மோடிஜி – சல்மான் கான், ராஜபக்சே …..!!!

.
.

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே ஒரு செய்தி வெளியாகியது….
இந்திய பாராளுமன்ற தேர்தலில், குஜராத்தை மையமாகக்கொண்டு,
மோடிஜிக்காக உழைத்த அதே ‘யூத் மீடியா டீம்’ –
தற்போது இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற
அவரது மீடியா பப்ளிசிடிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது என்று….

salman with rajabakse

மீண்டும் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகின்றன.
ராஜபக்சேயை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய
பாலிவுட் நடிகர் சல்மான் கான் இலங்கைக்கு சென்றிருக்கிறார்.

மோடிஜியின் ஆசியும் ஒத்துழைப்பும் இல்லாமலா இவையெல்லாம் நடக்கின்றன….?
ராஜபக்சே வெற்றி பெற வேண்டும் என்பதில் இவர்களுக்கு
ஏன் இவ்வளவு அக்கரை …? இத்தகைய செயல்கள் தமிழக மக்களின்
உணர்வுகளுக்கு எதிரானது என்று தெரிந்தும்,
விடாப்பிடியாக மேற்கொள்ளப்படுவது ஏன் …?

இதற்கும் மோடிஜிக்கும் என்ன சம்பந்தம் என்று
உடனடியாக சிலர் எதிர்க்கேள்வி கேட்கக்கூடும்.
அவர்களுக்காக முன்கூட்டியே ஒரு கேள்வி –
இதுவே பாகிஸ்தானில் ஜனாதிபதி தேர்தல் நடப்பதாக இருந்து –
இங்கிருந்து பிரச்சாரத்திற்கு ஆட்கள் சென்றால் –
மோடிஜியின் அரசு அதை அனுமதிக்குமா…..?

பின் குறிப்பு –

மோடிஜியின் தேர்தல் வெற்றிகளுக்கான மீடியா பிரச்சாரத்தை
தலைமை தாங்கி இயக்கிய அர்விந்த் குப்தா என்கிற

பாஜக தீவிர மீடியா செயல்பாட்டாளர் தான் –

ராஜபக்சேயின் பிரச்சாரத்தை
வடிவமைக்க அனுப்பப்பட்டார் என்பது செய்தி.

சென்ற மாதம் இதற்காக அவர் இலங்கைக்கு
நேரில் சென்றிருந்தார் என்பதும், அங்கே செய்தியாளர் ஒருவர்
அவரைப் பார்த்து இது குறித்து வினவியதற்கு,
‘நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ’
என்று அந்த செய்தியாளரை விரட்டியதாகவும் செய்தி…..

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to மோடிஜி – சல்மான் கான், ராஜபக்சே …..!!!

 1. today.and.me சொல்கிறார்:

  http://www.campaignindia.in/Article/390271,8216big-data-is-like-teenage-sex8217–bjp8217s-arvind-gupta.aspx

  ‘Social Intelligence for Business Success’
  அரசியல் – கட்சி – தேசிய வெற்றி – என்னும் பிஸிநெஸை வெற்றிகரமாக நடத்தியது எப்படி என்று அரவிந் குப்தா ‘வியாபார விளம்பர உத்திகளைக் கொண்டுவெற்றிபெறுவது’ எப்படி என்று உரைநிகழ்த்தியிருக்கிறார்.

  இதையே மக்களை இ.வா. ஆக்கியது எப்படி என்று சொல்லியிருக்கிறார் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

  மெத்தப்படித்த ஐடி மக்களையே யோசிக்கத்தெரியாத ஆட்டுமந்தைகள் அளவுக்கு ட்விட்டர்-பேஸ்புக்-இமெயில்-டி.வி.-மீடியா என்று வகைவகையான வாழையிலையை காண்பித்து இழுத்துச்சென்று வெட்டி அந்த இலையிலேயே பறிமாறிவிட்டார்கள். சாப்பிடுபவர்கள் அண்டை நாடுகள், ஆதரவு நாடுகள், நலம்விரும்பிகள்,இங்கே மேக்-இன் செய்பவர்கள் என்று வரிசைப்படுத்தலாம். என்ன செய்வது?

  இப்போதும் காங்கிரஸ், பா.ஜ.க.வின் பினாமி என்றுதான் உறுதியாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இவர்கள் அவர்கள் செய்யத் தயங்கியதை, இவர்கள் அவர்களைச் செய்யவிடாமல் தடுத்ததை இப்போது அதைவிட அதிகமாக முனைந்து சட்டப்பூர்வமாக செய்துவருகிறார்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் todayandme,

   இந்த நபரின் “வாக்குமூலத்தை”
   வெளிக்கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி.

   இந்த வலைத்தள நண்பர்கள் அனைவரும்
   அவசியம் படிக்க வேண்டிய விஷயம் இது.
   எனவே, தனியே பதிவில் போடுகிறேன்.

   பாஜக வின் பினாமி காங்கிரசா அல்லது
   காங்கிரசின் பினாமி பாஜக வா …..???
   யோசியுங்கள் ……!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. Siva சொல்கிறார்:

  These poeple will do anything. The affected/affecting poeple should always stand up to speak for themselves

 3. LVISS சொல்கிறார்:

  Beats me how Salman Khan can help Rajapakshe because how many are going to be influenced by what he says –It is like saying that some country sending one of its celebrities to campaign for some political party here –Will our people be so naive as to listen to that person —

 4. yogeswaran சொல்கிறார்:

  Sir,

  Sri lanka is never a country going behind cinema stars.

  rgs

  yogi

 5. thanga.rajendran சொல்கிறார்:

  எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்ற முடியாது; பார்ப்போம். பாரதத்தில் இன்று நடைபெறும் ஆட்சியை உற்றுப் பார்ப்பதோடு, ராஜபக்ஷேவின் இதுவரையிலான செயல்பாட்டினையும் அனுமானிக்கத் தெரியாதவர்கள் அல்ல இலங்கைவாழ் தமிழர்கள். எதிர்க்கட்சி மட்டுமென்ன ஒளியேற்றத் தீக்குச்சியாய் துவங்கி ஆட்சி வந்தவுடன் கொள்ளிக்கட்டையாய் மாறுவதுதானே இலங்கையின் கட்சிகளும். என்ன செய்வது தேவை நம்பிக்கை மட்டுமே!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.