எப்படி (ஏ)மாற்றினோம்…!!! பாஜக மீடியா பொறுப்பாளர் ஒப்புதல் வாக்குமூலம்…!!!

.

இதற்கு முந்தைய இடுகையில் – பாஜக மீடியா பொறுப்பாளர்
டாக்டர் அர்விந்த் குப்தா என்பவர், ராஜபக்சேவுக்கு தேர்தலில் உதவ
இலங்கை சென்றிருக்கிறாரென்று எழுதியிருந்தேன் அல்லவா …

அந்த மனிதர் “டாக்டர்” பட்டம் பெற்றிருப்பது –
“சமுதாயத்தின் புத்திசாலித்தனத்தை, வியாபார வெற்றி” க்கு
பயன்படுத்திக் கொள்வது எப்படி என்பதில் ஆராய்ச்சி செய்து ……!!!

Dr.Arvind Gupta -bjp -national technology head

அந்த “தொழில் நிபுணர்” மும்பையில் நடந்த ஒரு கருத்தரங்கில்
இந்தியாவில் – பாராளுமன்ற மற்றும் அதை அடுத்து நிகழ்ந்துள்ள
சட்டமன்ற தேர்தல்களில், மக்கள் மனதை (ஏ)மாற்ற தாங்கள்
எந்தவித தொழில் நுணுக்கங்களை எல்லாம் பயன்படுத்தினோம்
என்பதை விவரமாக விளக்கி இருக்கிறார்.

“அடுக்கடுக்கான புள்ளி விவரங்கள்” என்பது அறியாத வயதில்
ஏற்படும் செக்ஸ் உணர்வு போன்றது…..( அதாவது விஷயம் சரிவரப்
புரியாது – ஆனால் ஒருவித கிளர்ச்சியை உண்டு பண்ணும் …)

என்று விவரித்திருக்கிறார்.

இந்திய மக்களிடையே, முக்கியமாக –
படித்த இளைஞர்களிடையே – புள்ளி விவரங்களை அள்ளி வீசி
அவர்களிடையே ஒரு விதக்கிளர்ச்சியை உண்டு பண்ணினோம்
என்று “வாக்குமூலம்” கொடுத்திருக்கிறார்…..!!! இந்த “கிளர்ச்சியை”
உருவாக்க தங்கள் “டீம்” டிசம்பர் 2012 -லேயே வேலையைத்
துவக்கி விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மோடிஜிக்கு அவ்வளவு பெரிய “ஆதரவு அலையை”
வெறும் 40 பேர் கொண்ட தங்கள் “தொழில் நுட்ப குழு”
உண்டாக்கியது எப்படி
என்பதை தனது உரையில் விளக்கமாகக்
கூறி இருக்கிறார்.

தங்கள் “தொழில் திறமையை” அவர் வெளிப்படையாக
தம்பட்டம் அடிக்கப்போய்,
நமக்கு ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கிடைத்து விட்டது….!!!

டாக்டர் அர்விந்த் குப்தா-வின் விளக்கங்களை நீங்களும்
விவரமாகப் படித்து உண்மைகளை அறிய அவரது
ஆங்கில உரைச்சுருக்கம் கீழே –

————————————————————————————————

‘Big data is like teenage sex’: BJP’s Arvind Gupta –

Gupta was speaking at a conference on ‘Social Intelligence for Business Success’
in Mumbai hosted by Adfactors –

Speaking at a ‘Social Intelligence for Business Success’ conference hosted by Adfactors,
Dr Arvind Gupta, national technology head, Bharatiya Janata Party, listed reasons behind
the party’s success on social media, Narendra Modi’s ‘great communication skills’,
linking technology with communication, and more.

He was introduced by Kiran Khalap, co-founder, chlorophyll, who played an ad created
for Lyndon B Johnson’s election campaign in the US. Noting that the similarity between
Johnson’s election and BJP’s win in India this year was the ‘clean sweep’,
he welcomed Gupta to address the audience.

Gupta, who revealed that the topic ‘Social Intelligence for Business Success’ was also
the topic for his PHD,
said, “The topic has evolved over the past two decades
and data could be substituted with either technology or social, but the core would be
the same, i.e. how we analyse data.”

How to use data and make it actionable

Gupta delved into how the BJP had used data and made it actionable during the
recent elections.
“This election we used convergence of technology with communication.
We have a prime minister who understands all this and is an expert in communication.
Our publicity campaign before February 2014 was none, yet we were always in the news.
From December 2012 to February 2014, our campaign was primarily on social media.
Our primary tool kit over 18 months was our technology,” said Gupta.

He added, “We now have data of the 3.6 lakh polling booths. We have data of
which areas we have performed better in. If we roll back to July 2013, we had a mission
and that was ‘272+’. Back then we were targeting booths and trying to reach out to
people through either mobile, social or human. We used analytics to reach them online
or on-ground; so we used both mass communication and micro communication.
Both were used in a 360 manner until the major outreach campaign was rolled out
in February 2014. The campaign was so huge that we knew whom to make voice calls
to (Narendra Modi’s voice message was going out to people). So, we used a mix of
all digital. It was advanced use of analytics which took about
three to four years of planning.”

Social Intelligence

Referring to the hype around ‘Big Data’, Gupta said, “There’s this key word called
‘Big Data’. Everyone is talking about it. I think it’s like teenage sex. People are talking
a lot about it, but no one actually knows what it is.”

On the BJP reaching out to people on social media, he elaborated,
“We could reach out to people even when they were not using hashtags. People were
surprised how we reached out to them and provided personalised messages.
On 2 October, Modi was speaking at an event in Delhi. He made a statement
‘Toilet before temples’. That set a national debate. He was just making a statement
of the importance of sanitation. There were massive reactions.”

“We then ran a quick analytics of the chatter around this. 45 per cent of the people
(who were floating voters) agreed with the statement made by our prime minister.
We reacted to this at that very moment and this resulted to an increase to 68 per cent
of people agreeing with the statement. The online positive sentiment changed the
conversation and that set the agenda for Modi’s talk on 15 August where he spoke
about sanitation again. This is an example of using big data,” added Gupta.

Specific to use of data during the election campaign, Gupta revealed that the camp
analysed data between 12 and 16 May (last day of voting and the day
election results were announced). With the help of data, the party’s technology head
said they could predict winning over 260 seats.

He complimented the data team that consisted of just five members. He also stated that
the digital team working for the BJP had just 40 people during the elections and is
otherwise a team of just 20 people.
He said, “The response time was great and the
RoI was huge. You’ll see this social media effort continuing.”

Use of rallies

The online – on-ground synergy was the next subject of discussion.
He said, “Our content creator was Narendra Modi who did 400-plus rallies.
But we needed more so we live streamed all his rallies on Yuva TV.
We also had 3D holograms of Mr Modi talking to people in some towns.

So, he reached out to people virtually. We used mobile like never before.
You could call on a number and hear his entire speech.
No data or internet was required. The amplification was immense.
2.2 lakh people called in and heard his Patna rally alone.”

Gupta surmised that while a lot of technology was put to use,
it was practical enough for people to embrace.

(http://www.campaignindia.in/Article/390271,8216big-data-is-like-teenage-sex8217–bjp8217s-arvind-gupta.aspx)

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

25 Responses to எப்படி (ஏ)மாற்றினோம்…!!! பாஜக மீடியா பொறுப்பாளர் ஒப்புதல் வாக்குமூலம்…!!!

 1. Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

  This is modernized method (thanks to communication developments) which conceived by DMK to come to Power. They assured non implementable ( of course done slightly later) offers to the Voters when ordinary people was deprived of Rice at a lower price. Modi`s utterances attracted even the over and above middle class due to Congress Govt`s misrule. Modi govt now has been lucky enough to get insulation in public`s bad opinion by virtue of good rain & in particular downing in Crude price by which an ordinary citizen expect.

 2. Ramachandran .R. சொல்கிறார்:

  “மாயா” – “மாயா” – அத்தனையும் மாயை.
  social media வில் பொங்கியது மோடி அலை என்று சொன்னார்கள்.
  ஆனால் அது எப்படி ” பொங்க” வைக்கப்பட்டது என்பதை
  இப்போது அவர்களே தெளிவுபடுத்தி விட்டார்கள்.

  நன்றி கே.எம்.சார்.

 3. இளந்திரையன் சொல்கிறார்:

  இதற்கு ஒரே ஒரு பாவப் பரிகாரம் தான் உண்டு.
  மோடியையும், பாஜகவையுஜ்ம் நம்பிய மக்கள்
  அனைவரும் தங்களைத் தாங்களே
  தங்கள் செருப்பாலேயே அடித்துக் கொள்ள வேண்டும்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் இளந்திரையன்,

   இதை – நீங்கள் கொஞ்சம் மாற்றிச் சொன்னால் சரியாகப் பொருந்தும்
   என்று நினைக்கிறேன் –

   “மோடிஜியையும், பாஜக வையும் ஆதரித்து மக்கள் அலை பொங்கி
   எழுகிறது” – என்று நினைத்தவர்களை இந்த செய்தி செருப்பாலடிப்பது
   போல் இருக்கிறது. –

   சரி தானே …?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    KM ji,
    //நீங்கள் கொஞ்சம் மாற்றிச் சொன்னால் சரியாகப் பொருந்தும் என்று நினைக்கிறேன் //
    Corrections accepted.

    🙂 🙂 🙂

 4. natchander சொல்கிறார்:

  well bjp cannot fool the people all the time ……..

 5. Ganpat சொல்கிறார்:

  மோடி எனும் தேரை இழுத்து நிலைக்கு கொண்டு வந்ததில் இவர்கள் பங்கை விட சோனியா,ராகுல்,மன்மோகன் ஆகியோரின் பங்கே அதிகம்.We have not lost anything.முந்தய டீச்சர் கணக்கு சொல்லி கொடுத்து பூஜ்யம் வாங்கினோம்.இந்த டீச்சர கொண்டு வந்துள்ளோம்.பூஜ்யத்துக்கு கீழே எப்படியும் வராது

  • today.and.me சொல்கிறார்:

   ….5, 4, 3,2, 1, 0, -1, -2, -3, -4, -5, …….. இது எல்லாமும் கூடஎண்கள்தானே கண்பத் சார். ஏற்கெனவே இந்தியாவின் பொருளாதாரம் மைனஸில்தானே இருக்கிறது. கடன்மேல் கடன்தானே. இந்தியாவின் கடன் என்று பொதுவில் சிந்திக்கவேண்டாம், அது எல்லாம் தனி மனிதன் மேல் ஏற்றப்பட்ட சுமைதானே.

   அந்த மைனஸையெல்லாம் சரிசெய்து 100 நாட்களுக்குள் சுவிஸிலிருந்து பதுக்கல் பணத்தையெல்லாம் கொண்டுவந்து கஜானாவில் போட்டு நிலைமையை 0-பாய்ண்ட்டில் நிலைநிறுத்தி, அதற்குப்பிறகு தலைக்கு எத்தனையோ லட்சம் கொடுத்து +ற்குக் கொண்டுவருவதாகத்தானே பேச்சு. இருங்கள் மூச்சு விட்டுக்கொள்கிறேன்.

   பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் என்று சொல்கிறா (றீ) ர்களோ?
   ஓட்டுப் போட்டதோடு நின்னுக்கோ. நீயும் ஓ(கோ)ட்டத்தாண்டி வராதே, நானும் வரமாட்டேன் என்று டயலாக் விடுகிறார்கள் போலிருக்கிறது.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இரண்டு மாதங்களுக்குள், இன்று மூன்றாவது தடவையாக பெட்ரோல் / டீசல்
    மீதான எக்சைஸ் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.

    சர்வதேச சந்தையில் எண்ணை விலை வீழ்ச்சி அடைந்ததன் பலன்
    மக்களுக்குப் போய்ச்சேராமல் – இவர்கள் குறுக்கே புகுந்து
    பறித்துக் கொள்கிறார்கள்.

    தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் -தங்களுக்கு வர வேண்டிய பணம்
    அரசாங்கத்தால் ஏமாற்றி எடுத்துக் கொள்ளப்படுகிறது என்கிற
    விஷயமே இன்னும் பெரும்பாலான மக்களுக்கு தெரியவில்லை….

    அரசாங்கமே மக்களை ஏமாற்றினால் – அதை என்னவென்று சொல்வது ….?

    -வயிற்றெரிச்சலுடன்,
    காவிரிமைந்தன்

    • today.and.me சொல்கிறார்:

     //பெரும்பாலான மக்களுக்கு தெரியவில்லை//

     தெரிய விரும்பவில்லை / தெரிய விருப்பப்படவில்லை /
     அப்படியும் விரும்பித் தெரிந்து பொங்கிவிட்டால் பாலில் தண்ணி தெளிப்பது போல எதையாவது (whether it may be positive or negative) தெளித்து அமர்த்தி விடுவார்கள். எனவே தெரியவே வழியில்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இல்லை கண்பத்.
   இவர்கள் நாடகமாடி நம்மை ஏமாற்றி விட்டார்கள்
   என்பது தான் உண்மை.

   காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைவதற்கான அடிப்படையை
   அவர்களே உருவாக்கிக் கொண்டார்கள் – சரி.

   ஆனால், இவர்களுக்கு தனிப்பட்ட மெஜாரிடி கிடைத்திருக்க
   வாய்ப்பில்லை. கூட்டணி தயவில் தான் ஆட்சியைப்
   பிடித்திருக்க முடிந்திருக்கும். இந்த மாதிரி அலை-கிலை எல்லாம்
   உருவாகியிருக்க வாய்ப்பில்லை.
   இந்த தனிப்பட்ட மெஜாரிடி தான் அவர்கள் தலையில் ஏகப்பட்ட
   கனத்தை ஏற்றி விட்டது.

   ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்…..!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • R.Palanikumar சொல்கிறார்:

    “இந்த தனிப்பட்ட மெஜாரிடி தான் அவர்கள் தலையில் ஏகப்பட்ட
    கனத்தை ஏற்றி விட்டது.”-முற்றிலும் உண்மை.

 6. Kgp சொல்கிறார்:

  But for the numbers BJP may not have rolled out the real agenda so soon and so fast.
  Thank you so much Mr. Aravind Gupta.

 7. Kgp சொல்கிறார்:

  Even with measly numbers the previous rulers were able to make so much money.
  With this magic numbers the new rulers are trying to create a new order!

 8. Ganpat சொல்கிறார்:

  மன்னிக்கவும் கா.மை ஜி & today.and.me.
  நம் நாட்டின் எதிர்காலத்தைப்பொருத்தவரை நான் extremely pessimistic for the next twenty or thirty years என்பதை நான் இங்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.தற்போதைய அரசியல் சட்டம்,குற்றவியல் சட்டம்,தேர்தல் சட்டத்தை வைத்துக்கொண்டு மக்களுக்கு எவராலும் ஒரு இம்மியளவும் நன்மை செய்ய முடியாது.என் பயமெல்லாம் இப்போ ஒருவகையான DMK/ADMK combination மய்ய அரசிலும் உண்டாகி வருகிறதோ என்பதுதான்.(அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு பிஜேபி கூட்டணி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு காங்.கூட்டணி என்று இருவரும் மாறி மாறி கொள்ளை அடிக்க வசதியாக.Otherwise மோடி can easily be the best con man of this decade.

  • today.and.me சொல்கிறார்:

   // இப்போ ஒருவகையான DMK/ADMK combination மய்ய அரசிலும் உண்டாகி வருகிறதோ என்பதுதான். //
   You are too late. There is no doubt. Always they are like that. Now the MoU is ‘the equal years of the others’ , i.e. 10 years to bjp as earlier’s period.
   So the next 10 years to Modiji.

 9. புது வசந்தம் சொல்கிறார்:

  ஒவ்வொன்றையும் மிக நேர்த்தியாக திட்டமிட்டு செய்தார்கள். அமெரிக்க தேர்தல் போல, நடை, உடை, எங்கே நிற்க வேண்டும், எப்படி கையசைக்க வேண்டும், எந்த இடத்தில் உசுப்ப வேண்டும், கைத்தட்ட வேண்டும் என்று பல. நண்பர் கண்பத்-தின் கருத்து உண்மைதான். இத்தனை நாட்கள் நீ இருந்தது போல, எனக்கு அடுத்த 5-10 வருடம் – ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போல. நிறைய பெயர் புதிதாக வைக்க வேண்டியுள்ளது அல்லது மாற்ற வேண்டியுள்ளது, சிலை வைக்க வேண்டியுள்ளது, இப்படி பல. இதற்கு நியாயம் வேறு கற்பிக்கிறார்கள். என்ன செய்ய ?

 10. Ganpat சொல்கிறார்:

  எல்லாம் போக நாதுராம் கோட்சே க்கு சிலை வைப்பதைப் போல ஒரு முட்டாள்தனமான்,அயோக்கியத்தனமான அராஜகத்தனமான திட்டம் எதுவும் இருக்க முடியாது.

  • today.and.me சொல்கிறார்:

   ஜி,
   5 வருட ஆட்சிக்குள்ளாக
   அகண்ட பாரதத்தை துண்டாடிய
   காந்தி என்னும் தீய சக்தியை
   அழித்த
   கோட்சே எனும் தெய்வம் என்று கூறி
   சிலை மட்டுமல்ல
   கோயிலும் கட்டி
   வரலாற்றை மாற்றுவார்கள்.
   அப்பொழுது ரூபாய் நோட்டில்
   மோடிஜி படம் இருந்தாலும்
   ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

   அதற்காகத்தானே கஷ்டப்பட்டு உழைத்துள்ளார்கள்.

   😦 😦

 11. Siva சொல்கிறார்:

  Although I am not concerned for what kind of tactics they used to win the election, I am worried that they should not cheat people by not doing at least some of the promises they gave to people. If they perform good thing, I will not be worried for thier stupid tactics. Because the great Valluvar perumaan told that you can tell some lie if it is going to benefit the person. If they fail in thier promise, I believe that it is Saaba-kedu for Indian people.

 12. srinivasanmurugesan சொல்கிறார்:

  எத்தனை காலம் தான் ஏமாருவார் இந்த நாட்டிலே……

 13. D. Chandramouli சொல்கிறார்:

  Such brain-washing of the people by slick, most modern, ad campaigns might be inevitable for winning elections. In corporate parlance, it is brand image. What is there in Coca Cola to retain the top spot in the world for decades? In our back yard, a ‘Thirumangalam’ formula was planned and perfected in a couple of elections. At the end of the day, what matters is how Modi and his team would govern. IMHO,the new government can’t go any worse than Congress rule. Period. Yes, my blood too boils when hearing about a statue for Godse. Atrocious and ridiculous. Such fanatical unruly mobs must be reined in; no doubt about it. With such perverts to support, BJP would be digging their own grave sooner or later. Let us hope good sense will prevail.

 14. today.and.me சொல்கிறார்:

  நேர்த்தியாக மண்டைக்குள் ஏற்றுகிறார்களா? மண்டைகளை ஏமாற்றுகிறார்களா?

  // ஒன்றுமில்லை- சேலத்திலிருந்து பெங்களூர் வரும் வழியில் புதிதாக வைக்கப்பட்டிருக்கும் மைல்கற்களைப் பாருங்கள். வாரணாசி எவ்வளவு கிலோமீட்டர் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். டெல்லி எவ்வளவு கிலோமீட்டர் என்று எழுதி வைத்திருந்தாலாவது அர்த்தமிருக்கிறது. எதற்கு வாரணாசி? அதுவும் இரண்டு கிலோமீட்டருக்கு ஒரு கல்லில். அதுதான் ப்ராண்டிங். வாரணாசி என்ற பெயரைப் பார்க்கும் போதெல்லாம் நம்மையுமறியாமல் மோடியின் ஞாபகம் வரும். அவ்வளவு நேர்த்தியாக மண்டைக்குள் ஏற்றுகிறார்கள். //

  எல்லாமே ப்ராண்டிங்தானே? என்ற இடுகையில் உள்ள ஒரு பத்தியை மேலே தந்திருக்கிறேன்.

  மணிகண்டனுக்கு பொய்சொல்லவேண்டிய அவசியமில்லை, இங்கே படிப்பவர்கள் எவிடென்ஸ் இல்லையென்றால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே இங்கு விமரிசனத்தைப் படிப்பவர்களில் யாராவது இதுபோன்ற மைல்கல்லைப் பார்த்திருப்பீர்களானால் புகைப்படமாக எடுத்து இணைத்து இக்கருத்தின் உண்மைத்தன்மைக்கு வலுசேர்க்கவேண்டுகிறேன்.

  நன்றி: http://www.nisaptham.com/

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.