You Are a Liar – மிஸ்டர் சுப்ரமணியன் சுவாமி & மிஸ்டர் ராஜபக்சே …

ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த கிளாட்வின்
என்பவரது படகில், 5 தமிழக மீனவர்கள் ( வேண்டுமானால்
இந்திய மீனவர்கள் என்றும் கூட சொல்லிக் கொள்ளலாம் )
– 2011, நவம்பர் 28ந்தேதி, கடலில் மீன் பிடிக்கப்போய் –

இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு, போதைப்பொருள் கடத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, இறுதியாக கொழும்பு உயர்நீதி மன்றத்தால் 2014, அக்டோபர் 30ந்தேதி மரண தண்டனையும் விதிக்கப்பட்டாகி விட்டது.

இந்த விவகாரத்தில் யார் என்ன செய்தார்கள் …?

மீனவர்கள், தமிழக அரசின், மீன்பிடிப்பதற்கான, அனுமதி
அடையாள அட்டையுடன் தான் சென்றிருக்கிறார்கள்.

நடுக்கடலில் வழிமறித்த இலங்கை ராணுவம்
அவர்களுடன் மற்ற படகுகளில் சென்ற மீனவர்களை
அடித்துத் துரத்தி விட்டு, இந்த 5 பேரை மட்டும் பிடித்துச்
சென்றிருக்கிறது. இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்களை
இலங்கை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்கள்
மீது போதைப்பொருட்களை வைத்திருந்ததாக பொய் வழக்கு
போட்டிருக்கிறார்கள்.
( இவர்களுடன் 3 இலங்கைத் தமிழ்
மீனவர்களையும் வழக்கில் சேர்த்திருக்கிறார்கள்..)

விஷயம் தெரிந்த பிறகு, இவர்களது குடும்பத்தினரும்,
மற்ற சக மீனவர்களும், தமிழக அரசின் அதிகாரிகளை
அணுகி இருக்கிறார்கள். தமிழக அரசின் உளவுப் பிரிவு
அதிகாரிகள், இந்த 5 மீனவர்களின் பின்னணிகளைப் பற்றி
காவல் துறையின் உதவியோடு, விவரமாக விசாரணை
செய்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரது மொபைல்
போன்களிலும் கடந்த ஒரு வருடத்தில் அவர்கள் யார் யாருடன்
பேசி இருக்கிறார்கள், என்ன பேசி இருக்கிறார்கள் என்பன
போன்ற விவரங்களை எல்லாம் திரட்டி, அலசி விட்டு,
மீனவர்கள் எந்தவித சந்தேகத்திற்கும் உரியவர்கள் அல்ல
என்று தமிழக அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழக அரசு, இந்த 5 குடும்பங்களுக்கும் தலைக்கு இரண்டு
லட்சம் ரூபாய் இழப்பீடும், ஒவ்வொரு குடும்பத்திற்கும்
இது வரை தினமும் 250 ரூபாய் உதவிப்பணமும்
கொடுத்திருக்கிறது. உ
டனடியாக இந்த விஷயத்தை மத்திய அரசிடம் எடுத்துச்சென்று, ஆவன செய்ய வேண்டி இருக்கிறது. இந்த மீனவர்கள் இலங்கையில் தங்களது தரப்பை
எடுத்து வாதாட உதவிக்கு வழக்குரைஞரையும் ஏற்பாடு
செய்திருக்கிறது.

வழக்கு முடிந்து மரண தண்டனை தீர்ப்பு வரும் வரை –
இவர்களை விடுவிக்க – மத்திய அரசு ராஜரீக ரீதியாக
எத்தகைய தீவிர முயற்சியிலும் ஈடுபடவில்லை.
(முன்னால் இருந்த மன்மோகன் சிங் அரசும் சரி, பின்னால் வந்த மோடிஜி அரசும் சரி….)

இப்போது விஷயம் விபரீத திருப்பம் எடுத்த பிறகும் – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் சரி
( மீனவர் நலனுக்கு என்று தான் மத்தியில்
தனி அமைச்சர் யாரும் கிடையாதே ….)
பிரதமரும் சரி – இதுவரை இந்த விஷயத்தைப் பற்றி
வாயே திறக்கவில்லை. தமிழக மீனவர்களுக்கு அதற்கான
தகுதி இல்லை போலும் …

இதுவே, இலங்கைக்கு பதிலாக பாகிஸ்தானாக
இருந்திருந்தாலும், மத்தியில் அத்தனை பேருமே குதித்து
எழுந்திருந்திருப்பார்கள்…!!

டெல்லியில் தெருவில் கிடக்கும் குப்பைகளுக்கு கூட
பிரதமரின் கடைக்கண் பார்வை கிடைத்தது.

அந்த பாக்கியம் கூட மரண தண்டனை பெற்று,
திகிலில் தவிக்கும் தமிழக மீனவர்களுக்கும்,
அவர்களது குடும்பத்தினருக்கும் கிட்டவில்லை.

வெளியுறவுத்துறை செயலாளர் அளவில் சில அறிக்கைகள்
விடப்பட்டதோடு சரி.

இப்போது தமிழக பாஜக தலைவர் திருமதி தமிழிசை
அவர்கள் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார் – அவர் விட்ட
அறிக்கையிலிருந்து சில பகுதிகள் கீழே –

———————————————-
( http://tamil.thehindu.com/tamilnadu/ )

“5 மீனவர்களுக்காக வாதாடுவதற்கு இலங்கையின்
தலைசிறந்த வழக்கறிஞரை இந்திய தூதரகம் நியமித்துள்ளது.

மரண தண்டனையை விதிக்கப்பட்டுள்ள 5 தமிழ் மீனவரை
காப்பாற்ற இலங்கை நிதிமன்றத்தின் தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன்
இலங்கை உயர் நிதிமன்றதில் மேல்முறையீடு செய்யப்படும்.
இலங்கை அதிபரின் உயர்மட்ட சட்ட ஆலோசகர்களின் ஒருவராக
அனில் சில்வாவை தமிழ் மீனவர்களுக்கு வாதாட ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் 5 மீனவர்கள் தூக்கு தண்டனையில் இருந்து
காக்கப்படுவது உறுதி என்று அனில்சில்வா நம்பிக்கை
தெரிவித்துள்ளார். ஏனெனில்,
ஜிபிஎஸ் எனப்படும் தொலைதுறை தகவலை பதிவுகருவியில்
பதிவான ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக மீனவர்கள்
படகுகள் குற்றம் சாட்டப்பட்ட பகுதியில் சென்றதாக
பதிவாகவில்லை என்பதும், அதேபோல் இலங்கை கடற்படை
படகும் அந்தப் பகுதியில் அதேநேரத்தில் செல்லவில்லை
என்பதனை சுட்டிகாட்டிவுள்ளதை ஆறுதல் அளிக்கும் சான்று.

இந்த போதைபொருள் கடத்தல் நவம்பர் 2011-ல் டெல்ப்ட்
தீவுக்கருகில் நடந்தாக கூறப்படும் இடத்தில தமிழக
மீனவர்களின் படகுகள் சென்றதாக எந்த ஆதாரமும் இல்லை
என்று கூறப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து
சட்டபூர்வமாகவும், ராஜிய தூதரக உறவுகள் மூலமாகவும்
எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு அக்கறையுடன்
எடுத்து வருகிறது.

எனவே, மீனவ சகோதரர்கள் உண்ணாவிரதம் போராட்டங்களால்
தங்களை வருத்திக்கொள்வதை நிறுத்திக்கொண்டு இதை
அரசியலாக்கி குளிர்காய நினைக்கும் சக்திகளுக்கு துணை
போகாமல்
மத்திய அரசின் முயற்சிகளை புரிந்துகொண்டு
போராட்டங்களை நிறுத்தவேண்டும்.
——————————————————-

இந்த நிலையில் சில முக்கிய விஷயங்களை கருத்தில்
கொள்ள வேண்டி இருக்கிறது –

நீதிமன்ற விசாரணை முழுவதும் சிங்களத்தில் தான்
நடைபெற்றிருக்கிறது. விசாரணையில் என்ன நடக்கிறது
என்பதையே புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான்
இந்த 5 மீனவர்களும் இருந்திருக்கிறார்கள். இறுதித் தீர்ப்பை
மட்டும் தான் இவர்களிடம் தமிழில் சொன்னார்களாம்…!

மீனவர்கள் பிடிபட்டதாகச் சொல்லப்படும் இடத்தில்,
அதாவது குற்றம் நிகழ்ந்து, போதைப்பொருள் கண்டு
பிடிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் குற்றப்பதிவு
செய்யப்பட்டிருக்கும் இடத்தின் அருகில் கூட மீனவர்களின்
படகு செல்லவில்லை என்பதும் –

குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நேரத்தில்,
இவர்களது படகு வேறு வெகு தூரத்தில் எங்கோ இருந்தது
என்பதும் –

ஜிபிஎஸ் கருவிகளின் – பதிவு ஆவணங்களின் மூலம்
உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்று திருமதி தமிழிசை
அவர்களின் அறிக்கையின் மூலம் இப்போது தெரிய வருகிறது.
அப்படியானால் – மரண தண்டனை விதிக்கப்பட்ட கோர்ட்டில் விசாரணையின்போது – இந்த விவரங்கள், ஆவணங்கள்
தரப்பட்டனவா -இல்லையா ..?

இந்த ஆவணங்கள் கொழும்பு நீதிமன்றத்தில் ஏற்கெனவே
விசாரணையின்போது சமர்ப்பிக்கப்பட்டன என்றால் –
அந்த ஆவணங்களை ஏற்றுக் கொள்ளாமல்,
அதையும் மீறித்தான் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டதா …?

ஒருவேளை இப்போது தான் இந்த ஆவணங்கள் பற்றிய
நினைவே இவர்களுக்கு வருகிறது என்றால் –
அது எப்பேர்ப்பட்ட அலட்சியம்…?

இந்த் விஷயம் ஏன் முன்னரே கவனிக்கப்படவில்லை….?

5 மீனவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட இவ்வளவு சீரியஸான
விவகாரத்தில் இத்தகைய அலட்சியம் காட்டப்பட்டதற்கு
யார் காரணம் ….?

இது ஒரு பக்கமிருக்க –

திரும்பத் திரும்ப பாஜக வினரும்,
Liar மிஸ்டர் சுப்ரமணியன் சுவாமியும் கூறி வரும் ஒரு
விஷயம் –
இரு நாடுகளுக்கிடையே இருக்கும் கைதிகள்
பரிவர்த்தனை ஒப்பந்தப்படி, அந்த 5 கைதிகள்
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட்டு,
இந்தியாவிலேயே, மேல் விசாரணை நிகழ்த்தப்படலாம்
என்பது.

இது அப்பட்டமான – தெரிந்தே சொல்லப்படும் –
பொய்களின் வரிசை….

முதல் பொய் – வழக்கு முடிந்து, தண்டனை விதிக்கப்பட்ட
பிறகு தான் கைதிகள் பரிவர்த்தனை நடக்க முடியும்.

இந்த 5 பேர் விவகாரத்தில் – அப்பீல் இனிமேல் தான்
விசாரிக்கப்பட வேண்டும். அது எத்தனை ஆண்டுகள்
இழுத்தடிக்கப்படுமோ….? அது வரை காத்திருக்க வேண்டும்.

இரண்டாவது பொய் – சிறைத்தண்டனை பெற்றவர்களை
மட்டும் பரிமாறிக்கொள்ளத்தான் ஒப்பந்தத்தில் வழி வகை
இருக்கிறது. மரண தண்டனை பெற்றவர்களை அல்ல….

ஒரு வேளை அப்பீலிலும் மரண தண்டனை
உறுதி செய்யப்பட்டால்…?

மூன்றாவது பொய் – வழக்கு விசாரணை, அப்பீலின் மூலம்
என்றெல்லாம் போகாமல் –

உண்மையின் அடிப்படையில், ஜிபிஎஸ் பதிவுத்தகவல்களின்
அடிப்படையிலேயே – இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பது
வெளிப்படையாகவே தெரிவதால், வழக்கு உடனடியாக
விலக்கிக் கொள்ளப்பட்டு 5 மீனவர்களும் விடுவிக்கப்பட
வேண்டும் என்று இந்திய அரசு – இலங்கை அரசுடன்
பேச முடியும் என்கிற உண்மையை மறைப்பது.

ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று உறுதியான பிறகு
அது எதற்காகத் தொடர வேண்டும்…
அதன் முடிவு தெரிய காத்திருக்க வேண்டும்…?

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில் –
(பிப்ரவரி, 2015 …?? ) இந்த நெருக்குதலை நீடிப்பதன் மூலம்,
சிங்கள மக்களிடையே –

இந்தியா-ஸ்ரீலங்கா இடையேயான உறவில் பதற்றத்தைத்
தோற்றுவித்தால் –
இந்திய எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டி விடுவதன் மூலம்
சிங்கள இனவாத மக்களிடையே ஓட்டு அறுவடை
செய்ய முடியும் – தான் அதன் பலனைப் பெற முடியும்
என்கிற உத்தியை

Liar மிஸ்டர் ராஜபக்சே கடைப்பிடிக்க முயல்வதாலும்,
அதற்கு Liar மிஸ்டர் சுப்ரமணியன் சுவாமியும் துணை
போவதாலும் – இப்போதைக்கு இந்த பிரச்சினைக்கு தீர்வு
ஏதும் கிடைக்காது என்பது நமக்கும் புரியும் –
அறிக்கை விடும் திருமதி தமிழிசை அவர்களுக்கும் தெரியும்…

எனவே தமிழிசை அவர்கள் மீனவ மக்களுக்கு அறிவுரை
சொல்வதற்கு பதில்- எண்பத்தி சொச்சம் படகுகளை
ராஜபக்சே யிடமிருந்து மீட்டுக் கொண்டு வர முகூர்த்த நாள்
முடிவு பண்ணியாகி விட்டதா, அது எப்போது என்பதை மட்டும்
சொன்னால் போதும்.

—————–
இரண்டு நாட்களுக்கு முன்னதாக Times Now ஆங்கில
தொலைக்காட்சி சேனலில் வந்த Liar மிஸ்டர் சுப்ரமணியன்
சுவாமியின் உண்மை உருவத்தை உரித்துக் காட்டும்
விவாதம் கீழே – இதுவரை பார்க்காதவர்கள் அவசியம்
இந்த விவாதத்தைக் காண வேண்டுகிறேன்.

( சுப்ரமணியன் சுவாமியின் நிஜ உருவத்தை அம்பலப்படுத்தும்
முயற்சியில்
முதன் முதலாக டெல்லியைச் சேர்ந்த ஆங்கில தொலைக்காட்சி ஒன்று ஈடுபடுகிறது என்பதால் தான் –
இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் …)

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

You Are a Liar – மிஸ்டர் சுப்ரமணியன் சுவாமி & மிஸ்டர் ராஜபக்சே … க்கு 10 பதில்கள்

  1. Sanmath AK சொல்கிறார்:

    How can we expect something out of these guys at center who have not been doing anything from 2011? Even if center does something, it would be on an intention to benefit their friend Rajapaksha(as u said to create a vote base for elections). Center(Indian corporate who have invested hugely in Lanka) require their friend in Lanka.

    Can such a thing happen to people of any other country out of their home? We all know very well that TWO Italian marines shot Kerala fisherman. It was a murder in fact. Our country is not able to arrive at what to do in this case. But a small country like Lanka, that too they cannot survive against India, is doing all crap against Indians(I think we can still call us Indians!!!!).

    People at center should realize that we(Tamilians) are also Indians. These things can very well be brought to the attention of media(at least for them to increase their TRP). It can be done by the parliamentary skills and oratory skills of our representatives at Center. But do u think MPs like Sasikala Pushpa can do this ? DMK’s Siva kind of people can do this. But they are either keeping mum or speaking for some other things.

    Who to blame(of course us) or where to hit our head ???

  2. S.SELVARAJAN சொல்கிறார்:

    ” LIAR ” —- Very apt title for the both !

  3. yogeswaran சொல்கிறார்:

    Sir,

    In Sri Lanka there are so many P.Cs-(Presidents Counsel)- This is an honour conferred to them after achievements in the BAR.

    In the British days we had Kings Counsel and later Queens counsel.

    It does not mean that they directly advise the King,Queen or the President.

    What a pity leaders do not know the basic facts in a neighboring country.

    yogi

  4. எழில் சொல்கிறார்:

    இலங்கை விஷயத்தில் சுப்பிரமணிய சுவாமியின் துகில் ஏற்கனவே பல முறை உரிக்கப்பட்டது விஷயமறிந்த தமிழர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் தேசிய தொலைகாட்சி மட்டத்தில் அவர் ஒரு காமெடி பீசாக தன்னை தானே நிறுவி கொண்டது நானறிந்து இதுவே முதல் முறை. இது வரை இவரை வைத்து NDTV எழுப்பிய மண் கோபுரங்கள் எல்லாம் சரிந்து போயின.

    இதில் நான் ஆச்சரியப்பட்டு போன விஷயம் என்ன வென்றால் சந்திரலேகா இல்லாத குறையை போக்க எம் பி பி எஸ் டாக்டர் சுமந்த் சி ராமன் முன்வைக்கும் பகீரத பிரயர்த்தனம் தான். 1976 க்கு பின் இலங்கையில் தூக்கு தண்டனை நிறைவேற்ற படாததால் இந்த ஐந்து மீனவர்களும் தூக்கில் இடப்படுவதற்கு சாத்தியமில்லை என வாதிடுகிறார். இந்த மனுஷன் ஸ்போர்ட் குவிஸ், டாகுமென்ட்ரி எல்லாம் எடுப்பதை வச்சு ஏதோ அறிவாளின்னு நெனச்சா அடுத்த காமெடி பீசா இருக்கிறார். 1976 க்கு பின் இலங்கை சிறை சாலைகளில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் முதலாய 100 க்கும் மேற்பட்ட தமிழர்கள் நான்குக்கு மேற்பட்ட வெவ்வேறு சந்தர்பங்களில் ‘சக சிங்கள கைதிகளால்’ கோரமாக அடித்தே கொல்லப்படிருக்கிறார்கள். அப்புறம் இந்த அறிவாளி சொல்றார் இலங்கை அதிபர் பொது மன்னிப்பு அளிக்கலாமாம். மீனவர்கள் தப்பே செய்யவில்லை எனும் போது பின் யார் யாரை மன்னிப்பது.

    இவை தவித்து வழமை போல இதன் பின்னணியை தெளிவாக மேலே எழுதியமைக்கு நன்றிகள் ஐயா.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      உண்மை தான் எழில்.
      அந்த சுமந்த் சி ராமன் எம்பி எம்பி எழுந்து கத்தியது
      மிகவும் பைத்தியக்காரத்தனமாக இருந்தது.
      இத்தனைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
      பங்கேற்ற அனுபவம் அவருக்கு நிறையவே உண்டு.

      இப்படித்தான் – ஒரு கட்சி அல்லது ஒரு தலைவரை,
      அது / அவர் என்ன செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு
      ஆதரிப்பவர்கள் இருப்பதாலேயே அத்தகைய கட்சிகள்/
      தலைவர்களுக்கு “தலைக்கனம் “மெத்தவும் ஏறி விடுகிறது.
      அதுவே அவர்கள் தவறுகளைத் தொடரவும்
      காரணமாகி விடுகிறது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி எழில்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  5. yogeswaran சொல்கிறார்:

    Dear Kaviri Maindhan Sir,

    Few years back Pamaran wrote a solution to the fishermen problem in kumudam.

    it goes like this join ramnad with sri lanka.

    problem solved.

    based on that join thenni, madural and all kerala boarder districts with kerala,

    kaveri upto delta join with karnataka.

    chennai and rest join with seemandhra.

    fishermen, drinking water,agricultyral water all problems solved.

    it was funny,

    how is it Sir.

  6. subbu சொல்கிறார்:

    SUBRAMANIA SAMY IS TELLING ARNAB GOSWAMY AS LIAR, IDIOT IN A TELEVISION CHANEEL BECAUSE ARNAB HAS EXPOSED SWAMY. THIS IDIOT SWAMY HAS RECOMMENDED BHARATH RATHNA TO MODERN HITLER RAJAPAKSE. WHO IN BJP HAS
    GIVEN POWER TO SWAMY TO UTTER ALL THESE NONSENSE.. BY NOT HELPING
    TAMILNADU FISHERMEN MR MODI HAS BECOME ONE MORE MANMOHAN SINGH
    MR MODI PLEASE TRY TO UNDERSTAND THAT TAMILNADU IS PART AND PARCEL OF
    REPUBLIC OF INDIA AND TAMILIANS ARE ALSO INDIANS. , WHERE AS SRILANKA IS
    A ALIEN COUNTRY HOBNOBBING WITH OUR ENEMIES LIKE CHINA AND PAKISTHAN.
    FOR THE SAKE OF BUSINESS TYCOONS WHO HAVE INVESTED HEAVILY IN SRILANKA
    DO NOT ALIENATE TAMIL PEOPLE. NOT A SINGLE VOTE WILL BE CAST FOR BJP
    IN THE FUTURE ELECTIONS. PARTIES LIKE MDMK, DMDK, PMK SHOULD ISOLATE
    BJP ATLEAST IN TAMILNADU AS BJP IS NOT DOING ANYTHING FOR TAMILNADU.

  7. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

    நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் பற்றியும், சட்டங்கள் பற்றியும் இவ்வளவு நுணுக்கமான பதிவுகளையெல்லாம் தங்களிடம்தான் ஐயா படிக்க முடியும்! நான் கூட “அட, பரவாயில்லையே! இந்திய அரசு இந்த விவகாரத்தில் நன்றாகவே செயல்பட்டிருக்கிறதே” என்று வியந்தேன். உண்மைகளைப் புரிய வைத்தமைக்கு நன்றி ஐயா!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.