“punch” க்கு மேல் “punch” மோடிஜிக்கு – ஆனால் அத்தனையும் விழுந்தது அருண் ஜெட்லி மீது …!!!

..

..

பார்லிமெண்டில் (ராஜ்ய சபா ) நேற்று கருப்புப் பணம்
அமளி துமளிப்பட்டது.

“எங்களை பதவியில் அமர்த்தினால் – 100 நாட்களுக்குள்
வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள அத்தனை கருப்புப் பணத்தையும்
இந்தியாவுக்கு கொண்டு வருவோம். பிரித்துக்
கொடுத்தால் ஆளுக்கு 15 லட்சம் வரும்” – என்று

” தேர்தல் நேரத்தில் ஊர் ஊராகச் சென்று மக்களை
உசுப்பி விட்ட திருவாளர் நரேந்திர மோடி. சொன்னபடி ஏன்
செய்யவில்லை..?” – என்று நேற்று ராஜ்யசபாவில்
– மல்லிகார்ஜுன கார்கேயிலிருந்து, ஆனந்த் சர்மா,
டி.ராஜா, சரத் யாதவ், மாயாவதி, சீதாராம் யச்சூரி
என்று ஆளாளுக்கு பின்னி எடுத்து விட்டனர்.

“பொய்யை முதலீடு போட்டு தேர்தலில் ஜெயித்த மோடிஜி
சொன்னபடி செய்யாததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் ”
என்று எல்லா பக்கங்களிலுமிருந்தும் demand….!

ஆனால், நரேந்திர மோடிஜி காத்மாண்டு ஓட்டலில்
சுகமாக “கீர்” (வட இந்தியப் பாயசம் …) சாப்பிட்டுக்
கொண்டிருக்க
– பாவப்பட்ட நிதியமைச்சர்
அருண் ஜெட்லி பார்லிமெண்டில் ஒவ்வொருவரிடமும்
“பஞ்ச்” வாங்கிக் கொண்டிருந்தார்.

மம்தா பானர்ஜி சொல்லி அனுப்பி இருப்பார் போல –
இதில் ஓங்கி ஓங்கி அடித்தவர் திரிணமூல் காங்கிரஸின்
“டெரிக் ஒ ப்ரியான்”.

அருண் ஜெட்லி நிஜமாகவே பரிதாபகரமான நிலையில்
தானிருந்தார். “உங்களுக்கு இது நேரம் – எவ்வளவு
வேண்டுமானாலும் அடியுங்கள் – வாங்கிக் கொள்கிறேன் ”

என்று சொன்னாரே தவிர தப்பித் தவறிக்கூட மோடிஜியின்
பெயரை உச்சரிக்கவே இல்லை…!!

சீதாராம் யெச்சூரி சில யோசனைகளைக் கூறினார் –

(1) கருப்புப் பணச் சொந்தக்காரர்களின்
பட்டியலை உடனே வெளியிடுங்கள்…

(2) பங்குக் சந்தையில் participatory note
முறையை ரத்து செய்யுங்கள்.

(3) தேர்தலில் – வேட்பாளர்கள் செய்யும் செலவுக்கு உச்ச வரம்பு
வைத்திருப்பது போல் – அரசியல் கட்சிகள் செய்யும் செலவுக்கும்
உச்ச வரம்பு விதியுங்கள் ( இப்போது எந்த வரையரையும்
இல்லை – அதான் ஆளாளுக்கு ஹெலிகாப்டரில் திரிகிறார்கள்…!)

பட்டியலை வெளியிட்டு விட்டால், பின்னர் எப்போதுமே
இந்த கருப்பு பணக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியாது
என்று முதல் ஆலோசனைக்கு மட்டும் அருண் ஜெட்லி பதில்
சொன்னார். மற்ற இரண்டையும் கண்டு கொள்ளவில்லை….

கிட்டத்தட்ட கடந்த இடுகையில் சொன்னது போல் தான்
விவகாரம் முடிந்தது. ராஜ்ய சபாவில், விவாதம்
முடிகின்ற நேரத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் வெளிநடப்பு
செய்கின்ற நேரத்தில் -கடைசியோ கடைசியாக ஷரத் யாதவ்,
ஜெட்லியிடம் “எப்போது தான் பட்டியலை வெளியிடுவீர்கள்
என்றாவது சொல்ல முடியுமா ?” என்று கேட்டதற்கு –

அருண் ஜெட்லி “பட்டியலில் உள்ள கடைசி ஆள் மீது
வழக்கு தொடுக்கும் வரை பெயர்களை வெளியிட முடியாது”
என்று கூறி விட்டார்….!!!

ஆக மொத்தம் – கருப்புப் பணம் வராது என்பது மட்டுமல்ல,
கருப்பை பதுக்கியவர்களின் பட்டியலும் இப்போதைக்கு
வெளி வராது.
சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆதாரங்கள் கிடைக்க
கிடைக்க, வழக்குகள் தொடுக்கப்படும். அப்போது நீதிமன்றம்
மூலமாகத்தான் பெயர்கள் வெளியே தெரிய வரும்…..
என்பது நேற்று ராஜ்ய சபாவில் உறுதி செய்யப்பட்டு விட்டது.

இன்றோ, நாளையோ – லோக்சபாவிலும் இதே நாடகம்
அரங்கேறும். பின்னர், கத்தரிக்காய் காய்த்தது – கதையும் முடிந்தது
என்று எல்லாரும் அமைதியாக தங்கள் தங்கள் வழக்கமான
வேலையைப் ( ? ) பார்க்கப் போகலாம் …..!!!!

—————————————
இது அடுத்த கதை –

கீழேயிருப்பது நமது வெளியுறவுத்துறை செயலாளர்
திரு சையத் அக்பருதின் அவர்களுடைய ட்விட்டர் …!

மோடிஜியுடன் நேபாள் சென்றிருக்கும் அவருக்கும் ட்விட்டர்
கணக்கு உண்டு … இப்போதெல்லாம் அரசுத் தகவல்களையே
ட்விட்டரில் தருவது தானே fashion…..!!!
“தலை” எப்படியோ – ” ……தலைகளும் அப்படியே….!!!”

rajabakse and modiji at saarc meet-2

நேபாளத்தில், இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேயை
சந்தித்த நரேந்திர மோடிஜி –
அவரை கட்டித் தழுவிக் கொண்டு –
வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக் கூறினார்….

வெ.உ.துறை செயலாளர் கூறுகிறார் – 5 தமிழக மீனவர்களை
கருணை மிகக்காட்டி மன்னித்ததோடு அல்லாமல்,
இந்தியாவிற்கு திருப்பியும் அனுப்பியதற்காக
மோடிஜி,
ராஜபக்சே வுக்கு நன்றி கூறினாராம்….

அதெல்லாம் சரி தான் …..
ஆனால் – எங்கிருந்தோ கவுண்டமணி குரல் கேட்கிறது எனக்கு-

” ஏண்டா தீவட்டித் தலையனுங்களா – படகு ஞாபகமே
வராதா ஒங்களுக்கு ….? – அந்த 78 படகுகளை வைச்சுக்கிட்டு
என்னடா பண்ணப் போறீங்க … ?

“ஒருவேளை தோத்துட்டா – மீன் பிடிக்கப்போவீங்களோ….?”

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to “punch” க்கு மேல் “punch” மோடிஜிக்கு – ஆனால் அத்தனையும் விழுந்தது அருண் ஜெட்லி மீது …!!!

 1. seshan சொல்கிறார்:

  ஏண்டா தீவட்டித் தலையனுங்களா…..Super…

 2. சக்தி சொல்கிறார்:

  வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கிய 627 பேரில் 427 பேரின் வங்கிக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். ………………வெளியிடுவதில் என்ன சிக்கல்?

  இனம் இனத்தையே சாரும். குசராத் இனப்படுகொலையாளியும்,தமிழ் இனப்படுகொலையாளியும் கட்டித் தழுவுவதில் ஒரு நியாயம் இருக்கிறது.

  சு.சுவாமி கோத்தபாயாவுடன் படகுகள் பற்றி பேசியதாக, டுவீட் செய்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவை நேரில் சந்தித்தேன். அவரிடம் தமிழக மீனவர்களின் 76 படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினேன். தமிழகத்தை கைப்பற்ற நாடகம் அரங்கேறி உள்ளது.

  ராஜபக்சே வெற்றியடைவார். ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. தமிழர்களை சித்திரவதை செய்து கொண்டிருக்கும் இராணுவத்தளபதி அவசரமாக தலை நகர் அழைக்கப்பட்டுள்ளார். தாக்குதல்,கொலை கடத்தல்,சித்திரவதை கோத்தபாயாவால் தொடக்கப்பட்டுள்ளதாக தகவல்.
  இம்முறை விழப்போவது சிங்கள முஸ்லீம் தலைகள்.

 3. today.and.me சொல்கிறார்:

  // நரேந்திர மோடிஜி பேசினார். பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தை கொண்டு வருவோம் என்று வாக்குறுதி கொடுத்தார். முடியாது என்று நிச்சயமாகத் தெரிந்து கொண்டே கொடுக்கப்பட்ட வாக்குறுதி இது.//

  // ஒன்றும் கிடைக்கவில்லை யென்றால் – அதற்கான பதிலைச் சொல்லவேண்டிய பொறுப்பில் – தாக்குதலை சந்திக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் இன்றைய நிதியமைச்சர் திரு.அருண் ஜெட்லி தான்.//

  // முந்தைய நிதியமைச்சர்களைப்போல் (!) கேட்பவர்களை
  முட்டாள்கள் என்று நினைத்துப் பேசும் குணம் அவரிடமில்லை.
  சிரித்துக் கொண்டே வில்லத்தனம் செய்பவரும் இல்லை…!//

  கா.மை.ஜி,

  அருண் ஜெட்லி நிதியமைச்சர் பொறுப்பில் இருப்பது
  பல விதங்களில் மோடிஜி அவர்களுக்குமட்டுமே நிம்மதி தரும் விஷயம் என்று சொல்லலாம்.

  எனக்கும் திரு அருண் ஜெட்லி அவர்களை அவர்களின் குணங்களுக்காகப் பிடிக்கும். பாஜக கொடுத்த வாக்குறுதிஎன்று சொல்வதை விட ந.மோ.கொடுத்த வாக்குறுதி என்றும் இது முடியாது என்றே தெரிந்து கொடுத்த வாக்குறுதி என்றும் நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதனாலேயே வெள்ளந்தியான இவரை அவர்கள் மாலையைப் போட்டு பொட்டுவைத்து பாராளுமன்றத்தில் நிறுத்திவிட்டுப் போய்விடக்கூடும் என்று எதிர்பார்த்தேன். இப்போது திரு ஜெட்லி என்கிற ஒருவரை மட்டும் பலியாடாக ஆக்கிவிட்டு மற்றவர்கள் பூசாரிகள் ஆகிவிட்டார்கள்.

  கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக – மாற்றி மாற்றி, போட்டி போட்டுக்கொண்டு, பொது மக்களை உசுப்பேற்றி வந்த. இந்திய அரசியல்வாதிகள் அத்தனை பேருடனும் சேர்ந்து,

  ஸ்விஸ் வங்கிகளில் அத்தனை லட்சம் கோடி,
  இத்தனை லட்சம் கோடி கருப்புப் பணம் இருக்கிறது -அதைக் கொண்டு வந்தால் 15 ஆண்டுகளுக்கு மத்திய
  பட்ஜெட்டே போட வேண்டாமென்று சொன்ன கூட்டத்தோடு சேர்ந்து,

  இந்திய மக்கள் அனைவருக்கும் தலைக்கு 3 லட்சம் கொடுக்கலாம் என்று சொன்ன கூட்டத்தோடு சேர்ந்து,

  நாமும் ஜெட்லி ஒருவர்மீது மட்டும் பழியைப் போட்டுவிட்டு ஒதுங்கிக்கொள்ளக்கூடாது என்று தான் எதிர்பார்க்கிறேன்.

  இவர் என்ன செய்யமுடியும். பாவம். அமைதியாகத்தான் இருந்தாகவேண்டும்.

  பாவம் ஜெட்லி மட்டுமில்லை, இந்திய மக்களும் தான்.

  ஏனென்றால்

 4. ஆஷிக் அஹ்மத் சொல்கிறார்:

  கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வருவது இருக்கட்டும். முதலில் நம் பிரதமரை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வர முயற்சி செய்யுங்கள்..

  – ட்விட்டரில் நான் இரசித்த ஒரு ஆங்கில ட்விட்டின் தமிழாக்கம்.

  ஆமா, நம் பிரதமர், இந்த ஆறு மாத காலத்தில் தன் அலுவலகத்தில் இருந்தது 2.5 நாட்கள் மட்டும் தானாமே?

 5. S.Selvarajan சொல்கிறார்:

  ஏன் சார் இது உங்களுக்கே ” தமாஷா ” தோணலையா ? எந்த ஒரு கொம்பனாலு ம் கருப்பு பணத்தை மீட்க முடியாது என்று தெரிந்தும் — இந்த இடுக்கை ஏன் ? ஜேட்லியை 20– ஆண்டுகளாக தெரிவதும் — அவர் திறமைசாலி என்பதும் — எனக்கும் அவரை பிடிக்கும் என்று ஒருவர் மாற்றி ஒருவர் கூறுவதும் —- அவரை பற்றிய உங்களின் தனிப்பட்ட கருத்துக்கள் ! அவர் இந்த பதவிக்கு வந்தபின் அவர் ஆற்றவேண்டிய பணியை பற்றிய விமர்சனங்களில் அவரின் குணா அதிசியங்களின் பட்டியல் தேவை தானா ? ஆக மொத்தம் – கருப்புப் பணம் வராது என்பது மட்டுமல்ல,
  கருப்பை பதுக்கியவர்களின் பட்டியலும் இப்போதைக்கு
  வெளி வராது என்று நீங்களே கூறிவிட்ட பின் — அதைபற்றி ” கூறுவதற்கு ” ஒன்றும் இல்லை —- அப்படித்தானே ?

 6. ஆஷிக் அஹ்மத் சொல்கிறார்:

  //ஆமா, நம் பிரதமர், இந்த மாதத்தில் தன் அலுவலகத்தில் இருந்தது 2.5 நாட்கள் மட்டும் தானாமே?// – இப்படியாக படிக்கவும்.

 7. LVISS சொல்கிறார்:

  Has anybody ever apologised for making electoral promises and not fulfilling it -Nobody had done and nobody need to, really — People will decide whether to give the ruling party another term to fulfill their promises -Election promises are made on some assumptions –If the assumptions go wrong everything goes wrong – Even if politicians set time limits for their promises they have 5 years to fulfill it —
  The subject of debate falls under the finance ministry so Jaitley had to answer —

 8. visujjm சொல்கிறார்:

  தீசட்டி சுட்டாலும் விட மாட்டார்களோ., இந்த உலகம் என்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் நிலை எண்ணத்துணியாதா…?

 9. today.and.me சொல்கிறார்:

  தீவட்டித் தலையனுங்களுக்கு படகு ஞாபகம் வந்திருச்சு !!
  வாழ்த்துக்கள் மீனவர்களே.

  Subramanian Swamy @Swamy39 · 13h 13 hours ago 6:42 AM – 30 Nov 2014
  I have just been informed from Sri Lanka that on my list given to Defence Secy Gotabhaya Rajapaksa, the SL Navy is releasing the boats soon.

  &

  Thiruvalluvar and bharathiyar have plan a tour to North India.
  So, hoping 2016 is BJPs.

 10. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  கடைசி வரி செ…டி! யாருக்கு?… யாருக்கோ இல்லை இட்லரின் அரசியல் வாரிசுக்குத்தான்!

 11. SUBBU சொல்கிறார்:

  ONE THING I WANT TO TELL THE BJP UNIT OF TAMILNADU, DO NOT EVEN THINK THAT
  YOU CAN CAPTURE TAMILNADU IN 2016 STATE ELECTIONS,BECAUSE YOU DONT HAVE
  THE NUMBERS HERE. YOU CAN FOOL REST OF INDIA BY PROMISING FALSE PROMISES
  BUT THAT WILL NOT HOLD HERE IN TAMILNADU.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.