“ராஜா நரேந்திர மோடியும் – ராஜகுரு சுப்ரமணியன் சுவாமியும்”

 

 

swamy

 

“நான் என்ன சொன்னாலும் ராஜா   (மோடி)செவிமடுக்கிறார் ” – சுப்பிரமணியசாமி

இது என் இடுகை அல்ல –
வெளிவந்துள்ள செய்தி மட்டுமே –


ஆதாரம் – நக்கீரன் செய்திகள் –
( http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=131993 )

———————–

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற ஒரு பல்கலைக்கழக விழாவில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி பங்கேற்றார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள், ’’மோடி அரசால்
உங்களது திறமைகள் குறைத்து மதிப்பிடப்படுவதாக நீங்கள் கருதுகிறீர்களா?’’ என்ற கேட்டதற்கு,

‘’என்னைப் பார்த்தால் கவலையுடன் இருப்பதுபோல்
உங்களுக்கு தெரிகின்றதா? நான் நாடு முழுவதும் சுற்றிக்
கொண்டிருக்கிறேன். நேற்று கொல்கத்தாவில் இருந்தேன்.
இன்று பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று
இங்கு வந்திருக்கிறேன்.

பதவிக்கு ஏங்கிக் கொண்டிருப்பது வெள்ளையர்களின்
மனநிலைக்கு ஒப்பானதாகும். இந்திய பிராமணர்களும்,
கல்வியாளர்களும் எந்தப் பதவியிலும் இருந்ததில்லை.

ஆனால், அவர்கள் சொல்வதை ராஜாக்கள் செவிமடுத்து வந்துள்ளனர். எந்த விவகாரம் தொடர்பாக நான் என்ன சொன்னாலும் ராஜா (மோடி) செவிமடுக்கிறார். நான் இன்று அத்தகைய நல்ல நிலையில் இருக்கிறேன்.

என்னை மந்திரியாக்கி இருந்தால் ஒரேயொரு அமைச்சகத்தின் மீது மட்டுமே நான் அக்கறை செலுத்துவேன். இப்போதோ..,
எல்லா அமைச்சரவைகளைப் பற்றியும் என்னால் பேச முடியும். எனக்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்’’
என்று கூறினார்.

———————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to “ராஜா நரேந்திர மோடியும் – ராஜகுரு சுப்ரமணியன் சுவாமியும்”

 1. S.Selvarajan சொல்கிறார்:

  சு.சாமி கூறி உள்ளதைபோல அவரிடம் கொடுக்கப்பட்ட ” அசைன்மெண்ட் ” கள் முடியும்வரை — ஒருவர் “குரு” ? மற்றவர் ” ராஜா ” …… அப்புறம் ……..?

 2. Ganpat சொல்கிறார்:

  இந்த அரசில் எல்லாம் தலைகீழாக நடக்கிறது என்பதை குறிப்பதா சார் இந்த புகைப்படம்.? 😉 😉

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,

   அப்பாடா …. யாராவது கேட்பார்களா என்று காத்து காத்திருந்து
   நொந்து போய் விட்டேன்…! நல்ல வேளை நீங்களாவது
   கேட்டீர்களே…

   ஆமாம் – மோடி-சு.சுவாமி சேர்ந்த இடுகைகளுக்கு மட்டும்
   அதிகம் பின்னூட்டங்கள் வர மாட்டேனென்கிறதே. என்ன விஷயம் கண்பத்..?
   இந்த கூட்டணியை நினைத்து மக்கள் பயப்படுகிறார்களோ ???

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Ganpat சொல்கிறார்:

    ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளித்து கொடுத்துக்கொண்டிருக்கும் மருத்துவர் “இனிமேல் அவருக்கு விரும்பியதை சாப்பிட கொடுங்கள்” என்று சொன்னால் அதற்கு இரண்டு பொருள் உண்டல்லவா? அதே போலத்தான் மோடி+சுவாமி கூட்டணி.எண்ணெய் சூடு தாங்காமல் அதிலிருந்து தப்பிக்க நாம் நெருப்பில் விழுந்துவிட்டோம் என நினைக்கிறேன்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     கண்பத்,

     துவக்கத்தில் நான் – சுவாமி, மோடியுடனான தன்
     நெருக்கத்தைப்பற்றி ‘கதை’ விடுகிறார் என்று
     நினைத்தேன். ஆனால், அது நிஜமென்று
     இப்போது தெரிகிறது.

     இது உண்மையில் மிகவும் ஆபத்தான கூட்டணி.
     எனவே தான் இவ்வளவு கோபம் வருகிறது.
     தங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

   • S.Selvarajan சொல்கிறார்:

    என்னுடைய கருத்தில் — அப்புறம் டேஷ்… டேஷ் … டேஷ் என்பது —- இப்போது இருப்பதைவிட இன்னும் பலமடங்கு — ” தலைக்கீழாக ” மாறும் வாய்ப்பு உள்ளது என்பது — டேஷ்களில் தொக்கி நிற்கிறது — அன்பு கா.மை. அவர்களே !

 3. today.and.me சொல்கிறார்:

  அன்பின் கா.மை.,

  பயம் என்று சொல்வதை விட
  1. முன்னெச்சரிக்கை உணர்வு
  2. சாயம் தான் வெளுத்து விட்டதே – இனி நாம பேசினாலும் பேசாவிட்டாலும் 5வருடம் சகித்துத்தான் ஆகவேண்டும் என்கிற சலிப்பு உணர்வு
  3. ஆறுமாசத்துக்குள்ளேயே இப்புடீன்னா மிச்ச வருசமெல்லாம் என்னவோ என்கிற எரிச்சல்
  4. இல்லல்ல, ஆறுமாசம் கழித்துத்தான் இந்த அரசாங்கத்தைப்பற்றி கமெண்ட் அடிக்கலாம், அதுவரைக்கும் அவர்களெல்லாரும் புதிதாக வந்த மருமகள்கள் அதனால் வீடு பழகட்டும் என்று சொல்பவர்களின் நியாயமான காரணத்தை (!) ஏற்றுக் காக்கும் அமைதியாக இருக்கலாம்.
  5. அதுவும் இல்லையா, இந்தத் துறை அவர்களுக்குப் புதிது, கற்றுக்கொண்டு பின்பு நடத்துவார்கள் அரசாங்கம். அதற்குப் பின் ( என்ன ? கற்றுக்கொள்வதிலேயே அவர்கள் அரசாங்க ஆயுளும், கேள்வி கேட்கும் மக்களின் ஆயுளும் முடிந்துவிடக்கூடாது) கேள்வி கேட்கலாம், அதுவரை யாரும் கேள்விகளால் fire செய்துவிடக்கூடாது என்ற நல்ல எண்ணமாயிருக்கும்.
  ——————–
  என்னைப் பொறுத்தவரை,
  ஓதுவது சாத்தான்…. இடுகைக்கு அளித்த பதில்தான்,

  //என் குறிப்பு :
  காங்கிரசும் பாஜகவும் வேறுவேறு என்று நினைத்திருந்தேன் கொஞ்ச நாள்.
  பாஜக காங்கிரசின் பினாமி என்று கூட நினைத்திருந்தேன், பார்லிமெண்டில் பணமூட்டையைக் கொட்டியபோது மட்டுமல்ல; பார்லிமெண்டில் எதிர்க்கட்சியாக 12 வருடங்களில் எந்தக் குப்பையையும் உருப்படியாகக் கொட்டாதபோது.

  இப்போது காங்கிரஸ்தான் பாஜக-வின் பினாமி என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

  ஏனென்றால்
  காங்கிரஸ் அரசைக் குறைகூறி ஆட்சிக்கு வந்தவர்கள், அவர்கள் செய்த குற்றங்குறைகளை நியாயப்படுத்தியும், அவற்றைவிட அதிகமாகவும், அவற்றையே சட்டத்தின்படியும் செய்ய இயலும் என்பதை நிருபித்திருக்கிறார்கள். //

  —————————–
  இப்படி ஒரு உள்குத்து வைத்துத்தான் இந்தப் படத்தை நீங்கள் தலைகீழாப் போட்டிருக்கிறீர்களா? நேராவே போட்டிருக்கலாம். முந்தைய ஆட்சியைவிட இவர்கள் ரூட் மாறிப் போகவில்லையே. நேராகவே தான், இன்னும் கொஞ்சம் ஜரூராகப் போய்க்கொண்டிருக்கிறது.

 4. Srini சொல்கிறார்:

  Dear KM Sir….

  TRP rating paarthu… TV seriels, shows edukura mathiri thalaipu select pannathinga….:)

  We still have hopes on Modi. I am sure you will agree that Only honest politician cannot survive. He needs to be smart also.. please note i am not saying “corrupt”… i am saying ” he needs to be smart”….. Modi cabinet is all about 80:20 rule. His top 20% ministers are the most important ones and from whom he expects results. the rest are for political reasons… if he doesn’t do this.. he will fail in state elections. it is very important for BJP to increase tally in Rajayasabha…if he needs to bring in Bold reforms..and for this state elections are very important… these people will be shown door after some time… but they are indispensable as of now…. wait in watch for 2015 reforms…..

  Since you wrote about negatives of Giri raj singh.. please also write something good related to Parikkar, Suresh prabhu types….

  Regards
  Srini

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஸ்ரீநி,

   உங்களுக்குத் தெரியும்.
   நான் ஏற்கெனவே பல தடவை சொல்லி இருக்கிறேன்.
   கண்களை மூடிக்கொண்டு, தலைவர் எதைச் செய்தாலும்
   சரியாகத்தான் இருக்கும் என்று “ஜீரணிக்க” என்னால்
   முடியாது.

   மன்னிக்கவும் -“honest politician cannot survive”- என்கிற
   உங்கள் வாதத்தை என்னால் ஏற்க முடியவில்லை.
   நான் காமராஜரை, கக்கனை, பி.ராமமூர்த்தியை, ராஜாஜியை,
   – பார்த்து, அனுபவித்து, உணர்ந்தவன்.
   smart ஆக இருக்க honesty யை தியாகம் செய்ய வேண்டிய
   அவசியம் இல்லை. பதவியை தக்கவைத்துக் கொள்ள
   ஊழல்வாதிகளுடன் compromise செய்து கொள்ள
   வேண்டிய அவசியமில்லை.

   தவறு நடக்கும்போது சொல்லத்தான் வேண்டும்.
   மோடிஜி செய்வது எல்லாமே ‘பொது நலன்’ கருதித்தான்
   என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. முக்கால்வாசி
   முடிவுகள் ‘சுயநலம்’ கருதியவையாகத்தான் தெரிகின்றன.
   தன்னை ‘நிலைநிறுத்தி’க் கொள்ள வேண்டும் என்கிற
   நோக்கில் செய்யப்படுபவை தான்.

   நண்பர் today.and.me மிகச்சரியாகப் புரிந்து
   கொண்டிருக்கிறார். அவரது இந்த வார்த்தைகள்
   மிகப்பொருத்தமானவை –

   -//Smart ஆக இருக்கலாம், இருக்கவேண்டும்தான்.
   ஆனால் Oversmart ஆக இருக்கக்கூடாது.
   தமிழ்நாட்டைத் தண்ணிதெளிச்சு விட்டாலும்
   பரவாயில்லை, ஸ்மார்ட் ஆ இருக்கணும்ங்றீங்களா?//-

   anyway – உங்கள் கருத்து உங்களுக்கு…..

   விளக்கம் கூற வேண்டியது என் கடமை என்பதால் –
   இதை எழுதுகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. today.and.me சொல்கிறார்:

  Srini,
  செய்தியின் முன்பாதி அல்லது பின்பாதியைக் கட்டிங் செய்துவிட்டு திடீர்-பகீர்-பளார் என்று போடுவதுதான் டிஆர்பி ரேட்டிங்கை கூட்டுவது.
  செய்தியின் ஒரு பகுதிதான் இந்தத் தலைப்பு என்பதை விட, பேட்டியின் சாரமும் இதுதான் என்பதை தாங்கள் புரிந்துகொள்ளவில்லை.

  Smart ஆக இருக்கலாம், இருக்கவேண்டும்தான். ஆனால் Oversmart ஆக இருக்கக்கூடாது. தமிழ்நாட்டைத் தண்ணிதெளிச்சு விட்டாலும் பரவாயில்லை, ஸ்மார்ட் ஆ இருக்கணும்ங்றீங்களா?

  பரிக்கர், சுரேஷ்பாபு பத்தி எழுதவும் கிரிராஜ் பத்தி எழுதாமல் இருக்கவும் நிறைய மீடியாக்கள் தயாராக இருக்கிறார்கள். வெகுஜனங்களை சென்று அடையாமல் எழுதாமல் ஒளித்துவைக்கப்பட்டிருப்பவைகளை அனைவருக்கும் தெரியத்தரும் கா.மை.அவர்களுக்கு என் நன்றி
  —————–

  நண்பர்களுக்கு,

  இதையும் கொஞ்சம் படியுங்கள்……

  http://ramaniecuvellore.blogspot.in/2014/11/blog-post_12.html

  அந்நிய நேரடி முதலீடுகள் இந்திய நலனுக்கு உதவுமேயானால், அதை வரவேற்பதில் தவறில்லை. ஆனால், இந்தியாவில் உருவாகும் மூலதனம்கூட இங்கு தங்காமல் ‘மேக் இன் அமெரிக்கா’, ‘மேக் இன் சீனா’என்று ஓடுவது ஏன் என்பதே கேள்வி. மோடியின் ‘மேக் இன் இந்தியா’முழக்கம் தன்னை வெகுவாக ஈர்த்ததாகக் கூறிய டாட்டா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி, ரூ. 10,700 கோடி முதலீட்டில் தனது ஜாக்குவார் லேன்ட் ரோவர் முதல் தொழிற்சாலையை சீனாவில் கடந்த அக்டோபரில் தொடங்கியுள்ளார்.
  அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் குழுமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் டெக்ஸ்டைல்ஸ் ரூ. 240 கோடியில் குஜராத்தில் திட்டமிட்டிருந்த முதலீட்டை அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்துக்கு மாற்றிக்கொண்டு போயிருக்கிறது.

  ——-

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்கள் todayandme & கண்பத்,

   மிகத் தெளிவாக இருக்கிறீர்கள்.
   பல விஷயங்களில் நாம் ஒத்த கருத்துக்கள்
   உடையவர்களாக இருக்கிறோம்.
   சில விஷயங்களை என்னை விட
   தெளிவாகவும், தயக்கமின்றியும், பொறுப்புடனும்
   சொல்லி விடுகிறீர்கள். மிக்க நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. yogeswaran சொல்கிறார்:

  We the people…………………………..(FILL IN THE BLANKS)

 7. drkgp சொல்கிறார்:

  Are symbolically indicating something by the color of the dessert and inversion of the snap?

 8. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  இதையேதான் இத்தனை நாட்களாக நீங்கள் கூறி வந்தீர்கள் ஐயா! சுப்பிரமணிய சுவாமி கூறுவதைத்தான் மோடி கேட்பதாக. நீங்கள் கூறி நம்பாதவர்கள் இனியேனும் நம்பித்தானே ஆக வேண்டும்!

 9. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  மதிப்பிற்குரிய காவிரி மைந்தன் ஐயா!

  இதோ பாருங்களேன்! ‘உலகின் மிக மோசமானவர்கள்’ எனும் பன்னாட்டுப் பட்டியலில் 18,473 வாக்குகள் பெற்று சுப்பிரமணியன் சுவாமி 13ஆவது இடத்தில் இருப்பதை! இந்த ஆளை இந்தப் பட்டியலில் சேர்த்த visuals 1080-க்கு நன்றி!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.