“திஹார்” சிறையில் இருக்க வேண்டிய “டாப்-காப்”.
.
.

கீழ்க்கண்டவை சில தமிழ் திரைப்பட வில்லன்களின்
புகைப்படங்கள். இதில் ஒருவர் மட்டும் -நிஜ வில்லன்.
அதாவது, இன்றைய இந்தியாவின் டாப்-காப். அது யாரென்று
உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்….!!!

v-1

v-2

 

 

 

 

 

v-3

v-4

 

 

 

 

 

v5


இதில்
மேக்கப் இல்லாமலே வில்லன்களை விட மோசமான
தோற்றமுடையவர் தான் நமது மரியாதைக்குரியவர்.

முதலில் அவர் டாப் காப் ஆகும் முன்னர் அவரது சரித்திரத்தில்
இடம் பெற்ற சில முக்கிய நிகழ்வுகள் –

(அதாவது அவர் டாப்-காப் ஆக திருமதி சோனியா காந்தி-
மன்மோகன் சிங் அரசால் நியமனம் பெற அவருக்கான
தகுதியை உயர்த்திக் காட்டியவை…!!)

இவர் முன்னதாக, 1996-ல் சிபிஐ யில் DIG ஆகப்
பணியாற்றும்போது, வைக்கோல்போர், மாட்டுத் தீவன வழக்கில்
சிக்கிய திருவாளர் லாலு பிரசாத் யாதவ் அவர்களை தப்புவிக்க
ஏகப்பட்ட தில்லுமுல்லு முயற்சிகள் செய்து, அது பாட்னா
உயர்நீதிமன்றத்தால் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்காக,
நீதிமன்றத்தால் கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு –
அந்த விசாரணை வளையத்தை விட்டே
வெளியே துரத்தப்பட்டார்.

அதன் பின்னர் பீகார் சட்டமன்றத்தின் உரிமைக்கமிட்டி
முன்பாக வருவிக்கப்பட்டு, கண்டனம் தெரிவிக்கப்பட்டார்.

அதன் பின்னர், லாலு பிரசாத் தயவில் டெல்லியில்
பீகார் பவனில் உருவாக்கப்பட்ட தனிப்பதவியில்
அமர்த்தப்பட்டார்.

இவ்வளவு பெருமைகள் மிகுந்த இவரது பின்னணியை
தெரிந்து கொண்டவுடன்
திருமதி சோனியா காந்தி +
திரு மன்மோகன் சிங் அரசு,

இவரை விட தமக்கு தகுதியான,
உபயோகமான நபர் வேறு யார் இருக்க முடியும் என்று
முடிவு செய்து 2012 டிசம்பரில் சிபிஐ டைரக்டராக நியமனம்
செய்தனர்.
அதை மெய்ப்பிக்கும் விதமாக இவரும்
பல விதங்களிலும் ( முலாயம் சிங், மாயாவதி ஊழல்
வழக்குகளை – அவ்வப்போதைய தேவைக்கேற்ப
தீவிரப்படுத்துவதும், தாமதப்படுத்துவதுமாக, மற்றும்
பவன் குமார் பன்சால் மற்றும் சில மத்திய மந்திரிகள்
பற்றிய வழக்குகளை நீர்த்துப்போகச் செய்தது உட்பட )
அவர்கள் சித்தம் குளிர பணி புரிந்தார்.

இவரை நியமனம் செய்யும்போதே – எதிர்க்கட்சித்தலைவராக
திரு.அருண் ஜெட்லி இதை ஆட்சேபித்திருக்கிறார்.
கீழே இருப்பது அருண் ஜெட்லியின் விளக்கம் –

//Recalling the events leading to appointment of Sinha in 2012,
Jaitley said the CBI Director was appointed by the previous UPA

government just a day before a Parliament select committee
report on Lok Pal Bill that provided for the procedure of such

appointment was to be tabled in Rajya Sabha.

“At 11 am that report was to be tabled and this appointment
was made the previous evening at 9 pm. The next day
Sushma Swaraj and I wrote to the Prime Minister
(Manmohan Singh) that on what criteria have you done this…,” //

சரி – சிபிஐ டைரெக்டர் ஆன பிறகு அவர் என்னென்ன
சாதனைகள் புரிந்தார் …..?

சிபிஐ அலுவலகம் என்று ஒன்று டெல்லியில் இருக்கிறது.
அதில் சகல சௌகரியங்களுடன் இவருக்கான தனி அறையும்
இருக்கிறது. ஆனாலும், சிபிஐ வழக்குகளில் சிக்கிய பல
பெரும் புள்ளிகளை இவர் தன் வீட்டிலும் சந்திப்பார். ஏன் …?
வழக்குகளில் -அரசுக்கு அல்ல- அவர்களுக்கு உதவ வேண்டாமா ?

டெல்லியில் அவரது இல்லத்திற்கு சென்று தனிப்பட
சந்தித்திருப்பவர்களின் பட்டியல் —

– மொய்ன் அக்தர் குரேஷி என்கிற meat exporter கடந்த
15 மாதங்களில் 90 தடவைகள் போய்ப் பார்த்திருக்கிறார்.

(இந்த குரேஷியின் வீட்டிலும், அலுவலகத்திலும் கடந்த
பிப்ரவரி மாதம் வருமான வரித்துறை ரெய்டு நிகழ்த்தியது.
வருமானத்தை மறைத்தது மற்றும் ஏற்றுமதி வர்த்தகம்
சம்பந்தமாக இந்த குரெஷியின் மீது தீவிர விசாரணை
நடந்து வருகிறது.)

-ஊழலில் தனக்கு ஒத்துழைக்கும் மூத்த புலனாய்வுத்துறை
அதிகாரிகள் பலருக்கும் வெளிநாடுகளில் பணப்பரிமாற்றம்
செய்யவும், பதுக்கவும், இந்த குரேஷி தான்
முக்கிய friend, phylosopher and guide.

– இந்த குரேஷி சம்பந்தமாக நடந்து வரும் விசாரணை
விவரங்களை தங்கள் இலாகாவுடன் பகிர்ந்து கொள்ளுமாறு
வருமான வரி இலாகாவிடம் இந்த ஜென்டில்மேன்
அதிகாரபூர்வமாகவே கேட்டுக் கொண்டுள்ளார் …..
(எதற்காக என்று தான் நமக்கே தெரியுமே …!)

குரேஷி – மே 2013 க்கும் டிசம்பர் 2013க்கும்
இடைப்பட்ட காலத்தில் -16 தடவைகளும்,
ஜனவரி 2014லிருந்து ஆகஸ்டு 2014க்கு
இடைப்பட்ட காலத்தில் 74 முறைகளும்
புலனாய்வுத் தலைவரின் இல்லத்திற்கு வருகை
புரிந்திருக்கிறாராம்.

-2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ரிலையன்ஸ்
நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பலமுறை
இவரை, அவரது இல்லத்தில் சென்று பார்த்திருக்கிறாராம்.

2 ஜி வழக்கிலும், முக்கியமாக கேடி பிரதர்ஸ் வழக்கிலும்
தீவிரமாக, அசராமல் தொடர்ந்து ஒன்றரை வருடங்கள்
பல தடவைகள் மலேசியாவுக்கு (சுற்றுப்பயணம்) சென்று,

தீவிரமாக துப்புத் துலக்கி விட்டு – கடைசியில்
ஒன்றும் கிடைக்கவில்லை என்று சொன்னவர் இவர் தான்.
கேடி பிரதர்சின் “கருணை வெள்ளம்” இவர் மீது
அபாரமாகவே பாய்ந்திருக்கிறது.

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்- இவரைப் பற்றிய பல
மோசடி, உள்ளடி வேலைகளை சுப்ரீம் கோர்ட்டில்
அம்பலப்படுத்தியதன் பிறகு, கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்
இவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து, 2ஜி சம்பந்தப்பட்ட
விசாரணை, வழக்குகளிலிருந்து இவரை ஒதுக்கி வைத்து
உத்திரவு போட்டிருக்கிறது.

தற்போது பிரசாந்த் பூஷன் டெல்லி போலீசில் எழுத்து பூர்வமாக
கொடுத்த புகாரின் மீது FIR ஒன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

2ஜி வழக்குகள், நிலக்கரிச் சுரங்க வழக்குகள், பல முக்கிய
வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகத் தன் பதவியை
தவறாகப் பயன்படுத்தியதாகவும், குற்றவாளிகளுக்கு
எதிரான ஆவணங்களை மறைத்ததாகவும், லஞ்சம் வாங்கி
சொத்து சேர்த்ததாகவும் பல புகார்கள்….

மத்திய அரசு இன்னும் இவர் விஷயத்தில் மௌனமாக
இருப்பது ஏன் என்று கடந்த வாரம் கேள்வி எழுப்பப்பட்டபோது,
இவர் பதவிக்காலம் டிசம்பர் முதல் வாரத்தில் தானாகவே
முடிவுக்கு வருவது காரணமாக கூறப்பட்டது.

இப்போது இந்த காரணம் ஒத்து வரலாம் – ஆனால் பாஜக
அரசு பதவிக்கு வந்து 6 மாதங்கள் ஆயினவே….
இவ்வளவு நாட்களாக இவரை ஒழித்துக் கட்ட ஏன் நடவடிக்கை
எடுக்கப்படவில்லை…. என்கிற கேள்வி தானாகவே எழுகிறது.

திட்டக் கமிஷனை, நிதிக்கமிஷனை, பலவேறு மாநிலங்களின்
கவர்னர்களை எல்லாம் ஒழித்துக் கட்ட முடிந்தபோது,
இவர் மட்டும் கடந்த ஆறு மாதங்களாக பதவியில் தொடர
அனுமதிக்கப்பட்டது ஏன் …?
ஒருவேளை சோனியா காந்தி+
ம.மோ.சிங் அரசுக்கு செய்த அதே பணிகளை பாஜக அரசுக்கும்
இவர் தொடர்ந்து செய்ய முன் வந்ததாலா என்கிற கேள்வி
எழத்தானே செய்யும்…!!??

இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை….
இந்த ஆசாமி பதவியிலிருந்து விலகிய மறுநாளே இவர் மீது
ஏற்கெனவே கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்காக,

ஏற்கெனவே பதியப்பட்டுள்ள FIR-ன் அடிப்படையிலேயே
இவரை டெல்லி ‘திஹார்’ சிறையில் அடைக்கவும்,
தொடர்ந்து இவர் மீது தீவிரமாக விசாரணை நடத்தி
வழக்கைத் தொடரவும் தற்போதைய மத்திய அரசு
முன்வந்தால், இவருக்குத் துணை போன பழி
தங்கள் மீது வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to “திஹார்” சிறையில் இருக்க வேண்டிய “டாப்-காப்”

 1. M.Ramesh சொல்கிறார்:

  காவிரிமைந்தன்,

  நீங்கள் மேலே சொல்லி இருப்பதில் சில மட்டும் பத்திரிகைகளில்
  வந்திருக்கின்றன . பல விஷயங்கள் புதிதாக இருக்கின்றன.
  மிகவும் சுவாரஸ்யமாகச் சொல்கிறீர்கள். ; உங்கள் நடை சரளமாகவும்,
  வித்தியாசமாகவும் இருக்கிறது. நான் ந.மோ. ஆதரவாளன் தான்.
  ஆனால், பிஜேபி க்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
  எனக்கு உங்களையும் பிடிக்கிறது. நீண்ட நாட்களாக உங்களைப்
  படித்து வருகிறேன்., எனவே உங்களைத் தவறாக எண்ணத் தோன்றவில்லை.
  நன்றி.

  • Ganpat சொல்கிறார்:

   நண்பர் ரமேஷ்.
   காவிரி மைந்தன் விளக்கினால் ஒரு குழந்தைக்கு கூட எளிதாக புரிந்து விடும்.அப்படிப்பட்ட ஒரு எளிய ஆழமான விவரிப்பு.நேர்மை மின்னும் எழுத்துக்கள்.ஆனால் துரதிருஷ்ட வசமாக அவரை சமீப காலமாக மோடி எதிர்ப்பாளராக சிலர் பார்க்கின்றனர்.இப்பொழுதே பாருங்கள் ஆறு மாதமாக “ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்ற கேள்வியை சிலர் எதிர்ப்பார்கள்.
   ஆனால் ஒருவருக்கும் இதற்கான பதில் தெரியாது.உள்ளதை சொன்னால் கோபம் வருவது இயற்கைதானே.!!
   பி.கு: மீண்டும் காங்.பதவிக்கு வந்தால் சின்ஹாவிற்கு ஜனாதிபதி பதவி நிச்சயம்.

   • Srini சொல்கிறார்:

    Dear Ganpat,
    I am guessing the reasons for sinha not getting sacked.

    1. If he gets removed – all sickular medias and parties will jump.. so hang on..
    2. may be sinha promised BJP govt, that he will act reasonably and meet expectation
    3. anyways sinha has only 6 months time for retirement… so why disturb him
    4. there is no other suitable candidate to replace immediately…. so let us first find a replacement… please note.. sacking a governor and replacing is more easy than sacking a CBi director… an old party vetran could be given governor role and asked to take rest.. but we need a capable person for CBI
    5. may be sinha has some top secrets related to BJP leaders also.

    sometime back (last few months of UPA) there was a news that sinha may be recommended by India government for the Interpol chief post. I am sure that is not going to happen.
    Srini

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     Dear Srini,

     Wonderful….
     A very good and reasonable analysis from
     all points of view. Thank you.

     -with all best wishes,
     Kavirimainthan

     • Srini சொல்கிறார்:

      Thanks sir. Of the five (5) points I mentioned above. I believe more on point no four(4). IN this 1.25 billion population country.. we don’t have many good people ( or people meeting Modi criteria !!!??) to fill certain positions. that’s the reality.

      I am sure Modi is struggling on this issue. He has a criteria list.. which we don’t know…. but not many are fitting into that criteria… this we can safely assume by seeing what is happening….

      Modi passed a special amendment in parliament to bring Mishra in PMO office.
      Modi got a retired IB guy as NSA… not from the existing officer list..
      Modi pulled Suresh prabhu from Shiv sena for Railways
      Modi kept defence with Arun jaitely for almost 6 months
      Modi took 6 months to pull parikar from Goa
      Modi took months to replace some of the central govt commissions, Foreign diplomats – that was once ruled by congi appointees… There are still many many in top echelons of govt.

      with 60+ years of cong rule, Across the country…most of the officers, IAS/IPS/IFS officers are all congress puppets – they all looted together and they still have affiliation with cong leadership.

      So it becomes increasingly difficult to find people for replacement – this is the reality. The moment they find one, the person will get replaced for sure.
      regards
      Srini

    • today.and.me சொல்கிறார்:

     1. all ‘sick’ular 🙂
     2. act limtely to the previous and meet the current’s expectation
     3. If he is disturbed the result will turn down them
     4. there is no other suitable candidate to replace immediately (what about Dr. SS)
     5. has some top secrets related to BJP leaders also – possibilities are definitely YES. His designation is that kind of.

     So, the chances of 1.sinha is threating the rulers or 2. sinha is threatened by the rulers or 3. both are into a MoU using rest of his tenure or 4. both are threatened by the sickular media.

     I wonder blackmailing is a trendsetter and a successful business now.

     :-((

 2. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி,
  வில்லன்களாக நடிக்கும் நிஜ ஹீரோக்களுக்கு மத்தியில் ஹீரோவாக நடிக்கும் வில்லன் படத்தைப் போட்டு விட்டீர்களே. அவர்கள் ரசிகர்களெல்லாம் சண்டைக்கு வரபோகிறார்கள்.
  🙂

 3. ஸ்ரீநிவாசன் சொல்கிறார்:

  உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் தூங்கிய சி.பி.ஐ., இயக்குநர்

  http://www.dinamalar.com/news_detail.asp?id=1126646

  • Ganpat சொல்கிறார்:

   இவர் தன் நாற்பது ஆண்டு அரசு பணியில் செய்த மிக சிறிய குற்றமாகவும் இதை கருதலாம்.

 4. DrKGP சொல்கிறார்:

  You are quite right in asking why no action is being initiated by the
  new government even after so many misdeeds by this
  gentleman . Retiring in Dec should not not be an escape route
  for such people. Unless people like him are not given exemplary govt
  courtesy , no inhibition would be there for people having similar inclination .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.