பத்து பொறுக்கிகளை ஒண்டியாக சமாளிக்கும் ஒரு வீர இளைஞன் …!!!

கீழேயுள்ளது நேற்றைய தினம் திருச்சியில்
உண்மையாக நடந்த ஒரு நிகழ்வின் வீடியோ.
வீடியோவில் உள்ள குரல்களும், செய்தியும்
என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்.

என் மதிப்பீடு – தலைப்பிலேயே இருக்கிறது….!!!

ஒவ்வொரு தமிழ் இளைஞனும் அவனைப் போல்
வீரம் செறிந்தவனாக, ரோசத்துடன் இருந்தால் –
தமிழ்நாடு இப்படியா இருக்கும் ….?

நான் அந்த வீர இளைஞனை உளமாறப் பாராட்ட விரும்புகிறேன்.
நீங்களும் என்னுடன் சேர்ந்து கொள்வீர்களென்று நம்புகிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to பத்து பொறுக்கிகளை ஒண்டியாக சமாளிக்கும் ஒரு வீர இளைஞன் …!!!

 1. Ramachandran.R. சொல்கிறார்:

  கே.எம். சார்,

  நான் கூட டிவி செய்தியில் அதைப் பார்த்தேன். சினிமாவில் தான்
  இந்த மாதிரி ஹீரோக்கள் 10 பேரை அடிப்பார்கள். ஆனால்,
  இந்தப் பையன் நிஜ ஹீரோவாக இருக்கிறானே என்று நினைத்தேன்.

  நீங்கள் அதற்கு சரியான முக்கியத்துவம் கொடுத்து
  பதிவு போட்டு அவனை கௌரவப்படுத்தியது
  மிகவும் பாராட்டத்தக்க விஷயம். என் உளம் நிறைந்த பாராட்டுக்கள்
  அந்த நிஜ ஹீரோவான அவனுக்கும், அதை சரியான முறையில்
  வெளிக்கொண்டு வந்த உங்களுக்கும்.

 2. சக்தி சொல்கிறார்:

  இப்படியான காணொளிகள் படங்களை தனியாக பிரித்து எடுப்பதற்குப் பல வழிகள் உள்ளன.
  பொதுவாக ஊடகங்கள் தங்களுக்கென YouTube இல் தனியாக கணக்கு உருவாக்கி இருப்பார்கள்.அதனால் YouTube.com சென்று http://www.dinamalar.com எனக் கொடுத்தால் அவர்களுடைய எல்லா காணொளிகளையும் பார்க்க முடியும். அங்கிருந்து share – embed -copy- paste செய்யலாம். அல்லது காணொளி மேல் வலது கிளிக் செய்து embed/copy link -copy செய்ய முடியும்.

  இன்னொரு வழி தினமலர் பக்கத்தில் காணொளிக்குப் பக்கத்தில் வலது கிளிக் செய்து view page info வில் கிளிக் செய்தால் வரும் சாளரத்தில் media என்பதில் சென்றால் ஒரு கட்டத்தில் விபரங்கள் காட்டப்படும். அந்த இடத்தில் நகர்த்தி சென்றால் ஒரு இடத்தில் மங்கலான எழுத்தில் ……………….swf.embed என்பது இருக்கும் அந்த இடத்திற்குச் சென்று கீழே உள்ள save as என்பதில் அல்லது நேரடியாக வலது கிளிக் செய்து copy .இப்போது காணொளி மட்டுமே வரும். ஆனால் சில சமயம் இது செயல்படாது.ஏனெனில் கடவுச் சொல் போட்டு இருந்தால் செயல்படாது. இப்படி சில வழிகள் உண்டு.view page source, inspect element, இப்படிச் சில………………….

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சக்தி,

   மிக மிக மிக நன்றி.
   நீங்கள் கூறிய உத்தியை இடுகையில் பயன்படுத்திக் கொண்டு விட்டேன்.
   இதைச் செய்ய முடியாததால், முன்பாக, வாசகர்களை சுற்றி வளைத்து பார்க்கச் செய்ய
   வேண்டி இருந்தது. இப்போது சுலபமாகி விட்டது.
   உங்கள் உதவிக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. Sakthivel சொல்கிறார்:

  போலீஸ் ஜீப் கொன்டு உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது மோத முயன்றதே அடிதடியின் முதல் காரனம். அது இந்த வீடியோவில் இல்லை.

  • ஸ்ரீநிவாசன் சொல்கிறார்:

   மோதுவது போல் வந்தார் என்பதற்கும், மோத முயன்றார் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது

   நீங்கள் கூறுவது போல் மோத முயன்றார் என்றால் ஏன் மோதவில்லை, மோதுவதை யார் தடுத்தது என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கலாம்.

   //போலீஸ் ஜீப் கொன்டு உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது மோத முயன்றதே அடிதடியின் முதல் காரனம். அது இந்த வீடியோவில் இல்லை.//

   இது போல் பெரிய பிரச்சனையாகும் என தெரிந்திருந்தால் / எதிர்பார்த்திருந்தால் ஒருவரேனும் நீங்கள் சொல்வது போல் வீடியோ பிடித்திருப்பார்கள். பாவம் முன்னமே கணிக்கும் திறன் அங்கிருந்தவர்களில் ஒருவருக்கு கூட இல்லை.

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  ஒரு கேள்வி, ” வக்கீல்கள் சட்டதிற்கு அப்பாற்பட்டவர்களா ? “…

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  வக்கீல்கள் என்கிற போர்வையில், வெள்ளையுடையில் பொறுக்கிகள் பலர்
  பவனி வருகிறார்கள். இவர்களை தனியே அடையாளம் கண்டுகொண்டு,
  கடுமையாக தண்டிக்க வேண்டும்.

  எது முதல் காரணமாக இருந்தாலும் சரி –
  தனி ஒரு இளைஞனை பத்து பேர் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்குவதை
  எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும் …?

  ஏன் – சட்டம் படித்த வக்கீல்களுக்கு –
  சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வது தவறு என்பது தெரியாதா ..?
  அந்த இளைஞன் ” மோதுவது போல்” வந்தாலும் கூட –
  இவர்கள் பத்து பேராகச் சேர்ந்து அவனை அடிக்க எந்த சட்டம் இடம் கொடுக்கிறது ..?

  மீண்டும் சொல்கிறேன் –

  இன்றைய வக்கீல்கள் – பொறுக்கிகளை தங்கள் அமைப்பிலிருந்து
  விலக்கா விட்டால், சமுதாயத்தில் ஒட்டுமொத்த வக்கீல்களின்
  மதிப்பும், மரியாதையும் பாழாகி விடும்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 6. S.Selvarajan சொல்கிறார்:

  பார் கவுன்சில் ” இந்த கொடூர தாக்குதலுக்கு என்ன நடவடிக்கை ” எடுக்கும் ? எடுக்குமா ? அரசின் நடவடிக்கை என்ன ? வானத்தில் இருந்து குதித்தவர்களா — வானளாவிய பவர் உள்ளவர்களா வக்கீல்கள் ? கருப்பு கோட்டு போட்டு விட்டால் எதை வேண்டுமானாலும் செய்ய சட்டம் ஒரு இருட்டு அறையா ? எப்படி இருந்தாலும் அந்த பொறுக்கிகள் தாக்குவார்கள் என்று தெரிந்தும் — அச்சமில்லை ! அச்சமில்லை !! என்று போராடிய நபருக்கு — ” சாகச விருது ” கொடுத்தாலும் தவறில்லை …..

 7. swami சொல்கிறார்:

  வக்கீலாக எந்த ஒரு பெரிய தகுதியும் இல்லை என்று நினைகிறேன்(except B.L). தவறு இருந்தால் திருத்தவும். போலீஸ் ஆக தகுதி தேர்வு உள்ளது. வீடியோவில் உள்ளதை வைத்து பார்த்தால் போலீஸ் உடையில் இருக்கும் போதே அவரிடம் சிலர் கை நீட்டுவது தெரிகிறது. அப்படி போலீஸ் அவரை உடை மாற்றி அனுப்ப வேண்டும் என்றால் ஏன் ஒருவரை மட்டும் அனுப்ப வேண்டும்..
  ஒரு விஷயம்…அவருடைய அடி சரியாக படவில்லை போல தெரிகிறது…
  உண்மையான தைரிய சாலிகள் தைரியம் இருந்தால் ஒத்தைக்கு ஒத்தை வர வேண்டியது தானே

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.