மோடிஜி – சொன்னதைச் செய்தீர்களா ….? பாஜக – சொல்லாததை எல்லாம் செய்கிறீர்களே…. (சிங்கம் – நரி -பகுதி -4 )

bjp election manifesto cover page

 

பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் –பல கனவுகள் நம் கண் முன் விரிக்கப்பட்டன.பல வாக்குறுதிகள் தரப்பட்டன – மோடிஜியால்…./ பாஜகவால்….

முக்கியமாக –

விலைவாசியை கட்டுப்படுத்துவது …
புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது,
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள
கருப்புப்பணத்தை மீட்பது ……
உயர்கல்விக்கான புதிய பல்கலைக்கழகங்கள்உருவாக்குவது…

ஸ்கில்டு – பயிற்சி பெற்ற தொழிலாளர்களை உருவாக்குவது…
உயர்கல்வித்துறையில் அதிக அளவில்
ஆசிரியர்களை உருவாக்குவது….
மத்திய, மாநில உறவுகளை மேம்படுத்துவது ….
நிர்வாக, தேர்தல் – சீர்திருத்தங்களை கொண்டு வருவது …
கிராமப்புற வசதிகளை மேம்படுத்துவது…
பெண்களுக்கான விசேஷ பாதுகாப்புத் திட்டங்கள் …
குழந்தைகள், முதியோருக்கான விசேஷ திட்டங்கள்…..
நாடு முழுவதும் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது ….
அனைவருக்கும் மின்வசதி, சுத்தமான குடி தண்ணீர் …
அதிகரித்த ரெயில் – போக்குவரத்து வசதிகள் ….
அதிக அளவில் நாடு முழுதும் இணைப்பு சாலைகள் …
சாத்தியமான இடங்களில் எல்லாம் – நதிநீர் இணைப்பு …
அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் …..
ஜம்மு காஷ்மீரில் பிரிவு 370-ஐ நீக்குவது…..

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான நிலுவையிலுள்ள
கிரிமினல் வழக்குகளை ஒரு வருடத்திற்குள்
விசாரித்து முடிக்க விசேஷ ஏற்பாடுகள்…..

——————

ஏழு மாதங்கள் ஆயினவே பொறுப்புக்கு வந்து ……
என்ன நடக்கிறது இங்கே …?

இத்தனையையும் உடனே செய்ய முடியாது தான் –
ஆனால், எங்கேயாவது ஒரு மூலையில், ஒரு சிறிய
அளவிலாவது, எதையாவது செய்யத் துவங்கலாம் அல்லவா …?
நிஜத்தில் ஒன்றுமே நடப்பதாகத் தெரியவில்லையே ….

ஆனால், மோடிஜி தேர்தல் கூட்டங்களில் –
சொல்லாததெல்லாம் நடக்கிறது……

நேரில் பார்த்த அனுபவம் இல்லை நமக்கு ….
சரித்திரத்தில் படித்தது தான் பேராசை பிடித்த மன்னர்களின்
சாம்ராஜ்ய விஸ்தரிப்பு பற்றி –
அண்டையில் இருக்கும் ராஜ்ஜியங்களை ஒவ்வொன்றாக
கபளீகரம் பண்ணிக் கொண்டே போவார்கள்.

அதை இப்போது கண்கூடாகப் பார்க்கிறோம் –
காணாததைக் கண்டது போல், மத்தியில் ஆட்சியைப் பிடித்ததும்,
நாடு முழுவதும் அதிகாரத்தை விஸ்தரிக்கும் பேராசை
தலைவிரித்து ஆடுகிறது….

பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கையை விஸ்தரிக்க,
சாம, பேத, தான, தண்டம் எந்த முறையையும்
விட்டு வைக்கவில்லை.

முதலில் ஹரியானா, மஹாராஷ்டிரா தேர்தல்களில்
துவங்கியது. மஹாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்ற
25 ஆண்டுக்கால கூட்டணிக் கட்சியான சிவசேனாவின்
நட்பை பலி கொடுக்கவும் தயங்கவில்லை. 53 பேர்
எதிர்க்கட்சிகளில் இருந்து இழுக்கப்பட்டு பாஜக எம்.எல்.ஏ.
சீட்டு கொடுக்கப்பட்டது.

ஹரியானாவிலும் இதே – ஒரு பக்கம் கூட்டணிக்கு
நம்பிக்கை கொடுத்துக் கொண்டே, இன்னொரு பக்கம் கூட்டணி
கட்சியிலிருந்தே ஆட்களை இழுத்தார்கள்.

அடுத்த விஸ்தரிப்பு முயற்சி ஜார்கண்டிலும், காஷ்மீரிலும்.
இங்கு – முன்னாள் பிரிவினைவாதியுடன் கூட்டு வைக்கவும்,
முக்கிய கொள்கையான 370வது பிரிவை கைவிடவும்
தயங்கவில்லை.

அடுத்து பஞ்சாபிலும் இதே கதை தான். தேர்தல் வருகிற
நேரத்தில் சிரோமணி அகாலி தளத்தை கூட்டணியிலிருந்து
கழட்டி விட ஏற்பாடுகள் நடக்கின்றன….

இதோ – தமிழ்நாட்டிலும் அமீத் ஜீ வருகிறார்.
மற்ற கட்சிகளிலிருந்து ஆள் பிடிக்க வலை வீசப்பட்டாகி
விட்டது. கொழுத்த மீன்கள் சிக்க இருக்கின்றன.

ஒரு வருடத்திற்குள்ளாக, எம்.பி.க்கள் மீதான கிரிமினல்
வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கச்
செய்வோம் என்றார்கள்.
ஏழு மாதங்கள் கடந்து விட்டன – இதுவரை
அதைப்பற்றிய பேச்சு, மூச்சே இல்லை என்பதோடு –

மோடிஜி தன் அமைச்சரவையிலேயே 30% கிரிமினல்களை
அமைச்சர்களாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
ராஜஸ்தான் போலீசால், அரெஸ்ட் வாரண்டுடன்
ஆறு மாதங்களாகத் தேடப்பட்டு வரும் ஒருவரும்
இவர்களது மத்திய அமைச்சர்.

நாட்டின் சுத்தத்தை பற்றி பேசும் மோடிஜி
தன் அமைச்சரவையை
சுத்தப் படுத்தப் போவது எப்போது ?

மாநிலங்களுடன் நல்லுறவு – அதிக அதிகாரம், என்றெல்லாம்
சொல்லி விட்டு, இப்போது எதிர்க்கட்சிகள் ஆளும்
மாநிலங்கள் அனைத்தையும் சீர்குலைக்க முயற்சிகள்
நடக்கின்றன……

வசதிகளை எந்த விதத்திலும் அதிகரிக்காமல்,
ரெயில்வே கட்டணங்களை ஏற்கெனவே 15 % உயர்த்தியாகி
விட்டது. இப்போது புதிய ரெயில்வே அமைச்சர் வந்து
அவர் பங்குக்கு உயர்த்த பட்ஜெட்டுக்காக காத்திருக்கிறார்.

ரெயில்வே சொத்துக்களை –
தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிகள்
வேகமாக நடக்கின்றன…..

பெட்ரோல், டீசல் விலைக்கட்டுப்பாடுகளை நீக்கியதன்
விளைவு, மீண்டும் விலை ஏறுமுகத்தில் இருக்கும்போது
தான் தெரிய வரும்…..

சமையல் எரிவாயுவுக்கான மான்யத்திற்கு –
ஆதார் எண்ணை – மறைமுகமாக கொண்டு வருவதில்
வெற்றி பெற்றாகி விட்டது.

ரேஷன் மண்ணெண்ணை அடுத்த ஏப்ரல் முதல்
ஒழிக்கப்படுகிறது…..
ரேஷன் பொருட்களுக்கான மான்யத்தை ரொக்கமாக
கொடுத்து ரேஷன் கடைகளை ஒழிப்பதில் தீவிரம்
காட்டப்படுகிறது …..

தமிழக மீனவர்களை விட, இலங்கைத் தமிழர்களின்
நல்வாழ்வை விட, கொலைகார ராஜபக்சேயின் நட்புறவு
முக்கியமாகப் போனது …..

முல்லைப் பெரியாறு விவகாரத்திலும்,
காவிரி நதி நீர் ஆணையம் அமைப்பதிலும் –
வேண்டுமென்றே – தமிழ்நாட்டிற்கு விரோதமான
நிலைப்பாடுகள் எடுக்கப்படுகின்றன -( தமிழர்கள் தான்
மோடிஜிக்கு ஓட்டுப் போடவில்லையே…!) ….

ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை நிறைவேற்ற நாள்தோறும்
திமிர் பிடித்து அகம்பாவமாகப் பேசும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் –
கட்டாய மதமாற்ற முயற்சிகள் –
கட்டாய மொழித் திணிப்புகள் –
எங்கும் இந்தி – எதிலும் இந்தி …!!!

தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் –
ஒரு வார்த்தையை கண்டு பிடித்தார்கள்.
“சொன்னதையும் செய்வோம் – சொல்லாததையும் செய்வோம்”….

ஆனால் மோடிஜி / பாஜக இதிலும் வித்தியாசமாக
செயல்படுகிறார்கள்.

“சொன்னதைச் செய்ய மாட்டோம் –
சொல்லாததை செய்வோம்….”

நாம் சொல்வது மோடிஜி காதில் விழாது.
ஆனால், தமிழ்நாடு பாஜக தலைமைக்கு நிச்சயம் போகிறது…

எனவே – சொல்ல வேண்டியதை நாம் இங்கே சொல்வோம்.
ஏற்றுச் செயல்படுத்துவதோ, மேலிடத்திற்கு தமிழக மக்களின்
உணர்வுகளைத் தெரியப்படுத்துவதோ – அவர்கள் விருப்பம் ….!!!

ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்களுக்குள் – இந்த அளவிற்கு
மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுவதும், மக்களை
துன்பத்திற்கும், தொல்லைக்கும் உட்படுத்துவதும் அவர்களுக்கு
நல்லதல்ல.

இப்போதாவது தங்களின் பாதையை மாற்றிக்கொண்டு
மக்களுக்கு அனுகூலமாக நடந்தால் –
மக்களும் நிம்மதியாக இருப்பார்கள்….
ஆட்சியாளர்களும் நல்ல பெயரெடுக்கலாம்…
அடுத்த நாலரை வருடங்கள் ஓரளவு நிம்மதியாகக் கழியும்…

 
ஆட்சி நடப்பது கட்சிக்காக என்றில்லாமல் –
மக்களுக்காக, மக்கள் நலனுக்காக என்றிருக்கட்டும்.

நல்லது நடக்க வேண்டுவோம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

24 Responses to மோடிஜி – சொன்னதைச் செய்தீர்களா ….? பாஜக – சொல்லாததை எல்லாம் செய்கிறீர்களே…. (சிங்கம் – நரி -பகுதி -4 )

 1. வல்லம் தமிழ் சொல்கிறார்:

  சவுக்கடி!நன்றி!

 2. drgemsgvijay சொல்கிறார்:

  modiji veera vasanam veliyii pesuvathodu sari

 3. LVISS சொல்கிறார்:

  The performance of any government whether it is UDA or NDA should be judged at the end of their five year term and this will be evaluated by the people in the elections— The NDA govt, does not have enough numbers in Rajya Sabha to push through reforms without which no significant improvement can be achieved–
  The growth of BJP in T Nadu may not be as phenomonal as it happened in North Indian states

 4. visujjm சொல்கிறார்:

  தங்கள் பணிக்கு முதற்கண் பாராட்டுக்கள் ஐயா…

  இவ்வளவு நடந்தும் நாடு வளர்ச்சி பாதை நோக்கி செல்கிறது என்று மெத்த படித்த (IT Workers and Out Sourcing workers and Real Estates முதலைகள் etc etc…) அதிமேதாவிகள் பங்குசந்தை எழுச்சியை மட்டும் கொண்டு நம் தேசம் அசுர வேகத்தில் முன்னேறுகின்றது என்னும் மமதைக்கு சவுக்கடி கொடுத்து விட்டீரே…

  தாங்கள் நினைப்பது போன்று அசுர வேகத்தில் நடுநிலையில் ஏழை நலன் செவி சாய்க்க சிங்கம் ஒரு சங்கிலி கொண்டு பிணைக்கப்பட வில்லையே… எத்தனை முடிச்சுகள் அத்தனையும் அந்நிய முதலீடுகளாக அல்லவா பிண்ணப்பட்டு வருகின்றது இதில் போபாலில் நடந்த பிண வியாபாரம் போல இனி வரும் காலசக்கரம் சுழலும் போது மரபணு விதை, அணுமின் அரக்கன்,வியாபாரக் கணக்கில் இலாபம் ஒன்றே குறிக்கோள் என்கின்ற பணமுதலைகள் பசிநீக்கி இந்தியா தான்…,

  எல்லா மாற்றங்களும் உலக வல்லரசு நலன் கொண்டே பிண்ணப்படுவது நிறுத்த மோடி ஜி துணையிருப்பார் நாம் இந்தியனாக நம் தேசம் வளர்சிதை நோக்கி போவதை ஓட்டு போட்ட நன்றிக்கு கொஞ்சம் கண்ணீரோடு கொஞ்சம் கவலையோடு தென்பகுதியும் குமரிக்கண்டம் அழிந்தது போன்ற வரலாற்றை படிக்க உலகதமிழர்கள் நமக்கு துணையிருப்பார்கள்…

  ஒரு கக்கன்…

  ஒரு சகாயம்…..

  ஒரு காமராஜர்…

  ஒரு பிடல் காஸ்ட்ரோ …

  ஒரு நம்மாழ்வார் …

  இன்னும் யாரெல்லாம் காண வழிஉண்டோ அனைவரும் காண முயல்வோம்…

  தங்கள் தேடல் இன்றில்லாவிடில் நாளையாவது மாறுமா???????????????

 5. srinivasanmurugesan சொல்கிறார்:

  பெரியார் அண்ணா இவர்களின் தாக்கம் இருக்கும் வரை தமிழகத்தில் மோடி அலை வெற்றி பெற இயலாது.

 6. S.Selvarajan சொல்கிறார்:

  நரியின் தற்போதைய தந்திரங்கள் தானே இவைகள் ! இன்னும் வரபோகிற ” தந்திரங்கள் ” எவ்வளவோ ? உரத்துக்கான மானியமும் நேரடியாக வழங்க போகிறார்களாமே ? — அறிவுக்கு வேலை கொடு — மக்களே –பகுத்தறிவுக்கு — வேலைகொடு — என்று ஒப்பாரி வைத்தாலும் — மோடி என்கிற ” மாயையில் ” இருந்து வெளியே வர மாட்டார்கள் போல இருக்கு ! வடக்கைவிட — நம் தமிழகம் கொஞ்சம் பராவாயில்ல i மாயையில் மயங்குவதில் ?

 7. shiva சொல்கிறார்:

  Mr K.M
  I have been following your blogs for quite some time and I want convey that they are really interesting and thought provoking. Even though I don’t agree with some of your views, I find that the views are expressed in a dignified manner.
  Reg the specific articles on BJP Govt, there are many who feel that its probably too early to pass a judgement on this Govt. considering the mess created by the Useless Pathetic Alliance (UPA) for the last 10 years.
  I wanted to respond to this particular article, as you had dealt with Petroleum products in this. Being part of the petroleum industry for the past 3 and half decades, I thought some of the points need a little more understanding. So I am responding and my response is specific to the issues and in no way defending the political actions of this Govt.
  Reg increasing excise duty on Petrol and Diesel : you would probably recall that crude prices touched $ 135, but the prices of these products were not increased to that level, but absorbed by the Oil companies and the Govt. The difference (loss) went as high as Rs 15 per lt at one point of time. This had resulted in shortages and I hope atleast some of you recall the problems faced in 2009 / 2010 in view of such shortages. Why shortages ? Oil companies were selling products at much less than the purchase price and so had serious cash crunch. No lender (foreign Banks lending in $) were prepared to extend credit considering the financial position of the Oil companies.
  So my guess (I am as knowledgeable or ignorant like any of you in this regard) is that the Govt wants to create surplus fund to be utilized in case of such increases in crude prices in future (but whether this is really the case, I do not know).
  Reg LPG : Its true BJP was opposed to Aadhar card and now they have accepted it – the opposition to Aadhar was probably more for political reasons. However, as per the new scheme DBTL (Direct Benefit Transfer for LPG), there are 2 options – one with Aadhar and another without Aadhar. This means even somebody who do not possess Aadhar card can also get the benefit.
  Now with regard to the specific issue of subsidy for LPG – most of us with 4 members in a family – the consumption would be 8 to 9 cyls per year (around 35-40 days per cyl). But because of the subsidy and the rate difference, large no of cyls get diverted to commercial establishments and also for automobile use. While most of us may not do this, it will be shocking to know that many (so called) decent persons of the society, use domestic cylinders in their cars, as it is cheaper compared to Petrol or Auto LPG.
  The idea of DBTL was conceived for this purpose only (to avoid such diversion, which according to industry estimates is quite substantial – more than Rs 10000 Cr P.a.) and ultimately the subsidy would probably be available only for BPL families, ie targeted subsidy for really deserving.
  I know lot of you would pounce on this – the idea of cutting subsidy for domestic fuel for middle class (of which I am also one) – but please think for a moment – how much a family spends for mobile phones (atleast one for each family member) and for an outside lunch / dinner, which would be atleast once a month – compared to that spending additional Rs 500 per month for an essential item like cooking fuel – is it not worth it?
  Reg Kerosene – Here again large quantity being used for adulterating Petrol and diesel. While they should ensure alternate arrangements (like Solar lamps) are available, before totally cutting off supplies, but it should be appreciated that most of the subsidized fuel is being used for purposes other than the intended one.
  Many of you might also may have a doubt as to why can’t such diversions be stopped?
  Dual pricing of any commodity, would always result in such diversions and it’s near impossible to stop the same. The response to this would be quite elaborate, especially in the Indian context, but for simple understanding my response is – “Remember what happened to Manjunath.”
  Do you really think ration shops should be continued? Think of the corruption and the quality of items issued in ration shops. If this is the case in Tamilnadu, whose ration system is being appreciated as the best in country, you can well imagine the plight of public in other states.
  Instead, don’t you think instead direct cash subsidy (or social welfare schemes) is a better option.
  Direct cash transfer for the really deserving is a proven method internationally.
  Lastly we should also appreciate that Govt cannot convey logic behind every decision – it may not be prudent also.
  Sorry, it has become quite a lengthy response, but I hope it was worth it.

  • LVISS சொல்கிறார்:

   IN TAMIL NADU THE NDA WILL BE JUDGED BY THEIR STAND ON THREE ISSUES–SRI LANKA , MULLAPERIYAR DAM AND CAUVERY ISSUE —

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ஷிவா,

   உங்களது தகவல்களுக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
   உங்கள் அனுபவம் தந்த பின்னணியில் நீங்கள்
   நிறைய செய்திகளைச் சொல்லி இருக்கிறீர்கள்.

   உங்கள் பின்னூட்டத்தைப் பார்க்கும்போது,
   நீங்கள் ஒரு ஏற்கெனவே நிர்ணயித்துக் கொண்ட பார்வையுடன்
   இந்த விஷயத்தை அணுகிறீர்கள் என்கிற எண்ணத்தை
   எனக்கு ஏற்படுத்துகிறது.

   இப்போதைக்கு, நீங்கள் குறிப்பிட்டுள்ள வாதங்களைப் பற்றி,
   நான் எழுதினால் அது உங்களுக்கு ஏற்புள்ளதாகத் தோன்றாது.

   கொஞ்ச காலம் போகட்டும். பிறகு மீண்டும் இந்த
   விஷயங்களை இதே தளத்தில் விவாதிப்போம்….!

   தொடர்ந்து விவாதங்களில் கலந்து கொள்ளுங்கள் –
   உங்கள் அனுபவமும் இந்த தளத்தில் கூடட்டும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • Siva சொல்கிறார்:

   Shiva sir, I find 2 major flaws in your argument. First, who did allow the use of log cylinder in car? What does the department of motor vehicles do without punishing the people who use the cylinder? Is it legal to use cylinder in cars?

   Second, same question apply to the concern department that oversees the petrol and kerosene?
   Here, the problem is adulteration in any business (No Ethics). We first need to correct it. Then we can think about giving direct cash subsidy to needy people.

   • Siva சொல்கிறார்:

    Not log cylinder. It should be lpg cylinder.

   • shiva சொல்கிறார்:

    1. Using LPG domestic cylinder (or any portable cylinder) is illegal.
    2. As regards punishment, pl understand the enormity of the problem – there are 16 crore LPG connections in this country and if a customer diverts cylinder for commercial (small restaurants as well as major establishments) or for automobile use, it is almost impossible to detect. The no of officers to detect these are very limited and even if somebody takes initiative, it is very difficult to establish and dangerous. I’m again quoting Manjunath’s case.

    I’ll give a small example. They have developed a device for transferring LPG from domestic cylinder to the LPG tank in the car. It is both unsafe and illegal. In such a situation how can one detect and establish that the LPG used in the car is illegal.

    The only way therefore is to ensure subsidised cylinders are used for the purpose they are intended for. Restriction of no of cylinders per customer (based on normal consumption) is the first step. Cancelling multiple connections is the next step.

 8. visujjm சொல்கிறார்:

  ஐயா நான் மிகவும் தொடரும் , பின் தொடரும் ஒரே தேச பக்தன் தாங்கள் ஒருவரே…..

  நீங்களும் ஒரு கேள்வி எழுப்பீனீர்கள் … ரேசன் வாங்காத நண்பர் இங்குண்டோ என்று……..?

  தங்கள் முன் வைக்கின்றேன் என் மனவெதும்பலை ……

  மாற்றம் வேண்டி நந்தினி உழைத்த உழைப்பு என் உடன் பிறப்புகள் இன்று வரை ரேசன் வாங்கி பிழைப்பு நடத்துகிறார்களே……

  அவர்கள் நலன் யார் சிந்திப்பார்கள்……

  ⅞நான் ஏழை என்பதை விட என் சுற்றம் (உடன் பிறப்புகள்) ஏழ்மை நிறைந்து போராடுகின்றதே அதே போல எத்தனை ஆயிரம் ஏழைகள் நம் தேசம் சுமக்கின்றது…

  விடிவுக்கு சத்தம் (சத்தியம்) முக்கியம் அன்றோ……

  ஒரு வேளை உணவு தேவை அது சுரண்டாத உழைப்பின் பின்புலமல்லவா அதை யார் ஆமோதிக்க…….?

  பதில் தேச நலன் வேண்டி கேட்கின்றேன்..,

  உரக்க உரைக்க …..

  மன்னிக்கவும் ஏழை ரேசன் குடிக்காக குமுறிய நான் தேச நலன் நோக்கி வேண்டுகின்றேன்…

  எனது தம்பி உயிர் பிரிந்தது…

  Kamal…. ஒரு பயணத்தில் விபத்து ; உயிர் பிரிந்தது…

  அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டி கொள்கிறேன்……

  God is Love…. Where is GoD………..

  • Siva சொல்கிறார்:

   Sir, some of the sentences in your post are not understandable? Can you write in detail or elaborately.

   • visujjm சொல்கிறார்:

    பண முதலாளிகள் பணத்துக்காக உழைப்பை உறிஞ்சும் நிலை மாற வேண்டும் ஜெர்மனி போன்ற நாடுகளில் உழைப்பின் மகத்துவம் போற்றபடுவது போன்று இங்கும் உழைப்பாளிகள் போற்றப்பட வேண்டும் அதற்கு தொழிலதிபர்கள் பணவேட்டை களைந்து தொழிலின் மகத்துவம் உணர்ந்து செயல்பட வேண்டும்…

    நாட்டின் வளங்கள் பாதுகாக்கும் அரசு அடிப்படை கட்டமைப்பு எல்லோருக்கும் அமைய ஏதுவாக கல்வியில் வியாபாரம் களைந்து செயல்பட முன்வர வேண்டும்… ஆனந்த விகடன் “கற்க கசடற” திரு பாரதி தம்பி தொடர் படித்தீர்களாயின் நன்முறையில் தங்களுக்கு புரியும் நண்பரே…

 9. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களே,

  இந்த இடுகைத் தொடருக்கு கிடைக்கும் பின்னூட்டங்கள்
  இந்த வலைத்தளம் ஒரு பயனுள்ள விதத்தில் பயணம்
  செய்து கொண்டிருக்கிறது என்கிற நம்பிக்கையை
  எனக்கு கொடுக்கிறது. பல நண்பர்கள் நிறைய தகவல்களுடன்
  பின்னூட்டம் எழுதுகிறார்கள். நான் கூட நிறைய செய்திகளை
  தெரிந்து கொள்ள முடிகிறது.

  இன்றில்லா விட்டாலும், நாளையாவது மாறுமல்லவா …?

  நமக்கு அரசியல் கட்சிகளோ, அதன் தலைவர்களோ –
  முக்கியமல்ல – ஆட்சியில் யார் இருந்தாலும் சரி –
  நமக்கு, இந்த நாட்டின், இந்த சமூகத்தின் –
  வளர்ச்சியும், நலமும் தான் முக்கியம்.

  அந்த வளர்ச்சிக்காக நாமும் உழைப்போம் –
  என்கிற உற்சாகத்துடன் நம் பயணத்தைத் தொடரலாம்.
  விவாதங்களில் ஆர்வத்துடன் பங்கு கொள்ளும்
  அனைவருக்கும் என் நன்றிகள்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • Siva சொல்கிறார்:

   KM sir
   Can you write about Magalir suya udavi kuzhu in TN. I understand that this program is giving some financial independence to rural women and is a good program. I have read in other blog (Valipokkan) that some lady minister in BJP is planning to shut the program. Is there any problem in that program? How dare is the minister’s biased attitude on this program?

 10. Ganpat சொல்கிறார்:

  Mr.Modi’s Agenda as I see it..
  1) Until Jan 2017 focus on state assembly elections and gain as many MLAs in BJP alliance as possible .Thereby getting majority in Rajya sabha also.
  2) In June 2017,new President has to be elected.The BJP nominee would be pro Modi.
  3)Starting from July 2017 take populist measures to face general elections in May 2019.
  4)Win 2019 general elections with good majority and take full control over the country..
  others views are solicited.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   என்ன கண்பத் சார் இவ்ளோ ஸ்பீடா போறீங்க…..!!!

   ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா பிரச்சினைகள்
   வந்துக்கிட்டே இருக்கே…
   2017 ஜனவரி வரை நாடு தாங்காதே….!!!
   மக்கள் இப்போதே நிம்மதியை இழக்க ஆரம்பித்து விட்டார்களே…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 11. today.and.me சொல்கிறார்:

  Alliance/Party Seats won Change Popular Vote Vote %
  NDA 2 +2 7,523,829 18.5%
  BJP 1 +1 2,222,090 5.5%
  PMK 1 +1 1,804,812 4.4%
  DMDK 0 – 2,079,392 5.1%
  MDMK 0 -1 1,417,535 3.5%
  Courtesy: http://en.wikipedia.org/wiki/Indian_general_election,_2014_%28Tamil_Nadu%29

  // ( தமிழர்கள் தான் மோடிஜிக்கு ஓட்டுப் போடவில்லையே…!) //
  இல்லை கா.மை.ஜி. இதே மோடியின் சோலோ மகுடிக்கு இருபத்திரண்டு இலட்சத்து இருபத்திரண்டாயிரத்து தொண்ணூறு பேர் மயங்கியிருக்கிறார்களே!

  அப்படியிருந்தும் சோலோ சீட் (பொன்ரா-மார்ஜின் 128662) தானே என்ற ஏக்கத்தினால் இப்போது வலைவீசுகிறார்கள்.

  //கொழுத்த மீன்கள் சிக்க இருக்கின்றன.//
  இப்பொழுது சிக்கியிருப்பவையெல்லாம் கொழுத்த மீன்களா என்ன? பாவம், புழுவுக்குஆசைப்பட்டு தூண்டிலில் மாட்டியுள்ள கெண்டைகள்.

  //மக்களும் நிம்மதியாக இருப்பார்கள்….//
  மக்கள் என்பவர்கள் ஓட்டுப்போடுவதோடு அரசியல்வியாதிகளை மறந்துவிட்டு தங்கள் அன்றாடப் பிரச்சினைகளோடு அல்லாடவேண்டும்.அவற்றைத் தீர்த்துவிட்டு அவர்களை நிம்மதியாக இருந்துவிட்டால் மற்ற பிரச்சினைகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுவார்களே. காமைஜி, நீங்கள் ஆட்சியாளர்களுக்கு இப்படியெல்லாம் ஐடியா கொடுத்து அவர்கள் அடிமடியிலேயே கைவைக்கிறீர்களே. ஆனால் உங்கள் அறிவுரையையெல்லாம் அவர்கள் கேட்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

  சுனாமி அடித்துப்புரட்டிப் போட்டபின் வெறுந்தரையாவது மிஞ்சும். அதைவைத்து உயிர்பிழைத்தவர்கள் ஏதாவது செய்துபிழைத்துக்கொள்ளட்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.