல் சூழ்நிலைகளை நோக்கும்போது இந்த வல்லவனுக்கு மற்றொரு வல்லவனை இறையோ அல்லது இயற்கையோ படைத்துவிட்டது . //

 3. sundar சொல்கிறார்:

  plz see the video about debate of தமிழக மீனவர்கள் – மரண தண்டனை குறித்து நடைபெற்ற அர்னாப் கோஸ்வாமி – சுப்ரமணியன் சுவாமி

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மிக்க நன்றி சுந்தர்.

   (ஒன்றுக்கு இரண்டாகவே கிடைத்து விட்டது …!!)

   நேற்றிரவு தொலைக்காட்சியில் பார்க்காதவர்கள்,
   அவசியம் இந்த விவாதத்தைப் பார்க்கும்படி
   கேட்டுக்கொள்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. sundar சொல்கிறார்:

 5. விஜயன் சொல்கிறார்:  ====

 6. விஜயன் சொல்கிறார்:

  தேடும்பொழுது இதவும் கெடச்சுது ஹி..ஹீ..ஹி…

 7. காரை கே.எஸ்.விஜயன் சொல்கிறார்:

  சு சாமியிடடம் ராஜ் நாத்சிங் பேசிக்கொண்டிருக்கிறார்….கையெழுத்து அருமை…வெகுநாட்கலுக்குப்பிறகு கூட்டெழுத்தஈபாரக்கிறேன்….சந்தோஷமாக இருக்கிறது…அந்த பழைய எழுத்து றா

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி திரு.விஜயன்….
   உங்கள் கவனிப்பு பிரமாதம்….!

   இந்த எழுத்தெல்லாம் அதிசயமாக உங்களைப் போல்
   ஓரிருவர் நினைவில் தான் இன்னமும் இருக்கும்….!
   கையால் எழுதுகிற பழக்கமே போய் விட்டதே….!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 8. Sankar சொல்கிறார்:

  Excellent. Also go through the web site: http://www.stephen-knapp.com/true_story_of_the mahal _taj_.html. A new topic will open to discuss

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.