உத்தம புத்திரனின் அப்பாவை மோடிஜி “வீட்டு”க்கு அனுப்புவாரா ….?

முழுநேர அரசியல்வாதி ஒருவர்.
வக்கீலுக்குப் படித்திருக்கிறார்:
ஆனால் கோர்ட்டுக்கெல்லாம் போவதில்லை – முழுநேரமும்
அரசியல். சொந்த ஊர் மங்களூர்.
வருடத்தில் பாதி நாட்கள் வாசம் – பங்களூர்.

வட்டம், மாவட்டம் பொறுப்பு, பதவி எல்லாம் முடிந்து
மாநில அளவில் எம்.எல்.ஏ., மந்திரி அளவிலும்
எல்லாம் முடிந்து, ஒரு ஊழல் குருவின் தயவில்
கொஞ்ச காலத்துக்கு முதலமைச்சராகவும் இருந்தாகி விட்டது.

தொழில் என்று நிரந்தரமாக எதுவும் கிடையாது. ஆனாலென்ன – அரசியல் தான் இருக்கிறதே…

பங்களூரில் ஒரு பெரிய 3 மாடிக்கட்டிடம்- – 36,000 சதுர அடி. 10 (பத்து) கோடி ரூபாய்க்கு விலை பேசுகிறார்.

ஆனால் துட்டு ….?

அதனாலென்ன இத்தனை வருடங்களாக அரசியலில் இருந்தது எதற்கு …? பங்களூரு கட்டிடத்தை விலைக்கு வாங்க மங்களூரு வங்கியில் இருந்து எட்டு கோடி கடன் ஏற்பாடு செய்கிறார்.
கடனைப்பெற இவர் பங்குக்கு 20 % முதலில் செலுத்தியாக
வேண்டும். அதனாலென்ன – இவர் மந்திரியாகவும்,
முதல்மந்திரியாகவும் இருந்தபோது ஏற்பட்ட அறிமுகங்கள் கைகொடுக்கின்றன. ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் அங்கம் வகிக்கும் மிகப்பெரிய கல்வி அறக்கட்டளை ஒன்று இவர் ( இன்னமும் வாங்கி முடிக்காத ) கட்டிடத்தை வாடகைக்கு
எடுத்துக் கொள்ள முன்வருகிறது.

மாத வாடகை 15 (பதினைந்து) லட்சம் மட்டுமே….!!!
அட்வான்ஸ் தொகை – 2 (இரண்டு) கோடி….!!
(முன்னாள் முதலமைச்சரின் கட்டிடம் ஆயிற்றே …!)

இரண்டு கோடி அட்வான்சை பெற்று, வங்கியில் தன்
20 % முதலாக டெபாசிட் செய்கிறார். பத்து கோடி கடன்
பாஸ் ஆகிறது. 10 கோடி ரூபாய் 3 மாடி கட்டிடம் இவர்
பெயரில் விற்பனை பதிவாகிறது. கல்வி நிறுவனம் கொடுத்த 2 கோடி அட்வான்ஸ் இவரது முதலீடாகி விடுகிறது. வங்கியிலுள்ள மீதி 8 கோடி ரூபாய் கடனுக்கு – கல்வி நிறுவனம் மாதா மாதம் கொடுக்கும் 15 லட்சம் ரூபாய் வாடகையை தவணையாக (EMI ) செலுத்தி விடுகிறார்.

வருடத்திற்கு 15 லட்சம் x 12 = 1.8 கோடி கடன் அடைபடுகிறது. 7-8 வருடங்களில் முழு கடனும், வட்டியும் சேர்த்து அடைக்கப்பட்டு, பத்து கோடி ரூபாய் சொத்து சட்டபூர்வமாக இவர் பெயரில் வந்து சேரப்போகிறது…!

சட்டபூர்வமாகப் பார்த்தால் – இதில் எந்த தவறையும்
கண்டு பிடிக்க முடியாது..!!

சிலருக்கு அரசியல் – புகழையும், பதவியையும் தேடித்தரும். பலருக்கு – இது போல், சொத்தையும் தேடித்தரும்.

ஆனால், எல்லாருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது… மகன் “உத்தம புத்திரனாக” இருக்க வேண்டும்.
நடிகையை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி எல்லாம் முடிந்த பிறகு, “பார்த்ததே இல்லை” என்று சொல்பவனாக இருக்க வேண்டும்…!!!

uthama puththiran

எடியூரப்பா போன்ற “செல்வாக்கு” மிகுந்த அரசியல்வாதிகளின்
சீடர்களாக இருக்க வேண்டும்….!!!

இந்த மனிதர் மோடிஜியின் அமைச்சரவையில் இன்னும் நீடிப்பது, அதுவும் லட்சக்கணக்கான கோடிகள் புரளும் ரெயில்வே துறையில் இருப்பது மோடிஜியின் clean image-க்கு பெரிய இழுக்கு.
உடனடியாக இவர் ‘வீட்டு’க்கு அனுப்பப்படுவது
இந்த நாட்டுக்கு நல்லது.

பின் குறிப்பு –
இது ஒரு ‘சாம்பிள்’ தான்.
இவரைப் பற்றிய வேறு சில விவகாரங்களும்
தெரிய வருகின்றன. ஆனால், சரியான ஆதாரங்கள்
கிடைக்காமல் அவற்றை எல்லாம் எழுதுவது கடினம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to உத்தம புத்திரனின் அப்பாவை மோடிஜி “வீட்டு”க்கு அனுப்புவாரா ….?

 1. S.SELVARAJAN சொல்கிறார்:

  மோடிஜியின் clean image- ????

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் செல்வராஜன்,

   எனக்குத் தெரிந்து இது வரை மோடிஜியின் மீது
   “ஊழல்” புகார் ஏதுமில்லை தான்.

   (மற்ற புகார்கள் – தனி…!!)

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • S.SELVARAJAN சொல்கிறார்:

    அன்பு கா,மை. அவர்களுக்கு……. மோடியின் மீது எந்த ” ஊழல் ” புகார்களும் இல்லை என்றாலும் — மற்றது தனி — என்கிறபோது ” clean image ” என்பது அடிபட்டு போவதாக எண்ணித்தான் — எனது கருத்தை பதிவு செய்தேன் — தவறு என்றால் மன்னிக்கவும் ! தாங்கள் முன்பு எழுதிய ” மாயா கோட்னானின் ” இடுக்கையை வாசித்துள்ளதால் வந்த சந்தேகம்தான் இதற்கு –காரணம் !!

 2. daffa சொல்கிறார்:

  Will go home soon on sunday

 3. subbu சொல்கிறார்:

  SADANDA GOWDA IS A FRAUD. HE SHOULD NOT HAVE BEEN ALLOTTED RAILWAY MINISTRY,
  MODI SHOULD TAKE NOTE OF THIS AND REMOVE HIM AND SOME OTHER GOOD MAN
  LIKE THE NEW MINISTER MANOHAR PARIKKAR WHO HAS GOT A CLEAN IMAGE SHOULD
  BE MADE RAILWAY MINISTER.

 4. sella சொல்கிறார்:

  Dear Kamai

  Really it is shocking to me. Not because of this parasitic fellow but for still you think M is clean and working for us. I hope you will reach that point soon.

  I appreciate the effort in exposing this scientific method of corruption. Did he been to TN before?

 5. sella சொல்கிறார்:

  I regret for my harsh remarks but literally very disappointed and I don’t want to wait for those famous 100 days while you see the obvious trend

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  அன்பர்களே, இன்று ஞாயிறும் கடந்து விட்டது. அமைச்சரவையும் மாறி விட்டது. அமைச்சர் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறார். மாற்றம் என்பது அருகில் இல்லை அது இன்னும் வெகு தூரத்தில் உள்ளது. முதலில் குப்பைகளை அள்ளுவோம்.

 7. drkgp சொல்கிறார்:

  It is very difficult to change habits overnight. They will say it
  as compulsions of politics.

 8. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

 9. Varadarajan சொல்கிறார்:

  Dear Sir

  Instead of sending him back to home, he is given the LAW ministry. Great Job Mr Modi G

  Some Can be fooled some days; Many can be fooled many days. But All Can’t be fooled All days.

  Hope India will get a CLEAN administrator some day.

  with regards

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மகன் மீது கற்பழிப்பு புகார் சுமத்தப்பட்டு,
   அவன் கைது செய்யப்பட்டு,
   ஜாமீனில் வெளிவந்திருக்கின்றபோது,
   பங்களூருவில் மேல் விசாரணை /
   நிலுவையில் இருக்கும்போது, அப்பனுக்கு சட்டத்துறை
   அமைச்சர் பதவி கொடுக்கப்படுகிறது.

   ஊழல்வாதியை ஏன் இன்னும் வீட்டுக்கு அனுப்பவில்லை
   என்று கேட்கின்ற நேரத்தில், அவருக்கு இலாகாவை மாற்றி
   இன்னும் சௌகரியம் பண்ணிக் கொடுக்கிறார் மோடிஜி….

   கேவலம் ….மகா கேவலம் ….
   அரசியல் என்று வந்து விட்டால் –
   இங்கு அவர்களது தகுதியோ, யோக்கியதையோ முக்கியம் இல்லை.
   இவன் என்ன ஜாதி…. இவனால் எவ்வளவு ஓட்டு வரும்…
   (ஒக்கலிக சமுதாய ஓட்டுக்களுக்கு இவர் ஒட்டு மொத்த காண்ட்ராக்டாம் …..)
   என்று மட்டுமே யோசிக்கப்படுகிறது.

   இதற்கு தானும் விலக்கல்ல என்று நிரூபித்திருக்கிறார் மோடிஜி….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 10. Pati சொல்கிறார்:

  Sadanand Gowda was thought to be with clean hands when he replaced Yedurappa.
  Alas, he is another BIGappa..

 11. S.Selvarajan சொல்கிறார்:

  இதற்கு தானும் விலக்கல்ல என்று நிரூபித்திருக்கிறார் மோடிஜி….! அப்புறம் எப்படி — “clean image ” என்பது அவருக்கு பொருந்தும் ?

 12. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  கீழே உள்ள கருத்தை யார் சொல்லி இருப்பார்கள் …?
  சொல்லுங்கள் பார்க்கலாம்…

  ” மத்திய அமைச்சர் சதானந்தகௌடாவிடம் இருந்த
  ரயில்வேத்துறையை பறித்துவிட்டு, அதை சுரேஷ்பிரபுவிடம் ஒப்படைத்துள்ளது சரியல்ல. இதன்மூலம் கர்நாடகத்திற்கு
  அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சதானந்தகௌடா ரயில்வேத்துறை அமைச்சராக நீடித்திருந்தால், கர்நாடகத்தில் செயல்படுத்தப்படும்
  ரயில் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கிடைத்திருக்கும். சதானந்தகௌடாவின் துறையை மாற்றியது கர்நாடக மக்களுக்கு வருத்ததை ஏற்படுத்தியுள்ளது ”

  – பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் (காங்கிரஸ்)
  மல்லிகார்ஜுன கார்கே தான் இப்படி திருவாய் மொழி மலர்ந்து
  அருளி இருக்கிறார்.

  ஒருவர் கொள்ளைக்காரராக இருந்தாலும் கூட,
  அவர் பாஜக வைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட,
  தான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் கூட –
  ” கர்நாடகத்தவர் ” என்கிற பாசம் அவர்களை எப்படிப்பேச
  வைக்கிறது பார்த்தீர்களா …..???!!!

  அப்புறம் காவிரியில் எப்படித் தண்ணீர் வரும் ….?

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 13. S.Selvarajan சொல்கிறார்:

  அப்புறம் காவிரியில் எப்படித் தண்ணீர் வரும் ….? நேர்மையான ” தீர்ப்புகளும் ” எப்படி வரும் ? ஏனென்றால் அமித்ஷாவுக்கு வழக்குகளில் இருந்து விலக்கு ? அளித்து இருக்கிறார்கள் !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.