இல.கணேசன் கூறுவது அவரது சொந்தக் கருத்தா … அல்லது மத்தியில் ஆளும் பாஜக அரசின் கருத்தா …?

.

நேற்று மதியம் இங்கு பதிவிட்ட இடுகையில் –
பாராளுமன்றத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா
ஸ்வராஜ் எப்படி தமிழ் மக்களை ஏமாற்ற முற்பட்டார்
என்பதைப் பற்றி எழுதி இருந்தேன்.

நேற்றிரவு, திருச்சியில் செய்தியாளர்களிடம் தமிழகத்தைச்
சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், பாஜக தேசிய செயற்குழு
உறுப்பினருமான திரு இல.கணேசன் அவர்கள் முற்றிலும்
வித்தியாசமான ஒரு கருத்தைக் கூறி இருக்கிறார்.

திரு இல.கணேசனின் பேட்டியிலிருந்து ஒரு பகுதி கீழே –

————————————————-

ila.ganesan

கச்சத்தீவு உரிமை கொண்டாடக்கூடிய பகுதி: இல.கணேசன்
பேட்டி

கச்சத்தீவு நாம் உரிமை கொண்டாடக்கூடிய பகுதியாகும் என
அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன்
தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழக மீனவர்கள் பிரச்னையில் முந்தைய காங்கிரஸ் அரசுக்கும்,
தற்போதைய பாரதீய ஜனதா கட்சிக்கும் வேறுபாடு இல்லை என்ற
கருத்து நிலவி வருகிறது. ஆனால் அது உண்மையல்ல.

கச்சத்தீவை தேவையில்லாமல் இலங்கைக்கு தாரை
வார்த்திருக்கிறார் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி. கச்சத்தீவு
நாம் உரிமை கொண்டாடக்கூடிய பகுதியாகும்.
தமிழக மீனவர்கள்
நலன்கருதிதான் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாக
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் கூறி,
நியாயம் கற்பிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

கச்சத்தீவில் மீன் வலைகளை காய வைக்கவும்,
அங்குள்ள கிறிஸ்தவர் கோயிலில் சென்று வழிபடவும்
தமிழக மீனவர்களுக்கு உரிமை இருக்கும் போது, கச்சத்தீவில்
ஏன் மீன்பிடிக்க உரிமை இருக்காது….?
என்றார்.

(http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=133959 )

—————————————————–

இரண்டு மாதங்களுக்கு முன்னர், சென்னை உயர்நீதி மன்றத்தில்,
மீனவர் அமைப்பு ஒன்று தொடர்ந்திருந்த வழக்கு விசாரணைக்கு
வந்தது. அது சமயம், மத்திய (பாஜக) அரசு சார்பாக தாக்கல்
செய்யப்பட்ட பதில் மனுவில், ஏற்கெனவே காங்கிரஸ் அரசு
பதவியில் இருந்தபோது கூறிய அதே விஷயத்தை மீண்டும்
உறுதி செய்திருந்தது. அதாவது “கச்சத்தீவு” இந்தியாவிற்கு
சொந்தமான பகுதி அல்ல என்று….

நேற்று பாராளுமன்றத்தில் திருமதி சுஷ்மா ஸ்வராஜ்
பேசும்போது, உச்சநீதி மன்றத்தில் (சுப்ரீம் கோர்ட்) இது பற்றிய
வழக்கு நிலுவையில் இருப்பதால், தான் கருத்து ஏதும்
கூற முடியாது என்றார்.

-// கச்சத்தீவை தேவையில்லாமல் இலங்கைக்கு தாரை
வார்த்திருக்கிறார் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி. கச்சத்தீவு
நாம் உரிமை கொண்டாடக்கூடிய பகுதி //-

– என்று வெளியில் திரு இல.கணேசன் பேசுவது தான்
பாஜக வின் அதிகாரபூர்வமான நிலை என்றால் –

பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்
வழக்கில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்து,
முந்தைய காங்கிரஸ் அரசு பதவியில் இருந்தபோது எடுக்கப்பட்டது
தவறான முடிவு என்றும், கச்சத்தீவு ஒப்பந்தம் சட்டப்படி
செல்லாது என்றே தற்போதைய அரசு கருதுவதாகவும்
சொல்லி பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வந்து விடலாமே…!

இல.கணேசன் அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
திரு.கணேசன் மட்டும் மத்திய அரசு இப்படி ஒரு நிலை
எடுக்கும்படி செய்து விட்டாரென்றால், முதல் ஆளாக
நான் அவர் வீடு தேடிச்சென்று, காலில் விழுந்து வணங்கி
நன்றி தெரிவிப்பேன்.

அல்லாமல் – உச்சநீதிமன்றத்தில் –
முந்தைய காங்கிரஸ் அரசு எடுத்த அதே முடிவையே
பாஜக அரசும் தொடர்ந்தால் – திரு.இல.கணேசன் அவர்கள்
கட்சியிலிருந்து வெளியே வந்து விடத்தயாரா …?

திரு. இல.கணேசன் அவர்களே கூறட்டும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to இல.கணேசன் கூறுவது அவரது சொந்தக் கருத்தா … அல்லது மத்தியில் ஆளும் பாஜக அரசின் கருத்தா …?

 1. இளந்திரையன் சொல்கிறார்:

  அய்யா,

  இல.கணேசன் கூறுவது சும்மா ஜுஜுபி.
  நம்ம மக்களுக்கு காதில் பூ சுற்றுகிறார்.

 2. எழில் சொல்கிறார்:

  பயபடாதீர்கள் ஐயா, சு சுவாமி இருக்கும் வரை நீங்கள் யார் காலிலும் விழ வேண்டிய நிலை வராது. 🙂

  உண்மையில் இவரை போன்ற பல பாஜக வினரை அவர் காமெடி பீசாக்கி கொண்டிருக்கின்றார் என்பதை இவர்கள் எப்போ உணர்வார்களோ தெரியவில்லை.

 3. புது வசந்தம் சொல்கிறார்:

  இங்கு கருத்து கண்ணாயிரம் நிறைய பேர் இருக்கிறார்கள். அரசுக்கும் கட்சிக்கும் கருத்துகள் பல உள்ளன. ஆகையால் யார் வேண்டுமானாலும் எந்த கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம். அதெல்லாம் அவங்க அவங்க சொந்த கருத்து.

  • எழில் சொல்கிறார்:

   //இங்கு கருத்து கண்ணாயிரம் நிறைய பேர் இருக்கிறார்கள்//

   உங்களையும் சேர்த்து தானே… அப்ப ஓகே!

 4. Siva சொல்கிறார்:

  Dear KM sir, either congress or bjp is in power at central, neither good thing nor unbiased thing will happen to Tamil Nadu. It’s waste of your time in writing as singing a melodies song in the middle of city traffic.

 5. Varadarajan சொல்கிறார்:

  All Congress and BJP leaders of Tamil nadu do not have any hold with their high commands and their words are not worthy. Please ignore them.

 6. thumbi சொல்கிறார்:

  //Dear KM sir, either congress or bjp is in power at central, neither good thing nor unbiased thing will happen to Tamil Nadu. It’s waste of your time in writing as singing a melodies song in the middle of city traffic.// இது போல் ஒரேயடியாக எந்த ஒரு விஷயத்திலும் பொத்தாம் பொதுவாக தூக்கி எறிந்து பேச வேண்டாம். இது விண்ணப்பம். இலங்கை, தமிழ்/வடமொழி போன்ற ஓரிரு விஷயங்களில் மைய அரசு “தமிழர்களுக்கு உடன்படாத சில கருத்துக்கள்/முடிவுகள் கண்ணை உறுத்தினாலும், அகில இந்தியாவே/ மத்திய அரசு எப்போதுமே தமிழர்களின் நலன் கருதி எதையுமே செய்ய / செய்து கிழித்துவிட மாட்டார்கள் என்று சொல்ல வேண்டாம். நடு நிலை வலைத்தளத்தில் இவ்வாறு பதிவது முறை ஆகாது.

  • Siva சொல்கிறார்:

   Thumbi sir, can you give me the list of good things done by central government to Tamil Nadu? You can list the things that were done with and without the call (i.e., request, but I do not call it as a request) from TN govt/poeple. I am curious to know these things. Also compare the volume/number of projects done in TN with other states. If you give those details, it will be good to judge the action of central govt. Also, if you can give some explanation on why central govt is biased on some of the issues related to TN, it will justify your comment

 7. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  மன்னிக்க வேண்டும் காவிரி மைந்தன் ஐயா! நீங்கள் கூறுவது போல் எனக்குத் தோன்றவில்லை. ஒரு நாட்டின் அரசு, நீதிமன்றம் நாடாளுமன்றம் போன்ற உச்ச அதிகாரப் பகுதிகளில், அதிகாரப்பூர்வமாகத் தரும் பதில்களைத்தான் நாம் அரசின் நிலைப்பாடாகக் கருத முடியுமே தவிர, அந்தக் கட்சியின் தலைவர்கள் இப்படி வெளியில் பேசுவதையெல்லாம் அதிகாரப்பூர்வமானவையாக நினைக்க முடியாது. இல.கணேசன் அவர்களை எதிர்க் கட்சியினர், உங்களைப் போன்ற நடுநிலையாளர்கள் எனப் பாகுபாடில்லாமல் பலரும் மதிக்கின்றனர். அதனால், தமிழர் பிரச்சினைகளில் தமக்குக் கெட்ட பெயர் ஏற்படாமல் சமாளிக்க இவரை பா.ச.க பயன்படுத்திக் கொள்கிறது; அதற்காகவே இவரை விட்டு இப்படியெல்லாம் பேச வைக்கிறது என்பதே என் கருத்து! பா.ச.க-வில் மட்டுமில்லை எல்லாக் கட்சிகளிலும் இப்படிப்பட்ட ஆட்கள் இன்று இருக்கிறார்கள். இளமையில் மக்களுக்காக நிறையப் பாடுபட்டோ, நிறைய நன்மைகள் செய்தோ, குறைந்தபட்சம் நேர்மையாகவே வெகு காலம் இருந்தோ மக்களிடம் மிகுந்த மதிப்பைப் பெற்றவர் என்று எல்லாக் கட்சிகளிலும் குறைந்தது ஒருவராவது இருக்கிறார். ‘பிழைக்கத் தெரியாதவர்கள்’ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இவர்களை எல்லாக் கட்சிகளும் இப்படி மக்களை ஏமாற்றுவதற்காகவே இன்னும் கட்சியில் வைத்துக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் தாங்கள் அறியாததில்லை. இருந்தாலும், ஒரு கருத்துக்காகச் சொன்னேன்.

 8. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  பா.ஜ .க-வில் மட்டுமில்லை எல்லாக் கட்சிகளிலும் நிறைய நன்மைகள் செய்தோ, குறைந்தபட்சம் நேர்மையாகவே வெகு காலம் இருந்தோ மக்களிடம் மிகுந்த மதிப்பைப் பெற்ற இப்படிப்பட்ட ஆட்கள் ஓரிருவர் இன்று இருக்கிறார்கள்.அவர்களை கட்சி பயன்படுத்தி கொள்கிறது என்ற இ.பு.ஞானப்பிரகாசன் அவர்களின் கருத்து மிகவும் சரியே .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.