மோடிஜி சொல்வது எந்த அளவுக்கு சரி ….?

.

அஸ்ஸாம், நாகாலாந்து, வடகிழக்கு மாநிலங்களுக்கு
சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடிஜி அங்கிருந்து சில
முக்கிய -புதிய – அறிவிப்புக்களை செய்துள்ளார் –

 

modiji in kohima-nagaland

———————

– நாகாலாந்து மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் நலனுக்காக,
14 புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. இதற்காக, மத்திய அரசு 28 ஆயிரம் கோடி
ரூபாயை ஒதுக்கும்.

– இப்பகுதியில் தொலைதொடர்பு வசதியை மேம்படுத்த
மத்திய அரசு 5000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்.

– 100 ஆண்டுகளாக ரெயில்வே நிலையங்களில் ( ஸ்டேஷன்கள் )
எந்தவித சௌகரியங்களும் ஏற்படுத்தப்படவில்லை….எனவே
இவை தனியார் மயமாக்கப்பட்டு, நவீனப்படுத்தப்படும்.
ரெயில் நிலையங்கள் விமான நிலையங்கள் போல் மாற்றப்படும்.

முதல் கட்டமாக, 10 -12 ரெயில்வே ஸ்டேஷன்களில் நான்
இதைச் செய்வேன்.

————————–

சில கேள்விகள் எழுகின்றன –

28+5 = ஆக மொத்தம் 33 ஆயிரம் கோடிப் பணம் வடகிழக்கு
மாநிலங்களில் செலவழிக்கப்படும் என்கிற இந்த விஷயம்
எப்போது எடுக்கப்பட்ட முடிவு …?
இவற்றைப் பற்றி ரெயில்வே பட்ஜெட்டில்
ஏன் அறிவிக்கப்படவில்லை…?

வடகிழக்கு சுற்றுலா சென்றதும், அங்கு கிடைத்த
வரவேற்புகளைக் கண்டு உணர்ச்சி வசப்பட்டு மோடிஜி
இந்த சலுகைகளை உடனடியாக அறிவித்தார் என்றால்,
பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும்போது
இத்தகைய பெரிய அறிவிப்புகளை வெளியே செய்வது
தவறான முறை இல்லையா …?

நான்கு மாதங்களுக்கு முன்னர் தான் ரெயில்வே பட்ஜெட்
தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. அப்போது
ரெயில்வே அமைச்சர் கூறியது –

ஏற்கெனவே கடந்த பத்து ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ள
பல திட்டங்களை நிறைவேற்றவே பணம் இல்லை. காங்கிரஸ்
அரசில், நிதி ஒதுக்கீடு செய்யாமலே பல திட்டங்களை
அறிவித்து கொண்டே போனார்கள். ஆனால் பல பாதியில்
நிற்கின்றன. சில துவக்கப்படவே இல்லை. எனவே,
இப்போதைக்கு, புதிய திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்பட
மாட்டா….!!

மற்றொரு முக்கியமான விஷயம் –

இந்தியா முழுவதும் உள்ள ரெயில்வே ஸ்டேஷன்கள்
இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டவை.
அவற்றில் மேற்கொண்டு வசதிகளை செய்து தர அரசு
வழிவகைகளை யோசிக்க வேண்டும்
– நிர்வாகத்தை
சீர்செய்து முடுக்கி விட வேண்டும். பயன்படுத்தப்படாமல்
முடங்கிக் கிடக்கும் ரெயில்வே சொத்துக்களை, நிலங்களை
லாபகரமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பயணிகள் தலையில் சுமையை ஏற்றாமல், வருமானத்தை
அதிகரிக்கும் வழிவகைகளைக் கண்டு பிடிக்க வேண்டும்.

அதை விட்டு விட்டு, இத்தனை கோடி ரூபாய் பெறுமானமுள்ள
சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்ப்பது சரியான தீர்வா …?

இவற்றை பெற்றுக் கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கும்
தனிப்பட்ட பெரும் முதலாளிகள் வரிசை இப்போதே கண்ணுக்குத்
தெரிகிறதே. இது ஊழலுக்கும், தனிப்பட்ட சலுகைகளுக்கும்
வழி வகுக்காதா ….?

மிக விவரமாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் இது.
இருந்தாலும், இப்போதைக்கு சுருக்கமாகவே போகிறேன்.

விமான நிலையங்களைப் போல் -பயணிகளுக்கு சும்மாவே
வசதிகளைப் பண்ணிக்கொடுக்க அவர்கள் என்ன
பைத்தியக்காரர்களா …?
செய்யும் வசதிகளுக்கு பதிலாக
ரெயில்வே ஸ்டேஷனில் நுழைவுக் கட்டணமே 50 ரூபாய்
என்று வசூலித்தால் …..?

சாலை வசதிகளைச் செய்து கொடுத்து விட்டு toll plaza -க்கள்
செய்யும் அட்டூழியங்களைப் பார்த்துக் கொண்டு தானே
இருக்கிறோம்.

மேலும், இந்த நிலையங்களில் பணி புரியும் ஊழியர்கள்,
சிறு வியாபாரிகள் கதி எல்லாம் என்ன ஆகும் ….?

இவ்வளவு பெரிய விஷயங்களை எல்லாம் சும்மா
போகிற போக்கில் சொல்லிக்கொண்டே போவது சரியா ….?

இத்தகைய முக்கியமான முடிவுகளை எடுக்கும் முன்னர்,
இதனால் ஏற்படும் விளைவுகளை – நல்லது, கெட்டதுகளைப்பற்றி
எல்லாம் மக்கள் மன்றத்தில், பாராளுமன்றத்தில் விவாதிக்க
வேண்டியது அவசியம் இல்லையா ..? எல்லா தரப்பினரையும்
கலந்தாலோசிக்கத் தேவை இல்லையா …?

போகிற பாதை சரியானதாகத் தெரியவில்லையே…

பாஜக விற்கு தனி மெஜாரிட்டி கிடைத்தது தான்
இந்த தவறான அணுகுமுறைகளுக்கெல்லாம் அடிப்படையான
காரணமோ ….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to மோடிஜி சொல்வது எந்த அளவுக்கு சரி ….?

 1. LVISS சொல்கிறார்:

  The P M said that the funds will be allotted (in future tense ” othukkum”) . may be in the next railway budget- So far the parties have not raised any objections to these announcements —

 2. Srini சொல்கிறார்:

  adding to LVISS….. the next budget is not far… may be these are part of next budget. even during his election campaign in May, Modiji promised that the seven sisters of NE will be given importance and he even appointed separate minister for its development.

  off late KM sir BJP-ai paarkum pothu… kannadiya maathidraar… 🙂 .. power of lens gets increased automatically… its the need of the hour to privatize railways…and it is part of his election promise. people have voted for him believing that.

 3. S.Selvarajan சொல்கிறார்:

  ஒதுக்குவோம் — செய்வோம் — நடத்துவோம் என்றுதானே தேர்தல் வாக்குறிதி போல கூறுகிறார் ? இதை ஏன் பெரிசு படுத்த வேண்டும் என்கிற சந்தேகம் பலருக்கும் எழுவது இயல்பு ! ஆனால் தேர்தல் நேரத்தில் அவர் வெறும் வேட்பாளர் —- இப்போது மாபெரும் பொறுப்பில் உள்ள பிரதமர் — அதனால் அவர் சொல்லும் அனைத்தையும் வேத வாக்காக எடுத்து கொள்வார்கள் மக்கள் — என்பதை நினைவில் கொண்டு தேர்தல் நேர மாயையில் இருந்து வெளியே வந்து — திட்டங்களை அறிவிக்க வேண்டும் — என்பதே இந்நாட்டு பிரஜைகளின் ஆசை !!

 4. DrKGP சொல்கிறார்:

  Still in campaign mode

 5. சக்தி சொல்கிறார்:

  கண்களை மூடிக் கொண்டு செல்லும் மோடிஜி,ஒரு நாள் தடுக்கி விழுவார் அல்லது நாட்டை விழச் செய்வார், என்பது மட்டும் உண்மை.
  கிளீன் இந்தியா டிஜிட்டல் இந்தியா என திசை திருப்பி விட்டு,தான் செய்வது சொல்வதெல்லாம் சரியானது எனச் செல்வது அவருக்கும் நாட்டிற்கும் நல்லது அல்ல.
  **தேசிய மருந்து விலைக்கட்டுப்பாட்டை நீக்கி ஆணையத்தின் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டதால் 100க்கும் அதிகமான உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துகள் கடும் விலை உயர்வை எட்டி உள்ளது.இனி மருந்துகள் விலையை கேட்டால் பாமரனுக்கு மாரடைப்பே வந்துவிடும் .
  **வைகோ பற்றி ஹெச் ராஜா வின் கருத்து தமிழக அல்லது மோடிக்கோ தெரியாதத் அல்ல.
  **இராமரின் பிள்ளைகள் இந்திய மக்கள் என்று சொன்னது மோடிஜிக்குத் தெரியாதது அல்ல.
  **நேபாளத்தில் பல இலட்சம் பெறுமதியான சந்தண மரக்கட்டைகளை தன் சொந்தப் பணம் போல் ஒரு இந்துக் கோயிலுக்கு கொடுத்தது ஒரு நாட்டின் பிரதமர் செய்யும் வேலை அல்ல. எல்லா இனத்தவர்களையும்,மதத்தினரையும் சமமாகப் பார்ப்பதே ஒரு தலைவரின் செயல்பாடாகும்.
  இப்படி பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

  இந்த நிலையில் வரவிருக்கும் பட்ஜெட்டில் சேர்க்கவிருப்பதை எப்படி இப்போது அதுவும் ரூபாய் கணக்கில் சொல்ல முடியும்? முந்தைய பட்ஜெட்டின் பற்றாக்குறை, இனிவரப்போகும் பட்ஜெட்டின் நிலை,அதிகாரிகளின் பொருளாதார அறிக்கை எதுவுமே இல்லாது ஒரு நாட்டின் தலைவர் சொல்ல முடியுமா?

  அவர் சொல்வதை செய்வார் ,மோடிஜி கருணை காட்டுவார் என மக்களை நம்ப வைத்து, காஷ்மீர் தேர்தலை அடிப்படையாக வைத்துச் சொல்லப்படுகிறது. தன் தவறுகளை மறைக்க,முதலாளிகளின் பக்கம் அவர் ஒருதலைப்பட்சமாக சாய்வதை மறைக்க மக்களை முட்டாளாக்க ,கிற்லரின் ப்ரொபகண்டா போல் கார்பரேட் சாமிகள் போல் செயல்படுவதையே காட்டுகிறது.

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களே,

  தனியார் முதலீடு (privatisation) அல்லது
  அந்நிய முதலீடு (Foreign Direct Investment )
  சுத்தமாகக் கூடாது என்பதல்ல என் அபிப்பிராயம்.

  அதை எங்கு, எப்படி பயன்படுத்திக்கொள்வது
  என்பதில் தான் நான் வேறுபடுகிறேன்.

  இருக்கின்ற அரசாங்க சொத்துக்களை
  தனிப்பட்ட முதலாளிகளுக்கு
  தாரை வார்ப்பது ஒரு சாதனையா என்ன …?

  இன்றைய தினம் ரெயில்களின் மிக முக்கியப் பிரச்சினை
  பற்றாக்குறை. மிக அதிகமான மக்கள் கூட்டத்தை –
  தேவையை – ரெயில்வேயால் சமாளிக்க முடியவில்லை.

  இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் –

  (1) பெட்டிகள் ( shortage of carriages/coaches ) பற்றாக்குறை

  (2) பல இடங்களில் இரட்டை ரெயில் பாதைகள்
  இல்லாமை (non-availability of double tracks )

  இந்த இரண்டு தேவைகளையும் சமாளிக்க தனியார்
  முதலீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  குறைந்த பட்சம் பத்து ரெயில்வே கோச்
  தொழிற்சாலைகளையாவது தனியார் துறையில் துவக்கலாம்.
  அந்த அளவிற்கு தேவை (demand ) இருக்கிறது.

  தேவைப்படும் இடங்களில் எல்லாம் உடனடியாக
  இரட்டை ரெயில் பாதைகள் போடும் பணியிலும்
  தனியார் துறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  இதன் மூலம் நிறைய வேலை வாய்ப்புகளையும்
  உருவாக்கலாம். மக்களுக்கு வேண்டிய வசதிகளையும்
  செய்து கொடுக்கலாம்.

  நாடு முழுவதும் ரெயில்வே வசம் எக்கச்சக்கமான
  பயன்படுத்தப்படாத இடங்கள் உள்ளன. அவற்றை
  லாபகரமாகப் பயன்படுத்தலாம். (utilising railway space
  for commercial purposes )

  இந்த விஷயங்களை எல்லாம் மிகச்சிறப்பாக
  கையாளக்கூடிய ஒருவர் ரெயில்வே அமைச்சராக
  வந்திருக்கிறார். ஆனால், அவரும் மோடி பக்தர் என்பதால்
  அவரும் சுதந்திரமாகச் செயல்பட மாட்டார்.

  மோடிஜி மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை.
  ஆனால் – தவறுகள் நிகழும்போது,
  சொல்லத்தானே வேண்டி இருக்கிறது …?

  ” இடிப்பார் இல்லாத ஏமரா மன்னன்
  கெடுப்பார் இலானும் கெடும்” என்பது போல் –
  எல்லாரும் மோடிஜியை தலை மேல் தூக்கி
  வைத்துக் கொண்டு ஆடுவதால் – அவர் தன்
  இஷ்டத்திற்கு அவருக்குத் தோன்றியதை
  எல்லாம் செய்து கொண்டு போகிறார்.

  தவறுகள் நிறையவே நடக்கின்றன….
  அவற்றை சரியான முறையில்
  எடுத்துச் சொல்லத்தான் ஆளில்லை…

  ஜனநாயகத்தில் ஒரு நல்ல எதிர்க்கட்சி இருந்தால்
  என்ன செய்யுமோ, அதன் பணியைத் தான் நான்
  மிக மிகச்சிறிய அளவில் என்னளவில் செய்ய
  முயல்கிறேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • LVISS சொல்கிறார்:

   One common refrain in almost all his speeches is about the lack of cleanliness in our surroundings — Every leader/party knows about it but none thought it fit to give it a priority and make it a subject for national debate – Railways is one place where people gather in large numbers and you know the condition of the stations and the trains —

   • S.Selvarajan சொல்கிறார்:

    சுத்தம் சோறு போடும் — என்பது அனைவருக்கும் தெரியும் ! மக்கள் அதிகமாக கூடும் ரயில் நிலையங்களும் — பயணம் செய்யும் ரயில்களும் மோசமான நிலையில் இருந்தால் — அதை சீர் செய்து தரமானதாக மாற்றவே மோடியை நம்பி பிரதமராக மக்கள் தேர்ந்து எடுத்தார்கள் !! இவர் தன்னுடைய கையை கழுவி [ சுத்தமாக்கி ] கொண்டு ” தனியாரிடம் ஒப்படைப்பது ” என்று முடிவெடுத்தால் —- அரசாங்கம் எதற்கு ? என்பதுதான் கேள்வி ?

  • சக்தி சொல்கிறார்:

   ஐயா,நீங்கள் ஒரு சிறிய துருப்புச் சீட்டு. இப்படிப் பலர் உண்மைகளை சொல்ல முன்வந்தால் பலர் புரிந்து கொள்ள தெரிந்து கொள்ள முடியும்.

   தேர்தலின் போதும்,தற்போதும் கூட ஊடகங்கள் மோடிக்கு ஒரு அலையை உருவாக்கி இருக்கிறார்கள்.அந்த அலை இன்னமும் வீசிக் கொண்டிருக்கிறது.அலை ஓய எங்கோ தடை?
   ஒரு உதாரணம்…………..
   அமெரிக்காவிற்கு மோடிஜி வந்தார். இந்திய ஊடகங்கள் அவருக்கு இங்கு கொடுத்த வரவேற்பை, அள்ளிக் குவித்தன. உண்மையில் இங்கு அவருக்குக் கொடுத்த வரவேற்பை விட ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் தான் அதிகமாக இருந்தன. இதில் ஒரு சிறிய சம்பவத்தைக் கூட ஊடகங்கள் வெளியிடாது மறைத்தது ஏன்? எங்கோ ஒரு ஊடகம் சிறிய செய்தியாக இந்தியாவில் வெளியிட்டதாக தெரிகிறது.
   நடு நிலையில் சொன்னால் வரவேற்பை விட, எதிர்ப்பு இரண்டு மடங்காக இருந்தது என்பதுதான் உண்மை.

   உங்களைப் போல் ஒரு சிலராவது,சில ஊடகங்களாவது உண்மைகளை மக்கள் முன் வைக்க வேண்டும். அப்போதுதான் சனநாயகம் தலை நிமிர்ந்து நிற்கும். இல்லையேல் பெயரளவில் தான் இந்தியா ஒரு சிறந்த சனநாயக நாடு என சொல்லிக் கொள்ள முடியும்.
   ஊடகங்கள் சிந்திக்குமா?

 7. புது வசந்தம் சொல்கிறார்:

  நல்ல பதிவு, நண்பர் சக்தி மற்றும் உங்களின் நிறைவான பின்னுட்டங்கள்.பல வேஷங்கள் பல வார்த்தைகள்.

 8. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  கடைசி வரி சம்மட்டி அடி!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.