“குட்டி யானையும் -சிங்கங்களும்” …குழந்தைகளுக்கான அற்புதமான ஒரு 3 நிமிட வீடியோ……

..

செய்தித் தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
எதேச்சையாக ஒரு வீடியோ கண்களில் பட்டது.

அற்புதமான ஒரு காட்சி. ஜாம்பியா வனவிலங்குகள்
வாழுமிடத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு குட்டி யானையை
14 சிங்கங்கள் ஒன்று சேர்ந்து தாக்குவதும், அது எப்படி
தன்னை தற்காத்துக் கொள்கிறது என்பதையும் அற்புதமாக
இயற்கையாக நடந்ததை அப்படியே படமாக்கி இருக்கிறார்கள்…

மாலையில் என் பேத்தி பள்ளியிலிருந்து திரும்பிய பிறகு,
அவளுக்கு அதைப் போட்டுக் காண்பித்தேன்.
அடடா … பரிதவிப்பு, சோகம், ஆத்திரம், கோபம்,
( “என்ன தாத்தா இது – வீடியோ ஷூட் பண்றவங்க சும்மா
பாத்துக்கிட்டே இருக்காங்களே – அந்த சிங்கத்தை ஷூட்
பண்ணக் கூடாதா ..?” )

பின்னர் குட்டி யானை திரும்பி வந்து அந்த ஒற்றை சிங்கத்தை
துரத்தும்போது, சந்தோஷம் என்று 3 நிமிடங்களுக்குள் அவளிடம்
ஏற்பட்ட மாறுதல்களை பார்க்கவே மிகவும்
வேடிக்கையாக இருந்தது.

இன்று ஞாயிறு ஆயிற்றே. வீட்டில் தானே இருப்பீர்கள்.
உங்கள் வீட்டு குழந்தைகளும் அதைப் பார்த்து ரசிக்கவும்
(அதைப் பார்த்து நீங்கள் ரசிக்கவும் ) கீழே தந்திருக்கிறேன்….

..

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to “குட்டி யானையும் -சிங்கங்களும்” …குழந்தைகளுக்கான அற்புதமான ஒரு 3 நிமிட வீடியோ……

 1. Dr.M.Purushothaman சொல்கிறார்:

  Very many thanks Mr.Kavirimainthan.

 2. T.N.MURALIDHARAN சொல்கிறார்:

  வீடியோ சூப்பர்.

 3. seshan சொல்கிறார்:

  தாத்தா va !!!. i thought you are a young man.

 4. balachandar சொல்கிறார்:

  Yes. Kids asked the right question. A question which is generally asked by a lot of people when they see such Videos. Why can not they rescue the affected animal(Elephant in this case.) . The answers are
  1. It will affect the Food Cycle(Generally told)
  2. It will affect their profession of capturing “Real Video ” of survival battle. The intention is to capture the video as such. They would not care who wins.

 5. kannan சொல்கிறார்:

  அருமை.

 6. S.Selvarajan சொல்கிறார்:

  நாம் எந்த வித ஆயுதத்தை [ தாக்குதலை ] எடுக்கவேண்டும் என்பதை — நம்முடைய எதிரிகளே — தீர்மானிக்கிறார்கள் என்று சேகுவாரா கூறியது முற்றிலும் உண்மை என்பது இந்த படக்காட்சியை பார்த்தபோது நன்கு புரிந்தது ! திருப்பி தாக்கினால் எவனும் நிற்கமாட்டான்தானே ?நன்றி திரு கா.மை அவர்களே

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.