மோடிஜி ஆட்சியில் வெளிச்சத்திற்கு வராத ஒரு நல்ல செய்தி – ஆனால் ……

.

முதலில் –
அதிகம் வெளிச்சத்திற்கு வராத ஒரு நல்ல செய்தி –
பின்னர் அதன் மீது சில கருத்துக்கள்….

பாஜக செயலாளர்களில் ஒருவரும்,
மேற்கு வங்க பாஜக பொறுப்பாளருமான
திரு. சித்தார்த்நாத் சிங் தலைமையில் 14 பேர் கொண்ட
ஒரு குழுவை, கடந்த மாதம் பிரதமர் மோடிஜி சீனாவிற்கு
அனுப்பியதாகவும்,

இந்தக் குழு சுமார் 10 நாட்களுக்கு சீனாவின் பல்வேறு
இடங்களுக்குச் சென்று சுற்றிப்பார்த்து, சீன ஒத்துழைப்புடன் –
இந்திய நகரங்களில் மேற்கொள்ளக்கூடிய சில தொழில்
வாய்ப்புக்களை கண்டறிந்து வந்ததாகவும்,

அதனைத் தொடர்ந்து, சீன அதிகாரிகளைக் கொண்ட
குழு ஒன்று இந்த மாதம் இந்தியா வந்து சில நகரங்களின்
உள்கட்டமைப்பு வசதிகளை ஆராய்ந்து பார்த்து விட்டுச்
சென்றதாகவும்,

– அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத அல்லது
விளம்பரப்படுத்தப்படாத ஒரு தகவல் கூறுகிறது.

( இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டபின் அறிவிக்கலாம்
என்கிற எண்ணமும் காரணமாக இருக்கலாம்.)

india-china-1

இதன் தொடர்ச்சியாக, இந்திய நகரங்கள் சிலவும்,
சீன நகரங்கள் சிலவும், தொழில் முறையில் கூட்டமைப்புகளை
ஏற்படுத்திக் கொண்டு, இந்தியாவில் சில உற்பத்திக் கூடங்களை
உருவாக்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்
என்று தெரிகிறது.

முழு விவரங்கள் வெளிவராத நிலையில் –
இந்தியாவில் சீன முதலீட்டைப் பயன்படுத்தி,
வேலை வாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய ஒரு முயற்சி இது
என்று எடுத்துக் கொள்ளலாம்.

அந்த வகையில் இது – நிச்சயமாக
வரவேற்கத்தக்க ஒரு முயற்சியே…!

ஆனால் …..
இது தொடர்பாக இன்னும் சில கருத்துக்களையும்
முன்வைக்க விரும்புகிறேன்.

திரு.சித்தார்த் நாத் சிங் மத்திய அரசிலோ, எந்த மாநில
அரசிலுமோ – எந்த வித பதவியிலும் இல்லாதவர்.
அவர் பாஜக தலைவர்களில் ஒருவர்.
அவர் தலைமையில் சீனா சென்ற குழுவில் இருந்தவர்கள்
அனைவரும், பல்வேறு மாநிலங்களில் பாரதீய ஜனதா
கட்சியில் முக்கிய பொறுப்புக்களை வகிப்பவர்கள்
என்றும்
யாரும் அரசில் பதவி வகிப்பவர்கள் அல்ல என்றும் தெரிகிறது.

ஆனால்,முற்றிலும் பாஜக வைச் சேர்ந்த,
அதாவது மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களைக்
கொண்ட ஒரு பெரிய குழுவை மத்திய அரசின் ஏற்பாட்டில்,
பத்து நாட்களுக்கு சீனாவில் சுற்றுப்பயணம் செய்ய வைப்பதும்,
( முழு செலவையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது
என்றே தெரிகிறது – உறுதி செய்ய முடியவில்லை…),

அந்த குழு அளிக்கும் ஆலோசனைகளின் பேரில்,
பல்வேறு மாநிலங்களில்
முதலீடு மற்றும் வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பங்களை
ஏற்படுத்திக் கொடுப்பது என்றும் முடிவு செய்வது
ஒருதலைப்பட்சமாக முடியலாம்.

இந்த முயற்சிகளால் பாஜக ஆளும் மாநிலங்கள் தான்
அதிகமாக பலன் பெறும் என்பது யாரும் சொல்லாமலே
புரிந்துக் கொள்ளக்கூடிய விஷயம் தான்.

இத்தகைய ஒரு நிலை உருவாவது சரி இல்லை.
மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானது.
அது எடுக்கும் முயற்சிகள் அனைத்து மாநிலங்களுக்கும்
பொதுவாக நியாயமான முடிவுகளாக இருக்க வேண்டும்.

இல்லையேல், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஆதரவாக
மட்டுமே மத்திய அரசு செயல்படுகிறது என்கிற ஒரு
அபிப்பிராயத்தை அது ஏற்படுத்தி விடும்.

இத்தகைய ஒரு நிலையை –

அகில இந்திய அளவில் தொழில் கூட்டமைப்புகளைச் சேர்ந்த
(Confederation of Indian Industries or Chamber of Commerce )
பிரதிநிதிகள் சிலரை உள்ளடக்கி மத்திய அமைச்சர் ஒருவரின்
தலைமையிலான ஒரு குழுவை அனுப்பி இருந்தால் –

அல்லது –

மற்ற கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய
ஒரு குழுவை அனுப்பி இருந்தால் – விவாதங்களிலும்,
அதன் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளிலும்
மற்ற கட்சிகளையும் ஈடுபடுத்தி இருந்தால் –

– தவிர்த்திருக்கலாம்.

இப்போது – முதலீடு வாய்ப்புகள் கிடைக்காத மாநிலங்கள்,
பாரபட்சம் காட்டுவதாக மத்திய அரசைக் குறை கூறுவதை
தவிர்க்க முடியாது…..

குறைந்த பட்சம் – இந்த நிலையிலாவது, அதாவது
இன்னமும் ஆலோசனைகள் முடிந்து, இறுதி முடிவுகள்
எடுத்து விடவில்லை என்கிற நிலையிலாவது –

பாஜக ஆளும் மாநிலங்கள், மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்கள்
என்று வேற்றுமை பாராட்டாமல், முதலீடு மற்றும்
வேலை வாய்ப்புகள் குறித்த நியாயமான, ஒருதலைப்பட்சமற்ற
முடிவுகளை மத்திய அரசு எடுக்க வேண்டியது அவசியம்.

அத்தகைய முடிவுகள் தான் மத்திய அரசின் மீது அனைத்து
மாநில மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to மோடிஜி ஆட்சியில் வெளிச்சத்திற்கு வராத ஒரு நல்ல செய்தி – ஆனால் ……

 1. R.Ramachandran சொல்கிறார்:

  Sir,

  As you say, some experts from CII accompanied by
  some Officers from the Industry Ministry with a
  Minister as Head could have been sent. Even now
  it is not late. Atleast before decision making,
  suggestions should be made transparent.
  I have not seen this news anywhere. Why there is
  so much of secrecy about it ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி கோபி ரமேஷ்.

   நம் வலைத்தள நண்பர்கள் முக்கியமான விஷயங்கள் எங்கே
   இருந்தாலும், கொண்டு வந்து கொடுத்து அப்டேட் செய்து
   விடுகிறீர்கள். அது தான் இங்கே விசேஷம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. DrKGP சொல்கிறார்:

  Let us affectionately remember and pay eloquent tributes to one of our
  most compassionate legal luminaries that we ever had – Justice V R Krishna Iyer.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Yes Dr.KGP.

   ——————————————————-

   “விமரிசனம்” வலைத்தள நண்பர்கள் அனைவரின்
   சார்பாகவும், மனித நேயம் செழிக்க, தன் வாழ்நாள்
   முழுவதும் குரல் கொடுத்த –
   ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் – அவர்களின்
   மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத்
   தெரிவித்துக் கொள்வோம்.

   ——————————————————–

   -காவிரிமைந்தன்

 3. S.Selvarajan சொல்கிறார்:

  “தேய்பிறைத் தொழில் துறைகள்’ என்று சீனாவால் புறக்கணிக்கப்படும், தவிர்க்கப்படும் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் அடைக்கலம் தேடக்கூடும் என்று தெரிகிறது.

  சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடுகளில் ஒன்றான “க்ளோபல் டைம்ஸ்’ என்கிற தினசரியில் வெளிவந்திருக்கும் கட்டுரையில் இதுபற்றிய குறிப்பு காணப்படுகிறது. “இந்தியாவின் நம்பிக்கை சீனாவின் தேய்பிறைத் தொழில் நிறுவனங்களில் இருக்கிறது ” ——- மேலும் சீன அதிபரின் சமீபத்திய இந்திய விஜயத்தின்போது, சென்னைக்கும் தில்லிக்கும் இடையே 3,200 கோடி டாலர் முதலீட்டில் 1,754 கி.மீ. தொலைவுக்கான அதிவிரைவு புல்லட் ரயில் திட்டத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. சீன ரயில்வே அதிவேகமானது என்பது மட்டும்தான் நமக்குத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மிகவும் பாதுகாப்பில்லாத ரயில்வே சீனாவில் இயங்குகிறது என்பதை அங்கே அடிக்கடி நடக்கும் விபத்துகள் வெளிப்படுத்துகின்றன. ஜப்பானும், பிரான்ஸூம்தான் விரைவு ரயில் தயாரிப்பு, போக்குவரத்தில் முன்னணி வகிக்கின்றனவே தவிர சீனாவல்ல. கடந்த மாதம் மெக்சிகோ சீனாவுடன் விரைவு ரயிலுக்காகச் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தை, பாதுகாப்புக் காரணங்களுக்காக, ரத்து செய்திருக்கிறது என்பதை இந்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் ! என்றும் இன்னும்பல விஷயங்களையும் தினமணியில் ” அதிவேகம் விவேகமல்ல ” என்ற தலைப்பில் தலையங்கம் வெளிவந்துள்ளது !! எதைத்தான் திரு கோபி ரமேஷ் மேற்கோள் காட்டியுள்ளார் ! எந்த எந்த நாட்டில் இது போல உறி மூடுகின்ற தொழில்களை இந்தியாவுக்கு கொண்டு வருதில் என்ன பயன் ஏறுக்க முடியும் ? தூய்மை இந்தியா என்பதை — உலகின் குப்பை கொட்டும் இடமாக மாற்றாமல் இருந்தால் எல்லோருக்கும் — நல்லது ? திரு.கா.மை. வெளியிட்டுள்ள சீனாவின் ஒரு கம்பீர புகைப்படம் —- மயக்குகிறது !!!

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  மேலே இடுகையில் பார்க்கவும் –

  //- அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத அல்லது
  விளம்பரப்படுத்தப்படாத ஒரு தகவல் கூறுகிறது.
  ( இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டபின் அறிவிக்கலாம்
  என்கிற எண்ணமும் காரணமாக இருக்கலாம்.)//

  — முடிவெடுக்கும் முன்னரே செய்திகள் வெளியானால் –
  இதைப் போன்ற விமரிசனங்கள், விவாதங்கள்
  எல்லாம் தலையெடுக்கும் என்று தான் “ரகசியம்”
  காக்கிறார்கள் போலிருக்கிறது.

  என்னடா இது – விளம்பரமே இல்லாமல் காரியம்
  வேகமாக நடக்கிறதே, ஒரு வேளை போட்டியைத்
  தவிர்க்கவோ என்று தான் நானும் நினைத்தேன்.

  தினமணி தலையங்கம் கூறுகிற செய்தி வேறாக இருக்கிறதே …!

  நிச்சயமாக இது முடிவெடுக்கப்படும் முன்னரே
  விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் தான்….

  இதில் கூட எதிர்க்கட்சிகள் தூங்குகின்றன பாருங்கள்…

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்-

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.