ஆஸ்திரேலிய சுரங்கம் – அதானிக்கு மோடிஜி தரும் Return Gift – ஆ ….!!! மிகவும் தவறல்லவா …???

நேற்றிரவு ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவந்த செய்திகள்
இன்று  ஹிந்து ஆங்கில பதிப்பின் மூலம் உறுதி
செய்யப்பட்டுள்ளன.

( http://www.thehindu.com/todays-paper/tp-national/adanis-australian- mine-project-cleared/article6609805.ece )

கீழே புகைப்படம் –

 

adani-modiji-australia business meet

Prime Minister Narendra Modi addresses a business breakfast
hosted by the Premier of Queensland, Campbell Newman,
in Brisbane on Monday. Industrialist Gautam Adani is at right.
— PHOTO: PTI

 

குஜராத்தின் தொழிலதிபர் கௌதம் அதானி அருகில்
அமர்ந்திருக்க, மோடிஜி Queensland பிரதமருடன்
பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் மேலே. இந்த சந்திப்பில்
தான் அதானிக்கு State Bank of India ஒரு பில்லியன்
அமெரிக்க டாலர் அளவிற்கு கடனுதவி கொடுப்பதாகவும்
உறுதி செய்யப்பட்டுள்ளது. மோடிஜி அவர்களின்
பின்புலத்தில் தான் அதானி இதைப்பெறுகிறார். முன்னர்
குஜராத்திலும், தேர்தல் சமயத்திலும் மோடிஜியின் பால்
அதானி காட்டிய கருணை …. இன்று அவருக்கு
கை கொடுக்கின்றன போலும்…!!

இந்த சுரங்க முதலீடுகளில் இன்னும் பல
முதலீட்டாளர்களையும் கொண்டு வருவதாகவும்,
2017-ம் ஆண்டில் நிச்சயம் உற்பத்தியை துவங்கி விடுவதாகவும்

அதானி Queensland பிரதமருக்கு உறுதி அளித்திருக்கிறார்.
(ஆஸ்திரேலிய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு
சம்பந்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாயிற்றே..! )

பெரும்பாலான மக்கள் ” rockstar performance ” ஐ பிரமிப்புடன்
பார்த்துக் கொண்டிருக்கும்போது, நான் சொல்கிற விஷயங்கள்
எல்லாம் எடுபடாது என்பது எனக்கு நன்றாகவே தெரிகிறது.

இருந்தாலும், இதை எல்லாம் என்னால் சொல்லாமல்
இருக்க முடியவில்லை – ‘உன் கடமையை நீ செய்’ என்கிறது
என் மனம் – “இன்றில்லா விட்டாலும், நாளையாவது
யாராவது கவனிப்பார்கள்” அல்லவா …?

இங்கு ஒரு விஷயத்தை நினைவு கொள்ள வேண்டி
இருக்கிறது. State Bank of India அதானிக்கு கொடுக்கவிருக்கும்
சுமார் 6,500 கோடி ரூபாய்களில், குறைந்த பட்சம் –
10 நிலக்கரிச் சுரங்கங்களையாவது இந்தியாவில் உருவாக்கி,
ஒரு வருடத்துக்குள் உற்பத்தியை துவக்கி விடலாம்.

PPP – Public Private Partnership முறையை
நிலக்கரிச் சுரங்களில் அறிமுகப்படுத்தினால்,
லட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்து இந்தியர்கள்
பத்தாயிரமோ, பதினைந்தாயிரமோ, இருபதாயிரமோ,
தங்களால் முடிந்ததை சேமிப்பிலிருந்து கொடுத்து பங்குகளை
வாங்கிக் கொள்ள துடியாய்த் துடிப்பார்கள்.

அப்படிச் செய்யும்போது,நமது பணம் வெளிநாட்டுக்குப் போகாது.
நாட்டில் பல புதிய நிலக்கரிச் சுரங்கங்கள் விரைவாக வரும்.
நிலக்கரிப் பற்றாக்குறை குறையும்.
மின் உற்பத்தி சுலபமாகும் / அதிகரிக்கும்.

ஆயிரக்கணக்கானோருக்கு புதிதாக வேலைகள் கிடைக்கும்.
முக்கியமாக, மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியின்
விலை பெரும் அளவில் குறையும்.

(உள்நாட்டு நிலக்கரியைப் போல் மூன்று மடங்கு செலவு
ஆகிறது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும்
நிலக்கரிக்கு …)

ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் …. !!!
ஏகப்பட்ட ஏஜென்சிக்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன.
குறைந்தது 4-5 மாதங்களாவது பிடித்திருக்கும் இதன்
முன்னேற்பாடுகளைச் செய்வதற்கு.
State Bank of India வில் Board of Directors Meeting
எல்லாம் நிகழ்ந்து, முறைப்படியான அங்கீகாரங்கள்,
அனுமதிகள் எல்லாம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

(அளிக்கப்பட்டு விட்டனவா அல்லது பிரதமர் இப்போது
சொல்லி விட்டதால், இனி அளிக்கப்படுமா – தெரியவில்லை..)

நேற்று உடன்பாடு எட்டப்பட்டு, ஆஸ்திரேலிய மீடியாக்கள்
அறிவிக்கும் வரை இந்த விஷயத்தை –
எந்த இந்திய மீடியாவும் யூகிக்க முடியாமல் – எவ்வளவு
ரகசியமாக வைத்திருந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க
பிரமிப்பாகத் தான் இருக்கிறது…!!!

முழு, தனிப்பட்ட மெஜாரிடியுடன் இருக்கும் இந்த அரசு
எடுத்திருக்கும் முடிவை யார் தட்டிக் கேட்க முடியும் ….?

மக்களும், மீடியாக்களும், எதிர்க்கட்சிகளும் –
முனைந்தால் இந்த முடிவைத் தடுக்க முடியலாம்…..
விழித்துக் கொள்வார்களா …..?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

29 Responses to ஆஸ்திரேலிய சுரங்கம் – அதானிக்கு மோடிஜி தரும் Return Gift – ஆ ….!!! மிகவும் தவறல்லவா …???

 1. S.Selvarajan சொல்கிறார்:

  மக்களும், மீடியாக்களும், எதிர்க்கட்சிகளும் –
  முனைந்தால் இந்த முடிவைத் தடுக்க முடியலாம்…..
  விழித்துக் கொள்வார்களா …..? விழித்துகொண்டோறேல்லாம் — பிழைத்துக்கொண்டார் ! உன்னை [ நம்மை ] போல் ” குறட்டை” விட்டோரெல்லாம் — கோட்டை விட்டார் !! என்பதைப்போல ஆகிவிடுமா ?

 2. visujjm சொல்கிறார்:

  நெஞ்சு பொறுக்குதில்லை…

 3. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  “ஆஸ்திரேலிய சுரங்கம் – அதானிக்கு மோடிஜி தரும் Return Gift – ஆ ….!!! மிகவும் தவறல்லவா …???”
  நாலு பேருக்கு நல்லது நடந்தா… எதுவுமே தவறல்ல!
  அதுல ஒருத்தர் இந்தா இங்கேருக்கார்… மிச்ச மூணு பேரு?

 4. DrKGP சொல்கிறார்:

  No opposition party is serious enough to take up these mundane
  things up for a fight as all of them are licking their wounds after
  the bashings in recent times. Hence this and many more would
  sail smoothly without much resistance. Anyhow WE will cry a lone wolf.
  If it can instill a semblance of hesitancy, we win. Hudoos to KM.

 5. D. Chandramouli சொல்கிறார்:

  SBI granting a huge $1 Billion to the industrialist for coal mining in Australia is quite disturbing, to say the least. One can only hope that SBI, the foremost public sector bank, have done due diligence tests, and studied the feasibility reports before approving the loan.

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  மீண்டும் ஒரு முறை எழுதுகிறேன், எதுவும் மாறப்போவதில்லை. மக்கள் ஏமாந்ததுதான் மிச்சம். கலர் கலராய் சட்டை, போகுமிடமெல்லாம் செல்பி எடுத்து, வாய்ஜாலம் செய்து..நிறைய இருக்கு இது போல. அப்போது அம்பானி என்றால் இப்போது அதானி..நாளை யாரோ…? மீடியா சொல்லும் இது ஒரு வெற்றி பயணம் என்று, இன்றைய தமிழ் இந்து வில் யாரோ எழுதிவிட்டார். “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்- ஜான் பெர்கின்ஸ்” படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். உங்கள் பணி மிகவும் சிறப்பானது, தொடருங்கள். நாளையாவது மாறும் என்று நம்புவோம்.

 7. kalakarthik சொல்கிறார்:

  புது வசந்தம் சொல்வதை வழிமொழிகிறேன்

 8. AaKuvan சொல்கிறார்:

  Dear KM ji, very much sadened to see such blogs coming from you ( this especially and in recent times). You seem to just shoot and scoot on topics without verification and misleading the readers.
  Equally sad to see readers believe and digest information without verifying facts.

  On the point,
  1) SBI NEVER sanctioned loan to ADANI.
  2) National Leaders seen with Business leaders in covert/under covered meeting should be worrying than openly seen in public.
  3) ADANI has business interests in Australia for last 10 years.
  4) TATAs and BIRLAs have also got huge loan earlier and it is a norm.

  Again, I expect you ( and readers) to rebut with facts and not on rhetoric that I’m BJP, Modi Fan etc.

  • Ganpat சொல்கிறார்:

   What are you trying to say?//SBI NEVER sanctioned loan to ADANI.//
   so the following news appeared in The Hindu is false?
   quote
   Adani Enterprises won support on Monday from the State Bank of India (SBI) and an Australian state to help it build a $7 billion coal mine, defying a slump in coal prices to 5-1/2-year lows that has stalled rival projects.

   The infrastructure conglomerate, whose founder, Gautam Adani, has close ties with Prime Minister Narendra Modi, has signed a memorandum of understanding for a loan of up to $1 billion from the SBI for the mine, rail and port project, which it aims to build by end-2017.

   The loan, which would be one of the largest extended by an Indian bank for an overseas project, was announced as Mr. Adani was in Brisbane with a business delegation for the G20 summit, which Mr. Modi attended over the weekend.

   “The MoU with SBI is a significant milestone in the development of our Carmichael mine,” Mr. Adani said in a statement.
   unquote..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ஆக்குவன்,

   மீண்டும் அதே தோரணையில் வந்து, தப்பு தப்பான
   வாதங்களுடன் வாதிடுகிறீர்கள்…!

   மேலே உள்ள – ஹிந்து ஆங்கில செய்தித்தாளில்
   புகைப்பட ஆதாரத்துடன் வந்த செய்தியை பொய்…
   என்று எப்படிச் சொல்கிறீர்கள் ..?

   உங்கள் வாதத்திற்கான ஆதாரம் என்ன …?

   டாட்டாவையும் பிர்லாவையும் இங்கே ஏன்
   இழுக்கிறீர்கள்…? அவர்களுக்கு மோடிஜி
   லோன் அல்லது கரிச்சுரங்கம் எதுவும்
   வாங்கிக் கொடுக்கவில்லையே …

   அப்படி எதாவது இருந்தால் விவரம் சொல்லவும் –
   அதையும் உங்கள் உதவியுடன் எழுதி விடலாம்…

   நான் உங்களைப் போல் மோடிஜியின்
   ஆதரவாளனும் அல்ல …
   எதிர்ப்பாளனும் அல்ல –
   என்பதை ஏற்கெனவே அழுத்தம் திருத்தமாகப்
   பதிவு செய்திருக்கிறேன்.
   பொய்ச் செய்திகளை நான் என்றும் எழுதியதில்லை –
   அதற்கான அவசியமும் எனக்கு இல்லை…
   இந்த தளத்திற்கு வரும்
   அத்தனை நண்பர்களும் அதை ஏற்றுக்
   கொள்வார்கள் – உங்களைத் தவிர..!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நன்றி கண்பத்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 10. R.Ramachandran சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார் – தயவுசெய்து
  இதை அனுமதிக்கவும். நன்றி.

  மோடியால் மீனவர்கள் விடுதலை சாத்தியமானது:
  பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி.

  பதில் கேள்வி – பதிலுக்கு ransom sum ஆக
  82 படகுகளை ராஜபக்சேவுக்கே
  கொடுத்து விட்டீர்களா அய்யா…?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   என் மீது நம்பிக்கை இல்லாத,
   நண்பர் ஆக்குவன் அவர்களுக்கு
   forbes.com -தளத்தின் ஒரு கருத்து சமர்ப்பணம் –

   Port tycoon Gautam Adani’s closeness to Prime Minister
   Narendra Modi sent shares of his companies, including
   flagship Adani Enterprises, soaring ahead of May elections
   on hopes of a victory by the Bharatiya Janata Party.
   The biggest dollar gainer on the list, Adani added
   $4.5 billion to his net worth since 2013.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 11. எழில் சொல்கிறார்:

  போலோ ஆஸ்திரேலியா மாதாகீ ஜே! (I rest my case)

 12. AaKuvan சொல்கிறார்:

  Dear KM ji, there are four main issues highlighted here.
  1) Crony Capitalism
  2) SBI Loan clarity
  3) Favoring Coal excavation in India as priority
  4) News disortion in Mainstream Media ( MSM)

  And with all this, you interwine PM’s integrity.

  I will rebut each and every issue with facts/proof. Send me an email and will respond with facts. You can then post in this blog ( as comment section is limited).

  To give a preface on point 2 in particular,
  a) SBI has only signed a MoU for a credit facility and NOT a loan. Also, SBI in 2011-12 have given USD 800 million to ADANI for same coal project.
  b) Banks give loans to all major projects ( this is where TATA/BIRLA reference come and you prove your cynicism here tagging Modi) after doing a feasibility study. It may be done as a consortium also ( refer Kingfisher funding). As FDI is not open, any big projects need finance. This is norm of industry.

  Dear Ganpat, remember “Media Dogs analogy”? You forgot…

  All news coming in Media are not accurate. Many incdents I can quote in recent times…MSM has 3 main issues.
  a) They report false news and take back eg: Modi’s Rambo act in Uttarkhand floods, DD Interview, PMO’s bench strength, Jayalalitha’s Bail… Mainly They LIE BIG and retract small..
  b) They do not report news and be selective eg: Rajdeep Madison square episode, DLF scam, NDTV scam, NH case etc
  c) They twist the news in their ( boss) favor. eg: German -Sanskrit issue, and this SBI Loan to Adani
  So, we shoudl not fall prey to this and we should educate all the way they should consume news.

  I’m waiting to take this to a logical conclusion.

 13. DrKGP சொல்கிறார்:

  Consortium funding of Kingfisher is a classic example of how our
  PSU banks are diligently researching the borrower’s credentials
  and recovering their dues promptly !
  Have you not read about one psu bank lending the same borrower
  a huge sum even after the aircrafts were grounded for years?

 14. today.and.me சொல்கிறார்:

  கா.மை, மற்றும் நண்பர்களுக்கு,

  1. SBI- MOUஇல் கையொப்பமிட்டபின்னர் கூட கடன் தர இயலாது என்று
  மறுக்க இயலுமா?
  2. ஒருவேளை பிரதமர் அவர்களுடன் அதானி வணிகக்குழு சென்றிருக்காவிட்டால் இந்த இருநாட்டு வர்த்தகத்திற்கிடையேயான புரிந்துணர்வு ஏற்பட்டிருக்குமா?
  3. ஆஸ்திரேலியா மீடியாக்கள் தகவலை வெளியிடும்வரை இந்திய மீடியாக்கள் இரகசியம் காக்கவேண்டிய அவசியம் என்ன?
  4. கூடவே சென்ற இந்தியமீடியாக்கள் எந்த ரொட்டியைப் பார்த்துவிட்டு குரைக்கவில்லை?
  5. நமது (மக்கள் பணத்தில் உருவாகும்) முதலீடும், இங்கேயுள்ள வேலையில்லாத மக்களின் வேலைத்திறனும் இங்கேயே பயன்பட்டால் என்ன?
  6. பிரதமர் அவர்களால் வாக்குறுதி அளித்தபடி இரண்டுவருடங்கள் கழித்து இறக்குமதித்தேவையே இருக்கப்போகாத இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதாக, தோண்டத்தேவையேயில்லாத நிலக்கரியைத் தோண்டப்போகிறார்கள் பிரதமரின் அனுமதியோடு. சொந்தப் பணத்திலா தோண்டப்போகிறார்கள். மக்கள் பணம் தானே, திருப்பிக் கட்டத் தேவை இல்லையே. இனிக்கத்தான் செய்யும். தேனை எடுத்தவன் கதைதான்…
  7. ஹிந்து பொய்சொல்கிறது என்றால் அதற்கு ஆதாரத்தை இங்கேயே பின்னூட்டமிடலாம். தனியாக இமெயில் என்றால் புரியவில்லை. ஹிந்துவும் ஃபோர்ப்ஸ்ம் டைம்ஸ்ம் மற்ற எல்லா மீடியாக்களும் பொதுவில் வெளிப்படையாக எழுதும்போது தனிப்பட தெரிவிப்பேன் என்றால் கா.மை.க்கே டீபார்ட்டியா !!!

  இப்போதைக்கு மக்களுக்கு நன்மை நினைக்கிற எதிர்க்கட்சி என்ற ஒன்றோ மீடியாக்களோ கிடையாது. எல்லாரையும் சுனாமி அடித்துப் புரட்டி கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. தப்பிப்பிழைத்து குற்றுயிரும்குலையியுருமாக இருக்கும் நாம் தான் என்ன நடக்கிறது என்று (அட்லீஸ்ட்) யோசிக்க வேண்டும். ஆனால் யாருமே அப்படி சிந்தித்துவிடக்கூடாது என்றே கங்கணம் கட்டிக்கொண்டு சிலர் வருகிறார்கள். அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் கா.மை.ஜி நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

  பின்னூட்டமிடுபவர்களும் இங்குவந்து பதிவைப் படிப்பவர்கள் எல்லாரும் முட்டாள்கள் அல்ல, எழுதியிருப்பது சான்றுகளின்படியா அல்லது பதிவரின் சொந்தக்கற்பனையா தேடி அறிந்துகொள்ளத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கும் மூளை இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவரவர் கோணம் இருக்கும், அதன்படி அவரவர் சிந்திப்பார்கள்.

  &

  நண்பர் ஆக்குவன்,
  1. //So, we shoudl not fall prey to this and we should educate all the way they should consume news,,,// இப்படிச் சொல்லிக்கொண்டே இப்படியே இருக்க உங்களால்தான் சாத்தியம்.

  2. இந்த ட்விட்டர் நீங்கள் தான் என்று நினைக்கிறேன். இரண்டு ஆனந்த்குமார்கள் இருக்கலாம், ஆனால் இரண்டு ஆக்குவன்கள் இருக்கமுடியாது. ஒருவேளை இருந்தால் ட்விட்டர் ஆக்குவன் தனது பெயரை இனிமேல் மாற்றமாட்டார் என்றே நினைக்கிறேன்.

  https://twitter.com/aakuvan

  //Anand Kumar @aakuvan • May 24
  Dear Modi ji, I’m happy 2dy. I take pledge with u for the Vikas! Proud to be part of this historic moment- independance day2 #CongratsNaMo
  Anand Kumar @aakuvan • May 16
  Dear @narendramodi,hv dn my duty 2 spread awareness 2 vote fr #bjp basis ur message. I’m happy today. I take pledge with you for the Vikas!//

  நமோ ஆதரவாளராக இருந்துகொண்டு, நான் அவன் இல்லை-இல்லை-இல்லவேயில்லை என்று நான் அவன் இல்லை பட ஸ்டைலில், இப்படிச் சொல்லிக்கொண்டே இப்படியே இருக்க உங்களால்தான் சாத்தியம்.
  ஏன்? “ஆமாம். நான் ஆதரவாளன்தான்” என்று சொல்லிவிட்டீர்களானால், உங்கள் தலைவர் கருத்து உங்களுக்கு என்று பிரச்சாரம் என்று முடிந்துவிடுமே.

  இன்னமும் அந்த ஆக்குவன் நீங்கள் இல்லை என்று கூறுவீர்களானால், மன்னிக்கவும். அந்த ஆக்குவனுக்கு நான் கொடுத்த பப்ளிசிட்டி என்று வைத்துக்கொள்ளுங்கள்.

  • AaKuvan சொல்கிறார்:

   Dear today and me, when did I say that Im not supporting BJP/Namo
   If you are referring this comment, please read again and understand.
   //Again, I expect you ( and readers) to rebut with facts and not on rhetoric that I’m BJP, Modi Fan etc.//

   //ஹிந்து பொய்சொல்கிறது என்றால் அதற்கு ஆதாரத்தை இங்கேயே பின்னூட்டமிடலாம். தனியாக இமெயில் என்றால் புரியவில்லை. ஹிந்துவும் ஃபோர்ப்ஸ்ம் டைம்ஸ்ம் மற்ற எல்லா மீடியாக்களும் பொதுவில் வெளிப்படையாக எழுதும்போது தனிப்பட தெரிவிப்பேன் என்றால் கா.மை.க்கே டீபார்ட்டியா !!!//
   – I did not say paper lied…but spun the news..read again my comments.
   Email is to send proofs ( attachemnts, references, links).

   //இன்னமும் அந்த ஆக்குவன் நீங்கள் இல்லை என்று கூறுவீர்களானால், மன்னிக்கவும். அந்த ஆக்குவனுக்கு நான் கொடுத்த பப்ளிசிட்டி என்று வைத்துக்கொள்ளுங்கள்.//
   Where is the need and when did I deny my identity? You mean to say that I’m hiding my support to NaMo and my identity. Strange thought! I only argued that beyond such affiliations, one should reason with facts.
   And for your info, Im Anand Kumar, shortened to AaKu-van(gender)

   May be in haste, you over looked many things!!

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ஆக்குவன் என்கிற முகமூடியை அணிந்து
    வந்த திருவாளர் ஆனந்தகுமார் அவர்களுக்கு,

    நண்பர் todayandme – அவர்கள் உங்களது
    முகமூடியைக் கிழித்து நீங்கள் அதிதீவிர
    பாஜக ஆதரவாளர் என்பதை வெளிப்படுத்திய பிறகு,

    உங்களுக்கு விளக்கங்கள் எழுதி என் நேரத்தை
    வீணடிக்க விரும்பவில்லை.

    தூங்குபவர்களை எழுப்பலாம் – ஆனால்
    கண்களை வலுக்கட்டாயமாக மூடிக்கொண்டு
    படுத்திருப்பவர்களை எழுப்ப முடியாது.
    உங்களை convince
    பண்ண வேண்டிய அவசியமோ தேவையோ
    எனக்கு இல்லை. நீங்கள் உருப்படியாக மோடிஜி டூர்
    போய் வந்ததைப் பாராட்டி எதாவது மெயில், ட்விட்டர்
    அனுப்ப முடியுமா பாருங்கள்….. நன்றி.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் today.and.me,

   you are simply Great….!!!

   நான் இந்த போலி வேடதாரியின் வேடத்தை எப்படி
   களைவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது,
   நீங்கள் பிரமாதமாக அவரை expose செய்து
   விட்டீர்கள். உங்கள் ஆர்வத்திற்கும், முயற்சிகளுக்கும்
   என் உளமார்ந்த நன்றி.
   எத்தகைய கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்க நாம்
   தயாராக இருக்கும்போது, அவர்கள் ஏன் வேடம்
   போட்டுக் கொண்டு வர வேண்டும் ….?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 15. DrKGP சொல்கிறார்:

  Today and me – how come you got cross reference so fast!
  I feel this site is frank and bold. No need to hide one’s identity

  • venkat சொல்கிறார்:

   Natural resources like oil, gas and coal, which are finite in supply, should be secured in the long term interest of the country. ONGC is acquiring oil fields out side the country for quite some time. I think Indian companies having the guts to acquire fields/mines outside the country should be encouraged. Best time to make such investment is when coal prices are lower ( that is extraction cost is more than market price for coal ). If not, in order to secure the same mine, Indian companies will have to pay a premium. such projects are to be evaluated with a horizon of 20-50 years. Hence I fully support the investment decision and an Indian bank offering the helping hand.

   My last point… do not underestimate bankers. They are not as stupid as painted here. Despite the NPA ( Non performing asset ) SBI is one of the profitable banks in the country. Lending is bank’s core business. Taking risk is part of their business. I am sure they know better than the author of this article.

   • R.Ramachandran சொல்கிறார்:

    Mr.Venkat,

    1. Enegy Minister Mr.Piyush Goel has clearly made a
    policy statement that India will attain self sufficiency
    and stop importing Coal within the next 3 years.
    Then where is the
    question of importing coal from Australia?

    2. Your comments – //I am sure they know better than the
    author of this article.//-

    I am sure the author of this article is very much matured
    and experienced than you. He did not find fault with
    Bankers wisdom. Bankers are dancing to the tune of
    their political masters.

    Did you not notice Chairman of SBI was also
    sitting by the side of Mr.Adani and Modi in the photo?

    Please think well before taking sides.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear Dr.KGP,

   Thanks a lot for your comments.

   True – this site is definitely frank and bold with
   so many good contributors like Friend todayandme and others.

   -with best wishes,
   Kavirimainthan

 16. today.and.me சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,
  திருஆக்குவன் அவர்கள் தங்களது பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்த logical என்ற வார்த்தைதான் எனக்கு key.

  மேலும் தற்போதைய ஆட்சியாளர்கள் நாங்கள் முந்தையவர்களைப் போல இருக்கமாட்டோம் என்று கூவிக்கொண்டே வந்து அதைவிட அதிகமாகவே செய்கிறார்கள். எனவே அவர்கள் தங்கள் logic படியே செயல்படுவார்கள் என்பதை நினைவூட்டியது. வேறு என்ன? ட்விட்டர்தான். தலைவர் எப்படியோ அப்படித்தானே தொண்டர்களும்.

  யாரோ ஒரு ட்விட்டர் ஆக்குவனைப் பலியாக ஆக்கலாமா என்றெல்லாம் மிகவும் யோசனையோடுதான் கல்லை விட்டேன். ஆனால் பழம் விழுந்துவிட்டது. மற்றபடி நான் ஒன்றுமே இல்லை. பூஜ்ஜியம் தான்.

  அடையாளத்தை மறைப்பது என்பதில் எனக்கொன்றும் வருத்தம் இல்லை. மறைத்தேயாகவேண்டிய நிலையில் இருக்கலாம். அது அவரவர் நிலைமை.

  ஆனால் ஒரு அடையாளத்தால் மறுத்துக்கொண்டே மறு அடையாளத்தால் ஆமோதிப்பதுதான் வருத்தமாக இருக்கிறது. மற்றபடி யாரோ ஒருவருடைய அடையாளத்தை அறிவதுதான் எனக்கு முக்கியக் கடமையா என்ன? என்ன செய்வது உண்மைகள் கசக்கத்தான் செய்யும். அது ஒரு தாய் தன் குழந்தை அடம்பிடிக்கிறது என்பதற்காக அடிகொடுப்பதுபோல நடிப்பது, வியாதியாயிருந்து அழுதாலும் விடாமல் கசப்பு மருந்து கொடுப்பது போலத்தான். எப்படியாவது வியாதி நீங்கி சுகமானால் சரி.
  ————
  நண்பர் ஆக்குவன்,
  உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இப்போதுகூட ‘நான் இல்லை’ என்றுதான் சொல்வீர்கள் என எதிர்பார்த்து, நான்தான் தங்களை தவறாகப் புரிந்துகொண்டேன். I am very sorry that I didn’t expect you the same Aakuvan is on the other end. Thank you and hats off for the guts.
  ————
  மற்றபடி படிப்பவர்கள் அனைவருக்குமே சொந்தக் கருத்து என்ற ஒன்றே கிடையாது, காமை சொல்வதையெல்லாம் இங்கு பின்னூட்டமிடும் கருத்துக்களையெல்லாம் மக்கள் கண்ணைமூடிக்கொண்டு நம்புவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் அவற்றின் மீதான உண்மைத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மாற்றுக் கருத்துகளும் இங்கே விவாதிக்கப்படுகின்றன. விமரிசனம் தளம் வாய்ப்பளித்தற்கு நன்றி.

  • AaKuvan சொல்கிறார்:

   My final comments:
   1. Have I ever claimed that I’m not NaMo fan? Even in my commnets on earlier posts, I have openly said so. How does that matter in this context? Do people verify on who said or what is said? And you name call people ( Mugamoodi, Kabadathari etc LOL!). What “expose”..that I’m Namo fan…very puerile ( and I’m not BJP supporter/member FYI).
   2. If this site permits comments ( of opposite views) as claimed, point 1 is trivial.
   3. Instead of taking the discussion on merits/demerits on this ( SBI funding), the whole issue is digressed. Hope you agree.
   4. Still,the discussion is not carried basis facts/reality. Nor, my comments answered.
   5. I also beleive, readers of this blog, will understand this and agree on the last para.

   I thank KM ji and others for giving an opportunity to comment/connect here..even if this was a shortwhile.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இந்த விளக்கம் நண்பர் ஆக்குவன் அவர்களுக்காக அல்ல.
    எல்லா நண்பர்களுக்கும் –

    இந்த இடுகையை இதுவரை சுமார் 4,800 வாசகர்கள்
    படித்திருக்கிறார்கள். இதில் ஒருவர் கூட –
    நான் தரும் அடிப்படைத் தகவல்களோ, கருத்துக்களோ
    தவறானவை /பொய்யானவை என்று கூறவில்லை.
    ( அதிதீவிர மோடி ரசிகரான திரு ஆக்குவன் அவர்களைத் தவிர..!)

    ஒரு கருத்தை ஏற்றுக் கொள்வதோ – மறுப்பதோ
    அவரவர் விருப்பம். ஆனால் நான் தரும் செய்தியே தவறானது-
    பொய்யானது என்று சொல்வது என் அடிப்படை நேர்மையை
    கேள்வி கேட்பதற்கு ஈடாகும். இதை நான் நிச்சயமாக ஏற்பதற்கில்லை.

    ஏற்கெனவே பலமுறை கூறி விட்டேன்.
    இப்போது மீண்டும் ஒரு முறை கூற விரும்புகிறேன்.
    நான் கூறுவதை மற்றவர்கள் யாரும் ஏற்க வேண்டும்
    என்று நான் என்றுமே சொன்னதில்லை.
    அதைச் சொல்லும் “தகுதி” எனக்கு இருப்பதாக
    நான் நினக்கவில்லை.

    இந்த ‘விமரிசனம்’ தளம் ஒரு விவாத மேடை.
    எனக்கு சரி /தவறு என்று தோன்றுவதை நான் இங்கு
    இடுகைகளாக வடிக்கிறேன். அதன் மீதான தங்கள் கருத்துக்களை
    மற்ற நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.
    அதன் அடிப்படையில் விவாதங்கள் நடைபெறுகின்றன.

    எதை ஏற்றுக் கொள்ள வேண்டும் – எதை நிராகரிக்க
    வேண்டும் என்பதை இறுதியில் –
    படிப்பவர்களே முடிவு செய்துக்கொள்வார்கள்.

    இந்த விஷயத்தை ஜீரணிக்கும் சக்தி இல்லாத
    நண்பர்களுக்காக நான் என்ன செய்ய ….?

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.