“துக்ளக்” கார்ட்டூன் கிளப்பும் “டவுட்டு”…..

.

“டவுட்டு தனபாலு” என்பது தினமலர் நாளிதழில் தினமும்
செய்திகள் எதையாவது கிண்டல் செய்து வரும் ஒரு பகுதி.
அதிசயமாக – இந்த வார துக்ளக் இதழில் தினமலர் ரகத்தில்
ஒரு “டவுட்டு” கார்ட்டூன் வந்திருக்கிறது.

ராஜபக்சேயை கிண்டல் செய்வது “துக்ளக்” கொள்கைக்கு
விரோதமானது – இருந்தும் இப்படி ஒரு கார்ட்டூன்
வந்திருப்பது வித்தியாசமாகவே இருக்கிறது.

thuglaq meenavar viduthalai cartoon

பாஜக விற்கும், அதிமுக விற்கும் இது சம்பந்தமாக
நடக்கும் போட்டியை கிண்டல் செய்வதற்காக போடப்பட்டாலும் –
இந்த கார்ட்டூன் நிஜமாகவே ஒரு சீரியஸான கேள்வியை
முன்வைக்கிறது…

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள ஒப்பந்தங்கள்
கைதிகளை பரிவர்த்தனை செய்து கொள்ள மட்டுமே வழி
வகுக்கின்றன. விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய அல்ல.
எனவே, மீனவர்கள் தண்டனை ரத்து செய்யப்பட
எந்த ஒப்பந்தமும் காரணம் அல்ல.

இந்த 5 மீனவர்களைப் பொருத்த வரையில், முதலில் அவர்கள்
மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டு,
கொழும்பு உயர்நீதிமன்றத்தால் “மரண தண்டனை” விதிக்கப்
பெற்றார்கள். பின்னர் இலங்கை உச்சநீதிமன்றத்தில் இந்த
தண்டனையை எதிர்த்து “தாங்கள் நிரபராதிகள் – தங்கள் மீது
போடப்பட்டது பொய் வழக்கு” என்று கூறித்தான் அவர்கள்
தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது.

இலங்கை அரசிடமிருந்து, அவர்கள் அப்பீலை வாபஸ்
பெற்றால், அவர்கள் தண்டனையை ரத்து செய்ய ஜனாதிபதி
ராஜபக்சே இணங்கி இருக்கிறார் என்று கூறப்பட்டு,
அதன் பேரில் தான் அப்பீல் வாபஸ் வாங்கப்பட்டது.

இந்த கார்ட்டூன் நம்மால் மறக்கப்பட்டு விட்ட
மிக முக்கியமான ஒரு கேள்வியை எழுப்புகிறது….!

அந்த 5 மீனவர்கள் தவறை ஒப்புக்கொண்டு
மன்னிப்புக் கேட்கவில்லை ….”கருணை” காட்டவும்
வேண்டவில்லை. தங்கள் மீது போடப்பட்டது “பொய் வழக்கு”
என்று தான் கூறினார்கள்.

இந்த நிலையில் ஜனாதிபதி ராஜ்பக்சே தானாகவே முன்வந்து
– 5 மீனவர்களின் தண்டனையை ரத்து செய்ததன் காரணம் –

“போடப்பட்டது பொய் வழக்கு” என்கிற உண்மையை
ஏற்றுக் கொண்டதால் தானா …?

—————
பின் குறிப்பு –
(இடுகையை எழுதிய பின் கிடைத்த தகவலால்
சேர்க்கப்பட்டது) –

இந்த ஆசாமி “இந்து” மதத்தைச் சேர்ந்தவர்
அல்ல. திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள் மீது
பெரும் பக்தி வைத்திருப்பதற்கும் வாய்ப்பில்லை.
பின் அடிக்கடி திருப்பதி வந்து செல்வது எதற்காக ?
தமிழ்நாட்டினரை வெறியேற்றுவதற்காகவா ..?

கபடி விளையாடுவது போல், அவ்வப்போது வந்து
தமிழ் மண்ணை (அரக்கோணம்) மிதித்து விட்டுத்தான்
போகிறேன் – உங்களால் என்ன செய்ய முடியும் என்று
சவாலா …?

வைகோ முன்பு “போபால்” வரை போய்
எதிர்ப்பைத் தெரிவித்தார்.

“திருப்பதி” – இதோ, நம் வாசலில் தான் இருக்கிறது.
நினைத்தால் போய் விடலாம்.
தமிழ் இளைஞர்கள் கணிசமான எண்ணிக்கையில்
திருப்பதி சென்று இந்த கொலைகாரனுக்கு
நல்ல “வரவேற்பு” கொடுத்து விட்டு, அப்படியே
“சாமி” தரிசனமும் செய்து விட்டு வர வேண்டும்….!!!

அப்போதாவது – அடுத்த முறை வர நினைத்தால் –
கொஞ்சம் யோசிக்கத் தோன்றும் ….!!!


Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to “துக்ளக்” கார்ட்டூன் கிளப்பும் “டவுட்டு”…..

 1. சக்தி சொல்கிறார்:

  வரும் 9 ஆம் தேதி திருப்பதி வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக கருப்புக் கொடி அறப்போர் நடைபெறும்.
  தமிழ் இனப் படுகொலை நடத்திய கொலைகாரன் ராஜபக்சே டிசம்பர் 9 ஆம் தேதி திருப்பதிக்கு வந்து, 10 ஆம் தேதி காலையில் வெங்கடாசலபதி ஆலயத்தில் தரிசனம் செய்யப் போகிறானாம்.

  பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள் ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, வான்வெளிக் குண்டுகளையும் தடை செய்யப்பட்ட குண்டுகளையும் வீசியும், நவீன ஆயுதங்களாலும் கொடூரத் தாக்குதல் நடத்தியும், கோரப் படுகொலைகளைச் செய்த மாபாவியுடன் நரேந்திர மோடியின் இந்திய அரசு கொஞ்சிக் குலாவுகிறது. மத்திய அரசு கொடுக்கின்ற ஊக்கத்தினால்தான் இப்போது திருப்பதிக்கு வரப் போகிறான்.

  1750 இந்துக் கோயில்களை இலங்கைத் தீவில் தமிழர் தாயகத்தில் உடைத்து நொறுக்கிய காட்டுமிராண்டி வேலை செய்த கூட்டத்தின் தலைவன்தான் மகிந்த ராஜபக்சே. தமிழ் இனத்தின் அடையாளமே அந்தத் தீவில் இல்லாமல் செய்துவிட அனைத்து அக்கிரமங்களையும் செய்கின்ற ராஜபக்சே, அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டும் என்று சில சோதிடர்கள் கூறிய யோசனையின் பேரில் இங்கு வருகிறான். ஏழுமலையானை வழிபடும் இந்துக்களையும் தமிழர்களையும் அங்கே அழிக்கிறான். இங்கே வெங்கடாசலபதி தரிசனத்திற்கும் வருகிறான்.

  கட்சித் தொண்டர்களும், தமிழ் உணர்வாளர்களும் இந்த அறப்போரில் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன்……………….இது வைகோ.

  நம்மில் பலரும் -தமிழக மக்களும் -செய்தித் தலைப்பை மட்டுமே படித்து விட்டு, உண்மைகளை அறியாது ,அதை ஏற்றுக் கொண்டு அதன் பக்கம்,செல்கிறார்கள். இது அரசியல்வாதிகளுக்கும், சாமியார்களுக்கும்,சினிமா நடிகர்களுக்கும் வசதியாகப் போய்விட்டது.
  பசுத்தோலின் உள்ளே யார் இருக்கிறார்கள்,உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் தான் விடிவு பிறக்கும்…………..இது சக்தி.

 2. R.Ramachandran சொல்கிறார்:

  கொள்கைப்படியே பார்த்தாலும் கூட,
  இந்து கோவில்களை இடித்தவனை,
  இந்துக்களை லட்சக்கணக்கில் கொன்றவனை
  பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள்
  எப்படி வரவேற்கின்றன ?
  எதிர்ப்பு காட்டுவதில் அவை தானே முன்னணியில்
  நிற்க வேண்டும் ? பாஜக தலைவர்கள் இதற்கு
  என்ன “வியாக்கியானம்” கொடுக்கப் போகிறார்கள் ?

  • today.and.me சொல்கிறார்:

   நண்பரே,
   நீங்கள் தமிழக பாஜக – ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இதற்கு
   என்ன “வியாக்கியானம்” கொடுக்கப் போகிறார்கள் ? என்று கேட்டிருக்கவேண்டும். ஏனென்றால் மற்ற பாஜக தலைகளைப் பொறுத்தவரை தமிழரல்லாத இந்துக்கள் தான் இந்துக்களாகவே இருக்கமுடியும். நம்மவர்களெல்லாம் இந்துவாக இருந்தாலும், கிறித்தவராக இருந்தாலும், இசுலாமியாராக இருந்தாலும் தமிழர்கள் – அவ்வளவுதான்.

 3. today.and.me சொல்கிறார்:

  //– 5 மீனவர்களின் தண்டனையை ரத்து செய்ததன் காரணம் -//
  நடிகரின் தங்கை திருமணத்தை கொண்டாடும் பொருட்டு இவர்கள் ஐவர் விடுதலை.

  //..தமிழ்நாட்டினரை வெறியேற்றுவதற்காகவா..//
  தமிழர்களுக்கு வெறியெல்லாம் ஏறாது. போனால்போகட்டும் சாமியக் கும்பிடத்தானே வர்றார் என்பார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெசோவிலிருந்து ஒரு போராட்டம்,,, அட்லீஸ்ட் ஒரு அறிக்கைக்குக்கூட பஞ்சமாகிவிட்டது-???

  தெரிந்துகொள்வதற்காகத் தான் கேட்கிறேன், மாநில மக்களின் உணர்வுகளை மதிக்காத மத்திய அரசாங்கம் மாநிலத்தில் ஆட்சி அமைக்க எவ்வாறு (முயலவாவது) முடியும்? அவர்களின் தமிழ்த் தலைவர்கள் இதற்கு எந்த நடிகரை பூசிமெழுகக் கூப்பிடப் போகிறார்கள்?

 4. எழில் சொல்கிறார்:

  கடந்த பத்து இருபது வருடங்களாக இலங்கையை ஆள்பவர்கள் செய்த அநியாயத்தை முதலாக கொண்டு ஒரு கூட்டம் நன்கு பிழைப்பு நடத்தி வருகிறது. அந்த கூட்டம் முடிவின் படி தான் ஆட்சியில் உள்ளவர்கள் முக்கிய முடிவு எடுக்கிறார்கள். இந்த திருப்பதி வருகையும் அதில் ஒரு பகுதி தான். யார் அந்த கூட்டம் என்கிறீர்களா… முக்காலமும் அறிந்த, இங்கிருந்து பிஸ்னஸ் கிளாசில் இலங்கை செல்லும் ஜோசியர்கள் தான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாஜக தலைமையும், மத்திய அரசும்
   இலங்கையை ஏன் தாஜா செய்கின்றன ?

   தமிழ்நாட்டின் தீவிர எதிர்ப்பை சட்டை செய்யாமல்,
   தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக –
   ராஜபக்சேயை விழுந்து விழுந்து வரவேற்று
   உபசரிப்பது ஏன் ?

   அவர்களையும் அறியாமல் உண்மை
   வெளிவந்து விட்டது. இன்றைய தினமலரில் இருந்து
   கூட்டி, கழித்து, வடிகட்டி -கிடைத்த செய்தி –

   ————————————

   பாஜக முயற்சியால் சென்னையில், இந்திய
   வெளியுறவுத்துறை அதிகாரிகள், தமிழக மீனவர்கள்
   மற்றும் கொழும்புவில் இருந்து வந்த இலங்கை அதிகாரிகள்,
   அடங்கிய ஒரு ரகசிய கூட்டம் நேற்று( ஞாயிறு அன்று ..!)
   சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தில் நடைபெற்றிருக்கிறது.

   இந்த கூட்டத்தில் தமிழக மீனவர் பிரச்சினையோடு
   மற்றுமொரு அதிமுக்கிய பிரச்சினையும்
   விவாதிக்கப்படிருக்கிறது.

   அது என்ன …?

   இலங்கையில் தொழில் செய்யும் இந்திய தொழில்
   அதிபர்களையும் அழைத்துப் பேசி, அவர்கள்
   பிரச்சினைகளை களையவும் பிரதமர் மோடி,
   ராஜபக்சேயை கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கும்
   ராஜபக்சே ஒப்புக்கொண்டுள்ளார்.

   எனவே, அடுத்தடுத்து பல ரகசிய சந்திப்புக்கான
   ஏற்பாடுகளை, இரு நாட்டு வெளியுறவுத்துறை
   அதிகாரிகளும் செய்து வருகின்றனர்.

   ————————————————

   எனவே, ராஜபக்சேவுக்கு வரவேற்பு கொடுப்பது –
   இலங்கையில் தொழில் முதலீடுகள் செய்திருக்கும்
   இந்திய தொழிலதிபர்களின் நலனைக் காக்கவே –
   என்பது வெட்ட வெளிச்சமாகிறது….
   (எனக்குத் தெரிந்து டாட்டா வின் ஒரு பெரிய
   ப்ராஜக்ட் கொழும்புவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
   பட்டியலில் இன்னும் யார் யாரோ – தெரியவில்லை.)

   —————
   நண்பர் எழில் – உங்களுக்கு எதாவது மேல் விவரங்கள்
   தெரிந்தால் சொல்லுங்களேன்…
   மக்கள் உண்மையை அறியட்டும்…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    //பட்டியலில் இன்னும் யார் யாரோ//

    தேடினால் இன்னும் நிறையக் கிடைக்கும். சாம்பிளுக்கு சில.

    http://www.hcicolombo.org/page/display/52

    Several Indian companies have planned investments in Sri Lanka in the coming years, including ITC Ltd, Tata Housing, Shree Renuka Sugars, Dabur India Ltd, etc. Indian companies like Godrej, Bajaj, Tata & Dabur are a household name in Sri Lanka. Likewise, investments by Sri Lankan companies in India too are surging, as Sri Lankan businesses take advantage of India’s dynamic economy and large market.

    MAIN INDIAN INVESTMENTS ARE: –
    1) Lanka IOC PLC
    2) Bharti Airtel Lanka
    3) Piramal Glass Ceylon
    4) Taj Hotels
    5) UltraTech Cement
    6) J.V.Gokal Ceylon Private Limited
    7) Tata Communications Lanka Limited
    8) Banks from India
    9) Asian Paints (Lanka) Limited
    10) CEAT -Kelani Associated Holdings (Pvt) Ltd
    11) MphasiS Sri Lanka
    12) Lanka Ashok Leyland
    13) L&T Infrastructure Development Projects´ project in Colombo
    14) Dabur Lanka Pvt. Ltd
    15) Tata Housing
    16) Welcome Hotels Lanka Private Limited
    17) Indocean Developers Private Limited
    18) Shree Renuka Sugars Ltd
    (19) Krrish Group
    (20) Trimax data centre in Hambantota

   • எழில் சொல்கிறார்:

    ஐயா, இதற்கான காரணங்களாக தொழில் முதலீடுகளையும், நாம் நல்ல உறவை பேணாவிடில் சீனா உள்ளே வந்துவிடுவான் போன்றவை தான் பொதுவாக கூறப்படுகின்றன. ஆனால் இவை மட்டுமே காரணங்கள் அல்ல என்பது உங்களுக்கு தெரியாமல் இல்லை. சிக்கல் என்னவென்றால் ஆதாரங்கள் முழுமையாக இல்லாமல் எதையும் உங்களை போலவே நானும் எழுத விரும்பவில்லை. இணையத்தில் ஆங்காங்கே புள்ளிகள் இருக்கின்றன. அவற்றை வைத்து நேர்கோடு வரையும் முயற்சியில் இருக்கிறேன். அப்படி வரைந்து எனக்கு திருப்தி ஏற்பட்டால் நிச்சயமாக எழுதுகிறேன்.

    உங்கள் ஏனைய கேள்விகளுக்கு, நண்பர்கள் தேவையான விபரங்களை தந்திருக்கிறார்கள். நன்றி.

    மேலும் புத்தரை மகா விஷ்ணுவின் ஒரு அவதாரமாகவே பௌத்த சிங்களவர் பார்கின்றனர். ஆனால் இலங்கை நாட்டுக்கு நன்மை வேண்டி பிரார்த்தனை செய்ய அவர் இங்கு வரவில்லை. இரண்டு மணி நேரத்திற்கு முன் வரை தனது நம்பிக்கைக்குரிய பிரதமராக இருந்தவர் திடீரென்று எதித்து நிற்கும் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளராகி போனது அவரை கிலி கொள்ள செய்திருக்கிறது. எனவே வெற்றி பெறுவதற்கு இன்னபிற பரிகாரங்களை செய்து ஏழுமலையானை கூட்டணி சேர்க்க வருகிறார். பார்க்கலாம்.

 5. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  தாங்கள் கூறுவது 100/100 உண்மை காவிரிமைந்தன் ஐயா! புத்த சமயத்தைச் சார்ந்தவன் எதற்காக அடிக்கடி திருப்பதிக்கு வர வேண்டும்? முதன்முறை வரும்பொழுதே எனக்கு இது தோன்றியது. தாங்கள் எழுதியே விட்டீர்கள்! நன்றி!

 6. yogeswaran சொல்கிறார்:

  Dear Sirs,

  Most of the Sri lankan Budhists worship hindu gods.

  Murugan is the personal deity for many.

  i do not know why our people are so ignorant in history.

  Kathirkamam murugan kovil is managed and poojahs are done by sinhalese only.

  yogi

 7. ns raman சொல்கிறார்:

  Like any other Tamil magazines this blog also providing masala stories from various paper and giving his own masala. Democracy everyone’s expression of opinion is allowed, but it should not be misused like this blog. The joke is quoting tuglak magazine and projecting like a intellectual !!n

  • today.and.me சொல்கிறார்:

   நண்பர் ராமன்,
   மசாலா கதைகளைப் படிக்க வந்ததற்காக உங்களை வரவேற்கிறேன். நீங்கள் எழுதியுள்ளதைப் பார்த்தால் நீங்கள் சமையலில் நிபுணர் போலிருக்கிறது. மெயின் கோர்ஸ் உடன் என்னென்ன மசாலாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று விவரமாக விளக்கினீர்கள் என்றால் நாங்களெல்லாம் புரிந்துகொள்ள முடியும்.

   தனிமனி கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம்தான் ஜனநாயத்தின் விளைவு என்றால் நீங்கள் இந்த ப்ளாக்கில் வந்து கருத்துச் சொல்லியிருப்பதுபோல மற்ற பத்திரிகைகளில் கருத்துச்சொல்ல முடியுமா? சொன்னால் அவர்கள் வெளியிட்டுவிடுவார்களா? அல்லது உங்களை வெளியே விட்டுவிடுவார்களா?

   // it should not be misused like this blog//
   கா.மை. எழுதியிருப்பதில் தவறு கண்டால் நீங்கள் உங்கள் கருத்தை தெளிவாக விளக்கலாமே. ஏன் காரணத்தைச் சொல்லாமல் கண்டிக்கவேண்டும்?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.