சிங்கம் என்று தான் நினைத்தோம் … ஆனால், அது நரியாக இருக்கிறேதே…!!!

.

.

பாராளுமன்ற தேர்தல்கள் வரும் முன்னர் நாடு முழுவதும்
நானூற்று சொச்சம் பிரம்மாண்டமான பேரணிகள் நடைபெற்றன.
அற்புதமான கூட்டங்கள். லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்.
ஆவேசமான சொற்பொழிவுகள்.
அள்ளி விடப்பட்ட வாக்குறுதிகள்….

ம.மோ.சிங் அரசின் செயல் திறன் இல்லாத,
லட்சக் கணக்கிலான கோடிகளில் ஊழல்கள் –
ஊழலில் புழுத்து அழுகிய ஆட்சி,
மண்டைக்கனம் பிடித்த காங்கிரசின் பரம்பரைத் தலைமை –

எல்லாம் சேர்ந்து, ஆட்சி மாறினால் –
காட்சி நிச்சயம் மாறும் என்கிற ஒரு மனோநிலையை
மக்களிடம் கொண்டு வந்திருந்தன.

மோடிஜியின் ஆவேசமான, தேசபக்தி உணர்வைத்தூண்டும்
பேச்சுக்கள் மக்களிடம் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு
நம்பிக்கையை ஏற்படுத்தின. இவர் வந்தால்,
நிச்சயம் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
“எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும்” ….
என்கிற தீவிரமான நம்பிக்கையை ஏற்படுத்தின.

முழு ஆவேசத்துடன் நாட்டு மக்கள் தேர்தலில் பங்கு
கொண்டார்கள். ஆட்சி மாறியது. யாருமே எதிர்பார்க்காமல் –
பாஜக வுக்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைத்தது.

(ஆனால் – அதுவே இன்று சகல துன்பங்களுக்கும்
காரணமாகி விட்டது என்பது தான் பரிதாபகரமான விஷயம் …)

சிங்கம் ஒன்று – இந்த நாட்டில் தலைமையேற்று சகல
துன்பங்களில் இருந்தும் மக்களை விடுவிக்கப்போகிறது என்று
நம்பியிருந்த வேளையில் –

கடந்த ஏழு மாத ஆட்சி – இது சிங்கத்தின் ஆட்சியல்ல –
நரியின் ஆட்சி என்றே புரிய வைக்கிறது.

ஏன் நரி என்கிற பதம் ….?
மக்களின் முழு நம்பிக்கைக்கும் பாத்திரமான ஒரு அரசு,
தனிப்பட்ட மெஜாரிட்டியுடன், யார் தயவையும் எதிர்பாராமல்,
பல நல்ல மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றும்
“நல்ல தினங்கள்” வரப்போகின்றன என்று எதிர்பார்த்தால் –

எந்தெந்த விஷயங்களில் எல்லாம் –
எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றலாம் என்பதிலேயே
குறியாக இருந்தால் பிறகு வேறெப்படிச் சொல்வது …?

எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் …..?

முதலில் – பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பில் –

அகில உலக அளவில், பெட்ரோலிய பொருட்களின் விலை
கடந்த 6 மாதங்களில் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கின்றன.
அமெரிக்க ஷேல் எண்ணையின் அபரிமிதமான உற்பத்தி
காரணமாகவும், தேவையை விட உற்பத்தி அதிகரித்ததன்
காரணமாகவும், international market -ல் கச்சா எண்ணையின்
விலை மிக மிக குறைந்தது. எந்த அளவிற்கு …?

internation oil price chart

இந்த வருடம் ஜூன் மாதத்தில், பாஜக ஆட்சிப் பொறுப்பை
ஏற்றுக் கொண்ட புதிதில், கச்சா எண்ணையின் விலை
ஒரு பேரலுக்கு அமெரிக்க டாலர் 110 என்கிற விலையில்
இருந்தது தற்போது ஒரு பேரல் 60 டாலர் என்கிற அளவிற்கு
குறைந்திருக்கிறது.

கிட்டத்தட்ட 45 % வரை கச்சா எண்ணையின் விலை
குறைந்தாலும்,
நம் நாட்டில் பெட்ரோல் விலைக்குறைப்பு
எந்த அளவிற்கு உபயோகிப்பாளருக்கு சென்று சேர்ந்திருக்கிறது…?

மிகுந்த தாரை, தம்பட்டங்களுடன் 6 முறைகள், ஒவ்வொரு
முறையும், ஒரு ரூபாய், ஒன்றரை ரூபாய் என்கிற மாதிரியான
வகைகளில் குறைக்கப்பட்டு, நம் நாட்டின் பொது மக்களுக்கு
பெட்ரோலில் மொத்தம் 11 %-உம் டீசல் விலையில் 8%-உம்
குறைக்கப்பட்டிருக்கின்றன. ( ஜூன் 2014-ல் பெட்ரோல் விலை
சென்னையில் லிட்டருக்கு ரூ.74.71 – டிசம்பரில் ரூ.66.05 )

45 %-ல் 11% கழித்தால், மீதி 34 % –
மத்திய அரசின் கஜானாவிற்கும் எண்ணை கம்பெனிகளுக்கும்
போய்ச் சேர்ந்து விட்டது……..

இந்த விலைக்குறைப்பை பயன்படுத்திக் கொண்டு, இடையிலேயே
அதிகம் வெளியில் தெரியாமல், இரண்டு முறைகள் பெட்ரோலிய
பொருட்களின் மீதான எக்சைஸ் வரி உயர்த்தப்பட்டு விட்டது.

இந்த வரி ஏற்றம், பெட்ரோலிய பொருட்களின் விலைக்குறைப்புக்கு
இடையே செய்யப்பட்டு விட்டதால், பொதுவாக மக்கள் இதைப்பற்றி அறிய வாய்ப்பில்லை. (லாபத்தில், நஷ்டம் வந்தால் தெரியாதே … கிடைத்த வரையில் லாபம் என்று தானே பார்ப்போம்…)

இதன் மூலம் பொதுவாக மத்திய அரசுக்கு எதிர்பாராத வகையில்
வரக்கூடிய லாபம் / வரவு – இந்த நிதியாண்டின் மிச்சமுள்ள
4 மாதங்களில் மட்டும் சுமார் 40,000 கோடி ரூபாய். முழு
நிதியாண்டுக்கும் அரசுக்கு கிடைக்கக்கூடிய லாபம் சுமார்
ஒரு லட்சம் கோடி ரூபாய்….!!!

நியாயமாக பொது மக்களுக்குப் போய்ச்சேர வேண்டிய
இந்த ஒரு லட்சம் கோடி ரூபாயை –
அவர்களிடம் சொல்லாமல்,
(அனேகமாக) அவர்களுக்கு தெரியாமலேயே –
அரசாங்கம் ‘லவட்டி’க் கொள்வதை நரித்தனம் என்று
சொன்னால் தவறில்லையே….?

சந்தடி சாக்கில், இந்த விலைக்குறைப்புகளின் இடையிலேயே –
பெட்ரோல், டீசல் இரண்டின் விலையையும் சந்தைப்படுத்தியாகி
விட்டது. அதாவது இனி அகில உலக மார்க்கெட்டில்
கச்சா எண்ணை விலை ஏறும்போதெல்லாம் –
இங்கும் பெட்ரோல், டீசல் விலை ஏறும்.
மத்திய அரசு, எங்களுக்கும் பெட்ரோல் -டீசல் விலைக்கும்
எந்தவித சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கிக் கொள்ளூம்..,.!

பெட்ரோல், டீசலில் மக்களை ஏமாற்றியதோடு
கதை முடிகிறதா …..?

தொடர்கிறது …..

( சிங்கமும் -நரியும் ….. பகுதி-2- ல்)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

27 Responses to சிங்கம் என்று தான் நினைத்தோம் … ஆனால், அது நரியாக இருக்கிறேதே…!!!

 1. இளந்திரையன் சொல்கிறார்:

  மோடிஜி “ஜால்ரா”க்களின் ஓசை தாங்க முடியவில்லை.
  நீங்கள் ஒருவராவது ” உள்ளதை உள்ளபடி” எழுதுகிறீர்களே
  மிகவும் நன்றி அய்யா. தொடரின் அடுத்த
  பகுதிக்காக காத்திருக்கிறேன்.

 2. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  ஆகா! தனியாக மோடிக்கென்று ஒரு தொடரே தொடங்கி விட்டீர்களா? அருமை! பின்னி எடுங்கள்!

  சுப்பிரமணியன் சுவாமி பற்றிய தொடரிலேயே சொல்ல நினைத்தேன், மறந்து விட்டது. ஐயா! நீங்கள் எழுதும் பெரும்பாலான விதயங்கள் – தமிழர் பிரச்சினைகள் உட்பட – நாட்டு மக்கள் அனைவரும் கண்டிப்பாக அறிந்தாக வேண்டிய தகவல்களாய் இருக்கின்றன. எனவே, தாங்கள் இவற்றைத் தமிழில் மட்டும் எழுதுவதை விட, தனியாக ஒரு வலைப்பூ தொடங்கி ஆங்கிலத்திலும் எழுதினால் ‘இன்றில்லாவிட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா’ எனும் தங்கள் ஏக்கத்தை நிறைவேற்றும் வகையில், கண்டிப்பாக நாளையே நாடளாவிய அளவில் நிச்சயம் தங்கள் எழுத்துக்களால் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும்; தமிழர்க்கான விடிவும் பிறக்கும் என நினைக்கிறேன். தாங்கள் ஏன் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது?

 3. Umar சொல்கிறார்:

  i am waiting for part-2

 4. Srini சொல்கிறார்:

  very shortsighted article. is it that Modi is running a grocery shop where the benefits can be passed on to the customer directly.

  • R.Palanikumar சொல்கிறார்:

   If Modi is a grocery merchant,and has done this we need not worry.As a PM he should see what people deserve should reach them without deviation.

   • Srini சொல்கிறார்:

    With all due respects, Very shortsighted conclusion from KM and I didn’t expect this.

    What are we buying, petrol or crude oil? Price of what has got reduced. How the crude oil becomes the final product. What is cost of refining the crude oil. Who is doing it.Whether the cost of refineries has come down. Refineries have fixed cost.. where are the other cost. 40% on crude oil price cut will never equal to 40% cut on retail petro price. it will never happen. this is all i want to communicate. Why excise was hiked. Who pays excise to whom… what is the difference between getting the money as excise now and dividend as later from the govt run refineries.. Though both go to the same coffers. what happens if the crude oil price goes up tomorrow. how by charging a excise now, govt is building a buffer for future price hike.
    If crude oil price has come down, what is the total end benefit and how much consumer can get a share of it. How much share goes to all stake holders on the profit.. central state, companies and retailers and consumers… if price of tomato goes down by 2rs today can the hotel guy reduce 2 rs from the tomato rice immediately… how the crude oil barrels are booked by these refiners… if its booked for 2 months or three months in advance.. What rate the companies are getting now and how much they can pass on to the end consumer… too many questions needs to be answered. It’s a complex finance issue which is well handled by the present govt. let us not negate the good work done by the Jaitley team by a theoretical level analysis . Lion and fox don’t have any role to play in this fuel pricing game… it ;looks good to read but not practical.

    Guys, I am regular reader of this blog and I have great respects for KM sir and I admire him. I am just writing what I felt. don’t jump guns on me immediately… and chase me out.:) please

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     ஸ்ரீநி,

     எந்த வருத்தமும் வேண்டாம். நீங்கள் தாராளமாக
     உங்கள் கருத்துக்களைக் கூறலாம். நான் உங்கள் கருத்துக்களை
     எந்தவித எரிச்சலுமின்றி, முழு மனதுடன் வரவேற்கிறேன்.

     விவாதங்கள் இந்த ஒரு பகுதியோடு நிறைவடையப் போவதில்லை.
     நான் இன்னும் சில செய்திகளுடன் மேலும் சில பகுதிகள்
     தொடர்வதாக இருக்கிறேன்.

     இங்கு கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு.
     எல்லா தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்படட்டும்.

     இந்த தளத்தில், எந்த முடிவும், யார் மீதும் திணிக்கப்படாது.

     விவாதத்தில் முன் வைக்கப்படும் அனைத்து கருத்துக்களையும்
     படித்த பின்னர், வாசகர்களே தமக்கு சரி என்று தோன்றும்
     வாதங்களை ஏற்றுக் கொள்வார்கள்.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

    • bandhu சொல்கிறார்:

     ஒரு பொருளின் அடக்க விலை என்பது இரண்டு பாகங்கள் கொண்டது.. fixed cost மற்றும் variable cost. இப்போது பெட்ரோலை எடுத்துக் கொண்டால், fixed cost என்பது சுத்திகரிக்க ஆகும் செலவு, அலுவலகம் நடத்தும் செலவு, சம்பளம், போனஸ் போன்றவை. variable cost என்பது, எண்ணெய் வாங்க நாம் கொடுக்கும் விலை. இந்த விலை 44% அளவு குறைந்திருக்கும்போது மொத்த விலையில் அந்த அளவு இல்லையென்றாலும் 35% அளவாவது குறையும். இந்த வித்யாசம் எதனால் என்றால் இந்த 44% fixed cost -இல் குறையாததால். வெறும் 11% குறைத்தது அக்கிரமம். அமெரிக்காவில் பெட்ரோல் விலை கிட்டதட்ட 35% வரை குறைந்திருக்கிறது. அவர்களுக்கும் இதே அளவு fixed cost இருக்கும் அல்லவா?

     • Srini சொல்கிறார்:

      Dear Bandhu,

      oil price is going to drop further not just in US, across the world. .. your question on fixed cost…please see
      below given link, it is a study by US Energy information administration .please find time to read.
      http://www.eia.gov/todayinenergy/detail.cfm?id=18651
      A general guideline for how crude oil prices affect gasoline is that a $1-per-barrel change in the price of crude oil translates into a change of about 2.4 cents per gallon of gasoline. (There are 42 gallons in one barrel, and 2.4 cents is about 1/42 of $1.)

      another link
      http://www.globalpetrolprices.com/articles/2/
      I leave it to you to do the maths.

      there are multiple reasons for assymmentical fall of US gasoline price. crude oil price is just one among that… local produce, shale gas… are some of the other reasons.

     • bandhu சொல்கிறார்:

      Srini..

      //U.S. retail gasoline prices reflect four key components: the price of crude oil; refining costs and profit margins; retail and distribution costs and profit margins; and taxes. The first two factors tend to be more volatile, causing most of the variation in retail gasoline prices, while the latter two reflect the retail portion and tend to be relatively stable.//
      நீங்கள் கொடுத்த தரவில் இந்த பாராவைப் படித்தேன்.. அதில் நீங்கள் சொன்னது போல் refining cost variable cost வகையில் இருந்தாலும், அது விலைவாசி ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப என்ற வகையிலே தவிர oil விலைக்கும் refining செலவுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று புரியவில்லை. இதே பத்தியில், crude oil விலை ஒரு முக்கிய காரணி என்றும் குறிப்பிட்டிருக்கிறார்களே..

 5. S.Selvarajan சொல்கிறார்:

  சிங்கமா ? நரியா ?—– நண்டு ! குஜராத் என்கிற வலைக்குள் இருந்து – இந்தியா என்கிற பரந்த வெளிக்கு — வந்தவுடன் எப்படி போவது — என்ன செய்வது என்று குழம்பி போய் திண்டாடுகிறது — ஒருபுறம் ஆர் .எஸ்.எஸ். -ன் தலையீடு — 24– கட்சிகளின் கூட்டு — வெளியுறவு விவகாரம் மற்றும் பொருளாதார கொள்கைகளில் காங்கிரஸ் வைத்து விட்டு போன ஆப்பு — போன்ற எண்ணற்ற தடைகள் —- பாவம் என்ன செய்வது என்று திணறுகிறது — ” நண்டு “

 6. Raman A V சொல்கிறார்:

  How long he need Srini? Another decade to ruin this country and cheat people. No traces of any changes from the previous UPA Government. All the ministers are behaving like clowns. Best eg., today’s Smirthi Irani’s decisions on Christmas leave for eduactional institutions. Pathetic.

  • Srini சொல்கிறார்:

   Dear AVR, I think we are talking about fuel pricing here and Smirithi Irani has already clarified on the Christmas leave issue. I am sure you read that.

   • today.and.me சொல்கிறார்:

    ஸ்ரீநி,
    நீங்கள் கூறியிருப்பதுபோல ஸ்மிருதி இரானி பள்ளிவிடுமுறையைப் பற்றி விளக்கிவிட்டார்கள். அது சரிதான். என்றாலும் மதசார்பற்ற, உலகின் பெரிய ஐனநாயக நாட்டின் அரசாங்க செயல்பாடுகளில் இது இப்போதைக்கு அவசியம் தானா என்ற கேள்வி எழுகிறது. இதைக் குறித்து தனியான ஒரு இடுகையில் அவசியம் விவாதிக்கவேண்டும் என கா.மை. அவர்களை நான் கோருகிறேன்.

    • today.and.me சொல்கிறார்:

     அக்டோபர் 2ல் காந்தியையும் மறக்கடித்து விளக்குமாற்றை தூக்கவைத்து மோடி ப்ராண்ட் டெவலப்மெண்ட் செய்பவர்கள், டிசம்பர் 25ல் கிறிஸ்துமஸை மறக்கடித்து வாஜ்பாயை நினைக்கச் செய்வார்களா?
     இதற்கு என்ன இப்போது அவசியம்? இதைப் பள்ளிகளில் இப்போதிருந்தே ஆரம்பித்து அடுத்த தலைமுறைத் தளிர்களை கலர்மாற்றவா?

     http://ramaniecuvellore.blogspot.in/2014/12/blog-post_16.html

 7. புது வசந்தம் சொல்கிறார்:

  ஒரு நாணயத்தின் மறுபக்கமும் பார்க்க வேண்டும், என்று இன்னமும் சிலருக்கு புரியவில்லை. உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறோம்.

 8. Ganpat சொல்கிறார்:

  பசி வயிற்றைக்கிள்ள
  கொஞ்சம் குருணை அரிசியிட்டு
  குடிக்க கஞ்சியாவது தாருங்கள் என
  இவரை அழைத்தால்
  கொஞ்சம் பொறுத்திரு
  குங்குமப்பூ இட்டு
  குலாப் ஜாமுனே கொடுக்கிறேன் என்கிறார்…
  முந்தய சமையல்காரர் ஒன்றும் செய்யவில்லை என்றாவது தெரிந்தது
  இவர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை.
  பொறுத்திருப்போம்; அது புதிதல்லவே நமக்கு!.
  அறுபது ஆண்டுகள் அனுபவம் ஆச்சே அதில் நமக்கு.!

 9. D. Chandramouli சொல்கிறார்:

  It’s too soon to lose hope on Modi. At least two years would be needed to judge BJP’s performance. However, surely, the honey moon period for the BJP government is over. Smart slogans were initially needed to raise awareness of the public on basic issues. Now, actions on the ground are urgently called for. What perplexes me is that why quite a few in BJP and their associates, now and then, raise up unimportant and controversial matters. I would have expected Modi to mercilessly brush them aside. Let us not have any more divisive agenda. In short, the focus is lacking in governance.

  • today.and.me சொல்கிறார்:

   ஆட்சியாளர்களாவது ஆறுமாதம் தான் கேட்டார்கள். நீங்கள் இரண்டுவருடம் கொடுத்துவிட்டீர்களே சார். இப்படியே ஐந்துவருடமும் போகும். அப்போது மீண்டும் ஐந்துவருடம் கேட்பார்கள், இந்த டெர்ம்மில் செய்யநினைத்ததைச் செய்வோம் என்று.

 10. subbu சொல்கிறார்:

  ACCHA DIN AA GAYA? FOR WHOM? FOR ADANI AND AMBANI NOT FOR THE
  PEOPLE WHO VOTED FOR BJP. NOTHING HAS HAPPENED IN THE LAST SEVEN MONTHS
  EXCEPT THAT MR MODI HAS VISITED ALMOST HALF THE GLOBE AND SENDING
  BEST WISHES FOR RAJAPAKSE THE MAN WHO KILLED MILLION TAMIL PEOPLE IN
  SRILANKA TO COME BACK TO POWER, WHAT TAMILNADU HAS RECIEVED? NOTHING.
  LOT OF RAILWAY PROJECTS SANCTIONED FOR KARNATAKA BUT NOT EVEN ANY
  SURVEYS FOR NEW ROUTES IN TAMILNADU. IN CAUCERY WATER SHARING, SUCCESSIVE
  GOVERNMENTS AT THE CENTRE HAS NEVER ANTOGNISED KARNATAKA FOR FEAR OF
  LOSING VOTES. BUT PEOPLE OF TAMILNADU ARE NOT FOOLS, THEY HAVE VOTED
  NEITHER BJP NOR CONG AND GAVE ALLMOST ALL THE SEATS TO AIADMK DESPITE
  JAYALALITHA HAVING CASES. THEY THINK JAYALALITHA IS BETTER THAN MR MODI.
  LABOUR LAWS ARE TIGHTENED, PRAVITISING PUBLIC SECTOR UNITS ARE ON
  THE CARDS AND FDI IS INSURANCE IS GOING TO TAKE PLACE..AND THESE
  ARE CALLED ACCHA DIN . ADANI AMBANI AND AMIT SHAH ARE GOING TO RULE INDIA
  WITH THE MASCOT OF MR MODI. LABOUR UNREST IN BANKING, INSURANCE AND
  OTHER PUBLIC SECTOR UNITS ARE BLACKED OUT BY THE MEDIA UNDER MODI,S
  INSTRUCTIONS? ALL THE MINISTERS ARE CLOWNS COMPETING WITH THE
  REAL CLOWN MR SUBRAMANIA SAMI. LONG LIVE INDIA’S DEMOCRACY

 11. indian சொல்கிறார்:

  stupid writing

 12. Karthikraja K சொல்கிறார்:

  Certainly Govt is exploiting the situation and try to benefit more in case of Crude price increase. If People is able to handle Gold price instability on day to day basis, they will certainly do for Fuel also.
  Excise duty hike is to balance the LPG and Kerosene subsidy and to see some profits by ONGC/OIL/IOCL/BPCL/HPCL. So In future, Govt will get more Excise duty irrespective of Crude price.

 13. வல்லம் தமிழ் சொல்கிறார்:

  அய்யா, மோடி அவர்கள், தேர்தலுக்கு முன்பு பதவிக்காக மேற்கொண்ட சமரசங்கள், சொந்த கட்சி மூத்த தலைவர்களை ஓரம் கட்டிய அவசரம் இவைகளை வைத்து அவர் இப்படியான ஒரு ஏமாற்றத்தை தான் மக்களுக்கு வழங்கப்போகிறார் என்று நான் எதிர்பார்த்தேன்…ஆனால் அதை உங்களைப்போல விளக்கமாக எடுத்து சொல்ல தெரியவில்லை…மிக்க நன்றி உங்களுக்கு …தொடர்க உங்கள் தூய ,துணிச்சலான மக்கள் பணி!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.