ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் மிகவும் அதிர்ச்சியான ஒரு தகவல் ….

..

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளதை
யொட்டி, அவருடன் ஒரு வர்த்தகர் குழுவும் (business delegation)
சென்றுள்ளது.

இன்று மாலை அங்கிருந்து ஒரு அதிர்ச்சியான தகவல்
வெளியாகி இருக்கிறது. வர்த்தகக் குழுவில் இடம்
பெற்றுள்ளவர்களில் ஒருவர் – மோடிஜியின் நெருங்கிய நண்பர்.
குஜராத்தில் பல முதலீடுகளை செய்துள்ள தொழிலதிபர்
(அதானி க்ரூப்ஸ் தலைவர் ) கௌதம் அதானி.

adani-australia-coal-mine

இவரது கம்பெனிக்கு ஆஸ்திரேலியாவில் Carmichael (Queensland )
என்கிற இடத்தில் சுரங்க கம்பெனி ஒன்றைத் துவக்க
ஆஸ்திரேலிய அரசு இன்று அனுமதி கொடுத்திருக்கிறது.

இந்த அதானி கம்பெனி, ஆஸ்திரேலியாவில் துவங்கும்
நிலக்கரி சுரங்கத்திற்கு, இந்தியாவின் முன்னணி அரசு வங்கியான
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India )
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனாகக் கொடுக்கிறது.

கோடிக்கணக்கான டாலர்களில் இந்திய முதலீடு
ஆஸ்திரேலியாவிற்கு போகிறதே என்கிற அச்சத்தில் கூகுளில்
தேடினேன் – ஒரு பில்லியன் அமெரிக்க டாலரின் மதிப்பு
இந்திய ரூபாயில் எவ்வளவு என்று –

1 billion US dollars are equal to how many Indian rupees?

அதிர்ச்சியளிக்கிறது கிடைக்கும் பதில் –
As of October 2014, $1,000,000,000 =
61,532,000,000 Indian Rupees.

இத்தனை கோடி ரூபாய் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு
போவது மட்டும் அல்ல –

ஆஸ்திரேலியாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் நஷ்டத்தில்
இயங்குவதால், சுமார் 4000 ஆஸ்திரேலிய சுரங்கத் தொழிலாளர்கள்
வேலை இழந்து நிற்பதால் – இந்த சுரங்கத்தை கூடிய விரைவில்
தோண்ட ஆரம்பிக்க ஆஸ்திரேலிய அரசு ஆர்வம் காட்ட,

2017 -ல் முதல் சுரங்கம் துவக்கப்பட்டு விடும் என்று அதானி
சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்ல – நிலக்கரி சுரங்கம் அமையும் இடத்திலிருந்து
அது ஏற்றுமதி செய்ய அமையவிருக்கும் துறைமுகம்
400 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால், இந்த நிலக்கரிச்
சுரங்கத்திலிருந்து – துறைமுகம் வரையிலான 400 கி.மீ.
தூரத்திற்கு அதானி கம்பெனியே ரெயில் பாதையும் போடப்-
போகிறது. இந்த ஷரத்தும் – இன்றைய ஒப்பந்தத்தில்
சேர்க்கப்பட்டிருக்கிறது.

“Make in India” என்று இங்கே இந்தியாவில் மிகப்பெரிய
கோஷத்தை உருவாக்கிவிட்டு,
ஆஸ்திரேலியா வளம்பெற
மிகப்பெரிய அளவில் அங்கு இந்திய முதலீட்டை கொண்டு
செல்வதும், அங்குள்ள வேலையிழந்த சுரங்கத்
தொழிலாளர்களுக்கு மாற்று வேலை கொடுப்பதும் ……

எதில் சேர்த்தி …??? ஒன்றுமே புரியவில்லை….
உண்மையாகவே மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

மேலும், நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஸ்டேட் வங்கி –
இவ்வளவு பிரம்மாண்டமான அளவு தொகையை எப்படி
ஒரு தனிப்பட்ட முதலாளிக்கு / தொழில் நிறுவனத்திற்கு
கடனாகக் கொடுக்கிறது….

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்க
கம்பெனியான Glencore ( இதற்கு ஆஸ்திரேலியாவிலேயே
13 சுரங்க கம்பெனிகள் உள்ளன ) தற்போது
அதன் 8000 ஊழியர்களுக்கு வேலையின்மை/ நஷ்டம்
காரணமாக – கட்டாய விடுமுறை கொடுத்து
அனுப்பி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் புதிதாக நிலக்கரிச்
சுரங்கங்களைத் தோண்டுவது லாபகரமாக இருக்காது
என்று துறை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் சொல்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் 1 பில்லியன் கோடி டாலர் பணத்தை
அங்கு இந்திய முதலீடாகப் போட ஒரு தனிப்பட்ட
கௌதம் அதானியை நம்பி State Bank of India
கொடுப்பது அறிவுடைமையா …?
இந்த கடன் கொடுக்கப்படுவதற்கான காரணம் யார் …???

Kingfisher விஜய் மால்யாவிற்கு கொடுத்தது போல் –
இத்தனை கோடி ரூபாயையும் கௌதம் அதானிக்கு
தத்தம் செய்தால்,
நான்கு – ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நஷ்டம் காரணமாக
அவர் சுரங்கத்தை மூடினால் – அத்தனை நஷ்டமும்
யார் தலையில் வந்து விடியப்போகிறது…..???

முட்டாள் இந்தியன் தலையிலா ….?

இதே வங்கிப் பணத்தைக் கொண்டு, இதே முயற்சிகளை,
இந்திய நிலக்கரி சுரங்களில் மேற்கொண்டு, உள்நாட்டு
உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை
உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளாதது ஏன்…..?

ஆமாம் – பிரதமருடன் செல்லும் வர்த்தகக் குழு
அந்நிய முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டு வர
முயற்சிப்பதற்காக செல்கிறதா
அல்லது
இந்திய பணத்தை (அதுவும் அவர்களது சொந்தப்பணம் அல்ல –
அரசு வங்கிப் பணம் – இந்த நாட்டு மக்களின் சேமிப்பு )
அயல்நாடுகளில் கொண்டு சென்று முதலீடு செய்யவா …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் மிகவும் அதிர்ச்சியான ஒரு தகவல் ….

 1. S.Selvarajan சொல்கிறார்:

  ” மேக் இன் இந்திய ” என்று கூறியதின் அர்த்தம் இப்போது புரிகிறது — கௌதம் அதானி மேக் இன் இந்தியாதானே — அதனால்தான் நம்நாட்டு வங்கியின் பணம் ஒன் பில்லியன் டாலர் பணம் அவர் மூலமாக நிலக்கரியில் முதலீடு செய்ய ஆஸ்திரேலியா சென்றுள்ளது — மோடியின் ஆட்சியிலும் இதுபோல நடந்தால்தானே பின்னாளில் செய்திகளில் வெளிவந்தால்தானே காங்கிரசைவிட சிறந்த ஆட்சி என்று பெயர் எடுக்க முடியும் — அதனால்தான் ” made- in– india-” என்று கூறவில்லை ?–உலக அளவில் இந்தியா பின்தங்கியிருக்க எனக்குத் தெரிந்த அளவில் எந்த காரணமும் இல்லை. எனவே, நாம் இந்தியாவை முன்னேற்றத் தேவையான அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று சிட்னியின் ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார் ?இது என்றைய தினமணி செய்தி — .இவ்வாறு இந்திய பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்தால்இந்தியா பின் தாங்காமல் வேறு என்ன செய்யும் — இப்போது காரணம் புரிகிறது !!! “CLEAN IMAGE ” !

 2. bandhu சொல்கிறார்:

  கொடுங்கோல் மன்னன் தன் கடைசி ஆசையாக தன் மகனிடம் இறுதி ஆசையாக கேட்டானாம்.. மகனே.. எப்படியாவது மக்களை நான் நல்லவன் என்று சொல்ல வைத்துவிடு என்று.. மகன் பத்து மடங்கு கொடுங்கோலனாக ஆட்சி செய்தவுடன், மக்கள் சொன்னார்களாம்.. இவனை பார்த்த வுடன் தான் தெரிகிறது இவன் அப்பா எவ்வளவு நல்லவர் என்று..

  இந்த கதை எதனாலோ மனதில் வந்து போகிறது!

 3. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  “Swacch Bharat Abhiyan” என்று கூறுவதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது.
  இந்தியாவை சுத்தமா துடைச்சிடுவாங்க போல!
  வாழ்க இந்திய அரசியல்வாதிகள்!
  நாமெல்லாம் இந்நாட்டு மன்னர்களேதான்!!

 4. yogeswaran சொல்கிறார்:

  Kaviri Maindhan Sir,

  Its is very boring Sir,

  You will write

  Then your son will write

  again his son will write.about some adani at that time.

  this is the same old story for the common Indians.

  and yogi,his son,sons son will write some comments.

 5. R.Ramachandran சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  மீடியாவும், எதிர்க்கட்சிகள் எல்லாமும் தூங்கிக் கொண்டிருக்கும்போது
  உங்களுக்கு மட்டும் ஏன் இந்த வீண் கவலை ?
  வலைத்தளம் முழுதும் மோடி பக்தர்கள் நிரம்பி இருக்கும்போது,
  நீங்கள் இந்த மாதிரியான பிரச்சினைகளை எல்லாம் எழுதினால்
  அநாவசியமாக அவர்களின் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
  உங்கள் வலைத்தள ஆதரவாளர்களை இழக்க வேண்டாமென்று தான்
  கூறுவேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ராமச்சந்திரன்,

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   மீடியாக்களை வளைத்துப் போடுவதில் பாஜக வும்/RSS -உம்
   தேர்ந்து விட்டன. யார் யாரைக் கையில் போட்டுக்கொள்ள
   வேண்டும் என்பதெல்லாம் அத்துப்படியாகி விட்டது.
   எனவே இன்னும் கொஞ்ச நாட்களுக்கு மீடியாக்கள்
   இப்படித்தான் இருக்கும்.

   மோடிஜி யின் ஆதரவாளர்களுக்கு, உங்களுக்கு கூறும்
   இந்த பதிலின் மூலமே விளக்கி விட விரும்புகிறேன்.

   நீண்ட நாட்களாக என்னை / என் எழுத்தை அறிந்த
   வலைத்தள நண்பர்களைப்பற்றி நான் கவலைப்பட வேண்டாம்.
   அவர்களுக்கு என்னை நன்றாகப் புரியும்.

   அண்மைக்காலங்களாக வந்து கொண்டிருக்கிற நண்பர்களுக்கு
   ஒரு விளக்கம் –

   நான் மோடிஜி’யின் –
   எதிர்ப்பாளரும் அல்ல –
   ஆதரவாளரும் அல்ல.

   என் முன்னுரிமை (priorities ) –
   முதலில் தமிழ் மக்களும், தமிழ் நாடும் –
   அதையடுத்து எனது இந்திய நாடு…
   அதன் பின்னர் தான் அரசியல் தலைவர்கள் –
   அது யாராக இருந்தாலும் …

   நான் மோடிஜியை ஆதரித்தும், வரவேற்றும்
   இதே வலைத்தளத்தில் எழுதி இருக்கிறேன்.
   அதே போல் விமரிசித்தும் எழுதி இருக்கிறேன்.
   எதிர்காலத்திலும் இப்படித்தான் இருக்கும்.

   நல்ல விஷயங்களில் ஆதரிப்போம்…
   தவறு செய்யும்போது எதிர்ப்பைப் பதிவு செய்வோம் …
   இது தானே ஜனநாயகம் …?

   “நாமார்க்கும் குடியல்லோம்”
   எந்த கட்சியும் எனக்கு சோறு போடவில்லை –
   -நான் சாப்பிடும் உணவு என் உழைப்பில் வருவது ..
   பின் என் கருத்தை நேர்மையான முறையில் சொல்ல –
   நான் ஏன் அஞ்ச வேண்டும் / தயங்க வேண்டும் ….?

   பாஜக நண்பர்கள் முதலில் கோபம் கொண்டாலும் –
   படித்துப் பார்த்த பின், சிறிது நேரம் கழித்து
   பொறுமையாக யோசித்தால் – நான் சொல்வதில்
   தவறு இல்லை என்பது அவர்களுக்கே புரியும்.

   இதே போல் தொடர்ந்து கருத்துக்களை
   பரிமாறிக் கொண்டிருங்கள். நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   கா.மை. அவர்களின்மீதுள்ள அன்பின்பால் இட்ட பின்னூட்டம்தானென்றாலும், ஒரு குறிப்பு சொல்ல விழைகிறேன்.

   வலைத்தளம் முழுதுமுள்ள மோடி பக்தர்கள் இந்தத்தகவல்களை அறிந்துகொள்ளத்தான் வேண்டும். திருந்துவதும் யோசிப்பதும் அவரவர் தனி உரிமை. கட்சிக்கு ஆட்கள் சேர்ப்பதுபோல வலைத்தளத்திற்கென ஆதரவாளர்களைச் சேர்க்கவேண்டிய நிலையில் விமரிசனம் இருக்கிறதா என இத்தனை இடுகைகளைப் படித்தபிறகும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா?

   இன்னுமொரு சீக்ரெட். நாம் செய்கிற தவறை மற்றவர்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் யாரும் கண்டு அவர்களைக் கண்டுகொள்ளமாட்டார்கள். தவறை கண்டுபிடித்துவிட்டார்கள் என்றால் யார் கண்டுபிடித்தார்களோ அவர்களையே நோட்டம் விட்டுக்கொண்டுதான் இருப்பார்கள். அடிக்கடி இங்கு வந்துபோய்க்கொண்டுதான் இருப்பார்கள்.

   அதற்காகத் தப்பைத் தப்பு என்று சொல்லாமல் இருக்கமுடியுமா? இருக்கலாமா? இது ஜனநாயக நாடுதானே. சொல்லத்தானே ஐயா செய்றார், இதைப்பார்த்து எல்லாம் அவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. வேண்டுமென்றால் கா.மை. கண்டுபிடிக்காதமாதிரி எப்படி தப்பு செய்யலாம் என்று வேண்டுமானால் யோசிக்கலாம்.

 6. Varadarajan சொல்கிறார்:

  Dear Sir

  You have shown how the media both Print and Electronic are quiet on this issue. Can anyone file a PIL for stopping SBI to disburse loan .

  God Save India

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் வரதராஜன்,

   உங்கள் ஆர்வமும், வேகமும் நிறைய பேருக்கு வர வேண்டும்.
   நிறைய மக்களிடம் இந்த செய்தி போய்ச்சேர வேண்டும்.

   நேற்றிரவு தானே முதல் செய்தி வந்திருக்கிறது…
   எதிர்க்கட்சிகள் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை…
   விரைவில் விழித்துக் கொள்வார்கள்..
   பார்ப்போம் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    face book – தளத்தில் இப்போது இந்த
    இடுகை மிக வேகமாகப் பரவிக்கொண்டு இருப்பது
    என் dash board மூலமாகத் தெரிகிறது.
    இதை யார் துவக்கியிருந்தாலும், அந்த நண்பருக்கு
    என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 7. Ganpat சொல்கிறார்:

  அது எப்படி சோனியா ராகுலுக்கு கிட்டாத ,தேசிய நாளிதழ்களான ஹிந்து,TOI,போன்றவைகளுக்கு கிட்டாத ,எதிர் கட்சிகளுக்கு கிட்டாத இந்த அறிய தகவல் இப்படி தெள்ளதெளிவாக சென்னையில் எங்கோ வசிக்கும் ஒரு சீனியர் சிடிசனுக்கு கிடைத்துள்ளது.?? ஒரு பில்லியன் டாலர் முதலீட்டை பிரதமர் தன்னிச்சையாக எடுக்க முடியுமா?என்ன நடக்கிறது இந்நாட்டில்? இந்த தெளிவான குற்றசாட்டை PMO க்கு அனுப்பினால் அவர்கள் பதில் சொல்வார்களா?
  கா.மை ஜி உங்களுக்கு நாங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.உங்களை கேட்காமலே நான் இதையும் சொல்கிறேன்.யாரவது மோடி ஆதரவாளர்கள் இந்த தகவல் சரியில்லை என ஆதாரத்துடன் பதிலிட்டால் கா.மை இந்த பதிவை நீக்கி விடுவார்.அதை விடுத்து அவருக்கு மோடி எதிர்ப்பாளர் என்றெல்லாம் பட்டம் சூட்டுவது ஏற்க முடியாத செயல்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   ஆர்வம் – அவ்வளவு தான்.
   ஆர்வம் காரணமாக ஆஸ்திரேலிய மீடியாவை
   கவனித்துக் கொண்டே இருந்தேன். நேற்றிரவு
   ஆஸ்திரேலியாவில் தகவல் வெளியானவுடன்,
   இந்தப் பதிவைப் போட்டு விட்டேன்.

   இன்று இந்திய பத்திரிகைகளிலும் இந்த தகவல்
   வெளியாகி விட்டது. ஆனால், இதை எந்த கோணத்தில்,
   எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்துப் போட
   வேண்டுமோ – அதை அவைகள் செய்யவில்லை.
   (இப்போதைக்கு செய்யா….!!!)

   தொலைக்காட்சிகளுக்கு –
   வேறு topic கிடைத்திருப்பதால், அதில் மும்முரமாக
   இருக்கிறார்கள்.

   இதைப்பற்றி, இன்னொரு பதிவு
   எழுதிக்கொண்டிருக்கிறேன். இரவுக்குள் பதிவேற்றி
   விடுவேன். அதிலும் உங்கள் கருத்துக்களை
   எதிர்பார்க்கிறேன். நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 8. நாகராஜன் nagarajanAmmawin thondan சொல்கிறார்:

  நல்ல தகவல் தொடர்க நன்றி விழிக்கவேண்டியவர்கள் விழித்தால் சரி

 9. sekar சொல்கிறார்:

  Very simple we are saving our reserves for future generation

 10. venugopalan சொல்கிறார்:

  naaattuppatru udayavargal indha durooga seyalukku eathirppu therivikka kadamaip pattavargal. kaveri maidenukku thunai nirppom

 11. Guru சொல்கிறார்:

  This is entirely a dishonest portrayal of what is happening. India is shopping around for nuclear fuel, and no one is ready to supply India – not the US, not China, not even Russia. And India does not have enough uranium deposits. But Australia is the only country which came forward to supply uranium to India. Australia and India signed a nuclear deal in September, of this year (2014).

  One of the conditions of the deal is that, India should invest in Australian mining industry, and that is what is happening here. In a way, this is a good deal for India, because they cannot get uranium anywhere else, and the coal pollution is happening over there. By presenting only one side of the story, knowingly or unknowingly, you are doing a disservice to this nation. I urge you to strongly do complete research and not present one-sided facts, to suit your narrative.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear Guru,

   Hope you are not a BJP activist …..!!!
   However, I pity on you for the way you try to defend
   your side…!!!

   Will you please show me a single piece of paper
   in support of your argument that Australia is
   putting conditions to India to invest in coal mining
   for supplying Uranium.

   With all best wishes,
   Kavirimainthan

   • Guru சொல்கிறார்:

    My support is to the country and not to any party. You can read through any number of news articles on the nuclear deal. I can give you one source:

    http://m.thehindu.com/news/national/nuclear-deal-will-finally-allow-australian-uranium-to-india-tony-abbott/article6383173.ece/

    There are lot of other sources, where you can get this information from. If you want the exact text of the agreement, you can find it on the internet – I am not here to spoonfeed anyone.

    From your articles, it is very clear that you have an ardent hate of BJP / Modi. I hope you do not let you hate cloud your judgement. Pity on those who close their eyes and think that the world is dark!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     Dear Mr.Guru,

     Following are the relevant portions from the above Hindu news item –

     ___________________________________________

     extracts from -http://m.thehindu.com/news/national/nuclear-deal-will-finally-allow-australian-uranium-to-india-tony-abbott/article6383173.ece/
     —-

     India and Australia, which has about a third of the world’s recoverable uranium resources and exports nearly 7,000 tonnes of it a year, launched uranium sales talks in 2012.
     In a major step towards realising its nuclear energy ambitions, India signed a civil nuclear cooperation agreement with Australia here on Friday.

     Prime Minister Narendra Modi and his Australian counterpart, Tony Abbott, were present during the signing of the agreement.
     xx xx
     Mr. Abbott said he was keen that more Indian investment should follow.
     xx xx
     In an exclusive interview to The Hindu, Mr Abbott said he would “welcome” Indian companies in the energy and infrastructure sectors.

     xx xx
     ___________________________________________

     நீங்கள் மிகச் சிறந்த புத்திசாலியாக இருக்கலாம்…

     ஆனால் – என் சிற்றறிவுக்குத் தெரிந்த வரையில்,
     முதலில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும்
     “யுரேனியம்” விற்க / வாங்க ஒப்பந்தம்
     செய்து கொள்கின்றன.

     அதன் அடிப்படை “civil nuclear cooperation agreement
     with Australia ” ( அதாவது அதானி கம்பெனிக்கு
     நிலக்கரிச்சுரங்கம் கொடுப்பதல்ல ….!!! )

     அதன் பின்னர், ஆஸ்திரேலிய பிரதமர் – இந்திய கம்பெனிகள்
     ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்வதை தான் ஆவலுடன்
     வரவேற்பதாகத் தெரிவிக்கிறார்.

     மேற்கூறிய செய்தியில் எந்த இடத்தில் –
     இந்திய கம்பெனிகள் ஆஸ்திரேலியாவில்
     நிலக்கரிச் சுரங்கம் துவங்கினால் தான்
     ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு “யுரேனியம்”
     கொடுக்கும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறது
     என்பதை தயவு செய்து விளக்கவும்.

     இந்திய முதலீடு 6200 கோடி ரூபாய் ஆஸ்திரேலியாவிற்கு
     போவதையும், இங்கு வேலை வாய்ப்புகள் உருவாக்குவதை
     விட்டு விட்டு – ஆஸ்திரேலியாவில்
     4000 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதையும் தடுக்கின்ற

     -தேசத்துரோக செயலில் நான் ஈடுபட முனைவதை
     நீங்கள் இவ்வளவு மும்முரமாக எதிர்ப்பதன் பின்னணியை
     – இந்த வலைத்தளத்தின் வாசகர்கள் மிகச்சுலபமாக புரிந்துகொள்வார்கள்.

     முதலில் நான் ஒருவன் தான் தேசத்துரோகியாக செயல்பட்டேன்.
     ஆனால், பின்னர் பல பத்திரிகைகள், பல கட்சிகளும்
     தேசத்துரோகிகளாகி இதைக் கேள்வி கேட்க ஆரம்பித்து
     விட்டன. அதானியையும், பாஜகவையும், மோடிஜியின் செயல்களையும்
     எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசத்துரோகிகளாயிற்றே…!

     எனவே,நீங்கள் அவர்கள் எல்லாருக்கும் இதே போல் அவசியம்
     எழுதுங்கள்….

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.