சுப்ரமணியன் சுவாமிக்கு மத்திய அரசில் என்ன உத்தியோகம் ….???

மழைக்காலத்திலும் தமிழ் நாட்டை உஷ்ணப்பிரதேசமாக கொந்தளிக்க வைத்துக் கொண்டிருக்கும் பிரச்சினை ….

ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் 8 நாட்களாக
உண்ணாவிரதத்திலும்,

வாழ்வாதாரத்தை இழந்து
வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள்….

தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும்
உணர்வுபூர்வமாகவும், தமிழக அரசு அதிகார பூர்வமாகவும், வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்….

இலங்கைச் சிறையில், போதைப்பொருள் கடத்தியதாக பொய்யாக வழக்கு புனையப்பட்டு, கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சிறையில் வைக்கப்பட்டு, இப்போது மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களையும் இலங்கை அரசுடன், மத்திய அரசு பேசி –
உடனடியாக விடுவிக்க வழி செய்ய வேண்டுமென்று…..

ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த சுப்ரமணியன் சுவாமியும், செயல்பட விரும்பாத மத்திய அரசும்
ஆங்கில தொலைக்காட்சிகளில் expose ஆன பிறகு,
செயல்பட்டிருக்கிறார்கள் – ஆனால் எந்த விதத்தில் ….

su.su.twitter

மிக casual ஆக சு.சுவாமி தனது ட்விட்டரில் நேற்றிரவு ஒரு வரிச்செய்தியாக வெளியிடும் அளவிற்கு கேவலமாகி விட்டதா இந்த உயிர்ப் பிரச்சினை …?

ஆமாம் – மத்திய அரசில் சுப்பிரமணிய சுவாமி என்ன
உத்தியோகம் பார்க்கிறார்…? இந்த அதி முக்கியமான செய்தி அவர் மூலம் வெளியிடப்படுவது ஏன்…?

பிரதமரின் அலுவலகத்திலிருந்து யாராவது பொறுப்பான
அமைச்சரோ, அதிகாரியோ அல்லது வெளியுறவுத்துறை
அமைச்சரோ, வெளியுறவுத்துறை அதிகாரியோ – வெளியிட வேண்டிய இந்த செய்தியை இவ்வளவு அலட்சியமாக வெளியிடுவதன் பின்னணி என்ன …?

தமிழக மக்களுக்கு இந்த treatment போதும் என்பதா …?

சரி – பேசாதவர் பேசி விட்டார் … அந்த 85 படகுகளைப்
பற்றி பேசினாரா இல்லையா …? அவற்றின் கதி என்ன ஆயிற்று என்பதை அடுத்த ட்விட்டரிலாவது சு.சுவாமி வெளியிடுவாரா ..?

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

சுப்ரமணியன் சுவாமிக்கு மத்திய அரசில் என்ன உத்தியோகம் ….??? க்கு 2 பதில்கள்

 1. எழில் சொல்கிறார்:

  //மத்திய அரசில் சுப்பிரமணிய சுவாமி என்ன உத்தியோகம் பார்க்கிறார்…?//

  ஐயா நீங்கள் இப்படி கேட்பீர்கள் என்று தெரிந்து தான் சுவாமி புவனேஷ்வரில் இவ்வாறு தெரிவித்துள்ளார்…

  “இந்திய பிராமணர்களும், கற்றறிந்தவர்களும் எந்த பதவியிலும் இருந்தது இல்லை. இருப்பினும் ராஜாக்கள் அவர்கள் சொல்வதை கேட்பார்கள். நான் எந்த விஷயம் பற்றி ஏதாவது கூறினாலும் ராஜா(மோடி) கேட்கிறார். என் நிலைமை அவ்வாறு உள்ளது. நான் அமைச்சராக ஆகியிருந்தால் ஒரு துறைக்குள் அடங்கியிருப்பேன். ஆனால் தற்போது நான் அனைத்து அமைச்சகங்கள் பற்றியும் பேச முடியும்.”

  இதற்கு மேல் இந்த ஆளை தனியே குறை கூறி பலனில்லை. இவர் செயல்பாட்டை மொத்த பாஜக செயல்பாட்டாகவே எடுத்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் கூட்டாக நாம் பாஜக வை இனி வரும் தேர்தல்களில் நிராகரிக்க வேண்டும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   எழில்,

   உங்கள் பின்னூட்டத் தகவலுக்கு நன்றி.
   நானும் செய்தியைப் பார்த்தேன்.
   தனியே பதிவு போட்டிருக்கிறேன்.

   இதற்கு மேலும், மோடிஜி இந்த உளறுவாயரைத்
   தன்னுடன் வைத்துக் கொண்டிருந்தால்,
   இவர் சொல்வதை உண்மை என்று தான்
   கொள்ள வேண்டும்.

   இனி, தமிழகத்தில் பாஜக வின் இடத்தை
   சுப்ரமணியன் சுவாமியே தீர்மானிப்பார்….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.