ஈரான் போன்ற சட்டம் இங்கும் வரட்டும் …. தொலையட்டும் முட்டாள்தனமும் கொடுமையும்….

.

சில குறிப்பிட்ட அமைப்பினரின் பைத்தியக்காரத்தனம்
நமது குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட அனைத்து
பிரிவினரையும் தொடர்ந்து திகிலுக்கும், கொடுமைக்கும் உள்ளாக்குகிறது.

மக்கள் அவதியில் தவிப்பதைக் கண்டும் இவற்றைக் களைய சமுதாய
அமைப்புகளோ, அரசியல்வாதிகளோ எத்தகைய முயற்சிகளையும்
எடுக்கவில்லை என்பது எரிச்சலுக்குரிய விஷயம்.

 

 

verinaai-2

 

 

VERINAAYKKADI_mini

முதலில் சில செய்தித் தாள்களிலிருந்து செய்திகள் –

20/12/2014 – நேற்றிரவு பழையூரில் வெறிநாய் ஒன்று குழந்தைகளை
விரட்டியுள்ளது. அதனை பார்த்த பொதுமக்கள் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக வெறிநாயை விரட்டினர். ஆத்திரமுற்ற வெறிநாய் விரட்டியவர்களை கடித்து குதறியது. பழையூரைச் சேர்ந்த தர்மலிங்கம், சிவகுமார்,கமலா, பழனியப்பன்,. புஷ்பவள்ளி, ராக்கு, லட்சுமி காயமடைந்தனர்.

2014-07-19 – ராஜபாளையம்: நாய்க்கு பெயர் போன ராஜபாளையத்தில்
43 பேரை கடித்து வெறி நாய்கள் அட்டகாசம் செய்துள்ளது. சிறுவர் முதல்
பெரியவர் வரை 43 பேரை நாய்கள் விரட்டி விரட்டி கடித்தது. அனைவரும்
மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

24 December 2014 -மணப்பாறை – வையம்பட்டியை அடுத்த தவளவீரன்பட்டி
அருகே உள்ள கிருஷ்ணாகவுண்டனூரில் செவ்வாய்கிழமை நள்ளிரவு வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடு மற்றும் மாடு சத்தம் போடவே வீட்டின் உரிமையாளர்கள் எழுந்து பார்த்த போது வெறிநாய் ஒன்று கடித்துக் கொண்டிருந்ததை அடுத்து நாயை விரட்டி விட்டனர்.அங்கிருந்து சென்ற வெறிநாய் தவளவீரன்பட்டி, மட்டப்பாறைப்பட்டி, பிச்சை ரெட்டியபட்டி உள்ளிட்ட 9 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று அங்கிருந்த சுமார் 70 க்கும் மேற்பட்ட பசுமாடுகளையும், 30 வெள்ளாடுகளையும் கடித்துக் குதறியது.

அரசுநிலைப்பாளையத்தில் ஒரு பசுவை கடித்துக் குதறியது வெறி நாய்.
ஆத்திரம் தாங்காத கிராம மக்கள் அந்த நாயை அடித்துக் கொன்றனர்.
போலீசார் இது குறித்து சில கிராம மக்கள் மீது வழக்குப் பதிவு
செய்து விசாரித்து வருகின்றனர்…..!!!!

தமிழகம் முழுவதும் மக்கள் நாள்தோறும் சந்தித்து வரும் பிரச்சினை இது.

நாய் கடித்தால் என்ன ஆகும் ….?

பாதிக்கப்பட்டவரை மரணம் வரை கொண்டு செல்லும் ஒரு கொடிய
பாதிப்பு ரேபிஸ் என்கிற வைரஸ் நோய்.

இந்நோயால் பாதிக்கப்பட்ட நாய், மனிதனை கடிப்பதால் –
மனிதனுக்கும் இந்த நோய் பரவுகிறது.
நாய் கடித்தால் தான் ரேபிஸ் தொற்றும் என்பதில்லை.
பாதிக்கப்பட்ட நாயின் உமிழ்நீர் பட்டாலும், நகத்தால் பிராண்டினாலும்
கூட வரலாம். நம் உடலில் சிறுகீறல் இருந்து – அதில் உமிழ்நீர் பட்டாலும் ரேபிஸ் வைரஸ் நம்மைத் தாக்கும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், பசியின்மை, வாந்தி,
தண்ணீர் விழுங்க சிரமம் மற்றும் இரண்டாம் நிலையில் நரம்பு சம்பந்தப்பட்ட அறிகுறிகள், பக்கவாதம், உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்றவை ஏற்படும். இறுதியில் ‘கோமா’ நிலைக்கு வந்து இறப்பு ஏற்படும்.

இந்தியாவில் முழுவதுமாக, சுமார் 3 கோடி தெரு நாய்கள் உள்ளன.
இவை ஆண்டுக்கு, 40 லட்சம் பேரையாவது கடிக்கின்றன. சராசரியாக
இரண்டு நிமிடத்திற்கு ஒருவர், நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார்.

நகராட்சிகள் இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கின்றன…..?

நகராட்சிகள் சம்பளம் கொடுத்து நாய் பிடிப்பவர்களை நியமித்து,
அவர்கள் தெருத்தெருவாக அலைந்து இயன்ற வரை தெரு நாய்களை
பிடித்து வருகிறார்கள். பின்னர் என்ன நடக்கிறது என்பதை கீழே
புகைப்படங்களில் பாருங்கள்.

dog operation -1
dog operation -2

இத்தனை மெனக்கெட்டு, நாய்களைப் பிடித்து, கொண்டு வந்து,
அவைகளுக்கு இவ்வளவு பேர் உழைத்து “குடும்பக் கட்டுப்பாடு” ஆபரேஷன் செய்துவிட்டு – மீண்டும் அக்கரையாக கொண்டு போய் “பிடித்த இடத்திலேயே” விட்டு விட்டு வருகிறார்கள்.

ஏன் இந்த முட்டாள்தனம். பிடித்த தெரு நாய்களை அழிப்பது தானே
நிரந்தரத் தீர்வு….?

யாரோ சில வேலையற்ற வெட்டி ஆசாமிகளும், பொழுதுபோகாத
பணக்கார பெண் சமூக சேவையாளர்களும் சேர்ந்து கொண்டு,
“ப்ளூ க்ராஸ்” – பிராணிகள் வதைத் தடுப்பு என்கிற பெயரில்,
தெருநாய்களைக் கொல்லக்கூடாது என்று ஒரு நீதிமன்ற உத்திரவைப்
பெற்று விட்டார்கள்…..
இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் போகவோ, வேறு எதாவது விமோசனம்
காணவோ இன்று வரை யாரும் முயற்சிக்கவே இல்லை……

பிராணிகள் வதைபடக்கூடாது – ஆனால் நம் வீட்டு குழந்தைகள்
வதைபடலாம்..அப்படித்தானே …..!!.
தெருவில் நடந்து போகிறவர்களுக்குத் தானே இந்த பிரச்சினை… இவர்கள் எல்லாம் தெருவில் நடந்து போகிறவர்கள் அல்லவே….எனவே கவலைப்படாமல் உபதேசிக்கலாம்.

ஊருக்கு ஊர், தெருவிற்கு தெரு – இந்த பிரச்சினை இருக்கிறது.
பல தெருக்களில் சிறுவர், சிறுமிகள் தனியே நடந்து போகவோ,
சைக்கிளில் போகவோ நடுங்குகிறார்கள். இரவு நேரங்களில்
டூவீலர்களில் போகிறவர்களைக் கேட்டால் தெரியும் –
அவர்கள் படும் பாடு.

வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகள், கோழிகள் கொல்லப்படலாம்.
மாடுகள் கொல்லப்படலாம, பன்றிகள் கொல்லப்படலாம். ஆனால்
இந்த சமூக சேவகர்களுக்கு ( ?) தெருவில் அலையும் வெறி நாய்கள்
மட்டும் கொல்லப்படக்கூடாதாம். இது என்ன கொள்கை ….?
இந்த மடத்தனத்தை நாம் ஏன் இன்னும் அனுமதிக்க வேண்டும் …?

அரசியல்வாதிகள் இந்த கொடுமையை கண்டும் காணாமலும்
போய்க்கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது, நகராட்சிக்கூட்டங்களில்
“தெருநாய் தொல்லை” பற்றி பேசத்தான் செய்கிறார்கள். ஆனால்
பிரச்சினைக்கு ஒரு தீர்வையும் இதுவரை காணவில்லை….

கீழே நான் கொடுத்திருப்பது ஈரான் நாட்டில் அண்மையில்
கொண்டு வரப்பட்டிருக்கும் ஒரு சட்டம் பற்றிய செய்தி –

——————————————————————————————-

( http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=131932 )

ஈரான் நாட்டில் நாய் வளர்ப்பவர்களுக்கு 74 சவுக்கடி தண்டனை வழங்க,
சட்டம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சட்டம் மூலம் வீட்டில் நாய்
வளர்ப்பதும், பொது இடங்களில் நாயுடன் உலா வருவதும் தடை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்லாத்தில் நாய்கள் மிகவும் அழுக்கானவையாகக் கருதப்படுகின்றன.
அதனால் ஈரானில் அவ்வளவாக நாய்கள் இல்லை. எனினும்
சில செல்வந்தர்கள் அங்கு தங்கள் வீடுகளில் ரகசியமாக நாய்களைச்
செல்லப் பிராணிகளாக வளர்க்கிறார்கள். தங்கள் நாயுடன் பொது இடங்களில் உலாவவும் செய்கிறார்கள்.

இதனால் இதற்கு முன்பு வரை இவ்வாறு பொது இடங்களில் நாயுடன்
உலாவுபவர்களை அந்நாட்டின் கலாச்சாரக் காவலர்கள் தடுத்து நிறுத்தி
எச்சரிக்கை செய்து வந்தனர். ஒரு சில சம்பவங்களில் அவர்களிடமிருந்து
நாய்கள் பறிக்கப்பட்டன.

தொலைக்காட்சி, இணையம் போன்ற மேற்கத்திய கலாச்சாரங்களால்
நாய் வளர்க்கும் வழக்கம் அதிகரிக்கிறது எனக் கருதி ஈரான் நாட்டின்
ஆட்சியாளர்கள் இதைத் தடுக்க சட்டம் ஒன்றை ஏற்படுத்தி வருகிறார்கள்.  அதன் மூலம் நாய் வளர்ப்பவர்களுக்கு 74 சவுக்கடிகள் அல்லது 10 மில்லியன்  முதல் 100 மில்லியன் ரியால்கள் வரை (சுமார் ரூ. 22,000 முதல்  ரூ.2 லட்சம் வரை) அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

————————————————————————————

ஈரான் போல் மத அடிப்படையில் இல்லாவிடினும்,
அந்த அளவிற்குத் தீவிரமாக இல்லாவிட்டாலும் கூட,

சமூக நலனைக் கருதி, இங்கும் சில கட்டுப்பாடுகளை கொண்டு
வந்தேயாக வேண்டும். வீடுகளில் நாய்களை வளர்க்க விரும்புவோர்,
தாராளமாக வளர்க்கட்டும். ஆனால், மாநகராட்சி நிர்வாகத்திடமிருந்து
உரிய அனுமதி பெற்றுக் கொண்டு, அவர்களின்  இருப்பிடத்திற்குள்ளாகவே  அவை வளர்க்கப்பட வேண்டும். உரிய முறையில், உரிய காலங்களில்  அவற்றிற்கு தடுப்பூசிகள் போடுவது உரிமையாளர்களால் உறுதி  செய்யப்பட வேண்டும். மீறுபவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

தெருவில் அலையும் நாய்கள் பிடித்து அழிக்கப்பட வேண்டும்.

தேவையே இல்லாமல் நம்மைத் தொடர்ந்து அச்சத்துக்குள்ளாக்கும்
இந்த கொடுமையிலிருந்து – இனியாவது விடுதலை வேண்டும்.
நம்மையும், நம் குழந்தைகளையும் தொடர்ந்து பயமுறுத்தி வரும்
“ரேபிஸ்” பாதிப்பிலிருந்து நாம் விடுபட இது அவசியம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ஈரான் போன்ற சட்டம் இங்கும் வரட்டும் …. தொலையட்டும் முட்டாள்தனமும் கொடுமையும்….

 1. S.Selvarajan சொல்கிறார்:

  மிருக வதை தடுப்பு சட்டம் என்கிற பெயரில் தடை பெற்றதினால் ஏற்படும் அவலம் வெறிநாய் கடி மட்டுமல்ல ! பல பேர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த மாபெரும் ” சர்க்கஸ்கள் ” காணாமல் போயின —- பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு — சேவல் சண்டை போன்றவற்றையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது !! இவ்வாறானவற்றில் கலந்து கொள்கின்ற மிருகங்களுக்கு நடக்கும் ராஜ உபசாரமும் — பராமரிப்பும் இல்லாமல் அவைகள் படும் வேதனையை ” புளுகிராஸ் ” தீர்க்குமா ? தெருவில் விடப்பட்ட அவைகளின் உணவு பழக்கமும் மாறிபோய் — மாடுகள் போஸ்ட்டர்களை உண்பதை இந்த அமைப்பினர் மறுக்க முடியுமா ? வெறி நாய்களை பிடிக்க — பராமரிக்க இவர்கள் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் ? ஒன்றும் இல்லை — சும்மா பெருமைக்கு தானா ” புளு கிராஸ் ” ?

 2. Ramachandran.R சொல்கிறார்:

  செல்வராஜன் அவர்கள் சொல்வது போல் இது வெறும் அலட்டல்..
  ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு பொழுது போகாமல் அலையும்
  பணக்காரப் பெண்மணிகளின் பொழுதுபோக்கு தான் இந்த
  ப்ளூ க்ராஸ் – கண்ராவியெல்லாம். இதற்கு பெஸ்ட் உதாரணம் –
  திருமதி மேனகா காந்தி, நடிகை த்ரிஷா எக்சட்ரா……எக்சட்ரா…..
  இவர்களில் மீன், கோழி, ஆடு, மட்டன் சாப்பிடாதவர்கள் எத்தனை பேற் ?
  உணவுக்காக இவர்கள் கொல்லும்போது மட்டும் அது பிராணிகள் வதை
  இல்லையா ?

  அரசியல் சட்டத்திலேயே, மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காத வரையில்
  தான் நமக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாய் வளர்க்க விரும்புவோர்,
  லைசென்சு பெற்றுக் கொண்டு தங்கள் வீட்டிலேயே வளர்த்துக் கொள்ளட்டும்.
  தெருவில் அலையும் நாய்களுக்கு இவர்கள் என்ன வக்காலத்து. இவர்கள்
  எல்லாம் முதலில் தங்களுக்கு வேண்டிய அளவு தெரு நாய்களை தத்து எடுத்துக் கொள்ளட்டும். பின்னர் எஞ்சி இருப்பதை எல்லாம் நகராட்சி, ஊராட்சி
  அமைப்புகள் அழிக்க வேண்டும். கே.எம். சார் சொல்வது போல் நம் வீட்டு
  குழந்தைகள் தெருவில் தனியே போக அஞ்சும் சூழ்நிலையை
  ஒழிக்க வேண்டும்.

 3. Siva சொல்கிறார்:

  Street dogs, specifically if they have rabies, should be euthanized properly. No second thought in it. Also make sure that you can euthanize them in humane way. Some time, our people also behave like a dog. Instead of running behind the dogs or freight ending them, it will be good to catch them by giving some food mixed with an aesthetic drugs and hand over to corporation workers. It will be nice to catch them carefully, without frightening them. Animals can be easily calmed by gentle approach. First, we should avoid group shouting (gharo) and group handling. Rabies is a deadly disease. We need strong approach to control street dogs. Blue cross workers in India are doing it for fame and name. This kind of animal welfare activities are whole-heartedly being done in western countries, but our rich club people do it for the moment. We need to change it. If any reader has dog in his home, remember to do rabies vaccination for ur dog and you also. It is a deadliest……..disease.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.