LPG விஷயத்தில் மக்கள் ஏமாற்றப்படுவது எப்படி …? (சிங்கம் – நரி – பகுதி -2 )

.

.

“ஆதார் எண்” என்கிற சமாச்சாரத்தை ஒட்டுமொத்தமாக
எதிர்த்தது பாஜக…! எப்போது …? மே 2014க்கு முன்….!!!
– அதாவது – காங்கிரஸ் கூட்டணி, ம.மோ.சிங் தலைமையில்
மத்தியில் ஆட்சி நடத்தியபோது.

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு –

முதல் இரண்டு மாதங்கள் கிடப்பில் போட்டு விட்டு,
பின்னர் படு தீவிரமாக இதில் இறங்கியது மத்திய அரசு.

தான் இந்த கொள்கையில் ‘உல்டா பல்டி’ அடித்தது
ஏன் என்றோ, முன்னர் எதிர்க்கட்சியாக இருந்தபோது,
“ஆதார் எண்” விஷயத்தை தான் எதிர்ப்பதற்காக கூறிய
காரணங்கள் இப்போது என்ன ஆயின என்பதற்கோ எந்த
விளக்கமும் பாஜக / மத்திய அரசு கொடுக்க முற்படவில்லை…!

சுப்ரீம் கோர்ட்டால் எல்பிஜி ( சமையல் எரிவாயு ) விஷயத்தில்
ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக் கூடாது என்று ஏற்கெனவே
உத்திரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிற நிலையில்
ஆதார் எண்ணை எப்படி நடைமுறைக்கு கொண்டு வருவது ….?

ம.மோ.சிங் – பாவம்…..
பத்து ஆண்டுகள் பதவியில் இருந்தாலும்,
நெளிவு-சுளிவு தெரியாமலேயே போய்ச் சேர்ந்து விட்டார்.
ஆனால், இது சிங்(கம்) இல்லையே – நரி ஆயிற்றே…!!!

சுப்ரீம் கோர்ட் “ஆதார்” தானே கூடாது என்றது.
அதனாலென்ன – பிடி ஒன்றை புதிதாக – என்ன அது …?
வங்கிக் கணக்கு….! வங்கிக் கணக்கு இருந்தால் தான்
சமையல் எரிவாயுவுக்கு மான்யம் கிடைக்கும் என்கிறபடி
சத்தம் இல்லாமல் புதிய உத்திரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.

(அரசு மான்யத்தை பணமாகக் கொடுக்காமல்,
பொருளாகக் கொடுக்க வேண்டும் என்கிற கொள்கையை
இங்கேயே சப்தமில்லாமல் குழுதோண்டிப் புதைத்தாகி விட்டது.
எதிர்க்கட்சிகள் இதைக் கண்டும் காணாமல், தூங்கி வழிந்து
கொண்டிருக்கின்றன…..எதிர்ப்பு சப்தத்தையே காணோம்….)

வங்கிக் கணக்கை மட்டும் அவ்வளவு சுலபத்தில்
நம் மக்கள் ஏற்றுக் கொண்டு விடுவார்களா …?
வங்கிக் கணக்கு திறக்க வேண்டும் என்பதை
கட்டாயப்படுத்தினால் – அதை எதிர்த்து யாராவது கோர்ட்டுக்கு
போனால் என்ன செய்வது ….?

நரிகளுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்….?
அரசியல்வாதிகளுக்கு தெரியாதா மக்களின் பலவீனம்.
தூக்கிப்போடு இலவசங்களை …..!!!
தன்னாலே வருவார்கள் – பின்னாலே…..!!!

jan-dhan-yojana-logo2

(லோகோ – நீங்களும் இந்தி’யர் தானே …
இந்த லோகோவில் என்ன எழுதி இருக்கிறது என்று
யாராவது சொல்லுங்கள் பார்ப்போம்….!!!)

30,000 ரூபாய்க்கு இலவச விபத்து காப்பீடு.
ஒரு லட்சம் ரூபாய்க்கு இலவச இறப்பு காப்பீடு….!!!
(எவ்வளவு பேர் இதற்காகவென்று கையை, காலை உடைத்துக்
கொள்ளப்போகிறார்கள்… அல்லது உயிரை விடப்போகிறார்கள் …?? காப்பீடு பெயரளவில் தானே – அறிவிப்பதில் என்ன கஷ்டம் ….!! )

இதற்கும் ஒரு வேளை மக்கள் மயங்கா விட்டால் ….?

கொடு இலவசக் (?) கடன் ….!!!
பிரதமரின் ‘ஜன் தன் வங்கிக் கணக்கு ‘ வைத்திருக்கும்
ஒவ்வொருவருக்கும் ஐந்தாயிரம் ரூபாய் வரை
கடன் (overdraft ) கொடுக்கப்படும்….!
மினிமம் பேலன்ஸ் எதுவும் வேண்டாம்.
ஐந்து ரூபாய் கூட இல்லாமல் வங்கிக்கணக்கு துவக்கலாம்.
ஐயாயிரம் ரூபாய் கடன் கிடைக்கும் ….!!!

அவ்வளவு தான் -மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு
அக்கவுண்ட் திறந்தார்கள். ஒரே மாதத்திற்குள் ஏழரை கோடி
வங்கிக் கணக்குகள். பிரதமரே பெருமையாகக் கூறிக்கொண்டார்-
இது உலக சாதனை என்று.

ஜனவரி 26 ( குடியரசு தினத்துக்குள்) 10 கோடியைத் தாண்டி
விடும் என்றும் கூறி விட்டார்கள்.

இந்த வங்கிக் கணக்கின் விளைவுகள் என்ன ….?
முதலில் வெளிப்படையாக எதுவும் சொல்லப்படவில்லை…

கொஞ்சம் கொஞ்சமாக சங்கதிகள் வெளிவருகின்றன.
வங்கிக் கணக்கு மூலம் சமையல் வாயு மான்யம் பெறுபவர்கள்,
மூன்று மாதங்களுக்குள் ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும்.,
(ஆக, ஆதார் எண்ணை மறைமுகமாக கொண்டு வந்தாகி விட்டது )

45 நாட்களுக்கு ஒரு முறையாவது “ஜன்-தன்” வங்கிக்கணக்கின்
ஏடிஎம் கிரெடிட் கார்டை பயன்படுத்தியாக வேண்டும்.
இல்லையேல் அது செயலாற்றாது…!

குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் ஆன பின்னர்,
அவர்களின் வங்கிக் கணக்கு செயல்பாடு திருப்தியாக
இருந்தால் தான் ஐயாயிரம் ரூபாய் கடன் (overdraft )
கொடுப்பது பற்றி சம்பந்தப்பட்ட வங்கிகளால் (!)
பரிசீலிக்கப்படும்….!!!

( திருப்திகரமாக என்றால் – மக்கள் அவ்வப்போது அதில்
பணம் போட வேண்டும் – எடுக்க வேண்டும் …!!!

நம் குடிமக்களில் எவ்வளவு பேருக்கு, வங்கியில் அவ்வப்போது
போட்டு பின்னர் எடுக்கும் அளவிற்கு வருமானம் வருகிறது…? )
வருமானம் பற்றாமல், மாதா மாதம் வண்டியே கடனில்
ஓடும்போது வங்கியில் போட்டு வைப்பது எப்படி ….?
அப்புறம் overdraft வாங்குவது எப்படி …?

இந்த குறைகள் எல்லாம் நம் சாமான்ய மக்களுக்கு
உடனே புரியாது – பாவம் நம் மக்கள் …!
ஆனால் … போகப் போக நிச்சயம் புரியும்..

இன்னொரு முக்கியமான விஷயம் – ஒவ்வொரு வங்கிக்
கணக்கையும் ( ஏடிஎம் உட்பட ) பராமரிக்க, வங்கிகளுக்கு
குறைந்த பட்சம் வருடத்திற்கு 80 ரூபாயாவது செலவழிகிறதாம்.
எனவே, 10 கோடி கணக்குகள் என்று வைத்துக் கொண்டாலும் கூட, இதைப் பராமரிக்க வங்கிகளுக்கு ஆகும்
குறைந்த பட்ச செலவு ஆண்டுக்கு 800 கோடி ரூபாய்…!
இவ்வளவு பெரிய தொகையை வங்கிகளா சுமக்கும் …?

இப்போதைக்கு இதை யார் சுமப்பார்கள் என்பது பற்றி
ஒன்றும் சொல்லப்படா விட்டாலும், இயற்கையாகவே,
இந்த செலவு பயனீட்டாளர் தலையில் தானே விழும் …..?

நாடு முழுவதுமாக சுமார் 20 கோடி சமையல் எரிவாயு
இணைப்புகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் –

ஒவ்வொரு மாதமும், இருபது கோடி இணைப்பாளர்களின்
விவரங்களை, சம்பந்தப்பட்ட ஒவ்வொரு எல்பிஜி ஏஜென்சியும்
சரியாகப் பதிந்து,

அவை சம்பந்தப்பட்ட எண்ணை நிறுவனங்களுக்குச் சென்று,
அந்த எண்ணை நிறுவனங்களால் இந்த தகவல்கள்-

நிதியமைச்சகத்தின் சம்பந்தப்பட்ட பிரிவிற்கு அளிக்கப்பட்டு,
அதன் பிறகே இத்தனை பேருக்குமான மான்யதொகை (நிதி)
மத்திய நிதியமைச்சகத்தால் விடுவிக்கப்பட வேண்டும்.

இந்த விவரங்களை கம்ப்யூட்டரில் செருகும்போது
(while entering these data into the sytem ) எங்காவது
ஒரு எண் மாறினாலும்,
சம்பந்தப்பட்ட பயன்பாட்டாளருக்கு பணம் போய்ச்சேராது.

கொஞ்ச நாட்கள் காத்திருந்து பார்த்து விட்டு –
பணம் / மான்யத் தொகை கிடைக்கவில்லை என்று
அவர் புகார் கொடுத்து, அரசு நிர்வாக யந்திரங்களால்
அவை சரிபார்க்கப்பட்டு, எங்கே தவறு என்று
கண்டுபிடிக்கப்பட்டு, சரி செய்த பிறகு அவருக்கு விட்டுப்போன
மான்யப்பணம் கிடைக்க வேண்டும்…..!!!
இத்தகைய நடைமுறைகள், எந்த அளவிற்கு திருப்திகரமாகச்
செயல்படும் என்பதை அரசுத் துறை நிர்வாகங்களைப் பற்றி
அனுபவப்பட்டவர்களுக்குப் புரியலாம்….!!!

ஆதார் எண் -ணையும், வங்கிக் கணக்கு விவரங்களையும்,
பொது மக்கள் – சம்பந்தப்பட்ட ஏஜென்சியிடமும்,
வங்கிக் கிளையிலும் சென்று கொடுப்பதற்குள் படும்பாடு –
பொது மக்களுக்கு இந்த இடங்களில் கிடைக்கும் treatment –
ஒரு தனி பதிவே போட வேண்டிய அளவிற்கு நேரும்
துயர அனுபவங்கள் இவை…..

LPG விஷயத்தில் மக்கள் ஏமாற்றப்படுவதோடு
கதை முடிகிறதா …?

அதெப்படி முடியும்… ? தொடர்கிறது …..!!!

( சிங்கமும்-நரியும் ….. பகுதி-3 -ல்)

————————————————————————-

பின் குறிப்பு –

பண்பாடு சற்றும் குறையாமல்,
கருத்துக்களை முன்வைத்து அருமையாக விவாதம்
நடத்தும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு,
இதே போல் தொடர வேண்டுகிறேன்.

ஒரு நண்பர் எழுப்பிய முக்கியமான சந்தேகம் ஒன்றிற்கு
மட்டும் இங்கேயே பதில் சொல்லி விடுகிறேன்.

க்ரூட் ஆயில் விலை குறைந்தால், உடனே அதன் பயனை

பயன்பாட்டாளர்களுக்கு எப்படி கொடுக்க முடியும்… இரண்டு-
மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே பழைய விலையில்
ஆர்டர் கொடுத்திருப்பார்களே என்று கேட்டார்.
நல்ல வாதம் –

ஆனால் ஒரு சிறு பதில் கேள்வி – சர்வதேச சந்தையில்
கச்சா எண்ணையின் விலை உயர்ந்தால் மட்டும், உடனே
இங்கே விலையை உயர்த்தி விடுகிறார்களே அது எப்படி …?

(இரண்டு – மூன்று மாதங்களுக்கு முன்னர் குறைந்த
விலைக்கு வாங்கியதை, உடனடியாக விலை உயர்த்தி
அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள் என்று தானே அர்த்தம் …? )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to LPG விஷயத்தில் மக்கள் ஏமாற்றப்படுவது எப்படி …? (சிங்கம் – நரி – பகுதி -2 )

 1. srinivasanmurugesan சொல்கிறார்:

  பயணாளிகள் முதலில் சிலிண்டருக்கான முழு தொகையை செலுத்தி பின்னர் மான்னியத்தை
  அளிப்பதன் மூலம் எண்ணெய் நிறுவனத்திற்கு/அரசிற்கு பல கோடி ரூபாய் வட்டி மிச்சமாகும்.மேலும் மக்களை முழு தொகையையும் செலுத்த பழக்கப்படுத்தவதன் மூலம் எதிர்காலத்தில் சிறிது சிறிதாக மான்யத்தை குறைத்து பின்னர் முழுக்க ரத்து செய்து விடலாம்.இது தான் நரியின் தந்திரமாக இருக்கும்.

  • புது வசந்தம் சொல்கிறார்:

   இது தான் நடக்க போகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ஸ்ரீனிவாசன் முருகேசன்,

   நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.
   மார்க்கெட் விலை கொடுத்து சிலிண்டரை
   வாங்க மக்களை பழக்கப்படுத்தி விட்டு,
   நாளடைவில் படிப்படியாக மான்யத்தை
   குறைப்பது தான் திட்டம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    எங்கள் அலுவலகத்தில் கடைநிலை ஊழியம் செய்யும் மக்கள் “அதிக பட்ச பணப்பரிமாற்றமாக வருடத்திற்கு நாற்பதாயிரத்துக்கு மேல் வங்கிக் கணக்குகளில் இருந்தால் இந்த கேஸ் மானியம் அளிக்கப்படாது என்றும் எனவே ஜனவரியிலர்ந்து எங்களுக்கு செக்கா வேண்டாம் பணமா சம்பளம் குடுங்கன்னு” புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களைப் பார்த்து ஒப்பந்த அடிப்படை மற்றும் இதர பணியாளர்களும் சேர்ந்திருக்கிறார்கள். இது இதரகட்சி பிரமுகர்கள் கிளப்பிவிட்ட வெற்று வதந்தி என்று எண்ணியிருந்தேன். இப்போது பார்த்தால் நெருப்பில்லாமல் புகையாது போலிருக்கிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஸ்ரீநி,

   எப்படியாவது இந்த திட்டத்தை ஆதரிக்க
   வைக்க வேண்டும்
   என்கிற உங்கள் ஆர்வம் எனக்குப் புரிகிறது.

   ஆனால் …
   ஒரே ஒரு கேள்வி….

   நீங்கள் மேலே சொல்லி இருக்கும் வலைத்தளம்,
   எந்த இடத்திலாவது, நான் மேலே எழுதியிருக்கும்
   விஷயங்களில் எதாவது ஒரு பாயிண்டாவது தவறு
   அல்லது பொய் என்று நிரூபிக்கிறதா …..?

   நான் மேலே சொல்கிற விவரங்களையே தான்
   இந்த வலைத்தளம் positive mode-ல் சொல்கிறது.
   negative விஷயங்களை மறைக்கிறது அல்லது
   சௌகரியமாக மறக்கிறது…..!!!

   – வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • yogeswaran சொல்கிறார்:

    Dear Kaviri Maindhan Sir,

    Is this India Shining???

    rgs

    yogi

   • Siva சொல்கிறார்:

    Dear all, I thought of giving a befitting strong reply to the comments of a reader named ‘ srini’, who posted in the part1 of this series. but I kept silent because partly the timing of crude oil price decrease is just for 2 and 1/2 months only. If it is more than 5 months of lower price but no reduction in price at pump station, it is a huge concern. We cannot also compare US situation with Indian market situation. However, it is ANY government to give benefit to people, not build the wealth in treasury. By taking people money from petrol/diesel business, govt should not try to other business. It is unethical.
    Coming to main point, we always get a blinded hardcore supporters in India ( for modi/for m m Singh/ for j j/ for Mu ka/ etc.). This is the problem for us. If the leader of their favorite does anything, they will support it without putting thier brain into that. Srini is one of them; his posted comments/ links contradict with him. But he still argue that he is correct. It is a great concern for all.
    Whether it is your brother/father/mother/teacher, NEVER MIND to correct their mistakes! It is your duty to go with correct path. Don’t try to cover up the mistakes by stupid explanation.
    Finally, KM sir is doing a great job by analyzing the fact in neutral way without any bias to any one. If you read his previous posts, one can realize how much he supported modi and how he is critical on him now, based only on the works of modi groups. This is the one of the quality of ETHICAL journalism. That’s what we need urgently for educating people in India about right information. I hope srini will grow up!
    Siva

    • Siva சொல்கிறார்:

     If you guys have any problem in understanding about Good Governanc, go and read the Thirukkural, where you get the information for Ethical way of governance. Don’t believe too much on the present day capitalistic governance. It is bleeding process.

 2. R.Chandrasekaran சொல்கிறார்:

  Dear KM sir,

  Welldone. I think this is starting only.

 3. LVISS சொல்கிறார்:

  The overdraft will be available only for accounts well conducted — This is a normal banking practice —
  There is no clarity on how the subsidy will be credited to the account—
  From what I could make out , as soon as the bill is generated in the gas agency against an order the subsidy amount will be credited to the account—In this age of advanced banking this is not impossible(,after all with a atm card we are able to make immediate credit when we purchase some thing from a shop)– This will not force the people to get the cylinder first by paying full amount and then getting reimbursement—-Most of the villagers have sb accounts but most of them may not be using gas but folowing conventional way of cooking using wood —They should be allowed to get insurance for their existing accounts –

 4. D. Chandramouli சொல்கிறார்:

  It is indeed a nightmare for the public to go through such bureaucratic procedures. Our official machinery excel in making such complicated systems and procedures even for simple distribution of LPG cylinders. Very ingenious way of making the public pay full price and make them go through cumbersome procedures to get the subsidy, and on top of it, ultimately the subsidy could be reduced or abolished altogether! KM, thanks for bringing out instances of how the public have to go from pillar to post for these mercies from the government. Kudos to the commentators for exchange of valuable and interesting info.

 5. Dhamodharan Subramaniam சொல்கிறார்:

  I have my personal experience from my native regading the subsidy getting credited in the bank account. As usual you pay the non-subsidy amount. the subsidy gets credited in the next 2 days after the dealer sends the report. These days it is computerised and when crores of rupees gets disbured as salary from various oraganisations inluding state govt and central govt companies every month, this is peanuts..

  I believe the govt is right in implementing this scheme and we should be targeting atleast no-subsidy to tax payers with taxable income above Rs 3 lakhs.

  The problem in this country is everybody has high expectations about Modi whereas he has limitations in all hues and colours right from RSS to his ill advised MPs.

  When the diesel prices were kept artificially low by UPA and it started to increase the same by 50ps evrery month only in the last phase of UPA II no body were questioning.

  Now the PSU’s are not making money ,the govt is forced to collect some part of the shortfall in the projected revenue through increased excise duty.

  FYI.. the residual AP state is facing lot of problems due to low collection of taxes on-account of low petrol and diesel prices. Consider the magnum of India’s problems.

  It is easy to write a blog and go away but the nature of the problems which have a legacy right from Mahatma Gandhi times cannot be cured in 5 years time. It is a LONG WAR..not a small BATTLE.

  PS; I Am NO Fan of Modi..

 6. Arun சொல்கிறார்:


  I am really surprised that you had so much expectations from Narendra Modi.

 7. Pingback: LPG விஷயத்தில் மக்கள் ஏமாற்றப்படுவது எப்படி …? (சிங்கம் – நரி – பகுதி -2 ) | Tamil Telegram

 8. venkat சொல்கிறார்:

  I will give you my real world example of how the DBT ( Direct Benefit Transfer ) will prevent leakages. when we lived in our native ( a village in Tirunelvi Dist., ) we had two gas connections. one in my name and another in my mothers name. Later, when I moved to the US, we let the connection in my name to be used by my neighbor. After 10 years, I returned back and now I live in Bangalore. The connection in my mom’s name ( who lives with me ) is also used by the same neighbor who runs business that needs heating by Gas!!!

  Ever since DBT notice was issued, he could not use both of our connections as we need to open a bank account and link the connection to the bank account. we, now, have no proof to open the account and hence recommended the neighbor to pay up full ( by declaring that we don’t need the subsidy ) if he is keen to continue using the connection. That’s just two subsidy saved!!!

  now go figure how much the government would save if the drive is completely implemented!!!!

  while I respect the author of this blog, I feel the article lacks depth and the calculation provided is just a farce. I work in the digital payment, electronic commerce industry and had privy to reports run on pilots based on biometric authentication ( aadhar ) and direct benefit transfer. In all those cases, the savings ( just by eliminating ghost ) were upwards of 50%.

  On Jan-Dhan yojana…it is a farsighted measure, which would give benefit in long run. forcing people to keep money in bank account and access the same using cards is like changing habit of masses…. but this will eliminate so much wastages in the system. Again, I am commenting from my industry experience… does the author know how much a migrant labor who is from Bihar working in Bangalore need to spend to send money home????? apart from the fee that they have to pay to the illegal channel, on the receiving end, money distribution network is controlled by mafia’s who takes upward of 25% commission. cut and fast-forward to the landscape with every migrant worker having a bank account and tieing that up to a mobile banking. Thru IMPS ( one of the initiatives from NPCI), one can transfer money instantly ( yes, instantly on all days including sundays and public holidays ) for a fee of just 50 paise!!!! you heard it right… 50 paise.

  In my humble opinion even if 25% accounts are effectively used there will be grass root level changes in this country!!! guys, just get ready for a digital India, that is the only way out of the hole we are currently in.

  Finally, politics is no saint’s game…. the king should know when to be a lion and when to be a wolf/jackal/dog/cat/snake!!!! as long as you trust the king and his abilities ( proven elsewhere… read it as Gujrat ) just march behind him and encourage people to march behind him. It is better than sitting and criticizing….

  I will comment on the oil prices seperately….

 9. venkat சொல்கிறார்:

  on crude price….
  there was an interesting article on mint last week explaining how the low oil prices will play spoil sport on Indian economy…. I liked all points made by the author.. some in my own words, which are not nearly as effective as the author’s….

  1. oil prices are quoted in USD. During the same period crude prices dropped about 40%, USD appreciated against INR. So a chunk of price drop in crude was negated by the loss of INR against USD.

  2. Compared to the negative effect of subsidy ( when oil prices are high ) and the effect on inflation ( again when oil prices are high ) the positive effect on country’s finance when oil prices drops significantly is low. how??? the author said that government earns huge revenue via tax on petroleum products ( petrol and diesel ) sold. when the end product price drops and the consumption remains the same, it creates a huge hole in the tax revenue to the government.

  I am not an economist. but I am totally convinced based on the above two points, why the price of end products cannot be dropped to the same level as the drop in the crude.

  I will give you another anecdotal evidence… ever since the crude price started dropping the share of oil companies started falling and in this year that is one of the sectors ( apart from real estate ) that posted negative growth on stock price. Only one reason… the revenue of the oil firms will fall and hence the correction. if what the author says is true, that is the oil companies are making a windfall profit by not passing on the price drop to the consumers their stock prices would be going north!!!

  Author has conveniently forgotten the fact that the oil companies are government owned and any profit made, even if I have to assume that they fleece innocent comman man like the author, is only going to the coffer of the government.

  To my eyes… lion or jackal…. the decision makes perfect financial sense.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் வெங்கட்,

   பாஜக அரசை / மோடிஜி நிர்வாகத்தை இந்த விஷயத்தில்
   நியாயப்படுத்த நீங்கள் சொல்லும் காரணங்கள் எல்லாம்
   ஏற்கெனவே சொல்லப்பட்டு விட்டன.

   ஒரே விஷயத்தை பல கோணங்களில் பார்க்கலாம்.

   பத்தாண்டுக் காலம் அமெரிக்காவில் இருந்து சம்பாதித்து,
   வசதியாக செட்டில் ஆன – பாஜக / மோடிஜி ஆதரவாளர் ஒருவர்
   தனக்குப் பிடித்த அரசின் செயல்களை நியாயப்படுத்தும் அணுகுமுறை /
   பார்வை உங்களுடையது.

   இந்த நாட்டில் உள்ள சாதாரண, பாதிக்கப்பட்ட, சராசரி பொது மக்களில்
   ஒருவனின் பார்வை என்னுடையது.

   தேர்தலுக்கு முன்னர் ஆதார் எண்ணை முற்றிலுமாக எதிர்த்த
   பாஜக இப்போது அதை வற்புறுத்துவது ஏன் …?
   இவ்வளவு விளக்கங்கள் சொன்ன நீங்கள் அதைப்பற்றி ஏன்
   எதுவும் சொல்லவில்லை.
   இன்னும் ஆதார் அட்டை வாங்காத ஏழை மக்களுக்கு
   ஏற்பட்டுள்ள டென்ஷன் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ….?

   ஜனநாயகத்தில், மக்கள் அரசைத் தேர்ந்தெடுப்பது தங்களுக்கு நல்லது
   செய்யத் தானே தவிர, இருக்கும் வசதிகளையும் பறிகொடுக்க அல்ல.

   தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு –
   நிம்மதி இல்லாமல் அலைகிறோமே என்று மக்கள் படும் துன்பம்
   உங்களுக்குப் புரியாது. கேஸ் ஏஜென்சி எதாவது உங்கள் வீட்டருகில்
   இருந்தால் போய்ப் பாருங்கள் – அங்கே மக்கள் படும் அவதி புரியும்.

   ஒரு வேளை ஆறு மாதங்களுக்குப் பிறகு,
   வருமான வரி செலுத்துவோர்க்கு எல்பிஜி மான்யம்
   (LPG subsidy ) கிடையாது என்று மத்திய அரசு உத்தரவு போட்டால் –
   அப்போது உங்களுக்கு
   இந்த துன்பங்கள் எதாவது புரியுமோ என்னவோ ……..

   இது ஒரு ஹிப்போகிராட் அரசு.
   காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது எதிர்த்தவற்றை எல்லாம் –
   இப்போது தான் ஆட்சியில் அமர்ந்தவுடன்-
   எந்தவித கூச்சமும் இல்லாமல், காங்கிரசை விடத் தீவிரமாக
   நிறைவேற்றத் துடிக்கும் அரசு.

   இதற்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு – நான் எவ்வளவு தான்
   விளக்கம் சொன்னாலும் – அது எடுபடாது என்பது எனக்குப் புரிகிறது.
   இருந்தாலும், பதில் சொல்ல வேண்டிய கடமைக்காக இதை
   எழுதுகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.