அதானிக்கு 6000 கோடி ரூபாய் …..

அதானிக்கு 6000 கோடி ரூபாய் கொடுத்தால் தான் என்ன …?
கடனாகத் தானே கொடுக்கிறார்கள்…?
தொழில் முனைவோருக்கு வங்கிகள் கடன் கொடுப்பதில்
தவறென்ன ? இதில் அதிசயம் என்ன இருக்கிறது…?
என்று கோபப்படுகிறார்கள் மோடிஜியின் அன்பர்கள் சிலர் ….

அத்தகைய நண்பர்களுக்காக – இடுகையைத் தொடரும் முன்
மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

திருவாளர் நரேந்திர மோடி – ஒரு அற்புதமான நிர்வாகி.
புத்தி கூர்மை மிக்கவர். எப்படிப்பட்ட ஆட்களிடமும்
வேலை வாங்குவதில் சாமர்த்தியசாலி. அதிக அளவில்
மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஒரு தலைவர்.
எதிர்கால இந்தியா அவரால் சிறப்புறும் என்று மக்கள்
நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்…..

இவை எதையுமே நான் மறுக்கவில்லை.
அவரிடம் காணும் இந்த குணங்களை நானும் ரசிக்கிறேன்.

ஆனால் – அவரிடமும் நிறைய பலவீனங்கள் இருக்கின்றன.
அவரைப் போன்ற உயர்ந்த இடத்தை அடைந்தவர்களிடையே
இருக்க வேண்டாத, இருக்கக் கூடாத சில பலவீனங்கள்
இருக்கின்றன.

இது ஜனநாயக நாடு – பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும்
யார் நடவடிக்கையிலும் குறைகள் தென்பட்டால், அதைச்
சுட்டிக் காட்ட நமக்கு உரிமை உண்டு என்பது மட்டுமல்ல –
அது நம் கடமையும் கூட. அந்த அடிப்படையில் தான்
என் இடுகைகள் அமைகின்றன.

நான் எழுதும் ‘தம்மாத்துண்டு’ இடுகைகளால், மோடிஜியின்
அரசுக்கு எந்த ஆபத்தும் வந்து விடாது.
யாரும் ஏற்றுக்கொண்டாலும் –
ஏற்றுக் கொள்ளா விட்டாலும், அடுத்த 5 வருடங்களுக்கு
அவர் தான் ராஜா …..(!) எனவே, மோடிஜியின் அபிமானிகள்
இதை சரியான கோணத்தில் ( in right spirits )
எடுத்துக் கொள்ள வேண்டும்….

sbi bombay illuminated

strike-sbi-lock-reuters

மீடியாக்கள் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க
ஆரம்பித்து விட்டன. State Bank of India, கௌதம் அதானியின்
இந்த ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்கத்திற்கு ஒரு பில்லியன்
அமெரிக்க டாலர் ( சுமார் 6000 கோடி இந்திய ரூபாய்கள் )
கடன் கொடுக்க சம்மதித்திருப்பது – பிரதமருடன் அவருக்கு
இருக்கும் நெருக்கம் காரணமாகவே என்று வெளிப்படையாகவே
மீடியா சொல்கிறது.

SBI – இந்த கடனை கொடுப்பது புத்திசாலித்தனமானதா என்று
கேள்வியெழுப்பி சில காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன.

Sydney Morning Herald என்கிற ஆஸ்திரேலிய நாளிதழ்
கூறுகின்றபடி, தற்போது ஆஸ்திரேலியாவில் நிலக்கரியை
வெட்டியெடுக்க ஆகும் செலவை விட, அதற்கு கிடைக்கும்
விலை குறைவாகவே இருக்கிறது. அதாவது உற்பத்திச் செலவு
அதிகமாகவும் – விலை குறைவாகவும் இருக்கிறது. எனவே,
ஏற்கெனவே அங்கேயுள்ள பல நிலக்கரி சுரங்கங்கள்
நிலக்கரி தோண்டி எடுப்பதை நிறுத்தி வைத்திருக்கின்றன.

ஆஸ்திரேலியாவில், சுற்றுப்புற சூழல் பாதிப்பு காரணமாக
பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்றன.
இந்த நிலையில், புதியதாக மேலும் சுரங்கங்களை தோண்ட
முயல்வது – வழக்குகளை எதிர்கொள்வதில் போய் முடியும்.
எப்படி இருந்தாலும், 2022-க்கு முன்னதாக உற்பத்தியை
துவங்க வாய்ப்பே இல்லை. உற்பத்தி இல்லாத நிலையில்,
இந்த சுரங்க நிர்மாணத்தில் போடப்படும் முதலீடுகளுக்கு
வட்டியாகவே ஆண்டுதோறும் பல கோடி டாலர்கள்
கொடுக்க வேண்டியிருக்கும்.

Royal Bank of Scotland, Citigroup, Deutsche Bank and HSBC
போன்ற புகழ்பெற்ற வங்கி நிறுவனங்களை, அதானியின்
கம்பெனி, ஏற்கெனவே அணுகியும், அவை மேற்கூறிய
காரணங்களுக்காக, இந்த நிலக்கரி சுரங்க ப்ராஜெக்டுக்கு
தாங்கள் கடன் கொடுப்பது உசிதமாக இருக்காது என்று கூறி
தங்கள் இயலாமையை தெரிவித்து விட்டன.
இத்தனை உலகப்புகழ் வாய்ந்த வங்கிகளுக்கே நம்பிக்கை
இல்லாத ஒரு ப்ரொஜெக்டுக்கு State Bank of India இவ்வளவு
பெரிய தொகையை கடனாக அளிப்பது சரியா ?

மேலும், நம் அரசாங்கத்தின் கொள்கை – வெளிநாட்டு
முதலீடுகளை இங்கே கொண்டு வருவதா அல்லது
இங்கே இருக்கின்ற சேமிப்புகளை வெளிநாடுகளில் கொண்டு
போய் கொட்ட அனுமதிப்பதா …?
பெரும் முதலாளிகளின் சொந்தப்பணமாக இருந்தாலாவது
பரவாயில்லை. அரசு வங்கி கடன் கொடுத்து அவர் என்ன
வெளிநாடுகளில் தொழில் துவங்குவது….?
இது -கொண்ட கொள்கைக்கு நேர் விரோதமாக இருக்கிறதே…!!

குஜராத்தில் இயங்கி வரும் அதானியின் இந்திய கம்பெனியான
Adani Enterprises -க்கு ஏற்கெனவே, 70,000 கோடி ரூபாய்
வங்கிக் கடன் இருக்கிறதாம். இந்த வங்கிக் கடனை திருப்ப
இயலாததால், ஆண்டுதோறும், வட்டிச்சுமை ஏறிக்கொண்டே
போகிறது என்கிறார்கள் நிதி நிலை வல்லுநர்கள்.

கடைசியாக இன்னுமொரு மிக முக்கியமான காரணம் –
அதானியின் புதிய ஆஸ்திரேலிய நிலக்கரிச்சுரங்கம்
அதன் உற்பத்தியில் மூன்றில் இரண்டு பகுதியை
இந்தியாவிற்கு – இந்திய மின் உற்பத்தி நிலையங்களுக்காக –
இறக்குமதி செய்ய உத்தேசித்திருக்கிறது.

ஆனால் – இந்திய நிலக்கரி மற்றும் மின்சக்தித்துறை அமைச்சர்
பியூஷ் கோயல் பத்து நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட கொள்கை

அறிவிப்பின்படி –
இன்னும் மூன்று வருடங்களுக்குள் – இந்தியா நிலக்கரி
உற்பத்தியில் தன்நிறைவு பெற்று விடும். அதற்குப் பின்
அந்நிய நாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவது
முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விடும்.

இந்த இரண்டு நிலைகளில் எதாவது ஒன்று தானே சாத்தியப்படும்..?
நிலக்கரி இறக்குமதி நிறுத்தப்படும் பட்சத்தில், அதானியின்
நிலக்கரிக்கு மார்க்கெட் இல்லையே …!!!

இப்போது ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கங்களை
வைத்திருக்கும் மிகப்பெரிய கம்பெனிகளான BHP Billiton
and Glencore தங்களது விஸ்தரிப்பு திட்டங்களை எல்லாம்
மூட்டை கட்டி வைத்து விட்டன. எதிர்காலத்தில், உலக அளவில்
நிலக்கரியின் தேவையும் விலையும் இன்னும் குறையும் என்று
எதிர்பார்க்கப்படுவதால், தங்களது தற்போதைய உற்பத்தியையும்
அவர்கள் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

——————

சரி தான் போய்யா – நீ யோசிக்கும் இதையெல்லாம் அதானி
யோசித்திருக்க மாட்டாரா…? எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து
பார்த்து விட்டு தானே அவர் களத்தில் இறங்குகிறார் என்றும்
( சில ) மக்கள் கேட்பார்கள்.

அவர் நன்றாக கணக்குப் போட்டுப் பார்த்து விட்டு தான்
இறங்குகிறார் என்பதில் எனக்கும் ஐயமே இல்லை.
இது எல்லாமே OPM அதாவது Other People’s Money
பாலிசி. சொந்த பணத்தில் செய்வதாக இருந்தால் தான்
தீவிரமாக யோசிக்க வேண்டும்….!!!

அடுத்த 5-6 வருடங்களுக்கு இவர்கள் குடும்பத்தோடு
ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவிற்கும் பறந்து கொண்டே இருப்பார்கள். ஸ்டார் ஓட்டல்களில் தங்கி இருப்பார்கள். தங்கள் மற்ற வியாபார, சொந்த விஷயங்களை எல்லாம் கவனித்துக்
கொள்வார்கள்.

இறுதியில் – கம்பெனி எதிர்பார்த்தபடி இயங்கவில்லை
என்றால், கம்பெனியை மூட நேர்ந்தால் –
கடன் கொடுத்தவன் தானே (அதாவது State Bank
of India ) கவலைப்பட வேண்டும்..?

அவர்களும் கவலைப்பட மாட்டார்கள் …..!
ஏனென்றால் அவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்லவே ….!!
ஏற்கெனவே ( விஜய் மால்யா போன்ற ) ஏகப்பட்ட
நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து விட்டு,
வாராக்கடன் பட்டியலில் தற்போதைக்கு 60,891 கோடி ரூபாய்
நிலுவையில் நிற்கிறது. இன்னும் ஒரு 6000 கோடி ரூபாயை
சேர்த்துக் கொண்டால் போயிற்று….

சரி – இந்த வாராக்கடன்கள் எல்லாம் இறுதியில் என்ன ஆகும் …?
இந்திய மக்கள் தானே இந்த வங்கிகளின் உண்மையான
உரிமையாளர்கள். எனவே இறுதியில் இந்திய மக்கள்
இந்த சுமையை சுகமாக சுமப்பார்கள்…….
(மோடிஜி தவறு செய்ய மாட்டாரே ….அதனால் அவர்கள்
மகிழ்ச்சியோடு சுமப்பார்கள். )

துவக்கத்திற்கே மீண்டும் வருகிறேன் –
அதானிக்கு 6000 கோடி ரூபாய் கடன் கொடுத்தால்
என்ன தவறு …? அதில் உனக்கென்ன கஷ்டம் என்று
கேட்கிறார்களே சில நண்பர்கள்…..
அவர்களில் யாராவது ஒருவர் புரிந்து கொண்டால் கூட
போதும் – இந்த இடுகையின் நோக்கம் நிறைவேறி விட்ட
திருப்தி எனக்கு ஏற்படும்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to அதானிக்கு 6000 கோடி ரூபாய் …..

 1. S.Selvarajan சொல்கிறார்:

  வாராகடன் என்கின்ற லிஸ்டில் சேர்ப்பது ஒரு புறம் இருந்தாலும் —- இப்போது வங்கிகள் இது போன்ற பேர்வழிகளுக்கு — என்னமோ ” பத்மவிபூஷன் ” பட்டம் கொடுப்பதைப்போல் — இவர்களுக்கு ” வங்கி ஏய்ப்பாளர்கள் ” என்று பட்டம் கொடுத்து கௌரவிக்கிறார்கள் ! விஜய் மல்லையா இந்த பட்டத்தை பெற்றுள்ளார் !! பட்டம் கொடுத்து விட்டால் பணம் திரும்ப கிடைத்தமாதிரி பெருமை பட்டுக்கொள்வார்கள் ? எல்லாம் காலம் செய்த கோலம் !!! ஆனாலும் கா.மை அவர்கள் மோடியை விட்டுகொடுக்காமல் பதிவு செய்வது — அவர் நல்லவர்தானே ?

 2. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  //மோடிஜி தவறு செய்ய மாட்டாரே! அதனால் அவர்கள் மகிழ்ச்சியோடு சுமப்பார்கள்// – உச்சந்தலையடி!

 3. புது வசந்தம் சொல்கிறார்:

  இந்தியர்களின் பணம் ஆஸ்திரேலியாவுக்கு…
  http://timesofindia.indiatimes.com/india/SBI-defends-1-billion-loan-to-Adani-group-Congress-calls-it-crony-capitalism/articleshow/45219455.cms
  வரூம் ஆனா வராது…நல்ல படம்… பாரத வங்கியும் அதன் பூட்டும்…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நண்பரே ( புது வசந்தம் ).

   ஒரு விஷயம் என்ன வியப்பில் ஆழ்த்துகிறது.
   நான் இந்த இடுகையை காலையிலேயே எழுதி விட்டேன்.
   அதன் பிறகு தான் அஜாய் மாக்கன் பேசி இருக்கிறார்.
   இந்த செய்தி PTI யால் இன்று மாலை
   (Nov 20, 2014 ) 07.07 மணிக்கு தான் செய்தித்தளங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

   SBI defends $1 billion loan to Adani group, Congress
   calls it ‘crony capitalism’
   PTI | Nov 20, 2014, 07.07 PM IST

   கிட்டத்தட்ட நான் கூறியுள்ள அனைத்து கருத்துக்களும்
   அஜாய் மாக்கனாலும் கூறப்படுகின்றன….

   விந்தை தான்…..!!!

   Anyway – நான் 2 நாட்கள் முன்னதாக எழுதிய இடுகையில்
   சொல்லி இருந்தேன் –

   ” மக்களும், மீடியாக்களும், எதிர்க்கட்சிகளும் –
   முனைந்தால் இந்த முடிவைத் தடுக்க முடியலாம்…..
   விழித்துக் கொள்வார்களா …..? ”

   விழித்துக் கொண்டு விட்டார்கள்…. நல்லது.

   உங்கள் தகவலுக்கு நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. DrKGP சொல்கிறார்:

  SBI – please wake up, urgent….
  Dear KM , you can wake up somebody who is really sleeping but ….

 5. Thiyagarajan சொல்கிறார்:

  I am Living In Australia. here written everything is true about mining in Australia.

  • today.and.me சொல்கிறார்:

   DOUBLE THANKS… திரு.தியாகராஜன்.
   அங்கிருக்கும் உண்மை நிலையை உறுதிப்படுத்தியற்கும்
   விமரிசனம் தளத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தியதற்கும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Thank you Mr.Thiyagarajan.

   with all best wishes,
   Kavirimainthan

   • Thiyagarajan சொல்கிறார்:

    I like to remind you one think in the world every govt running behind business people all party getting money from big company’s.unless they cant run party. modi also have some commitment for the party.if he dont like also.

 6. Siva சொல்கிறார்:

  Dear sir, i live in USA and watch the international news daily with more focus on international economics. What you have written is 100% true. I have red 2-3 weeks back that other banks declined to loan him. He already invested in australia in land for coal mining hoping that he will get loan from european or anerican banks, who manages the world economy currently with thier benefit in front, but declined the loan. Now sbi is bailing him out with pouring its priofit on unbailable investment! Indian politicians never change! Currently, the show-case programs and tours are being run by n mo to patch up his past mistakes! Unfortunately, many tamil youngsters are being misguided by current media that n mo is the saviour of country! Its a bad precedent! Siva

 7. visujjm சொல்கிறார்:

  ஐயா என் ஏழ்மை தோழர்கள் வாழ வழியிழந்து கடன் பெற்று முன்னேறி செழிப்படை SBI ல் கடன் வாங்கி வட்டி குட்டியோடு போராடுகிறார்களே அவர்கள் நிலை கண்டு என் நிலை கண்டு வருத்தம் போக வழி உண்டோ…

  இட்சம் அதில் கால்பங்கு

 8. today.and.me சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,
  இதையும் கொஞ்சம் படிக்கவேண்டுகிறேன்.
  ஆழம் தெரியாமல் காலை…
  http://www.nisaptham.com/

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் today.and.me,

   நிசப்தம் படித்தேன். நண்பர் மணிகண்டன் மிக அழகாக
   எடுத்துச் சொல்லி இருக்கிறார். மற்ற நண்பர்களும்
   அவசியம் படிக்க கேட்டுக் கொள்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. sella சொல்கிறார்:

  இந்தியாவின் ஏழை, மற்றும் விவசாயிகள் குறித்தே நான் கவலைப்படுகிறேன். சமீபத்திய வெளி நாட்டு பயணத்தின் போது விவசாயிகள் முன்னேற்றத்திற்கான வழிமுறைகள் குறித்து கேட்டறிந்தேன். ஏழை மக்கள் முன்னேற்றம் உறுதி செய்யப்படும்
  Modi –
  Dinamalar news

  I wonder when Adani becomes a farmer and a poor?

 10. LVISS சொல்கிறார்:

  It is understood that it is only a MOU and not a loan —

  • reader சொல்கிறார்:

   அதனால் என்ன? இப்போதே விழித்துக் கொள்வது மக்களுக்கு நல்லதல்லவா?

   பப்ளிக் லிமிடெட் கம்பெனி என்பது சி(ப)லர் ஒன்று கூடி தொழில் செய்ய முனைவது; லாபம் வந்தால் முதலீட்டுக்கேற்ப பிரித்துக் கொள்ளலாம்; நட்டம் வந்தால் நிறுவனத்தை இனியும் நடத்தமுடியாது என்ற நிலை வந்தால் திவால் என அறிவித்துவிட்டு, கம்பேனிக்கு இருக்கும் சொத்துகளை விற்று முடிந்தவரை கடனை அடைத்துவிட்டு கை வீசிச் செல்லலாம். புரமோட்டரின் தனிப்பட்ட சொத்துக்கு எந்த பாதிப்பும் வராது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.