வாங்கிய கடனை திரும்பக் கொடுக்காதவர் – மோடிஜியின் மந்திரி ஆகலாமா ? ( மோடிஜிக்கு ஏன் – பகுதி-2 )

sujana copy

திருவாளர் Y.S.சௌத்ரி – கடந்த ஞாயிறு அன்று மோடிஜியால் அமைச்சராக சேர்த்துக் கொள்ளப்பட்ட
21 பேர்களில் ஒருவர். . ராஜ்ய சபாவின்
கோடீஸ்வர உறுப்பினர்களில் ஒருவர் – இன்றைய தினம்
அவரது சொந்த சொத்து மதிப்பு சுமார் 190 கோடி.
பெரும் தொழிலதிபர்.

ஆந்திராவில் தெலுகு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு
அவர்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். தெலுகு தேசம்
கட்சியின் ஆரோக்கியத்துக்கு இவரது நிதி நிலைமை
துணையாக இருக்கிறது….இவரது தொழில் வளர்ச்சிக்கு
தெலுகு தேசம் கட்சி உறுதுணையாக இருக்கிறது.

இரண்டுமே நன்றாக இருந்து விட்டுப் போகட்டும்….!

நமது பிரச்சினை –
அவர் மத்திய அரசில் மந்திரியாவதில் தான் இருக்கிறது….!!!

‘சுஜனா க்ரூப் கம்பெனிஸ்’ என்கிற வர்த்தக நிறுவனங்களின்
தலைவர் இவர். ஆந்திராவில் சுஜனா சௌத்ரி என்றே
அழைக்கப்படுபவர். All India Bank Employees’ Association
(AIBEA) டிசம்பர் 2013-ல் வெளியிட்ட அறிக்கையின்படி,
அரசு வங்கியில் கடன் வாங்கி விட்டு திரும்பக் கொடுக்காமல்
இருக்கும் முதல் 50 (top 50 defaulters) நபர்களில் இவர்
முக்கிய இடம் வகிக்கிறார்.

Sujana Universal Industries Ltd (erstwhile Sujana Industries)
வாங்கிய 330 கோடி ரூபாய் பல காலமாக திரும்பக்
கொடுக்கப்படவில்லை. ( இதில் 203 கோடி ரூபாய் Bank of India
வங்கியிடமிருந்தும், 127.42 கோடி ரூபாய் Central Bank of India
-விடமிருந்தும் பெறப்பட்டிருக்கிறது )

பணம் இல்லாதவர் அல்ல இவர்.
இவரது சொந்த சொத்து மதிப்பு சுமார் 190 கோடி.

இதைத்தவிர இன்னும்
கோடி கோடியாக லாபம் சம்பாதித்துத் தரும் வேறு பல
கம்பெனிகளுக்கு இவர் சொந்தக்காரர் தான்.
ஆனாலும், இந்த வங்கிக் கடனை மட்டும்
திரும்பக் கொடுக்காமலே, சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு
மூடு விழா நடத்த திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
(பண இழப்பு பங்குதாரர்களுக்கும், வங்கிக்கும் தானே –
சொந்த முறையில் இதனால் அவருக்கு இழப்பு ஏற்படுவது
தவிர்க்கப்படும் )

மே 2007-ல் பங்கு ஒன்று 149.20 ரூபாய் என்கிற அளவில்
பங்குச் சந்தையில் விற்கப்பட்ட இந்த கம்பெனியின்
இன்றைய மதிப்பு ரூபாய் 3.78 மட்டுமே.

இப்பேற்பட்ட தொழிலதிபரை மத்திய அமைச்சராக நியமிப்பதன்
மூலம் இந்த பாரத நாட்டுக்கு மோடி அவர்கள் செய்ய
விரும்புவது என்ன …?

இந்த கடங்காரத் தொழிலதிபர் மத்திய அரசில் சேர்ந்து,
என்ன பணி, எத்தகைய பணி ஆற்றப் போகிறார்…?

பாவம், அவர் தன் தொழிலை கவனிப்பாரா அல்லது
பாரத நாட்டின் கோடானுகோடி மக்களுக்கு சேவை செய்வாரா ..?

இவரை விட்டால், வேறு தகுதியான நபர் யாரும்
மோடிஜி அவர்களின் கண்களில் படவில்லையா …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to வாங்கிய கடனை திரும்பக் கொடுக்காதவர் – மோடிஜியின் மந்திரி ஆகலாமா ? ( மோடிஜிக்கு ஏன் – பகுதி-2 )

 1. S.Selvarajan சொல்கிறார்:

  அன்பு கா.மை. அவர்களுக்கு —-தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பிருந்தே ஒருமஹா டீமை அமர்த்தி ” தன்னைபற்றி இணையத்தில் ” ஆஹா ! ஓகோ !! என்று புகழ் பாட வைத்தது — இந்த பிரதமர் நாற்காலியில் அமரவேண்டும் என்பதற்க்காகத்தானே ? அப்படி இருக்கும்போது — இப்படியான பேர்வழிகளை அமைச்சரவையில் சேர்த்து இருப்பதில் — என்ன ஆச்சரியம் ? மோடியை பற்றி தங்களின் மன ஒப்பீடு எப்படி என்று தெரியவில்லை ! அவரைபற்றி வேறு அதிகப்படியான எண்ண ஓட்டமா தங்களுடையது என்பதும் புரியவில்லை — ஒட்டு மொத்தமாக நம்நாட்டு அரசியலில் இதெல்லாம்—-சகஜம் என்று சப்பைக்கட்டு கட்டுபவர்கள்தான் அதிகம் !!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் செல்வராஜன்,

   // மோடியை பற்றி தங்களின் மன ஒப்பீடு எப்படி
   என்று தெரியவில்லை ! //

   நேற்று நண்பர் ஸ்ரீநி அவர்களுக்கு எழுதி இருக்கும்
   மறுமொழியில் தெளிவாகச் சொல்லி இருக்கிறேனே..
   ஒரு வேளை அதை நீங்கள் பார்க்கவில்லையோ ..?

   மீண்டும் கீழே –

   ” நான் ஏற்கெனவே பல தடவை சொல்லி இருக்கிறேன்.
   கண்களை மூடிக்கொண்டு, தலைவர் எதைச் செய்தாலும்
   சரியாகத்தான் இருக்கும் என்று “ஜீரணிக்க” என்னால்
   முடியாது.

   smart ஆக இருக்க honesty யை தியாகம் செய்ய வேண்டிய
   அவசியம் இல்லை. பதவியை தக்கவைத்துக் கொள்ள
   ஊழல்வாதிகளுடன் compromise செய்து கொள்ள
   வேண்டிய அவசியமில்லை.

   தவறு நடக்கும்போது சொல்லத்தான் வேண்டும்.
   மோடிஜி செய்வது எல்லாமே ‘பொது நலன்’ கருதித்தான்
   என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. முக்கால்வாசி
   முடிவுகள் ‘சுயநலம்’ கருதியவையாகத்தான் தெரிகின்றன.
   தன்னை ‘நிலைநிறுத்தி’க் கொள்ள வேண்டும் என்கிற
   நோக்கில் செய்யப்படுபவை தான்.”

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. drkgp சொல்கிறார்:

  My expectation on Shri Modi has been very high . The recent developments
  have infused the feeling that things can not move in the ideal direction in
  our country , let anybody take the reins of power. Going back on their earlier
  declaration before the election , they refused to release the notorious list of hoarders citing
  the same old cock and bull story. Taking a diametrically opposite direction, they
  are going to rule Maharastra with the help of ” National Corruption Party “.
  Shri Modi coined this title during his mega rallies just weeks before in October.
  Now a number of people with debatable integrity are inducted in governance .
  Many more such things are likely to follow.
  Let us hope and wish such things not happen. (Which we have been doing for
  more than fifty years now)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   டாக்டர் KGP,

   நான் உங்கள் கருத்துடன் 100 % ஒத்துப் போகிறேன்.
   மாற்றத்தை எதிர்பார்த்தோம் –
   ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது…..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்

 4. Sanmath AK சொல்கிறார்:

  ///தன்னை ‘நிலைநிறுத்தி’க் கொள்ள வேண்டும் என்கிற
  நோக்கில்///…… Exactly KM sir……..

  So far, BJP was the ONLY party, which was not run by a single person, in an autocratic style…… Even though RSS has a more say, still anybody(as blessed by RSS), can get to the top position……. As the way it goes, Namo’s activities show that he wants his “say” have a big effect in the party – fortunately he is single-else we wud have led to another pappu being called a leader ……

  So far, RSS functioning style is IDEALOGY BEFORE PERSON and PARTY BEFORE PERSON…… I think they too have realized that PERSON BEFORE PARTY is the suitable one for our country and may be allowing Namo’s PR gimmicks ……

 5. chennaiveeran சொல்கிறார்:

  Modi is fast becoming “Indira”… So high hopes of a honest Modi should be tempered..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.