மோடிஜி / பாஜக பற்றி வைகோ பேட்டி …..

.

.

கடந்த வாரம் வைகோ அவர்கள் வார இதழ் ஒன்றுக்கு சில முக்கிய
விஷயங்கள் பற்றி விவரமாக ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அந்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் கீழே –

vaiko photo

கேள்வி – பாஜக வுடனான பொருந்தாக் கூட்டணியில் ஏன் சேர்ந்தீர்கள் –
பிறகு ஏன் விலகினீர்கள் …?

அது ஒரு அக்னிப் பரீட்சை காலகட்டம். நாடாளுமன்ற தேர்தல் சமயம்,
ஈழத்தமிழர்களை அழிக்க ஆயுதம் கொடுத்து, நம் சொந்தங்கள் அழிக்கப்பட
காரணமாக இருந்த சோனியா காந்தியிடம் மீண்டும் ஆட்சி அதிகாரம்
செல்லாமல் இருக்க என்ன வழி என்று யோசிச்சா, எனக்கு வேற ஒண்ணுமே
புலப்படலை. அப்போ பாஜக தரப்பிலிருந்து பொன்.ராதாகிருஷ்ணன்,
முரளீதர ராவ், மோகன்ராஜுலு ஆகியோர் தொடர்ந்து என்கிட்ட
கூட்டணிக்காகப் பேசினாங்க. “நீங்க புலிகளை ஆதரிக்க வேணாம்.
இலங்கைப் பிரச்னையில் வாஜ்பாய் என்ன கொள்கையை பின்பற்றினாரோ,
அதையே பின்பற்றுவோம்’னு வாக்குறுதி கொடுத்தால், கூட்டணியில் சேர
எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை”ன்னு சொன்னேன். அதுக்கு
‘சரி’ன்னு சொன்னாங்க.

தேர்தல் பிரச்சாரத்துக்காக வண்டலூர் வந்த மோடியை
அவர் தங்கியிருந்த ஓட்டலில் சந்தித்தேன். “ஈழத்தமிழர்கள் பிரச்சினையில்,
வாஜ்பாய் அணுகுமுறைகளை பின்பற்றுவோம்னு சொன்னால் போதும்’ னு
சொன்னேன். அவரும் ‘நோ ப்ராப்லம்’னு சொன்னார். ஆனா, தேர்தலுக்குப் பின்
மோடி பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்சே வர்றார்ங்கிற செய்தி வந்ததும்
எனக்கு கை கால் ஆடிடிச்சு.

அடுத்த அரை மணி நேரத்துல எதிர்ப்பு அறிக்கை கொடுத்து விட்டு, மோடிக்கு
ஒரு ஈமெயில் அனுப்பினேன். அப்ப ராஜ்ய சபாவில் எனக்குப் பதவி
கொடுக்கப் போறதா பேச்சு அடிபட்டது. எங்கேயோ டூர்ல இருந்த மோடியை
தொடர்பு கொள்ள முடியலை. உடனே வசுந்தரா ராஜே சிந்தியாவை சந்திச்சு,
‘ராஜபக்சே வருகையை தடுக்கணும்’னு சொன்னேன்.

“ஆமா. இது ரொம்ப தப்பான முடிவு தான். நீங்க மோடி கிட்ட பேசுங்க’ன்னு
சொன்னாங்க. ராஜ்நாத் சிங் ‘இதுக்கு நான் ஒண்ணும் செய்ய முடியாது’ன்னு
சொல்லிட்டார்.

அப்புறம் மோடியை சந்திச்சேன். அப்போ அமீத் ஷாவும், அருண் ஜெட்லியும்
இருந்தாங்க. சுமார் முக்கால் மணி நேரம் பேசினேன். என் மனவேதனைகளை
எல்லாம் கொட்டினேன். ஒரு ஸ்டேஜ்ல, ‘ஐ ஃபால் அட் யுவர் ஃபீட்…
உங்க கால்ல கூட விழறேன். தயவு செஞ்சு அவரைக் கூப்பிடாதீங்க’ ன்னு
சொன்னேன்.

“சார்க் நாட்டு தலைவர்களை கூப்பிட்டூட்டோமே’ ன்னு ஜெட்லி சொன்னதையே
திரும்ப திரும்பச் சொல்லிக்கிட்டு இருந்தார். ‘இன்னைக்கு ராத்திரிக்குள்ள
ஒரு முடிவெடுங்க. இல்லைனா, கறுப்புக்கொடி காட்டுறதைத் தவிர எனக்கு
வேற வழி இல்லை’ ன்னு சொல்லிட்டு வந்துட்டேன் ..!

போராட்டம் நடத்தினோம். ஆனாலும் இலங்கை மீதான இந்திய அரசின்
அணுகுமுறையில் எந்தவித மாற்றமும் இல்லை.
வரிசையா சூழ்ச்சிகள் தான் அரங்கேறின.
சேஷாத்ரி சாரியையும், சுப்ரமணிய சுவாமியையும்
அனுப்பி, இலங்கை ராணுவ மாநாட்டுல போய் ராஜபக்சே அரசின்
ராணுவ நடவடிக்கைகளை பாராட்ட வெச்சாங்க.

இலங்கை மந்திரி பெரிஸ் இந்தியா வந்தப்ப,
‘2015-ம் ஆண்டு மார்ச் மாசம் நடக்கப் போற
மனித உரிமை கமிஷன் கூட்டத்த்தில்,
இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கப்போறோம்’னு
சுஷ்மா ஸ்வராஜ் சொன்னதை வெளியுறவுத்துறை செயலாளர் வெளிப்படையா
பத்திரிகையாளர் சந்திப்புலயே சொன்னார்.
இதையெல்லாம் விட,
பெரிய அதிர்ச்சி, கொலைகாரன் ராஜபக்சேவுக்கு பாரத் ரத்னா விருது
கொடுக்கணும்னு பேச்சு கிளம்பியது தான். பாஜக வில் யாரும் அதைக்
கண்டிக்கவே இல்லை. உச்சக்கட்ட அதிர்ச்சியா, ‘இலங்கை அதிபர் தேர்தலில்
வெற்றி பெற வாழ்த்துக்கள் ‘னு மோடி அந்தக் கொடுங்கோலனை
வாழ்த்தி இருக்கார்.
ஈழத்தமிழர் நலனில் காங்கிரசை விட, பாஜக மோசமா
நடந்துக்கறதால, அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதை விட
எங்களுக்கு வேறு வழி இல்லை.

அரசியலில் 50 வருடங்களாக ஏகப்பட்ட பயணம், உழைப்பு, அனுபவங்கள் ….
ஆனால் சொந்த தொகுதியில் கூட தோல்வி தான் மிஞ்சுகிறது. இதை
நினைத்து வருந்தியிருக்கிறீர்களா …?

வருத்தப்படலை ! ஏன்னா, 2,61,000 மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர்.
அது பெரிய விஷயம். 500,1000,2000 ரூபாய் ன்னு பணம் கொடுக்கும்போது,
‘இன்னைக்கு செலவுக்கு பணம் கொடுத்தாங்களே’ன்னு ஒரு நன்றிக்கடன்ல
எதிர்தரப்புக்குக்கூட ஓட்டு போட்டுடறாங்க. வசதியானவங்களே அரசாங்கத்தின்
இலவசப்பொருட்களை வாங்கும்போது, ஏழை மக்களை நான் குறை சொல்ல
விரும்பலை. என் தோல்வி என் கட்சியின் எதிர்காலத்தை பாதிக்குமேன்னு
நானாவது கொஞ்சம் வருத்தப்பட்டேன். ஆனா, என் தோழர்கள் அதை ஒரு
பொருட்டாவே எடுத்துக்கலை. ‘ஸ்பார்ட்டா’ வீரர்கள் மாதிரி முன்ன விட
துடிப்பா இயங்கிக்கிட்டிருக்காங்க. கடந்த 50 ஆண்டு அரசியல் பயணத்தில்,
வாய்தவறிக்கூட, ‘நான் தான் முதலமைச்சர்’ னு இதுவரை நான்
சொன்னதும் இல்லை. அந்தக் கனவில் நான் இருக்கேன்னு
வெளிப்படுத்தினதும் இல்லை.

“சுப்ரமணியன் சுவாமியை ‘அரசியல் ஜோக்கர்’ என்கிறார்கள் சிலர். ஆனால்,
ஈழத்தமிழர் விவகாரம், கூட்டணிக்கட்சிகளின் இருப்பு …. என, பல
விஷயங்களில் அவர் நினைப்பது தானே நடக்கிறது….?”

“அவர் ஜோக்கர் அல்ல. அவரிடம் நல்ல ஆங்கிலப் புலமை இருக்கிறது.
சட்டநுணுக்கம் தெரிந்தவர். ஹார்வேர்டில் போய் லெக்சர் தருகிறார்.
ஆனால் – தன் அறிவு அனைத்தையும் அழிவுக்குப் பயன்படுத்தும்
மிக மிக ஆபத்தான ஒரு மனிதர்.
அவர் ராஜபக்சேயால் பாஜக வுக்குள்
திணிக்கப்பட்ட ஒரு ஏஜெண்ட். இது நூற்றுக்கு நூறு உண்மை.”

——————-

மேற்கண்ட பேட்டி, வைகோவின் உண்மையான மன நிலையை
அப்படியே பிரதிபலிக்கிறது.

வைகோ ஒரு நல்ல மனிதர். பல ஆண்டுகளாக – வாய்ப்பு கிடைக்கும்
போதெல்லாம், அவர் உரையை நான் நேரில் கேட்கத் தவற மாட்டேன்.
அவர் இலக்கியம் பேசினால், நாளெல்லாம் கேட்டுக் கொண்டே
இருக்கலாம். அவர் தோல்வியை சந்திக்கும் ஒவ்வொரு நேரமும்
நான் மிகவும் வருந்துவேன்.
அப்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன் –
வைகோ அரசியலுக்கு வராமல், இலக்கியவாதியாகவே இருந்திருக்கலாம்.
நல்ல மரியாதையுடன் புகழின் உச்சியில் இருந்திருப்பாரென்று….

அரசியலில் வைகோ பலமுறை தவறான முடிவுகளை எடுத்திருக்கிறார்.
தவறான கூட்டணிகளில் இருந்திருக்கிறார்.

ஆனால் அவரது நேர்மையையோ, ஒழுக்கத்தையோ, அயராத உழைப்பையோ
யாருமே குறை கூற முடியாது.

அரசியலுக்கும் அப்பாற்பட்டு –
எனக்குப் பிடித்த ஒரு நல்ல மனிதர் வைகோ.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to மோடிஜி / பாஜக பற்றி வைகோ பேட்டி …..

 1. today.and.me சொல்கிறார்:

  வல்லவன் கையில் நல்லவன் பொம்மை.
  என்ன செய்வது?

 2. சக்தி சொல்கிறார்:

  முற்றிலுமாக வழிமொழிகிறேன். அற்புதமான மனிதர்.நல்ல மனிதர். சென்ற மாதம் மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மகா நாட்டில் அவரின் பேச்சு மிகச் சிறப்பாக இருந்தது.

 3. Siva சொல்கிறார்:

  I agree with your comments. His bad luck (due to circumstantial and untimely tragic events, falling on the web of fox-minded Tamil politicians, unethical Tamil and Indian media, his blind-spotted focus on Ceylon Tamils issue, his caste-based supporters/fans, blood sucking industrial crocodiles, materialistic life style of Tamils etc….) is the probable reason for his struggle. One should be honest, but should also be aggressive in ethical way to succeed in his goal.

 4. D. Chandramouli சொல்கிறார்:

  The only politician I admire in TN is Vaiko. But, as a politician, he seems a misfit in current day political arena. I recently watched his speech on “Ponniyin Selvan” on YouTube. He was very eloquent in describing every one of the characters. His grasping of the story and his power of memory were amazing. Not a word of politics in his speech! I wish Vaiko could transform himself into another Kannadasan, if only he refrains from dabbling in the wretched politics of Tamil Nadu. He is too good a person to be in politics. Literary world beckons him.

 5. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  நல்ல மனிதர் நூறுசதம் உண்மைதான் …

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.