திருவாளர் அமீத் ஷா வின் “சென்னை ஜோக்ஸ்” ……!!!

.

.

சில பேரைப் பார்த்தால் வில்லன் மாதிரி இருக்கும்.
சில பேரைப் பார்த்தால் காமெடியன் போல் இருக்கும்.
சில பேரைப் பார்த்தால் ஹீரோ மாதிரி இருக்கும்.

ஆனால் உண்மையில் – “பெர்சனாலிடி” என்பது அவரவர்
செய்கைகளைப் பொறுத்தே அமையும்.

amitji-2

போன வருடம் இதே நாட்களில் –
திருவாளர் அமீத் ஷா குஜராத்தில் மோடிஜியின்
வலது கரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தபோது –
சிபிஐ யால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்த நேரத்தில் –
நாட்டு மக்கள் அவரை வில்லனாக நினைத்தார்கள்….!

பாராளுமன்ற தேர்தல் முடிந்து, உத்திர பிரதேச ரிசல்ட்
வெளிவந்தவுடன் அவர் “ஹீரோ” வாகத் தெரிந்தார்.

மஹாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்கள் முடிவடைந்தபோது, சிலர்
அவரை ‘ஹீரோ’ வாகவும், சிலர் ‘வில்லனாக’ வும் பார்த்தார்கள்.

முந்தாநாள் சனிக்கிழமை அமீத் ஷா அவர்கள் சென்னை வந்து
சென்ற பிறகு ஒரு நல்ல “ஜோக்” காளராகத் தெரிகிறார்.

amitji-1

சென்னையில் அமீத் ஷா அவர்கள் பேசியதில் சில –

– அடுத்து வரும் 2016 சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில்
குறைந்த பட்சம் 122 இடங்களில் ஜெயித்து, பாஜக ஆட்சியமைக்கும்.
கூட்டணி இருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி,
பாஜக வைச் சேர்ந்தவர் தான் முதலமைச்சர்.

– தேர்தலுக்கு முன்னரே, முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்து
விடுவோம். முதலமைச்சர் பேரைச் சொல்லி விட்டுத்தான்
ஓட்டுக் கேட்கவே போவோம்… ( அதற்குள்ளாக, விஜய்காந்த் பாஜக வில்
சேர்ந்து விடுவார் என்கிற நம்பிக்கையா….?)

(அன்புமணி வேறு வந்து சந்தித்து “முக்கிய பிரச்சினைகளை”
அமீத் ஷாவுடன் “விவாதித்து” விட்டுப் போனார்…..?)

( தமிழக பாஜக விலேயே வேறு ஏகப்பட்ட முதலமைச்சர்
வேட்பாளர்கள் இருக்கிறார்கள்….)

– டாக்டர் சுப்ரமண்யன் சுவாமி பாஜக உறுப்பினர் தான்.
ஒரு தலைவரும் கூட. ஆனால் அவர் அறிவிப்பவை கட்சியின்
கருத்துக்கள் ஆகாது….!!

– கட்சியின் கொள்கைகளும், நிலைப்பாடுகளும், பாஜக செய்தித்
தொடர்பாளர்கள் மூலமாகவோ, மாநில தலைவர் மூலமாகவோ
மட்டுமே அறிவிக்கப்படும்…..!!!

தமிழ் நாட்டில் உடனடியாக ‘மிஸ்டு கால்’ மூலமாக
60 லட்சம் பேர்கள் பாஜக உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும்….

( அதே மேடையில் ஒரு கோடி பேர்களை உறுப்பினர்களாக்குவோம்
என்று பெரிய அளவில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. டாக்டர் இசை
அக்காவும் அதையே மேடையில் சொன்னார்….! )

-தமிழ் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பாஜக வில் இணைகிவார்கள்..
(திருவாளர்கள் கங்கை அமரன், நெப்போலியன், திருமதி காயத்ரி ரகுராம்
ஆகிய “முக்கிய பிரமுகர்கள்” அமீத்ஜீ க்கு சால்வை போர்த்தி பாஜகவில்
இணைந்தார்கள்….. )

– பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை இல்லாதோர்
திண்டாட்டம் ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது…..!!! ??

– முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இந்துக்கள் தான் என்று கூறிய
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தின் கருத்துக்கள் பற்றி
நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்று மட்டும்
சொல்வேன் – ஆர்.எஸ்.எஸ் ஒரு தேசீய சிந்தனை உள்ள அமைப்பு.

– பெட்ரோல் விலையை பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள்
10 முறைகள் குறைத்தது மோடி அரசின் மிகப்பெரிய சாதனை…!!!

– தமிழக மீனவர் பிரச்சினையில் பாஜக மிகப்பெரிய அக்கரை
கொண்டிருக்கிறது. அதைத் தீர்த்து வைக்க அனைத்து முயற்சிகளும்
மோடிஜி அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன…..

அமீத் ஷா அவர்கள் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து போனால் –
நன்றாக இருக்கும். மக்கள் ‘சந்தோஷ’ மாக இருப்பார்கள்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to திருவாளர் அமீத் ஷா வின் “சென்னை ஜோக்ஸ்” ……!!!

 1. புது வசந்தம் சொல்கிறார்:

  அவர் தமிழ் வேறு படிக்கிறார், “தமிழுக்கு வந்த சோதனை”.

  • இளந்திரையன் சொல்கிறார்:

   இன்றைய தமிழர்கள் சொரணை கெட்டுப் போய் விட்டார்கள்.
   இந்த பாஜக வை வளர விட்டால் மானமும் கெட்டுப் போய் விடும்.
   அமீத் ஷா ஒரு குஜராத்திக்காரர்.
   அவர் பேசுவது தமிழ்நாட்டில்.
   தமிழர்கள் மத்தியில் பேசும்போது ஒன்று தமிழில் பேச வேண்டும்.
   அது தெரியா விட்டால் ஆங்கிலத்தில் பேச வேண்டும்.
   அது இரண்டும் தெரியா விட்டால் தன் தாய்மொழியான
   குஜராத்தியில் பேச வேண்டும்.
   மொழி பெயர்க்க ராஜா- அக்காக்களா இல்லை ?
   இங்கு வந்து இந்தியில் பேசுவது அயோக்கியத்தனம்.
   அடுத்த முறை பாஜக கூட்டம் நடத்தினால் இதை நினைவில்
   கொள்ள வேண்டும். இல்லையேல் பாஜக இருக்கும் கொஞ்ச
   தமிழர்களின் ஆதரவையும் சுத்தமாக இழக்கும்.

 2. S.Selvarajan சொல்கிறார்:

  இவர் அடித்த ” ஜோக்குகளுக்கு ” சிரித்த ஒரே நபர் — தமிழிசை தான் ! மேலே உள்ள படத்தை பார்த்தாலே — தெரியும் — மற்றவர்கள் எல்லாம் விளக்கெண்ணை குடித்தவர்கள் போல இருப்பது எதனால் ? 60- லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்டாயபடுத்தி — அமித்ஷா பேசியதாலா ? தமிழ் நாட்டின் நிலைமை புரிந்தவர்கள் — சிரிக்க வில்லை — அப்படித்தானே !! இசைக்க கங்கை அமரனும் — ஆடுவதற்கு காயத்ரி ரகுராமனும் — வில்லன் வேடத்திற்கு நெப்போலியனும் — பண பட்டுவாடா செய்ய அரைகுறை ஆடிட்டர் வெங்கட் பிரபு போன்றவர்கள் இருக்கும் போது அப்புறம் என்ன குறைச்சல் — ஆட்சியை பிடிக்க !!! நப்பாசை தான் ?

 3. ரிஷி சொல்கிறார்:

  மற்றவற்றை கூட ‘ஒருவகையில்’ காமெடி என எடுத்துக் கொள்ளலாம். ஆனால்

  /முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இந்துக்கள் தான் என்று கூறிய
  ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தின் கருத்துக்கள் பற்றி
  நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்று மட்டும்
  சொல்வேன் – ஆர்.எஸ்.எஸ் ஒரு தேசீய சிந்தனை உள்ள அமைப்பு.//

  இதை அவ்வாறு எடுத்துக் கொள்ள இயலாது.

  இயல்பில் நகைச்சுவை கொண்டிருப்போரின் நகைச்சுவையை ரசிக்கலாம். ஆனால் பலவித முகமூடிகளை பல நேரங்களில் அணிந்திருப்போரின் நகைச்சுவை அபாயகரமானது.

 4. ரிஷி சொல்கிறார்:

  //60 லட்சம் பேர்கள் பாஜக உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள்.
  தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும்….//

  இது எனக்கும் ஜோக்காக தெரிந்தாலும் சில விஷயங்களைக் கோர்த்துப் பார்க்கும்போது மிகப்பெரும் திட்டத்துடன் இறங்குவார்களோ எனத் தோன்றுகிறது.

  ஒரு உதாரணம், ஆதிபராசக்தி அறக்கட்டளைத் தலைவர் ‘இளைய அம்மா’ செந்தில்குமார், அமீத் ஷாவை சந்தித்துப் பேசியிருக்கிறார். அமீத்தின் அழைப்பாக இருக்க அதீத சாத்தியம் இருக்கிறது. ஆதிபராசக்தி பக்தர்களை அப்படியே பிஜெபி வோட்டுகளாக மடைமாற்ற திட்டமிருக்கலாம். இதுபோல பல்வேறு பக்திக் குழுக்களையும், ஆன்மிக அமைப்புகளையும் பிஜெபி நோக்கி இழுக்கலாம்.

  சுருக்கமாகச் சொன்னால் தமிழிசையோ அல்லது வேறு தமிழக பிஜெபி தலைவர்களோ மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களை சேர்க்கப் போவதில்லை. அமைப்புகள் ரீதியில் ஏற்கெனவே திரண்டிருக்கும் மக்களை குறி வைப்பது எளிது.

  ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் பெரியார் மண்ணில் அவரது கால் பாதத்தை அசைத்துப் பார்த்துவிட்டாலே அது பிஜெபிக்கு மிகப்பெரிய வெற்றிதான்.

  • today.and.me சொல்கிறார்:

   //அமைப்புகள் ரீதியில் ஏற்கெனவே திரண்டிருக்கும் மக்களை குறி வைப்பது எளிது. //
   அமைப்புகளில் உள்ளவர்களும் ஏற்கெனவே ஏதேனும் ஒரு கட்சியைச் சார்ந்தவர்களாகத்தானே இருப்பார்கள். திமுக , திக போன்ற கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட கட்சிகளிலும் கடவுள் ஏற்புக் கொள்கை கொண்ட கட்சித் தொண்டர்கள் இருக்கிறார்கள் தானே. பின் எப்படி ? அம்மா கனவில்வந்து பாஜகவுக்கு ஓட்டுப்போடச் சொன்னாள் என்று சொல்வார்களா?

 5. ரிஷி சொல்கிறார்:

  //பெட்ரோல் விலையை பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள்
  10 முறைகள் குறைத்தது மோடி அரசின் மிகப்பெரிய சாதனை…!!!//

  இதை மேடையில் முழங்கும்போது உதட்டோரம் குரூர நகை அரும்பியிருந்திருக்கும். “கச்சா எண்ணை விலை வீழ்ந்ததால் குறைக்க முடிந்தது என ஒரு முட்டாப்பயல்கூட இந்தக் கூட்டத்தில் குரலுயர்த்தி சொல்ல மாட்டான்”

  • எழில் சொல்கிறார்:

   ஒருவர் எத்தனை உண்மை பேசினாலும், அவரின் ஒரு பொய் வெளிவரும் போது அவர் பேசிய உண்மைகள் அனைத்தும் சந்தேகிக்கப்படும் என்பது நியதி.
   இந்த சிறு அறிவு கூட இல்லாமல் தமிழகத்தில் இருப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்ற எண்ணத்தில் பெட்ரோல் விலை குறைப்பு மோடி அரசின் சாதனை என்று கூசாமல் பொய் சொல்லும் இவரை என்னவென்பது. இப்படி தான் வடக்கில் ஒவ்வொரு மாநிலமாக ஏமாற்றி ஒட்டு வாங்கி ஜெயிச்சு வருகிறார்களா?
   எப்படியோ இவர் முகமூடியை இவரே ஓரளவு கிழித்து நிஜ முகத்தை சிறிதளவு காட்டி விட்டு போயிருக்கிறார்.

 6. T.N.MURALIDHARAN சொல்கிறார்:

  நல்ல ஜோக்தான்

 7. today.and.me சொல்கிறார்:

  // டாக்டர் சுப்ரமண்யன் சுவாமி பாஜக உறுப்பினர் தான்.
  ஒரு தலைவரும் கூட. ஆனால் அவர் அறிவிப்பவை கட்சியின்
  கருத்துக்கள் ஆகாது….!! // அமித்தை எதிர்த்து சுவாமியின் ட்விட்டர் ஒன்றையும் காணோமே, தமிழ்நாடு திறந்துபோட்ட சத்திரம் மாதிரி, யார்வேணும்னாலும் போய் எதைவேணும்னாலும் பேசிட்டு வரலாம்னு நினைக்கிறாங்களோ?

 8. today.and.me சொல்கிறார்:

  //ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தின் கருத்துக்கள் பற்றி
  நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்.// அப்படியென்றால் No comments என்றுதானே பொருள். அப்படியென்றால் “அவர் சொன்னது உண்மைதான், ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதைக்குறித்து நான்வேறுதனியாக கருத்துக்கூற வேண்டுமா என்ன?” என்றுதானே பொருள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.