( சிங்கம்-நரி – பகுதி-3 ) மண்ணெண்ணை நிறுத்தம் – ரேஷன் கடைகள் ஒழிப்பு…..நாசமாய்ப் போக வழி…..

.

.

பொதுவாகவே பாஜக வின் கொள்கைகளை மே 2014க்கு முன்
என்றும் மே 2014க்கு பின் என்றும் பிரித்துக் கொண்டால் தான்
தற்போதைய இந்திய அரசியலே ஓரளவு விளங்கும்
போலிருக்கிறது…..

எதிர்க்கட்சியாக இருந்தபோது தான் எதிர்த்த
அதே விஷயங்களை – தான் ஆட்சிக்கு வந்ததும்,
அதி தீவிரமாக நிறைவேற்ற முற்படுவதும்,

தாம் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று
சொன்னவற்றை, வசதியாக மறந்து விடுவதும் –
பாஜக வின் விசேஷத் தன்மை ( ஸ்பெஷாலிடி )
என்றாகி விட்டது.

உலக வர்த்தக அரங்கம் (WTO ) விதிக்கும் கட்டளைக்கேற்ப
காங்கிரஸ் கூட்டணி – ம.மோ.சிங் செயல்படுகிறது என்று
சொல்லிய பாஜக உணவுப் பொருட்களுக்கு பதிலாக
ரொக்கம் கொடுக்கும் திட்டத்தை ( Direct Benefit Transfer
of cash ) எதிர்க்கட்சியாக இருந்தபோது மிகத்தீவிரமாக
எதிர்த்தது.

அரிசி, கோதுமை போன்ற தானியங்களை இந்திய அரசு
மக்களுக்கு மான்ய விலையில் கொடுக்கக்கூடாது என்பது
தான் WTO-வில் அமெரிக்காவின் நிலை.

மக்களுக்கு மான்ய விலையில் பொருட்களை கொடுப்பதை
அடியோடு நிறுத்தி, அதற்கான மான்ய தொகை என்று ஒன்றை-
அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக மத்திய அரசு
செலுத்தி விட வேண்டும் என்பது திட்டம் ( இப்போது புரியுமே –
அனைவருக்கும் வங்கிக் கணக்கு –
பிரதமரின் “ஜன்-தன்” எதற்கு இவ்வளவு அவசரமாக,
இவ்வளவு தீவிரமாக வருகிறது என்று…! )

வெளிச்சந்தையில், உரிய விலையைக் கொடுத்து
பொருட்களை மக்கள் வாங்கக் கூடிய சூழ்நிலையை
படிப்படியாக ஏற்படுத்த வேண்டும் என்பதே – வெளியே
பாதி சொன்ன மற்றும் மீதி சொல்லாத விஷயங்கள்.

அப்போது தானே – உலக அளவில் வர்த்தகம் பெருகும்.
அமெரிக்க உணவுப் பொருட்கள் இந்திய சந்தைக்கு
தாராளமாக உலா வரலாம்….

பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முழுமையாக நுழைய,
ரேஷன் முறை அவர்களுக்கு பெரிய இடஞ்சலாக இருக்கிறது.

படிப்படியாக ரேஷன் பொருட்களை ஒழித்து விட்டால்,
என்ன விலை கொடுத்தாவது சந்தையில் மக்கள்
தானியங்களை வாங்க வேண்டிய அவசியம் உண்டாகும்….

காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசில் இருந்த வரை,
இந்த திட்டத்தைச் செயல்படுத்த தேவையான மெஜாரிடி பலம்
அவர்களுக்கு இல்லை.

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் “உல்டா-பல்டி” அடித்தது.
உணவுப் பொருட்களை மான்ய விலையில் மக்களுக்கு
ரேஷன் கடைகள் மூலம் கொடுப்பதை அடியோடு நிறுத்த
WTO-வில் வாய்தா வாங்கிக் கொண்டு வந்திருக்கிறது.
இரண்டு வருட அவகாசம் கொடுங்கள், அதற்குள்
பின்னணியைத் தயார் பண்ணி விடுகிறோம் என்று
சொல்லி விட்டு வந்திருக்கிறது.

மறைமுகமாக இதைச் செயல்படுத்தத் துவங்கியதன்
முதல் படி தான் ரேஷன் கடை மூலம் ‘கெரோசின்’
( மண்ணெண்ணை ) கொடுப்பதை நிறுத்துவது.

அண்மையில் மத்திய அரசின் கொள்கை முடிவு
வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 2015 முதல்,
மாநிலங்களுக்கு மத்திய அரசால் ரேஷன் கடைகள் மூலம்
கொடுக்கும் மண்ணெண்ணை சப்ளை செய்வது முற்றிலுமாக
நிறுத்தப்படுகிறது.

சமையல் எரிவாயுவுக்காவது, தற்போதைக்கு மான்யத்
தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் போடுவதாக
அறிவித்திருக்கிறார்கள்.

மண்ணெண்ணைக்கு அதுவும் கிடையாது.
மண்ணெண்ணை சுத்தமாக ஒழிக்கப்படுகிறது….

ஏற்கெனவே 2 சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு
கெரோசின் சுத்தமாகக் கிடையாது என்பது பாலிசி.
ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு
ஒரு மாதத்திற்கு 2 லிட்டர் கொடுக்கப்படுகிறது.
எரிவாயு இணைப்பே (கனெக்ஷன்) இல்லாதவர்களுக்கு
மாதம் 10 லிட்டர்.

இப்போது மத்திய அரசு விரிவாக ஆராய்ச்சி செய்து
ஒரு மிக முக்கியமான விஷயத்தைக் கண்டு பிடித்திருக்கிறது.

மண்ணெண்ணையை சமையலுக்கு பயன்படுத்துபவர்கள்
இந்தியாவில் யாருமே இல்லையாம்.

(எரிவாயு இணைப்பு இல்லாத கிராமத்தவர்கள்
விறகு-சுள்ளி தானே பயன்படுத்துகிறார்கள் என்பது
மத்திய அரசின் வாதம்…! )

பெரும்பாலும் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்
வந்து விட்ட ( ? ) நிலையில், வீடுகளில் –
விளக்கு வெளிச்சத்திற்காக
மண்ணெண்ணை தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையும்
கணிசமாகக் குறைந்து விட்டதாம்.

எனவே, மண்ணெண்ணை சப்ளையை முற்றிலுமாக
நிறுத்தி விட்டு ( அதற்கான மான்யத் தொகையும்
முற்றிலுமாக “கட்” ) மின் இணைப்பு இல்லாத
இடங்களில், சூரிய ஒளி மின்சாரம்
கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகளைத்
துவக்கப் போகிறார்களாம் ….! ( மகா பாவிகளே –
அதை முதலில் செய்து விட்டு பிறகு அல்லவா
இதை நிறுத்த வேண்டும் ….? )

சமைப்பதற்கு மண்ணெண்ணை தேவை அடியோடு
தீர்ந்து விட்டது என்பதே அபத்தமான வாதம்.
ஒற்றை சிலிண்டர் வைத்திருக்கும் குடும்பங்கள்,
சிலிண்டர் காலியாகி விட்டால்,
மறு சிலிண்டர் வரும் வரை என்ன செய்யும் ….?

மேலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும்
(குஜராத்தையும் சேர்த்து தான் ) – மின்சாரத் தொடர்பு
அறுந்து போகும்போதெல்லாம், மக்களுக்கு உதவுவது
மண்ணெண்ணை விளக்குகள் தானே ?

நகரத்து மக்களுக்கு வேண்டுமானால், இன்வர்டர்கள்,
பேட்டரிகள் கை கொடுக்கும். கிராமத்து மக்கள்
கரெண்ட் போனால் என்ன செய்வார்கள்….?
மண்ணெண்ணை லாந்தர் /கை விளக்குகள் தானே ?

அறிவிப்பு வந்திருப்பது முதலில் சமையல் எரிவாயு…
அடுத்து கெரோசின் ( மண்ணெண்ணை )
அடுத்தடுத்து வரிசையாக வரவிருப்பது –
அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள், பாமாலின் —-

ஒவ்வொன்றாக ஒழித்து விட்டு, அதற்கு ஈடாக ரொக்கமாக
பணத்தை ( Direct Benefit Transfer of cash ) பிரதமர்
மோடிஜியின் “ஜன்-தன்” னில் போடும் திட்டம் –

உண்மையில் இதற்கு “ரேஷன் கடைகளை
ஒழிக்கும் திட்டம்” என்று பெயர் வைத்தால் தான்
பொருத்தமாக, பொருள் விளங்கும்படி இருக்கும்.

இந்த வலைத்தளத்தை படிக்கும் நண்பர்கள் யாருக்கும்,
அநேகமாக, ரேஷன் கடைகளை நம்பி இருக்கும் நிலை
இருக்காது. ஆனாலும், நான் சொல்வதை அவர்களால்
நன்றாகவே உணர முடியும்.

இந்த நாட்டில் ரேஷன் கடைகளை நம்பியே
உயிர் வாழும் குடும்பங்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றன.
நான் இருக்கும் ஏரியாவிலேயே இரண்டு ரேஷன் கடைகள்
இருக்கின்றன. நான் அநேகமாக தினமும் இவற்றினூடே
நடந்து செல்கிறேன். அங்கு ரேஷன் பொருட்களை
வாங்க காத்திருக்கும் பெண்களைப் பார்க்கிறேன்.
சமுதாயத்தின் கடைசித்தட்டு மக்கள். அழுக்கு உடைகள்,
கலைந்த தலை, பவுடர் பார்க்காத முகங்கள், என்னென்னவோ
கவலைகள் – இடையில் இன்று அரிசி வந்திருக்கிறதா,
பாமாலின் ஸ்டாக் இருக்கிறதா என்று ஒருவருக்கொருவர்
விசாரித்தல்கள். அவர்கள் பாதி வயிறாவது சாப்பிட உதவும்
இந்த ரேஷன் கடைகளையும் ஒழித்து விட்டால் ……
அவர்களுக்கு அதைவிட பெரிய கொடுமையை வேறு யாரும்
இழைத்து விட முடியாது.

இது ஜனநாயக நாடு. தங்களுக்கு நல்லது செய்வார்கள் என்று
நம்பித்தான் ஓட்டு போட்டு, கட்சியை, தலைவர்களை
தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள் மக்கள்.

ஆனால் – பதவியைப் பிடித்தாகி விட்டது….
அடுத்த 5 வருடங்களுக்கு நாம் என்ன செய்தாலும் யாரும்
கேள்வி கேட்க முடியாது என்கிற மனோபாவத்துடன்
ஆட்சியாளர்கள் நடந்து கொண்டால் ……
ஒரு நாள் நிச்சயம் அதன் பலன்களை, விளைவுகளை –
அவர்கள் சந்தித்தேயாக வேண்டியிருக்கும்.

இங்கு வலைத்தளத்தில் பின்னூட்டங்களில் வருவதைத் தவிர,
தனிப்படவும் சிலர் எனக்கு ஈமெயில் அனுப்புகிறார்கள்.
அவர்களில் சிலர் எழுப்பும் முக்கியமான ஒரு கேள்வி –

” நீங்கள் சொல்லும் பல விஷயங்கள் serious ஆக
தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியனவாக
இருக்கின்றன. ஆனால், மீடியாக்களில் பெரிய அளவில்
இதைப்பற்றி எல்லாம், செய்தியோ, விவாதங்களோ
வருவதில்லையே – என்ன காரணம் ..? ”

இதற்கு நான் என்ன பதில் சொல்லட்டும் ….?

என்னைப் பொருத்த வரையில் நான் உண்மையை மட்டும்
தான் எழுதுகிறேன். அதை என் நோக்கில், என் பார்வையில் –
சமுதாயத்தின் மீது எனக்குண்டான அக்கரையுடன் எழுதுகிறேன்.

மீடியாக்களை “கவர்” செய்வது எப்படி என்பதில் இன்றைய
ஆட்சியாளர்கள் மிகவும் கைதேர்ந்தவர்கள். இதை கடந்த
பாராளுமன்ற தேர்தலின் போதே நாம் பார்த்திருக்கிறோம்.

மக்கள் இன்னும் தெளிவுடன் இருக்க வேண்டும் –
கண்ணை மூடிக்கொண்டு எந்த கட்சியையும்,
எந்த தலைவரையும் ஆதரிக்காமல் –

கட்சி சார்பற்று, சுயமாக யோசிக்கப் பழக வேண்டும்.
நல்லது எது – கெட்டது எது என்று தெரிந்து கொண்டு –
தங்களது ஆதரவையோ, எதிர்ப்பையோ காட்டுவதில்
எந்தவித அலட்சியமோ, பயமோ கொள்ளாமல்
செயல்பட வேண்டும். இதைத்தவிர வேறோன்றும்
எனக்கு சொல்லத் தோன்றவில்லை.

இந்த இடுகை இன்னும் முடிவடையவில்லை –
தொடர்கிறது ( சிங்கமும்-நரியும் ….. பகுதி-4 -ல்)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to ( சிங்கம்-நரி – பகுதி-3 ) மண்ணெண்ணை நிறுத்தம் – ரேஷன் கடைகள் ஒழிப்பு…..நாசமாய்ப் போக வழி…..

 1. Siva சொல்கிறார்:

  Unfortunately, political/ruling leaders, govt civil servants and some technocrate people are thinking that all Indian families are economically developed, so we do not need any social program like public distribution system (PDS). But the reality is still many families in India depend on PDS. With pressures from capitalistic economic countries ( ironically, these countries also adopt many social program in different way), Indian rulers have to bend for it at the cost of basic need of poor Indians.

 2. yogeswaran சொல்கிறார்:

  Dear Kaviri Maindhan Sir,

  The rations were introduced in United Kingdom during the Second World war.

  It spread all over the Empire.

  Today U.K doesn’t have Ration shops.

  But we are continuing it.

  Is there any way to justify the ration shops with the corruption related to it.

  What will happen to the the free rice scheme of the Tamil Naadu government.

  Rgs

  Yogi

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் யோகி,

   மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் வரை, சமூகத்தின்
   சில பிரிவினருக்கு ‘ரேஷன் கடைகள்” மிகவும் அவசியம்.

   20 கிலோ அரிசியைத் தவிர –
   ரேஷன் கடைகள் மூலம் – சர்க்கரை, துவரம் பருப்பு,
   உளுத்தம் பருப்பு, பாமாலின் எண்ணை ஆகியவையும்
   கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு விலையில்
   கிடைக்கின்றன. இதில் ஒரு பகுதி அரிசிக்கு மட்டுமே
   மத்திய அரசு பொறுப்பேற்கிறது. மீதி எல்லாம்
   மாநில அரசின் உதவி.

   போன வருடம் தொழிலதிபர்களுக்கு மத்திய அரசு
   செய்த “வரித் தள்ளுபடி” மட்டும் சுமார் ஐந்து லட்சத்து
   அறுபதாயிரம் கோடி ரூபாய்கள். உண்மையில் உதவிகள்
   யாருக்குப் போய்ச்சேர வேண்டும் …? தொழிலதிபர்களுக்கா
   அல்லது இத்தகைய ஏழைக்குடும்பங்களுக்கா …?
   நீங்களே சொல்லுங்கள்….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    KMji
    //போன வருடம் தொழிலதிபர்களுக்கு மத்திய அரசு
    செய்த “வரித் தள்ளுபடி” மட்டும் சுமார் ஐந்து லட்சத்து
    அறுபதாயிரம் கோடி ரூபாய்கள்.//

    5,60,000 x 1,00,00,000 = 56,00,00,00,00,000
    இதை இப்படி எண்ணால் பெருக்கிப்போட்டுக் கண்ணாமுழி பிதுங்குகிற அளவுக்குக் காட்டினால் தான் மக்களுக்குப் புரியும்.

    மேலும் யுகே டாலரிலேயே வருமானம் பார்ப்பவர்கள் ஜீரோஜீரோவாகத்தான் போட்டுப் பார்ப்பார்கள்.

    எழுத்தால் காட்டுவதை விட படமாகவோ வரைபடமாகவோ காட்டினால் மிக எளிதாகவும் அதிகமக்களையும் சென்றடையும்.

   • yogeswaran சொல்கிறார்:

    Kaviri Maindhan Sir,

    Thank you very much for information.

    Every year big sharks are given concessions to start this industry or that industry.

    I think much of that goes to the ambani group.

    I do not know whether people get the benefit out of this concessions to big business.

    Is this crony capitalism.

    As you say until people are empowered they shall be supported.

    one such scheme is the mid day meal scheme of late chief minister MG.Ramachandran.

    i feel if the waste and corruption is eradicated in the ration system it could save billions.

    rgs

    yogi

    • Siva சொல்கிறார்:

     Yoges, as per my understanding, mid day meal scheme was introduced by Thiru K Kamaraj. MG RAmachandiran added the strength to that scheme. If any body knows well about the scheme, please clarify it.

     • yogeswaran சொல்கிறார்:

      Sir,

      You are correct.

      Perun Thalaivar K.Kamaraj started it in the name of Madhiya unavuth thittam.

      But it had to depend on the donations of food provisions from local Mittah,Mirrassu.

      M.G.R revolutionized it by funding through govt and centralized planning.

      thousands of widows were employed to cook and serve the food.

      The scheme changed tamil naadu.

      MGR faced a lot of ridicule.

  • Siva சொல்கிறார்:

   UK does not have ration system now, but they STILL have many social welfare schemes until today for helping many people. Only the difference is UK people do not stand on queue for getting this benefit. The public distribution system of India (ration store) is one of the so-called welfare scheme. Here, the people will stand in queue because the ration store will be better than private stores. If you give the ration benefit as a cash credit to bank account or handy cash to purchase the rice/lentils/kerosene from private stores, there will be NO ethical way of sales in private stores. That’s why still people accept ration store although many ration store servants do cheating/looting/other malpractices.

   • yogeswaran சொல்கிறார்:

    Dear Ezhil Sir,

    I have studied and worked in U.K.(not presently)

    I have not seen a ration stores.

    But all groceries supply food at different prices. from low to high.

    hence even a poor man can survive.

    In U.K we have queue

    But as the people are decent, no one jumps the queue.

    when ever some guy jumps they know he is an alien.

    but taxes are high,

    transport,energy bills are also costly.

    You are correct.

    They have many welfare schemes.

    rgs

    yogi

 3. எழில் சொல்கிறார்:

  “நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு பயப்படுவது, பேச அஞ்சுவது, கேள்விகளுக்கு முகம் கொடுக்காது ஓடுவது ஆனால் யாரும் கேள்வி கேட்காத இடங்களில் வாயை திறந்து பேசுவது” போன்றவை நாம் முன்னாள் பிரதமர் மீது வைத்த குற்றசாட்டுகள்.

  கவனித்து பார்த்ததில்…அவை தற்போதைய பிரதமருக்கும் அப்படியே பொருந்துகிறதே!

  ஹி இஸ் அவர் சிங்கம்!?

 4. Ganpat சொல்கிறார்:

  From frying pan to fire என்று ஒரு சொலவடை உண்டு..காங்.ஆட்சியின் கொடுமை தாங்காது நாம் தேர்ந்தெடுத்தது மோடியை.எனவே நமக்கு இதில் பெரிய ஏமாற்றம் கிடையாது.ஆனால் கா.மை. தர்க்க ரீதியாக முன்வைக்கும் சந்தேகங்களுக்கு சிலர் உணர்ச்சி வசப்படுவது ஏன் என தெரியவில்லை.மோடி இதுவரை கொண்டு வந்துள்ள திட்டங்கள் இந்நாட்டின் ஏழை எளிய மக்களுக்கு எந்த அளவு உதவப்போகிறது என எனக்குப்புரியவில்லை.அதைதான் கா.மை அவர்கள் வினவுகிறார்கள்.Personally I dont even have 50% of the hopes on Modi that I had nine months back.God save the nation.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,

   நாம் மீண்டும் கிட்டத்தட்ட அதே நிலைக்கு
   வந்து விட்டோம்……
   இன்னும் நாலரை வருடங்கள்……??

   மோடிஜியிடம் செயல் திறன் இருக்கிறது.
   ஆனால், அவரது ஆர்வம்
   எல்லாம் வேறு பக்கம் ……
   costumes, publicity, ego,
   business people….. etc. etc.

   பேசும் வார்த்தைகளில் உண்மை இல்லை.
   முக்காலே மூணு வீசம் – நாடகம், வசனம்….
   முதலில் கொஞ்ச நாட்கள் வசனம் கேட்க நன்றாக
   இருந்தது. ஆனால் திரும்பத் திரும்ப அதே
   வசனங்கள்…..
   செயலைத்தான் காணோம்.

   நீங்கள் சொல்வது போல் –
   இந்த நாட்டை – கடவுள் தான்
   காப்பாற்ற வேண்டும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. yogeswaran சொல்கிறார்:

  Kaviri Maindhan Sir,

  The article below is not related to main article.

  but may useful to understand the Sri lankan history.

  Rgs

  yogi

  Ancestral links of Leaders of Sri Lanka
  Statesmen of Sri Lanka who followed the Sinhala and Tamil Kings, the Portuguese Captains-General, the Dutch and British Governors, have either been the descendants of the original inhabitants of the country, who had come from North India in ancient times or those whose ancestors had come from South India in more recent times in different waves of migration. The first Prime Minister of Ceylon, as the country was then known, after it regained freedom after nearly 450 years of Western domination, Don Stephen (DS) Senanayake, was one whose ancestors had come from North India.
  Tweet
  inShare
  Email
  Ceylontoday, 2014-12-20 02:00:00
  Ancestral links of Leaders of Sri Lanka
  By Chandra Tilake Edirisuriya

  Statesmen of Sri Lanka who followed the Sinhala and Tamil Kings, the Portuguese Captains-General, the Dutch and British Governors, have either been the descendants of the original inhabitants of the country, who had come from North India in ancient times or those whose ancestors had come from South India in more recent times in different waves of migration. The first Prime Minister of Ceylon, as the country was then known, after it regained freedom after nearly 450 years of Western domination, Don Stephen (DS) Senanayake, was one whose ancestors had come from North India.

  Members of 1,000 families of 18 guilds such as farmers, carpenters, goldsmiths, blacksmiths, brass founders, stone cutters, weavers, potters and others came to Sri Lanka when the Sacred Bo Tree was brought by Emperor Dharmasoka’s daughter Arhat Therini Sanghamitta, for its protection and for the performance of rites and rituals connected to it. Eight saplings of the original tree planted at Mahamevuna Uyana in Anuradhapura were planted at various other localities of the Island. One of first Prime Minister D.S. Senanayake’s ancestors may have been in the party who brought a sapling, of the Bo tree at Mahiyangana to be planted at the shrine of King Siri Sangabodhi at Attanagalla. On the last stop, before reaching Attanagalla, they rested for the night at Botale. In the morning they found that the sapling had taken root in the soil where they had kept it. So, the Senanayakes of Botale are the descendents of the people who brought the Bo sapling.

  D.S. Senanayake
  Prime Minister, Sir John Lionel Kotelawala, also would have been descended from the original inhabitants from North India but his ancestry has properly been traced to the family of Wickramasinghe Mudali who supported King Rajasinghe the First, in the wars against the Portuguese in the 16th century. Wickramasinghe Mudali from Raigam Korale went to live in Kotelawala, a village near Bandaragama, after winning laurels of war. After a brilliant military career he became the foremost citizen in the village of Kotelawala. As in many other countries it was customary for the foremost citizen to take the name of the village or area they live in. So, the Wickramasinghe family began to be known as the Kotelawala family. Although they took Dutch names like Johannes, the Christianization of the Kotelawala family was short lived. They became nominal Christians during Dutch rule and reverted to Buddhism.

  The ancestry of Prime Minister Solomon West Ridgeway Dias Bandaranaike is traced to Nilaperumal Arya Kamadeva aka Kalukapuge, of South Indian origin, born in 1591, who became the High Priest of Nawagamuwa Devale and Mohotti Appuhamy born in 1625. During the Dutch period (1656-1796), they took Western Christian names and changed their religion from Buddhism to Christianity. They held positions under the British. Jacobus Dias Wijewardena Bandaranaike born in 1780 was Mudaliyar of Governor Gate and Translator of the Supreme Court. Henry Dias Bandaranaike – Sir Harry (1822-1901) was a Judge of the Supreme Court and a Member the Legislative Council.

  Sir John Kotelawala
  Don Solomon Dias Bandaranaike, Mudaliyar of Siyane Korale, 1st Udugaha Mudaliyar (1777-1859), assisted as Interpreter on 10 February 1815, when Sri Wickrama Rajasinghe, the last King of Kandy, was taken to Colombo. He was present at the signing of the Kandyan Convention on 2 March 1815. He received a Gold Medal in 1803 for his services to the British Government. He marshalled labour through the Rajakariya System and built the Colombo-Kandy Road. It was Don Solomon’s branch of the family of Bandaranaikes who appear to have spelt its name as Bandaranaike. He lived to a ripe old age of 82 years. He received a government grant of 180 acres of land. It is probably he who built the original Horagolla Walauwa, at the spot, at which he saw, while riding on horseback, a tortoise or kiri ibba, signifying the auspiciousness of the place. His son Don Christoffel Henricus Dias Abeywickrama Jayatilake Seneviratne Bandaranaike, born in 1826 succeeded his father. He resided in the older Horagolla Walauwa built by his father.

  S.W.R.D. Bandaranaike
  His only son later became famous in the service of successive British Governments. He has recorded his intimate association with kings, princesses, dukes and governors and men and women distinguished in various orders of chivalry, in his autobiography ‘Remembered Yesterdays’. With remarkable extravagance of language he styled himself Sir Don Solomon Dias Abeywickrama Jayatilleke Senewiratne Rajakumaruna Kadukeralu Bandaranaike.

  His only son S.W.R.D. Bandaranaike, educated at Oxford University in England changed his religion from Christianity to Buddhism returning from Oxford after a brilliant academic career. He dressed in the national costume and led a simple life. He was of philosophic bent of mind. His wife Prime Minister Sirima Ratwatte Dias Bandaranaike was the daughter of Mahawalatenne Disawe, Barnes Ratwatte, who also got the name Ratwatte as his distant ancestor had been a foremost citizen of the village of Ratwatte.
  Prime Minister and later President Junius Richard Jayewardene according to H.A.J. Hulugalla, descended from, a gentleman of the trading community in Colombo, which was undoubtedly of South Indian origin, who in about the year 1675 went to Walgama, a village close to Malwana and married a Christian lady named Jayawardhana and took her name and adopted her religion. Later, members of the Jayawardhana clan held positions under both the Dutch and British Governments. His father E.W. Jayewardene who was a Judge of the Supreme Court married from the Sedawatte Walauwa and he used to say that out of his nine siblings, eight went with their mother to Vajiraramaya, Bambalapitiya to learn Buddhism while only one went to church with his father.

  J. R. Jayewardene
  President Ranasinghe Premadasa’s ancestors, according to the popular notion, are said to have come from South India to perform a service, for the cinnamon peelers who had come from there earlier, which the locals were not willing to undertake just as the Sinhala people of the upcountry not liking to work in coffee plantations and later tea, requiring the British to import indentured labour from South India. President Mahinda Rajapaksa’s ancestors, belonging to the merchant class in South India, are said to have come to Negombo, brought here by the British. It is said that one of the members of the merchant class named Martin Rajapaksa, who had established himself in Negombo went up to Embilipitiya seeking greener pastures, and descended to the plains down south and married from a land owning family.

  Just as D.S. Senanayake and his son Dudley Senanayake, who succeeded him as Prime Minister, were very respectable in their dealings, S.W.R.D. Bandaranaike the descendent of a High Priest at a leading Devalaya was beyond reproach. And just as J.R. Jayewardene of the merchant class was astute in his dealings and jump-started the economy of the country, President Mahinda Rajapaksa, who belongs to the same class, launched an accelerated programme of economic development. He could be equated to our hero in recent history, King Wimaladharmasuriya I (1591-1604), whose acts of bravery from his youthful days are legendary!

 6. natchander சொல்கிறார்:

  Bjp would lose deposit in 2016 in tamilnadu if the party removes ration system and the womens
  self group scheme in tamilnadu besides noparty would align with bjp

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.