சுப்ரமணிய சுவாமியே – அற்பப் பதர்கள் நாங்கள் – உமை மறந்தோம்…..!!!!


வைகோ கேட்டாஹ ….
பழ.நெடுமாறன் கேட்டாஹ …
கேப்டன் கேட்டாஹ ….
தமிழ் நாடு சட்டமன்றத்துல எல்லாருமா கேட்டாஹ….
பொன். ரா. கேட்டாஹ …
இசை அம்மையார் கேட்டாஹ …..
யார் கேட்டாலும் கொடுக்கல்லையே ….!!!

சுப்ரமணிய சுவாமி கேட்டாஹ …. ஒடனே வருதே …!!!

அற்பப் பதர்கள் நாம… யாரைக் கேட்டா காரியம் நடக்கும்னு
நமக்குத் தெரியல்லையே…
மகேந்திரகிரி விஞ்ஞானிஹ சுப்ரமணிய சுவாமிய
பாத்து கேட்டாஹ …கரீக்டா வருதே …!!!

இன்றைய தினமலர் சேதிய பாருங்க ……

dr.swamy dinamalar news

பின் குறிப்பு –

நான் மத்திய அரசுப் பணியில் இருந்தபோது சில வருடங்கள்
டிபிஸி ( Departmental Promotion Committee ) தொடர்பான
வேலைகளுக்கு பொறுப்பாளராக இருந்தேன். இலாகா
சம்பந்தப்பட்ட பதவி உயர்வு, மாற்றல் உத்திரவுகள்,
( transfer, promotion ) போன்றவைகளை கவனிக்கும் பிரிவு அது.

அங்கு என்ன நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்ள
அனைவருமே ஆவலாக இருப்பார்கள். எங்கள் பிரிவில்
ஒரு பியூன் இருந்தார். மிக நேர்மையானவர் தான் – ஆனால்,
அவருக்கு வெளியில் மிகுந்த அழுத்தம் கொடுப்பார்கள்.
அவரைப் பிடித்தால் உள்ளே நடக்கும் விஷயங்கள் தெரிய வரும்
என்பதால் அவர் பின்னாலேயே அலைந்து கொண்டிருப்பார்கள்.

அவர் ரெண்டுங்கெட்டானாக சொல்லவும் முடியாமல்,
சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்.

அவர் நிலை எனக்கு நன்கு தெரியும். எனவே நானே அவரைக்
கூப்பிட்டு, வெளிப்படையாகப் பேசி அவருக்கு ஒரு சலுகை
கொடுத்தேன். நான் சொல்கிற வரையில் அவருக்கு என்ன
தெரிய வந்தாலும் ரகசியம் காக்க வேண்டும்.

அதற்கு பிரதியாக, எப்போதெல்லாம்
முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுகின்றனவோ –
அதை வெளிப்படையாக அறிவிப்பதற்கு ஒரு மணி நேரம்
முன்னால்,( before publicly announcing thro orders /
notifications ) நானே அவருக்கு சொல்லி விடுவேன். அவர்
யாருக்கு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.

அவர் வெளியில்- தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் சொல்லி
ஒரு மணி நேரம் கழித்து உத்திரவுகள் வெளியாகும்போது,
அவருக்கு பரம சந்தோஷம்.

அது போல், பிரதமரும், முடிவுகள் எடுக்கப்பட்ட பிறகு,
அதை வெளிப்படையாக அறிவிக்கும் முன்னர் முதலில்
சு.சுவாமிக்கு சொல்லி விடுகிறாரோ ….!!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to சுப்ரமணிய சுவாமியே – அற்பப் பதர்கள் நாங்கள் – உமை மறந்தோம்…..!!!!

 1. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி,
  நீங்களும் பிரதமரும் ஒரே தட்டில் இருக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்வதா?
  அல்லது
  சுவாமியும் பியூனும் ஒரே தட்டில் என்று சொல்கிறீர்களா?

  🙂 🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அய்யா சாமி todayandme,

   இந்த வம்பு தானே வேண்டாமென்கிறது….

   people placed …
   in similar position – !!! – அத்தோடு விடுங்கள்…!

   இது கூட நம்முடைய யூகம் தான்.
   உண்மை நிலவரம் யாருக்குத் தெரியும் …!

   -அவர்களுக்குள் என்னென்ன
   உடன்படிக்கைகள் இருக்கின்றனவோ …
   இன்னும் யார் யாரை
   கவிழ்க்க வேண்டுமோ / மாட்டி விட வேண்டுமோ… !!!
   They only know…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. Srini சொல்கிறார்:

  KM Sir,
  neengal oru valaithala Modi. Vaazhthukkal !! 🙂

  regards
  Srini

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஸ்ரீநி,

   நான் எழுதும்போது, உதாரணங்கள் தரும்போது –
   இன்னும் ஜாக்கிரதையாக
   இருக்க வேண்டும் என்பதையே இந்த இடுகை
   உணர்த்துகிறது ……… !!!

   மோடி என்றால் சந்தோஷப்படுவதா அல்லது
   வருத்தப்படுவதா – என்பதை அறிய இன்னும்
   கொஞ்ச காலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்….. !!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    கா.மை.ஜி,
    //உதாரணங்கள் தரும்போது –
    இன்னும் ஜாக்கிரதையாக
    இருக்க வேண்டும்//

    இதைத்தான் எதிர்பார்த்தேன்.
    நன்றி.

 3. R.Ramachandran சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  நீங்கள் எழுதிய “ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு அதிர்ச்சித்
  தகவல்” கொஞ்சம் மாற்றங்களுடன் விகடன்.காம் தளத்தில்
  “காங்கிரஸுக்கு அம்பானி… மோடிக்கு அடானி: அட்ரா சக்க கூட்டணி!”
  என்கிற தலைப்பில் டிசம்பர் 2 தேதி -அன்று வெளிவந்திருக்கிறது.
  பார்க்கவும்.

  http://news.vikatan.com/article.php?module=news&aid=35607&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி ராமச்சந்திரன்.

   நான் எழுதியது அல்ல அது.
   சில கருத்துக்கள் ஒத்துப் போகின்றன -அவ்வளவே.
   செய்தி பொதுவானது தானே … யாரும் இது போன்ற
   கட்டுரைகளை எழுதக் கூடும்.

   மற்றபடி, நம் கருத்துக்களை
   பெரிய செய்தித்தளங்களும் கூட
   ஏற்றுக் கொள்கின்றன என்பதில் மகிழ்ச்சியே.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • ராமச்சந்திரசேகரன் சொல்கிறார்:

   சிறிது மாற்றம்.அதாவது மோடிக்கு அடானிமற்றும்அம்பானியும் .அட்ராசக்க கூட்டணி அடித்தது காங்கிரசின் தலையில்ஆணி .

 4. Unmai சொல்கிறார்:

  I am not sure how this will work out from Kulasekarapatnam since there is a country in close proximity.
  https://www.google.com/maps/place/Kulasekharapatnam,+Tamil+Nadu,+India/@9.4267659,79.4527578,8z/data=!4m2!3m1!1s0x3b0384775f9bf745:0x45f4620c8d1a751d?hl=en

 5. R.Ramachandran சொல்கிறார்:

  Mr.Unmai

  About who’s interest you are worried …
  India or Srilanka …?

 6. வல்லம் தமிழ் சொல்கிறார்:

  தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜகவை கொண்டு வர வேண்டும் என்று அசைன்மெண்ட் சு.சாமிக்கு தரப்பட்டிருப்பதாக உணர்கிறேன். அது கட்டாயம் முடியாது, முடியாமல் போகும் போது பாஜகவே இவரை கழுத்தைப்பிடித்து வெளியில் தள்ளிவிடும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.