முதல் நாள் – முதல் ஷோ – பாய்ஸ் கம்பெனி…!!!

 

இதை சினிமா விமரிசனம் என்று யாரும் நினைத்து விட
வேண்டாம். அருமையாக விமரிசனம் எழுத வலைத்தளத்தில்
நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு அந்த பக்குவம் இல்லை.

ஆனாலும், எனக்கு திரைப்படங்கள் பார்ப்பதில் விருப்பம் உண்டு.
நல்ல படம் என்று தெரிந்தால், தமிழ், இந்தி,
ஆங்கிலம் – எந்த மொழியாக இருந்தாலும் சரி, நிச்சயமாகப்
பார்த்து விடுவேன்.

ஆனால், முதல் நாள், முதல் ஷோ ….?
இளம் வயதில் ( முப்பது வயது வரையில் ) அப்படித்தான்
இருந்தேன். அதன் பின்னர் முதல் நாள், முதல் ஷோ பார்க்கும்
அனுபவம் கிடைத்ததில்லை….. நானும் முயன்றதில்லை..!!

இப்போது, நானே விரும்பி முயற்சி எடுத்துக் கொண்டு,
முன் கூட்டியே ரிசர்வேஷன் செய்து, முதல் நாள் முதல் ஷோ
பார்த்த படம் ” காவியத் தலைவன் “

kt-14

 

 

 

 

 

 

 

 

 

என்னை முக்கியமாக இந்த இடுகையை எழுதத் தூண்டியது,
தங்களை அறிவுஜீவுகளாக நினைத்துக் கொண்டு சில
“பரத்வாஜன்”கள் எழுதிய விமரிசனத்தைப் பார்த்தது தான்.

ஓசியில் பாஸோ – டிக்கெட்டோ, அலுவலகத்தின் மூலம்
பெற்றுக் கொண்டு, அலுவலக நேரத்திலேயே சினிமாவும்
பார்த்து விட்டு, பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து
கண்ணுக்குத் தெரியும் குறைகளை –

தங்களுக்கு தெரிந்த ஆங்கில பதங்கள் அத்தனையையும்
பயன்படுத்தி விமரிசனம் என்று எழுதி –

அப்படிக் குறை கூறுவதற்கென்றே
ஊதியமும் பெற்றுக் கொள்ளும் அறிவுஜீவிகளின் விமரிசனம்
தான் என்னை கோபம் கொள்ள வைக்கிறது.

இவர்கள் விமரிசனம் எழுதுகிறபோது , படத்தின்
அருமை-பெருமைகளை விட, தங்களுக்கு எந்த அளவுக்கு
ஆங்கிலம் தெரியும் என்பதை நிரூபித்துக் கொள்வதில் தான்
ஆர்வம் அதிகம் காட்டுவதாகத் தெரிகிறது.

குறைகள் சுட்டிக் காட்டப்படுவதை நான் குறை கூறவில்லை.
ஆனால், அபூர்வமாக நல்ல படங்கள் வரும்போது,
அந்தப் படங்கள் வசூலிலும் வெற்றி பெற்றால் தான்
எதிர்காலத்தில் அத்தகைய படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
என்கிற சமுதாயக் கடமையையும் உணர்ந்து பொறுப்புடன்
அந்த விமரிசனங்கள் எழுதப்படவேண்டும். படத்தின் வசூலை
பாதிக்காதபடி விமரிசனங்கள் அமைய வேண்டும்…அல்லவா..?

சரி படத்திற்கு வருவோம் –

பெரிய எதிர்பார்ப்புகள் எல்லாம் வேண்டாம்.
1920-40 களில் உயிர்ப்புடன் செயல்பட்டு வந்த தமிழகத்தின்
நாடகமேடை தான் படத்தின் களம்.

நாம் படித்து மட்டுமே, கேட்டு மட்டுமே தெரிந்து கொண்ட –
“பாய்ஸ் நாடக கம்பெனி” யில் இருப்பவர்கள் தான் இதன்
முக்கிய கதாபாத்திரங்கள்.

டிவி, ரேடியோ, டேப் ரிக்கார்டர், ப்ளேயர், வீடியோ, சிடி
போன்ற எந்தவித நவீன பொழுதுபோக்கு சாதனங்களும் இல்லாத,
கிராமபோன் ரிக்கார்டுகளும், ஓரளவு “டூரிங்” தியேட்டர்களும்
மட்டுமே, அதுவும் நகரத்து மக்களுக்கு மட்டுமே, அப்போது
அறிமுகம்.

எனவே பெரும்பாலான மக்களின் மிக முக்கிய பொழுது போக்கு-
கூத்து, நாடகங்கள் தான். இந்த நாடகங்களை ஊர் ஊராகச்
சென்று, மேடைகளில் நிகழ்த்தி,
கலையையும் வளர்த்து, தங்கள் வயிற்றுப் பாட்டையும்
பார்த்துக் கொண்ட இந்த நாடகக் கலைஞர்களிடையே நிலவும் –
நடிப்பு, நடனம், பாடல், போட்டி, பொறாமை, நட்பு, காதல்
என்று அத்தனை உணர்வுகளையும் பிரதிபலிக்கும் – கற்பனை
கலந்த உண்மைக் கதை இது.

செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா –
எஸ்.ஜி.கிட்டப்பா என்கிற – நாம் பிறக்கும் முன்னரே –
மிக இளம் வயதிலேயே -27 வயதிலேயே மறைந்து போன –
ஒரு மாபெரும் சங்கீத மேதை;

கிட்டப்பாவின் அபூர்வமான புகைப்படங்கள் கீழே –

S._G._Kittappa

sgkittappa

 

 

 


 

அவரைக் காதலித்து, கரம் பிடித்து,
இருபத்தி ஐந்து வயதுக்குள்விதவையாகி,
கடைசிவரை கைம்பெண் தோற்றத்திலேயே
தனித்தேயிருந்து மறைந்த –

நாம் நிஜத்தில் பார்த்த இசையரசி கே.பி.சுந்தராம்பாள்
(கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் )

-ஆகியோரின் மறக்க முடியாத காதல் கதை இது.

(கே.பி.எஸ். சிறு வயதில் கிராமபோன் ரிக்கார்டிங்
கம்பெனியில் பாடல் பதிவு செய்யும்போது
எடுத்த அபூர்வ புகைப்படம் கீழே )

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

அற்புதமான, பளிச்சென்ற – வண்ணப் படப்பிடிப்பு,
ஓளிப்பதிவாளர் நீரவ் ஷா வின் கைவண்ணம்.
பொருத்தமான சங்கீத இயக்கம்…! (இசை) ஏ.ஆர்.ரெஹ்மான்,

சம்பாஷனை (…!) ஜெயமோகன்.
சித்தார்த் மற்றும் ப்ரித்விராஜின் அற்புதமான நடிப்பு –
‘பயல்கள்’ இருவரும் போட்டி போட்டுக் கொண்டு
பின்னி இருக்கிறார்கள் இந்தப்படத்தில்.
சித்தார்த் தமிழ்த் திரையுலகம் கண்டுகொள்ள மறந்த
ஒரு அற்புதமான கலைஞன். இனியாவது தமிழகம்
இந்த இளைஞனை விடாமல் பிடித்துக் கொள்ள வேண்டும்.

ஜி.வசந்தபாலனின் இயக்கம்……அற்புதமான உழைப்பு.
சித்தார்த்தும், வசந்த பாலனும் இரண்டு வருடங்கள்
சேர்ந்து உழைத்த உழைப்பின் விளைச்சல் இந்தப்படம்.

சுதந்திரப் போராட்டம் என்று சொல்கிறார்கள் –
ஒரு வெள்ளைக்காரர் கூட கண்ணில்படவில்லையே.. ?,
30-களில் நாடக மேடை இவ்வளவு ‘பளிச்’ என்றா இருந்தது …?
பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் மேடை இவ்வளவு
“ப்ரைட்”டாக இருக்குமா …?
இதில் ஹீரோ யார் – வில்லன் யார் …? புரியவில்லையே…!!
அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை நம்மால்
சுலபமாகவே யூகிக்க முடிகிறது –

-இதெல்லாம் ‘பரத்வாஜர்’கள் முன்வைக்கும்
குறைபாடுகள்.

இந்த குறைபாடுகளை வசந்தபாலனால் சுலபமாக சரி பண்ணி
இருக்க முடியும். ஆனால், ஆர்ட் ஃபிலிம் என்று முத்திரை
குத்தப்பட்டு, பாலாவின் ‘பரதேசி’யைப் போல் பெட்டிக்குள்ளே
முடக்கப்பட்டு விடும்.
ஓரளவுக்கு ரியலிஸ்ட் ஆக இருக்கும்
அதே வேளையில் ஜனரஞ்சகமாகவும் இருக்க வேண்டும் –
அப்போது தானே மக்கள் வருவார்கள்….படத்தை பெட்டிக்குள்ளேயே
முடக்கி வைக்கவா இவ்வளவு பாடு …..?

நான் இந்த இடுகையை இளைஞர்களுக்காகத்தான்
எழுதுகிறேன். “கத்தி”, “சுத்தி” ” அரிவாள்” என்று –
5 பைட், 2 குத்துப் பாட்டு, இண்டர்வெல் வரை
“டாஸ்மாக்” கிலேயே குடித்தனம் என்று வரிசையாக வரும்
படங்களை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.

எல்லாரையும் போல், இந்த வசந்தபாலனும், சித்தார்த்தும்
மசாலா படங்களை எடுத்து காசு பண்ண முடியாதா என்ன …?
நல்ல படம் எடுக்க வேண்டும் என்று கனவு கண்டு,
அதற்காக இரண்டு வருடங்கள் உழைத்து இந்த படத்தை
உருவாக்கியது எதற்கு ….? அவர்களது ஆசைக்கு,
லட்சியத்திற்கு, உழைப்பிற்கு – மக்கள் மரியாதை கொடுத்தால்
தானே அடுத்தடுத்து நல்ல படைப்புகள் உருவாகும்…?

அத்தி பூத்ததுபோல் வரும் இது போன்ற நல்ல படங்களை
நழுவ விடாதீர்கள். நீங்கள் தனியாகப் போவதை விட,
உங்கள் வீட்டில் வயதானவர்கள் இருந்தால் –
அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள் –
மிகவும் சந்தோஷப்படுவார்கள் ( மலரும் நினைவுகள்….!)…

சிறுவர்கள் /சிறுமிகள், பெண்களையும் அழைத்துச் செல்லுங்கள்.
நம் பாட்டன், முப்பாட்டன்களின் இளமைக்காலம்
எத்தகைய சூழலில் இருந்தது என்பதை அறிந்து கொள்வார்கள்…
(அவர்களுக்கு கதைப் பின்னணியை படம் பார்க்கும் முன்பே
விளக்கிச் சொல்லி விட்டால் இன்னும் கூடுதலாக ரசிப்பார்கள்…!!)

வசந்தபாலன் குழுவினருக்கு இந்த படத்தின் மூலம்
நிறைய அவார்டுகள் கிடைக்கக்கூடும். அது முக்கியமில்லை…

தியேட்டரில் கூட்டம் கூட வேண்டும் …..
காட்சிகளைக் கண்டு மக்கள் கை தட்ட வேண்டும்.
தங்கள் உழைப்பிற்கு பலன் கிடைப்பதைக் கண்டுசம்பந்தப்பட்ட கலைஞர்கள் மனம் மகிழ வேண்டும்.
அரிதாக வரும் நல்ல படங்களை ஊக்குவிப்பது
இளைஞர்களின் கடமை….குதூகலமான இந்தப் படத்திற்கு
கூட்டம் கூட்டமாகப் செல்லுங்கள்…!!

—————————

எஸ்.ஜி. கிட்டப்பாவின் என்றும் மறக்க முடியாத
பாடல்களுக்கு ஒரு உதாரணமாக –
‘காமி சத்யபாமா கதவைத் திறவாய் ‘ பாடல் கீழே

காவியத்தலைவன் படத்திலிருந்து சில காட்சிகள் –

kt-9

kt-2

kt-10

kt-12

kt-13

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to முதல் நாள் – முதல் ஷோ – பாய்ஸ் கம்பெனி…!!!

 1. Srini சொல்கிறார்:

  sir, Kalakittinga ponga…. I cannot watch immediately. But if I get a chance, will surely do that.

 2. mahalakshmivijayan சொல்கிறார்:

  படத்தை கண்டிப்பாக காசு கொடுத்து பார்த்து விட தூண்டி விட்டது உங்களது விமர்சனம் !

 3. சக்தி சொல்கிறார்:

  //நான் இந்த இடுகையை இளைஞர்களுக்காகத்தான்
  எழுதுகிறேன்.//
  என்னைப் போன்றவர்களுக்காக எழுதியதாக எண்ணிக் கொள்கிறேன். ஆனாலும் கத்தி போன்ற சமூகத்தைக் குலைக்கும் படங்களை , நீங்கள் சொன்ன இளைஞர் கூட்டத்தில் இருந்தாலும்,பார்ப்பதில்லை.

  அருமையான விளக்கம். நான் வாழும் இடத்தில் தமிழ் படங்கள் பார்க்கும் வசதி கிடையாது. அதனால் மன்னிக்கவும், இன்று இணையம் மூலம் பார்க்க வேண்டிய சூழ்நிலை.
  //அருமையாக விமரிசனம் எழுத வலைத்தளத்தில்
  நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு அந்த பக்குவம் இல்லை.//

  இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இரசனை என்பது மாறலாமே தவிர,விமர்சனங்கள் எழுத வயது தடையாக இருக்காது என்பது என் கருத்து. ஏனென்றால் நோய் வசப்பட்ட தாத்தா கூட ஜிலேபியின் ருசியை ,அதை சாப்பிடாமலே, அனுபவம் மூலம் சொல்ல முடியும். விமர்சனம் எழுதவும் வயது தடையாக இருக்காது.

  இன்றைய தமிழனிடம் ஊறிப் போனது………………
  //தங்களுக்கு தெரிந்த ஆங்கில பதங்கள் அத்தனையையும்
  பயன்படுத்தி விமரிசனம் என்று எழுதி –

  அப்படிக் குறை கூறுவதற்கென்றே
  ஊதியமும் பெற்றுக் கொள்ளும் அறிவுஜீவிகளின் விமரிசனம்
  தான் என்னை கோபம் கொள்ள வைக்கிறது.

  இவர்கள் விமரிசனம் எழுதுகிறபோது , படத்தின்
  அருமை-பெருமைகளை விட, தங்களுக்கு எந்த அளவுக்கு
  ஆங்கிலம் தெரியும் என்பதை நிரூபித்துக் கொள்வதில் தான்
  ஆர்வம் அதிகம் காட்டுவதாகத் தெரிகிறது.//

  மாற்ற முடியும் என்று தோன்றவில்லை. தலை எழுத்தா அல்லது சாபக்கேடா?

 4. S.Selvarajan சொல்கிறார்:

  1920-40 களில் உயிர்ப்புடன் செயல்பட்டு வந்த தமிழகத்தின்
  நாடகமேடை தான் படத்தின் களம்.
  நாம் படித்து மட்டுமே, கேட்டு மட்டுமே தெரிந்து கொண்ட –
  “பாய்ஸ் நாடக கம்பெனி” யில் இருப்பவர்கள் தான் இதன்
  முக்கிய கதாபாத்திரங்கள்.இந்த நாடகங்களை ஊர் ஊராகச்
  சென்று, மேடைகளில் நிகழ்த்தி,
  கலையையும் வளர்த்து, தங்கள் வயிற்றுப் பாட்டையும்
  பார்த்துக் கொண்ட இந்த நாடகக் கலைஞர்களிடையே நிலவும் –
  நடிப்பு, நடனம், பாடல், போட்டி, பொறாமை, நட்பு, காதல்
  என்று அத்தனை உணர்வுகளையும் பிரதிபலிக்கும் – கற்பனை
  கலந்த உண்மைக் கதை இது.—- இந்த பாய்ஸ் கம்பெனியின் அனைத்து தகவல்களையும் — தெளிவாக தான் அதிலிருந்த கால கட்டத்தில் நடந்த அனைத்தையும் திரு எம்.ஜி.ஆர். அவர்கள் அவருடைய ” நான் ஏன் பிறந்தேன் ” என்ற புத்தகத்தில் எழுதி இருக்கின்றார் — அதை படித்தால் அந்த கால நாடக உலகை பற்றி முழுவதும் அறியலாம் !

 5. இளந்திரையன் சொல்கிறார்:

  ஆச்சரியமாக இருக்கிறது.
  எப்போதும் கோபமாக உணர்ச்சி வசப்பட்டு பதிவுகள்
  போடும் காவிரிமைந்தனுக்குள் இப்படி ஒரு ரசனையா ?
  வாழ்க.

 6. vettippaechchu சொல்கிறார்:

  ஆச்சரியப்படத்தக்க மிகவும் போற்றுதலுக்குரிய ரசனை உங்களுடையது.

  ரசித்தேன்.

  God bless you

 7. anwar சொல்கிறார்:

  படம் பார்க்க தூண்டியது…உங்கள் விமர்சனம்…..

 8. D. Chandramouli சொல்கிறார்:

  I have been reading, in Dinamalar, a serial story “Kadhanayaginin Kadhai” by Sivaji Ganesan in which he narrates his early childhood in detail, particularly about his experience in the ‘Boys’ companies. I have also read the review of “Kaviya Thalaivan” in “The Hindu” and I share your views about the ‘excessive’ review which can demoralize the makers of the movie. The very idea of producing such a movie needs to be applauded. By the way, kudos to you for such rare and wonderful photos of SGK and KBS. My father, a great fan of Kittappa, used to sing in high pitch some of SGK’s songs. At home, I remember to have seen a very impressive photo of my uncle in full costume as that of SG Kittappa! SGK must have been a craze then!

 9. visujjm சொல்கிறார்:

  நன்று… மிக மிக நன்று 🙂

  இருந்தும் கத்தி (நான் இளம் பருவம் முதல் தல ரசிகன்) போன்ற திரைப்படம் நீர் மற்றும் விவசாயம் சார்ந்த விழிப்புணர்வை வியாபார நோக்குக்காக எடுக்கப்பட்டாலும் வருங்கால நலன் கருதி நீரின் முக்கியத்துவம் முதல் முறையாக சவாலாக விளக்கப்பட்டதே…!

  முருகதாஸ் போன்றவரும் சமூகத்துக்கு அதுவும் RockStar பித்து பிடித்த இளரத்தங்களுக்கு அவசியம் தானே………………..

  சினிமா பைத்தியம் என்பதைவிட சாகாயம் பைத்தியமே எனலாம் 🙂

  நதி நீர் இணைப்பு திட்டம் நமோ சர்க்கார் நிறைவோற்றுமா………..!

 10. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  //எல்லாரையும் போல், இந்த வசந்தபாலனும், சித்தார்த்தும்
  மசாலா படங்களை எடுத்து காசு பண்ண முடியாதா என்ன …?
  நல்ல படம் எடுக்க வேண்டும் என்று கனவு கண்டு,
  அதற்காக இரண்டு வருடங்கள் உழைத்து இந்த படத்தை
  உருவாக்கியது எதற்கு ….? அவர்களது ஆசைக்கு,
  லட்சியத்திற்கு, உழைப்பிற்கு – மக்கள் மரியாதை கொடுத்தால்
  தானே அடுத்தடுத்து நல்ல படைப்புகள் உருவாகும்…?// – தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் பார்வையிலும் தவறாமல் பட வேண்டிய வரிகள்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.