காமிரா எங்கே என்று – மோடிஜிக்கு மட்டும் தான் தெரிகிறது…..!!!

..

ஆஸ்திரேலியாவை விடுத்து அடுத்த தலைப்பிற்கு போகலாம்
என்று தான் ஆரம்பித்தேன். ஆனால் ஒரு பத்து நிமிடம்
பேஸ்- புக் கைப் பார்த்து புதுப்பித்துக் கொண்டு (refresh …!! )
வேலையைத் துவக்கலாமே என்று தோன்றவே –
அந்தப் பக்கம் போனேன்.

மோடிஜியை நான் விட்டு அகல நினைத்தாலும்,
நண்பர்கள் விடுவதாக இல்லை.
குறும்புத்தனமான தலைப்புடன் புகைப்படம் ஒன்று
இடப்பப்பட்டிருந்தது. நீங்களும் ரசிப்பீர்கள் என்று கீழே
பதிப்பிக்கிறேன்.

மோடிஜியின் புகைப்பட மோகம் நாம் அறிந்ததே.
அதை எப்படி நாசூக்காக கிண்டலடித்திருக்கிறார்கள் பாருங்கள் –
( நன்றி – நண்பர்கள் Karthick Thamizhchelvan மற்றும்
Aravindan Elangovan ஆகியோருக்கு ..)

( உண்மைகள் சுட்டிக்காட்டப்படும்போது, பாஜக நண்பர்கள்
ஆத்திரப்படுவதை விட்டு விட்டு, இதையெல்லாம் நகைச்சுவை
உணர்வுடன் ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று
கேட்டுக் கொள்கிறேன்….!!
அது தான் பக்குவத்திற்கு
அடையாளம். )

Only Modiji knows where the Camera is …….!!!

facebook- photo - modiji

 

நண்பர் “புது வசந்தம்” அனுப்பிய செய்தி வீடியோ க்ளிப்
ஒன்றை இங்கே பதித்திருக்கிறேன். நண்பர்கள் முதலில்
வீடியோவைப் பார்க்கவும். ( இந்தி புரியவில்லை
என்றால் பிறகு நான் கீழே கொடுத்திருக்கும் விளக்கத்தைப் பாருங்கள் – பிறகு மீண்டும் பார்த்தால் நன்றாகவே புரியும்….!)

 

 

வீடியோ விளக்கம் –
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மோடிஜி வருகிறார்.
அமைச்சர்கள் அருண் ஜெட்லியும், திருமதி நிர்மலா
சீதாராமனும் பூச்செண்டு கொடுத்து வரவேற்கிறார்கள்.
கமாண்டோ பாதுகாப்பு வீரர் ஒருவர் பூச்செண்டுகளை
உடனே, உடனே வாங்கிக் கொள்கிறார்.
மோடிஜி அந்த கமாண்டோ வீரரை “ஏதோ” சொல்கிறார்.
பின்னர் கமாண்டோ இன்சார்ஜிடம் “ஏதோ” சொல்கிறார்.

அந்த ஏதோ ஏதோ என்னென்ன …..?

முதல் ஏதோ – “இங்கே குறுக்கே நின்று கொண்டு
என்ன பண்ணுகிறாய் ?”

2வது ஏதோ – ” உங்கள் ஆட்களை (காமிராவிற்கு….!!)
குறுக்கே வராதே” என்று சொல்லி வையுங்கள்….!!!

விஷயம் என்னவென்றால் – மீடியா காமிராக்களுக்கும்,
மோடிஜிக்கும் இடையே அந்த கமாண்டோ வந்து
நின்று விட்டதால் – மோடிஜியை சில நொடிகளுக்கு –
அவர் காமிராக்களின் பார்வையிலிருந்து மறைத்து விட்டார்….!!!!!
அதான் கோபம் ….

 

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to காமிரா எங்கே என்று – மோடிஜிக்கு மட்டும் தான் தெரிகிறது…..!!!

 1. S.Selvarajan சொல்கிறார்:

  SMILE PLEASE ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் புது வசந்தம்,

   அருமையான வீடியோ க்ளிப்.
   இந்த தலைப்பிற்கு மிக மிகப் பொருத்தமான வீடியோ என்பதால்,
   நண்பர்கள் அனைவரும் பார்க்க வசதியாக – இடுகையின்
   உள்ளேயே இணைத்து விட்டேன். மிக்க நன்றி.
   உங்கள் ரசனைக்கு பாராட்டுக்கள்.

   ஏற்கெனவே இடுகையைப் பார்த்து விட்ட நண்பர்களுக்கு,

   புகைப்படத்தின் கீழே புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும்
   வீடியோவை அவசியம் பார்க்கவும்.
   ஒரு நபரின் குணாதிசயங்களை பளிச்சென்று
   இரண்டே நிமிடங்களில் வெளிப்படுத்தும் வீடியோ இது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. johan paris சொல்கிறார்:

  இன்னும் சிறுது காலம் எடுக்கும் அவருக்கும் இந்த மோகத்தில் சலிப்பு வர,
  அது வரை பொறுப்போம்.
  ஆனாலும் சிரிப்போம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே ( ரீடர் )

   வித்தியாசமாக இருக்கிறது.
   அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. புது வசந்தம் சொல்கிறார்:

  நண்பர்களே,
  இவரின் இந்த குணாதிசயம் இந்தியாவின் எதிர்காலம் குறித்து சிறு அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

  • M S Swaminathan சொல்கிறார்:

   Sirs,
   All these are not new for anybody who are in TamizhNadu since 60s. We
   already seen all scientific involvements KM Sir.When TN borne this till 2014
   why can’t India for next 50 years.??

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  ஒரு முகநூல் நண்பரின் கருத்து,

  சமூகம்(தனி மனிதன்) மாறாதவரை ராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன, சீதைகள்(மக்கள்) அழுதுக்கொண்டுதான் இருப்பார்கள்!
  -நவீன் கிருஷ்ணன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.