அரசியல்வாதிகளின் முறைகேடான விமான பயணங்கள் – மக்களை ஏமாற்றுவது எப்படி …?

private planes-1

அரசியல் கட்சிகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது…?
பெரும்பாலும் நன்கொடைகள் மூலமாக …

யார் கொடுக்கிறார்கள் ….?
பெரிய பெரிய தொழிலதிபர்கள்,
பெரும் வர்த்தகர்கள்,
பெரிய பெரிய தனியார் நிறுவனங்கள் –
பெரிய அளவில் நன்கொடைகள் கொடுக்கும் இவர்கள் பற்றிய
விவரங்கள் பெரும்பாலும் வெளிவருவதே இல்லை…!

எந்தக் கட்சிக்கு கொடுக்கிறார்கள் …?
என்றாவது ஒரு நாள் அதிகாரத்திற்கு வரக்கூடிய
எல்லா கட்சிகளுக்குமே கொடுக்கிறார்கள்….!

ஏன் கொடுக்கிறார்கள் ….!
சும்மா தானமாகவா கொடுப்பார்கள்….? பிற்காலத்தில் அந்தந்த
அரசியல்கட்சிகள், தலைவர்கள் பதவிக்கு வரும்போது,
அரசாங்கத்தில் செல்வாக்கு பெறும்போது –
பதிலுக்கு -வேண்டிய சலுகைகளை பெற்றுக் கொள்ளலாமே …!
அதற்காகத் தான்…!

இது லஞ்சம் இல்லையா …?
ஆமாம் லஞ்சம் தான் – ஆனால் லஞ்சம் இல்லை ….!!!!!!!!!!!!

சரி – இவற்றிற்கு எப்படி கணக்கு வைக்கிறார்கள்…?
20,000 ரூபாய்க்கு மேல் வரும் நன்கொடைகள் காசோலைகள்
மூலமாகவே பெறப்பட வேண்டும் – எனவே கொடுப்பவர் பற்றிய
விவரங்களைப் பதிய வேண்டியிருக்கும். தேர்தல் கமிஷனுக்கு
ஆண்டறிக்கையில் கொடுக்க வேண்டியிருக்கும் –
அதற்கு குறைவான தொகை என்றால் –
நன்கொடை கொடுப்பவர் விவரங்கள் கொடுக்கத் தேவையில்லை.

இது ஒரு பக்கம் இருக்க – இன்னொரு பக்கம்,
பணமாக இல்லாமல் – சலுகைகளாக எத்தனையோ வசதிகளை
அரசியல்வாதிகள் / கட்சிகள் பெரும் தொழிலதிபர்களிடமிருந்தும்,
வர்த்தகர்களிடமிருந்தும், பெரும் தனியார் நிறுவனங்களிடமிருந்தும்
பெறுகிறார்கள். இந்த விவரங்கள் பெரும்பாலும்
வெளியில் தெரிவதே இல்லை…!

இந்தியாவில் தனியார் விமான கம்பெனிகள் இருப்பது நமக்கு
தெரியுமே தவிர, இத்தகைய கம்பெனிகள் எவ்வளவு இருக்கின்றன
என்றோ, அவை யார் யாருக்குச் சொந்தமானவை
என்றோ தெரியாது….

இதில் சிறிய – 8 பேர் அளவிற்கு பயணிக்கக்கூடிய – விமானங்களை
வைத்துக் கொண்டு, அவற்றை மணிக்கு இவ்வளவு ரூபாய் என்று
வாடகை பேசி இயக்கக்கூடிய சிறிய – விமான டாக்சி போல்
செயல்படக்கூடிய – நிறுவனங்களும் உண்டு.

private planes-2
அவற்றில் சில –

ஏர் ஒன் ஏவியேஷன்
இந்தோ பசிபிக் ஏவியேஷன்
கிங் ரோடர் அண்ட் ஏர்
பினாக்கிள் ஏர் சர்வீஸ்
லைகர் ஏவியேஷன்
பிசினஸ் ஜெட்ஸ் இந்தியா
ஆர்பிட் ஏவியேஷன் கிராப்ட்
இந்தியா பிளைசேப்
ஏரோடெக் ஏவியேஷன் இந்தியா
ஏர் சார்டர் சர்வீஸ்
பிரபாதம் ஏவியேஷன் –
இவை சாம்பிள் மட்டுமே. இதுபோல் இன்னும் நிறைய உண்டு.

பெரிய பெரிய தொழிலதிபர்கள், சிமெண்டு கம்பெனி,
மின் உற்பத்தி, நிலக்கரி சுரங்க, எண்ணை கம்பெனி முதலாளிகள்,
தங்கள் சொந்த உபயோகத்திற்காக வைத்துள்ள விமானங்களும் உண்டு.
இவை வாடகைக்கு விடப்படுவதில்லை. இவற்றை அவர்களுக்கு
வேண்டப்பட்டவர்களுக்கு ( ? ) மட்டும் சமயத்தில் பயன்படுத்த
கொடுத்து உதவுவார்கள். அதாவது அரசியல்வாதிகளுக்கு
ஓசி…!!!

இத்தகைய விமானங்கள் சில –

இந்தியன் ஸ்டீல் ஒர்க்
அதானி குரூப்
ஜி.எம்.ஆர்., குரூப்
ஜி.வி.கே., ஏவியேஷன்
ஜெ.பி., குரூப்
டாட்டா குரூப்
எஸ்.ஆர்.சி., ஏவியேஷன்
ரிலையன்ஸ்
இவையும் சாம்பிள் மட்டுமே. இதுபோல் இன்னும் நிறைய உண்டு.

அண்மையில் கோப்ராபோஸ்ட் என்கிற அரசியல் –
புலனாய்வு வலைத்தளமொன்று பல தகவல்களை சேகரித்து
வெளியிட்டிருக்கிறது.

இதில் வெவ்வேறு கட்சியைச் சேர்ந்த பல அரசியல்வாதிகளின்
நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் பற்றிய விவரங்களை
தந்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள் பற்றிய இந்த விவரங்களை
பார்த்தால் தலை சுற்றுகிறது. நமக்குத் தெரியாத தனி உலகம் அது….!

நாம் தினமும் பஸ் ஏறி போய் வருவது போல் சர்வசகஜமாக
அரசியல் தலைவர்கள் தனியார் விமானங்களை பயன்படுத்தி
இருக்கிறார்கள்….ஒரு வருடத்தில் நூற்றுக் கணக்கான பயணங்கள்….!!!

இதில் அந்த கட்சி இந்த கட்சி என்றில்லை – கட்சி வேறுபாடு
இல்லாமல், காங்கிரஸ், பாஜக, சரத்பவார் காங்கிரஸ், மாயாவதி கட்சி,
முலாயம் கட்சி, பிஜு ஜனதா தள், சந்திரபாபு கட்சி…. என்று போய்க்கொண்டே
இருக்கிறது.

உதாரணத்திற்கு சில பெயர்கள் மட்டும் –

திருமதி சோனியா காந்தி, ராகுல் காந்தி,
வீரப்ப மொய்லி, சரத் பவார், பிரபுல் படேல்
ராஜ்நாத் சிங், அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்காரி,
சிவ்ராஜ்சிங் சௌஹான், ராமன் சிங், பிரகாஷ் சிங் பாதல், மாயாவதி ……..
சிலர் தனியாக நண்பர்களுடன், உதவியாளர்களுடன் –
சிலர் தங்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன்…..

இவர்கள் சாதாரணமாகப் பயணிக்கும் விமானம் எத்தகையது….?
எட்டு இருக்கைகள் கொண்ட, Hawker 900 XP விமானம் …
இதன் வாடகை ஒரு மணிநேரத்திற்கு இரண்டே கால் லட்சம் ரூபாய்.

இது பற்றிய விவரங்களை எல்லாம் வெளியிடும் முன்னர் –
கோப்ராபோஸ்ட் பல விமானப் பயணங்களைப் பற்றிய பட்டியல்களுடன்,
இத்தகைய தனியார் விமானங்களைப் பயன்படுத்திய அரசியல்வாதிகள்
( சுமார் 100 பேர் )மற்றும் அரசியல் கட்சிகளுக்கு சில கேள்விகளைக்
கொண்ட மெயில் ஒன்றை அனுப்பி சில விவரங்களைக் கோரி இருந்தது.

எத்தகைய கேள்விகள் …?

இந்த ஒவ்வொரு தனிப்பட்ட விமானப் பயணத்திற்கும்
ஆன பில் தொகை எவ்வளவு …?
பில் பணத்தை கொடுத்தது யார்….?
எப்படி கொடுக்கப்பட்டது – ரொக்கமாகவா ? காசோலையா ?
யார் கணக்கிலிருந்து…?
கொடுத்தது யார்…?

இந்த 100 பேர்களில் 10 பேர்களிடமிருந்து மட்டும் பதில் வந்தது ….
உரிய விவரங்கள் எதுவும் இல்லாமல் – சமாளிப்பாக …!!

கூடவே இத்தகைய தனியார் விமான கம்பெனிகளுக்கும்
( மொத்தம் 85 கம்பெனிகள் ….) ஒரு கேள்விப் பட்டியல் அனுப்பப்பட்டது.

அதில் ஒவ்வொரு பயணத்தையும் குறிப்பிட்டு –
இந்த பயணங்களுக்காக எவ்வளவு பணம் சார்ஜ் செய்யப்பட்டது …?

அதில் சலுகைகள் எதாவது காட்டப்பட்டதா …?
அதில் பயணம் செய்தவர்கள் யார் …?
அதற்கான பில்களை செட்டில் செய்தவர் யார்…?
தனிப்பட்ட நபரா அல்லது எதாவது கட்சியா ?
ரொக்கமாகவா அல்லது காசோலையா ? (யார் கணக்கிலிருந்து )
அந்த தனியார் விமான கம்பெனி நஷ்டத்தில் இயங்குகிறதா
அல்லது லாபத்தில் இயங்குகிறதா ?
இதற்கு 3 கம்பெனிகள் மட்டும் பதில் அளித்திருக்கின்றன.

இவற்றைத் தவிர, காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக விற்கும்
தனித்தனியே கேள்வி மெயில்கள் அனுப்பப்பட்டன.
அந்தந்த கட்சியின் தலைவர்கள் சென்ற பயணப் பட்டியலைக் கொடுத்து –
இதே போல், பில் தொகை, கொடுக்கப்பட்ட பணம், ரொக்கமா, செக்கா,
எந்த கணக்கிலிருந்து ? என்பன போன்ற கேள்விகளுடன் மெயில்
அனுப்பப்பட்டிருக்கிறது.

எந்த கட்சியிடமிருந்தும் எந்தவித பதிலும் இல்லையாம்.

தனியார் கம்பெனிகளிடமிருந்து இவ்வாறு பெரிய அளவில்
சலுகைகளைப் பெறுவதும், அந்த கம்பெனிகளுக்குச் சொந்தமான
வசதிகளை ( கெஸ்ட் ஹவுஸ், வாகனங்கள் போன்றவற்றை )
பயன்படுத்திக் கொள்வதும் ஊழலுக்கு வழி கோலுபவை என்பது
இந்த அரசியல்வாதிகளுக்கு தெரியாதா…?

இதைப்பற்றி எல்லாம் மக்களுக்கு எங்கே தெரியப்போகிறது
என்கிற நினைப்பு தான் பெரும்பாலும். அப்படித் தெரிந்தாலும்,
இதற்கான பில்களை கட்சி கொடுத்து விடுகிறது என்று
ரெடிமேடு விளக்கம் கொடுக்கப்படும்.

கட்சிகளுக்கு இவ்வளவு பெரிய தொகை
எங்கிருந்து வருகிறது, யார் கொடுக்கிறார்கள்,
எதற்காகக் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் கேள்வி கேட்கத்தான் –

இந்த நாட்டு மக்களுக்கு நேரமும் இல்லை –
விழிப்புணர்வும் இல்லை – இல்லை – இல்லவே இல்லையே …..!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to அரசியல்வாதிகளின் முறைகேடான விமான பயணங்கள் – மக்களை ஏமாற்றுவது எப்படி …?

 1. swami சொல்கிறார்:

  திருடர்கள் உங்கள் அருகிலேயே இருப்பார்கள்….எல்லா பஸ் ஸ்டாண்டுகளிலும் சாதாரணமாக ஒலிக்கும் வாசகம் ஞாபகம் வருகிறது

 2. Rajagopalan Rangarajan சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  இரண்டு விஷயங்கள் இதில் உதவலாம்.

  1) அரசியல் கட்சிகளை ஆர்டி ஐ தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்
  கொண்டு வர வேண்டும். இதற்கு லெசில் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
  ஏனென்றால் எல்லா கட்சிகளும் இதில் கூட்டுக் களவாணிகள்.

  2)தேர்தல் கமிஷன் இன்னும் தீவிரமாக அரசியல் கட்சிகளின்
  வரவு செலவு விவரங்களை கண்காணிக்க வேண்டும்.

  ஆனால் நீங்கள் சொல்வது போல் முதலில் மக்கள் விழித்துக்கொள்ள
  வேண்டும்.

 3. S.Selvarajan சொல்கிறார்:

  இவர்கள் இவ்வாறான சொகுசுகளை ” நோகாமல் “அனுபவிப்பதனால் மக்களின் கஷ்ட , நஷ்டகள் புரியாமல் ஏமாற்றுகிறார்கள் — இதனால் தான் ” ஆளாளுக்கு ” ஒரு லெட்டர்பேட் கட்சியை துவக்கி விடுகின்றார்கள் போல தெரிகிறது ! மக்கள் திருந்த வேண்டும் — சிந்திக்க வேண்டும் !! எவனும் மக்கள் தொண்டாற்ற கட்சிகளில் இல்லை — என்று என்றைக்கு புரியுமோ — நம்மவர்களுக்கு ?

 4. D. Chandramouli சொல்கிறார்:

  Is that why the “politics is the last resort of scoundrels”?

 5. sella சொல்கிறார்:

  http://www.abplive.in/india/2014/05/24/article328832.ece/Modi-flies-into-brand-cloud-with-Adani-plane

  Why Modi name did not appear in the list. I already red this news in Dinamalar quoting the coprapost. It is not a surprise if dinamalar hide that. I wonder how come KM did not even rise such a doubt.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   நான் தகவல்களை கோப்ராபோஸ்ட் தளத்திலிருந்தும், தினமலர்
   தளத்திலிருந்தும் திரட்டினேன். இரண்டிலும் மோடிஜி-அதானி
   தகவல் இல்லை. தினமலர் விஷயம் தெரிந்தது தான்.
   கோப்ராபோஸ்ட் ஏன் இந்த தகவலை தரவில்லை என்று தான்
   நானும் யோசித்துக் கொண்டிருந்தேன். பின்னூட்டத்தில்
   இந்த விஷயத்தை நானே எழுப்புவதாக இருந்தேன்.
   நீங்களே எழுதி விட்டீர்கள். உங்களுக்கே தெரியும் – எனக்கு
   மோடிஜி பற்றி எழுத எந்த வித தயக்கமும் இல்லை.
   ஏற்கெனவே நிறைய எழுதி இருக்கிறேன். சரியான
   ஆதாரத்தைத் தேடிக்கொண்டிருந்தேன் – அவ்வளவே …!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • sella சொல்கிறார்:

    Dear KM:

    Thanks. I never doubted your view and standing but expected a completeness, which is your uniqueness. That is the reason I tend to check this page a couple of time daily. Never mind, I take this opportunity to appreciate your efforts.

    Wish you and your family, readers of this blog, a happy and prosperous new year. Let us hope for the best

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.